07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 22, 2008

நான் என்னும் எண்ணம்...........அதாங்க ஈகோ!!..

எனக்குப் பிடித்ததும் பிடிக்காததுமான ஒன்றைப் பறறி எழுதியே ஆக வேண்டும்.

எல்லோரிடமும் இருக்கும் ஒன்று.......

ஆனால் எல்லோருக்கும் அடுத்தவரிடம் இருந்தால் பிடிக்காது......
என்ன...?

குழப்பமாக இருக்கிறதா??

அதுதான் நான் என்னும் எண்ணம்..... (ஈகோ).....

இப்போ நான் சொல்லப் போகும் கதை...

நான் சின்ன வயதில் படித்த கதை ஒனறு கொஞ்சம் அரை குறையாய் நினைவில் இருக்கிறது.......

ஒருமுறை ஒரு முனிவரும் அவரின் சீடரும் யார் சொர்க்கத்தி்ற்குப் போவார்.....
என்று வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார்கள்....

"நான்தான் போவேன்......நான்தான் போவேன்" எனறு உரத்த குரலில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்......

அதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த ஒரு பெண் "நான் போனால் போகலாம்" எனறு மிகச் சாதாரணமாக சொல்லி விட்டுப் போனாள்......

கொஞ்ச நேரம் முனிவரும் சீடரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு "நீ எப்படிப் போவாய்?"..... என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார்கள்.

அந்தப் பெண் மீண்டும் வந்து உங்களிருவரிடமும் உள்ள "நான் என்னும் எண்ணம் போனால் போகலாம்"..... என்று சொல்லிச் சிரித்தாள்.....

இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்தமான என் மனதில் ஆழப் பதிந்த ஒரு கதை....

இதை மாதிரி ஆழ்கருத்துக்ளுடைய கதைகள் பல இவரின் ஒரு நிமிடக் கதைகளில் கொட்டிக் கிடக்கிறது......

வினையூக்கியின் ஒரு நிமிடக் கதைகள்....,
வலைப்பூ உலகில் ரொம்ப பிரபலம்...!

9 comments:

 1. நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை - என்ற பாடல் அவ்வப்போது கேட்பதுண்டு. நான் என்றால் யார் என்ற தேடலில் ரமண மகிர்ஷி சொன்ன சிலவற்றை வாசித்துள்ளேன். உயிர் கிடைத்து உன் பெயர் என்ன என்பதற்கு கேள்வியாக பதில் சொல்ல ஆரம்பித்ததிலிருந்து எனது இறுதி மூச்சு வரைக்கும் என்னிடம் இந்த நான் தான் இருப்பேன் என்பது தானே சரி என்ற எண்ணம் கடந்த இரண்டு நாட்களாக என் மனதை மென்மையாக வருடுகிறது. இங்கே அருணா நீங்கள் குறிப்பிட்டது அதை அல்ல; நான் என்ற ஆணவ எண்ணம் கொண்டவர்களின் மனநிலை. நான் இதைச் செய்தேன், என்று பணிவாக சொல்லும் போது அங்கே ஆணவம் தலைதூக்கவே இல்லை. நான் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்கிறதில் இருக்கும் நான், ஆபத்தாக மாறக்கூடும் என்று புரிந்து கொளிகிறேன். சுயமரியாதைக்கும் ஆணவத்திற்கு இடைவெளி ஒரு நூல் அளவே.

  நல்வாழ்த்துக்கள்
  அன்புடன் என் சுரேஷ்

  ReplyDelete
 2. "நான் என்றால் உதடுகள் ஒட்டாது..!
  நாம் எனும்போது உதடுகள் ஒட்டும்."

  இது "முதல்வர் கலைஞர் கருணாநிதி" சொன்னதாக ஞாபகம்.

  "நான்" என்பது கரைய "நாம்" சிறந்த வழியாகத் தோன்றுகிறது.

  ReplyDelete
 3. //சுயமரியாதைக்கும் ஆணவத்திற்கு இடைவெளி ஒரு நூல் அளவே.//

  நீங்கள் சொல்வது ரொம்ப சரி சுரேஷ்.
  சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லவில்லையோ என எனக்கும் தோன்றியது....உங்களின் இந்த இரு வரிகள் முற்றிலும் உண்மை..
  நன்றி சுரேஷ்...
  அன்புடன் அருணா

  ReplyDelete
 4. அந்தோணி முத்து said...

  //"நான்" என்பது கரைய "நாம்" சிறந்த வழியாகத் தோன்றுகிறது.//

  அட...இது நல்லாயிருக்கே...
  அன்புடன் அருணா

  ReplyDelete
 5. /"நான் என்றால் உதடுகள் ஒட்டாது..!
  நாம் எனும்போது உதடுகள் ஒட்டும்."

  இது "முதல்வர் கலைஞர் கருணாநிதி" சொன்னதாக ஞாபகம்.

  "நான்" என்பது கரைய "நாம்" சிறந்த வழியாகத் தோன்றுகிறது./

  அருமையான வரிகள்

  ReplyDelete
 6. வள்ளுவர் அகந்தையைப் பற்றி'' யான் எனது எனும் செருக்கறுப்பான்
  வானோர்க்கும் மேல்'' எனக் கூறியுள்ளார்.

  ReplyDelete
 7. வேளராசி said...
  //வள்ளுவர் அகந்தையைப் பற்றி'' யான் எனது எனும் செருக்கறுப்பான்
  வானோர்க்கும் மேல்'' எனக் கூறியுள்ளார்.//

  நன்றி..வேளராசி....முதல் வருகைக்கு நன்றி..
  அன்புடன் அருணா

  ReplyDelete
 8. எங்களுக்கு பர்ஸனாலிட்டி டெவலப்மென்ட் க்ளாஸில் சொன்னார்கள்.
  Ego is a terrible feeling one can possibly have.

  ReplyDelete
 9. Karthik said...
  //எங்களுக்கு பர்ஸனாலிட்டி டெவலப்மென்ட் க்ளாஸில் சொன்னார்கள்.
  Ego is a terrible feeling one can possibly have.//

  exactly kaarthik.!
  anbudan aruNaa

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது