புத்தம் புது காலை பொன்னிற வேளை..!
வணக்கம்.
நேற்றைய பதிவில் காதல் கவிதைகளைப் படித்து ரசித்து ருசிக்கச் சொன்னது ஒரு குற்றமா? பின்னே என்னங்க, இன்னும் லவ் & ரொமான்ஸ் மூடிலயே மூழ்கி இருந்தால் என்ன அர்த்தம்? அப்படியே இருந்து விட்டால் என் பணிக்கு வேட்டு வைத்தது போல் ஆகிவிடும் இல்லையா? அதனால்...
அரிய சுவை உதயம் - புதிய ”சன்ரைஸ்” - காஃபி -யை சுடச்சுட சுவைத்துக் கொண்டே என் பின்னோடு வாருங்கள். இன்று நான் அறிமுகம் செய்யவிருக்கும் சில “ஃப்ரெஷ்” பதிவர்களின் வலைப்பக்கம் சென்று அவர்களின் படைப்புகளைப் படித்து , பிடித்திருந்தால் (பிடிக்கும்) உங்களின் பொன்னான கருத்துக்களாலும், ஓட்டுக்களாலும் புதிய பதிவர்களை உற்சாக படுத்துங்கள். அவர்களை, தொடர்ந்து எழுதத் தூண்டுவது நம்முடைய தலையாய கடமை அல்லவா?
குறிப்பு:- அறிமுகப் பதிவர்களின் பதிவுகளைப் படிக்க,கீழே சிவப்பு வண்ணத்தில் உள்ள சொற்களைச் சொடுக்கவும்.
1) மதுரைக்குச் சொந்தக்காரர். மீன்கொடியான் என்னும் வலைதளத்தின் உரிமையாளர். மதுரை என்பதாலோ என்னவோ தமிழ் இவர் சிந்தனைகளிலும், விரல்களிலும் நவ தாண்டவம் ஆடுகிறது. சிறந்த கவிஞர். பட்டிமன்ற பேச்சாளர். பலகுரல் மன்னர்... இப்படியாக நீண்டுக்கொண்டே செல்லும் பன்முகத் திறன்களுக்குச் சொந்தக்காரர்.
பெயர்: கி.கோவிந்தராசு. இவரது சிந்தனைக்குச் சான்றாக “களவாணி” கவிதையை உங்கள் அரங்கில் சமர்ப்பிக்கிறேன், யுவர் ஆணர்.
*
2) முன் திட்டமிடல் எதுவும் இல்லாமல் திட்டக்குடி இவரைப் பெற்றெடுத்திருக்கிறது. கருப்பு உருவமும், வெளுத்தச் சிரிப்பும் இவரது சிறப்பு அடையாளங்கள். களத்துமேடு என்னும் இவரது வலையில் சிக்கிக்கொள்ளும் எவரும் விடுபட விரும்பமாட்டார்கள். “ஒரு கிராமத்தான்” என தன்னை பறைசாற்றிக் கொள்வதில் பேருவகைக் கொள்ளும் இவரது கிராமியச் சிந்தனைகளில் உங்களையும் சிக்க வைக்கப் போகிறேன்.
பெயர்: பா.திருமுருகன். கிராமத்தில் பிறந்து, கல்வியறிவு இல்லாமல் ஆடு மேய்க்கும் ஒரு முதிர்க்கன்னியாய் இவன் உருமாறி, ”ஆடும் அவளும்” என்ற தலைப்பூ சூட்டி படைத்திருக்கும் கிராமியக் கவிதையைப் படித்துவிட்டு மீண்டு வந்து விடுவீர்களா? பார்ப்போம்!
**
3) தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டையில் உதித்த முத்து. வில்லுக்கு விஜயன், சொல்லுக்கு பாரதி என்பார்கள். அவர்கள் இருவரின் புகழும் இவர் ஒருவருக்கே வாய்த்து விட்டிருக்கிறதைக் கண்டால் எனக்கு சற்று வயிற்றெரிச்சலாகவே இருக்கிறது.வெண்பா, புதுக்கவிதை என எல்லா தளங்களிலும் விளாசித்தள்ளும் சொல்வளச் சொந்தக்காரர்.”நட்புடன் நான்” என்னும் வலைதளம் மூலம் நம்மை வசியப்படுத்துபவர்.
பெயர் : விஜயபாரதி. ”வாயில்லா ஜீவன்” என்னும் இவரது கவிதையைப் படியுங்கள். அவரது கவிதைகளே சொல்லும், அவருடைய தன்மையை!
***
4)மதுரை மைந்தன். தொலைதொடர்பு துறையில் பணியாற்றுகிறார் என நினைக்கிறேன். எதார்த்தமான எழுத்துக்களிலும், தன்னைச்சுற்றி நிகழும் எல்லாவற்றையும் உற்றுநோக்கி பதிவு செய்யும் உத்தியிலும் நம்மைக் கவர்பவர். நட்புடன் , சோலை அழகுபுரம் என்னும் வலைப்பூக்களுக்குச் சொந்தக்காரர்.
பெயர்: வி.பாலகுமார். இவரின் படைப்பான ”போயின பத்தாண்டுகள் இன்றோடு” என்ற கவிதையைப் படித்துப் பாருங்கள். நீங்களும் நினைவுகளால் பின்னோக்கி போய் விட்டிருப்பதை தாமதமாக உணர்வீர்கள். மறவாமல் மீண்டு வந்து விடுங்கள்.
****
5) சென்னை செந்தமிழர். உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றால், தமிழ்மொழி - தமிழர் - தமிழ்மண் பற்றி மட்டுமே அறிந்தவன் என்கிறார். மணவழகன் கவிதைகள் , அனிச்சம் ஆகிய வலைப்பூக்கடை நடத்தி வருபவர். என்னவொரு குறை என்றால், இவரது கடையைப் பற்றிய அருமை சரிவர இன்னும் வாடிக்கையாளர்களைச் சென்றடையவில்லை. அந்தக் குறைய வலைச்சரம் இன்று நிவர்த்தி செய்து விடும்.
பெயர் : மணவழகன். இவரின் ஏக்கத்தை “இக்கரைக்கு அக்கரை” என்னும் கவிதையில் கேளுங்கள்.
*****
எனது கண்ணுக்கு எட்டிய வரையில் இன்று நான் குறிப்பிட்டிருக்கும் அனைத்து பதிவர்களுமே உங்களுக்கும், எனக்கும் வலைச்சர தமிழ் விரும்பிகளுக்கும் புதியவர்களாக இருப்பார்கள் என திடமாக நம்புகிறேன்.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், மேற் குறிப்பிட்டிருக்கும் அனைத்து பதிவர்கள் பக்கத்திற்கும் சென்று படித்து, பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப் படுத்த மறந்து விடாதீர்கள்.
*** *** ***
பூரண ஆயுளோட வாழனும்னு நம்ம எல்லோருக்குமே ஒரு நப்பாசை இருக்குதானே? சரி, ஆயுளை நீட்டிக்க என்ன வழி? தெரிஞ்சிக்க ரொம்ம்ம்ம்ம்ம்ப ஆவலா இருக்கு தானே! நான் நாளைக்கு வந்து சொல்றேன்.
*இப்போ என்னை சாரலின்பா கூப்பிடறாங்க. இது அவங்களோட நேரம்.
...இதோ வந்துட்டேண்டா சாரல்...!*
|
|
இனிய காலை வணக்கம்...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் வலைச்சரத்திற்கு புதிய பதிவர்களை அறிமுகபடுத்தியுள்ளீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றிகள் பல...
நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
புது சுட்டிகளின் வரவுகள் துவங்கியாச்சா, நன்று
ReplyDeleteசாரலின்பா என்னா சொன்னாங்க மாம்ஸ்
இனிய காலை வணக்கம்...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் வலைச்சரத்திற்கு புதிய பதிவர்களை அறிமுகபடுத்தியுள்ளீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றிகள் பல... :-))
(நன்றி - மாணவன்)
சிறப்பான அறிமுகங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வலைச்சரத்திற்கு புதிய பதிவர்களை அறிமுகபடுத்தியுள்ளீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய காலை வணக்கம்...
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள் வலைச்சரத்திற்கு புதிய பதிவர்களை அறிமுகபடுத்தியுள்ளீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்றிகள் பல... :-))
(நன்றி - மாணவன்& வைகை)
புதிய அறிமுகங்களுக்கு இனிய நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சிம்பு,
ReplyDeleteஅறிமுக வலைப்பூக்கள் நீங்கள் எல்லோரும் படித்துச் சுவைத்திடத்தான்.
படித்து இன்புறுங்கள் திரு.ரத்னவேல் ஐயா.
ReplyDeleteபுதியவர்களின் எண்ணங்களைச் சுவையுங்க ஜமால் மாப்பி.
ReplyDeleteசாரல், சம்பாதிச்சது போதும் வீடு வந்து சேருங்கப்பா-ன்னு சொல்றாங்க.
வணக்கம் வைகை.
ReplyDelete(ங்கொய்யால.... கமெண்ட்ஸ் கூட ”காப்பி & பேஸ்ட்”டா?
கவிமாலை கவிஞர் நா.வீ அண்ணன் பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள், பாராடுகள் கண்ணன்
ReplyDeleteஉங்களின் கருத்துக்களுக்காக புதியவர்களின் கவிதைகள் காத்திருக்கிறது, குமார்.
ReplyDeleteவணக்கம் விக்கி.
ReplyDeleteவெளங்காதவன் அண்ணே!
ReplyDeleteகஸ்ட்டப்பட்டு தேடித்தேடி அறிமுகப்படுத்தறது நானு.
கமெண்ட்ஸ திருடி ஒட்டி வெச்சிட்டு “நன்றி” அவிய்ங்களுக்கு!
வெளங்கிரும்.
நன்றி மக்கா.
புதியவர்களின் படைப்புகளை படித்து மகிழுங்கள், திருமதி.மனோ அம்மா.
ReplyDeleteவணக்கம் கோவி.க. அண்ணே.
ReplyDeleteஅவரது கவிதைகள் ”அட!” என வியக்க வைக்கும் ரகத்தவை. நீங்கள் எல்லோரும் ரசிக்க வேண்டும் என்பதற்காக தேடிப்பிடித்து வலைச்சரத்தில் தொகுத்திருக்கிறேன்.
இனியபல புதிய அறிமுகங்களை தந்துள்ளீர்கள்
ReplyDeleteஅருமை. அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
சத்ரியன் சாரே, ரொம்ப நன்றி சாரே..
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்.
ReplyDelete//வெளங்காதவன் அண்ணே!
ReplyDeleteகஸ்ட்டப்பட்டு தேடித்தேடி அறிமுகப்படுத்தறது நானு.
கமெண்ட்ஸ திருடி ஒட்டி வெச்சிட்டு “நன்றி” அவிய்ங்களுக்கு!
வெளங்கிரும்.
நன்றி மக்கா. ///
தங்கள் பொன்னான பணி சிறக்க வாழ்த்துக்கள் அப்பு!
:)
எல்லாருக்குமே காலை வணக்கம் ரொம்ப ஃப்ரெஷ்ஷா சொல்லி இருக்கீங்க சத்ரியன்...
ReplyDeleteஅருமையா அறிமுகப்படுத்தி இருக்கீங்க பதிவர்களை...
ஆமாம் கண்டிப்பா எல்லாருமே புதியமுகம்பா...
கண்டிப்பா நீங்க அறிமுகப்படுத்திய பதிவர்களின் வலைப்பூவை போய் பார்த்து கருத்து பதிக்கிறேன்...
அன்பு வாழ்த்துகள் சத்ரியன் தொடர்ந்து நடை போட....
அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பு வாழ்த்துகள்...
நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சத்ரியன் அவர்களே.
ReplyDeleteஅனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாவ்...
ReplyDeleteகளத்துமேட்டு நெல்மணிகள் போல்...
காளைகளின் கவிமணிகள் கொட்டிக்கிடக்கிறது
ஆமா!
பசுக்களைக் காணவில்லையே?
பிடிக்க வில்லையோ! பிடிபடவில்லையோ!!
நம்குடும்ப அறிமுகம் வலைச்சரத்தில்..
மிக்கமகிழ்ச்சி.இன்னும்...
சரத்தின் வாசனை நுகரக்காத்திருக்கின்றேன்....
ஊக்கமுடன் தொடுத்திடுங்கள்
நேர்களின் உள்ளமெல்லாம் மணக்க...
நன்றி தொடருங்கள்..........
வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteசிங்கை கவிஞர்களின் வலைப்பக்கங்களை பலரின் பார்வைக்கு தந்தமைக்கு(ந.வீ.விசய பாரதி ,மா.அன்பழகன் அவர்கள்)
குறிப்பாக நான் தேடி அலைந்து படிக்கும்
கி.கோவிந்தராசு அவர்களின் வலைப்பூ அறிமுகம் செய்தமைக்கும்
தொடருங்கள்
அன்புடன்
திகழ்
சத்ரியன், தங்களின் தேடலுக்குத் தலைவணக்கம். 'மணவழகன் கவிதைகள்' பக்க அறிமுகத்துக்கு இதய நன்றி. தங்களின் தொடர்பிற்கும் தங்களால் நண்பர்கள் பலரின் தொடர்பிற்கும் பெரு மகிழ்ச்சி.
ReplyDelete- ஆ.மணவழகன்
சிறப்பான அறிமுகங்கள். அனை வருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதிய பதிவர்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதிய அறிமுகங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் உழைப்பு உணர்த்து விசயங்கள் பலப்பல. நல்வாழ்த்துகள். பாதிப் பதிவுகள் நான் அறியாதது. அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDelete