07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 13, 2011

மாதா

அன்பு அன்பர்களே வலைச்சரத்தில் மாய உலகத்தின் வணக்கம்...

அம்மா.... என்றாலே அன்பு .

அன்புக்கு ஈடு இணை உலகத்தில் இல்லை...

அந்த அன்பின் முழு வடிவம் அம்மா -

அ என்ற உயிர் எழுத்தும்
 ம் என்ற மெய் எழுத்தும்

மா என்ற உயிர்மெய் எழுத்தும் கொண்ட ....

உயிரையும் உடலையும் உருக்கி உரு கொடுத்த உன்னதமான உத்தமியே.... அம்மா. இதை கவிதை வீதி சௌந்தர் அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்....

அவளின் அன்பெனும் ஜீவ நதி அழியாமல் பாய்ந்துகொண்டே தானிருக்கும் என்றென்றும்....

அவளின் கண் கலங்காமல் அவளின் அரவணைப்பில் நீந்துவோம் என்றும்....

அம்மா என்றாலே திரைப்பட பாடலில் வந்து முதன்மை பெற்று என்றும் அழியாவண்ணம் நம் மனதில் நிலைத்திருக்கும் .....


இசைஞானி இளையராஜா அவர்களின் இன்னிசையில் கவியுலக மார்கண்டேயன் வாலி அவர்களின் வரிகளில் கே.ஜே. ஏசு தாஸ் அவர்களின் தெய்வீக குரலில் ஒலிக்கும் இந்த பாடலை இந்த பதிவில் ஒரு முறை கேட்போமா அன்பர்களே.....
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

===================================================================

அம்மாவின் சிறப்பை உணர்த்திய அருமையான அன்புள்ள பதிவர்கள் இன்று வலைச்சரத்தில் அறிமுகமாக உலாவருகிறார்கள்.


.இவர் பதிவுலகின் பதிவுகளர்களின் தீவிர ரசிகை ஆம்...பதிவுகளை மேலோட்டமாக படிப்பவர்களுக்கு மத்தியில் பதிவின் அர்த்தங்களை ஆழமாக ஆராய்ந்து புரிந்துணர்ந்து ... பதிவுகளையும், பதிவு எழுதியவரையும் ஊக்கப்படுத்தி பாராட்டுவதில் இவர் தான் முதன்மை என்பதில் சிறிதும் ஐயமில்லை.. மரியாதைக்குரிய மஞ்சுபாஷிணி அவர்களின் கதம்ப உணர்வுகள் வலைப்பூவில் அம்மாவைப்பற்றி என்னை கவர்ந்த கவிதை அம்மா என் அம்மா.....  படித்து பாருங்கள் அன்பர்களே உங்களையும் கவரும்.

********************************************************************************************************************************************************************

தமிழ் மீதுள்ள காதலால் தான் கவிதையாக,பாடலாக,கதைகளாக எழுதி பதிவுலகில் வலம் வருகிறார் சகோ அம்பாளடியாள்...இவரது இதயத்தின் தீக்குளிப்பில் ஆயிரம் கவிதைகள் முத்துக்களாக பிறக்கின்றன அப்படி பிறந்த ஒரு முத்து தான் ஒரு தாயின் கடமை இதுவே 

****************************************************************************************************************************************

கிராமிய மணம் கமழும் கவிதைக்கு சொந்தக்காரரான நண்பர் மகேந்திரன் அவர்களின் வசந்த மண்டபம் வலைப்பூவில் சமூக சிந்தனை ஊட்டக் கூடிய தாலாட்டு!!! தாலாட்டு என்றாலே தாய் ஞாபகம் தான் வரும்... வாருங்கள் நண்பர்களே தாலாட்டு கேப்போம்.

**************************************************************************************************************************************************************************


இவரது எழுத்துக்கள் - இனிமையான, கலாச்சாரம் சார்ந்த இல்லறங்கள் கொண்டவை, சிந்தையில் ஆயிரம் எண்ணங்களுடய சங்ககால தமிழ் உலகத்திற்கு அழைத்து செல்பவர் சகோ சாகம்பரி.வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்களாக மகிழம்பூச்சரத்தில் அம்மாவைப்பற்றி....

**********************************************************************************************************************************************
கவிதை என்றாலே பதிவுலகில் பட்டென்று ஞாபகத்திற்கு வருபவர் இவர்.
வீதியெங்கும் கவிதைகளை தூவி விட்டு செல்லும் சகோதரர் கவிதை வீதி சௌந்தர் அவர்களின் அம்மா...!  

****************************************************************************************************************

அழகான நடையில் பதிவை எழுதி வரும் ஈழத்தை சேர்ந்த சகோ நிலாமதி அவர்களின் நிலாமதியின் பக்கங்கள் வலைப்பூவில் அம்மா உன் அன்பு உள்ளவரை 

********************************************************************************************************************************************************************

எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் என இவர் நான் பேச நினைப்பதெல்லாம் வலைப்பூவில்  அன்னையைப் போலொரு!  என்ற பதிவில்  தனது தாயின் கைகளை போட்டோ எடுத்து அதை தினமும் வணங்கி வருகிறார் ஒருவர்....பதிவை படியுங்கள் அன்பர்களே மனம் உருக வைக்கிறார் நமது அன்பர் திரு. சென்னைபித்தன் அவர்கள்.

********************************************************************************************************************************************************************

இவர் தொழில்நுட்ப பதிவில் மட்டுமல்ல கவிதையிலும் கலக்கும் வல்லவர்.கவிதை என்பது தளத்திற்கு சொந்தகாரரான சகோதரர் பிரபுகிருஷ்ணா .  பலேபிரபு என்கிற பிரபுகிருஷ்ணா அவர்களின் தோழி யோகா அவர்கள் எழுதியஅம்மாவுக்காக!!!   என்ற பதிவை பாசத்துடன் படியுங்கள்...

********************************************************************************************************************************************************************


உதடுகள் உதிர்கின்ற  வார்த்தைகளிலெல்லாம் அவரை அறியாமலேயே அவ்வப்பொழுது சில முரண்பாடுகள் முகம் காட்டி  விடுகின்றனவாம். வார்த்தைகளில் இல்லாத மென்மை அவரது பெயரிலாவது இருக்கட்டுமே என பனித்துளி என்று விளையாட்டாக சேர்த்துக்கொண்டாராம் நண்பர் சங்கர் பிறகு அதுவே அழகாக அமைய... பதிவுலகில் பனித்துளி சங்கர் என்று பிரபலமாக வலம் வந்து கலக்கிக்கொண்டிருக்கிறார்....அவர் அம்மாவைப்பற்றி எழுதிய அற்புத கவிதை என் அன்னைக்கு !!! 

***************************************************************************************************************


சமீபத்தில் பதிவுலகில்.. சமூகசிந்தனைகளை கூட நகைச்சுவை உணர்வுடன் தட்டிக்கேட்டு கலக்கிகொண்டு வலம் வரும் நண்பர் கோகுல் அவர்களின் வலைப்பூவான கோகுல் மனதில் அம்மாவைப்பற்றி கலக்கலான கவிதை அம்மாவே போதும்!  

************************************************************************************************************************************************************


எப்பொழுதும் நானாக இருப்பது! அதுவே என் பலமும் பலவீனமும்! என பதிவுலகில் அசத்திகொண்டிருக்கும் அன்புடன் அருணா அவர்களின் இது அம்மாவுக்கு.......  பாசமூட்டும் பதிவு.

*****************************************************************************************************************************************************

பெண்ணின் துயரத்தைப்பற்றியும் அவர்களின் பிரச்சனைக்களைப்பற்றியும் உருக்கமாக அன்னையின்றி வேறு யார் அன்னையை போற்றுவோம் என்ற தலைப்பில் எழுதிய அன்பு நண்பர் சண்முகவேல்.  அவரின் counsel for any என்ற தளத்திற்கு ஒரு முறை சென்றால் அவரது தளத்தின் தீவிர ரசிகராவீர்கள் என்பது உறுதி.

********************************************************************************************************************************************************************

இவரது கவிதைகள் மட்டுமல்ல இவரது தளமே அழகாக இருக்கும்....
கவிதைகளை அழகாக எழுதி வரும் நண்பர் கவி அழகனின் 

அன்புள்ள அம்மா  அன்பாக படிப்போம் வாருங்கள் அன்பர்களே

**********************************************************************************************************************************

72 comments:

 1. ஆகா..அற்புதமான பதிவு... பாடலுடன் புதுமையான பகிர்வு... நன்றி ராஜேஷ்...

  ReplyDelete
 2. சுழலும் புவியில்
  பறக்கும் நாழிகையில்
  மிதக்கும் எண்ணங்களில்
  அத்தனைக்கும்
  அன்னையே ஆதாரம்.

  அம்மாவின் அருமை பெருமைகளை
  பட்டியலிட்டுக் காட்டும் பாடலை
  இங்கு தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
  என் கவிதையை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு
  கோடானுகோடி நன்றிகள்.
  என்னைப்போல் அறிமுகப்படுத்தப்பட்ட
  இன்னபிற அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அறிமுகங்கள் அனைத்தும் மிக மிக அருமையானவை
  நான் தினமும் தொடர்பவை
  நல்ல பதிவுகளையும் பதிவர்களையும் அறிமுகப் படுத்தியமைக்கு
  மனமார்ந்த நன்றி.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. அருமையான அறிமுகங்கள் ராஜேஷ். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. தாய்க்கு முதலிடம் கொடுக்கும் எவருக்குமே வாழ்க்கை மிக இனியதாக, சிறப்பாகத்தானிருக்கும்! தாயின் மனம் குளிர்ந்த‌ வாழ்த்துக்கள் தான் அதற்குக் காரணம்! அதனால்தான் உங்களின் முதல் நாள் பணி மிகச் சிறப்பாக இருக்கிறது ராஜேஷ்! இனிய வாழ்த்துக்கள்!

  அறிமுகம் பெறப்பட்ட அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 6. அன்பு நண்பருக்கு வணக்கம் . உலகத்தில் எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரே ஜீவன் தாய்தான் . அந்த தாயின் விரல் பிடித்த நடையில் தங்களின் இந்த அறிமுகப் பதிவு அமைந்திருக்கிறது . அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் . என்னை மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி .

  தாங்கள் எனது தளத்தின் முகவரியை இங்கு தவறுதலாக குடுத்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சற்று சரி பார்க்கவும் .

  இதுதான் எனது தளத்தின் சரியான முகவரி
  http://www.panithulishankar.com/
  புரிதலுக்கு நன்றி .

  என்றும் நேசத்துடன்
  பனித்துளி சங்கர்

  ReplyDelete
 7. ஏனோ தெரியவில்லை, நம் தமிழக மக்கள் பத்து மாதம் சுமந்த தாயை போற்றும் பொழுது குறைந்தது முப்பது ஆண்டுகள் நெருங்கி வர தயங்கி தூரத்தில் இருந்தே சுமக்கும் தந்தையை போற்ற மறந்து விடுகிறோம்..

  ReplyDelete
 8. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 9. வணக்கம் நண்பா,
  அன்னையின் பெருமையினைக் கூறும் அற்புதமான பாடல் பகிர்வோடு, நம் வலையுலகச் சொந்தங்களின் அன்னையைப் பற்றிய சிறப்பு மிகு பதிவுகளையும் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி நண்பா..

  இன்று அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. அழகான அறிமுகம். எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 11. கருத்தாலும்,இசையாலும் என்றும் நினைவில் நிற்கும் ஒரு பாடல் பகிர்வுக்கு நன்றி .

  என்னையும் இச்சரத்தில் கோர்த்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

  எல்லா அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. வணக்கம் சகோ அருமையான பாடல்த் தெரிவுடன் இன்றைய வலைச்சர அறிமுகத்தில் என் தளத்தினையும்
  அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோ .அனைத்து வலைச்சர அறிமுகங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி சகோ
  பகிர்வுக்கு ..............

  ReplyDelete
 13. மிக அருமையான வித்தியாசமான அறிமுகங்கள்

  அம்மா என்றழைக்காத பாடல் சூப்பர்..

  அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. மிக அழகு சகோ.....

  கவிதை வலைப்பூ என்னுடையது. ஆனால் இந்தக் கவிதை என் தோழியின் கவிதை. அவரது பெயர் யோகா. (கவிதையில் இதைக் காணலாம்.)

  அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 15. அம்மா.... அனைத்துக்கும் அம்மா தானே..... அம்மா என்றழைக்காத பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  நல்ல பகிர்வு நண்பரே.....

  ReplyDelete
 16. அம்மா என்றாலே அன்பு தான்

  ReplyDelete
 17. ”அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”.

  மாயா.... என்னால இப்பவும் நம்ப முடியவில்லை, வலைச்சரத்தினுள் வந்ததும், முற்றிலும் மாறுபட்டு, மிக அழகாக அனைத்தும் எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்.

  மாய உலகில்.. பதிவுகள் போட்ட மாயாவா இது என வியப்பாக இருக்கு.எல்லாம் முதலையிடம் கற்ற ரெயினிங்போல:)...

  இந்தவார ஆசிரியர் மாயாவை கரெக்ட்டாகத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள்.

  ReplyDelete
 18. அன்பு வரவேற்புகளும் வணக்கங்களும் ராஜேஷ்....

  வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்று திறம்பட வழிநடத்த என் அன்பு வாழ்த்துகள்பா...

  அடுத்து வலைச்சரத்தில் ஆசிரியர் யார் அப்டின்னு பார்த்தால் அட நம்ம ராஜேஷ் அப்டின்னு வந்து முதல் நாள் உங்க பகிர்வு எப்படி இருக்குன்னு பார்க்க வந்தப்ப....

  அம்மாவை முதன்மைப்படுத்தி நீங்க எழுத தொடங்கிய வரிகள் மனதை நெகிழவைத்தனப்பா...

  அம்மாவின் கைப்பிடித்து நடக்கும் குழந்தை தத்தி தவழ்ந்து எழுந்து நடந்து வெற்றியை சாதிக்க என் அன்பு பிரார்த்தனைகள்....

  அம்மா தான் உலகம்... எது நல்லது எது கெட்டது அப்டின்னு இனம் பிரித்து சொல்லி கொடுக்கும் நம் முதல் ஆசிரியை அம்மா தான்....

  அம்மாக்கு எப்பவுமே அன்பையும் அரவணைப்பையும் தெரியும்...

  அப்பாவுக்கோ கண்டிப்பும் ஒழுக்கமும் முக்கியம் என்பது போல் பிள்ளைகளை நேர் வழியில் கூட்டிச்செல்ல தெரியும்....

  இரண்டு கண்களான அம்மா அப்பா இருவரின் துணையோடு நாம் மெல்ல உலகினை பார்த்து அறிந்து பின் கற்று தெளிந்து சிறந்து வெற்றிகளை குவிக்க இவர்களின் பங்கு எத்தனை மகத்தானதாக இருக்கிறது நம் வாழ்க்கையில்.... அதை எங்களுக்கு அழகாய் அன்பாய் இனிய இசையாய் அது தந்த வரிகளாய் சிறப்புற பகிர்ந்தமைக்கு அன்பு வாழ்த்துகள் ராஜேஷ்....

  என்னை அறிமுகப்படுத்தி அம்மா என்ற ஒற்றை சொல் தான் என் ஓம்காரம் என்பதை இங்கே பகிர்ந்ததை படித்தபோது மனம் நிறைந்ததுப்பா...

  இங்க குவைத்ல விசு அரட்டை அரங்கம் நடத்தினாங்க 2005 ல... அப்ப தலைப்பு என்ன கொடுத்தாங்கன்னு பார்த்தேன்.. உறவுகளில் சிறந்தது தாயா? தந்தையா? சகோதரி/சகோதரர் கணவன் எந்த உறவும் தொல்லை தான் அப்டின்னு ஒரு நெகட்டிவ் தலைப்பும்.... தலைப்பு எதுவா இருந்தாலும் எனக்கிருக்கும் அதிக நேரப்பணி காரணமாக நான் கலந்துக்கொள்ள நேரிடாது என்பதால் விட்டிருந்திருப்பேன்.. ஆனால் அம்மா என்ற உறவு என் வாழ்க்கையில் செய்த அற்புதங்களை அது தன் காயங்களை மறைத்து எங்களை நல்ல வழியில் வெற்றியை தொட வைத்ததை சொல்ல இத்தனை வருஷம் காத்திருந்தது வீண் போகலை... 7 ரௌண்ட் இண்டர்வ்யூல தேர்ந்து இறுதி சுற்றில் விசு சார் இன்னும் கொஞ்சம் பேரை விலக்கி அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு என் மனதில் இருந்த அம்மாவின் நல்லவைகளை உலகமே அறியும்படி செய்ய இறைவன் தந்த வாய்ப்பாகவே எண்ணினேன்...

  உனக்கு யாரை பிடிக்கும் அம்மாவா அப்பாவா? ரெண்டு பேரையும்.. ஆனா அம்மாவை இன்னும் கொஞ்சம் தூக்கலா பிடிக்கும்...

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்...

  அம்மாவை எங்களுக்கு அன்பாய் உணர்த்தி இனி வரும் அடுத்தடுத்த நாளும் ஒவ்வொரு திருநாளாய் எங்களுக்கு இன்னும் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லப்போறீங்கன்னு காத்திருக்கோம்பா...

  ReplyDelete
 19. அன்பின் ராஜேஷ் - உலகில் அன்னையின் புகழ பாடாதவர் எவருமே இல்லை. பெரும்பாலும் யாரைக்கேட்டாலும், அன்னையினை மனம் நெகிழப் புகழ்வார்கள். ந்ல்லதொரு இடுகை - அறிமுகங்கள் அத்தனையும் அருமை. நல்வாழ்த்துகள் ராஜேஷ் - நட்புடன் சீனா

  ReplyDelete
 20. அசத்தலான அறிமுகங்கள்

  ReplyDelete
 21. அம்மாவை பற்றிய பதிவுகள் எல்லாமே அழகுதான். உண்மையான அன்பின் கதை சொல்லும். ஒன்றே பலவுருவாய் அமைவது போல இன்றைய பதிவு பேரன்பின் தூறலாக வந்துள்ளது. மகிழம்பூச்சரத்தின் அன்னை பாசத்தையும் இங்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 22. நாம் தனிக்குடும்பங்கள் என்ற பெயரில் தனித்தனித் தீவுகளாக மாறிவரும் இக்காலச் சூழலில் இதுபோன்ற பதிவுகள் தேவைதான்.

  நல்ல அறிமுகம்
  அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  இதில் நானறிந்த பதிவர்கள் பலரையும் கண்டதில் உள்ளம் பெருமகிழ்ச்சி கொண்டது.

  ReplyDelete
 23. ராஜேஷ்,
  தேனீ போல் தேடித்தேடி, கண்டெடுத்து வலைப்பூக்களும், அவர்கள் படைப்பில் ”அம்மா” பாக்களும் அருமை.

  அதே சமயம், நண்பர் சூர்யஜீவா -ன் பின்னூட்டக் கருத்தையும் நான் அனைவரும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

  ReplyDelete
 24. நன்றி எனது சார்பிலும் மற்றும் மற்றைய பதிவர்கள் சார்பிலும் பிரியா நன்றி நண்பா

  ReplyDelete
 25. எனக்கு பிடித்த பாடல் நண்பா! அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.மற்ற வர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. நல்லதொரு அறிமுகம்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. தமிழ்வாசி - Prakash said...
  ஆகா..அற்புதமான பதிவு... பாடலுடன் புதுமையான பகிர்வு... நன்றி ராஜேஷ்...//


  கருத்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பரே

  ReplyDelete
 28. மகேந்திரன் said...
  சுழலும் புவியில்
  பறக்கும் நாழிகையில்
  மிதக்கும் எண்ணங்களில்
  அத்தனைக்கும்
  அன்னையே ஆதாரம்.

  அம்மாவின் அருமை பெருமைகளை
  பட்டியலிட்டுக் காட்டும் பாடலை
  இங்கு தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...
  என் கவிதையை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு
  கோடானுகோடி நன்றிகள்.
  என்னைப்போல் அறிமுகப்படுத்தப்பட்ட
  இன்னபிற அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்.//

  நண்பர் மகேந்தரனின் வாழ்த்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 29. Ramani said...
  அறிமுகங்கள் அனைத்தும் மிக மிக அருமையானவை
  நான் தினமும் தொடர்பவை
  நல்ல பதிவுகளையும் பதிவர்களையும் அறிமுகப் படுத்தியமைக்கு
  மனமார்ந்த நன்றி.தொடர வாழ்த்துக்கள்//

  தங்களது வாழ்த்துக்கு மனபூர்வமான நன்றி

  ReplyDelete
 30. RAMVI said...
  அருமையான அறிமுகங்கள் ராஜேஷ். வாழ்த்துக்கள்.//

  தங்களது வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 31. மனோ சாமிநாதன் said...
  தாய்க்கு முதலிடம் கொடுக்கும் எவருக்குமே வாழ்க்கை மிக இனியதாக, சிறப்பாகத்தானிருக்கும்! தாயின் மனம் குளிர்ந்த‌ வாழ்த்துக்கள் தான் அதற்குக் காரணம்! அதனால்தான் உங்களின் முதல் நாள் பணி மிகச் சிறப்பாக இருக்கிறது ராஜேஷ்! இனிய வாழ்த்துக்கள்!

  அறிமுகம் பெறப்பட்ட அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!!//

  உண்மை தான் மேடம்... உதாரணத்திற்கு சூப்பர் ஸ்டாரையே சொல்லலாம்..அவரது படங்களில் தாயிக்கு முதன்மையான இடம் முக்கியமாக இருக்கும்.... கருத்துக்கும் வாழ்த்துக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 32. இங்கும் ஆடலா
  இன்னிசைப் பாடலா

  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 33. ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...
  அன்பு நண்பருக்கு வணக்கம் . உலகத்தில் எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரே ஜீவன் தாய்தான் . அந்த தாயின் விரல் பிடித்த நடையில் தங்களின் இந்த அறிமுகப் பதிவு அமைந்திருக்கிறது . அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் . என்னை மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி .

  தாங்கள் எனது தளத்தின் முகவரியை இங்கு தவறுதலாக குடுத்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சற்று சரி பார்க்கவும் .

  இதுதான் எனது தளத்தின் சரியான முகவரி
  http://www.panithulishankar.com/
  புரிதலுக்கு நன்றி .

  என்றும் நேசத்துடன்
  பனித்துளி சங்கர்//

  நண்பர் சங்கருக்கு அன்பு வணக்கம்... அனனையை பற்றி பதிவுக்காக உங்களது என் அன்னைக்கு என்ற தலைப்பில் க்ளிக் செய்தால் உங்களது வேர்டுபிரஸ் தளத்திற்கு செல்வது போல் வைத்திருந்தேன். பனித்துளி சங்கர் என்ற பெயரை க்ளிக் செய்தால் உங்களது தளத்திற்கு செல்வது போல் இப்போழுது இணைத்துள்ளேன்.. குறிப்பிட்டமைக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 34. suryajeeva said...
  ஏனோ தெரியவில்லை, நம் தமிழக மக்கள் பத்து மாதம் சுமந்த தாயை போற்றும் பொழுது குறைந்தது முப்பது ஆண்டுகள் நெருங்கி வர தயங்கி தூரத்தில் இருந்தே சுமக்கும் தந்தையை போற்ற மறந்து விடுகிறோம்..//

  தங்களது ஆதங்கம் சரியானதே நண்பரே! நாளை வலைச்சரத்திற்கு வாருங்கள் தங்களது ஆதங்கம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்.... நன்றி

  ReplyDelete
 35. அமைதிச்சாரல் said...
  இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்//

  தங்களது வாழ்த்துக்கு நன்றி

  ReplyDelete
 36. நிரூபன் said...
  வணக்கம் நண்பா,
  அன்னையின் பெருமையினைக் கூறும் அற்புதமான பாடல் பகிர்வோடு, நம் வலையுலகச் சொந்தங்களின் அன்னையைப் பற்றிய சிறப்பு மிகு பதிவுகளையும் பகிர்ந்திருக்கிறீங்க. நன்றி நண்பா..

  இன்று அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்//

  நண்பா...தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் இதயம் கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 37. Abdul Basith said...
  அழகான அறிமுகம். எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!//

  வாங்க நண்பரே! கருத்துக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 38. சென்னை பித்தன் said...
  கருத்தாலும்,இசையாலும் என்றும் நினைவில் நிற்கும் ஒரு பாடல் பகிர்வுக்கு நன்றி .

  என்னையும் இச்சரத்தில் கோர்த்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

  எல்லா அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்!//

  வாங்க அன்பரே! கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

  ReplyDelete
 39. அம்பாளடியாள் said...
  வணக்கம் சகோ அருமையான பாடல்த் தெரிவுடன் இன்றைய வலைச்சர அறிமுகத்தில் என் தளத்தினையும்
  அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சகோ .அனைத்து வலைச்சர அறிமுகங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி சகோ
  பகிர்வுக்கு ..............//

  வாங்க சகோ! வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 40. Jaleela Kamal said...
  மிக அருமையான வித்தியாசமான அறிமுகங்கள்

  அம்மா என்றழைக்காத பாடல் சூப்பர்..

  அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்//

  தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனப்பூர்வமான நன்றிகள்

  ReplyDelete
 41. Prabu Krishna said...
  மிக அழகு சகோ.....

  கவிதை வலைப்பூ என்னுடையது. ஆனால் இந்தக் கவிதை என் தோழியின் கவிதை. அவரது பெயர் யோகா. (கவிதையில் இதைக் காணலாம்.)

  அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.//

  வாங்க சகோ! குறிப்பிட்டமைக்கு நன்றி அவரது பெயரும் இணைத்துவிட்டேன்... நன்றி

  ReplyDelete
 42. வெங்கட் நாகராஜ் said...
  அம்மா.... அனைத்துக்கும் அம்மா தானே..... அம்மா என்றழைக்காத பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  நல்ல பகிர்வு நண்பரே.....//

  வாங்க நண்பரே! கண்டிப்பாக அனைத்தும் அம்மா தான்..கருத்துக்கு நன்றிகள்

  ReplyDelete
 43. வணக்கம் ராஜேஷ்....என்னையும் தங்கள் வலைச் சரத்தில் அறிமுகபடுத்தியமைக்கு என் நன்றிகள் சில முக்கிய அலுவல் காரணமாக நேரமின்மை யால், எழுதுவதில்லை .மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 44. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  அம்மா என்றாலே அன்பு தான்

  நல்ல அறிமுகம்//

  வாங்க நண்பரே! கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 45. athira said...
  ”அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”.

  மாயா.... என்னால இப்பவும் நம்ப முடியவில்லை, வலைச்சரத்தினுள் வந்ததும், முற்றிலும் மாறுபட்டு, மிக அழகாக அனைத்தும் எழுதுறீங்க.. வாழ்த்துக்கள்.

  மாய உலகில்.. பதிவுகள் போட்ட மாயாவா இது என வியப்பாக இருக்கு.எல்லாம் முதலையிடம் கற்ற ரெயினிங்போல:)...

  இந்தவார ஆசிரியர் மாயாவை கரெக்ட்டாகத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள்.//

  ஆஹா... என்னை முழுக்க முழுக்க காமெடி பீசுன்னு நினைச்சிட்டீங்களா...(அப்பா இப்படியாவது கேட்டு நம்ம காமெடி பீசு இல்லேங்குற மாதிரி நடிச்சுருவோம்... அவ்வ்வ்வ்வ்வ்)

  நம்புங்க நானும் பதிவர் தான்...ஆஹா நம்ப மாட்றாங்களே நான் என்ன செய்வேன்.... தேம்ஸ்ல குதிச்சிர்றா ராஜேஷேஏஏஏஏஏ... தொபுக்கடிர்ர்ர்ர்ர்ர்.. முதல முதல ஆதிஸ்ஸ்ஸ்ஸ்கிட்ட சொல்லிட்டியா உங்கிட்ட ரெயினிக் எடுத்த விசயத்த... கிட்னி வேலை செய்யுதுன்னு சொல்லிட்டாக... பாத்து களவாடாம பாத்துக்க முதல ....ஹா ஹா... வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி ஆதிஸ்

  ReplyDelete
 46. அற்புதமான தலைப்பு அட்டகாசமான அறிமுகங்கள் .பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்

  ReplyDelete
 47. மஞ்சுபாஷிணி said...
  அன்பு வரவேற்புகளும் வணக்கங்களும் ராஜேஷ்....

  வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்று திறம்பட வழிநடத்த என் அன்பு வாழ்த்துகள்பா...

  அடுத்து வலைச்சரத்தில் ஆசிரியர் யார் அப்டின்னு பார்த்தால் அட நம்ம ராஜேஷ் அப்டின்னு வந்து முதல் நாள் உங்க பகிர்வு எப்படி இருக்குன்னு பார்க்க வந்தப்ப....

  அம்மாவை முதன்மைப்படுத்தி நீங்க எழுத தொடங்கிய வரிகள் மனதை நெகிழவைத்தனப்பா...@@@
  -------------------------------
  தங்களது விரிவான பிண்ணுட்டம் என்னை மிகவும் மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது......சரியாக சொன்னீர்கள் நமது முதல் ஆசிரியை அம்மா தான்... //7 ரௌண்ட் இண்டர்வ்யூல தேர்ந்து இறுதி சுற்றில் விசு சார் இன்னும் கொஞ்சம் பேரை விலக்கி அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டு என் மனதில் இருந்த அம்மாவின் நல்லவைகளை உலகமே அறியும்படி செய்ய இறைவன் தந்த வாய்ப்பாகவே எண்ணினேன்...//

  இத்தனை ரவுண்ட் இண்டர்வ்யூவ்ல தேர்ந்தெடுக்கப்பட்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல திடிரென வந்த வெற்றியும் அல்ல... ...அத்தனையும் ஜெயித்து வந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குள் ஊறிப்போன ஆழமான அன்பு நிறைந்த ஒரு அறிவு பூர்வமான விசயம் மனதில் ஒளிந்திருக்கிறது அது வெளிபடும் வாய்ப்பாக அரட்டை அரங்கம் அமைந்த போழுது ஜெயித்துவிட்டீர்கள்...மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.அந்த காணொளியை உங்களது பதிவில் போட்டீங்கன்னா நாங்களும் பார்த்து சந்தோசப்படுவோம்... அம்மாவை தூக்கலா பிடிக்கும் சொல்லியுள்ளீர்கள் உண்மை தான் ஒரு படி மேல் தான் எப்பொழுதும் அம்மா.உங்களது காத்திருப்பு வீண்போகாமல் சிறப்பாக செய்து முடிக்க முயல்கிறேன்... வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்களுக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் மனம் கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 48. cheena (சீனா) said...
  அன்பின் ராஜேஷ் - உலகில் அன்னையின் புகழ பாடாதவர் எவருமே இல்லை. பெரும்பாலும் யாரைக்கேட்டாலும், அன்னையினை மனம் நெகிழப் புகழ்வார்கள். ந்ல்லதொரு இடுகை - அறிமுகங்கள் அத்தனையும் அருமை. நல்வாழ்த்துகள் ராஜேஷ் - நட்புடன் சீனா//

  அன்பும் மரியாதையும் மிக்க சீனா ஐயா அவர்களுக்கு மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 49. மதுரன் said...
  அசத்தலான அறிமுகங்கள்//

  வாங்க நண்பா நன்றி

  ReplyDelete
 50. சாகம்பரி said...
  அம்மாவை பற்றிய பதிவுகள் எல்லாமே அழகுதான். உண்மையான அன்பின் கதை சொல்லும். ஒன்றே பலவுருவாய் அமைவது போல இன்றைய பதிவு பேரன்பின் தூறலாக வந்துள்ளது. மகிழம்பூச்சரத்தின் அன்னை பாசத்தையும் இங்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி//

  தங்களது கருத்துகளுக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 51. முனைவர்.இரா.குணசீலன் said...
  நாம் தனிக்குடும்பங்கள் என்ற பெயரில் தனித்தனித் தீவுகளாக மாறிவரும் இக்காலச் சூழலில் இதுபோன்ற பதிவுகள் தேவைதான்.

  நல்ல அறிமுகம்
  அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  இதில் நானறிந்த பதிவர்கள் பலரையும் கண்டதில் உள்ளம் பெருமகிழ்ச்சி கொண்டது.//

  வாங்க நண்பர் முனைவரே ... தங்களது கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 52. சத்ரியன் said...
  ராஜேஷ்,
  தேனீ போல் தேடித்தேடி, கண்டெடுத்து வலைப்பூக்களும், அவர்கள் படைப்பில் ”அம்மா” பாக்களும் அருமை.

  அதே சமயம், நண்பர் சூர்யஜீவா -ன் பின்னூட்டக் கருத்தையும் நான் அனைவரும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.//

  உங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பரே... அதற்கு நாளை விடை இருக்கு நண்பரே...

  ReplyDelete
 53. கவி அழகன் said...
  நன்றி எனது சார்பிலும் மற்றும் மற்றைய பதிவர்கள் சார்பிலும் பிரியா நன்றி நண்பா//

  தங்களது வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பரே!

  ReplyDelete
 54. shanmugavel said...
  எனக்கு பிடித்த பாடல் நண்பா! அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.மற்ற வர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

  தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 55. ஆமினா said...
  நல்லதொரு அறிமுகம்

  வாழ்த்துக்கள்//

  தங்களது வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 56. புலவர் சா இராமாநுசம் said...
  இங்கும் ஆடலா
  இன்னிசைப் பாடலா

  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்//

  வாங்க ஐயா... தொட்டில் பழக்கம் ஐயா.. பாடலும் இசையும் ஒன்றினைந்தே வாழ்ந்தாகிவிட்டது இறைவன் அடுத்த ஜென்மத்தில் யாராக பிறக்க ஆசை என்று கேட்டால்..இசையமைப்பாளராகவும், இசையறிந்த பாடகராகவும் உருவெடுக்க ஆசை என இறைவனிடம் கேட்பேன்....தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி ஐயா... :-)

  ReplyDelete
 57. நிலாமதி said...
  வணக்கம் ராஜேஷ்....என்னையும் தங்கள் வலைச் சரத்தில் அறிமுகபடுத்தியமைக்கு என் நன்றிகள் சில முக்கிய அலுவல் காரணமாக நேரமின்மை யால், எழுதுவதில்லை .மீண்டும் வருவேன்.//

  வணக்கம்.. வாருங்கள் தங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 58. angelin said...
  அற்புதமான தலைப்பு அட்டகாசமான அறிமுகங்கள் .பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்//

  வாங்க தோழி! கருத்துக்கு மனம்கனிந்த மகிழ்ச்சியான் நன்றி

  ReplyDelete
 59. இது ஜெய்லானியின் ராயல் சல்யூட் ...!! :-)

  ReplyDelete
 60. அறிமுகம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 61. வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  தங்கள் செயல் பாராட்டக்கூடியது
  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 62. ஜெய்லானி said...
  இது ஜெய்லானியின் ராயல் சல்யூட் ...!! :-)//

  மனம்கனிந்த நன்றி சகோ.....

  ReplyDelete
 63. Nesan said...
  அறிமுகம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!//

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 64. M.R said...
  வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  தங்கள் செயல் பாராட்டக்கூடியது
  வாழ்த்துக்கள் சகோ//

  வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி சகோ!

  ReplyDelete
 65. அறிமுகங்கள் அனைத்தும் மிக அருமை...வாழ்த்துக்கள்

  ReplyDelete
 66. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுமையாக நன்றி சொன்ன விதம் மிக மிக அருமை ராஜேஷ்... இறைவன் அருளால் என்றும் வாழ்க்கையில் வெற்றிப்பெற என் அன்பு வாழ்த்துகள்பா...

  ReplyDelete
 67. அரட்டை அரங்கம் காணொளி கண்டிப்பாக இணைக்க முயல்கிறேன் ராஜேஷ்.. நிறைய விஷயங்கள் இன்னும் புரிபடலை எனக்கு. கற்றுக்கொண்டு விட்டால் உடனே செய்துவிடுவேன்பா....

  ReplyDelete
 68. விக்கியுலகம் said...
  அறிமுகங்கள் அனைத்தும் மிக அருமை...வாழ்த்துக்கள்//

  வாங்க மாம்ஸ்... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனபூர்வமான நன்றி

  ReplyDelete
 69. மஞ்சுபாஷிணி said...
  வாழ்த்து சொன்ன அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுமையாக நன்றி சொன்ன விதம் மிக மிக அருமை ராஜேஷ்... இறைவன் அருளால் என்றும் வாழ்க்கையில் வெற்றிப்பெற என் அன்பு வாழ்த்துகள்பா...//

  உங்களது அன்பு கலந்த ஆசிர்வாதத்திற்கு இதயம் கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 70. மஞ்சுபாஷிணி said...
  அரட்டை அரங்கம் காணொளி கண்டிப்பாக இணைக்க முயல்கிறேன் ராஜேஷ்.. நிறைய விஷயங்கள் இன்னும் புரிபடலை எனக்கு. கற்றுக்கொண்டு விட்டால் உடனே செய்துவிடுவேன்பா....//

  நல்லதுங்க... தொழில்நுட்ப பதிவர்கள் நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள் சந்தேகத்தை அவர்கள் தீர்த்துவைப்பார்கள்..நாளை அவர்கள் வலைச்சரத்தில் வலம் வர இருக்கிறார்க்ள்...விரைவில் இணைக்க முயலுங்கள் காண அவலாக இருக்கிறோம் ..அன்பு நன்றிகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது