07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 28, 2011

மண் பயனுற வேண்டும்!!

நவராத்திரி கொலு ஆரம்பமாகி விட்டது. விக்கிபீடியாவின் கொலுவைக் கீழே பார்க்கலாம் (என்னிடம் இப்போதே சுண்டல் கேட்கக் கூடாது என்பதால் இந்த எச்சரிக்கை!! :-)) எங்கள் வீட்டு ஷோகேஸ் கொலுவுக்குச் சாயங்காலம் தான் சுண்டல் - எனவே மாலையில் எங்கள் வீட்டுச் சுண்டலையும் பகிர்ந்து கொள்ளலாம்!!):
கொலுவைப் பார்த்துவிட்டு நவராத்திரிப் பாட்டைக் கேட்காமலா? பாடல் பின்னணியில் ஒலிக்க ஆரம்பித்து விட்டதா?!:
'தேடி நிதஞ் சோறு தின்று' எனத் தொடங்கும் வேடிக்கை மனிதருக்கான பாடலைச் சிறு வயதில் என் புத்தக அலமாரியின் மேல் எழுதி ஒட்டியிருப்பேன்.நாம் இந்த மண்ணில் பிறந்தாயிற்று; வெறும் கதை பேசி, வேடிக்கை மனிதராய் வாழ்ந்தால்  போதுமா? பிறந்த மண்ணும் சுற்றியுள்ள மாந்தரும் பயன் பெற வேண்டாமா? தாம் பெற்ற பட்டறிவை எம் பதிவர்கள் எப்படியெல்லாம் அவர்தம் இடுகைகளில் சொல்கிறார்கள் என்பதை இன்று என் பார்வையில் பார்க்கலாம்:

ப்ரியமுடன் வசந்த் -தன்னை ப்ரியம்,கவிதை,கற்பனை, ரசனை,இசை, நக்கல் இவற்றால் கலந்த காபி நான்..! என்று வர்ணித்துக் கொள்கிறார் இவர். ஜோவெனப் பெய்யும் மழை எனும் இவரது கவிதைகளைப் படித்து இன்புறலாம். சினிமாச் செய்திகளும் உண்டு இவர் வலைப்பூவில்.

கோமாளி! செல்வா - நான் எப்படியாவது வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகிடனும்னு இலட்சியத்தோட இருக்கேனுங்க என்று சொல்லும் இவர், பதிவுலகின் செல்லப் பிள்ளையாகவே எனக்குத் தெரிகிறார். இவரை எத்தனைப் பதிவுகளில் வம்பிழுத்து பதிவிட்டாலும், ஜாலியாகவே பதில் சொல்வார்!! செல்வா கதைகள் என்று தனியே எழுதுகிறார். அதற்கான லிங்க் பொம்மையைப் பார்த்தாலே சிரிப்பு வரும்! இவர் தன் வலைப்பூவில் நேர்த்திக்கடன் என்று முருகனை கைக்குள் போடும் வித்தையைச் சொல்கிறார்!

இராஜராஜேஸ்வரி - எனக்குப் பிடித்த இவருடைய பதிவுகளை அறிமுகப்படுத்தினால், அதற்குத் தனியாக ஒரு நாளை ஒதுக்க வேண்டும்!! ஆன்மிகமும், குடும்பமும் தன் விருப்பமான விஷய்ங்கள் என்று சொல்கிறார் இவர். பற்பல கோயில்கள், (அனைத்தும் வண்ணமயமான, சமயத்தில் அனிமேடட் படங்களுடன்!) சுற்றுலா செல்ல பலதரப்பட்ட இடங்கள் என்று விதவிதமான பதிவுகள்! மோட்சபுரி ஹரித்வார், இரயில் பயணங்களில், மெச்சத்தகுந்த மெல்போர்ன் நகர்,... என்று நான் ரசித்த பதிவுகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்!

கோபி ராமமூர்த்தி, கும்பகோணத்தில் பிறந்து, வளர்ந்து, தற்சமயம் பெங்களூரில் பணிபுரிவதாகத் தம்மை அறிமுகம் செய்து கொள்கிறார். இவர் புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம், கதைகள், கவிதைகள் என்று எல்லாப் பிரிவிலும் திறம்பட எழுதுகிறார்! தற்சமயம் வேலூர் புத்தகத் திருவிழா பற்றி எழுதியிருக்கிறார். காபி போடுவது எப்படி என்று கூடச் சுவையாக எழுதியிருக்கிறார்! சமீபத்திய சினிமா விமர்சனமும் பார்க்கலாம்!

கெக்கேபிக்குணி - எனக்குத் தோணினதைச் சொல்வேன் என்று சொல்லும் இவர், கெக்கே பிக்கேன்னு பேசறது என் ஸ்டைலுன்னு பெயர்க் காரணமும் சொல்லியிருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை என்று பல்துறைகளிலும் எழுதுகிறார்; இயற்கை உலகம் பற்றி படத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த வருடக் கோடை விடுமுறையில் தம் குழந்தைகளின் குறுமபுகளைப் பற்றி எழுதியுள்ளார். இந்தப் பதிவு போடும் சமயத்தில் புதிதாக 'வேப்பமுத்து' சிறுகதையை இடுகையிட்டுள்ளார்!

சம்பத்குமார் எழுதும் தமிழ் பேரன்ட்ஸ் என்ற வலைப்பூவைச் சமீபத்தில் பார்த்தேன். துன்பத்திலும் தோள் கொடுப்பான் தோழன் என்று தன் அறிமுகத்தில் அவர் சொல்லிக் கொள்கிறார்! பெற்றோர் குழந்தைகளிடம் கவனிக்க வேண்டியது பற்றி மிக நன்றாகச் சொல்லியிருக்கிறார். தேர்வெழுதும் குழந்தைகளின் பயம் நீங்க, பெற்ற குழந்தைகளை அவமானப்படுத்தும் பெற்றோர் என, பெற்றோர் படிக்க வேண்டிய பதிவுகள்.

மதுரகவி என்ற பதிவெழுதும் RAMVI தம்மை எது நடந்தாலும் நல்லதுக்குதான் என்று எடுத்துக்கொள்ளும் சுபாவம் கொண்டவள் என்கிறார். சமீப காலமாகத் தான் பதிவெழுதும் இவரது பதிவுகள் ஒரு தேர்ந்த எழுத்தாளரின் பதிவுகளாகவே இருக்கின்றன. எண்ணம், செயல் என்ற அவர் பதிவு ஆக்கபூர்வமாக உள்ளது. அறிந்து கொள்வோம் என்ற தலைப்பில் சில கடினமான ஆங்கில வார்த்தைகளுக்கு அழகாக விளக்கம் கொடுக்கிறார்!
இன்றைய வானவில் பதிவர்களுக்கு என் சார்பில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்!
வானவில்லின் நீல நிறம் - நீங்கள் நினைத்தது சரி தான்! - கடவுளைக் குறிக்கிறது! (அவதார்??!!) நீல நிறம் வானத்தையும் கடலையும் மட்டுமன்றி, அமைதியையும் புரிந்து கொள்ளுதலையும் குறிக்கிறதாம்! மன நிம்மதிக்கும் ஆறுதலுக்கும் உதவும் நிறம். (நீல நிறம், வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் என்று நீங்கள் பாட ஆரம்பித்தால் நான் பொறுப்பல்ல!!)

43 comments:

 1. "மண் பயனுற வேண்டும்!!"/

  அருமையாய் அறிமுகம்.. நன்றி ..நன்றி.

  ReplyDelete
 2. பலரும் ஏற்கனவே அறிமுகமானவர்களே. ..ஒரு சிலரை தவிர. கெக்கே பிக்குணி அவர்கள் பின்னூட்டத்தில் பார்த்துள்ளேன். ப்ளாக் தெரியாது. நீங்கள் இங்கு தந்த ப்ளாக் லிங்க் மூலம் அறிந்தேன்

  ReplyDelete
 3. அருமையான அறிமுகம்..

  தலைப்பே தங்கள் மனவோட்டத்தைக் காட்டுவதாக உள்ளது..

  நன்று..

  அறிமுப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. அத்தனை பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.உங்களுக்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 5. பிண்ணனியில் ஒலித்த பாடலுடன் ரம்மியமான அனுபவம்.
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.இணைந்துவிடேன்!

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்களை வழங்கியிருக்கீங்க. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் இருந்தாலும் பிக்குணி போன்ற புதியவர்களின் அறிமுகத்துக்கு நன்றி.


  அறிமுப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.....உங்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.....உங்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 10. //மண் பயனுற வேண்டும்!!//

  கிடைத்த அங்கீகாரத்திற்க்கு மிக்க நன்றி

  வாழ்த்தும் ஒவ்வொரு உள்ளத்திற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  வணக்கங்களுடன்
  சம்பத்குமார்
  தமிழ் பேரன்ட்ஸ்

  ReplyDelete
 11. ""மண் பயனுற வேண்டும்!!"
  அருமையான தலைப்பு.

  படத்தில் காட்டியுள்ள நவராத்திரி கொலு பொம்மைகளும், பின்னனியில் ஓர் இன்னிசையும் அருமை.

  அறிமுகங்கள் யாவும் அருமையோ அருமை.

  அறிமுகம் செய்துள்ள உஙகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  vgk

  ReplyDelete
 12. @ இராஜராஜேஸ்வரி - உங்களுக்கும் என் நன்றிகள்

  ReplyDelete
 13. @ மோகன் குமார் - கருத்துககு நன்றி

  ReplyDelete
 14. @ முனைவர் இரா.குணசீலன் - தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  ReplyDelete
 15. @ kavithai(kovaikkavi) - வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 16. @ காந்தி பனங்கூர் - மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு

  ReplyDelete
 17. @ சே.குமார் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 18. @ விக்கியுலகம் -நன்றி

  ReplyDelete
 19. @ சம்பத்குமார் - //கிடைத்த அங்கீகாரத்திற்க்கு மிக்க நன்றி// தங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. @ வை.கோபாலகிருஷ்ணன் - பதிவை இவ்வளவு அழகாக ரசித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 21. பின்னணியில் உன்னி கிருஷ்ணன் அவர்களின் அருமையான பாடல், கொலு பொம்மைகள் என அருமையாய் இருந்தது.

  நல்ல அறிமுகங்கள்.
  அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. கோமாளி செல்வா, கெக்கே பிக்குணி நானும் பின்னூட்டங்களில் பார்த்ததிருபபதோடு சரி. ப்ளாக் அறிமுகங்கள் நன்று.

  ReplyDelete
 23. என்னையும் அறிமுகப்படுத்தினதுக்கு ரொம்ப நன்றிங்க :)

  சில அறிமுகங்கள் தெரிந்தவர்கள். இன்னும் சிலர் எனக்கு தெரியாதவங்க. நிச்சயமா அவர்களின் பதிவுகளைப் பார்க்க முயற்சிக்கிறேன் !

  ReplyDelete
 24. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்....
  அறிமுகபடுத்திய தங்களுக்கு நன்றி ......

  ReplyDelete
 25. பின்னணியில் ஒலிக்கும் பாடலும்.... வலைப்பூக்களை அறிமுகப் படுத்திய விதமும் நன்று...

  நல்ல அறிமுகங்கள்... மிக்க நன்றி.

  ReplyDelete
 26. அறிமுப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. @ கோவை2தில்லி - கொலுவையும் இசையையும் ரசித்ததற்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 28. @ ஸ்ரீராம் - கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 29. @ கோமாளி செல்வா - உங்களுக்கு மறுபடி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 30. @ சின்ன தூரல் - வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 31. @ வெங்கட் நாகராஜ் - வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 32. @ கலாநேசன் - நன்றி

  ReplyDelete
 33. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
  மண் பயனுற வேண்டும் என்ற தலைப்பில் அறிமுகம் செய்தது சிறப்பு.

  சிலர் தெரிந்த பதிவர்கள்.புதியவர்களை சென்று பார்க்கிறேன்

  ReplyDelete
 34. அருமையான அறிமுகத்தோடு தொடங்கி இருக்கிறீர்கள்! வாழ்த்துகள்!

  பாட்டும் நல்ல தேர்வு. [மணிப்பிரவாளத்தில் பாரதி எழுதியது, நவராத்திரிக்கு ஏற்ற பாட்டு!]

  வலைச்சரத்தில் நீங்கள் என்னை அறிமுகப் படுத்தியதற்கும் நன்றி! அதிசயமா நான் eppavO எழுதின கதை கரீட்டா இந்த அறிமுகத்தின் பொது வெளியானது:-)

  இங்கே அறிமுகப் படுத்தப் பட்ட மற்ற பதிவர்களையும் அவ்வப்போது படித்து வருகிறேன், அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. @ raji - வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 36. @ கெக்கே பிக்குணி - வாழ்த்துக்கு நன்றி!
  பாடல் பாரதி எழுதிய இரண்டு நவராத்திரிப் பாடல்களில் ஒன்று! தலைப்பே அது தான்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 37. நேத்து ஆப்செண்ட் ஆனதுக்கு முதல்ல மன்னிப்பு கேட்டுக்கிறேன் டீச்சர் :)

  க்ளோசிங் மந்த் என்பதால் அதிகப்படி வேலை. ( என்னதான் வேலைன்னாலும் நைட் வரைக்குமா அப்டின்னு நீங்க கேக்கிறது எனக்கு காதுல விழுந்திருச்சுப்பா.. நம்பமாட்டீங்கல்ல? முடிக்கமுடியாம எத்தனையோ ப்ரோபசல்ஸ் வீட்டுக்கு கொண்டு போய் நைட் வரை மாங்கு மாங்குன்னு முடிச்சேனாக்கும்)

  அருமையா ஆரம்பிச்சு சரி சுண்டல் தருவீங்கன்னு ஆசையா கை நீட்டினா பட்டுனு அடி தான் கிடைச்சுது.. நேத்து வராத பிள்ளைகளுக்கு நோ சுண்டலாப்பா???

  அருமையான பகிர்வு.. அருமையான அறிமுகங்கள்... அவர்களை நீங்க அறிமுகப்படுதுவது ரொம்ப சுவாரஸ்யமா இருக்குப்பா....

  நீங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களில் ஒரு சிலரின் பதிவுகளை படித்திருக்கிறேன். அதில் நம்ம ராஜேஸ்வரியும் இருப்பது எனக்கு அதிகப்படி சந்தோஷம்... குளிரா மழையா வெயிலா ஹுஹும் எதையும் பொருட்படுத்தாம வந்து அருமையான ஆன்மீக பதிவுகள் போட்டு அசத்துவாங்க....

  அதேபோல சம்பத்குமார் பதிவுகளை சமீபத்துல இருந்து தான் படிக்க ஆரம்பித்தேன். அருமையா அலசி இருப்பார் நாட்டு நடப்புகளை..

  மீதி பதிவர்களுடையதும் படித்துவிடுகிறேன்.

  அருமையான பகிர்வுக்கு என் அன்பு வாழ்த்துகள் மாதவி....

  அறிமுகப்படுத்தப்பட்ட அத்தனை பதிவர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்பா...

  இப்பவும் சுண்டல் தரமாட்டீங்களா எனக்கு மாதவி?? என்ன சுண்டல்பா இன்னைக்கு???

  ReplyDelete
 38. @ மஞ்சுபாஷினி - சரி சரி பரவாயில்ல, இவ்வளவு விளக்கம் குடுத்ததனாலே சுண்டல் உண்டு! ஆனா, நான் தான் சொல்லியிருந்தேனே, எங்கள் வீட்டுக் கொலுவுக்கு சாயங்காலம் தான் சுண்டல்னு! எனது வலைப்பூவில் இருக்கு!
  கருத்துக்களுக்கு நன்றி!

  ReplyDelete
 39. நன்றி மாதவி என்னை அறிமுகபடுத்தியதற்கு.
  அரிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது