07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, September 5, 2011

மனோ மேடத்திடம் இருந்து பொறுப்பேற்கிறார் சத்ரியன்

அன்பின் சக பதிவர்களே


நேற்றுடன் ( 04.09.2011 ) முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற மனோ மேடம், தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவரச் செய்து, ம்ன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு, இருநூற்று முப்பந்தைத்து மறுமொழிகள் பெற்றிருக்கிறார். தன்னுடைய ஐந்து இடுகைகள் உள்ளீட்ட எண்பத்து மூன்று இடுகைகளையும் எழுபத்தெட்டு பதிவர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். சமையல், கவிதை, சிந்தனை, கலையழகு, சிறுகதை, அனுபவம் என்ற பல்வேறு தலைப்புகளில் அறிமுகங்களைத் தொகுத்து அருமையாக இடுகைகள் இட்டிருக்கிறார். இவரது கடும் உழைப்பிற்குப் பாராட்டுகள்.

மனோ மேடத்தினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் சத்ரியன். இவர் தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு சிறு கிராமத்தினைச் சேர்ந்த விவாசாயக் குடும்பத்தின் வாரிசு. சிங்கையில் கட்டுமானத் துறையில் பணி புரிகிறார். சிங்கப்பூர் "கடற்கரைச் சாலைக் கவிமாலை" குடும்பத்தின் செல்லப் பிள்ளை.

மனவிழி என்னும் தளத்தில் 2009ம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். இதயம் திருடும் அளவிற்கு இல்லை எனினும் வருடும் அளவிற்கு காதலைப் பற்றி எழுதுவது இவருக்குப் பிடிக்கும்.

நண்பர் சத்ரியனை வருக - வருக என வரவேற்று - அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மனோ மேடம்
நல்வாழ்த்துகள் சத்ரியன்

நட்புடன் சீனா


20 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வணக்கம்,
  அண்ணன் சத்ரியன் அவர்களை வலைச்சரத்துக்கு சிங்கை குரூப்ஸ் சார்பாக இனிதே வரவேற்கிறோம்...

  வலைச்சரத்தில் உங்களின் மகத்தான பணி தொடர்ந்து சிறக்க நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. அன்புநிறை மனோ அம்மா
  தங்களின் பணியை சிறப்புறச் செய்து
  பல்வேறு வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்திநீர்கள்
  என்னையும் சேர்த்து,
  அன்பின் சீனா ஐயா அவர்களின் நிழல் நடந்து
  தங்களை வழி அனுப்பபோவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

  அன்புநிறை நண்பர் சத்ரியன் அவர்களை
  வரும் வார நாட்களில் பணி சிறக்க
  வாழ்த்தி வணக்கி வரவேற்கிறேன்.

  ReplyDelete
 4. வணக்கம்.

  வரவேற்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க தம்பி சிம்பு.

  ReplyDelete
 5. வணக்கம் திரு.மகேந்திரன்.

  தங்களின் வரவேற்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி.

  தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்த அன்புடன் அழைக்கிறேன்.

  ReplyDelete
 6. கடந்த வாரத்தை நிறைவான வாரமாக
  அழகு செய்த மனோ மேடம் அவர்களுக்கு
  வாழ்த்துக்களையும் இவ்வாரத்தை
  வரவேற்று அழகான வாரமாக்க
  ஆசிரியர் பொறுப்பேற்கிற சத்திரியன் அவர்களை
  வரவேற்றும் மகிழ்கிறோம்

  ReplyDelete
 7. ரமணி ஐயா,

  உங்கள் ஆசிகள் என்னை இன்னும் மிளிரச் செய்யும். மகிழ்ச்சியுடன் நன்றி.

  ReplyDelete
 8. வலைச்சரத்துக்கு இந்த வார ஆசிரியராக பொறுப்பேற்கும் அண்ணன் சத்ரியன் அவர்களை வருக வருக என இருகரம் கூப்பி வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  வாழ்த்துக்கள் அண்ணா.

  ReplyDelete
 9. வாங்க காந்தி,

  வரவேற்பிற்கும், வாழ்த்திற்கும் நன்றி.

  தொடர்ந்து வந்து உற்சாகப் படுத்துங்கள்.

  ReplyDelete
 10. அட நம்பத் தம்பி.

  வாழ்த்துகள்

  ReplyDelete
 11. //அட நம்பத் தம்பி.

  வாழ்த்துகள்//

  வாங்க கோவி.க. அண்ணே,

  உங்களின் வாழ்த்துகளுக்காக இந்த வாரம் முழுதும் நிறைய புதுமுகங்கள் காத்திருக்கிறார்கள்.

  ReplyDelete
 12. வருக வருக-மகிழத்
  தருக தருக
  வணக்கம் ! வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 13. பாராட்டுக்கள் மனோ!
  வருக கவிஞரே!

  ReplyDelete
 14. நல்ல அறிமுகங்களைச் செய்த மனோ மேடத்திற்கு நன்றி...

  இந்த வார ஆசிரியர் சத்ரியன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 15. மிகச்சிறப்பாகப் பணியாற்றி விடை பெறும் திருமதி மனோ மேடம் அவர்களுக்கும், புதிய பொறுப்பேற்கும் திரு. சத்ரியன் அவர்களுக்கும் அன்பான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

  செவ்வனே தொடரட்டும் இந்த வலைச்சர அறிமுகப்பணிகள்.

  ReplyDelete
 16. இட்ட பணியை செம்மையாய்
  முடித்து விடைப் பெறும்
  சகோதரி மனோ அவர்களுக்கு
  வாழ்த்துக் கூறுவதோடுஎன்னை
  அன்புடன் அறிமுகப்படுத்திய
  தற்கும் நன்றி நன்றி!
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. ஏற்ற பொறுப்பை அழகாய் நிறைந்த முத்துக்களால் அலங்கரித்து உங்க அனுபவமும் பகிர்ந்து எல்லோரையும் நிறைந்த மனதுடன் அறிமுகப்படுத்தி போன வாரம் மிக அழகுற செய்துவிட்டீர்கள் மனோ அம்மா...

  அன்பு நன்றிகள் அம்மா....

  மனோ அம்மாவிடமிருந்து பொறுப்பேற்று இருக்கும் சத்ரியனுக்கு என் அன்பு வாழ்த்துகள்பா...

  ReplyDelete
 18. மனோ அம்மாவை வாழ்த்தி வழியனுப்பி சத்ரியனை அன்புடன் வரவேற்கும் சீனா சாருக்கு என் அன்பு நன்றிகள்....

  ReplyDelete
 19. வந்திருந்து வாழ்த்திய, வாழ்த்த நினைத்து வரமுடியாமல் போன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 20. வணக்கம் சத்ரியன். இன்று தான் வர முடிந்தது. ஆசிரியர் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றிட என் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது