07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 14, 2011

பிதா

                       தந்தை சொல்மிக்க மந்திரமில்லை                                             

          உயிரையும் உடலையும் உருக்கி உருவாக்கியது

                                    அம்மா மட்டுமல்ல,

                  அம்மாவுடன் சேர்ந்த அப்பாவும் தான்...

                                 அ  என்ற உயிர் எழுத்து

                                   ப்  என்ற மெய் எழுத்து

              பா என்ற உயிர் மெய் எழுத்தும் கொண்ட - அப்பா

                     அனுதினமும் அணு அணுவாய் பாடுபட்டு

                   உயிருள்ள வரை உற்சாகமாக உணவு ஊட்டிய

                        உயிரினும் மேலான உன்னத ஆவியே

                     உனக்குண்டான வாழ்க்கையை உதறிவிட்டு

                              எனக்கென வாழும் அற்புத ஜீவியே

                                             உன் பாசப் படியினை

                                  அளந்திட முடியாத இந்த பாவியை

                                        கண்டிப்புடன் பாசம் காட்டி

                                   அடியுடன் கூடிய நேசம் புகட்டிய

                                        குடும்பத்தின் ஆணிவேரே

                        காலமெல்லாம் கஷ்டப் பட்ட கண்ணியமே

                           உனக்கு கடைசி வரை கஷ்டம் கொடுத்த

       இந்த கயவனின் கண்ணீர் துளிகள் மட்டுமே காணிக்கையாய்....

                                  *                  *                   *

அப்பாவை அலங்கரித்த திரைப்படம் என்றால் சட்டென ஞாபகத்திற்கு
வருவது இயக்குனர் திரு. சேரன் அவர்களின் தவமாய் தவமிருந்து படம் தான்...
அந்த படத்திலிருந்து ஒரு பாடல்....
                                                                                                                                                                                                                                                            
        

இன்றைய வலைச்சர பதிவில் அப்பாவின் அன்பை அழகு நடையில் சொல்லிய அன்பு பதிவர்களின் அறிமுகங்கள்......


எனது நேற்றைய மாதா என்கிற பதிவில் -  நண்பர் suryajeeva said...ஏனோ தெரியவில்லை, நம் தமிழக மக்கள் பத்து மாதம் சுமந்த தாயை போற்றும் பொழுது குறைந்தது முப்பது ஆண்டுகள் நெருங்கி வர தயங்கி தூரத்தில் இருந்தே சுமக்கும் தந்தையை போற்ற மறந்து விடுகிறோம்..  


 நண்பர் சத்ரியன் said... நண்பர் சூர்யஜீவா -ன் பின்னூட்டக் கருத்தையும் நான் அனைவரும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

இவர்களது ஆதங்கம் போலவே 
=====================================================================================
நண்பர் ரெவரி அவர்கள் ஆதங்கபட்டு
நானும் இப்போது ஒரு தந்தை தான்.ஏனோ ஒரு தாய்க்கு கிடைக்கும் பாசமும் ,  மரியாதையும் , அங்கீகாரமும் ஒரு தந்தைக்கு இந்த சமூகத்தில் கிடைக் கவில்லையோ என்ற எண்ணம் என்னுள்... என்று தந்தைக்கு மகன் எழுதும் கடிதமாக பதிவை எழுதி இருக்கிறார் வாருங்கள் நண்பர்களே நாமும் அந்த கடிதத்தை வாசிப்போம்...அன்புள்ள அப்பாவுக்கு...
-----------------------------------------------------------------------------------------------------------------------

இவர் பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்...இவரது தந்தை திரு.பொ.ம. ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்து வந்த மதிப்பிற்குரிய சித்ரா அவர்கள். இவரது வலைப்பூ... பதிவுலகத்தில் பிரபலமாக உள்ள கொஞ்சம் வெட்டி பேச்சு ... இவர் தந்தையுடன் பேசிய பேச்சை... அப்பாவுடன் அரட்டை நேரம் என்ற பதிவாக பகிர்ந்துள்ளார்
-----------------------------------------------------------------------------------------------------------------------

கணினி ஆசிரியரான இவர் என் ராஜபாட்டை வலைப்பூவிற்கு சொந்தக்காரர் பதிவுலகில் ராஜாவாக வலம் வந்து கொண்டிருக்கும் நண்பர் ராஜாஅவர்கள். அப்பா என்ற அசத்தலான கவிதையை பகிர்ந்துள்ளார்...  
-----------------------------------------------------------------------------------------------------------------------

அனுபவங்களையும் நினைப்பதையும், ரசித்தவற்றையும்  அழகாக நம்முடன் பகிர்ந்து வரும் நண்பர் ஜீ அவர்களின் வானம் தாண்டிய சிறகுகள் என்ற வலைப்பூவில் அப்பா என்ற பதிவை அழகாக சொல்லி அருமையான நடையில் அசத்தியிருக்கிறார்...

----------------------------------------------------------------------------------------------------------------------

உலகிலுள்ள அனைத்து விடயங்களையும் தெரிந்து கொள்ள ஆவலில்... அதற்கான தேடலில் பதிவுலகில் பவனி வருகிறார் அன்பு நண்பர் ரியாஸ். அவர்களது  Riyas's யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வலைப்பூவில்தந்தையே உன்னை போற்றுவோம்! என்று கவிதையில் போற்றியிருக்கிறார் வாருங்கள். நாமும் தந்தையை போற்றுவோம்.
----------------------------------------------------------------------------------------------------------------------
சகோதரி கீதா (geetha6) அவர்கள் வணக்கம் என்ற வலைப்பூவில் அப்பாவும், நானும் அப்பாவும் நானும் இரண்டாம் நாள்!  அப்பாவும் நானும்... புது வருடம் அன்று அப்பாவும் நானும் முடிவு என்ற பதிவை அவரது டைரிய புரட்டி நம்முடன் பகிர்ந்துள்ளார்..  சென்று பகிர்ந்து கொள்வோம் சகோதர, சகோதரிகளே...

----------------------------------------------------------------------------------------------------------------------

தோழி ஆனந்தி அவர்கள் அன்புடன் ஆனந்தி என்ற வலைப்பூவில் 
அப்பாவைப் பற்றி  விரிவாக அற்புதமாக விவரித்திருக்கிறார்... அன்பு நண்பர்களே சென்று படிப்போம் வாருங்கள்...
---------------------------------------------------------------------------------------------------------------------

காகிதங்களின் தவம் பேனா வரையும் கவிதைகளாம் என சொல்லிய தோழி பிரஷா அவர்களின் வலைப்பூ ரோஜாக்கள்  இந்த வலைப்பூ... கொள்ளை அழகு கொண்டதாக வடிவமைத்திருக்கிறார் அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல இருக்கும்...  அவர் கூகுள் பிளசில் அப்பா என்ற கவிதையை கலக்கலாக பகிர்ந்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் ஷீ-நிசி அவர்களின் ஷீ-நிசி கவிதைகள் வலைப்பூவில் 
அப்பா என்ற அசத்தலான பதிவை எழுதியுள்ளார்... சிற்பியின் உளிக்கு சமம் உங்கள் சொற்களின் துளிகள்.... படித்து வாழ்த்துவோம் அன்பு நெஞ்சங்களே
--------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் navishsenthilkumar அவர்கள் நாவிஷ் கவிதைகள் என்ற வலைப்பூவில் 
அப்பா என்ற மனதை உருக வைக்க கூடிய அழகிய கவிதையை வடித்திருக்கிறார்... வாருங்கள் நண்பர்களே படித்து பார்போம்.
-------------------------------------------------------------------------------------------------
கவிதைகளையும் பயணங்களையும் நேசிக்கம் தோழி சுஜா அவர்களின்      சுஜா கவிதைகள் என்ற வலைப்பூவில் அப்பா என்ற அருமையான சிறு கவிதையை பகிர்ந்துள்ளார். படித்து வாழ்த்துங்கள் நண்பர்களே
-------------------------------------------------------------------------------------------------
நண்பர் சதிஷ் அவர்களின் கவிதைகள் வலைப்பூவில் என் அப்பா என்ற பதிவை பகிர்ந்துள்ளார்..  படித்து பாராட்டுங்கள் அன்பர்களே.
-------------------------------------------------------------------------------------------------
jeeves அவர்களின் எண்ணங்கள் இனியவை என்ற வலைப்பூவில் ஆதிதமுடைய அப்பா என்ற கவிதையை பகிர்ந்துள்ளார்... சென்று வாசித்து வாழ்த்துவோம் வாருங்கள்.
-------------------------------------------------------------------------------------------------
நண்பர் நவீன் ப்ரகாஷ் அவர்களின் ஆதலினால் என்ற வலைப்பூவில் அப்பா என்ற அழகிய வரிகளை தூவி சென்றிருக்கிறார்... ஆனால் தற்பொழுது எழுதுவதை நிறுத்திவிட்டார் போலிருக்கிறது... நமது வாழ்த்துக்களால் அவரை மீண்டும் வலம் வர செய்வோம் அன்பர்களே.
-------------------------------------------------------------------------------------------------

78 comments:

 1. மாதா, பிதா அடுத்தது குருவா..

  மாய உம் பாணியே தனி
  ஓயா என்றும் உம் பணி
  அறிமுகப் படலம் அருமை!

  வாழ்த்துகள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 2. உறவுகளின் மேன்மையை சொல்லும் வலைச்சரம் ஒன்ரு மலர வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். அதை மிகச்சரியாக செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். இன்றைய அறிமுக வலைப்பூக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. மாதா,பிதா,குரு தெய்வம் என்கிற வரிசையா?? அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. ஆகா... இன்றும் அருமையான அறிமுகங்கள்,

  ReplyDelete
 5. வரிசைப்படுத்தப்பட்ட விதம் அருமை

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள். வரிசைப்படுத்தி
  இருந்த விதம் நல்லா இருக்கு. எல்லாருக்கும்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அப்பா என்று நீங்கள் உரைக்கும்போதே உங்களுக்குள் ஒரு கம்பீரம் ஒளிர்வதை கண்டிப்பா மறுக்க முடியாது....

  பிள்ளைகள் குட்டியா இருக்கும்போதே அம்மாவை வீட்டோடு வெச்சிட்டு அப்பா கூட கைக்கோர்த்து நடப்பதை தான் ரொம்ப பெருமிதமாக உணர்வார்கள்....

  பார்த்தியா எங்கப்பா வாங்கி கொடுத்தார் இதை அப்டின்னு தன் சக தோழர்களுடன் பகிரும்போது உள்ளுக்குள் ரொம்ப பெருமையா உணர்வோம்...

  அப்பாவிடம் எத்தனை எத்தனை கண்டிப்பு இருக்கிறதோ அத்தனை பாசமும் இருக்கும் ஆனா உள்ளுக்குள். பிள்ளைகள் நல்வழியில் நடக்க இப்படி நரசிம்ஹ அவதாரமெடுக்கவேண்டியதா போய்விடுகிறது....

  சுமந்து பெற்று கொடுக்கும் வரை அம்மாவின் சிரமங்கள் முடிந்து அப்பாவின் சிரமங்களும் பொறுப்புகளும் அப்போது தான் தொடங்கவே ஆரம்பிக்கிறது....

  அப்பாவை பற்றி சிலாகித்து சொல்ல நீங்கள் எழுதிய முதல் கவிதை வரிகள் நினைவில் நிற்கக்கூடிய மிக அருமையான வரிகள்... ஆனால் கயவனாக அப்பா வளர்க்கலையே இந்த ராஜேஷ் பிள்ளை நல்லப்பிள்ளையாயிற்றே....

  அதுவும் நானும் படித்தேன் நேற்று சூர்யஜீவா சொன்ன கருத்துகளை அம்மாவை நினைக்கும்போது அப்பாவை ஏனோ மறந்துவிடுகிறார்கள் என்று.... இன்று அப்பாவை முதன்மைப்படுத்தி அந்த குறையை போக்கிட்டீங்கப்பா...

  அறிமுகப்படலம் இன்று அபாரம்.... அதே சமயம் வித்தியாசமாகவும் இருக்குப்பா...

  இதில் பலபேர் வலைப்பூக்களை நான் படித்திருக்கிறேன்... இன்று நீங்கள் அறிமுகப்படுத்திய வலைப்பூக்களின் பகிர்வை படித்து விடுகிறேன்...

  அழகாய் அன்னை அடுத்து அப்பாவை இன்று தொடர்ந்தது மிக மிக அருமை..

  உண்மையேப்பா.. தவமாய் தவமிருந்து படம் அப்பா பாசத்தை பரிபூரணமாக நமக்கு உணர்த்திய அற்புதமான படம்....

  அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்கள் எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துகள்...

  அப்பாவைப்பற்றி நீங்கள் சொன்னது அத்தனையும் மனதை நிறைக்கும்படி இருந்தது அன்பு வாழ்த்துகள் ராஜேஷ்..

  ReplyDelete
 8. அழகிய பகிர்வு நண்பரே... மாதா, பிதா என வரிசையாய் வருகிறீர்கள்.... நன்றாக இருக்கிறது...

  ReplyDelete
 9. நெகிழ்ந்தேன். அப்பா பாசம் ஆச்சே..... ரொம்ப ஸ்பெஷல் அறிமுகம்... மிக்க நன்றிங்க.

  ReplyDelete
 10. அப்பா பற்றி கவிதை அருமை..

  அம்மா கிட்ட இருந்து படும் கஷ்டம் குசந்தைக்கு தெரியும் ஆனா அப்பா எங்கேயோ இருந்து படும் கஷ்டம் தெரியாது..

  ReplyDelete
 11. நான் எழுதிய கவிதையை இந்த சரத்தில் கோர்த்ததற்கு நன்றி :)

  ReplyDelete
 12. உறவுகளைப் பிரதானமாக வைத்து நீங்கள்
  பின்னிப்போகும் வலைச்சரம் அருமையிலும் அருமை
  தங்கள் வாசிப்பின் வீச்சை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது
  தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. அப்பா அறிமுகப் படலம் அருமை!

  வாழ்த்துகள்!

  ReplyDelete
 14. வித்தியாசமான அறிமுகங்கள் சூப்பர் நண்பா...

  ReplyDelete
 15. அப்பாவை வாழ்த்தி இவ்வளவு பதிவுகளா? தலை வணங்குகிறேன்..

  ReplyDelete
 16. அப்பாவை பற்றிய பதிவுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. அப்பா பற்றி பதிவெழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. அன்பின் ராஜேஷ் - நேத்து மறுமொழிஉஇல குறிப்பு பாத்தேன் - இன்னிக்கு அப்பா பத்தித்தான்ன்னு நினைச்சேன் - சரியாஇருக்கு - இவ்வளவு இடுகைகளா - பலே பலே - தேடித்தேடிப் போட்டிருக்கீங்க போல - நல்வாழ்த்துகள் ராஜேஷ் - நட்புடன் சீனா

  ReplyDelete
 18. தந்தையின் பெருமையினையும், அவரைப் பற்றிய வலை உலக உறவுகளின் படைப்புக்களையும் பகிர்ந்திருக்கிறீங்க.
  நன்றி நண்பா.

  ReplyDelete
 19. அறிமுகத்திற்கு நன்றி நண்பரே,, ஏனைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 20. நானுமா? நன்றி நண்பரே!

  ReplyDelete
 21. அப்பா பற்றி இவ்ளோ இடுகைகளா? அருமை!

  ReplyDelete
 22. அம்மா...

  அப்பா....
  அப்பப்பா ....
  அறிமுகங்கள் யாவும்
  அருமையப்பா.

  வாழ்த்துக்கள் 'குரு' வே!

  [அடுத்தது குரு தானே, அதனால் தான் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்]
  vgk

  ReplyDelete
 23. ராஜேஷ்,

  அமர்க்களமா “பிதா” படைப்புகளைக் கண்டுபிடித்து பகிர்ந்திருக்கின்றீர்கள்.

  வாழ்த்துக்கள்!

  புலவர் ஐயா சொல்வது போல் நாளை ”குரு” படைப்புகளோ?

  ReplyDelete
 24. முதலில் மாதா
  அடுத்து பிதாவா

  ம்ம் அருமையான் அறிமுகங்கள் , அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அறிமுகத்திற்கு நன்றி..

  ReplyDelete
 26. தனி பாணியிலான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. புதிய பாணியில் அறிமுகங்களைத்தர மிகவும் உழைத்திருக்கிறீர்கள். தொடரட்டும்,குரு,தெய்வம் என!

  அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 28. மாயா... நானும் வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))...

  அம்மா, அப்பா.... சூப்பர். வலையுலகிற்கு வந்து 2 மாதம்தான் ஆகுதென அறிந்தேன், ஆனால் அறிமுகப்படுத்தும் தளங்களைப் பார்க்கும்போது, வலைப்பூக்களை ஒரு கலக்குக் கலக்கித்தான் வைத்திருக்கிறீங்க.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. ஊ.கு:
  தேம்ஸ்ல, ம்யா....ம்ம்யா.... என ஒரே சத்தம்:) ஒழுங்கா ஒரு யோகாச் செய்ய முடியேல்லை:)), தொபுக்கடீர் என ரேப்பண்ணி வச்சோ அடிக்கடி போடுறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  உண்மையாகக் குதிச்சிருந்தால்... முதலை ஏன் தேடுது?:)), ஒருவேளை தன் கிட்னியை நீங்க க... எடுத்ததைக் கண்டுபிடிச்சிட்டுதோ?:)))...

  சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))... எதுக்கும் ஜாக்ர்ர்ர்ர்ர்தை மாயா:)))). சீயா மீயா.

  ReplyDelete
 30. பெருமை பெற்றோம் நண்பரே...
  எம்மைப் போல் ஒரு தந்தையின்
  உன்னதத்தை கூறிய
  பதிவர்களையும் இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள்
  உரித்தாகுக....

  ReplyDelete
 31. மிகவும் அருமையாக வரிசைபடுத்தி இருக்கீங்க ராஜேஷ் .ஒவ்வொருவர் பதிவையும் படிக்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது .
  தாய் ஒரு பிள்ளையை பத்து மாதம் சுமப்பாள் அந்த பிள்ளை வளர்ந்து சொந்த காலில் நிற்கு மட்டும் அதற்கு பிறகும் நெஞ்சில் சுமப்பவர் அப்பா தான் .
  மீண்டும் வருகிறேன் .

  ReplyDelete
 32. சகோதரா அப்பா பற்றி எனது வலையிலும் நிறைய உண்டு. நீங்கள் காணவில்லைப் போல....ஆக்கம் நல்லது வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 33. புலவர் சா இராமாநுசம் said...
  மாதா, பிதா அடுத்தது குருவா..

  மாய உம் பாணியே தனி
  ஓயா என்றும் உம் பணி
  அறிமுகப் படலம் அருமை!

  வாழ்த்துகள்!

  புலவர் சா இராமாநுசம்//

  சரியாக சொன்னீர்கள் அய்யா... தங்களது வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா

  ReplyDelete
 34. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  அருமையான வரிசை

  கலக்குங்கள்//

  வாழ்த்துக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 35. சாகம்பரி said...
  உறவுகளின் மேன்மையை சொல்லும் வலைச்சரம் ஒன்ரு மலர வேண்டும் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன். அதை மிகச்சரியாக செய்கிறீர்கள். வாழ்த்துக்கள். இன்றைய அறிமுக வலைப்பூக்களுக்கும் என் வாழ்த்துக்கள்.//

  தங்களது கருத்து என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது.. வாழ்த்துகளுக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 36. RAMVI said...
  மாதா,பிதா,குரு தெய்வம் என்கிற வரிசையா?? அருமை. வாழ்த்துக்கள்.//

  ஆம் சரியாக சொன்னீர்கள்..தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 37. தமிழ்வாசி - Prakash said...
  ஆகா... இன்றும் அருமையான அறிமுகங்கள்,//

  வாங்க நண்பா... தங்களது கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 38. இந்திரா said...
  வரிசைப்படுத்தப்பட்ட விதம் அருமை//

  தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 39. Lakshmi said...
  நல்ல அறிமுகங்கள். வரிசைப்படுத்தி
  இருந்த விதம் நல்லா இருக்கு. எல்லாருக்கும்
  வாழ்த்துக்கள்.//

  வாங்க அம்மா...வாழ்த்துக்கும் கருத்துக்கும் மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 40. மஞ்சுபாஷிணி said...
  அப்பா என்று நீங்கள் உரைக்கும்போதே உங்களுக்குள் ஒரு கம்பீரம் ஒளிர்வதை கண்டிப்பா மறுக்க முடியாது....
  .@@@@@@@


  ஆனால் கயவனாக அப்பா வளர்க்கலையே இந்த ராஜேஷ் பிள்ளை நல்லப்பிள்ளையாயிற்றே.... //
  -----------------------
  :-) தங்களது அபிப்ராயத்துக்கு நன்றிங்க... தங்களது விரிவான அலசலான உணர்வுபூர்வமான் பின்னூட்டம் தங்களது நல் உள்ளத்தை பிரதிபலிக்கிறது ... கரிசனமான பின்னூட்டம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...தங்களது வாழ்த்துகளுக்கு இதயம் கனிந்த அன்பு நன்றிகள்

  ReplyDelete
 41. வாழ்துக்கள் மாப்பிள.. அப்பாவை பற்றி இவ்வளவு பதிவுகளா...?! 

  ReplyDelete
 42. வெங்கட் நாகராஜ் said...
  அழகிய பகிர்வு நண்பரே... மாதா, பிதா என வரிசையாய் வருகிறீர்கள்.... நன்றாக இருக்கிறது...//

  நண்பரின் கருத்துக்கு மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 43. Chitra said...
  நெகிழ்ந்தேன். அப்பா பாசம் ஆச்சே..... ரொம்ப ஸ்பெஷல் அறிமுகம்... மிக்க நன்றிங்க.//

  ஆமா மேடம்... பதிவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ்... கருத்துக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 44. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  Thanks sir//

  welcome dear friend

  ReplyDelete
 45. ஜ.ரா.ரமேஷ் பாபு said...
  அப்பா பற்றி கவிதை அருமை..

  அம்மா கிட்ட இருந்து படும் கஷ்டம் குசந்தைக்கு தெரியும் ஆனா அப்பா எங்கேயோ இருந்து படும் கஷ்டம் தெரியாது..//

  தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 46. Jeeves said...
  நான் எழுதிய கவிதையை இந்த சரத்தில் கோர்த்ததற்கு நன்றி :)//

  வரவேற்கிறேன் நண்பரே :-)

  ReplyDelete
 47. Ramani said...
  உறவுகளைப் பிரதானமாக வைத்து நீங்கள்
  பின்னிப்போகும் வலைச்சரம் அருமையிலும் அருமை
  தங்கள் வாசிப்பின் வீச்சை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது
  தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்//

  தங்களது மனப்பூர்வமான கருத்துக்கு இதயம் கனிந்த நன்றிகள் சகோத்ரரே

  ReplyDelete
 48. இராஜராஜேஸ்வரி said...
  அப்பா அறிமுகப் படலம் அருமை!

  வாழ்த்துகள்!//

  தங்களது கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க ந்ன்றி

  ReplyDelete
 49. சசிகுமார் said...
  வித்தியாசமான அறிமுகங்கள் சூப்பர் நண்பா...//

  நண்பரின் கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 50. suryajeeva said...
  அப்பாவை வாழ்த்தி இவ்வளவு பதிவுகளா? தலை வணங்குகிறேன்..//

  தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 51. காந்தி பனங்கூர் said...
  அப்பாவை பற்றிய பதிவுகளை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. அப்பா பற்றி பதிவெழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

  வாங்க நண்பரே...கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  ReplyDelete
 52. cheena (சீனா) said...
  அன்பின் ராஜேஷ் - நேத்து மறுமொழிஉஇல குறிப்பு பாத்தேன் - இன்னிக்கு அப்பா பத்தித்தான்ன்னு நினைச்சேன் - சரியாஇருக்கு - இவ்வளவு இடுகைகளா - பலே பலே - தேடித்தேடிப் போட்டிருக்கீங்க போல - நல்வாழ்த்துகள் ராஜேஷ் - நட்புடன் சீனா//

  அன்பு ஐயா அவர்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனப்பூர்வமான நன்றிகள்

  ReplyDelete
 53. நிரூபன் said...
  தந்தையின் பெருமையினையும், அவரைப் பற்றிய வலை உலக உறவுகளின் படைப்புக்களையும் பகிர்ந்திருக்கிறீங்க.
  நன்றி நண்பா.//

  நண்பரின் கருத்துக்கு இதயம் கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 54. Riyas said...
  அறிமுகத்திற்கு நன்றி நண்பரே,, ஏனைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.//

  வரவேற்கிறென் நண்பரே! வாழ்த்துகளுக்கு நன்றி

  ReplyDelete
 55. ஜீ... said...
  நானுமா? நன்றி நண்பரே!//

  வரவேற்கிறேன் நண்பரே!

  ReplyDelete
 56. ஜீ... said...
  அப்பா பற்றி இவ்ளோ இடுகைகளா? அருமை!//

  கருத்துக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 57. அம்மா...

  அப்பா....
  அப்பப்பா ....
  அறிமுகங்கள் யாவும்
  அருமையப்பா.

  வாழ்த்துக்கள் 'குரு' வே!

  [அடுத்தது குரு தானே, அதனால் தான் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்]
  vgk//

  சரியாக சொன்னீர்கள் மரியாதைக்குறிய அன்பரே...வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றிகள்

  ReplyDelete
 58. சத்ரியன் said...
  ராஜேஷ்,

  அமர்க்களமா “பிதா” படைப்புகளைக் கண்டுபிடித்து பகிர்ந்திருக்கின்றீர்கள்.

  வாழ்த்துக்கள்!

  புலவர் ஐயா சொல்வது போல் நாளை ”குரு” படைப்புகளோ?//

  அடுத்து குரு படைப்பு தான் அன்பரே! தங்களது கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 59. Jaleela Kamal said...
  முதலில் மாதா
  அடுத்து பிதாவா

  ம்ம் அருமையான் அறிமுகங்கள் , அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

  வாங்க மேடம்...வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 60. !♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. அறிமுகத்திற்கு நன்றி..//

  வரவேற்கிறேன் தோழி! வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 61. shanmugavel said...
  தனி பாணியிலான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

  தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க் நன்றி நண்பா..

  ReplyDelete
 62. சென்னை பித்தன் said...
  புதிய பாணியில் அறிமுகங்களைத்தர மிகவும் உழைத்திருக்கிறீர்கள். தொடரட்டும்,குரு,தெய்வம் என!

  அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்!//

  வாங்க அன்பரே! தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 63. ரொம்ப அழகா எல்லாரையும் அறிமுகப் படுத்தியிருக்கீங்க..

  எனது பதிவையும்.. சுட்டிக் காட்டியமைக்கு ரொம்ப நன்றி! :)

  வாழ்த்துக்கள்.. தொடருங்கள்!

  ReplyDelete
 64. athira said...
  மாயா... நானும் வந்திட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:))...

  அம்மா, அப்பா.... சூப்பர். வலையுலகிற்கு வந்து 2 மாதம்தான் ஆகுதென அறிந்தேன், ஆனால் அறிமுகப்படுத்தும் தளங்களைப் பார்க்கும்போது, வலைப்பூக்களை ஒரு கலக்குக் கலக்கித்தான் வைத்திருக்கிறீங்க.

  வாழ்த்துக்கள்.//

  வாங்க ஆதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. உங்களைப்போன்ற அன்பு நண்பர்களின் வலையுலகத்தை வலம் வருவதால் தான் மியாவ்.. வாழ்த்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 65. athira said...
  ஊ.கு:
  தேம்ஸ்ல, ம்யா....ம்ம்யா.... என ஒரே சத்தம்:) ஒழுங்கா ஒரு யோகாச் செய்ய முடியேல்லை:)), தொபுக்கடீர் என ரேப்பண்ணி வச்சோ அடிக்கடி போடுறீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  உண்மையாகக் குதிச்சிருந்தால்... முதலை ஏன் தேடுது?:)), ஒருவேளை தன் கிட்னியை நீங்க க... எடுத்ததைக் கண்டுபிடிச்சிட்டுதோ?:)))...

  சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))... எதுக்கும் ஜாக்ர்ர்ர்ர்ர்தை மாயா:)))). சீயா மீயா.//

  முதலைக்கிட்ட கிட்னி களவாடுனத காட்டிக்கொடுத்துட்ட்டீங்களா கர்ர்ர்ர்ர்ர்ர்... தேம்ஸ்ல வந்து கவனிச்சுக்கிறேன்... :-) எப்படியோ ஜாக்கிரத சொல்லி காப்பாத்திட்டீங்க .... நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு... நன்றி மியாவ்

  ReplyDelete
 66. மகேந்திரன் said...
  பெருமை பெற்றோம் நண்பரே...
  எம்மைப் போல் ஒரு தந்தையின்
  உன்னதத்தை கூறிய
  பதிவர்களையும் இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள்
  உரித்தாகுக...//

  நண்பர் மகேந்திரன் கருத்துக்கு மனப்பூர்வமான நன்றிகள்

  ReplyDelete
 67. angelin said...
  மிகவும் அருமையாக வரிசைபடுத்தி இருக்கீங்க ராஜேஷ் .ஒவ்வொருவர் பதிவையும் படிக்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது .
  தாய் ஒரு பிள்ளையை பத்து மாதம் சுமப்பாள் அந்த பிள்ளை வளர்ந்து சொந்த காலில் நிற்கு மட்டும் அதற்கு பிறகும் நெஞ்சில் சுமப்பவர் அப்பா தான் .
  மீண்டும் வருகிறேன் .//

  மிகவும் சரியாக சொன்னீர்கள் தோழி... தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 68. kovaikkavi said...
  சகோதரா அப்பா பற்றி எனது வலையிலும் நிறைய உண்டு. நீங்கள் காணவில்லைப் போல....ஆக்கம் நல்லது வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.//

  மன்னிக்கவும் சகோ! நிறைய பதிவர்களை அறிமுக படுத்த நினைத்திருந்தேன்... அதில் உங்களது வலைப்பூவும் தவறிவிட்டது மன்னைக்கவும்.... வாழ்த்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 69. காட்டான் said...
  வாழ்துக்கள் மாப்பிள.. அப்பாவை பற்றி இவ்வளவு பதிவுகளா...?! //

  வாங்க மாம்ஸ்... தந்தை மீது அளவற்ற பாசம் வைத்த பதிவர்க்ள் மாம்ஸ்.. நன்றி

  ReplyDelete
 70. Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
  ரொம்ப அழகா எல்லாரையும் அறிமுகப் படுத்தியிருக்கீங்க..

  எனது பதிவையும்.. சுட்டிக் காட்டியமைக்கு ரொம்ப நன்றி! :)

  வாழ்த்துக்கள்.. தொடருங்கள்!//

  தங்களை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி

  ReplyDelete
 71. "அ என்ற உயிர் எழுத்து
  ப் என்ற மெய் எழுத்து
  பா என்ற உயிர் மெய் எழுத்தும் கொண்ட - அப்பா"
  அழகா சொல்லிருகிங்க

  ReplyDelete
 72. சின்னதூரல் said...
  "அ என்ற உயிர் எழுத்து
  ப் என்ற மெய் எழுத்து
  பா என்ற உயிர் மெய் எழுத்தும் கொண்ட - அப்பா"
  அழகா சொல்லிருகிங்க//

  தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

  ReplyDelete
 73. அப்பா...அப்பப்பா...சூப்பரப்பா :-))

  ReplyDelete
 74. ஜெய்லானி said...
  அப்பா...அப்பப்பா...சூப்பரப்பா :-))//

  மிக்க நன்றி பாஸ்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது