07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label வால்பையன். Show all posts
Showing posts with label வால்பையன். Show all posts

Sunday, October 19, 2008

நன்றியுடன் விடைபெறுகிறேன்..!

எனக்கு சனி ஞாயிறு விடுமுறை. இருப்பினும் நான் மேலும் எழுத ஊக்கபடுத்தின சீனா ஐயாவுக்கு நன்றி சொல்லாமல் போனால், இந்த வலையுலகம் என்னை மன்னிக்காது.
மற்ற பதிவர்களை நினைவு கோர எனக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.


எனக்கு ஆதரவளித்த அனைத்து பதிவர்களுக்கும் நன்றி!

இந்த ஒரு வாரத்தில் நான் எழுதிய பதிவுகள் அனைத்தும் என் சொந்த கருத்துக்களே!
அவைகளுக்கு நானே முழு பொறுப்பு! அது பற்றி ஏதும் விவாதிக்க விரும்பினால் என் வலைப்பூவில் தொடரலாம்.

பிறந்த வீட்டை விட்டு வெளியே செல்லும் மனநிலையில் கனத்த இதயத்தோடு மீண்டும் ஒரு முறை சீனா ஐயாவுக்கும், நண்பர்களுக்கும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன்

நன்றி
மேலும் வாசிக்க...

Friday, October 17, 2008

தமிழ் வலையில் பின்நவீன இலக்கியங்கள்

பள்ளி நாட்களில் சிறுவர்மலரில் ஆரம்பித்து, அம்புலிமாமா, பாலமித்ரா, பூந்தளிர் போன்ற புத்தகங்களில் ஆரம்பித்தது எனது வாசிப்பு, அதிலும் படக்கதைகளே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காமிக்ஸ் உலகில் ராணி காமிக்ஸ், முத்து மற்றும் லயன் காமிக்ஸ் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், ராணி காமிக்ஸ் மற்றவைகளை விட வெகுவாக கவரவில்லை என்பதே உண்மை.

படக்கதைகள் இல்லாமல் போரடிக்கும் நேரம் அம்புலிமாமாவில் உள்ள குட்டிகதைகளை(இது அம்புலிமாமா குட்டிகதை) படிக்க ஆரம்பித்தேன். பின்னாளில் அதுவே ஆனந்த விகடன், குமுதம் என்று விரிந்து குறுநாவல் வரை சென்றது. அந்நாளில் குமுதம்,விகடனை விட பாக்யா எனக்கு பிடிக்கும். பயணங்களில் போது படிக்க ஆரம்பித்த குறுநாவல் ராஜேஷ்குமார், சுபா,பி.கே.பி, ஆகியோரின் ரசிகன் ஆக்கியது. இவையெல்லாம் ஜனரஞ்சக எழுத்துகள் என்பது அனைவரும் அறிந்ததே. முதன் முதலில் இந்த மரபில் இருந்து வெளியேறி புதிய அனுபவத்தை பெற்றது ஆர்னிகா நாசரின் எழுத்துகளை படிக்கும் போது தான். ஆர்னிகா நாசரின் எழுத்துகள் பின்நவீனம் இல்லை என்று யாராவது சொன்னால் அது பற்றி விவாதிக்க என் வலையில் காத்திருக்கிறேன்.

தடித்த புத்தகங்களை பார்க்கும் பொழுது இதையெல்லாம் மாதக்கணக்கில் உட்கார்ந்து படிப்பார்கள் போல என்று நினைத்து கொள்வேன். ஒரு நண்பரின் வீட்டில் எதேட்சையாக
சுஜாதாவின் கொலையுதிர் காலம் படிக்க நேர்ந்த போது வேறொரு புது அனுபவம் கிடைத்தது. முழுதாக முடிக்கும் வரை அதை கீழே வைக்கவில்லை. பின்னாளில் எம்.ஜி.சுரேசின் "அலைக்சான்டரும் ஒரு கோப்பை தேநீரும்" படிக்க நேர்ந்தது. அது ஒரு பின்நவீன நாவல் என்று அறியபட்டேன். ஆனாலும் அதன் மொழி நடையில் எனக்கு எந்த சலிப்பும் ஏற்ப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக அவரின் "அட்லாண்டிஸ் மனிதம் மற்றும் சிலருடன்" "சிலந்தி" "யுரேகா என்றொரு நகரம்" "37" புத்தகத்தின் பெயரே நுப்பதிஏழு தான். சில வித்தியாச அனுபவங்களை கொடுத்தது.

அதன் பிறகு அவருடைய நண்பர் என்று அறியப்பட்ட ரமேஷ்.பிரேமின் "கனவில் பெய்த மழையை பற்றி சில இசை குறிப்புகள்" கிடைத்தது. முதல் இரண்டு பக்கங்களில் எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. இது தான் உண்மையான பின்நவீனமா என்று சந்தேகம் வந்தது. எம்.ஜி சுரேஷ் பின்நவீனத்தை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று கேள்வி பட்டு அதை வாங்கி படித்தேன். பின்நவீனம் ஓரளவுக்கு புரிய ஆரம்பித்தது.

பின்நவீனத்தை பற்றிய எனது ஆராய்ச்சி
சலிப்பு தரலாம் நேரம் இருந்தால் மட்டும் பார்க்கவும்
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
என்னுடைய பின்நவீன பதிவுகள் (அப்படீனு நான் தான் நினைச்சுக்கிறேன்)

ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு

பின்நவீனம் ஒரு அனுபவம். அது கொஞ்சம் வித்தியாசமானது. மாற்று கோணத்தில் யோசிக்கவைப்பது. அதை வெறுமனே வார்த்தைகளில் விவரிக்க முடியாது. சாதாரண எழுத்துகளில் ஒரு பாராவுக்கும் மறு பாராவுக்கும் இடையில் நமது சிந்தனை ஆயிரம் முடிவுகளை தீர்மானிக்கும். பின்நவீனத்தை பொறுத்தவரை உங்கள் சிந்தனை சிறிது நகர்ந்தாலும் நீங்கள் ஒரு அருமையான அனுபவத்தை வீணடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம். ஓஸோ சொல்லுவார், ரோஜா என்ற மலரை ரசி, அங்கே நீ ஒரு காண்பவன் மட்டுமே, அதை விட்டு ரோஜாவின் வாசம், அதை சூடி வரும் பெண்ணின் கோணம் என்று சிந்தனை ஓடினால் அது கடைசியில் மலத்தில் வந்து நிற்கும் என்பார். பின்நவீனமும் அதை அதுவாக ரசிக்க மட்டுமே. அது ஆசிரியனுக்கு மட்டுமே உரியது. பல்வேறு கோணத்தில் சிந்திக்கும் உங்களின் சிந்தனைகளின் சிக்கலுக்கு அது பொறுப்பாளியல்ல.

மேலுள்ளவை என் வாசிப்பனுபவமும், பின்நவீனத்தை நான் புரிந்து கொண்ட முறையும் தான். வெறும் அனுபவங்களையும் உலக தத்துவங்களை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று பெயருடன் சிலாகித்து சொல்வதையும் பின்நவீனமாக நான் பார்ப்பதில்லை.

இனி வருவது தமிழ் வலைகளில் பின்நவீனத்தை கலந்து கட்டி அடிப்பவர்களில் நான் விரும்பி படிப்பவர்கள். சென்ற பதிவில் சில நகைச்சுவை பதிவர்கள் விட்டுபோனதாக குற்றசாட்டு. அதில் இம்சைஅரசியை நான் படித்ததில்லை என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். அபிஅப்பா விட்டு போனதற்கு வருத்தபடுகிறேன்.

அய்யனார்

தமிழ் வலைகளில் எனக்கு பின்நவீனத்தை அறிமுகப்படுத்தியவர். அவருடைய பதிவுகளை என் நண்பர்களை அழைத்து படித்து அர்த்தம் சொல்லுங்கள் என்று பந்தயம் கட்டுவேன். மிகவும் அனுபவித்து எழுதுபவர். ஆயிரம் அர்த்தகளுடன் இவரது கவிதை இருக்கும். சினிமாவில் இவரது ரசனை கூட மரபு சார்ந்து இருக்காது. இலக்கிய தரம் வாய்ந்த படைப்புகளாக இவரது பல பதிவுகளை உணர்ந்திருக்கிறேன். பலகை மிக இனிமையானவர் என்பது பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அய்யனாரின் புனைவுகள் , கவிதைகள்

சென்ஷி

எனக்கு மிக சமீபத்தில் தான் பழக்கம். இவரது படைப்புகள் அய்யனாரின் பதிவுகளை படிக்கும் அனுபவத்தை தந்தாலும், இவரது கோணம் வேறு என்பது உண்மை. இவரது கவிதைகளும், பின்நவீன கதைகளும் வாசிப்பனுபவத்தை வேறு கோணத்திற்கு மாற்றுகிறது. இவருடைய பதிவுகளை முழுவதுமாக என்னால் படிக்க முடிவதில்லை என்றாலும் அதை அவரிடமே ஒத்து கொள்வேன். எனக்கு இன்னும் அந்த பக்குவம் வரவில்லை என்பது தான் உண்மை.
சென்ஷியின் புனைவுகள்

ஜ்யோவ்ராம் சுந்தர்

இவரது கவிதைகள் எனக்கு அந்த அனுபவத்தை தரும். எதிர் கருத்துகளை இவர் நாகரிகமாக தான் விவாதிக்கிறார். இவருடைய காம கதைகள் ஆழ்ந்து படிக்கும் போது ஒரு வித்தியாச அனுபவத்தை தரும். பல சர்ச்சைகளுக்கு உட்பட்டாலும், என் பார்வையில் காமம் ஒரு நடைமுறை இலக்கியமாக தான் தெரிகிறது.

இன்னும் நிறைய பதிவர்கள் இருக்கிறார்கள்.
பதிவின் நீளம் கருதி பின்நவீன காமெடி எழுத்தாளர் நிஜமா நல்லவனுக்கு மட்டும் நன்றி சொல்லி கொள்கிறேன். மாற்ற பதிவர்களை எனது வலையில் கண்டிப்பாக நினைவு கூறுவேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்
மேலும் வாசிக்க...

Thursday, October 16, 2008

தமிழ்வலையில் நகைசுவை பதிவர்கள்!

மனிதனை மற்ற விலங்குகளிடமிருந்து பிரித்து காட்ட நாம் பயன்படுத்தும் வார்த்தை சிரிப்பு, சிரிப்பு என்பது சந்தோசத்தின் வெளிப்பாடு, எல்லோரும் வாழ விரும்புவது அப்படியே.

தமிழ் வலைப்பூவை பொறுத்தவரை நிறைய பேர் நகைச்சுவையை கையாளுகிறார்கள்.
சிலரது குபீர் சிரிப்பு, சிலருடையது சிந்தனை சிரிப்பு, சிலரது பயங்கர மொக்கைகளாக இருந்தாலும் ஒரு சிறு புன்னகையாவது நம்மில் கொணராமல் அது போவதில்லை,
இங்கே நான் ரசிக்கும் நகைசுவை பதிவர்களை உங்களுக்கு அடையாள படுத்துகிறேன்.

குசும்பன்!

இவர் ஒரு பதிவு போட்டாலே, இனிப்பை கண்ட குழந்தை போல் ஆகிவிடுவேன். நான் அறிந்த பலருக்கும் இதே அனுபவம் தானாம். வெரைட்டி மீல்ஸ் போல வெரைட்டியாக குசும்பு பண்ணவது இவரது கலை, இவைகள் என்று குறிப்பிட்டு சொல்வதர்கில்லாமல், ஓரிரு சீரியஸ் பதிவுகளை தவிர மற்ற அனைத்துமே உங்களை கவரும். இவரது கார்டூன்கள் குசும்பின் உச்சகட்டம். பின்னூட்டங்களிலும் குசும்பை வெளிப்படுத்துவது பதிவர்களுக்கு ஊக்கம் தரும். சமகால பதிவர்களில் குசும்பன் மிக முக்கியமானவர்

லக்கிலுக்

இவருடைய எதிர்பதிவுகள் உலகபிரசித்தம், இவர் உருவாகிய கதாப்பாத்திரங்களான காண்டு கஜேந்திரன், பாரு நிவேதிதா நிஜத்தில் வாழ்வது போன்றே அவரது எழுத்தில் தெரியும். எவ்வளவு பெரிய சீரியஸ் மேட்டரயையும் நகைச்சுவையாக்கி எழுதியவரையே சிரிக்க வைப்பது இவரது யுக்தி. இவரது பதிவுகளில் லேபில் இல்லை என்பதால் அதற்கு மட்டும் தனியாக சுட்டி கொடுக்க முடியவில்லை.

ச்சின்னப்பையன்

மிக குறிகிய காலத்தில் நிறைய நண்பர்களை அடைந்தவர்களில் இவரும் ஒருவர்.
இவருடைய தனித்தன்மை "இன்னார் மென்பொருளாலரானால்" என்று பலரையும் கலாய்ப்பது ரசிக்கதக்கவாறு இருக்கும். இவருக்கு நண்பர்கள் மத்தியில் மொக்கை மன்னன் என்ற பட்டம் இருந்தாலும் இவருடைய மொக்கைக்கு யாரும் ஈடுடில்லை என்பதால் இவரை மொக்கை மாமன்னர் என்றே அழைக்கலாம்.


அதிஷா

இவரும் குறுகிய காலத்தில் நிறைய நண்பர்களை அடைந்தவர்.
ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியசாகவே எழுதினாலும் தற்பொழுதெல்லாம் வெறும் நகைச்சுவைக்கே முக்கியத்துவம் தருகிறார். லக்கிலுக்கின் பாணியில் காதாபாத்திரங்களின் பெயரை மாற்றி கலாய்ப்பது லக்கியையே தூக்கி சாப்பிடம் அளவுக்கு நகைச்சுவையாக இருக்கிறது. பின்ன லக்கியின் தயாரிப்பல்லவா அதிஷா.

ஆசிப் அண்ணாச்சி!

இவரை நகைச்சுவை பதிவர் என்று சொன்னால் யாராவது கோபப்பட போகிறார்கள்.
சில நேரங்களில் பயங்கர சீரியஸ் மேட்டரும். மனம் நெகிழக்கூடிய விசயங்களும் எழுதுவார். குறிப்பிட்டு அய்யனாருக்கு எதிர்பதிவு எழுதி கலாய்ப்பது மிகவும் ரசிக்கதக்கவாறு இருக்கும். வட்டார மொழி நடையில் இவர் எழுதும் பதிவுகள் எல்லாமே நகைச்சுவை தான் எனக்கு. படிக்காதவர்கள் படியுங்கள் உங்களுக்கே தெரியும்.

ராப் என்னும் வெட்டிஆபிசர்,

எல்லா பதிவர்கள் பின்னூட்டத்திலும் me the first போடுவது இவரது பழக்கம். அதாவது இவரை தெரியாதவர்கள் எவரும் இல்லை. சுய எள்ளல் இவரிடம் தண்ணி பட்ட பாடு. மற்றவர்களை கலாய்ப்பதை விட நம்மை நாமே கலாய்த்து கொள்ளலாம் என்று நினைத்து விட்டார் போல. நல்ல நகைச்சுவையுடன் எழுதுகிறார். இவருடைய இந்த பதிவு ஒரு சான்றுக்கு மட்டுமே
மேலும் வாசிக்க...

இருளும் ஒளியும் அல்லது அதுவும் இதுவும்

நேற்று பெய்த கன மழையில் எனது அகலப்பட்டை இணைய சேவை படுத்து விட்டது அதனால் எதுவும் எழுத முடியவில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லதிற்கு தான். இன்று ஏதாவது சிறப்பாக எழுத வேண்டும் என்று யோசித்த போது தோன்றியதை இங்கே கொட்டி விடுகிறேன்.


அது இருத்தலின் ரகசியம்

இது தொலைதலின் ஏக்கம்

அது இயல்பின் உண்மை

இது நிறம் மாறும் தன்மை

அது வெற்றிடமாய் நிரம்பிகிறது

இது வெற்றிடத்தை நிரப்புகிறது

அது இயல்பின் உச்சகட்டம்

இது ஏமாற்றத்தின் ஆரம்பம்
நம் வாழ்க்கையை போல





இது சும்மா

தோன்றலில் தோற்ற பிழை தோன்றுமாயின்
புரிதலின் புரியாமை நன்று
மேலும் வாசிக்க...

Tuesday, October 14, 2008

மீண்டும் ஒரு முறை!!

அது ஆட்டத்தின் முக்கியமான கட்டம். அந்த கோல் தான் அந்த அணியின் எதிர்காலத்தையும் அவனுடைய எதிர்காலத்தையும் தீர்மானிக்க போகிறது.
சீனியர் முதல் ஜூனியர் வரை அனைவரும் அட்வைஸ். இத்தனைக்கும் அவன் தான் அந்த டீமின் பீலே என்று பெயர் வாங்கியவன். பல புதியவர்களின் வருகையால் தனது முழுத் திறமையையும் காட்டவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான்.

எதிர்பாராமல் கிடைத்தது தான் அந்த பெனால்டி ஷாட். கோல் போஸ்டின் நடுவே எதிர் அணியின் கோல் கீப்பர் நின்று கொண்டிருக்கிறான். அவனையும் தாண்டி உள்ளே செல்லவேண்டும் அவன் உதைக்கும் பந்து. பெனால்டி ஷாட்டில் அவனது திறமை அறிந்தே மொத்த அணியினரும் அவனை தேர்வு செய்திருந்தனர். அந்த கோலை போடவில்லை என்றால் அந்த தகுதி சுற்றிலேயே அந்த அணி வெளியேற வேண்டும்.

நொடிப்பொழுதில் சில கணக்குகள் போட்டான் அவன். பொதுவாக மனிதர்கள் வலது பக்கத்தில் உறுதியானவர்கள். கீப்பரின் இடது பக்கத்தை பயன்படுத்தி கொண்டால் இந்த கோலை போட்டுவிடலாம். இருப்பினும் அவனை திசை திருப்ப அந்த வலது பக்கத்தில் அடிப்பது போல் பாவனை செய்ய வேண்டும். அவன் அறிந்த பல யுக்திகளை பயன்படுத்தி பந்தை உதைத்து விட்டான்.

அது அந்தரத்தில் பறந்தது.

கோல் கீப்பர் பாலை தடுக்க அவனது வலது பக்கத்தில் பறந்தான்.

பந்து அவனுக்கு போக்கு காட்டி விட்டு இடது பக்கத்தில் பறந்தது.

அது கண்டிப்பாக கோல் தான் என்று எதிர்பார்த்து அனைவரும் சீட்டின் நுனியில் அமர்ந்திருந்தனர்.

பந்து பறந்து சென்று இடது பக்க கோல் போஸ்டில் அடித்தது

பந்து உள்ளே செல்லாமல் வெளியே பாய்ந்தது.

எல்லோரும் அவனை பூச்சியை பார்ப்பது போல் பார்த்து சென்றனர்.
அவனால் அவமானத்தில் அங்கே நிற்க முடியவில்லை.
எந்நேரமும் கண்ணில் அணை ஒடிந்து வெள்ளம் பெருக்கேடலாம் என்பதை உணர்ந்தான்.

தனி அறையில் வாய் விட்டே கதறினான்.

கடவுளே உன்னை எவ்வளவு நம்பினேன். என்னை கை விட்டு விட்டாயே.

உணர்ச்சி பெருக்கில் அருகில் இருந்த கத்தியை எடுத்து கை வெட்டி கொள்ள போனான்.

தீடிரென்று அந்த குரல்

"மகனே"

யார் அது?

நான் தான் கடவுள்!

எதற்காக வந்தீர்கள், நான் சாவதை பார்ப்பதற்கா!

இல்லை, இன்னும் வாழ்வு உண்டு என்று சொல்வதற்காக!

இனிமேல் என்ன வாழ்க்கை, எல்லாம் தொலைந்து விட்டதே!

அப்படி நினைக்காதே, வேண்டியதை கேள்!

மீண்டும் நான் அங்கே செல்ல வேண்டும்!

எங்கே?

அந்த கோலை நான் மறுபடியும் போட வேண்டும்!.

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது!

என்ன?

ஏற்கனவே நீ அந்த முயற்சியை செய்திருக்கிறாய் எனற ஞாபகம் உனக்கு இருக்காது!

பரவாயில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னால் முடியும்!

சரி உன் ஆசை படியே நடக்கும்!


இப்போது மீண்டும் நீங்கள் பதிவின் முதல் பத்திக்கு செல்லலாம்
மேலும் வாசிக்க...

Monday, October 13, 2008

நான் சந்தித்த பதிவர்கள்!!

ஆனந்த விகடன் மூலம் பதிவுலகை அறிந்து கொண்டேன். அதிலேயே தான் எனக்கு அவரும் அறிமுகமானார். பதிவுலகில் நான் முதல் முதல் சந்தித்தது இவரை தான்! வந்த புதிதில் எனகிருந்த பல சந்தேகங்களை தீர்த்து வைத்தவர், உலகில் நேற்று நடந்தது வரை விவாதிக்கும் இளைஞர். எப்போது அழைத்தாலும் மனம் கோணாமல் பேசுபவர், பதிவர்களை கொண்டாடுபவர், இது அனைவருக்கும் தெரியும் ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியானவர், அதற்காக தான் சமூகத்தையே எதித்தவர். ஒய்வு எடுக்க வேண்டிய வயதிலும் வரும் சமுதாயம் பாழாகி விட கூடாதென்று இன்னும் உழைக்கிறவர் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அந்த இளைஞரின் பெயர் தருமி. அவரை சந்தித்தது பற்றிய பதிவு.


இரண்டாவது நான் சந்தித்ததும் ஒரு இளைஞரை தான். இவரும் பதிவர்களை கொண்டாடுபவர். இவரும் பதிவுலகை பத்திரிகை வரை கொண்டு சேர்த்தவர். பல சர்ச்சைகளுக்கு ஆளானவர். இவருடன் பழகிய அனைவருக்கும் ஏதாவது ஒரு கெட்ட அனுபவம் நடந்திருக்கும். மற்றவர்கள் அவரை அடையாளம் காட்டுவது போல் ஒரு அடையாளமும் அவரிடம் இல்லை. என்னுடம் சேர்ந்து மட்டன் பிரியாணி சாப்பிட்டார். ஒரு பீர் குடித்தார். அவரிடம் எனக்கு பிடித்தது அவரது நகைச்சுவை உணர்வு. அந்த இளைஞரின் பெயர் டோண்டு.

முதல் தரம் அவரைப் பார்க்க சென்ற பொது அஜ்மீர் என்ற எனது நண்பரையும் அழைத்து சென்றிருந்தேன். அவர் பங்கிற்கு அதியமானை அழைத்திருந்தார். அதியமான் ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர். என்னிடம் என்ன ராசி என்று கேட்க, நான் அதில் நம்பிக்கை இல்லை இருந்தாலும் சொல்கிறேன் மிதுன ராசி,மிதுன லக்னம் என்றேன்.
நம்பிக்கை இல்லை என்று சொன்னீர்களே என்று அதியமான் கேட்க, தெரிந்ததால் தான் நம்பிக்கை இல்லை போல என்று அந்த இடத்தை கலகலப்பாக்கினார் டோண்டு.

ஒரு முறை கோவையில் ஒரு பெரிய சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள். செந்தழல் ரவியும், ஓசை செல்லாவும். மிக அருமையான சந்திப்பாக அது இருந்தது. இருபது பதிவர்களுக்கு மேல் ஒரே இடத்தில். சென்னை மற்றும் பாண்டியில் இருந்தும் பதிவர்கள் வந்திருந்தனர். அங்கே இளையகவி, ஜிம்ஷா, நல்லதந்தி ஆகியோரையும் சந்தித்தேன். அதன்பிறகு ஒரு முறை இளையகவி என் வீடிற்கு வந்து என்னை சிறப்பித்தார், மேலும் முதன் முதலில் எனது புகைபடத்தை வெளியிட்டு பாராட்டுகளைப் பெற்றவர் இவர்.

நல்லத்ந்தியை முதன்முதலில் கோவையில் தான் சந்தித்தேன். நல்ல மனிதர் சேலத்தை சேர்ந்தவர். நான் எப்போது சேலம் சென்றாலும் அவரை அழைப்பேன். பிரதி பலன் எதிர்பாராமல் உதவுபவர். ஆனால் பாருங்கள் என்னை மாதிரியே பதிவுலக அரசியல் தெரியாதவர்.

செந்தழல் ரவி, இவரையும் முதன் முதலில் கோவையில் தான் பார்த்தேன் ஆனாலும் இவர் வசிப்பது பெங்களூரில். மிகுந்த வேலைபளுவிலும் என்னை பார்க்க வந்தார். நகைச்சுவையாக எழுதுபவர். இவருடைய நட்பு வட்டம் பெரிது. அங்கே எனது பெயருடைய மற்றொரு நண்பரையும் அறிமுக படுத்தினார். மற்றொரு முறை அவரை அழைத்த பொது வர கிளம்பியவர், உடன் வேலை செய்பவரின் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்பட்டதால் அங்கே சென்றார். இம்மாதிரியான மனிதர்கள் எனக்கு தெரியும் என்று சொல்லி கொள்வதே பெருமை தானே.

ஆசிப் அண்ணாச்சியின் இல்ல திருமண விழாவிற்கு சென்ற போது முதன்முதலாக லக்கிலுக், பால பாரதி, மோகன் தாஸ் மற்றும் பைத்தியகாரனையும் சந்தித்தேன். அவர்கள் பெருந்தலைகள், தலையிருக்கும் போதுய் வாலாடக் கூடாது என்பதால் பெரிதாக எதுவும் அவர்களிடத்தில் பேசவில்லை. இருப்பினும் அவர்கள் எனக்கு துணையாக ரமேஷ் வைத்யாவை அனுப்பி வைத்தார்கள்.

நொடிப்பொழுதில் எந்த வார்த்தைக்கும் கவிதை படைக்கும் திறமை உள்ளவர் ரமேஷ். விகடனில் பணி புரிகிறார். பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நகைச்சுவை இருக்கும். நன்றாக எழுதி கொண்டிருந்தவர் என்ன காரணமோ தெரியவில்லை அவரது வலைப்பூவையே அளித்து விட்டார். வாரத்திற்கு இரண்டு முறையேனும் என்னுடம் பேசுவார். பதிவர் அல்லாது உடன் பிறந்த சகோதரர் போல பழகுபவர்.

பரிசல், மிக குறுகிய காலத்தில் பதிவர் வட்டத்தில் பெரும் புகழை சம்பாதித்தவர். காரணம் அதற்கு அவர் மிக தகுதியானவர். இலக்கிய பிரியர். பல்சுவை எழுத்தாளர். கூடிய விரைவில் இவருடைய எழுத்துகள் வெகுஜன பத்திரிகையில் வரப்போகிறது.
இவரும் பதிவர்களை கொண்டாடுபவர். என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.
திருப்பூரில் வசிக்கிறார். வெயிலான் மற்றும் சாமிநாதன்(ஈர வெங்காயம்) இவரது நண்பர்கள். இவர்கள் ஈரோடு வந்திருந்தபோது எழுதிய பதிவு.

புதுகை அப்துல்லா மற்றும் வெண்பூ, இருவரும் சென்னை வாசிகள். அப்துல்லா பற்றி சொல்லவேண்டியதில்லை. தமிழகமே அறியும் அவரது சேவை மனப்பான்மை பற்றி, இவருடைய திராவிடமும் கம்யூநிஷமும் பதிவு இவருக்குள் இருக்கும் இலக்கியவாதியை காட்டி கொடுத்து விட்டது. இந்த இருவரும் தொடர்ச்சியாக எழுதுவதில்லை என்றாலும் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட்டு ஆதரவு தரும் நல்லவர்கள்.

சின்ன ரஜினி கிரி என்னை பார்க்க ஈரோடு வந்திருந்தார். நல்ல மனிதர் என் மகளுக்காக வெளிநாட்டில் இருந்து சாக்லேட் வாங்கி வந்திருந்தார். மிக அமைதியானவர். நாம் பத்து வார்த்தை பேசினால் தான் ஒரு வார்த்தை பேசுவார்.

ஈரோடு அருகே இருக்கும் கூடுதுறை என்ற இடத்தில் வசிப்பவர், அவர் வலைத்தளத்தின் பெயர் காரணமும் அதுவே. இவரும் அமைதியானவர். நல்ல மனிதர். இவர் முதன் முறை வந்திருந்த போது எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரியாக கவனிக்க முடியவில்லை.

கடைசி மற்றும் முக்கியமானது.
ஈரோட்டில் இருந்து கொண்டு இவரை பற்றி எழுத வில்லை என்றால். பதிவுலகம் என்னை முதுகில் ஏறி மிதிக்கும். இவரை செல்லமாக போட்டோகாரர் என்று தான் அழைப்போம். நிலா குட்டியின் தந்தை என்ற பெருமைக்குரியவர். பேசுவதற்கு ஏகப்பட்ட விசயங்கள் வைத்திருக்கிறார். இவரிடம் நேரில் பேசியவர்களுக்கு தான் இவர் எவ்வளவு பெரிய இலக்கிய வாசகர் என்பது தெரியும்.

இவருக்கு நான் எழுதிய பகிரங்க கடிதம்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது