07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 25, 2008

தூவப் படும் விதைகள் மலர்களாகட்டும்.......

உதவும் உள்ளங்கள் பல வலை உலகில் உலவுகின்றன.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உதவுகின்றன..அவைகளுக்கு அறிமுகம் தேவை இல்லைதான்......இருந்தாலும் இவர்களை அறிமுகப் படுத்த வில்லையென்றால் வலைச்சரம் தொடுத்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடுமே....முதலில்....

"இங்கு தூவப்படும்
விதைகள் எங்கேயாவது
மரமாகட்டும்.
நிழல் கிடைப்பவர்கள்
வாழ்த்துவார்கள்."

இந்த கவிதையுடன் ஆரம்பிக்கிறது இந்த வலைப்பூ.....
இதன் உரிமையாளர்...ஞானியார்ரசிகவ்
நோய்களுடன் போராடும் நோயாளிகளுக்கும் , வேலை தேடுபவர்களுக்காகவும்.....பல உதவிகள்,தகவல்கள் கொடுக்கிறார்.

அடுத்ததாக ஸ்ரீவத்ஸ்......இவர் சத்தமில்லாமல் சாதிச்சுக்கிட்டு இருக்கிறார்.....பார்வை இல்லாதவர்களுக்காக இவர் பரிட்சை எழுதுகிறார்..... இவரின் முயற்சியால் சுமார் 100 பேர்கள் இவரைப் போல பார்வையற்றவர்களுக்காக பரிட்சை எழுதி உதவுகிறார்கள்.

இவையெல்லாம் கடவுளுக்குச் செய்யும் சேவை.வாழ்த்துக்கள் ஸ்ரீவத்ஸ்!!!

அப்புறம் வேர்கள்.....நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு, நாமும் உதவ வேண்டும் என்ற ஒரே எண்ணத்தை உடைய நண்பர்களால் நடத்தப் படும் அறக்கட்டளையின் வலைப்பூ........ ஆதரவற்றோர் இல்லங்கள், அனாதை ஆசிரமங்களில் அடைக்கலமாய் இருப்பவர்களுக்கு, உணவு வழங்குவது,இரத்த தானம், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துகிறார்கள்..

அடுத்ததாக என்றென்றும் அன்புடன் பாலா .....இவர் வலைப்பூவிற்கு அறிமுகம் தேவையில்லைதான் இருந்தாலும் இவரின் இந்த சாதனையைப் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.....நீங்கள் அடிக்கடி படித்ததுதான்....அந்தோணிமுத்துவுக்கு இந்த வலைப்பூ செய்த உதவி நீங்கள் அனைவரும் அறிந்ததே....

இனி டெக்னிகலாக கணினி பிரச்னைகளுக்கு உதவும் வலைப்பூக்களை ஒரு ரவுண்ட் வரலாமா???

தட்டச்சு பலகையின் சிற்சில குறுக்குவழிகள் பற்றி விபரமாகத் தரும் பதிவு இது...தருபவர் இக்பால்

அடுத்து ரவி...... தமிழ் வலைப்பதிவர்களுக்கான சின்ன சின்ன சந்தேகங்களையும் நிவர்த்தி செய்யும் வலைப்பூ இது.வலைப்பூவின் பெயர் வைப்பிலிருந்து வாசகர்களை எப்படி வலைப்பூவிற்கு நிரந்தரமாக வர வைப்பது வரை சொல்லிக் கொடுக்கிறார்.

இப்படி மற்றவங்க சந்தோஷத்திற்காகவே வாழ்றவங்க கொஞ்சமே கொஞ்சம் பேர்தான்......அதிலேயும் நமக்குத் தெரிஞ்சவங்க ரொம்பக் கொஞ்சம்தான்...வேற உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தால் சொல்லலாமே???? அப்புறம் நாளைக்குப் பார்க்கலாமா???? வர்ட்டா?????

4 comments:

 1. உதவும் உள்ளம் கொண்ட நல்லோரை அறிமுகப்படுத்திய இந்தப் பதிவுக்கு மிக்க நன்றி, அருணா அம்மா.

  அவர்கள் எல்லோருக்கும் ஆண்டவன் அருள் என்றும் நிறைந்து, தொடர்ந்து அவர்கள் நற்பணிகள் தடைகளின்றி நடைபெற, நல்ல ஆரோக்கியத்துடன் விளங்க வாழ்த்துகிறேன்.

  வாழ்க வளமுடன்!

  அன்புடன்
  விஸ்வநாதன்

  ReplyDelete
 2. அப்பாடா!!!! என் பதிவுக்கு உங்களுடைய முதல் பின்னூட்டம்...இப்போ எனக்குப் புரியுது....உருப்படியா ஏதாவது எழுதினால்தான் நீங்க படிப்பீங்க...பின்னூட்டம் எழுதுவீங்கன்னு.....நன்றி..
  அன்புடன் அருணா

  ReplyDelete
 3. Kudos to all those Great Guys!
  :)

  ReplyDelete
 4. Karthik said...
  //Kudos to all those Great Guys!
  :)//

  Rightly said karthik!
  anbudan aruna.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது