07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 20, 2008

மனம் ஒரு அதிசயமான கலவை....!

எனக்கு சீரியஸ் பதிவுகள், ஆன்மீகப் பதிவுகள், பெரியார் பதிவுகள், வம்புக்கு இழுக்கும் பதிவுகள், பின் நவீனத்துவப் பதிவுகள், முன் நவீனத்துவப் பதிவுகள், கடவுள் சண்டைப் பதிவுகள்... அரசியல் பதிவுகள்... இதெல்லாம் கொஞ்சம் அலர்ஜி........ சமூக அக்கறை உள்ள பதிவுகள் கொஞ்சமாய் பிடிக்கும்.

என்னைப் பாதித்தவைகளை மட்டுமே நான் எழுதுகிறேன்...

ஆனால் என் அனுபவங்களால் மட்டுமே நான் பாதிக்கப் படுவதில்லை

மனித மனம் ஒரு அழகான...... ஆனாலும் அதிசயமான..... ஒரு கலவை..!

எனக்குப் பிடித்தவைகள் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்..!

எனக்குப் பிடிக்காதவைகள் உங்களுக்குப் பிடித்திருக்கலாம்..!

உங்களுக்குப் பிடித்தவைகள் எனக்குப் பிடிக்காமல் போகலாம்..!

உங்களுக்குப் பிடிக்காதவைகள் எனக்குப் பிடித்திருக்கலாம்..!

என்றாலும் இந்த வாரம் முழுவதும் என்னோடு கை கோர்த்துக் கொண்டு தான் வர வேண்டும்............ தப்பிச்சுப் போக முடியாதே!!!!!!!

ஏற்கெனவே சொல்லிருக்கேன்...
எனக்கு நிலா, மழை, மேகம், காற்று, நட்சத்திரம், அலை, பாட்டு, புத்தகம்னு ஒரு கனவுலகில் வாழப் பிடிக்கும்னு..
அதனால முதலில் கொஞ்சம் அழகியல் கவிதைகள்...

இங்கே இவர்கள் நட்சத்திரம் பொறுக்கும் அழகே அழகு...அருள்முருகனின் இந்தக் கவிதை நட்சத்திரம் போலவே அத்தனை மினு மினுப்பு...

"ஒவ்வொரு முறையும்
நினைத்துக்கொள்வேன் -
நிச்சயம் நாளையாவது
நீயில்லாத வேறுதிசையில்
பயணிக்கவேண்டும்.

ஆனால் விடிந்ததும்
தினம்தினம் உன்சுவடுகளைத்
தொடர்வதே வழக்கமாகிவிட்டது"

அடுத்தது குட்டிச் செல்வனின் காற்று....சிலு சிலுவென்று வீசுகிறது....

"காற்று பலமாய் அடிக்கையில்
என் உடல் வந்து ஒட்டிகொண்ட
காய்ந்த இலையை
உதறிச் செல்ல‌ மனமில்லை
எடுத்துச் செல்கின்றேன் என்னுடன் "

அப்புறம் என்னை மயக்கும் மேகங்கள்.....அவை வரையும் நொடி ஓவியங்கள்...இதைப் பற்றி அரவிந்த் எழுதியிருக்கும் இந்தப் பதிவு மேகத்தைப் பற்றி ஒரு டாக்டரேட் பண்ற அளவுக்கு விரிவாகப் பதிந்திருக்கிறார்...

"மேகங்கள் சுதந்திரத்தை மொத்தமாக குத்தகை எடுத்திருக்கின்றன.
எந்த உருவத்தையும் எடுக்கலாம்.
தூங்காப் பறவைகள் போல எந்த திசையும் பறக்கலாம்."

அப்புறம் நதி.....பார்க்கப் பார்க்க அலுக்காத நதி....சுழித்து ஓடும் நதி....இது என் நதி...

இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது.

அப்புறம் ராஜாசந்திரசேகரின் கல் நதி...

"உள் உளி
பாய
நகர்கிறது
கல் நதி"

அவரே கடல் பற்றி சொல்லும் போது....

"தான் வரைந்த கடலில்
நேற்றுப் பார்த்த கடல்
இருக்கிறதா
கேட்டாள் சிறுமி
அவள் நீலக் கோடுகளிலிருந்து
எம்பிக் குதித்த வண்ணமீன்
ஆம் என்று
சொல்லச்சொல்லி
உள் ஓடி
மறைந்து போனது"

இன்னும் கொஞ்சம் அழகியல் பதிவுகள் நாளைக்கு பார்க்கலாமா??
வர்ட்டா...???

12 comments:

  1. /ஒவ்வொரு முறையும்
    நினைத்துக்கொள்வேன் -
    நிச்சயம் நாளையாவது
    நீயில்லாத வேறுதிசையில்
    பயணிக்கவேண்டும்.

    ஆனால் விடிந்ததும்
    தினம்தினம் உன்சுவடுகளைத்
    தொடர்வதே வழக்கமாகிவிட்டது/



    /காற்று பலமாய் அடிக்கையில்
    என் உடல் வந்து ஒட்டிகொண்ட
    காய்ந்த இலையை
    உதறிச் செல்ல‌ மனமில்லை
    எடுத்துச் செல்கின்றேன் என்னுடன் /

    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. அருமையான பதிவுகளின் சுட்டிகள்.

    திகழ்மிளிர் சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்ப்ப்ப்பீட்டு

    ReplyDelete
  3. பதிவிற்கு நன்றி.
    அருள் முருகனின் கவிதை அருமை. ஆனால் கவிதைக்கு வேண்டுமானால் இது நன்றாக இருக்கலாம். எதார்த்தத்தில் எல்லாமே நம் கட்டுப்பாடில் தான் உள்ளது.

    பாலகுமாரன் சொல்வது போல் எண்ணம் தோன்றும் போதே அதை உற்று பார்த்து அந்த என்னத்தை விளக்கினால், நாம் பழைய நினைவுகள் அன்றி வேறு திசையில் பயணிக்கலாம்.

    ஒவ்வொரு நாளும் நானும் நினைத்து கொள்வேன் நாளையேனும் தமிழ்மணம் (yahoo, galatta.com) படித்து நேரம் வீண் செய்ய கூடாது என்று.

    அடுத்த நாள் எந்த எண்ணம் தோன்றும் பொது நாம் விழிப்புடன் மூளைக்கு கட்டளை இட்டால் தமிழ்மணம் படிக்காமல் இருக்கலாம்.

    This concept is applicable to eradicate coffe addiction, smoke addiction, TV serial addiction, cricket addiction..

    பழக்கத்தை உருவாக்கி கொள்வது நாம் தானே.

    வாழ்த்துக்களுடன்

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  4. திகழ்மிளிர் said...
    //அருமையான வரிகள்//

    ஆமா திகழ்மிளிர்....எனக்கும் ரொம்பப் பிடிச்சது...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  5. மங்களூர் சிவா said...
    //அருமையான பதிவுகளின் சுட்டிகள்.

    திகழ்மிளிர் சொன்னதுக்கு ஒரு பெரிய ரிப்ப்ப்ப்பீட்டு//

    ரிப்ப்ப்ப்பீட்டுக்கு நன்றி சிவா...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  6. குப்பன்_யாஹூ said...
    //This concept is applicable to eradicate coffe addiction, smoke addiction, TV serial addiction, cricket addiction..

    பழக்கத்தை உருவாக்கி கொள்வது நாம் தானே.

    வாழ்த்துக்களுடன்//

    உண்மைதான்....பழக்கத்தைக் கட்டுப் பாட்டில் கொண்டு வர முடியாதது தானே பிரச்னை....அதுமட்டும் முடிந்தால் ஏது துன்பம்?
    அன்புடன் அருணா

    ReplyDelete
  7. அருமையான சுட்டிகள் - படிக்க வேண்டும்

    ReplyDelete
  8. cheena (சீனா) said...
    //அருமையான சுட்டிகள் - படிக்க வேண்டும்//
    நன்றி சீனா அவர்களே..
    அன்புடன் அருணா

    ReplyDelete
  9. அருள் முருகன் அறிமுகத்திற்கு நன்றி அக்கா.. மற்றவர்கள் பரிச்சயமே..

    ReplyDelete
  10. Saravana Kumar MSK said...
    //அருள் முருகன் அறிமுகத்திற்கு நன்றி அக்கா.. மற்றவர்கள் பரிச்சயமே..//

    எனக்குக் கூட அருள்முருகன் பதிவு ரொம்பப் பிடித்திருந்தது...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  11. இங்கே கொடுத்திருக்கும் ஒரு சில வரிகளே ஆச்சர்யப்படுத்துகின்றன. நிச்சயம் படிக்க வேண்டும். நன்றி அருணா.
    :)

    ReplyDelete
  12. Karthik said...

    //இங்கே கொடுத்திருக்கும் ஒரு சில வரிகளே ஆச்சர்யப்படுத்துகின்றன. நிச்சயம் படிக்க வேண்டும். நன்றி அருணா.//

    படிங்க...படிங்க..கார்த்திக்.
    அன்புடன் அருணா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது