'நறுக்' கென்ற நர்சிம்
➦➠ by:
சுரேகா
அஞ்சாதே...என்று தலைப்பிட்டு அந்தப்படத்தைப்பற்றி சும்மா ஒரு அறிமுகம் செய்துவிட்டு முதல் பதிவை 2008 பிப்ரவரி 19 ம் தேதி ஆரம்பித்த இந்தப்பதிவர்..நல்ல ரசனைக்காரராகத்தெரிகிறார்.
இவர் பதிவுகளில் சமூக அக்கறை தெரிகிறது.
காதலித்து ஒடிப்போகும் பிள்ளைகளுக்கு.... பெற்றோரின் சார்பில்...
என்று இவர் எழுதியிருக்கும் கவிதை , அற்புதமாக பெற்றோரின் வலியைச்சொல்கிறது.
இவர் புனைவுகள், பின்நவீனத்துவத்துக்கும் நெருங்கியவராக இருக்கிறார்.
கம்பரை இவர் போக்கில் ரசிக்கும் தன்மை மிகவும் அழகாக இருக்கிறது
தலைப்பும் அதைவிட அழகு
இந்திரா காந்தி, நேரு, எம்ஜியார்,கலைஞர், ஜெயலலிதா.. இது ஒரு ஜாலிப்பட்டாசு - கொசுவத்தியாக!
"சுப்ரமணியபுரம்" திரு சசிக்குமாருடன் சந்திப்பு...
நிகழ்த்தியிருக்கிறார்.
இன்னொரு கவிஞரின் இந்தக்கவிதையை ஞாபகம் வைத்திருந்து
அகதியின் பாடலாக பதிவிட்டிருக்கிறார்.
அதைப்படித்தபின் ஏற்படும் வலியில், கண்ணீர் உருள்வதென்னவோ உண்மை!
யாவரும் கேளிர் என்ற தலைப்புடன் பதிவிட்டு கலக்கிவரும்
நர்சிம். இவர் ஒற்றைக் கட்டத்துக்குள் சிக்காமல், பல்சுவையாகப் பதிவெழுத ஆரம்பித்து சில நாட்களிலேயே கலக்கலாக எழுதி , எல்லோருக்கும் நண்பராக இருக்கிறார்.சிறப்பாகவும் சுவையாகவும் எழுதி நம் அனைவரது மனத்தையும் கவரும் திறமையுள்ள இவர் இன்னும் நிறைய எழுதிச் சிறக்க வாழ்த்துவோம்.
அடுத்து....
|
|
எங்கத் தலையைப் பற்றி எழுதியமைக்கு நன்றி..
ReplyDeleteவளவளன்னு இல்லாம அளவோட அழகா எழுதுவார். எனக்கும் இவரோட பதிவுகள் ரொம்பப்பிடிக்கும் :):):)
ReplyDeleteநல்ல பதிவர்
ReplyDeleteகூடவே ரொம்ப அழகானவர்
ReplyDeleteசுரேகா..
ReplyDeleteமிக்க நன்றி.. மகிழ்ச்சியாக இருக்கிறது.. வார்த்தைகள் வரமறுக்கின்றன.. நன்றி..
நர்சிம்
எனக்கும் இவரோட பதிவுகள் ரொம்பப்பிடிக்கும் :):):)
ReplyDelete'குமுதம் புகழ்' நர்சிம் என்று வந்திருக்க வேண்டும்!
ReplyDelete(அவரிடமே விளக்கம் கேட்கவும்!)