போற போக்குல....
➦➠ by:
சுரேகா
இன்னும் 17 மணி நேரம் இருக்கு ! வலைச்சர ஆசிரியர் பணியை ஒப்படைக்க!
அதுக்குள்ள முடிஞ்சவரைக்கும் இன்னும் சிலரை சொல்லிடலாமேன்னு தோணிச்சு!
இவர் சென்ற ஆகஸ்டில்தான் எழுத ஆரம்பித்திருக்கிறார். முழுக்க முழுக்க
தொழில்நுட்பப்பதிவாகப் போடுகிறார். அதுவும் இணைய உலவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
குறைந்த வேகக்கணிணிகளுக்காக வெளியிடப்பட்டுள்ள TINY XP பற்றி மிகச்சிறப்பாக இங்கு விளக்கியுள்ளார் !
இவரது பதிவுகளைப்படித்துக்கொண்டே வரும்போது, ஒரு கணிப்பொறி பயனாளருக்கும், ஒரு கால்சென் ட்டர் ஊழியருக்கும் இடையில் நடக்கும் உரையாடலாக இந்தப்பதிவை எழுதி ஜாலியாக சிரிக்கவைக்கிறார்.
உங்கள் blogஐ கை கழுவ 10 வழிமுறைகள் என்ற இந்தப்பதிவைப் படித்தபின், நம் பதிவுகள் இந்த அளவுகோலுக்குள் வருகின்றதா என நம்மையறியாமல் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறோம். மிகவும் புரியக்கூடியவகையில் எழுதிவரும் இந்தப்பதிவர், தமிழ் வலையுலகத்துக்கிடைத்தது நமக்கெல்லாம் நன்மை பயப்பதாக உள்ளது.
இன்னும் பல்வேறு தொழில்நுட்பப்பதிவுகளை எழுதி ஒரு கலக்குக்க்லக்க இவரை வாழ்த்துவோம்.
அடுத்து...
|
|
//உங்கள் blogஐ கை கழுவ 10 வழிமுறைகள் என்ற இந்தப்பதிவைப் படித்தபின்,//
ReplyDeleteஅதில் என்னை கவர்ந்த ஒரு வாசகம்
சோடானு சொல்லி கூப்பிட்டு ஓடி வாறவரனுக்கு பச்ச தண்ணிய குடுத்தா, இன்னாரு நாள் நாம உண்மையா சோடா குடுதடதாலும் ஏன்னும் பாக்க மாட்டானுக
--
இவர் இப்படி நெற்றியில் அடிக்கும் படி எழுதியும் பலர் புரிந்து கொள்ளவில்லையே என்று எனக்கு ஆச்சரியம் தான்
அன்பின் சுரேகா - நல்ல பதிவர்களை அறிமுகப் படுத்தியது நன்று
ReplyDeleteமி்க்க நன்றி சுரேகா அவர்களே!!!
ReplyDeleteவிளையாட்டாக ஆரம்பித்தேன். ஆனால் நீங்கள் விமர்சிக்கும் அளவிற்கெல்லாம் எனது பதிவில் என்ன இருக்கிறதென தெரியவில்லை. ஆனால் உங்கள் அறிமுகமும் விமர்சனமும் பார்க்கையில் உண்மையாக மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க மிக்க மிக்க நன்றி அனைவருக்கும்.
சுபாஷ்