07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, October 11, 2008

இவர்கள் என்ன ஆனார்கள் ?

நிறைய, சிறப்பாக எழுதிக்கொண்டிருந்துவிட்டு, அப்படியே பலமாதங்கள் எழுதாமல் விட்டுச்சென்ற பதிவர்களைப்பற்றியும் சொல்லவேண்டும்போல்
தோன்றியதால் இந்தப்பதிவு...இவரைப்பற்றி வலைச்சரத்தில் ஒரு தனிக்கட்டுரையே எழுதவேண்டும் என்றாலும், புள்ளிவிவரப்புலி என்று செல்லமாக அழைக்கப்படும் வவ்வால்,
வசூல்ராஜாக்களின் கிராமப்புறக்கணிப்புஎன்று பதிவிட்டு ஒரு புயலையே கிளப்பியவர்...
வளைவுகள் ஜாக்கிரதை என்று சிறப்பாக விளக்கியிருக்கிறார்.அவ்வளவு எளிதாக சக்கரங்களை எனக்குப்புரியவைத்தவர் அவர்!


இன்னும் எத்தனையோ பதிவுகளால் பலரது உள்ளமும் கொள்ளைகொண்ட இவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அனேகமாக புதரகத்தில் இருக்கலாம் என்று ஒரு வதந்தி! :) நீங்கள் எங்கு இருந்தாலும் நாங்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்றொம் வவ்வால் சார்!


அடுத்து


நுகர்வோர் விழிப்புணர்வுடன் கட்டுரைகள் எழுதிக்கொண்டும், எல்லாப்பதிவர்களிடத்திலும்
அன்புடன் பழகிக்கொண்டும் இருக்கும் இவர். இப்போதெல்லாம் எதுவுமே எழுதுவதில்லை! என்ன ஆச்சு? மீண்டும் நிறைய எழுதுங்கள் ஸ்டாக் சிவா
சாமான்யன் சார்!சித்தர்கள் பற்றி இப்படி எழுத ஆரம்பித்து, தலைப்பிலேயே கலாமின் அக்னிச்சிறகை வைத்திருக்கும் இவரும் பல்வேறு வாழ்வியல் தத்துவங்களை
சிறப்பாக எடுத்துரைத்தார். இவரும் இப்போது எழுதுவதே இல்லை! தொடருங்கள் அய்யா! படிக்க நாங்கள் இருக்கிறோம்.மறுபடியும் ஒரு முன்னோடிப்பதிவர்தான்...ஆனா..இயற்கை நேசின்னு முதலில் தலைப்பிட்டுவிட்டு , பின்னர் இயற்கையின் வினோதங்கள் என்று மாற்றினாலும்
இயற்கையை நமக்கு இயற்கையாகப்புரியவைக்கும் இவரது இந்தப்பதிவைப்படியுங்கள் ஏன் மூதாதையர்கள் எழுந்து நின்றார்கள் என்று தெரியும் !


மூளை மாற்று சிகிச்சை முடிந்தால் என்ன ஆகும்? என்று கேட்டு
பீதியைக்கிளப்புகிறார் பாருங்கள்.!இப்படிச்சிறப்பாக பதிவுகள் போட்டுக்கொண்டிருந்துவிட்டு அம்போவென்று விட்டுவிட்டு இப்போது ஏன் இப்படி என்றுமட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இவரை என்ன செய்வது...!? அண்ணாத்த! தயவுசெய்து இயற்கையையும் கொஞ்சம் கவனியுங்க!


அடுத்ததா கட்டபொம்மன் பேசிய வசனமெல்லாம் டுபாக்கூர்தானா என்று கேட்டு பதிவிட்டிருக்கும் ஆணிபுடுங்கணும்..!


அமெரிக்காவில் ஒரு பகுத்தறிவாளர் ! – எஸ். குருமூர்த்தி என்று

பதிவிட்டு அந்த ஊரிலும் மத வெறி கொஞ்சம் அதிகம்தான் என்று சொல்லியிருக்கிறார்.நீங்களும் மறுபடியும் நிறைய பதிவிடத்தொடங்குங்க சார்!


காத்திருக்கிறோம்.

அடுத்து...

11 comments:

 1. ஹி..ஹி.. ஹி, நான் இங்கேதான் இருக்கேன். பார்த்திருப்பியே "நேசி"யில டெம்ப்ளேட்க்கு புதுப் பெயிண்ட் எல்லாம் அடிச்சி, கூட்டி மொழுகிட்டு இருக்கிறதையெல்லாம் கூடிய சீக்கிரம் அங்கயும் வந்துருவோம்...

  நல்ல குட்டுப்பா :).

  ReplyDelete
 2. நன்றாக எழுதக் கூடியவர்கள் நிறைய பேர் காணாமல் போய் விடுகிறார்கள்.. :(
  வவ்வால் நிறைய கமெண்டுகள் போடக்கூடியவர். வேறு பெயரில் எழுதுவதாக வதந்தி இருந்தது. ஆனால் அவரது ஸ்டைல் பின்னூட்டம் எங்கும் காணக் கிடைப்பதில்லை... :)
  மீண்டு(ம்) வர அழைக்கிறோம்!

  ReplyDelete
 3. நல்ல நினைவூட்டல் அழைப்பு அண்ணே! நன்றி!

  ReplyDelete
 4. //
  தமிழ் பிரியன் said...

  நன்றாக எழுதக் கூடியவர்கள் நிறைய பேர் காணாமல் போய் விடுகிறார்கள்.. :(
  வவ்வால் நிறைய கமெண்டுகள் போடக்கூடியவர். வேறு பெயரில் எழுதுவதாக வதந்தி இருந்தது. ஆனால் அவரது ஸ்டைல் பின்னூட்டம் எங்கும் காணக் கிடைப்பதில்லை... :)
  மீண்டு(ம்) வர அழைக்கிறோம்!
  //
  repeatttu

  ReplyDelete
 5. காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு?????

  :-)

  ReplyDelete
 6. சுரேகா,

  நல்ல பதிவர்களை அடையாளம் காட்டிய அருமையான பதிவு

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 7. எழுதாமல் விட்டாலும் படிக்காம இருக்க மாட்டாங்கன்றது என்னுடைய எண்ணம்..

  அதனால கண்டிப்பா திரும்பவும் எழுதுவாங்க என்கிற நம்பிக்ககை இருக்கு எனக்கு...

  நான் வலைப்பூக்களை படிக்கத்தொடங்கிய காலத்தில் இருந்த பல நல்ல பதிவர்களை பாக்க முடியறதில்லை

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 9. அன்பின் டாக்டர் புருனோ

  தனி மனித தாக்குதல்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் தங்களது மறுமொழியினை நீக்க வேண்டியதாயிற்று

  இனியும் இவ்வலைப்பூவினை தங்களது தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பயன் படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

  If U want to settle the score with some one - take up with HIM directly. This is not a place for settling the scores.

  ReplyDelete
 10. //If U want to settle the score with some one - take up with HIM directly. This is not a place for settling the scores.//

  I have no scores to settle with any one. The scores are related to WRONG FACTS, whoever says them, where ever it is told.

  If your blog had quoted some other post I would not have minded. But your team has quoted a post full of wrong information and has written as if the details are actual statistics. Any one reading this for the first time will be mislead.

  --

  //தனி மனித தாக்குதல்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் தங்களது மறுமொழியினை நீக்க வேண்டியதாயிற்று//

  மன்னித்துக்கொள்ளுங்கள்

  ஒருவர் எழுதியதை, முழுக்க புரட்டுகளும் கற்பனைகளும் நிறைந்ததாக இருக்கும் பட்சத்தில் தவறென்று கூறுவது தனி மனித தாக்குதல் என்று எனக்கு தெரியாது. தங்களின் விளக்கத்திற்கு நன்றி

  ஒரு தவறான தகவல்களை தெரிவிக்கும் பதிவிற்கு விளம்பரம் அளித்து அதை பிரபலப்படுத்தும் போது அது குறித்து மாற்று கருத்தை தெரிவிக்க உங்களின் தளத்தில் வழி கிடையாது என்பது எனக்கு தெரியாததால் நான் மறுமொழி எழுதினேன்.

  தங்களின் விளக்கத்திற்கு நன்றி.
  --
  //இனியும் இவ்வலைப்பூவினை தங்களது தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பயன் படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.//
  எக்காலத்திலும் எந்த வலைப்பூவையும், ஏன் எந்த ஊடகத்தையும் வைத்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் :) :)
  --
  தெரியாமல் செய்தாலும் தெரிந்தே செய்தாலும் தவறான செய்திகளை பரப்புபவர்கள் சமூகத்திற்கெதிரான மிகப்பெரிய குற்றத்தில் ஈடு படுகிறவர்கள் என்பது என் கருத்து
  --

  ReplyDelete
 11. அட ஆமாலே.. இவிங்க எல்லாம் எங்கிட்டு போய்ட்டாங்க? :(
  இதுக்கு தான் எப்போவும் நல்ல பதிவுகளாவே போடாம அப்பப்போ மொக்கையும் போடனும்னு சொல்றது.. எந்த மொக்கை சாமியாவது காணாம போயிருக்கோமா? :))

  //அண்ணாத்த! தயவுசெய்து இயற்கையையும் கொஞ்சம் கவனியுங்க!//
  அட.. என்ன சொல்றிங்க.. வாங்கி போட்டதோட அந்த ஏரியாவ மறந்துட்டாரா?.. இதை பொதுவுல சொல்ற அளவுக்கா தெக்கி பொறுபில்லாம ஆய்ட்டார் :))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது