07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 7, 2008

வலையுலக முன்னோடிகள்!

வலைப்பூ என்று முதலில் எனக்கு அறிமுகமானது இவருடையதுதான். இவர் எழுதிய என்னை புதைக்கிறதா இல்ல எரிக்கிறதா? என்று கேட்டு கலக்கி எடுத்திருக்கும் இந்தப்பதிவின் தாக்கம் இன்னும் எனக்குள் மாறவில்லை எனலாம்.

ஏன் இப்படி? என்று கேட்டுக்கொண்டே ஆரம்பிக்கும் இவர் பல்வேறு ஏன்களையும் கேட்டு அதற்கான விளக்கங்களும் தந்துகொண்டிருக்கிறார். இது இவரது புவி வெப்பமடைதல் பற்றிய பார்வை! மனிதர் எப்படிக்கலக்குகிறார் என்று பாருங்கள்!

இதில் முதுமை ஒரு சாபக்கேடா எனக்கேட்டு விளக்குகிறார். இதில் இவரது ஆதங்கம் எப்படி வெளிப்படுகிறது என்று பாருங்கள் !

அவரை அறிமுகப்படுத்துவது என்பதை விட அவரை எனக்குத்தெரியும் என்ற இறுமாப்புக்காகவே இந்த இடத்தில் சொல்லிக்கொள்கிறேன். ஏனெனில் அவர் எல்லோருக்கும் நன்கு தெரிந்த பதிவர். நீண்ட நாள் முன்னரே வலைச்சரம் தொடுத்தவர். ஆம்...தெகா என்று பெயரிட்டுக்கொண்டுள்ள தெக்கிக்காட்டான் தான் இவர்.!

கடந்த வாரம் கூட இங்கே இவரைப்பற்றி கூறியிருக்கிறார்கள்.

இவர்தான் எனது பதிவுலக மானசீக குரு என்பதை மனதாரத்தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் பதிவுகளெல்லாம் எழுதுவதற்கு முன்பு தெகாவின் திருமணத்துக்கு நான் போயிருந்தேன். அங்கு ஒரு வயதான இளைஞர் வந்திருந்தார். அழகாகப் பேசினார். இவரும் பதிவர் என்று தெகா அறிமுகப்படுத்தினார். தருமி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று கூறினார். அதுவரை நான் அவருடைய ஒரு பதிவையும் படித்ததில்லை. பிறகு படித்து, ரசித்தேன். அனேக பதிவர்களுக்குக்கிடைக்காத ஒரு பாக்கியம் எனக்குக்கிடைத்தது. பதிவுலகில் எழுத்தில் பழகிவிட்டு, பின்னர் நடக்கும் பதிவர் சந்திப்பில் அறிமுகப்படுத்திக்கொள்வோம். ஆனால் இவரிடம் மட்டும் முதலில் பதிவரைச்சந்தித்தபின் தான் அவரது எழுத்துக்களை படிக்க நேர்ந்தது.

இதுவரை அவருக்கு இந்த சுரேகாதான் , தெகா திருமணத்தில், அவருக்கு கார் ஓட்டிய அந்த நண்பன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்தால், அவரது பாதிப்புதான் நான் இப்படி மொக்கை போடுகிறேனோ என்று எண்ணி நொந்துபோவார். :)

அவரது பதிவுகள் ஒவ்வொன்றும் சமூக அக்கறையும், விஷய ஞானமும் கொண்டதாகவே இருக்கும். இவர் கண்முன் நடந்ததையும் , போலீஸாரின் நன்னடத்தையையும் எப்படி விவரிக்கிறார் பாருங்கள்!

இவரது சென்னை அனுபவமும், தார்மீகக்கோபத்தையும் பாருங்கள்

இந்தப்பதிவு ஒரு பதிவர் சந்திப்பு பற்றியது. ஆனால் , அதன் கடைசி வரிகளில் சொல்லியிருக்கும் விஷய்ம் இன்றுவரை எனக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது.

தருமி அய்யாவின் வட்டம் மிகப்பெரியது என்பதை திரைப்பட நடிகர் சண்முகராஜன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது தெரிந்துகொண்டேன்.

இதைப்பார்த்து உங்களுக்கு என் மேல் கோபம் வரக்கூடாது. புதுசா ரெண்டுபேரையாவது சொல்லுவான்னு நம்பி வந்தா, உலகம் அறிஞ்ச பதிவர்களை நமக்கே அறிமுகப்படுத்துறான் பாருன்னு! இவர்களை எனக்கு நேரடியாத்தெரியும்னு சொல்லத்தான் வந்தேன். அதுக்கும் மேல், புதிய பதிவர்களுக்கு இவர்களைப்படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கலாமே என்றுதான்..ஹி.ஹி...!

4 comments:

  1. //இவர்தான் எனது பதிவுலக மானசீக குரு என்பதை மனதாரத்தெரிவித்துக்கொள்கிறேன்.//

    சொல்லாமகில்லாம எந்தப் பக்கமிருந்து எப்படி வந்து தொடுவேன்னே தெரிய மாட்டேங்கிதே :)).

    பெரிய பெரிய வார்த்தை எல்லாம் போட்ருக்கே... அதுவும் தருமிக்கு பக்கத்தில வைச்சு, தம்பீ வேண்டாம்டா தாங்க மாட்டேன் ;).

    ReplyDelete
  2. இரண்டு பெரியவர்களின் பதிவுகளை அறிமுகம் செய்தது நன்றாக உள்ளது.

    ReplyDelete
  3. நல்ல தொகுப்பு!

    இன்னும் இன்னும் எக்கச்சக்கமா எதிர்பாக்கிறோம் உங்ககிட்ட இருந்து!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது