07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, October 12, 2008

நன்றியுடன் விடைபெறுகிறேன்.!

இந்தவாரத்தை நான்
ஏதோ ஓட்டிவிட்டேன்.
இந்தப்பதிவூடகத்தில்
என்னையும் மதித்து
அன்புசெய்யும் இன்னும்
சிலரும் இருக்கின்றார்கள்
சுட்டி கொடுத்தால்தான்
பார்க்கவேண்டும் என்பதில்லை!
இவர்களை நினைத்தாலே
உங்கள் கணிணியே
கொண்டுபோய்
இவர்களிடத்தில் விட்டுவிடும்!

அலட்டாமல் லந்து செய்யும் அபி அப்பா!
அமுக்கமாய் குசும்பு செய்யும் குசும்பன்!
அனாயாசமாய் எழுதி வரும் தம்பி!
சகஜமாகப்பழகிவரும் சஞ்சய்!
அனைவரையும் அண்ணனாக்கும் அப்துல்லா!
வெடிதேங்காய் சொல்லித்தரும் தமிழ்ப்பிரியன்!
மணமாலையில் மயங்கிக்கிடக்கும்
மங்களூர் சிவா!   :)

சிரிக்கவைத்து சேதி சொல்லும் நாமக்கல் சிபி!
எல்லாவற்றிலும் நன்மை செய்யும் இம்சை!
எப்பவாவது பதிவு போடும் ஜி3 !
பாடல்களால் மனம் நிரப்பும் கானா பிரபா!
விவசாயியாக வெளிச்சம்காட்டும் இளா!
தடக்கென்று உண்மைசொல்லும் தஞ்சாவூரான்!
நிற்காமல் கவிதை சொல்லும் நிலாரசிகன்!
நெடுங்கவிதை,கதைகள் சொல்லும் அருட்பெருங்கோ!
சிரித்துக்கொண்டே கவிதைக் கலாய்க்கும் காயத்ரி!
பதிவுலகத் தங்கச்சி ஸ்ரீமதி!
பயணப்பதிவின் முன்னோடி துளசி டீச்சர்!
வகுப்பறையின் ஒரே ஆசான் சுப்பையா வாத்தியார்!
எங்கள் ஊர் மணம் பரப்பும் புதுகைத்தென்றல்!
நிஜமாவே நல்லவரான நிஜமா நல்லவன்!
நீண்ட நாளாய் எழுதாமல் இருக்கும் பாசமலர்!
மக்களுக்காக சேவை செய்யும் மங்கை!
பண்புடன் அன்புகாட்டும் ஆசிப் மீரான்!
அசராமல் பதிவு போடும் கோவி.கண்ணன்!

என்று இத்தனைபேரின் பதிவுகள்
ஏதாவது ஒரு செய்தியை
எப்போதும் அள்ளித்தந்து
என்னை வளப்படுத்த
இவ்வுலகில் உதவுகிறது.


எல்லாப்பேச்சிலும் அன்புகாட்டி
எல்லோர் மனதிலும் 
இடமும் பிடித்து
வலைச்சரத்துக்கு
என்னை வரவழைத்து
வாரம் முழுதும்
வலைப்பூக்களில் என்னை 
வளைத்து வளைத்து
பதிவுகளை, பக்குவமாய்த்
தேடவைத்த
அன்புடை அய்யா
சீனா அவர்களுக்கு என்
அன்பார்ந்த நன்றிகள்!

இவர்தான் வருவாரென்று
முன்னமே தெரியாமலே
இவருக்கு ஒரு அறிமுக்த்தை
நான் தந்து முடித்துவிட்டேன்
வரும்வாரம் வந்திருந்து
வலைச்சரத்தை 
தொடுக்கப்போகும்
வளமான வால்பையனுக்கு
என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

13 comments:

 1. அம்மாடி.. எம்மாம்பேரு பதிவுகளை படிக்கிறாரு இவரு.. தங்கத் தலைவர் சுரேகாவால தான் நம்ம பொழப்பெல்லாம் ஓடுது :))

  ReplyDelete
 2. அதான்..
  சகஜமான சஞ்சய்ங்கிறது!
  :)

  ReplyDelete
 3. //அலட்டாமல் லந்து செய்யும் அபி அப்பா!//
  வயிறு குலுங்க சிரிக்கலாம் :)

  ReplyDelete
 4. //அமுக்கமாய் குசும்பு செய்யும் குசும்பன்!//

  இந்தாளோட குலத் தொழிலே குசும்பு தான்.. :)

  ReplyDelete
 5. அன்பின் சுரேகா,

  கடைசிலே விடை பெறும் பதிவுலே இவ்வளவு பதிவர்கKஐ அறிமுகம் ( ??) செஞ்சிட்டீங்க - அத்தனையும் முத்தான பதிவர்கள் - சத்தான பதிவுகள் தருகிறவர்கள்.

  நல்வாழ்த்துகள்

  நன்றி

  ReplyDelete
 6. சுரேகா அவர்களே,

  எமது வலைப்பதிவு பற்றிய அறிமுகத்தையும் செய்து வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

  கீழ்ப்படி வலைப்பதிவிலும் உங்களுக்கு நன்றி பகரப்பட்டுள்ளது.

  உங்களின் அறிமுகத்தை இன்றே படிக்கக் கிடைத்தது. இதற்கு முன்னரும் பல வலைப்பதிவுலக உறவுகள் எம்மை அறிமுகம் செய்து வைத்திருக்கின்றனர். அவர்களின் பதிவுகளை உடனுக்குடன் படிக்கத் தவறியதால் அவர்களுக்கு சரியான நேரங்களில் நன்றி கூற முடியாது போய்விட்டது.

  அவ்வாறு தவறவிடப்பட்ட அனைத்து உறவுகளுக்கும் சுரேகாவுடன் இணைத்து நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

  நட்புடன் வலைப்பதிவுலக உறவு.. குருவிகள்.

  http://www.kuruvikal.blogspot.com/

  ReplyDelete
 7. சுரேகா,

  எல்லோருடைய சிறப்புக்களையும் கவனித்து சிறப்பாக பாராட்டும் சுரேகா !

  என்பது விட்டுப் போச்சு !
  :)

  ReplyDelete
 8. அனைவரையும் அண்ணனாக்கும் அப்துல்லா//

  எனக்கு இங்க ஓரேஓரு மாம்ஸ்சும் இருக்காருண்ணே அவரு.....வேற யாரு நம்ப சஞ்சய்தான்

  ReplyDelete
 9. தங்கத் தலைவர் சுரேகாவால
  //

  இது புதுகைத்தென்றல் அக்கா சுரேகாவுக்குக் கொடுத்த பட்டம்

  ReplyDelete
 10. எல்லோருடைய சிறப்புக்களையும் கவனித்து சிறப்பாக பாராட்டும் சுரேகா !

  //

  கரெக்டுண்ணே :))

  ReplyDelete
 11. சுரேகாண்ணே நம்ப மேல நீங்க வச்சுருக்க அன்பை என்னான்னு சொல்லுவேன்.....ஓரு நூறாண்டு இரும் :)

  ReplyDelete
 12. ஒருவேளை உங்கள் அறிமுகத்தால் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்குமோ

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது