07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 10, 2011

உலக பொதுச்சொல்...!

பசுக்கள் சென்ற வழியை
ஏக்கத்துடன் நோக்கும்
கன்றைப் போல,
நான் வருந்துவதை அறிந்தும்
தூர தேசத்திலேயே இருக்கிறாரே!
- (401 காதல் கவிதைகள்)  அமரர் திரு.சுஜாதா.


பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தெனப்
புன் தலை மன்றம் நோக்கி மாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர் தோழி சே நாட்டோரே.
- (குறுந்தொகை)  கருவூர்க் கதப்பிள்ளை.

                 இந்த சங்கப்பாடல் கனியை , புதுக்கவிதையாகச் சாறு பிழிந்துக் கொடுத்திருப்பவர் , இந் நூற்றாண்டின் ஈடில்லா எழுத்தாளர் அமரர் திரு. சுஜாதா அவர்கள்.
***

காதல்!

ம னித இனத்தின் முதல் உணர்வு!

இதை உள்ளடக்காமல் எழுதப்பட்டிருந்தால்,  திருக்குறள் கூட உதாசீனபடுத்தப் பட்டிருக்கும்!

இதைப் பாடாமல் போயிருந்தால் கலீல் ஜிப்ரனை நம்மில் யார் அறிந்திருப்போம்?

இந்த ஒற்றைச்சொல்லை உச்சரிக்காமலோ, உணராமலோ ஒருவர் பதின்ம வயதைக் கடந்து உயிர் வாழ்ந்திருக்கவும், வாழவும் வாய்ப்பே இல்லை.

இதை மட்டுமே பாடும் சங்கநூல் குறுந்தொகையை ஒருமுறை புரட்டிப் பாருங்கள்.  உவமைகள் உயிருக்குள் ஊடுருவதை உங்களால் மிக நுட்பமாய் உணரமுடியும்.

இதைத் தவிர வேறெந்த பாடு பொருளுக்கும் உவமைகள் எளிதாய் பொருந்தி விடுவதில்லை. அதனால் தான்,

கவிதை எழுத முயற்சிக்கும் கன்னி கவிஞர்கள் காதலை பாடுபொருளாக தேர்ந்துக் கொள்கிறார்கள்.
***
1).நாவிஷ் செந்தில்குமார். 
                              இந்த இளங்கவிஞனது ”இப்படிக்கு முரண்” கவிதை, “அட! நாம எழுதாம விட்டோமே!”, என்ற ஏக்கத்தை உங்களில் எழுப்பப் போவதை என்னால் தடுக்க முடியாது. உங்களாலும் தான்!

2).கவிஞர் சஞ்சு.
                             ஒரு கிராமத்தானாக இருப்பார் போல. அவர் பயன்படுத்தி இருக்கும் உவமையே அவரை அடையாளப் படுத்துகிறது.கனவின் கல்லறை இவரின் கவித்துவம் நம்மில் மெல்ல வேரூன்றுவதை உணரமுடியும்.

3).அருட்பெருங்கோ.
                               இல்லாத கடவுளுக்கு படையலாய்...எனது கவிதைகள் -  என்னும் வாசகமே, நம்மை அவர் வசப்படுத்தி விடுகிறது. இவரது முத்தம் எப்படிப்பட்டது என்பதை படிக்கும் போதே, எதிரில் உங்கள் காதலி நின்றிருப்பதைக் காண்பீர்கள்.

4).ரவிசங்கர்.
                                தற்காலிகமான சிறு பிரிவு இவ்வளவு கோபத்தையா கொண்டிருக்கும்? சொல்லாமல் ஊருக்குப் போயிருக்கும் அவரது காதலிக்கு எழுதியிருக்கும் பிரிவு -க்கவிதையை நீங்களே படித்துச் சொல்லுங்கள்.

5).ராஜேஷ்.
                           எறும்பின் செயலை இவர் உவமைப் படுத்தி இருப்பதை எனக்கு தெரிந்து இதுவரை எவரும் கையாண்டிருப்பதாய் நினைவிலில்லை.  ஒருமுறை காதல் வரிகளை ஒருமுறை உரக்க உச்சரித்துப் பாருங்கள். 
***
தாய்மொழி தழைக்க உயிர்த்தியாகம் செய்யத் தேவையில்லை. இளங்கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்தாலே போதும். நம் தாய்மொழியை அடுத்த தலைமுறையிடம் சேர்ப்பிக்கும் செயலை அவர்கள் செய்து விடுவார்கள்.
***

34 comments:

 1. சுஜாதா அவர்களின் கவிதையுடன் தொடங்கிய இந்த பகிர்வு நன்று....

  ReplyDelete
 2. //தாய்மொழி தழைக்க உயிர்த்தியாகம் செய்யத் தேவையில்லை. இளங்கவிஞர்கள் எழுதுவதை ஊக்குவித்தாலே போதும். நம் தாய்மொழியை அடுத்த தலைமுறையிடம் சேர்ப்பிக்கும் செயலை அவர்கள் செய்து விடுவார்கள்.//

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அழகிய ஆரம்பம்
  பிரிவினில் காதலின் உச்சத்தை
  உணர்த்தும் பாடல்களுடன்
  இனிது ஆரம்பம்.

  காதலை எழுத்துருவை உருக்கி
  பதிவுகளில் ஏற்றியிருக்கும்
  பதிவர்களின் அறிமுகம் அருமை.

  ReplyDelete
 4. அண்ணே வணக்கம்,

  ஆரம்பமே அசத்தல் அமரர் திரு. சுஜாதா ஐயா அவர்களின் துணையுடன் ஆரம்பித்த விதம் அருமை...

  ReplyDelete
 5. காதலைப்பற்றிய உங்களது உணர்வுகளை அழகியலாக சொல்லியிருக்கீங்க...
  வழக்கம்பபோலவே இன்றும் வித்தியாசமாக கவி வரிகளுக்கு சொந்தக்காரர்களை அறிமுகபடுத்தி அமர்க்களபடுத்தியிருக்கீங்க சூப்பர்

  ReplyDelete
 6. அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் மென்மேலும் சிறந்த படைப்புகளை வழங்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. //தாய்மொழி தழைக்க உயிர்த்தியாகம் செய்யத் தேவையில்லை. இளங்கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்தாலே போதும். நம் தாய்மொழியை அடுத்த தலைமுறையிடம் சேர்ப்பிக்கும் செயலை அவர்கள் செய்து விடுவார்கள்.***//

  simply super well said....

  ReplyDelete
 8. மூத்த கவிஞரான நீங்கள் இளைய கவிஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிற விதம் அருமை. அறிமுக கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. /இளங்கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் ஊக்குவித்தாலே போதும். நம் தாய்மொழியை அடுத்த தலைமுறையிடம் சேர்ப்பிக்கும் செயலை அவர்கள் செய்து விடுவார்கள்./

  அருமை

  ReplyDelete
 10. காதலைப்பற்றிய உங்களது உணர்வுகளை அழகியலாக சொல்லியிருக்கீங்க...
  வழக்கம்பபோலவே இன்றும் வித்தியாசமாக கவி வரிகளுக்கு சொந்தக்காரர்களை அறிமுகபடுத்தி அமர்க்களபடுத்தியிருக்கீங்க சூப்பர்...
  (ஹி ஹி ஹி... காப்பி பேஸ்ட்)

  ReplyDelete
 11. நல்லது.. சென்று பார்க்கிறேன்..

  ReplyDelete
 12. நல்ல அறிமுகங்கள்

  ReplyDelete
 13. சுஜாதா ஒரு மரபு கவிதையை அழகாக புதுக்கவிதையாக்கியதால் தான் அதை என்னைப்போன்றோரும் படித்து ரசிக்க முடிந்தது.... அதை டைமிங்கா கொடுத்து அசத்தி (அதாம்பா சத்ரியன் வித்யாசமா அசத்திட்டு இருக்கீங்கள்ல)தொடங்கியது மிக அருமைப்பா...

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்..

  நாவிஷ் செந்தில்குமாருடைய கவிதைகள் ரொம்ப முன்பு முத்தமிழ்மன்றத்தில் படித்த நினைவிருக்கிறது....

  அன்பு நன்றிகள் சத்ரியன் அருமையான பகிர்வுக்கு....

  ReplyDelete
 14. கவிதை அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. ரைட்டு மாம்ஸு

  நாங்க ஊக்குவிக்கிறோம்

  நீங்க எடுத்து செல்லுங்க‌ ...

  ReplyDelete
 16. காதலுடனே வாழ்பவரிடம் காதலைப்பற்றித்
  தெரியாமல் இருக்குமா?உங்கள் கருத்தை
  நானும் ஏற்கிறேன்....  ம்ம்ம்...காதல் அல்லவா! விழுந்து ,உருண்டுபோய்
  எல்லாவற்றையும் படித்துவிட்டேன்
  நல்ல கவிதைகள் நன்றி

  ReplyDelete
 17. கடவுள் இல்லா இடம் இல்லை...காதல் இல்லா இதயம் இல்லை... வாழ்த்துக்கள் நண்பரே... இன்று அறிமுகமாகியிருக்கும் அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. வணக்கம் வெங்கட்.

  திரு.சுஜாதா-வை குறிப்பிடாமல் இவ்வேலையை முடிக்க முடியாதே!

  ReplyDelete
 19. வாங்க கலாநேசன்,

  வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 20. வாங்க மகேந்திரன் அண்ணே,

  நன்றிங்க.

  ReplyDelete
 21. வாங்க சிம்பு,

  மூத்தோரின் துணை கொண்டால், முழு கிணற்றையும் எளிதாய் தாண்டிடலாம் என்னும் ஒரு எண்ணம்.

  ReplyDelete
 22. வாங்க காந்தி,

  ஏஞ்சாமீ ”மூத்த கவிஞன்” பட்டமெல்லாம்..?

  ReplyDelete
 23. வணக்கம் திகழ்,

  நலம் தானே!

  ReplyDelete
 24. //(ஹி ஹி ஹி... காப்பி பேஸ்ட்)//

  ரொம்ம்ம்ப நன்றிங்க வெளங்ஸ்!

  ReplyDelete
 25. வாங்க சூர்யஜீவா,

  புதியவர்களையும் சென்று வாழ்த்துங்கள்.

  ReplyDelete
 26. வாங்க ராஜா அண்ணே!

  ReplyDelete
 27. வாங்க மஞ்சு,

  ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. நிறைய வாசிக்கறீங்க.

  வாழ்த்திற்கு நன்றி.

  ReplyDelete
 28. நன்றிங்க பிரகாஷ்.

  ReplyDelete
 29. வாய்யா ஜமால் மாப்பி. ஒய் லேட்டு ஓய்?

  ReplyDelete
 30. வாங்க கலா,

  நன்றி.

  ReplyDelete
 31. வாங்க ராஜேஷ்,

  சரியாச் சொன்னீங்க. நன்றி.

  ReplyDelete
 32. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் சத்ரியன்.

  ReplyDelete
 33. கவிதைக் காதலர்கள் அறிமுகத்துக்கு நன்றி - அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. நல்ல அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது