07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, September 1, 2011

சிந்தனை முத்துக்கள்

பலவிதமான சிந்தனைக் களஞ்சியங்கள் நமது வலைப்பூக்களில் கொட்டிக்கிடக்கின்றன! விழிப்புனர்வுச் சிந்தனைகள் ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் சமுதாயச் சிந்தனைகள், அக உனர்வுகள் பற்றிய சிந்தனைகள்- என்று வலைத்தள வானில் பல்லாயிரம் நட்சத்திரங்கள்! உங்கள் பார்வைக்கு ஒரு சில நட்சத்திரங்கள் இங்கே!

சிந்தனை முத்துக்களிடம் செல்லும் முன் சில சிந்தனைத் துளிகள்!

இந்து மதத்தின் யஜுர் வேதம் சொல்லும் சில வரிகள்:

“பிறர் பொருளில் ஆசை கொள்ள மாட்டேன்!
ஒவ்வொரு நாளும் பிறருக்குத் தொண்டு செய்வேன்!
அனைவரையும் நண்பராகக் கொண்டு அன்புடன் பழகுவேன்!
தேவைக்கு மட்டுமே நேர்மை வழியில் பொருளீட்டுவேன்!
எவரிடமும் கையேந்தி யாசிக்க மாட்டேன்!
என் மனதில் மங்கலமான எண்ணங்களை மட்டுமே எழ அனுமதிப்பேன்!
உண்மையே நம்பிக்கை, பொய்மையே அவநம்பிக்கை. எனவே அனைவரும் நம்பிக்கை கொள்ளும் சத்திய வழியில் நடப்பேன்!”


இனி சிந்தனை முத்துக்கள்!!

1. http://koodalbala.blogspot.com/ [கூடல் பாலா]

சாலைகளில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான விபத்துக்கள்! சமூக அக்கறையுடன் அதன் காரணங்களையும் அதற்கான நிவாரணங்களையும் கீழ்க்கண்ட இடுகையில் பட்டியலிடுகிறார் கூடல் பாலா!



[ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து திரு. ரத்னவேல் நடராஜன்]

குழந்தைகளுக்கான பொம்மைகள் தயாரிப்பில் நிகழும் குளறுபடியையும் அதில் ஏற்படும் நச்சுத்தன்மையையும் பற்றிப் படிக்கும்போதே மனம் கலங்குகிறது. திரு.ரத்னவேல் நடராஜனின் இந்த இடுகையை அவசியம் படித்துப்பாருங்கள்.

 குழந்தைபொம்மை கட்டமைப்பில் நச்சுப் பொருள்..?



3. http://hussainamma.blogspot.com/ [ஹுஸைனம்மா]

விருந்தோம்பல் பற்றியும் விருந்து முறைகள் பற்றியும் அதன் தொடர்பன நிகழ்வுகள் பற்றியும் தனது விருந்தாடல் இடுகையில் எழுதி அசத்தியிருக்கிறார் ஹுஸைனம்மா!


4. http://veeduthirumbal.blogspot.com/ [வீடு திரும்பல்]

அன்பைப்பற்றி இங்கே அலசி ஆராய்ந்திருக்கிறார் மோகன் குமார். எதை விதைக்கிறோமோ, அது தான் விளையும். அன்பும் அப்படிப்பட்டது தான். அதை அருமையாக சொல்லியிருக்கும் அவரின் இடுகை இதோ!


 
5. http://gokulmanathil.blogspot.com/ [கோகுல் மனதில்]

சுற்றுப்புறச் சூழ்நிலையை விஷமாக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை உபயோகிக்க மறுப்போம் என்று ஆணித்தரமாக அறைகூவி அழைக்கிறார் கோகுல் கீழ்க்கண்ட பதிவில்!
6. http://venkatnagaraj.blogspot.com [ வெங்கட் நாகராஜ்] 
வாழ்க்கையில் பொன்னும் பொருளுமா முக்கியம்? அன்பும் கருணையுமல்லவா முக்கியம் என்பதை சகோதரர் வெங்கட் நாகராஜ் தனது காதறுந்த ஊசியும் எவர்சிலர் லோட்டாவும் என்ற இடுகையில் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார்!


7. http://aanandhavaasippu.blogspot.com/ [ஆனந்த வாசிப்பு]

சகோதரர் பத்மநாபன் வாழ்க்கையில் வெற்றிகரமாகத் திகழ முக்கியமானவை இந்த ‘’ பத்து ’’ விஷயங்கள் தாம் என்று உறுதியாகச் சொல்லி அவற்றை நாமும் கடைபிடிக்க அழைக்கிறார்! 

 
8. http://nilaamagal.blogspot.com/ [பறத்தல்-பறத்தல் நிமித்தம்]

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் வளர்கையிலே-அது
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற அழகான பாடல் இருக்கிறது! குழந்தை அப்படி நல்ல குழந்தையாக வளர நிலாமகள் தனது நல்ல தாய் தந்தையாக இருப்பது எப்படி? என்ற இடுகை மூலம் பல அருமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.


9. http://tamiluthayam.blogspot.com/ [ தமிழ் உதயம்]

 நண்பர்கள் பற்றியும் நட்பைப்பற்றியும் அழகாய் அலசும் தமிழ் உதயம் இங்கே கூடா நட்பு  கூடாதென்று சொல்லுகிறார்!



10. http://shadiqah.blogspot.com/ [எல்லாப்புகழும் இறைவனுக்கே]

கோபத்தினால் விளையும் பாதகங்களை அலசி, கோபத்தைக் குறைப்பதற்கான வழி வகைகள் சொல்லி கோபத்திற்கு குட்பை சொல்லுகிறார் சகோதரி ஸாதிகா இங்கே!


11. http://vanathys.blogspot.com/ [வானதி]


அன்பளிப்புகள் கொடுப்பது பற்றியும் பெறுவதைப்பற்றியும் தன் அன்பளிப்புகள் பற்றி என்ற இடுகையில் வானதி மிக அருமையாக, சுவாரஸ்யமாகச் சொல்லுகிறார்!

 
12. http://rajamelaiyur.blogspot.com [என் ராஜபாட்டை]

உறவு வலுப்பட என்ன செய்யலாம் என்ற தனது இடுகையில் அருமையாய் சில யோசனைகளை முன் வைக்கிறார் ராஜா! ஒவ்வொன்றும் முத்தானவை. படித்துப் பாருங்கள்! 
 
13. http://amaithiappa.blogspot.com/ [அமைதி அப்பா]

மனித வாழ்க்கைக்கு ஆதார சுருதியான நீர்நிலைகள் பாழாவது கண்டு
ஒரு அபாய எச்சரிக்கை விடுக்கிறார் அமைதி அப்பா இங்கே!


32 comments:

  1. பாதிப்பேர் நம்முடைய நண்பர்கள் தான்...
    அவர்களின் வித்தியாசமான பதிவுகளை வெளியிட்டு அசத்தியிருக்கிறீர்கள்...

    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. என்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. இன்று ”முத்துச்சிதறல்” அளித்துள்ள சிந்தனை முத்துக்கள் யாவும் அருமை.

    அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். vgk

    ReplyDelete
  4. //இந்து மதத்தின் யஜுர் வேதம் சொல்லும் சில வரிகள்:

    “பிறர் பொருளில் ஆசை கொள்ள மாட்டேன்!

    ஒவ்வொரு நாளும் பிறருக்குத் தொண்டு செய்வேன்!

    அனைவரையும் நண்பராகக் கொண்டு அன்புடன் பழகுவேன்!

    தேவைக்கு மட்டுமே நேர்மை வழியில் பொருளீட்டுவேன்!

    எவரிடமும் கையேந்தி யாசிக்க மாட்டேன்!

    என் மனதில் மங்கலமான எண்ணங்களை மட்டுமே எழ அனுமதிப்பேன்!

    உண்மையே நம்பிக்கை, பொய்மையே அவநம்பிக்கை.

    எனவே அனைவரும் நம்பிக்கை கொள்ளும் சத்திய வழியில் நடப்பேன்!”//

    இந்து மத, யஜுர்வேதத்தை தொடர்ந்து பின்பற்றிவரும் பரம்பரையில் பிறந்தவன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. vgk

    ReplyDelete
  5. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. சிந்தனை முத்துக்களின் சிந்தனைத் துளிகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. அறிமுகம் செய்யப்பட்ட சிந்தனை முத்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அறிமுகம்செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்திய பதிவுகள் அனைத்தும் முத்துக்குள் தான்.

    ReplyDelete
  10. அறிமுகம்செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்திய பதிவுகள் அனைத்தும் முத்துக்குள் தான்.

    ReplyDelete
  11. சிறந்த சில தளங்களை இன்று அறிந்தேன்.

    ReplyDelete
  12. சிந்தனை முத்தாக என்னையும் ஆறுமுகம் ஏயததர்க்கு நன்றிகள் பல.அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து முத்துக்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  13. எனது பதிவையும் அறிமுகப்படுத்தியிருக்கும் தங்களுக்கு என் நன்றியும் அன்பும்

    ReplyDelete
  14. வெங்கட் நாகராஜ் பற்றி தாங்கள் எழுதியது எண் ஆறில் உள்ளது. ஆனால் அவர் ப்ளாக் முகவரி இரண்டாம் அறிமுகம் முடியும் இடத்தில் தவறுதலாக உள்ளது. சரி செய்யவும்

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. தெரிந்தவர்கள் பலர் இருந்தாலும் அறிமுகப்படுத்திய விதம் அழகு :-)

    ReplyDelete
  17. மிக மிக வித்தியாசமான சிநந்தனை முத்துக்கள்.
    வாழ்த்துக்கள் மனோ அக்கா

    ReplyDelete
  18. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. //வலைத்தள வானில் பல்லாயிரம் நட்சத்திரங்கள்! உங்கள் பார்வைக்கு ஒரு சில நட்சத்திரங்கள் இங்கே!//
    அறிமுக நட்சத்திரங்கள் எல்லாமே அருமை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. யஜூர் வேத வரிகள் கொண்டு சிந்தனை முத்துக்களை தொடங்கியது மிகப் பொருத்தம்

    நான் அறிந்திராத தளங்களையும் அறிமுகப்படுத்தி வழி நடத்தியிருக்கிறீர்கள்
    பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  21. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ.

    அறிமுகம் ஆன மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்....

    யஜுர் வேதம் சொல்லும் சில வரிகளுடன் பதிவு ஆரம்பித்த விதம் நன்று...

    ReplyDelete
  22. அறிமுகத்திற்கு மிக்க நன்றி அக்கா.அறிமுகம் கிடைத்த ஏனைய வலைப்பூதாரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. எனக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தந்து உற்சாகப்படுத்தும் பின்னூட்டங்கள் வழங்கிய அன்புத் தோழமைகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!!

    ReplyDelete
  24. வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியற்கு மிக்க நன்றி மனோ மேடம் ... முத்துச்சரத்திலிருந்து அறிமுகச்சரங்கள் வலைச்சரத்தை அழகூட்டுகிறது

    ReplyDelete
  25. என்னை அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மனோ அக்கா ....

    ReplyDelete
  26. அக்கா, என் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி. உங்களால் அறிமுகப்படுத்தப்படுவதும் என் பாக்கியம்!!

    ReplyDelete
  27. மனோ அம்மா உங்களிடம் கற்கவேண்டிய நல்முத்துக்கள் நிறைய இருக்கிறது....

    பிறர் பொருளில் ஆசை கொள்ள மாட்டேன்!
    ஒவ்வொரு நாளும் பிறருக்குத் தொண்டு செய்வேன்!
    அனைவரையும் நண்பராகக் கொண்டு அன்புடன் பழகுவேன்!
    தேவைக்கு மட்டுமே நேர்மை வழியில் பொருளீட்டுவேன்!
    எவரிடமும் கையேந்தி யாசிக்க மாட்டேன்!
    என் மனதில் மங்கலமான எண்ணங்களை மட்டுமே எழ அனுமதிப்பேன்!
    உண்மையே நம்பிக்கை, பொய்மையே அவநம்பிக்கை. எனவே அனைவரும் நம்பிக்கை கொள்ளும் சத்திய வழியில் நடப்பேன்!”

    இத்தனையும் ஒவ்வொருவரும் பின்பற்றினால் அமைதியும் அன்பும் மட்டுமே வாழ்வில் காண்பதாகிவிடும்....

    அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....

    அருமையான பகிர்வுக்கு என் அன்பு நன்றிகள் மனோ அம்மா..

    ReplyDelete
  28. வ‌லைச்ச‌ர‌த்தில் என‌க்கான‌ அறிமுக‌ம் உற்சாக‌த்தையும் ம‌கிழ்வையும் அளிக்கிற‌து. மிக்க‌ ந‌ன்றி! அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ச‌க‌ ப‌திவ‌ர்க‌ளுக்கும் என‌து வாழ்த்துக‌ள்! புதுப்புது ப‌திவ‌ர்க‌ளின் அறிமுக‌ம் வாசிப்பை செம்மைப்ப‌டுத்துவ‌தாய் உள்ள‌து.க‌ருத்துரையில் வாழ்த்திய‌மைக்கும், வ‌ர‌வுக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கும் என‌து வ‌ந்த‌ன‌ம்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் நிலாமகள் - தங்களின் மறுமொழி நன்று - தங்களின் மின்னஞ்சல் முகவரி தருக - வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் அழைக்கிறேன் - தொடர்பு கொள்க - cheenakay@gmail.com - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete
  29. Replies
    1. அன்பின் வைஷ்ணவி - அலை பேசி எண் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது