07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 20, 2011

இரண்டாம்நிலை மாடம்!!






முதல்மாட விளக்கேற்றி
முன்னுரையக் கொண்டுவந்தேன்!
பஞ்சுத்திரி போட்டு
விளக்கெண்ணை ஊற்றியங்கே!
விடியும்வரை எரியச்செய்த
எம்குல பொண்ணு மக்கா!!
நன்றியின்னு ஓர்வார்த்தை
சொல்லிபுட்டா ஆகாது!
நெஞ்சமெல்லாம் உங்களுக்கு
தாரைவார்த்து தந்துபுட்டேன்!!

இரண்டாம் மாடத்தில
விளகேற்ற வந்திருக்கேன்!
காண்டா விளக்கேற்றி
காலமெல்லாம் கூடவரும்
உறவு பற்றி சொல்ல வந்தேன்
உட்கார்ந்து கேட்டிடுங்க!!

......................




இப்பூவுலகில் தனித்து ஒரு மொழி தெரிவது என்பது மிகப் பெரிய செய்தி. அப்படி தனித்துத் தெரியும் மொழிகளுள் தமிழும் ஒன்று. அத்தகைய தனித்துவத்தை தமிழுக்கு கொடுத்தது அதன் கலாச்சாரமும் பண்பாடும்.
பழந்தமிழர் காலம்தொட்டே, மனைமாட்சி, விருந்தோம்பல் என உறவுகளின் உன்னதங்களை பல்வேறு கோணங்களில் உணர்விலேற உரைத்திருக்கிறார்கள்.
இன்றும் கணவன், மனைவி, பிள்ளை,அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, மாமன், அத்தை, ........யப்பப்பா எத்தனை உறவுகள்...
ஆங்கிலத்தில் பெரியப்பா, சித்தப்பா, மாமன் ஆகிய எல்லோரையும் அங்கிள் (Uncle) என்ற சொல்லி அடக்கி விடுகிறார்கள்.
நம் மொழியில் தான் உறவுகளை அழைப்பதற்கே இத்தனை பெயர்கள்.
....................................
இதோ இங்கே பல்வேறு வலைப்பூக்களில் உறவுகளின் உன்னதத்தைக் கூறிநிற்கும் எமதருமை சகோதர சகோதரிகளை பார்ப்போம் வாருங்க...

வாங்க வாங்க
சேக்காளிகளா!
போய் வருவோம்
ஊர்கோலம்!
வலைப்பூவில்
உறவுப்பூவின்
வாசனைய
முகர்ந்திடுவோம்.........

...........................................................................................................................................................





தெளிந்த நீரோடையாம் அழகிய வலைப்பூவில் தன் எழுத்துக்களால் படிப்பபவரைக் கட்டிப்போடும் அருமைச் சகோதரி மலிக்கா, ஒரு பெண் மகவைப் பெற்று அவளைப்பேணிக் காத்து பின்னர் அப்பெண் திருமணம் முடிந்து செல்கையில் அவரின் உணர்வுகளை ஆத்மார்த்தமாய் சொல்லியிருகாங்க பாருங்க! அவங்களுக்காக ....

தந்தனத்தோம் என்றுசொல்லியே
சந்தம்பாடி வந்தேனம்மா!
பெத்தவளின் உணர்வுகளை
புட்டுபுட்டு வைப்பதற்கு!
உனக்கிணை யாருமில்ல
உறுதியாக சொன்னேனம்மா!!
...............................................................................................................................................................



இதோ இங்கே வாங்க... நரைமுடி விழுந்தபின்னும் உனைப் பிரியா என்னுயிர் வரமென வேண்டிவரும் உருகும் கவிதையை... சொற்களை அழகு சரமாய்  தொடுத்து கவிதையெனும் மாலைசெய்து தமிழ்த் தாய்க்கு அணிவிப்பதில் சகோதரி ஆனந்தி தனித்துவம் பெற்றவர்.. அவருக்காக....

தேடி அலையவேணாம்
தேரடிக்குப் போகவேணாம்!
பேரானந்தம் என்பதுவோ
பேரிலேயே உண்டம்மா!
உன்வலைத்தலத்தில்
பெற்றெடுத்த கருவெல்லாம்
தங்கச் சாலையில
தவமிருக்கும் தமிழன்னை
ஏற்றுக்கொண்ட ஆரமம்மா!!
.................................................................................................................................................................


அன்பினால் அகிலத்தையும் ஆளலாம் . அன்பை ஊட்டி வளர்ப்பதினால் உறவுகளின் உன்னதம் குழந்தைப்பருவம் தொட்டே தழைத்துவரும் என ..உங்கள் குழந்தைக்குச் சூழலைக் கற்றுக்கொடுங்கள் சொல்கிறார் நண்பர் தங்கம்பழனி. அவருக்காக

உள்ளதைச் சொன்னீர்களே
உள்ளம் குளுந்துபோச்சி!
உறவுன்னா என்னதுன்னு
வயசுவந்தா தெரியுமின்னு
வக்கனையா இருக்காம
பாலூட்டும் பருவத்திலே
பக்குவமா ஊட்டச் சொன்ன
பாரளந்த மன்னனய்யா!!
.................................................................................................................................................................




காதலின் ஓடையிலே தனித்து இருக்கையில் கிள்ளைமொழிபேசி சிரித்து வாழ்ந்தவர்கள், திருமண நாளினிலே பணத்தைக் காரணங்காட்டி உறவின் புனிதத்தை மண்ணோடு மண்ணாக்கும் மனிதம் தவறியவரை சுள்ளெனச் சாடும் மனித மாண்பு பேசியிருக்கிறார் நண்பர் புங்கையூர் பூவதி. அவருக்காக...

சொன்ன சொல்லு என்ன ஆச்சு
ஆசை மச்சானே!
உன்னை நினைச்சு வேர்த்திருந்தேன்
நேச மச்சானே!
வாசலிலே காத்திருந்தேன்
ஆசை மச்சானே!
மருத்திகூட போனதென்ன
நேச மச்சானே!!
..............................................................................................................................................................





புலம்பெயர்ந்த நாட்டினிலே பெண்களுக்காய் பாதுகாப்பு இன்னதென்று ஒன்றுமில்லை, தாய்நாடு சென்றுவிடு ... உன்குலத்தொடு வாழ்ந்துவிடு என அழகிய கவிதையில் நேர்மைபட உறவுகள் சுற்றமிருப்பின் கருவறையாம் கற்பு மட்டுமல்ல பெண்ணே உன் புறத்துக்கும் ஆதரவே உறவுகளின் பெருமை பேசி இப்படியும் சில உறவுகளா...!! என புல்லரிக்க வைக்கிறார் சகோதரி அம்பாளடியாள்... அவருக்காக 

சின்னபொண்ணு சிவத்தபொண்ணு
சிறுதொழிலு பார்ப்பதற்கு 
சீமைக்கு போன பொண்ணு!
சுத்திநிற்கும் மனுசருக்கு
உன்னப்பார்த்த பத்திக்குமே!
பாதுகாப்பு இல்லையம்மா
பொறந்த ஊரு போயிவிடு!
கால்காசு இல்லேன்னாலும் 
சுற்றமிங்கே வேணுமம்மா!
நீ பொறந்த ஊரிலதான்
அது உனக்கு கிடைகுமம்மா!!
..................................................................................................................................................................





ஒரு சாதாரண பொய் கூட நீதிமன்ற வாசலில் நிற்க வைத்துவிடும். கணவன் மனைவி உறவுகளின் உன்னத பிணைப்பில் மறைத்து வைக்கக் கூடிய ஆவணம் எதுவுமில்லை. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள்.
பொய் பேசுவதை தவிர்த்திடுங்கள் அது உறவுக்கு ஒரு காலன் என்று பொய் பேசுபவர்கள் யார் யார்!! என அழகுபட கூறியிருக்கிறார் நண்பர் சண்முகவேல். அவருக்காக ...

ஊரெல்லாம் சுத்திவந்தேன்
உத்தமரே உன்னைப்போல!
உண்மை பேசும் ஆசாமிய
சத்தியமா பார்த்ததில்ல!
பொய்பேசும் வாயிதனை
நீமட்டும் பார்த்தியின்னா
இதமட்டும் சொல்லிப்புடு!!
போக்கத்த பொய்யச்சொல்லி
உயிர்வரைக்கும் கூடவரும்
உறவுகளை கெடுக்காதய்யா!!
...............................................................................................................................................................


எண்ணற்ற நண்பர்கள் உறவுகள் பற்றி சொல்லியிருக்கலாம், என்னால் இயன்ற அளவு இங்கே தொகுத்திருக்கிறேன்..
இதில் தவறி விடப்பட்ட ஏனைய நண்பர்களுக்கு....

ஊன்றி வளர்ந்த மரமய்யா
ஊஞ்சலுக்கு ஆனதையா!
ஓங்கி வளர்ந்த மரமய்யா
வீட்டு நிலை ஆனதய்யா!!
உறவுகளை உச்சரித்து
நீங்க போட்ட படைப்பாலே!
ஊறிவரும் சந்ததிக
உறவு காத்திடுவாங்கன்னு
முக்காலும் சத்தியமா
உறுதியாக சொல்லுறேய்யா!!


அன்பன்
மகேந்திரன்

54 comments:

  1. அருமையான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அன்பின் மகேந்திரன் - உறவு ப்ற்றிய அத்தனை இடுகைகளுமே ந்ன்று - அறிமுகப்படுத்தியதற்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. அறிமுகங்கள் அனைவருக்குமே வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. மிகச் சிறந்த பதிவர்களையும் அவர்தம் பதிவுகளையும்
    கவிதை முலம் மிகச் சிறந்த முறையில்
    அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஆசிரியப்பணியேற்ற‌தற்கு இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்கள் ஐயா!

    அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. கவி நயத்துடன் அறிமுகப்பதிவு...

    அசத்தல்..
    மற்றும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. அன்பு சகோதரி ராம்வி
    தங்களின் கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. அன்புநிறை சீனா ஐயா
    தங்களின் இனிய கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  10. அன்பு நண்பர் கருன்
    தங்களின் கருத்துக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  11. அன்பு நண்பர் ரமணி
    தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  12. அன்புநிறை மனோ அம்மா
    தங்களின் வாழ்த்துக்கு
    என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  13. நிழற்படத் தேர்வு
    அறிமுகப்படுத்திய விதம்
    அறிமுகங்கள்

    யாவும் அருமை நண்பரே..

    ReplyDelete
  14. அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அன்பு நண்பர் வெளங்காதவன்
    தங்கள இனிய கருத்துக்கு
    என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  16. சில புதிய பதிவர்களையும் அறிந்துகொண்டேன் நண்பா..

    ReplyDelete
  17. அன்பு நண்பர் சூர்யஜீவா
    தங்களின் கருத்துக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  18. அன்பு நண்பர் சௌந்தர்
    தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  19. அன்புநிறை முனைவரே...
    தங்களின் இனிய கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  20. மதிப்புமிக்க மகேந்திரன் அய்யா,
    இன்று வலைச்சரத்தில் எம்மை அறிமுகப்படுத்தியமைக்கு கோடானுகோடி நன்றிகள்.! வலைச்சரத்தில் இடம்பெற செய்தமையால் நான் மிக்க மகிழ்வுற்றிருக்கிறேன். உங்களின் சேவை தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  21. அருமையான கவிதைகள்.
    வித்தியாசமான அறிமுகங்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. அறிமுகங்கள் அனைவருக்குமே வாழ்த்துக்கள்..

    கவிதையே கவிஞைர்களை அறிமுகப்படுத்தியது புதுமை

    ReplyDelete
  23. நண்பரே! கிராமிய மணம் கமழ பட்டைய கிளப்புறீங்க...... கலக்குறீங்க நண்பரே!....அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. சிறந்த பதிவர்களை கவிதை மூலம் அழகாக அறிமுகம் செய்து இருக்கிறீர்கள் நண்பரே! இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  25. நன்றி மகேந்திரன் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. அனைவர்க்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  27. உங்கள் அறிமுக நடை அத்தனையும் அருமை!! என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள்!

    அறிமுகப் படுத்தப்பட்ட அனைத்து நட்புகளுக்கும் வாழ்த்துக்கள்!

    உங்கள் நட்பிற்கு நன்றி! தொடருங்கள்!


    ...ஆனந்தி :)

    ReplyDelete
  28. அறிமுகப் படலம் அற்புதம்!

    ReplyDelete
  29. அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  30. அசத்தலான அறிமுகங்கள்... தொடரட்டும்....

    ReplyDelete
  31. வணக்கம் அண்ணாச்சி,

    ஒவ்வோர் பதிவரைப் பற்றிய அறிமுகங்களோடு..அவர் தம் படைப்புக்கள் பற்றிய சிறப்பான கவிதையினையும் பகிர்ந்திருப்பது இன்றைய அறிமுகத்திற்கு மேலும் மெரு கூட்டுகிறது.

    இன்று அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. அன்பு நண்பர் தங்கம்பழனி
    தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  33. அன்புநிறை ரத்னவேல் ஐயா
    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  34. அன்புநிறை நண்பர் கடம்பவனக் குயில்
    தங்களின் ஏற்றமான கருத்துக்கும்
    நெஞ்சார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  35. அன்பு நண்பர் ராஜேஷ்
    தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  36. அன்பு நண்பர் சண்முகவேல்
    தங்களின் கருத்துக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  37. அன்பு நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்
    தங்களின் கருத்துக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  38. அன்பு சகோதரி ஆனந்தி
    தங்களின் கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  39. அன்பு சகோதரி மிடில்கிளாஸ் மாதவி
    தங்களின் கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  40. அன்புநிறை சென்னை பித்தன் ஐயா
    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  41. அன்பு நண்பர் வெங்கட் நாகராஜ்
    தங்களின் கருத்துக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  42. அன்பு நண்பர் நிரூபன்
    தங்களின் வாழ்த்துக்கும் இனிய கருத்துக்கும்
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  43. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சகோ .இன்று என் வலைத்தளத்தை மட்டும்
    அல்ல என் மகளையும் பிரபலம் ஆக்கிவிட்டீர்கள் .உங்களுக்கு என்
    மனமார்ந்த நன்றிகள் சகோ .......இன்றைய வலைத்தள அறிமுகங்கள் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ............

    ReplyDelete
  44. புல்லரிக்குது பாஸ், சூப்பர்ர்

    ReplyDelete
  45. மிக அருமையான பகிர்வு மகேந்திரன்...

    அழகான அறிமுக படலம்..

    ரசித்து மகிழ்ந்தேன்பா....

    மலிக்கா அன்புப்பெண் நான் அறிந்ததுண்டு....

    அதே போல் அம்பாளடியாள் அசத்தலாக வரிகள் அமைப்பதையும் கண்டிருக்கிறேன்..

    மீதி அறிமுக வலைப்பூக்களையும் படிக்கிறேன்..

    சிறப்பாக எழுதி இருக்கீங்கப்பா...

    அன்பு வாழ்த்துகள் உங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு நண்பர்களுக்கும்....

    ReplyDelete
  46. நல்ல அறிமுகங்கள் மறுபடியும் வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  47. அன்புச்சகோதரருக்கு அழகிய கவிதை நடையில் அருமையான அறிமுகங்கள் அதில் என்னையும் அறியச்செய்தமைக்கு எனது இதயமார்ந்த நன்றிகள்.

    வலைச்சரத்தில் அறிமுகமான அனைத்துள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

    ReplyDelete
  48. அன்பு சகோதரி அம்பாளடியாள்
    தங்களின் கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  49. அன்பு நண்பர் வரோதயன்
    தங்களின் கருத்துக்கு
    நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  50. அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி
    தங்களின் கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  51. அன்பு சகோதரி வேதா. இலங்காதிலகம்.
    தங்களின் கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  52. அன்பு சகோதரி மலிக்கா
    தங்களின் கருத்துக்கு
    மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது