07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 6, 2008

வணக்கம் வலைச்சரமே!

நண்பர்களுக்கு வணக்கம்.
மேடையில் பல்வேறு விற்பன்னர்கள் தங்கள் திறமைகாட்டுவதை ரசித்து, வாய்பிளந்து வேடிக்கை பார்ப்பவனை திடீரென்று அழைத்து நீயும் வந்து மேடையில் நில்! ஏதாவது செய் !என்று சொன்னால் எப்படி ஒரு கேரி அடிக்குமோ அப்படித்தான் இருந்தது , சீனா சார் முதலில் என்னை வலைச்சர ஆசிரியராகச் சொன்னபோது!
சிறுவயதிலிருந்தே - எனக்கு நானே சொல்லிக்கொண்ட -எனக்குள் ஊறிப்போன ஒரு தத்துவம் உண்டு !
வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் கதவைத்தட்டும் ! அப்போது கதவைத்திறக்கவில்லையென்றால்..சும்மா செல்லாது. வெளித்தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றுவிடும். பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கும் ஆப்புதான்!
இதை மனதில் கொண்டுதான்...உடனே ஒத்துக்கொண்டேன்.
வலைச்சரம் என்றால் , நமக்குப்பிடித்த பதிவுகளையும், பதிவர்களையும் அறிமுகப்படுத்தவேண்டும் அவ்வளவுதானே! என்று மிகச்சாதாரணமாக நினைத்துக்கொண்டு நான் அடிக்கடி படிக்கும் பதிவுகள், மற்றும் வித்யாசமாக எழுதும் பதிவர்களின் பதிவுகளை ஒரு பட்டியலிட்டு, கையில் வைத்துக்கொண்டு -நேரம் கிடைக்கும்போதெல்லாம்- எதற்கும் முதலில் வலைச்சரத்தையே மேய்வோம் என்று மேய்ந்தபோதுதான் தெரியவந்தது..!
நான் எழுதிவைத்திருக்கும் பதிவர்களில் ஏறத்தாழ எல்லோரையுமே வலைச்சர ஆசிரியர்கள் அறிமுகப்படுத்திவிட்டார்கள் !
ஆமாம். ! இனி வலைப்பூ உலகத்தை புதிதாக மேய்ந்துதான் மேலும் ஒரு சில பதிவர்களையாவது அறிமுகப்படுத்தவேண்டும் என்ற நிலை வந்தபோது, கொஞ்சம் டரியல் ஆகிவிட்டேன். இருந்தாலும் முடிந்தவரை சமாளித்து இந்த ஒருவாரத்தில் குறைந்தபட்சம் 10 நல்ல பதிவுகளையாவது உங்களுக்கு அறிமுகப்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையில் காலெடுத்து வைக்கிறேன். அந்தப் பத்துபேரும் ஏற்கனவே உங்களுக்குத்தெரிந்திருந்தால்....என்னைத்திட்டாம, அய்யோ பாவம் இந்த ஆ'சிறியன்' என்று மன்னித்து விட்டுவிடுங்கள் !என்னைப்பற்றி சொல்லவேண்டுமென்றால்.....இங்கே பாருங்களேன்.!

20 comments:

 1. வாங்க சுரேகா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. ///வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் கதவைத்தட்டும் ! அப்போது கதவைத்திறக்கவில்லையென்றால்..சும்மா செல்லாது. வெளித்தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றுவிடும். பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கும் ஆப்புதான்///
  தத்துவத்துக்கு நன்றி!

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சுரேகா!!!

  ReplyDelete
 4. வாழ்த்துகள் சுரேகா !

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் சுரேகா.. வெழுத்துக்கட்டுங்க..

  ReplyDelete
 6. நல்வரவு சுரேகா.

  கலக்குங்க:-)))))

  ReplyDelete
 7. சுரேகா அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள் :))

  ReplyDelete
 8. வாங்க தமிழ் பிரியன்..

  வாழ்த்துக்கு நன்றிங்க

  நன்றிக்கும் நன்றிங்க :)

  ReplyDelete
 9. //விஜய் ஆனந்த் said...
  வாழ்த்துக்கள் சுரேகா!!!//


  உங்கள் அன்புக்கு நன்றிங்க !

  ReplyDelete
 10. //கோவி.கண்ணன் said...
  வாழ்த்துகள் சுரேகா ! //


  நன்றி அண்ணாத்த!

  ReplyDelete
 11. வாங்க சுரேகா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. ///வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் கதவைத்தட்டும் ! அப்போது கதவைத்திறக்கவில்லையென்றால்..சும்மா செல்லாது. வெளித்தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றுவிடும். பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கும் ஆப்புதான்///


  super!

  ReplyDelete
 13. வாங்க தம்பீ வாங்க! ஏன் இப்படி பொலம்பித் தள்ளுறீங்க, உங்களுக்கு பிடிச்சவங்களை சும்மா அறிமுகப் படுத்தி வைங்க, அது எற்கெனவே குறிப்பிடப் பட்டிருந்தாலும்.

  அவர்களின் எத்தனையோ நல்ல கவனிக்கபடாத பதிவுகளும் இருக்குமில்லையா அவைகளைத் தோண்டி லிங்க் கொடுங்க, படிப்போம்.

  பொறவு அடிச்சி விளையாடுங்க இந்த வாரத்தை. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 14. வாங்க சுரேகா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் அண்ணே...

  ReplyDelete
 17. சுரேகா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. வெளுத்துக்கட்டுங்க..

  ReplyDelete
 19. ///வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் கதவைத்தட்டும் ! அப்போது கதவைத்திறக்கவில்லையென்றால்..சும்மா செல்லாது. வெளித்தாழ்ப்பாள் போட்டுவிட்டு சென்றுவிடும். பிறகு அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கும் ஆப்புதான்///

  :)))))))))))))))))))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது