07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 9, 2008

வாக்குவாதத்தில் தொடங்கி வாழ்த்தில் தொடரும்...

இவருக்கும் எனக்கும் ஆரம்பமே முட்டலில்தான் ! நான் ஆரம்பத்தில் ஒரு பதிவு
ஜாலியாக இப்படிப்போட்டிருந்தேன். அங்கு பின்னூட்டத்தில் வந்தவர்தான் இவர்! வந்தவர் சொல்லாட, நானும் பதிலாட, அது பெரிய வாக்குவாதத்திலிருந்து, சிறு சண்டையாக உருவெடுத்துவிட்டது.




பிறகு அவர் என் பதிவுப்பக்கம் வருவதில்லை. மேலும் அவர் ஆங்கிலத்தில்
எழுதிக்கொண்டிருந்தார். நாட்கள் கழிந்தன. தமிழ்மணத்தில் ஒரு நாள் இவர் பெயரைத்தாங்கி ஒரு பதிவு தென்பட, படித்துத்தான் பார்ப்போமே என்று படித்தால், சூப்பராக எழுதியிருந்தார் மனுஷன்..! நாம் என்ன அவரைப்பாக்கவா போகிறோம். அவர் எழுதியதைப்படிக்கத்தானே போகிறோம் என்று போய் வர ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அவர் பதிவுகள் எல்லாவற்றையுமே தொடர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டேன். மேலும் முன்னர் நடந்தது ஒரு கருத்து மோதல்தானே? :)




சமூக அக்கறையும், கொஞ்சம் அதிக சீரியஸ் பதிவுகளும் இடும் இவரது பதிவுகள்
பற்றி தொடுப்பு கொடுக்க ஆரம்பித்தால் இந்த வலைச்சரம் போதாது. இருந்தாலும் நான் ரசித்தவற்றில்


தமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை
சற்றே நீளமான இந்தப்பதிவைப்படித்து முடிக்கும்போது, ஏற்படும் தெளிவிற்கும், தோன்றும் கேள்விகளுக்கும் அவரே முழுக்காரணம் ! ஆழ்ந்து வாசிப்பவர் என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார்.





சரியான கேள்வி கேட்பது எப்படி என்று சொல்லி, அட. சாதாரணமாக கேள்வி கேட்பதில் கூட இவ்வளவு விஷயம் இருக்கிறதா ? என்று சிந்திக்க வைத்துவிடுகிறார்.


இப்படியா மொழிபெயர்ப்பது . . அடேயப்பா மொழிபெயர்ப்பில் ஏற்படும் தவறுகளை சிறப்பாகச்சொல்லியிருக்கிறார் பாருங்கள்!



முதல் மதிப்பெண் பெற்றவர்களின் லட்சியம் டாக்டருக்குப்படிப்பது ஒன்றும் சாதாரண வேலையில்லை என்று ஒரு காட்டுக்காட்டியிருக்கிறார். என்ன ஒரு சிறப்பென்றால், பாரபட்சமில்லாமல் ஒரு பார்வையாளனாக எழுதியிருக்கிறார். ஏனெனில் இவரும் ஒரு மருத்துவர். !


ஆம்...புருனோ பெயரில் எழுதிக்கொண்டிருக்கும் டாக்டர் புருனோதான் இவர்!
இவருக்கு ஆங்கில வலைப்பூ ஒன்றும் உள்ளது...! அதன் பெயரை தமிழ்ப்படுத்தினால், அளவுகோலுடன் பேனா என்று வருகிறது.


இப்போதெல்லாம் இவர் பதிவுகளுக்குச்சென்று நானும் பின்னூட்டமிடுகிறேன். அவரும் நம்ம வூட்டுப்பக்கமெல்லாம் வருகிறார்.


உங்கள் சமூக அக்கறையும், ஆழ்ந்த பார்வையும் கண்டு வியந்துகொண்டுதான் இருக்கிறேன். வாழ்த்துக்கள் புருனோ சார்!


அடுத்து....

9 comments:

  1. மருத்துவர் புருனோ பற்றிய அறிமுகத்திற்குநன்றி! நம்மிடையே ஒரு மருத்துவரும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
  2. எனக்கு நன்றாகவே ஞாபகமிருக்கிறது... உங்களின் கருத்து மோதல் அந்தப் பதிவின் மூலமாக :).

    டாக்டர்.புருனோ பற்றிய அறிமுகம் நன்று.

    ReplyDelete
  3. சுரேகண்ணே உங்கள மாதிரியே நம்ப டாக்டர் அண்ணனும் பழக தங்கமான் மனுஷன். ஓரு முறை சென்னை வரும் போது அவரை பார்த்தீங்கன்னா நான் சொல்றது புரியும்.

    ( இப்படித்தான் ஜோசப் பால்ராஜோடு ஆரமித்த கருத்து மோதல் எனக்கும் அவருக்கும் ஓரு சிறந்த நட்பை உருவாக்கிவிட்டது )

    ReplyDelete
  4. டாக்டர்.புருனோ பற்றிய அறிமுகம் நன்று.

    ReplyDelete
  5. நானும் பொன்னியின் செல்வனில் டாக்டருடன் முரண்பட்டு நாலு பதிவெல்லாம் போட்டேன்.... நல்ல அறிமுகம்... நன்றி சுரேகா.

    ReplyDelete
  6. //மேலும் முன்னர் நடந்தது ஒரு கருத்து மோதல்தானே? //

    ஆம் :) :) :)

    ReplyDelete
  7. அவருடன் நான் அலைபேசியில் உரையாடியிருக்கிறேன்.
    பொதுநிலை போக்கு கொண்டவர்.
    தவறை சுட்டிக்காட்டுவதில் தயங்க மாட்டார்.
    புத்தகங்கள் கூட எழுதியிருக்கிறாராம்
    இவரது சேவை சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. என்னையும் மனுசன் ஒரு பிடி பிடித்திருக்கிறார்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது