07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 28, 2008

குரு மரியாதை

கூகுளில் ஒரு நாள் எங்க ஊரான புதுகையை( புதுக்கோட்டை) பற்றிய சில விஷயங்களைத் தேடிக் கொண்டு இருந்தபோது என் கண்ணில் பட்டது புதுகைத் தென்றல் என்ற வார்த்தை. அட பேரு வித்யாசமா இருக்கேன்னு போய் பார்த்தா நம்ம புதுகைத் தென்றல் அக்காவோட வலைப்பூ. அப்ப ஃபிளாக்குன்னா என்னனெல்லாம் எனக்குத் தெரியாது. அது அவங்களோட வெப்சைட் என்றே நினைத்தேன். பின்னர் அவர்களுக்கு வந்திருந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்த போது அனைத்து முகவரிகளிலும் blogspot.com என்ற வார்த்தையை பார்த்த போது ஏதோ கொஞ்சம் புடிபட்ட மாதிரி இருந்துச்சு.


அப்புறம் அக்காவோட பதிவுகளுக்கு அனானியாக ஆங்கிலத்தில் பின்னூட்டம் இட்டேன். பின்னூட்டங்களின் இறுதியில் அப்துல்லான்னு போடுவேன்.பின்பு சற்றே முன்னேறி கூகிளில் அக்கவுண்ட் உருவாக்கி பெயரோடு பின்னூட்டம் இட்டேன். (கவுண்டர் ஓரு படத்தில நடந்து பின் சைக்கிள்,டூவீலர்,கார் என படிப்படியாக முன்னேறி பிச்சை கலெக்சன் செய்வாரே...அதுமாதிரி).அக்கா ஓரு முறை ஏன் நீங்களும் ஓரு வலைப்பூ துவங்கக்கூடாது என்று என்னுடைய ஓரு பின்னூட்டத்திற்கு பதில் போடப்போக அன்றைக்கு ஆரமித்தது ஃபிளாக் உலகத்திற்கு ஏழரை சனி. இப்படி நான் பதிவுலகிற்கு வர காரணமாக இருந்தவர் என் பதிவுலக குருநாதர் பாசமிகு அக்கா புதுகைத் தென்றல் அவர்கள். அந்தவகையில் அக்கா புதுகைத் தென்றல் அவர்கள் உங்கள் அனைவரின் கண்டனத்திற்கும் உரியவர்.

அக்கா அவர்கள் புதுக்கோட்டை நகரில் அனைவருமே அறிந்த மிக,மிக மதிப்பான குடும்பத்தில் பிறந்தவர் (வெறும் புகழ்ச்சி இல்லை சத்தியமாய் உண்மை). புதுக்கோட்டை நகரில் உள்ள புகழ் பெற்ற சுப்புராமய்யர் பள்ளி அவர்கள் மூதாதையரால் துவங்கப்பட்டு 120 ஆண்டுகள் கடந்து இன்றும் சிறப்போடு நடைபெற்று வரும் பள்ளி. போஸ் நகர்,மற்றும் காந்தி நகர் பகுதிகளில் வசிக்கும் வறுமையில் வாடும் தாழ்த்தப்பட்ட மக்கள் செலவின்றி தங்கள் பிள்ளைகளை தரமான முறையில் படிக்க வைக்கும் புகலிடமாக இன்றுவரை அந்தப் பள்ளி விளங்குகிறது.அக்காவின் அப்பா திரு.ரமணி சார் ப்துக்கோட்டை கூட்டுறவு வங்கியில் உயர் பதவியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.ரமணி சாரின் தயவால் லோன் வாங்கி வணிகத்தில் வெற்றி பெற்ற வணிகர்கள் எங்க ஊரில் அநேகம், எங்க அப்பா உட்பட.

அக்காவின் வலைப்பூ ஒரு காக்டெயில்.எந்த எல்லைக்கும் கட்டுப்படாது எல்லா சப்ஜெக்டிலும் வூடு கட்டி அடிப்பார் அரசியல் தவிர. கிட்டத்தட்ட 300 பதிவுகள் கடந்து தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கும் அக்காவின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு M.SC HUSBANDOLOY ங்கிற அவரோட இந்தப் பதிவுதான். அநேகமாக பழைய பதிவர்கள் அனைவரும் படித்த தொடராகத்தான் இருக்கும். புதிய பதிவர்கள் மறக்காம அந்தப் பதிவ ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு போங்க.

நாளைய எனது பதிவின் தலைப்பு " நான் பின்னூட்டம் போட பயப்படும் பதிவர்கள்"

51 comments:

 1. பதிவரைப்பற்றி ஒரு நல்ல பதிவு, அதுவும் ஒரு கல்வியாளர் பற்றி நன்றி அப்துல்லா

  ReplyDelete
 2. வாங்க குடுகுடுப்பையார்

  தங்களின் வருகைக்கு மிக நன்றி.

  :)

  ReplyDelete
 3. புதுகை தென்றல்,மின்னலாய் வலம் வருபவர் பிளாக் உலகில்!

  நொம்ப பெருமையா இருக்கு தங்கச்சியக்காவை நினைச்சா!

  வாழ்த்துக்கள் புதுகை பிளாக் மக்களுக்கு! :))))

  ReplyDelete
 4. அன்பின் அப்துல்லா

  குரு வணக்கம் செய்வது சிறந்த செயல். வலைப்பூ தொடங்குவதற்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த புதுகைத் தென்றலுக்கு நன்ற்றி தெரிவித்த விதம் பாராட்டுக்குரியது. அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகமும் - பதிவினில் நல்ல பதிவினிற்குச் சுட்டி கொடுத்த விதமும் நன்று.

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 5. ஒரு தகவல்

  வலைச்சர ஆசிரியர்களிலேயே அதிக பட்சமாக நாற்பத்து ஐந்து பதிவுகள் -ஏழே நாட்களில் பதிந்து - இன்னும் முறியடிக்கப்படாத வலைச்சர சாதனை புரிந்தவர் என்னும் பெருமைக்கு உரியவரும், உங்கள் குருவும் எங்கள் அன்புச் சகோதரியும் ஆகிய புதுகைத் தென்றல்தான்.

  ReplyDelete
 6. குருவுக்கு மரியாதை தருவது சிறப்பாக உள்ளது... :)

  ReplyDelete
 7. இதுமாதிரி இன்னும் எத்தனை பேரை பதிவுலகிற்குள் இழுத்து வந்து இருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் போட வேண்டியது தான்,, (இன்னொரு ஆள் இருக்காரே.. நிஜமா நல்லவன்னு சொல்லிக்கிட்டு.. அவரும் இதே அக்கா புராணம் தான் பாடுகிறார்.. ;)) )

  ReplyDelete
 8. //குருவுக்கு மரியாதை தருவது சிறப்பாக உள்ளது... //
  வழிமொழிகிறேன்

  ReplyDelete
 9. புதுகை தென்றலுக்கு வாழ்த்துக்கள் உங்களை வலைக்கு இழுத்து வந்ததற்கு.

  //
  cheena (சீனா) said...
  வலைச்சர ஆசிரியர்களிலேயே அதிக பட்சமாக நாற்பத்து ஐந்து பதிவுகள் -ஏழே நாட்களில் பதிந்து - இன்னும் முறியடிக்கப்படாத வலைச்சர சாதனை புரிந்தவர்
  //
  நீங்க வேற, ரீடர்ல அவங்களோட ஒரு பதிவை படிச்சிட்டு அப்புறம் பின்னூட்டம் போடலாம்னு விட்டுட்டு கொஞ்ச நேரம் கழிச்சி பாத்தா இன்னும் ரெண்டு பதிவு வந்துடும். நானே பலமுறை சொல்லியிருக்கேன் "நாங்க பின்னூட்டம் போடுற வேகத்தை விட நீங்க பதிவு போடுற வேகம் அதிகமா இருக்குன்னு" .. :)))

  அவங்களுக்கு மட்டும் எப்படி இவ்ளோ டைம் கிடைக்குதுன்னு கேக்குறவங்க இந்த பதிவை படிங்க : எனக்கு மட்டும் எப்படி சாத்தியம்?

  ReplyDelete
 10. அப்துல்லா, நன்றியை உரைத்திருக்கும் விதம் நன்று.

  தென்றலின் M.SC HUSBANDOLOGY படித்திட நீங்கள் தந்திருக்கும் சுட்டி நிறைவுப் பகுதிக்கு மட்டுமே இட்டுச் செல்கிறது. அதற்கு பதில் அவரது Labels-லிருந்து எடுத்த இந்தச் சுட்டியைக் கொடுத்தால் எல்லாப் பாகங்களையும் வாசிக்க ஏதுவாக இருக்கும்:
  http://pudugaithendral.blogspot.com/search/label/HUSBANDOLOGY

  நல்ல தொடர்:))! இன்றுதான் படித்தேன்.

  ReplyDelete
 11. புதுகைத்தென்றல், அப்துல்லா ரெண்டு பேருமே நல்ல பதிவர்கள்.

  ReplyDelete
 12. ஆஜர் தலீவா‌..

  நர்சிம்

  ReplyDelete
 13. அப்துல்லா என்னைப்பத்தின உண்மையெல்லாம் போட்டு உடைச்சிட்டீங்களே!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 14. ஹஸ்பண்டாலஜிக்கு சுட்டி கொடுத்ததால் தப்பிச்சீங்க. :)

  ReplyDelete
 15. ஒரு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவரின் அறிமுகம் ஒரு நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பதிவரின் மூலம்...

  ReplyDelete
 16. அண்ணே ....அக்கா பெருமையை நல்லா சொல்லி இருக்கீங்க...வலைச்சரம் சிறப்புடன் படைத்திட வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 17. இன்னைக்கு தான் அந்த தொடரை படிச்சு முடிச்சேன்.

  அண்ணே, நீங்க கலக்கிடீங்க. உங்க குருவுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. தென்றல் அக்காவுக்குதான் நாங்க எல்லாரும் நன்றி சொல்லணும்.
  இப்டி ஒரு நல்ல புள்ளைய எங்களுக்கு காமிச்சதுக்கு. ( யோவ் அண்ணா, இதயும் நீ ஏதாவது காமெடி பண்ணுனா , டிசம்பர் மாசம் அடி வாங்க ரெடியா இங்க வரலாம்.)

  ReplyDelete
 19. அய்யய்யோ நீங்க இங்கே வந்து ஸ்டால் போட்டுருக்கீங்களா? நா அங்கே கடையிலே போய் தேடீட்டிருந்தேன். சொல்றதில்லையா? வாழ்த்துகள் தல.. ஜமாய்ங்க.. (முந்தினதும் படிச்சாச்சு)

  ReplyDelete
 20. மாம்ஸ் வாழ்த்துக்கள்..

  தலைப்பை பார்த்ததும் என்னை பத்தி தான் எழுதி இருப்பிங்கன்னு நெனைச்சேன்.. :))

  ( புதுகைத் தென்றல் அக்காவுக்கு கண்டனங்கள்..:) )

  ReplyDelete
 21. ///(கவுண்டர் ஓரு படத்தில நடந்து பின் சைக்கிள்,டூவீலர்,கார் என படிப்படியாக முன்னேறி பிச்சை கலெக்சன் செய்வாரே...அதுமாதிரி).///

  அடிப்பின்றேளே அய்யா, கலக்கறேள் போங்கோ!

  ReplyDelete
 22. வாழ்க்கையை ரசனையோடு
  வாழும் ஒரு சகோதரியை
  இந்த இடத்தில் பாராட்டியே
  ஆகணும்..!

  ReplyDelete
 23. ஏதாவது சூப்பரா பண்ணி
  கைதட்டல் வாங்குறதுல
  அப்துல்லா கில்லாடி!

  அடிங்க அடிங்க!
  புதுகை மாவட்டமே
  உங்க பின்னால்
  அணி திரண்டு நிற்கிறது...

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. // தாமிரா said...
  அய்யய்யோ நீங்க இங்கே வந்து ஸ்டால் போட்டுருக்கீங்களா? நா அங்கே கடையிலே போய் தேடீட்டிருந்தேன். சொல்றதில்லையா? வாழ்த்துகள் தல.. ஜமாய்ங்க.. (முந்தினதும் படிச்சாச்சு)
  //

  தாமிரா.. அப்ப அன்னைக்கு அப்துல்லா நாம கான்ஃப்ரென்ஸ் கால் பேசிக்கிட்டிருக்கறப்போ நீங்க, ரெண்டா இருந்தீங்களா?

  அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 25. //சுரேகா.. said...
  ஏதாவது சூப்பரா பண்ணி
  கைதட்டல் வாங்குறதுல
  அப்துல்லா கில்லாடி!

  அடிங்க அடிங்க!
  புதுகை மாவட்டமே
  உங்க பின்னால்
  அணி திரண்டு நிற்கிறது...

  வாழ்த்துக்கள்!
  //


  தம்பி..

  இப்படித்தான் மாட்டிவிடுவாங்க..

  சாஆஆஆஆஆஅக்கிரத!

  ReplyDelete
 26. ஹி ஹி பாவம்ணே இவங்கெல்லாம். கொஞ்ச நாள் முன்னதான் நான் அம்பி அண்ணனை போட்டுக்கொடுத்தேன், இப்போ நீங்க இவங்களை போட்டுக்கொடுத்துட்டீங்களா:):):)

  ReplyDelete
 27. ரைட்டு நீங்க பிளாக் எழுத வந்ததுக்கு காரணம் யாருன்னு சொல்லிட்டீங்கள்ள, கவலைய விடுங்க பாஸ் நாங்க பாத்துக்கிறோம்:))

  ReplyDelete
 28. பொடியன்-|-SanJai said...
  மாம்ஸ் வாழ்த்துக்கள்..

  தலைப்பை பார்த்ததும் என்னை பத்தி தான் எழுதி இருப்பிங்கன்னு நெனைச்சேன்.. :))//

  மாம்ஸ் உங்களுக்கு ரொம்ப தன் நம்பிக்கை அதிகம்!!!

  ReplyDelete
 29. வாங்க ஆயில்யன் அண்ணே

  வருகைக்கும் புதுகை பிளாக் மக்களுக்கு நீங்க சொன்ன வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)

  ReplyDelete
 30. வாங்க சீனா அய்யா

  ஏத்தி விட்ட ஏணியை எப்பவும் மறக்க கூடாதுல்ல??

  ReplyDelete
 31. இன்னும் முறியடிக்கப்படாத வலைச்சர சாதனை புரிந்தவர் என்னும் பெருமைக்கு உரியவரும், உங்கள் குருவும் எங்கள் அன்புச் சகோதரியும் ஆகிய புதுகைத் தென்றல்தான்.
  //

  அநேகமாக யாராலும் முறிக்கப்பட முடியாத சாதனையாகத்தான் இருக்கும் :)

  ReplyDelete
 32. வாங்க தமிழ்பிரியன் அண்ணே!

  அக்காவால் வந்த பதிவர்களின் நீளம் இன்னும் இருக்கு...

  ReplyDelete
 33. வாங்க பாபு அண்ணே
  வருகைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 34. வாங்க வெண்பூ அண்ணே

  //நாங்க பின்னூட்டம் போடுற வேகத்தை விட நீங்க பதிவு போடுற வேகம் அதிகமா இருக்குன்னு//

  அவங்கள்லாம் ரியல் ரவுடிண்ணே :)

  ReplyDelete
 35. வாங்க இராமலெஷ்மி அக்கா

  //அவரது Labels-லிருந்து எடுத்த இந்தச் சுட்டியைக் கொடுத்தால் எல்லாப் பாகங்களையும் வாசிக்க ஏதுவாக இருக்கும்:
  //

  செஞ்சுட்டேன்கா :)

  ReplyDelete
 36. வாங்க கயல்விழி

  அக்காவோட நம்பளயும் சேத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி :)

  ReplyDelete
 37. வாங்க நர்சிம் அண்ணே

  ஆதரித்து ஆஜர் போட்ட உங்களுக்கு மிக்க நன்றி :)

  ReplyDelete
 38. வாங்க மை டியர் குருஜி

  //அப்துல்லா என்னைப்பத்தின உண்மையெல்லாம் போட்டு உடைச்சிட்டீங்களே!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  //

  உங்களைப் பற்றிய உண்மைகளைப் போட்டு உடைக்க நீங்க என்ன மும்பை டானா???ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 39. புதுகைத் தென்றல் said...
  ஹஸ்பண்டாலஜிக்கு சுட்டி கொடுத்ததால் தப்பிச்சீங்க
  //

  என்ன செஞ்சா அக்காகிட்ட தப்பிக்கலாம்னு நாங்க பி.எச்.டியே பண்ணிருக்கோம் :)))))))

  ReplyDelete
 40. வாங்க மகேஷ் அண்ணே

  வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 41. வாங்க நிஜமா நல்லவன் அண்ணே

  //அண்ணே ....அக்கா பெருமையை நல்லா சொல்லி இருக்கீங்க...வலைச்சரம் சிறப்புடன் படைத்திட வாழ்த்துக்கள்..!

  //

  உங்களைக் கூட அக்காதான பதிவு ஆரமிக்க வச்சாங்க..

  ReplyDelete
 42. வாங்க எஸ்கே அண்ணே

  //இன்னைக்கு தான் அந்த தொடரை படிச்சு முடிச்சேன்.

  அண்ணே, நீங்க கலக்கிடீங்க. உங்க குருவுக்கும் வாழ்த்துக்கள்.

  //

  நன்றிண்ணே :)

  ReplyDelete
 43. வாங்க ஜோசப் அண்னே

  //இப்டி ஒரு நல்ல புள்ளைய எங்களுக்கு காமிச்சதுக்கு//

  எங்க அண்ணே அந்தப் புள்ள?

  ReplyDelete
 44. வாங்க தாமிரா அண்ணே

  //அய்யய்யோ நீங்க இங்கே வந்து ஸ்டால் போட்டுருக்கீங்களா? நா அங்கே கடையிலே போய் தேடீட்டிருந்தேன். சொல்றதில்லையா? வாழ்த்துகள் தல.. ஜமாய்ங்க.. (முந்தினதும் படிச்சாச்சு)

  //

  இங்க திருவிழாவுக்கு ஒரு வாரம் கடை போட்டு இருக்கேன்ணே :)))

  ReplyDelete
 45. வாங்க சஞ்சய் மாம்ஸ்

  //மாம்ஸ் வாழ்த்துக்கள்..

  தலைப்பை பார்த்ததும் என்னை பத்தி தான் எழுதி இருப்பிங்கன்னு நெனைச்சேன்.. :))

  //

  நெனப்பு எப்பவுமே பொழப்ப கெடுக்கும்டி

  //
  ( புதுகைத் தென்றல் அக்காவுக்கு கண்டனங்கள்..:) )
  //


  நான் சொன்னதக் கேக்குற ஒரே ஆளு நீதாம்பா :)

  ReplyDelete
 46. வாங்க மோகன் கந்தசாமி அண்ணே

  //அடிப்பின்றேளே அய்யா, கலக்கறேள் போங்கோ!
  //


  நல்லாச் சொன்னேள்..நன்றின்ணா :)

  ReplyDelete
 47. வாங்க சுரேகா அண்ணே

  //வாழ்க்கையை ரசனையோடு
  வாழும் ஒரு சகோதரியை
  இந்த இடத்தில் பாராட்டியே
  ஆகணும்..!

  //

  ஆமாண்ணே...நம்ப அக்காகிட்ட கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்குன்ணே :)

  ReplyDelete
 48. வாங்க பரிசல் அண்ணே

  //தாமிரா.. அப்ப அன்னைக்கு அப்துல்லா நாம கான்ஃப்ரென்ஸ் கால் பேசிக்கிட்டிருக்கறப்போ நீங்க, ரெண்டா இருந்தீங்களா?
  //

  தீபாவளிக்கு முதல் நான் ராத்திரி நம்ப புள்ளைக எப்படி இருக்கும்னு உங்களுக்குத் தெரியாதாண்ணே :)))))

  ReplyDelete
 49. அடிங்க அடிங்க!
  புதுகை மாவட்டமே
  உங்க பின்னால்
  அணி திரண்டு நிற்கிறது...

  வாழ்த்துக்கள்!
  //


  தம்பி..

  இப்படித்தான் மாட்டிவிடுவாங்க..

  சாஆஆஆஆஆஅக்கிரத!

  //

  பி கேர்ஃபுல்...
  நான் என்னச் சொன்னேன் :)))

  ReplyDelete
 50. //
  இப்படி நான் பதிவுலகிற்கு வர காரணமாக இருந்தவர் என் பதிவுலக குருநாதர் பாசமிகு அக்கா புதுகைத் தென்றல் அவர்கள். அந்தவகையில் அக்கா புதுகைத் தென்றல் அவர்கள் உங்கள் அனைவரின் கண்டனத்திற்கும் உரியவர்.
  //

  :))))))))))))))))))))))))

  கண்டனங்கள்!!!!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது