07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, October 29, 2008

நமீதாவை நேரில் பார்த்து பேசினேன்

இனிய வலைச் சொந்தங்களே,


இன்று "நான் பின்னூட்டம் போட பயப்படும் பதிவர்கள்" என்ற தலைப்பில் வலைச்சரத்தில் எழுதுவதாக இருந்தேன். ஆனால் அதை விட முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி இன்றே எழுத வேண்டிய தேவை ஏற்பட்டதால் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

சென்னை லயோலா கல்லூரியில் பார்வையற்ற மாணவர்களுக்கு பரிட்சை எழுத உதவியாக ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அந்த மாணவர்களுக்கு நாம் கேள்வித் தாளைப் படித்துக் காட்ட வேண்டும். அவர்கள் சொல்லும் பதிலை நாம் எழுத வேண்டும். நமக்கு எழுதப் படிக்க தெரியவும் , 3 மணி நேரம் செலவளிக்க மனமும் இருந்தால் போதும். ஒரே ஒருமுறை எழுதிப் பாருங்கள் சிகிரெட், மது போல இதுக்கும் நீங்கள் அடிமை ஆகாவிட்டால் சத்தியமாக நான் பதிவு எழுதுவதையே விட்டு விடுகிறேன்.


மாணவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்காக பரிட்சை எழுத முன் வருபவர்கள் மிகவும் குறைவு. இதனால் அந்த மாணவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் சொல்லில் வடிக்க இயலாதது. சென்னையில் இருந்து இந்தப் பதிவைப் படிக்கும் அனைவருக்கும் என் அன்பான வேண்டுகோள் என்னவென்றால் உங்களால் முடியாவிட்டாலும் வீட்டில் சீரியல் பார்த்து பொழுதைக் கழிக்கும் உங்கள் தங்கமணிகளையோ அல்லது சகோதரிகளையோ அனுப்பி வைங்க. இதுபற்றிய மேலும் விபரங்களுக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் திரு.மேத்யூ அவர்களை 9444223141 என்ற எண்னில் தொடர்பு கொள்ளுங்கள்.


இது நாம் அவர்களுக்குச் செய்யும் உதவி அல்ல. இறைவனுக்கு நாம் செய்யும் கடமை.


டிஸ்கி 1 : ஒரு நல்ல விஷயத்தை எல்லோருக்கும் சொல்றதுன்னா இந்த மாதிரி கெட்ட தலைப்பு வச்சுத்தான் எல்லாரையும் கூப்பிட வேண்டி இருக்கு :)


டிஸ்கி 2: இந்தப் பதிவு வலைச்சரத்தின் 775 வது பதிவு. ஒரு நல்ல விஷயத்தை அனைவருக்கும் கொண்டு சென்ற மனநிறைவை உணர்கிறேன்.

76 comments:

 1. ரொம்ப நல்ல விஷயம் அண்ணே. உங்களின் முயற்சியால் பலர் உதவ முன்வந்தால் மிகவும் மகிழ்ச்சி:):):) அனைத்தும் நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்:):):)

  ReplyDelete
 2. வலைச்சரத்தின் 775வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :):):)

  ReplyDelete
 3. //டிஸ்கி 1 : ஒரு நல்ல விஷயத்தை எல்லோருக்கும் சொல்றதுன்னா இந்த மாதிரி கெட்ட தலைப்பு வச்சுத்தான் எல்லாரையும் கூப்பிட வேண்டி இருக்கு :)//

  நாலு பேருக்கு நல்லது செய்யனும் என்றால் எதுவும் தப்பில்லே, வேலு நாயகருக்கு மணி ரத்னம் வசனம் எழுதி கொடுத்து இருக்கார்.

  :)

  ReplyDelete
 4. //ஒரு நல்ல விஷயத்தை எல்லோருக்கும் சொல்றதுன்னா இந்த மாதிரி கெட்ட தலைப்பு வச்சுத்தான் எல்லாரையும் கூப்பிட வேண்டி இருக்கு :)//

  :(

  ReplyDelete
 5. நல்ல வேளை இன்னும் டெரரா பதிவு டைட்டில் வைக்காம போனீங்களே :)))

  ReplyDelete
 6. தலைப்ப பார்த்துட்டு படிக்காம போயிட்டேன்.. அப்புறன் நண்பர் ஒருவர் அலைபேசி சொன்னவுடன் வந்தேன்..

  ஸப்பா.. எஸ்கேப்

  ReplyDelete
 7. நமீதாவைப் பற்றிப் படிக்க வருபவர்கள் இந்த மாதிரி நல்ல விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குவார்கள் என நம்பும் உங்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
  அன்புடன் அருணா

  ReplyDelete
 8. மிக அவசியமான பதிவு.. மினிமம் ஒரு 5 பேரையாவது ஏற்பாடு பண்ணனும்.. பண்றேன்..

  பதிவுக்கு நன்றி!!

  நர்சிம்

  ReplyDelete
 9. நல்ல ஒரு முயற்சி அண்ணா...

  ReplyDelete
 10. //Aruna said...

  நமீதாவைப் பற்றிப் படிக்க வருபவர்கள் இந்த மாதிரி நல்ல விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குவார்கள் என நம்பும் உங்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
  அன்புடன் அருணா
  //

  தப்பு அருணா.

  நமீதாவை ரசிக்கிறவர்கள் நல்லவர்களாக இருக்கமுடியாது என்ற தொனி இருக்கிறது உங்கள் பின்னூட்டத்தில்!

  ReplyDelete
 11. அப்துல்லா..

  நண்பர் sk மூலமாகத்தான் நாம் இருவருமே இது பற்றி அறிந்தோம் என நினைக்கிறேன்.

  எல்லோருக்கும் உதவும் மனம் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கும். அதை செயலில் கொண்டுவர உங்களைப் போன்ற சிலரால்தான் முடிகிறது!

  ReplyDelete
 12. migavum nalla padhivu Abdhullah.
  India varum podhu naanum muyarsikkiren.. :)

  ReplyDelete
 13. //டிஸ்கி 1 : ஒரு நல்ல விஷயத்தை எல்லோருக்கும் சொல்றதுன்னா இந்த மாதிரி கெட்ட தலைப்பு வச்சுத்தான் எல்லாரையும் கூப்பிட வேண்டி இருக்கு //

  சதியமாக தலைப்பை பார்த்துவிட்டு என்னடா அப்த்துல்லா இப்படி எழுதி இருக்காரே ஏதும் மொக்கையாகதான் இருக்கும் என்று வந்தேன், வந்து பார்த்தால் வலைச்சர ஆசிரியர் நீங்க.

  வாழ்த்துக்கள்!!!!

  (நான் ஊரில் இருந்தாலும் இதுபோல் செயல்களில் இறங்குவது அந்த பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல)

  என் பேப்ரையே என்னால் ஒழுங்கா எழுதி பாஸ் செய்யாத படுபாவி நான்:)!!!

  நல்லா படிச்ச நண்பர்கள் இருக்கிறார்கள் சொல்கிறேன் அவர்களிடமும்.

  ReplyDelete
 14. தலைப்பை பார்த்துதான் இங்கு வந்தேன் என்ற உண்மைய இங்கு வருத்தத்தோடு ஒத்துக்கிறேன், ஆனால் அருணா பின்னூட்டத்தில் இருந்து முரண்படுகிறேன்.

  ReplyDelete
 15. தலைவி பெயரை போட்டு விட்டு ஒரு படம் கூட போடாததைக் கண்டிக்கலாம் என்றுதான் வந்தேன்.. நல்ல விஷயத்திற்கு தலைவியின் பெயர் பயன்பட்டுள்ளது என்பதால் சங்கம் உங்களை விட்டுவிடுகின்றது..:)

  ReplyDelete
 16. /// rapp said...

  ரொம்ப நல்ல விஷயம் அண்ணே. உங்களின் முயற்சியால் பலர் உதவ முன்வந்தால் மிகவும் மகிழ்ச்சி:):):) அனைத்தும் நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்:):):)///
  அக்காவுக்கு ஒரு ரிப்பீட்ட்ட்ட்டே போட்டுக்கிறேன்.. :)

  ReplyDelete
 17. அட இதை இப்படியும் சொல்ல முடியுமா

  நான் இப்படி எழுதி என்னடா பண்றதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். :-)

  http://polambifying.blogspot.com/2008/10/scribes-again-need-volunteers.html

  கலக்கல் அப்துல்லா அண்ணே :-)

  ReplyDelete
 18. நானே இது பற்றி எழுதலாம் என்று இருந்தேன். நீங்கள் எழுதியது அதுவும் இங்கே எழுதியது, நிச்சயம் பலருக்கு தெரியவரும் என்று நினைக்கிறேன். நன்றி.
  :)

  ReplyDelete
 19. இதற்கு மட்டுமாவது சென்னையில் இல்லாமல் போய்விட்டேனேன்னு இருக்கு.

  :(

  ReplyDelete
 20. நல்ல விசயத்தை நாலு பேருக்கு தெரியும் இடத்தில் நாலு பேரு பார்க்கும் தலைப்புடன் போட்டதற்கு பாராட்டுக்கள்.

  ஷகிலா பெயரை போட்டிருந்தால் இன்னும் பலபேர் பார்வையில் பட்டிருக்கும் என்பது என் கருத்து.

  ReplyDelete
 21. பயனுள்ள பதிவு! உதவியாய் அமைந்தால் நன்று!

  ReplyDelete
 22. உங்களைப் பாக்க ரொம்ப பொறாமையாவும், பெருமையாவும் இருக்கு....

  ReplyDelete
 23. //Aruna said...

  நமீதாவைப் பற்றிப் படிக்க வருபவர்கள் இந்த மாதிரி நல்ல விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குவார்கள் என நம்பும் உங்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
  அன்புடன் அருணா
  //

  சிலநேரம் நமிதா மேட்டருனு நல்லவங்க ஒதுங்க்கி படிக்காம போய்ட்டா ?

  http://tamilkudimagan.blogspot.com/

  ReplyDelete
 24. hi
  Spoke to Mathew, will pass on the info to my frenz in chennai and try to organize minimum 5 people for him, also promised him to take 1-2 exams during my visit to chennai in Jan 09.
  thnaks for sharing the info
  Endrendrum Anbudan
  Sriram, Boston USA

  ReplyDelete
 25. நல்ல தகவல் உள்ள பதிவு. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
 26. தல குஜால் பதிவு எழுதிருக்குதுனு மகிழ்ச்சியோட ஆவலா வந்தா அதைவிடவும் நூறு மடங்கு மகிழ்ச்சியை தந்த பதிவு. பெயரை பதிந்து கொள்ள கொஞ்சம் பயமாத்தான் இருக்குது, நம்மால ஒரு நல்ல ஸ்டூடண்டோட மார்க் குறைஞ்சுடக்கூடாதே.!

  ReplyDelete
 27. பகிர்தலுக்கு நன்றி,

  நிச்சயம் இதை பற்றி என் நண்பர்களுடன் சொல்லுவேன்...

  நானும் அந்த கைபெசியை தொட்ர்பு கொல்கிறேன்

  ReplyDelete
 28. ஆகா அப்துல்லா பதிவு என்பதாலோ அல்லது நமீதா பற்றிய பதிவு என்றதாலோ - தெரியவில்லை - ஏன் இத்தனை மறுமொழிகள் என்று.

  இருக்கட்டும் . இதே செய்தியை நானும் என்னுடைய வலைப்பூவினில் பதிந்தேன். ஏன் யாருமே எட்டிப்பார்க்கவில்லை ?

  http://cheenakay.blogspot.com/2008/10/blog-post.html

  ஆமா அதென்ன கெட்ட தலைப்பு - கடுங் கண்டனங்கள்.

  நமீதா சம்பந்தப்பட்டது என்றாலே கெட்ட தலைப்பா ? கிளுகிளூ / கிசுகிசு/ மனதினை இழுக்கும் / சூடான - என்றெல்லாம் கூறி இருக்கலாமே !


  ம்ம்ம்ம்ம்ம் - ஏதோ நடந்தா சரி

  ReplyDelete
 29. அன்பின் அப்துல்லா !

  775 வது பதிவினிற்கு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 30. உங்களை மாதிரி சில மனிதர்களால் தான் இன்னும் மழை பொழிகிறது, வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 31. நல்ல செய்தி,நீங்கள் சொல்வது போல் பரீட்சை எழுத ஆள் தேவை என்றால் யாரும் வரமாட்டார்கள்.

  நன்றி உங்களுக்கும், நமீதாவுக்கும்

  ReplyDelete
 32. நோய் நொடியின்றி நீ பல்லாண்டு வாழ்ந்து எல்லார்க்கும் உதவ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  என்ன தான் காரணம் சொன்னாலும், இந்தப் பதிவுக்கு இப்படி ஒரு தலைப்ப என்னால ஏத்துக்க முடியலண்ணே.

  ReplyDelete
 33. நல்ல பதிவு.. மேத்யூ நம்பர் உபயோகப் படும் மாமா..

  கோவையில் இது போல் உதவி தேவைப்பட்டால் உடனே செய்ய நான் தயார்.

  இது போன்ற உதவிகளுக்கக தனி வலைப்பூ கூட ஆரம்பிக்கலாம். உபயோகமா இருக்கும்.

  சங்கம் விஷஸ் மாதிரி சங்கம் ஹெல்ப்ஸ் :)

  தலைப்பு :))

  ReplyDelete
 34. வா ராப்,

  //me the first//

  ஆமா நீ தான் ஃபர்ஸ்டு :)

  ReplyDelete
 35. அனைத்தும் நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்:):):)

  //

  மிக்க நன்றி

  ReplyDelete
 36. //வலைச்சரத்தின் 775வது பதிவுக்கு வாழ்த்துக்கள் :):):)

  //


  இதுக்கும் நன்றி

  ReplyDelete
 37. வாங்க கோவி அண்ணே!

  //நாலு பேருக்கு நல்லது செய்யனும் என்றால் எதுவும் தப்பில்லே, வேலு நாயகருக்கு மணி ரத்னம் வசனம் எழுதி கொடுத்து இருக்கார்
  //

  அப்படி மணிரத்னம் சொல்லி இருக்காருன்னு நம்ப கோவி அண்ணனும் சொல்லி இருக்காரு :)

  ReplyDelete
 38. வாங்க ஆயில்யன் அண்ணே

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 39. நல்ல வேளை இன்னும் டெரரா பதிவு டைட்டில் வைக்காம போனீங்களே :)))

  //

  நினைச்சேன் ஆனா நீங்க ரொம்ப பயந்துருவீங்களேன்னு விட்டுட்டேன் ஹி...ஹி...ஹி..

  ReplyDelete
 40. வாங்க கார்க்கி அண்ணே

  //தலைப்ப பார்த்துட்டு படிக்காம போயிட்டேன்.. அப்புறன் நண்பர் ஒருவர் அலைபேசி சொன்னவுடன் வந்தேன்..

  ஸப்பா.. எஸ்கேப்

  //

  ஆமா ஏன் நீங்க எப்பவுமே நமிதாவை உங்களுக்கு மட்டுமே குத்தகைக்கு விட்டுட்ட மாதிரி வேறு யாராவது எழுதுனா சண்டைக்கு வர்றீங்க :))))

  ReplyDelete
 41. வாங்க அருணா அக்கா

  //நமீதாவைப் பற்றிப் படிக்க வருபவர்கள் இந்த மாதிரி நல்ல விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்குவார்கள் என நம்பும் உங்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
  அன்புடன் அருணா
  //

  அக்கா எனக்கு கூட நமிதாவ விடிக்கும் ஹி...ஹி...ஹி...

  ReplyDelete
 42. வாங்க நர்சிம்

  //மிக அவசியமான பதிவு.. மினிமம் ஒரு 5 பேரையாவது ஏற்பாடு பண்ணனும்.. பண்றேன்//

  அண்ணே உங்க கெப்பாசிட்டி எனக்குத் தெரியும்ணே. 5 பேரில்லை இன்னும் அதிக பேரோட வருவீங்க

  ReplyDelete
 43. வாங்க இவன்

  மிக்க நன்றி

  ReplyDelete
 44. வாங்க பரிசல் அண்ணே

  //தப்பு அருணா.

  நமீதாவை ரசிக்கிறவர்கள் நல்லவர்களாக இருக்கமுடியாது என்ற தொனி இருக்கிறது உங்கள் பின்னூட்டத்தில்

  //

  அதே அதே :))))

  ReplyDelete
 45. வாங்க ரிஷான் செரீப் அண்ணே!

  இந்தியா வரும்போது அவசியம் செய்ங்கண்ணே

  ReplyDelete
 46. வாங்க குசும்பன் அண்ணே

  //
  சதியமாக தலைப்பை பார்த்துவிட்டு என்னடா அப்த்துல்லா இப்படி எழுதி இருக்காரே ஏதும் மொக்கையாகதான் இருக்கும் என்று வந்தேன், வந்து பார்த்தால் வலைச்சர ஆசிரியர் நீங்க
  //

  இன்ன்னைக்கு மட்டும் என் ஒர்ஜினல் இமேஜை மாத்திக்கிட்டேன் ஹி...ஹி...ஹி..

  ReplyDelete
 47. வாங்க தமிழ்பிரியன் அண்ணே

  தலைவி படத்த இந்த ஸ்டால்ல போடவேண்டாம். நம்ப மெயின் கடையில போட்டுருவோம் :)

  ReplyDelete
 48. வாங்க எஸ்.கே அண்ணே

  //அட இதை இப்படியும் சொல்ல முடியுமா //

  அண்ணே சில நேரத்தில இதுமாதிரி சில நுண்ணரசியலும் தேவைப்படுதுன்ணே :)))))

  ReplyDelete
 49. வாங்க கார்த்திக்

  நீங்க உங்க பதிவுலயும் எழுதுங்க. இங்க படிக்காம விட்ட சில பேர் உங்க பதிவுல படிக்கலாம் இல்லையா???

  ReplyDelete
 50. வாங்க அக்கா

  // புதுகைத் தென்றல் said...
  இதற்கு மட்டுமாவது சென்னையில் இல்லாமல் போய்விட்டேனேன்னு இருக்கு.

  :(

  //

  அக்கா விசாருச்சுப் பாருங்க. ஹைதராபாத்லயும் பார்வையற்ற மாணவர்கள் படிக்கிறாங்கதான...

  ReplyDelete
 51. வாங்க பார்ட்னர்

  //வெண்பூ said...
  நல்ல விசயத்தை நாலு பேருக்கு தெரியும் இடத்தில் நாலு பேரு பார்க்கும் தலைப்புடன் போட்டதற்கு பாராட்டுக்கள்.
  //

  10 நாளைக்கு முன்னாடி எழுதலாம்னு நினைச்சேன். அப்புறம் வலைச்சரத்தில் ஆசிரியர் ஆகும்போது அங்க எழுதுனா இன்னும் அதிக பேரை அடையுமேன்னு இங்க போட்டேன் :))


  //
  ஷகிலா பெயரை போட்டிருந்தால் இன்னும் பலபேர் பார்வையில் பட்டிருக்கும் என்பது என் கருத்து
  //

  அடடா...இப்பதான் எனக்கும் தோணுது...

  ReplyDelete
 52. வாங்க சகோதரி சந்தனமுல்லை

  //பயனுள்ள பதிவு! உதவியாய் அமைந்தால் நன்று!

  //

  நல்லதே நினைப்போம் :)

  அப்புறம் என் ஃபிரண்ட் பப்புவோட பர்த்டே எப்படி போச்சு???

  ReplyDelete
 53. வாங்க மகேஷ் அண்ணே

  //உங்களைப் பாக்க ரொம்ப பொறாமையாவும், பெருமையாவும் இருக்கு....

  //

  எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாண்ணே :)))

  ReplyDelete
 54. வாங்க குடிமகன் அண்ணே
  //

  சிலநேரம் நமிதா மேட்டருனு நல்லவங்க ஒதுங்க்கி படிக்காம போய்ட்டா ?
  //

  அண்ணே நீங்களும் நல்லவர்தான??? இப்போ நீங்க வரலயா?? அப்படித்தாண்ணே :)))))

  ReplyDelete
 55. வாங்க ஸ்ரீராம் அண்ணே

  Spoke to Mathew, will pass on the info to my frenz in chennai and try to organize minimum 5 people for him, also promised him to take 1-2 exams during my visit to chennai in Jan 09.
  //

  மின்னல் வேகத்தில் செயல்பட்ட உங்களுக்கு என் நன்றி.

  ReplyDelete
 56. அண்ணே... லேட்டா வந்து ஒரு கமெண்ட் போட்டுக்கறேன்...

  வாழ்த்துக்கள் உங்க நல்ல முயற்சிக்கு...

  ReplyDelete
 57. அண்ணே இதையே இன்னும் சில நண்பர்கள் தனது வலைப்பூவில் கொடுத்தால் நிறைய பேரை சென்றடைய வாய்ப்பு உள்ளதுன்னே.

  நீங்க தான் பாத்து ஏதாவது யோசிக்கணும்.

  ReplyDelete
 58. நீங்க செய்யும் இந்த நல்ல காரியத்துக்கு வாழ்த்துக்கள் அப்துல்லா. நிறைய ஆதரவு கிடைக்கும்னு நம்பறேன்

  ReplyDelete
 59. வாங்க நசரேசன் அண்ணே

  மிக்க நன்றி அண்ணே

  ReplyDelete
 60. வாங்க தாமிரா அண்ணே

  //நம்மால ஒரு நல்ல ஸ்டூடண்டோட மார்க் குறைஞ்சுடக்கூடாதே.!

  //

  அப்ப நம்ப எழுதுற ஃபிளாக்கப் பத்தி என்ன சொல்றதாம்???? :))))

  ReplyDelete
 61. வாங்க அக்னிப்பார்வை

  ஒங்கப் பேரைக் கேட்டாலே ச்சும்மா அதுருது.. :)

  ReplyDelete
 62. வாங்க சீனா அய்யா

  //ஆகா அப்துல்லா பதிவு என்பதாலோ அல்லது நமீதா பற்றிய பதிவு என்றதாலோ - தெரியவில்லை - ஏன் இத்தனை மறுமொழிகள் என்று.
  //

  எல்லாரும் பாசக்கார பயபுள்ளைக அய்யா. அண்ணே வந்துருக்கேன்னு தெரிஞ்சா ஒடியாந்துவாய்ங்க...ஹி...ஹி...ஹி

  //
  ஆமா அதென்ன கெட்ட தலைப்பு - கடுங் கண்டனங்கள்.

  நமீதா சம்பந்தப்பட்டது என்றாலே கெட்ட தலைப்பா ? கிளுகிளூ / கிசுகிசு/ மனதினை இழுக்கும் / சூடான - என்றெல்லாம் கூறி இருக்கலாமே !
  //

  ஆஹாஆஆஆஆஆ
  அய்யாவுக்கு வயசு திரும்புதேஏஏஏஏஏ

  ReplyDelete
 63. வாங்க சகோதரி கயல்விழி

  வருகைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 64. வாங்க குடுகுடுப்பையார்

  //நன்றி உங்களுக்கும், நமீதாவுக்கும்
  //

  அண்ணே பதிவுலத்திலேயே நீங்க ஒருத்தர்தாண்ணே தெளிவான ஆளு
  :))))

  ReplyDelete
 65. வாங்க ஜோசப் அண்ணே

  //என்ன தான் காரணம் சொன்னாலும், இந்தப் பதிவுக்கு இப்படி ஒரு தலைப்ப என்னால ஏத்துக்க முடியலண்ணே//

  இந்த ஜோசப் அண்னனுக்கு எப்பவுமே எசப்பாட்டுதான் :)

  ReplyDelete
 66. வாங்க சஞ்சய் மாம்ஸ்

  //இது போன்ற உதவிகளுக்கக தனி வலைப்பூ கூட ஆரம்பிக்கலாம். உபயோகமா இருக்கும்//

  நீயே இன்னும் ரெண்டு மூணு பேரச் சேரு. உடனே ஆரமிச்சுருவோம்.

  ReplyDelete
 67. வாங்க ச்சின்னப்பையன் அண்ணே

  அண்ணே... லேட்டா வந்து ஒரு கமெண்ட் போட்டுக்கறேன்...
  //

  ஆனாலும் நீங்க எப்பவுமே லேட்டஸ்டுதான.... இப்பகூட பாருங்க 40 வயசாகியும் ச்சின்னப்பையன்ன்னு பேரு வச்சுருக்கீங்க :)

  ReplyDelete
 68. வாங்க எஸ்கே

  //நீங்க தான் பாத்து ஏதாவது யோசிக்கணும்
  //

  வலைச்சரத்தின் கடைசி பதிவில் இதுக்கு ஒரு வழி சொல்றேன்.

  ReplyDelete
 69. வாங்க சகோதரி சின்ன அம்மிணி

  // நிறைய ஆதரவு கிடைக்கும்னு நம்பறேன்
  //

  நானும் நம்புறேன். நல்லதையே நினைப்போம்.

  ReplyDelete
 70. இது சென்னையில் மட்டும் தான் முடியுமா?
  ஈரோட்டில் யாருக்காவது இந்த உதவி தேவைப்படுமா?
  நான் தயாராக இருக்கிறேன்

  ReplyDelete
 71. நல்ல ஒரு முயற்சி அண்ணா

  ReplyDelete
 72. வாங்க வால்பையன்

  ஈரோட்டில் உள்ள காலேஜில் கேட்டுப்பாருங்க கண்டிப்பா அங்கும் யாராவது இருப்பார்கள்.

  ReplyDelete
 73. வாங்க கிருஷ்ணா

  வருகைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 74. //டிஸ்கி 1 : ஒரு நல்ல விஷயத்தை எல்லோருக்கும் சொல்றதுன்னா இந்த மாதிரி கெட்ட தலைப்பு வச்சுத்தான் எல்லாரையும் கூப்பிட வேண்டி இருக்கு :)//

  நாலு பேருக்கு நல்லது செய்யனும் என்றால் எதுவும் தப்பில்லே

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது