நான் சந்தித்த பதிவர்கள்!!
ஆனந்த விகடன் மூலம் பதிவுலகை அறிந்து கொண்டேன். அதிலேயே தான் எனக்கு அவரும் அறிமுகமானார். பதிவுலகில் நான் முதல் முதல் சந்தித்தது இவரை தான்! வந்த புதிதில் எனகிருந்த பல சந்தேகங்களை தீர்த்து வைத்தவர், உலகில் நேற்று நடந்தது வரை விவாதிக்கும் இளைஞர். எப்போது அழைத்தாலும் மனம் கோணாமல் பேசுபவர், பதிவர்களை கொண்டாடுபவர், இது அனைவருக்கும் தெரியும் ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியானவர், அதற்காக தான் சமூகத்தையே எதித்தவர். ஒய்வு எடுக்க வேண்டிய வயதிலும் வரும் சமுதாயம் பாழாகி விட கூடாதென்று இன்னும் உழைக்கிறவர் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அந்த இளைஞரின் பெயர் தருமி. அவரை சந்தித்தது பற்றிய பதிவு.
இரண்டாவது நான் சந்தித்ததும் ஒரு இளைஞரை தான். இவரும் பதிவர்களை கொண்டாடுபவர். இவரும் பதிவுலகை பத்திரிகை வரை கொண்டு சேர்த்தவர். பல சர்ச்சைகளுக்கு ஆளானவர். இவருடன் பழகிய அனைவருக்கும் ஏதாவது ஒரு கெட்ட அனுபவம் நடந்திருக்கும். மற்றவர்கள் அவரை அடையாளம் காட்டுவது போல் ஒரு அடையாளமும் அவரிடம் இல்லை. என்னுடம் சேர்ந்து மட்டன் பிரியாணி சாப்பிட்டார். ஒரு பீர் குடித்தார். அவரிடம் எனக்கு பிடித்தது அவரது நகைச்சுவை உணர்வு. அந்த இளைஞரின் பெயர் டோண்டு.
முதல் தரம் அவரைப் பார்க்க சென்ற பொது அஜ்மீர் என்ற எனது நண்பரையும் அழைத்து சென்றிருந்தேன். அவர் பங்கிற்கு அதியமானை அழைத்திருந்தார். அதியமான் ஜோதிடத்தில் ஆர்வமுள்ளவர். என்னிடம் என்ன ராசி என்று கேட்க, நான் அதில் நம்பிக்கை இல்லை இருந்தாலும் சொல்கிறேன் மிதுன ராசி,மிதுன லக்னம் என்றேன்.
நம்பிக்கை இல்லை என்று சொன்னீர்களே என்று அதியமான் கேட்க, தெரிந்ததால் தான் நம்பிக்கை இல்லை போல என்று அந்த இடத்தை கலகலப்பாக்கினார் டோண்டு.
ஒரு முறை கோவையில் ஒரு பெரிய சந்திப்பிற்கு அழைத்திருந்தார்கள். செந்தழல் ரவியும், ஓசை செல்லாவும். மிக அருமையான சந்திப்பாக அது இருந்தது. இருபது பதிவர்களுக்கு மேல் ஒரே இடத்தில். சென்னை மற்றும் பாண்டியில் இருந்தும் பதிவர்கள் வந்திருந்தனர். அங்கே இளையகவி, ஜிம்ஷா, நல்லதந்தி ஆகியோரையும் சந்தித்தேன். அதன்பிறகு ஒரு முறை இளையகவி என் வீடிற்கு வந்து என்னை சிறப்பித்தார், மேலும் முதன் முதலில் எனது புகைபடத்தை வெளியிட்டு பாராட்டுகளைப் பெற்றவர் இவர்.
நல்லத்ந்தியை முதன்முதலில் கோவையில் தான் சந்தித்தேன். நல்ல மனிதர் சேலத்தை சேர்ந்தவர். நான் எப்போது சேலம் சென்றாலும் அவரை அழைப்பேன். பிரதி பலன் எதிர்பாராமல் உதவுபவர். ஆனால் பாருங்கள் என்னை மாதிரியே பதிவுலக அரசியல் தெரியாதவர்.
செந்தழல் ரவி, இவரையும் முதன் முதலில் கோவையில் தான் பார்த்தேன் ஆனாலும் இவர் வசிப்பது பெங்களூரில். மிகுந்த வேலைபளுவிலும் என்னை பார்க்க வந்தார். நகைச்சுவையாக எழுதுபவர். இவருடைய நட்பு வட்டம் பெரிது. அங்கே எனது பெயருடைய மற்றொரு நண்பரையும் அறிமுக படுத்தினார். மற்றொரு முறை அவரை அழைத்த பொது வர கிளம்பியவர், உடன் வேலை செய்பவரின் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்பட்டதால் அங்கே சென்றார். இம்மாதிரியான மனிதர்கள் எனக்கு தெரியும் என்று சொல்லி கொள்வதே பெருமை தானே.
ஆசிப் அண்ணாச்சியின் இல்ல திருமண விழாவிற்கு சென்ற போது முதன்முதலாக லக்கிலுக், பால பாரதி, மோகன் தாஸ் மற்றும் பைத்தியகாரனையும் சந்தித்தேன். அவர்கள் பெருந்தலைகள், தலையிருக்கும் போதுய் வாலாடக் கூடாது என்பதால் பெரிதாக எதுவும் அவர்களிடத்தில் பேசவில்லை. இருப்பினும் அவர்கள் எனக்கு துணையாக ரமேஷ் வைத்யாவை அனுப்பி வைத்தார்கள்.
நொடிப்பொழுதில் எந்த வார்த்தைக்கும் கவிதை படைக்கும் திறமை உள்ளவர் ரமேஷ். விகடனில் பணி புரிகிறார். பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் நகைச்சுவை இருக்கும். நன்றாக எழுதி கொண்டிருந்தவர் என்ன காரணமோ தெரியவில்லை அவரது வலைப்பூவையே அளித்து விட்டார். வாரத்திற்கு இரண்டு முறையேனும் என்னுடம் பேசுவார். பதிவர் அல்லாது உடன் பிறந்த சகோதரர் போல பழகுபவர்.
பரிசல், மிக குறுகிய காலத்தில் பதிவர் வட்டத்தில் பெரும் புகழை சம்பாதித்தவர். காரணம் அதற்கு அவர் மிக தகுதியானவர். இலக்கிய பிரியர். பல்சுவை எழுத்தாளர். கூடிய விரைவில் இவருடைய எழுத்துகள் வெகுஜன பத்திரிகையில் வரப்போகிறது.
இவரும் பதிவர்களை கொண்டாடுபவர். என் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.
திருப்பூரில் வசிக்கிறார். வெயிலான் மற்றும் சாமிநாதன்(ஈர வெங்காயம்) இவரது நண்பர்கள். இவர்கள் ஈரோடு வந்திருந்தபோது எழுதிய பதிவு.
புதுகை அப்துல்லா மற்றும் வெண்பூ, இருவரும் சென்னை வாசிகள். அப்துல்லா பற்றி சொல்லவேண்டியதில்லை. தமிழகமே அறியும் அவரது சேவை மனப்பான்மை பற்றி, இவருடைய திராவிடமும் கம்யூநிஷமும் பதிவு இவருக்குள் இருக்கும் இலக்கியவாதியை காட்டி கொடுத்து விட்டது. இந்த இருவரும் தொடர்ச்சியாக எழுதுவதில்லை என்றாலும் எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட்டு ஆதரவு தரும் நல்லவர்கள்.
சின்ன ரஜினி கிரி என்னை பார்க்க ஈரோடு வந்திருந்தார். நல்ல மனிதர் என் மகளுக்காக வெளிநாட்டில் இருந்து சாக்லேட் வாங்கி வந்திருந்தார். மிக அமைதியானவர். நாம் பத்து வார்த்தை பேசினால் தான் ஒரு வார்த்தை பேசுவார்.
ஈரோடு அருகே இருக்கும் கூடுதுறை என்ற இடத்தில் வசிப்பவர், அவர் வலைத்தளத்தின் பெயர் காரணமும் அதுவே. இவரும் அமைதியானவர். நல்ல மனிதர். இவர் முதன் முறை வந்திருந்த போது எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரியாக கவனிக்க முடியவில்லை.
கடைசி மற்றும் முக்கியமானது.
ஈரோட்டில் இருந்து கொண்டு இவரை பற்றி எழுத வில்லை என்றால். பதிவுலகம் என்னை முதுகில் ஏறி மிதிக்கும். இவரை செல்லமாக போட்டோகாரர் என்று தான் அழைப்போம். நிலா குட்டியின் தந்தை என்ற பெருமைக்குரியவர். பேசுவதற்கு ஏகப்பட்ட விசயங்கள் வைத்திருக்கிறார். இவரிடம் நேரில் பேசியவர்களுக்கு தான் இவர் எவ்வளவு பெரிய இலக்கிய வாசகர் என்பது தெரியும்.
இவருக்கு நான் எழுதிய பகிரங்க கடிதம்
|
|
வலைச்சர
ReplyDeleteவாத்தியாரானதுக்கு
வாழ்த்துக்கள்
வா......லு.....
//என்ன காரணமோ தெரியவில்லை அவரது வலைப்பூவையே அளித்து விட்டார். //
ReplyDeleteஅ’ளி’ச்சிருந்தாதான் பரவால்லியே..
அ’ழி’ச்சுட்டாரே வாலு... :-(
முதல் பின்னூட்டங்கள் இரண்டும் திருப்பூரிலிருந்து என்பதால் என் உள்பனியனில் காலர்வைத்து, தூக்கி விட்டுக் கொள்கிறேன்!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் வால்பையரே!!!
ReplyDeleteதிருப்பூர்காரர்களின் வேகமும் ஒற்றுமையும் ஓங்குக...ஓங்குக!!!!
திரு்ப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்ப்பதால் உள் பனியனிலும் காலர் வைக்கும் பரிசல்காரர் வாழ்க வாழ்க!!!!!
பதிவுக்கு நன்றி :)
ReplyDeleteஅடுத்த முறை நீங்கள் பெங்களூர் வரும் போது மீண்டும் மீண்டும் சந்திப்போம் :)
நானும் பார்ட்னர் வெண்பூவும் "பார்த்துக்க!பார்த்துக்க! நாங்களூம் ரவுடிதான் பார்த்துக்கனு வண்டில போற ஆளுங்க. பதிவர்கள் லிஸ்ல எங்களையும் சேர்த்துகிட்டதுக்கு சென்னை வரும்போது தனியா கவனிச்சுர்றோம் :))
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் ஆனதற்கு பாராட்டுக்கள் வால்.. முதல் பதிவே நல்ல கலெக்ஷன் (பின்ன என் பதிவையும் காட்டியிருக்கீங்களே!!!) :)))
ReplyDelete//
புதுகை.அப்துல்லா said...
நானும் பார்ட்னர் வெண்பூவும் "பார்த்துக்க!பார்த்துக்க! நாங்களூம் ரவுடிதான் பார்த்துக்கனு வண்டில போற ஆளுங்க. பதிவர்கள் லிஸ்ல எங்களையும் சேர்த்துகிட்டதுக்கு சென்னை வரும்போது தனியா கவனிச்சுர்றோம் :))
//
ஹி..ஹி.. ரிப்பீட்டிக்கிறேன்..
இந்த வாரம் வலைச்சரத்திலயா :))
ReplyDeleteகலக்குங்க புது ஆசிரியரே :))
//விஜய் ஆனந்த் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வால்பையரே!!!
திருப்பூர்காரர்களின் வேகமும் ஒற்றுமையும் ஓங்குக...ஓங்குக!!!!
திரு்ப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்ப்பதால் உள் பனியனிலும் காலர் வைக்கும் பரிசல்காரர் வாழ்க வாழ்க!!!!!//
ரிப்பீட்... ரிப்பீட்டே :)
அன்பின் அருண்
ReplyDeleteசில ஒற்றுமைகள் நமக்குள்
நானும் ஆகஸ்டு 2007 ல் வலைப்பூ ஆரம்பித்தேன். நீயோ நவம்பர் 2007.
நான் முதன் முதலில் கேட்டறிந்த தொலைபேசி எண் தருமியுடையது. நீயும் கேட்டறிந்திருக்கிறாய்.
நான் முதன் முதலில் சந்தித்த சக வலைப்பதிவர் அன்பு அண்ணன் தருமி தான். நீயும் அவரைத் தான் முதன் முதலில் சந்தித்திருக்கிறாய்.
என்ன ஒற்றுமை என்ன ஒற்றுமை
நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் வால்பையன்!
ReplyDeleteகலக்குங்க!
//இவர் முதன் முறை வந்திருந்த போது எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சரியாக கவனிக்க முடியவில்லை.//
ReplyDeleteஅதுதான் இரண்டாம் முறை வந்த போது நன்றாக கவனித்துவிட்டீர்களே... மறக்க முடியுமா அந்த சந்திப்பை...
வாழ்த்துக்கள் வலைச்சரம் ஆசிரியர் ஆனதற்கு...
இங்கதானா இந்த வாரம்.. இத உங்க வலையின் முகப்புல போடுங்க சகா.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாழ்த்துக்கள் வால்பையன்
ReplyDelete(இன்னைக்கு பிறந்தநாளா?)
வாழ்த்துகள்! வால்! :)
ReplyDeleteவாழ்த்துக்கள் :-))
ReplyDeleteவாழ்த்துக்கள் வால்பையன் :-)
ReplyDeleteநன்றி வெயிலான்
ReplyDeleteநன்றி பரிசல்
நன்றி விஜய் ஆனந்த்
நன்றி அருண்
நன்றி அப்துல்லா
நன்றி வெண்பூ
உங்க ரெண்டு பேத்துக்கும் பில்டிங் ஸ்ட்ராங்குன்னு எனக்கு தெரியும்
நன்றி சென்ஷி
ஆமாம் சீனா ஐயா!
ரெண்டு பேருக்கும் நிறைய ஒற்றுமைகள்
நன்றி சுரேகா
நன்றி கூடுதுறை
உங்களுக்கு துணைக்கு கிரியை வைத்து கொண்டீர்களே
நன்றி சகா
இன்னைக்கு போட்டுடுறேன்
நன்றி ஆதவன்
இன்னைக்கு ப்ளீச்சிங் பவுடருக்கு பிறந்த நாள்
நன்றி கிரி
வாழ்த்துக்கள் தல.....
ReplyDeleteசாரி இன்னும் பதிவ படிக்கலை... எல்லாரும் வாழ்த்து சொல்ராங்கலேனு தான் நானும் சொன்னேன்... (எதுக்கு வாழ்த்து சொல்ராய்ங்க... படிச்சிட்டு வந்து எழுதுறேன்... )
ஒ.... மலரும் நினைவுகலா ???
ReplyDelete//இவரிடம் நேரில் பேசியவர்களுக்கு தான் இவர் எவ்வளவு பெரிய இலக்கிய வாசகர் என்பது தெரியும்.//
ReplyDeleteஅடக்கொடுமையே. யாராச்சும் தப்பா நெனச்சுடப்போறாங்க :P
Congrats Buddy.
ReplyDeleteவால்ப்பையனுக்கு எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாலு.. :)
ReplyDeleteநன்றி கணேஷ்
ReplyDeleteஅப்படியும் சொல்லலாம்
//நந்து f/o நிலா said...
அடக்கொடுமையே. யாராச்சும் தப்பா நெனச்சுடப்போறாங்க >:P //
நான் இன்னும் உண்மையை சொல்லவே இல்லையே! அதுக்குள்ள நினைப்பாங்களா
நன்றி தமிழ் நெஞ்சம்
நன்றி சஞ்சய்
வாழ்த்துக்கள் ... ஜமாய்ங்க ..
ReplyDelete//சாரி இன்னும் பதிவ படிக்கலை... எல்லாரும் வாழ்த்து சொல்ராங்கலேனு தான் நானும் சொன்னேன்... (எதுக்கு வாழ்த்து சொல்ராய்ங்க... படிச்சிட்டு வந்து எழுதுறேன்... )//
இல்ல .. இல்லா நான் பதிவை வாசிச்சிட்டேன். பின்னூட்டங்களையும் வாசிச்சிட்டேன். இந்தப் பின்னூட்டம் பிடிச்சிது.. அதான் இங்க போட்டுட்டேன்..
நன்றி கார்த்திக்(பாஸ்)
ReplyDeleteநன்றி தருமி(ஊக்கபடுத்துனர்)
வாழ்த்துகள் :)
ReplyDeleteகொஞ்ஜம் போல நானும் உள்ளேன் அய்யா...
ReplyDelete