ஆத்தா நான் வாத்தியாராயிட்டேன்...
➦➠ by:
.சத்ரியன்,
அனுபவம்,
படைப்புகள்
ஆசிரியர் தின வாழ்த்துக்களுடன், அனைவருக்கும் வணக்கம்.
இன்று ஒரு மிகச்சிறந்த நாள். ”ஆசிரியர் தினம்”. என்னைச் செதுக்கிய சிற்பிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
***
தகுதியை வளர்த்துக் கொள்ளாமலேயே ஆசிரியப் பணியின் மீது அதீத காதல் உண்டு எனக்கு. அக் காதலை தற்காலிகமாக நிறைவேற்றிக் கொள்ள, அரிய வாய்ப்பை வழங்கிய வலைச்சரக் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திரு.சீனா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
*
சீன் போட்டது போதும் , களத்துல எறங்கு ராசா-ன்னு சீனா ஐயா சொல்றது காதுல விழுந்துருச்சி. இந்தா குதிச்சிட்டேனுங்கய்யா.
**
சுதந்திரமா சும்மா இருந்தவனக் கூப்ட்டு வெச்சி, ”வாடா மாப்ள உன்ன இன்ட்டர்நெட்ல எழுத வெய்க்கிறேன்”,-னு சொல்லி தரதரன்னு இழுத்துகினு வந்து, இந்த ”வலைப்பூ” சமாச்சாரத்தை (2009-ல்) எனக்கும்,என்னை வலைப்பூவுக்கும் அறிமுகப் படுத்தி, உங்களை எல்லாம் என்னிடம் சிக்கவைத்த புண்ணியம் “அன்புடன் நான்” கருணாகரசு மாமா(!?)வையே சாரும்.
சுதந்திரமா சும்மா இருந்தவனக் கூப்ட்டு வெச்சி, ”வாடா மாப்ள உன்ன இன்ட்டர்நெட்ல எழுத வெய்க்கிறேன்”,-னு சொல்லி தரதரன்னு இழுத்துகினு வந்து, இந்த ”வலைப்பூ” சமாச்சாரத்தை (2009-ல்) எனக்கும்,என்னை வலைப்பூவுக்கும் அறிமுகப் படுத்தி, உங்களை எல்லாம் என்னிடம் சிக்கவைத்த புண்ணியம் “அன்புடன் நான்” கருணாகரசு மாமா(!?)வையே சாரும்.
இரும்பு புடிச்சவன் கையும், சொரங்கு புடிச்சவன் கையும் சும்மா இருக்காது-ன்னு சொல்லுவாங்க. எழுதத் தெரிஞ்சவன் கையும் அப்பிடிதான்னு நெனைக்கிறேன். ரொம்ப நாளா பழைய நோட்ல எழுதி வெச்சிருந்ததையெல்லாம் நாளுக்கு ஒன்னுன்னு எழுதி வலையேத்திட்டு, தலைச்சன் புள்ளத்தாய்ச்சி தெனமும் வயித்த தடவிப்பாக்குற கதையா, இன்னிக்கி எத்தனப் பேரு பாத்திருக்காக, யாராவது கமெண்ட்டு போட்டிருக்காகளா-ன்னு என் ’பிளாக்’-க நானே தொறந்து தொறந்து பாக்குறது,மூடறதுன்னு போயிட்டிருந்த என் வலை வாழ்க்கையில வந்து, சிங்கைப் பதிவர் நண்பர் கோவி.கண்ணன் “(மனைவி)”ன்ற கவிதைய படிச்சிட்டு,’அருமை’-ன்னு மொத கமெண்ட்ட போட்டிருந்தாரு. இது போதாதா எனக்கு! சோர்ந்து போயிருந்தவனுக்கு சோமபானம் கெடைச்சமாதிரி உற்சாகம் வந்துருச்சி. எதைப்பத்தி எழுதி இன்னும் பதிவுகள தேத்தலாம்னு சிந்திச்சேன்.
கண்டது போனதுக எல்லாம் என்னைப்பத்தி, எழுது என்னைப்பத்தி எழுது -ன்னு போட்டி போட்டுக்கிட்டு வரிச கட்டி வந்து என் வாசல்ல நிக்குதுங்க. கடைசியா காதலைப் பத்தி எழுதலாம்னு தீர்க்கமா முடிவெடுத்தேன். இல்லாட்டி நம்மள கவிஞர்கள் பட்டியல்ல சேத்துக்க மாட்டாங்கன்னு ஒரு பயம்! அப்புறமென்ன, என் கம்ப்யூட்டரோட கீ போர்டு கதறக்கதற தட்டச்சி செஞ்சி மளமளன்னு கீழேயுள்ள கவிதைகள வலையேத்தினேன். சும்மா ஒரு விசிட் போய் படிங்க. வயசானவங்களுக்கும் கூட யூத் ஃபீலிங் வரும்.
இந்த மாதிரியான காதல் கவிதைகள் எழுதி நான் புகழடையறது பொறுக்காம ஊருக்கு வரச்சொல்லி “ஆர்டர்” வந்துச்சி. மறுக்க முடியாம, வலையுலகக் கல்லூரி முதல்வருக்கு விடுப்பு விண்ணப்பம் ஒன்னு எழுதி குடுத்துட்டு ஊருக்கு கிளம்பிட்டேன். நான் திடீர்னு ஊருக்கு போகவும் வலையுலக நண்பர்கள் எல்லாரும் ஆளாளுக்கு என்னென்னவோ நெனைச்சிக்கிட்டாக.
எண்ணி பதினஞ்சே நாள் தான். சுவத்துல பட்ட பந்து மாதிரி சிங்கப்பூருக்கே திரும்பி வந்துட்டேன். வந்ததும் வருகையைப் பதிவு செய்யனுமே. அதுக்காக, ஒரு பதிவு போட்டேன். வந்து பாத்தவங்க பலரும் “ஷாக்” ஆயிட்டாங்க.’ஷாக்’ ஆகற அளவுக்கு அப்பிடி என்னய்யா இருக்குன்னு தானே கேக்கறீங்க? தேவதையைக் காணூங்கள் படிச்சு பாருங்க, தெரியும்!
ப்ளாஷ்பேக் சொல்லி முடியவேல்ல அதுக்குள்ள யாருய்யா அது கூட்டத்துல கொட்டாவி விடறது? மேக்கொண்டு படிங்க.
காதலைப் பத்தி மகிழ்ச்சியா எழுதறதுக்கு ரொம்ப எளிமையா இருந்துச்சி. அப்டியே போயிட்டிருக்கும் போது திடீர்னு இப்பிடியொரு கவிதை எழுதினா என்னன்னு தோனுச்சி.என்னோட ரசிகர்களின் (பேசிக்கிட்டிருக்கும் போது ஏன்யா மௌஸ்-ஸ எடுத்து மானிட்டர ஒடைக்க நெனைக்கிறீங்க? பில்டப்பு தேவைப் படுதில்ல.!) பின்னூட்டங்களப் பாத்தா ரொம்ப “ஃபீல்” பண்ணி எழுதியிருந்தாங்க.
காதலைப் பத்தி மகிழ்ச்சியா எழுதறதுக்கு ரொம்ப எளிமையா இருந்துச்சி. அப்டியே போயிட்டிருக்கும் போது திடீர்னு இப்பிடியொரு கவிதை எழுதினா என்னன்னு தோனுச்சி.என்னோட ரசிகர்களின் (பேசிக்கிட்டிருக்கும் போது ஏன்யா மௌஸ்-ஸ எடுத்து மானிட்டர ஒடைக்க நெனைக்கிறீங்க? பில்டப்பு தேவைப் படுதில்ல.!) பின்னூட்டங்களப் பாத்தா ரொம்ப “ஃபீல்” பண்ணி எழுதியிருந்தாங்க.
சரி. நீயும் கவிதயெழுதி நாலு பேர ஃபீல் பண்ண வெச்சிட்ட. கவிஞனா உன்ன(!?) ஏத்துக்கிட்டாங்க. அதுக்காகவாவது சமூகத்தைப் பத்தி யோசிச்சு ஒரு கவித எழுதேண்டா-ன்னு கவிஞன் சத்ரியனைப் பாத்து, வாசகச் சத்ரியன் சொன்னான். இதென்னடா சத்ரியனுக்கு வந்த சத்தியசோதனை-ன்னு தெகைச்சி நின்னப்ப, வராது வந்த மாமணி மாதிரி
வந்து சிந்தையில நின்னுச்சி.
இந்த கவிதைக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சி. பிறகு,வலையுலகத்துல நானும் ஒரு கவிஞன் -னு ஃபார்ம் ஆயிட்டேன். எப்பிடி இருக்கு என் “பிளாக் லைஃப் ஸ்டோரி”?
சரி. என்னடா வரதட்சணையப் பத்தி இவ்வளவு காட்டமா எழுதியிருக்கானே!சத்ரியன் நல்லவனா? கெட்டவனா? -ன்னு உங்களுக்கு ஒரு கொழப்பம் வந்திருக்கும் இல்லியா? கீழே இருக்கிற பத்தியைப் படிச்சுப் பாருங்க. பிறகு நீங்களே சொல்லுவீங்க.
வரதட்சணை -யைப்பற்றி வெறும் கவிதையாக எழுதி கை தட்டல்களைப் பெறுவதை விரும்புகிறவனல்ல இந்த சத்ரியன். வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவன். ஊரே வியந்தது. (வரதட்சணைப் பெறாமல் திருமணம் செய்துக் கொண்ட என் அறியாமையைப் பார்த்து.) எனக்கு அவர்களைப்பற்றி கவலை இல்லை. “ஒரு குடும்பத்தைக் கடனுக்குள் தள்ளாமல் காப்பாற்றியிருக்கிறேன்”, என எண்ணும்போது என்னை நானே மிக உயர்வாய் உணர்கிறேன்.
சமூக மாற்றம் ஏற்பட வேண்டுமென நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அதை நம்மில் இருந்து தொடங்க வேண்டும் என்பதை மறந்து, யாராவது வருவார்கள் என காத்திருக்கிறோம். அதுதான் நம் அடிப்படை தவறு. வரதட்சணைக்கு எதிராய் என்னை நான் முன்னிறுத்தினேன். உங்களால் முடியாதா என்ன?
இப் பதிவைப் படிக்கும் இன்னும் திருமணமாகாத இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். நீங்கள் நினைத்தால் இந்த வரதட்சணை என்னும் கொடிய அரக்கனை அழித்தே விடலாம். இன்றைக்கு தங்கம் விற்கும் விலையை எண்ணிப் பாருங்கள். பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஏழைப் பெற்றோர்களின் இடத்தில் உங்களை நிறுத்திப் பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள். இக் கவிதையும், இக் கருத்தும் ஒரே ஒரு இளைஞனின் மனத்தையாவது மாற்ற உதவியிருந்தால் மகிழ்வேன்.
சமூக மாற்றம் ஏற்பட வேண்டுமென நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அதை நம்மில் இருந்து தொடங்க வேண்டும் என்பதை மறந்து, யாராவது வருவார்கள் என காத்திருக்கிறோம். அதுதான் நம் அடிப்படை தவறு. வரதட்சணைக்கு எதிராய் என்னை நான் முன்னிறுத்தினேன். உங்களால் முடியாதா என்ன?
இப் பதிவைப் படிக்கும் இன்னும் திருமணமாகாத இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். நீங்கள் நினைத்தால் இந்த வரதட்சணை என்னும் கொடிய அரக்கனை அழித்தே விடலாம். இன்றைக்கு தங்கம் விற்கும் விலையை எண்ணிப் பாருங்கள். பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஏழைப் பெற்றோர்களின் இடத்தில் உங்களை நிறுத்திப் பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள். இக் கவிதையும், இக் கருத்தும் ஒரே ஒரு இளைஞனின் மனத்தையாவது மாற்ற உதவியிருந்தால் மகிழ்வேன்.
2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் எங்களது திருமணம் நிகழ்ந்தது. என் மனைவி 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். அதுவே போதுமென அவரது பெற்றோர் முடிவு செய்து மேற்படிப்பைத் தொடர அனுமதித்திருக்கவில்லை. திருமணத்திற்கு பின் சில மாதங்கள் கழித்து மேற்படிப்பு படிக்க விருப்பமா எனக் கேட்டேன். ஆச்சரியமாகப் பார்த்தாள். தாலியுடன் எப்படி கல்லூரிக்குச் செல்வேன் எனக் கேட்டாள். அதற்கெல்லாம் தடையொன்றுமில்லை என்பதையும், பெண்களுக்கான கல்வியின் அவசியத்தை எடுத்துச் சொல்லியும் சம்மதிக்க வைத்தேன். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறார். அவரது தொடர் கல்வியால்,
எங்கள் ’குடும்பவிளக்கு’ பிரகாசமாக ஒளிர்கிறது. எங்கள் சந்ததிகள் ஒளிமயமாக விளங்கும் வாய்ப்பை நாங்களே உருவாக்கிக் கொண்டோம். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களின் கல்வி மேம்பட்டால் நாடு 100 விழுக்காடு கல்வியறிவு அடைந்துவிடும். அறியாமை இருள் விலகும். ஒளிவீசும் சமுதாயத்தைப் படைக்க நம்மால் முடியும்.!
இடுகை கொஞ்சம் பெரிசா போயிடுச்சி இல்ல... சரி,இதுவரைக்கும் போதும் என் புராணம்.!
இந்த ஒரு வாரத்திற்கு இதுவரை நம் பார்வையில் படாதிருக்கும் பதிவர்களைத்தேடி பிடித்து வரும் பணி என்னுடையது. படித்து மகிழ்ந்து அவர்களை உற்சாகப் படுத்த வேண்டிய பணி உங்களுடையது.
குறிப்பு:- நாளைக்கு வலையுலகிற்கு முற்றிலும் புதிய பதிவர்களை வரவேற்க தாரை, தப்பட்டைகளுடன் தயாராய் இருங்கள்.
வர்ட்டா..!
இந்த ஒரு வாரத்திற்கு இதுவரை நம் பார்வையில் படாதிருக்கும் பதிவர்களைத்தேடி பிடித்து வரும் பணி என்னுடையது. படித்து மகிழ்ந்து அவர்களை உற்சாகப் படுத்த வேண்டிய பணி உங்களுடையது.
குறிப்பு:- நாளைக்கு வலையுலகிற்கு முற்றிலும் புதிய பதிவர்களை வரவேற்க தாரை, தப்பட்டைகளுடன் தயாராய் இருங்கள்.
வர்ட்டா..!
|
|
வாழ்த்துகள் கண்ணன்... உங்கள் பணி சிறக்க விழைகிறேன்...
ReplyDeleteபிரபாகர்...
வணக்கம் அண்ணே,
ReplyDeleteவலைச்சரத்தில் வலைப்பூக்களின் அறிமுகப்பணி சிறக்க வாழ்த்துக்கள்!
வலைச்சர ஆசிரியராய் வாய்ப்ளித்த திரு.சீனா அய்யா அவர்களுக்கும் அன்பான பின்னூட்டங்கள் கொடுத்து என்னை உற்சாகப்படுத்திய அன்புத் தோழமைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteபுதிய ஆசிரியராய் பொறுப்பேற்றிருக்கும் திரு.சத்ரியனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!!
வணக்கம் பிரபாகர். வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.
ReplyDeleteவணக்கம் சிம்பு,
ReplyDeleteஇயன்ற வரையில் சிறப்பாக செய்ய முயல்கிறேன்.
நன்றி.
வணக்கம் திருமதி.மனோ சாமிநாதன்,
ReplyDeleteகடந்த வார ஆசிரியப் பணியை மிகச்சிறப்பாய் வழி நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
இச் சிறியவனை வாழ்த்தியமைக்கு நன்றிகள்.
தொடர்ந்து வந்திருந்து உற்சாகப் படுத்த
அன்புடன் அழைக்கிறேன்.
பார்ரா... ம்ம்.. கெளப்புங்கள் பட்டையை :))
ReplyDelete//பார்ரா... ம்ம்.. கெளப்புங்கள் பட்டையை :))//
ReplyDeleteவாங்க வைகை.
ம்ம்ம்...முழங்குங்கள் தாரை, தப்பட்டைகள...!
// ஒவ்வொரு வீட்டிலும் பெண்களின் கல்வி மேம்பட்டால் நாடு 100 விழுக்காடு கல்வியறிவு அடைந்துவிடும்.//
ReplyDeleteசிறப்பு
இம்புட்டு நல்லா எழுதிறிக, கட்டுரைகளும் எழுதலாமே.
ReplyDelete//இம்புட்டு நல்லா எழுதிறிக, கட்டுரைகளும் எழுதலாமே.//
ReplyDeleteகோவியண்ணே!
குட்டு வெச்சிட்டீங்க இல்ல. ஆரம்பிச்சிடறேன்.
வலைச்சரத்தின் புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள திரு. சத்ரியன் அவர்களுக்குப் பாராட்டுக்கள். தங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாப்ள கலக்கல் ஆரம்பம்...அடிச்சி ஆடுங்க!
ReplyDelete//சமூக மாற்றம் ஏற்பட வேண்டுமென நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அதை நம்மில் இருந்து தொடங்க வேண்டும் என்பதை மறந்து, யாராவது வருவார்கள் என காத்திருக்கிறோம். அதுதான் நம் அடிப்படை தவறு. வரதட்சணைக்கு எதிராய் என்னை நான் முன்னிறுத்தினேன். உங்களால் முடியாதா என்ன?//
ReplyDeleteஅருமையான எண்ணம். வாழ்த்துக்கள்.
ஒரு தகுதியான கவிஞருக்கு ஆசிரியர் என்னும் பதவி வழங்கியமைக்கு சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteஒரு தகுதியான கவிஞருக்கு ஆசிரியர் என்னும் பதவி வழங்கியமைக்கு சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ReplyDeleteநண்பரே
ReplyDeleteகவிஞரே
ஆசிரியரே
தங்களை எப்படி அழைப்பது..
தங்கள் கவிதைகளைத் தங்கள் வலையில் படித்து இரசித்திருக்கிறேன்.
தங்கள் பார்வையில் வலைப்பதிவர்களைக் காண ஆவலோடு இருக்கிறேன்.
ஒரு கவிஞனின் பார்வையில் இவ்வலையுலகம் எவ்வாறு காட்சியளிக்கிறது....
என்று பார்ப்போம்....
நண்பரே
ReplyDeleteகவிஞரே
ஆசிரியரே
தங்களை எப்படி அழைப்பது..
தங்கள் கவிதைகளைத் தங்கள் வலையில் படித்து இரசித்திருக்கிறேன்.
தங்கள் பார்வையில் வலைப்பதிவர்களைக் காண ஆவலோடு இருக்கிறேன்.
ஒரு கவிஞனின் பார்வையில் இவ்வலையுலகம் எவ்வாறு காட்சியளிக்கிறது....
என்று பார்ப்போம்....
உறவுகளே..
ReplyDeleteஇன்று எனது வலையில்
“ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்“
என்னும் சிறப்பு இடுகை வெளியிட்டிருக்கிறேன்
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_8019.html
காண அன்புடன் அழைக்கிறேன்.
வாழ்த்துகள் சத்ரியன்....
ReplyDeleteஉங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சத்ரியன்
ReplyDeleteஅன்புநிறை நண்பர் சத்ரியன்
ReplyDeleteதங்களை வருக வருக என வரவேற்கிறேன்..
ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது...
படைப்புகளை செதுக்கித் தருக
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
என்னை பொறுத்த வரை வர தட்சணை வாங்க காரணமே பெற்றோர் என்று தான் கூறுவேன், பையனுக்கு பொண்ணு அழகா இருந்தா அதுவே பெரிய வரதட்சணை தான்..
ReplyDeleteஅன்பின் சத்ரியன் - ' சுவாசம் ' பதிவுக்கு சனவரி 5 2010 அன்றே மறு மொழி இட்டிருக்கிறேன் - ஆனா நீங்க அதுக்குப் பதில் போடல் - நட்புடன் சீனா
ReplyDeleteஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் சத்ரியன் - விழாக் காலத்திற்கு டிசம்பர் 10 2009ல் மறுமொழி இட்டுள்ளேன் - சத்ரியனின் பதிலைக் காணோமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteதூள் கெளப்பு நண்பா
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
வாழ்த்துகள் மாம்ஸே
ReplyDeleteமாற்றம் நம்மிலிருந்து துவங்கனும் என்பதற்கு நீங்கள்(ளும்) ஒரு சிறந்த உதாரணம்.
ReplyDeleteமனைவியை படிப்பதற்கு ஊக்கிவித்திருப்பது சிறப்பு மாம்ஸு
ஆரம்பமே அசத்தல். ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇவ்வார வலைச்சர ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteகலக்குங்கள்...
இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅன்பின் சத்ரியன் - அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி - சென்று - படித்து - ரசித்து மறுமொழிகளும் அங்கேயே இட்டு விட்டேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
ReplyDeleteநேசமும் பொறுப்பும் முதலில் குடும்பத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் பிரகாசிக்கிறார்கள். மனைவியே சிறந்த வெகுமதி என்று வரதட்சணையை புறம் தள்ளி, அவரைக்
ReplyDeleteகைப்பிடித்து, அவரை படிக்க வைத்து ஒரு கம்பீரக்கணவனாய்த்திகழும் உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சத்ரியன்! உங்களின் இல்லறம் நல்லறமாய் விளங்கவும் இனிய வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள். புது ஆசிரியருக்கு.
ReplyDeleteமுதலில் என் வாழ்த்துகள் நண்பரே!
ReplyDeleteஉங்கள் புரிந்துணர்வான போக்குக்கு
நான் தலைவணங்குகிறேன்
இப்படி அனைத்து இளைஞர்களும்
நினைத்தால் மிகவும் நன்றாய் இருக்கும்
உங்கள் வெள்ளை மனசுக்கு,
என் பச்சைக்கொடி.
வலைசரத்தில் வந்தமர்ந்த வண்டே!
நீ
தேனுண்டு பறக்க நினைக்காதே!
தமிழ்த் தேன் உண்ண....
சரம்தேடிவரும் சகலரையும்
மயக்கிவிடு நம் மந்திரத் தமிழால்.
ஹேமாவின் சார்பிலும் .......
எங்கள் இருவரதும்
வாழ்த்துகள் நண்பரே!
வணக்கம் திரு.கோபாலகிருஷ்ணன் ஐயா.
ReplyDeleteஉங்கள் ஆசியுடன் ... தொடர்கிறேன்.
நன்றி.
வணக்கம் விக்கி மாமா.
ReplyDeleteஉங்க மாப்ள நிச்சயமா நாட் அவுட் பேட்ஸ்மேன் தான். கவலைய விடுங்க.
அடிக்கடி விசிலடிச்சி உற்சாகப் படுத்துங்க.
வணக்கம் ராம்வி,
ReplyDeleteகடமை. முடிந்ததை செய்யலாம் என்னும் முனைப்பு.
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிங்க.
வணக்கம் குணா,
ReplyDelete“ நண்பன்” என அழையுங்கள். அதிலேயே மற்றவர்கள் எல்லாரும் அடங்கி இருக்கிறார்கள்.
வருகைக்கும், வாழ்த்திற்கும், உங்களது வலைப்பூவில் எனக்கு வழங்கியிருக்கும் விருதிற்கும் நன்றி.
வணக்கம்.
ReplyDeleteவாங்க வெங்கட் அண்ணே.
வணக்கம் திரு.மகேந்திரன்.
ReplyDeleteஇவ் வாரத்தை தொய்வில்லாமல் கொண்டுச் செல்ல நிச்சயம் முயல்கிறேன்.
தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்கள்.
வாங்க R.V.சரவணன்.
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.
//என்னை பொறுத்த வரை வர தட்சணை வாங்க காரணமே பெற்றோர் என்று தான் கூறுவேன், பையனுக்கு பொண்ணு அழகா இருந்தா அதுவே பெரிய வரதட்சணை தான்..//
ReplyDeleteவணக்கம் சூர்யஜீவா.
ஜீவனுள்ள கருத்தை முன் வைத்துள்ளீர்கள். இன்றைய பதிவை, பல பெற்றோர்களும், பல இளைஞர்களும் படித்திருக்க/ படிக்க வாய்த்திருக்கிறது. ஓரிரு மனங்களாவது சிந்திக்கும்.
அந்த நம்பிக்கையில் தான் அக்கருத்தினைப் பகிர்ந்துக் கொண்டேன்.
தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்தினைப் பகிருங்கள்.
வணக்கம் இராஜராஜேஸ்வரி அம்மா.
ReplyDeleteதொடர்ந்து வந்து ஆசிர்வதியுங்கள்.
//அன்பின் சத்ரியன் - விழாக் காலத்திற்கு டிசம்பர் 10 2009ல் மறுமொழி இட்டுள்ளேன் - சத்ரியனின் பதிலைக் காணோமே - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
ReplyDeleteஅய்யா,
தப்புத்தான்... தப்புத்தான்.. தப்புத்தான்.
(பின்னூட்டங்கள் மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும் அமைப்பை இயக்கியிருக்கவில்லை. அதனால்...அப்படியொரு தவறு நிகழ்ந்து விட்டது.)
இப்போது சரி செய்து விட்டான். இனி யாரும் புண்பட மாட்டார்கள்.
வாங்க விஜய்.
ReplyDelete(போட்டோவைப் பார்த்து) பாரதிதாசனே வந்து வாழ்த்தியது போல் ஒரு பெருமிதம் எனக்கு.
வாங்க ஜமால் மாப்ள,
ReplyDeleteஉமக்கு நண்பனா இருக்கும் நான் இதைக்கூடவா ...?!
நன்றி மாப்ள. வீட்டில் அனைவரும் நலம் தானே?
வாங்க காந்தி.
ReplyDeleteஉங்களுக்கும் ”இந்த வார” ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
வருகைக்கும்,
ReplyDeleteவாழ்த்திற்கும் நன்றிங்க, செளந்தர்.
வாங்க பிரகாஷ் அண்ணே.
ReplyDelete//அன்பின் சத்ரியன் - அனைத்துச் சுட்டிகளையும் சுட்டி - சென்று - படித்து - ரசித்து மறுமொழிகளும் அங்கேயே இட்டு விட்டேன் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா//
ReplyDeleteஅய்யா,
அங்கே மறுமொழியிட... இன்னும் ஒரு வாரம் ஆகும்.
//மனைவியே சிறந்த வெகுமதி என்று வரதட்சணையை புறம் தள்ளி, அவரைக் கைப்பிடித்து, அவரை படிக்க வைத்து ஒரு கம்பீரக்கணவனாய்த் திகழும் ...//
ReplyDeleteதிருமதி.மனோ அம்மா,
தங்களது புகழ்ச்சிக்கு உரியவனா நான் எனத் தெரியவில்லை.ஆனால்,
உங்கள் வாழ்த்துக்களுக்கு உரியவன் என்பதில் பெருமிதம்...!
வணக்கம் லஷ்மி அம்மா.
ReplyDeleteவணக்கம், வாங்கோ கலா.
ReplyDeleteவாழ்த்திற்கு நன்றி.
ஹேமா எங்க போனாங்க. அவங்களுக்கும் சேர்த்து நீங்க வாழ்த்துச் சொல்றீங்க.?
புதிய ஆசிரியராய் பொறுப்பேற்றிருக்கும் திரு.சத்ரியனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநகைச்சுவையான முன்னுரை அழகு...
வரதட்சணை வாங்காமல் கல்யாணம் செய்த குணத்திற்கு வாழ்த்துக்கள்..ஓவ்வொருவரும் பின்பற்றவேண்டியதெ....வாழ்த்துக்கள்
சத்ரியன் சொல்லவேயில்ல! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅநுபவ வாத்தியாருக்கு
ReplyDeleteஅப்பாவி வாத்தியாரின்
அன்பு வாழ்த்துக்கள்
அதுவும் ஆசிரியர் தினமன்று
ஆசிரியர் பொறுப்பு ஏற்றுள்ளீர்
முகவுரையே உங்கள்
அகவுரையாகக் கண்டேன்
மீண்டும் வருவேன்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
ஆரம்பமே அதரகளம் பண்ண தொடங்கியாச்சா சத்ரியன்?
ReplyDeleteஆசிரியர் தினத்துக்கு பொருத்தமா உங்களை வலைப்பூ என்ற ஒன்று தொடங்கி கொடுத்து இதோ உங்க எழுத்துக்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தவும் வெச்ச அன்புடன் நான் கருணாகரசு அவர்களுக்கு கண்டிப்பா நன்றிகள் சொல்லனும்...
உங்க எழுத்துகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததே...
அசத்தறதுன்னு ஆரம்பிச்சாச்சு... இனி களைகட்டும் சத்ரியன்....
அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்....
அன்பு வாழ்த்துகள் சத்ரியன்...
வரதட்சணைக்கு எதிரான உங்கள் எழுத்துகளில் உங்கள் திருமணம் பற்றியும் மனைவியை மேலே மேலே படிக்க வைப்பது பற்றியும் எழுதியிருப்பது மனத்தைக் கவர்ந்தது. (நான் கூட ஓரிருமுறை உங்கள் தளத்திற்கு வந்துள்ளேன்!) வலைச்சரத்தில் இதுவரை அறிமுகப் படுத்தப் படாத பதிவர்களை அறிமுகப் படுத்த வாழ்த்துகள்.
ReplyDeleteவந்திருந்து வாழ்த்திய, வாழ்த்த நினைத்து வரமுடியாமல் போன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ReplyDeleteவலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteகூட்டம் அம்முறத பார்த்தால் வரிசையில நிக்கனும் போலிருக்கே.
ReplyDeleteada! poonkothu! ungal ennangal uyarnthavai!
ReplyDeleteபாருங்க ஒரு ஒத்துமைய... எனக்கும் முதல் கமெண்ட் கோவி.கண்ணன் அண்ணன்டேயிருந்துதான்..
ReplyDeleteஹா ஹா ஹா ஹா அடிச்சி ஆடுய்யா...!!!
ReplyDeleteஅந்த வரதட்சினை கவிதை சூப்பரோ சூப்பர்ப்...!!!