07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 13, 2013

கதை சொல்லிகள்...



வலைச்சர விருப்ப தாரர்களுக்கும் , நண்பர்களுக்கும் என் காலை வணக்கங்கள். சிறுகதை, பெருங்கதை சிந்தனையாளர்களை அவர்களின் வலைப்பக்கதிற்கே சென்று சின்னதாய் கைக்குலுக்கி விட்டு வருவோம்!

1 ) குடந்தையூர் - ஆர்.வி. சரவணன் 

இவரின் எழுத்துக்களை வாசித்து முடிக்கையில் நமக்குள்ளும் துளிர் விடும் சிறுகதை எழுதும் ஆர்வம். இதுதான் இவரின் வெற்றி ரகசியம்.. 2010 லிருந்து வலையுலகில் தொடர்ந்து எழுதி வருகிறார்!

மாப்பிள்ளை விற்பனைக்கு அல்ல, பெற்றோர், நட்புக்குத் தங்க மனசு இப்படி சிறுகதைகளை எழுதிய இவர் இளமை எழுதும் கவிதை நீ... என்கிற நெடுங்கதையையும் தனது தளத்தில் எழுதி வருகிறார்! கூடவே கவிதை, சினிமா, அனுபவம் இப்படியும் பகிர்ந்து வருகிறார்!

2) நினைவில் சில கனவுகள்  - செம்மலை ஆகாஷ் 

கடந்த வருடத்திலிருந்து தொடர்ந்து நிறைய எழுதி வந்தாலும் இவரிடம் நான் வியந்து ரசித்தது இவரின் கதைகளைத்தான்! நல்ல படைப்பாளி ...

 காதலின் குணமும்! பெற்றோர்களின் மனமும்! என்கிற தலைப்பில் ஒரு பெருங்கதை எழுதிய இவர் எங்கே இருக்கிறாள் அவள்? அவளைத்தேடி ஒரு பயணம் என்ற தொடர்கதையை எழுதி வருகிறார். படித்தால் நமக்கே நடந்த உணர்வை தரும் படைப்பு ...

இதை தவிர்த்து நையாண்டி, நகைச்சுவை, அரசியல், சினிமா விமரசனமும் எழுதி வருகிறார்.


பெல்ஜியத்தில் வசித்து வரும் இவர் மிக சமீபத்தில் தான் வலைப்பக்கம் தொடங்கி இருக்கிறார்.

இவரின் எழுத்துக்கு ஒரே ஒரு  சான்று இந்த கல்லூரி கட்டணம் படித்து முடிக்கையில் மனம் என்னென்னவோ .சிந்திக்கிறது ..படித்து பாருங்கள் ..தோழர்களே .

4) நான் நானாக

சிலரது படைப்புகள் வாசிக்கும் நம்மை ஒரு உலுக்கு உலுக்கப் போடும் அந்த வகையில் இவரது படைப்புகளும் உள்ளது.

இந்த தொடரும் பயணங்கள் அப்படித்தான் வாசித்த என்னை எங்கேயோ கொண்டு தொலைத்து மீண்டும் என்னை கொண்டு வந்து சேர்த்தது.

அதிகம் எழுதாத இவர் போன்றவர்கள் கொஞ்சம் சிரமத்தை பாராமல் நிறைய எழுத வேண்டுகிறேன்!

5) சுபத்ரா பேசுறேன் - சுபத்ரா

கடந்த இரண்டு வருடங்களாக எழுதி வரும் இவர் நிறைய வகைகளை நமக்கு எழுத்தின் மூலம் வழங்குகிறார். அதில் சிலவற்றை இங்கு காண்போம்!

இது கதையல்ல நிஜம் என்ற உணர்வுள்ள பகுதியை நம்முன் வைத்து விட்டு எதுவும் சொல்லாமல் நமக்கு ஆயிரம் கற்பினைகளை வழங்கி செல்லும் திறமை எல்லோருக்கும் வராது.

நாமிருவர் அதிகம் விவரிக்காமல் சொல்ல வந்த விடயத்தை நறுக்கு தெரித்தார் போல் சொல்வதிலும் இவங்களுக்கு இணை இவங்களே தான்!

6) ரிஷ்வன் கவிதைத் துளிகள் - ரிஷ்வன்

2011 லிருந்து எண்ணற்ற படைப்புகளை வழங்கி வருகிறார். கவிதை, கட்டுரை, சிறுகதை என்று பன்முக படைப்பாளி இவர்.

இவரின் மொத்த எழுத்துக்களுக்கும் இந்த இரண்டு ஏக்கர் நிலம் ஒரே சான்று!

அடுத்து உலகப் பொதுமறையாம் திருக்குறளை வைத்து திருக்குறள் வடிவில் கவிதை எழுதுகிறார்...

7)  தமிழ் தெரு - த. ஜார்ஜ்

சிலர் சொல்ல வரும் பெருங்கருத்தை நகைச்சுவை முலாம் பூசி படிப்பவருக்கு சலிப்பு தட்டாமல் எழுத்தின் உள்ளே பயணிக்க வைப்பர்! அந்த வகையறா இவரது படைப்புகளும்!

அடுத்த ஞாயிற்றுக் கிழமை  இதற்கு சான்று! வலை போன்று மேலும் படைப்புகளை வழங்கி இருக்கிறார்!

8) வல்வையூரான் - இராஜ முகுந்தன்

கடந்த வருடத்திலிருந்து எழுதி வருகிறார். எதார்த்தமாக வந்து விழுகின்றன இவரின் ஒவ்வொரு படைப்புகளும்!

தேர் முட்டுக்கட்டை காதலை சுவைபட சொல்லிச் செல்கிறார்!  இளநீர்., மௌனம் பேசியது. என்று மேலும் நல்ல எழுத்துக்களை நமக்காக வழங்கி இருக்கிறார்!

9) காக்கைச் சிறகினிலே - அகல்

சென்ற வருடத்திலிருந்து எழுதி வருகிறார்! நல்ல படைப்புகளை வழங்கி வரும் இவர் அனுபவம், கவிதைகள், ஹைக்கூ போன்றவற்றை எழுதி வருகிறார்!

"தீதும் நன்றும் பிறர்தர வரும்" மிக எளிமையான வரிகளில் உலகுக்கு சொல்ல வேண்டிய கருத்தை கதையின் ஊடாக செல்வது தான் இவரின் சிறப்பு தெரிகிறது!

10) தேன் மதுரத் தமிழ் - கிரேஸ்

கடந்த மூன்று வருடங்களாக எழுதி வரும் இவரின் படைப்புகள் அனைத்தும் மிக சுருக்கமாகவே இருக்கிறது! ஆனால் நிறைய சொல்கிறது நம்மிடம்!

கோபம் என்கிற கதையில் தெரிகிறது குழந்தைகளிடம் எப்படி இருக்கவேண்டும் என்பது! மேலும் இவரின் தளத்தில் குழந்தைகளுக்காகவே நிறைய படைப்புகள் வழங்கி இருக்கிறார்!


இன்றைய தினம் என்னோடு பயணித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள்... மீண்டும் சந்திப்போம் மீண்டுமொரு பதிவில் ..

நன்றிகளுடன்

அரசன்
உ. நா. குடிக்காடு












  
மேலும் வாசிக்க...

Tuesday, March 12, 2013

இன்றைய பதிவுலாவில் இவர்களோடு சேர்ந்து நீங்களும் ...



வணக்கம் பதிவுலக தோழமைகளே! நம்மை நமக்கு அறியச்செய்யும் விதமாக இன்றைய நாளில் சக தோழர்களின் வலைப்பூக்களில் சில நிமிடங்கள் உலா வருவோம், வாருங்கள் என்னோடு நீங்களும்!


1) பதிவுகள் - சத்யப்ப்ரியன்

2006 லிருந்து பதிவுலகத்தில் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் அமெரிக்காவில் வசித்து வரும் நண்பர் சத்யப்ரியன்! எதையும் ஒதுக்கி விடாமல் கவிதை, கட்டுரை, அரசியல், சினிமா என்று மனுஷன் அனைத்திலும் தன் தடத்தை எழுத்தின் மூலம் பதிந்து வருகிறார்! அவருடைய வலை பக்கத்திலிருந்து சில பதிவுகளை காண்போம்.

முதலில் அவரின் அனுபவத்தை பார்ப்போம், பிறகு அவரின் பொடிமாஸை ருசிப்போம்! அடுத்து துல்லியமான நடையில் மிகத்தெளிவாக செய்தி விமர்சனம் ஒன்றை பதிந்து வருகிறார், அடுத்து நிகழ்வுகள் என்கிற வகையில் கொஞ்சம் காட்டத்துடன் அதே நேரத்தில் தீர்க்கமாகவும் தனது எண்ணங்களை இங்கு பதிந்து வருகிறார்! 

முடிவாக சினிமா விமர்சனமும் தனக்கே உரிய பாணியில் எழுதி கலக்குகிறார், எல்லா அமசமும் கலந்து ஒரு தரமான வலைப்பூ நண்பர் சத்யப்ரியனின் பதிவுகள் எனும் வலைப்பூ ....

2) சின்னப்பயல் - சின்னப்பயல் 

2010 லிருந்து பதிவுலகத்தில் இருந்து வருகிறார் தோழர் சின்னப்பயல். (காலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள.. ) இவரின் அறிமுகமே மிக இயல்பாய் படித்ததும் மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டவை. மேலதிக விபரம் ஏதுமில்லை!

இவரின் பக்கங்களை நோக்குகையில் குடை  என்ற சிறுகதை இதழோரத்தில் சிறு புன்னகையை கிளப்பினாலும், காதல் கவிதைகள் அப்படியே மனசுக்குள் தங்கி விடுகின்றன! இவரின் வார்த்தை பிரயோகம் மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபட்டு நிற்கிறது, மனதுக்குள் அப்படியே மஞ்சமும் கொள்கிறது!

இவர் சிறுகதை, கவிதை தான் அதிகம் பதிந்து வருகிறார், சொல்ல வரும் எண்ணங்களை எளிமையாய் கொஞ்சம் அழுத்தமாய் சொல்லிச் செல்வது இவரின் சிறப்பு... அதற்கு இந்த கண்ணாடிக்குவளை  சான்று!


3) மனசு - சே. குமார் 

2009 லிருந்து பதிவுகளை எழுதி வருகிறார் நண்பர் பரிவை சே. குமார்.  இவரும் எந்த சமரசமுமின்றி அணைத்து விதமான பதிவுகளையும் எழுதி வருகிறார்! சமீப காலமாக சினிமா அதிகம் எழுதுகிறார்! 

குடி அரசு தின வாழ்த்துக்களில் இவரின் சமூக கோபம் தெளிவாய் தெரிகிறது,  அதே நேரத்தில் மழையில் உன் வாசம் இவரின் மெல்லிய மனம் புலப்படுகிறது , இன்னொன்று மண்ணின் மீதுள்ள நேசம், இப்போதுள்ள விலை நிலத்தின் நிலை கண்டு கலங்கும் ஆதங்கள் அனைத்தும்  இந்த வெற்றுடம்புடன் விளைநிலத்தில் காணலாம்!

அனுபவம் , மண்ணை பற்றி எழுதி இருக்கிறார் . அனைத்தும் நமது எண்ணங்களில் புதைந்து கொள்ளும் தன்மை இவரின் எழுத்துக்கு உள்ளது .....

4) சிட்டுக்குருவி  - விமலன் 

2010 லிருந்து எழுதி வருகிறார் , விருதுநகர் பகுதியை சார்ந்தவர். இவரின் எழுத்தின் சிறப்பம்சம் என்னவெனில் பெரும்பாலும் கற்பனையை தவிர்த்து தான் அனுபவித்த / கண்ட நிகழ்வுகளை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துவார் எழுத்தின் ஊடாக... சில விடயங்களை சொல்வதில் பெரும் கெட்டிக்காரர்... 

தூவானம் இதில் உள்ள எதார்த்தம் நம்மை வசீகரிக்கின்றன, காலக்கண்ணாடி.
தாம் சொல்ல வருவதை எந்த தடையுமின்றி எவ்வித தயக்கமுமின்றி கூறுவதில் தேர்ந்த எழுத்தாளர். கேக் இதையும் பாருங்க இவரின் எழுத்தின் வளம் தெரியும். 

இவரின் கவிதையை படித்து முடித்த பின்னர் மனத்தில் எழும் சலனம் அடங்க சற்று நேரம் பிடிக்கும், அந்த அளவுக்கு வீரியமும், கொஞ்சம் காரமும் இருக்கும் ... அதற்கு ஒரு துளி சான்றாக இந்த தூரம்...

5) பிம்பம் - சுதர்சன் சுப்பிரமணியம் 

2009 லிருந்து தனது வலைப்பக்கத்தில் எழுதிவருகிறார், இவரின் பதிவுகளும் அணைத்து கலந்த கலவைகளாகவே இருக்கின்றன. தமிழின் மீதுள்ள ஆர்வம் இவரின் எழுத்துக்களில் அங்கங்கே வெளிப்படுகிறது.

பாரதியை முழுமையாக படியுங்கள்  என்று மகா கவி கூறிய இலக்கிய செழுமைகளை நமக்கு விளக்குகிறார். திரையில் தெரியும் காட்சிகளை கண்டு மகிழும் நமக்கு சினிமா தியேட்டர் திரை பற்றி தொழில் நுட்பத்துடன் கொஞ்சம் விளக்கமாக நமக்கு விளக்கி இருக்கிறார்.

அடுத்து இந்து மதத்தை பற்றிய விளக்கத்தை கண்ணதாசனின் வரிகளோடு நமக்கு வழங்குகிறார் இதோ அர்த்தமுள்ள இந்து மதம் தொடர் 5 - சாதாரண வாழ்க்கையும் கடவுளும்


இன்றைய தினத்தில் நாம் கண்ட பதிவர்களை படித்து உற்சாகப்படுத்துங்கள் அன்பின் தோழமைகளே! மீண்டுமொரு பதிவில் சந்திப்போம் ...

உள்ளம் நிறை நன்றிகளுடன் 

அரசன் 
உ. நா. குடிக்காடு  

மேலும் வாசிக்க...

Monday, March 11, 2013

பெரு மகிழ்வுடன் சிறு அறிமுகம் ...

அன்பின் வலைச்சர , மற்றும் தமிழ் பதிவுலக நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள். எங்கோ, எப்படியோ இலக்கின்றி பொழுதை போக்கி கொண்டிருந்த என்னை, என்னின் துளி ஆர்வத்தைக் கண்டு எனக்கு, இளைய/இணைய தமிழின் பெருங்களமாகிய  பதிவுலகத்தை அறிமுகப் படுத்தி, இதுநாள் வரை கைப்பிடித்து வழி நடத்திச் செல்கிறார் எங்கள் மண்ணின் மைந்தர் திரு. கருணாகரசு, இப்படி தான் எனக்கு பதிவுலகின் முதல் அறிமுகம், அவரின் அந்த சிறு விதை இன்று எண்ணற்ற நட்புக்களை எனக்கு வழங்கி இருக்கிறது. 


புதுக்கணவன் மனைவி வீட்டுக்கு முதலில் செல்லுகையில் எந்த மாதிரி தயக்கத்தில், கூச்சத்தில் இருப்பாரோ அந்த அளவு தயக்கத்தில் இருந்த என் மன தயக்கத்தை உடைத்தெறிந்தது கடந்த வருடத்தில் சென்னையில் நடந்த பதிவர் மாநாடு. அனைவரிடமும் இயல்பாக பேசி கலக்க சந்தர்ப்பம் வழங்கிய நண்பர் குழுவினருக்கு நன்றியை தவிர்த்து சொல்ல வேறு எதுவும் வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.


மெத்தப் படித்தவனுமில்லை, தமிழின் பால் அதீத ஆர்வமுமில்லை. மொழியின் வீரியத்தை, அதன் தாக்கத்தை என்னுள் விதைத்தது சில நண்பர்களின் பேச்சும், அவர்களின் எழுத்தும். அதை பற்றி நாம் விரிவாக வரும் நாட்களில் காண்போம். சரி தோழமைகளே, வாருங்கள் நான் இதுவரை கிறுக்கிய மொத்த குப்பைகளில், தேறிய சிலதை பார்ப்போம். தவறுகள் இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து தயங்காமல் அடிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை முன் கூட்டியே உங்களுக்கு நினைவு படுத்த கடமை பட்டுள்ளேன்.

எனது ஆரம்பால கவிதைகளை என்னாலே மீண்டும் படிக்க இயலாது என்பதால் உங்களை இம்சிக்க விருப்பமின்றி என்னால் அதிகம் இரசிக்க பட்ட சில பதிவுகளை உங்களுக்கு என் அறிமுகமாக வழங்க விழைகிறேன்! அதில் ஒன்று தான் தாயில்லா ஒரு பெண் குழந்தையின் ஏக்கம் அம்மா இல்லா வீடு என்ற கவிதையில் கிறுக்க முனைந்தேன்!

அடுத்து களவு போன கடவுள், வரலாறாகும் வாழ்வு என்ற இரு பதிவுகளையும் எழுத சற்று சிரமப்பட்டேன். எனக்குள் நிறைந்த மகிழ்வை தந்த பதிவுகளும் கூட.. ஊரைவிட்டு சென்னை நோக்கி நகருகையில் மனம் சற்று சந்தோசத்தில் திளைத்தது என்னவோ உண்மை தான், பிறகு இங்கு அடைப்பட்டு கொண்டதும் மீண்டும் மனக்குரங்கு ஊரை பற்றி சிந்திக்கையில் எழுத ஆரம்பித்தது தான் ஊர்ப்பேச்சு  எனும் தொடர்...

அடுத்து எங்களது மண்ணின் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக நான் எடுத்த சில படங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன் ... அதையும் ஒரு எட்டு பார்த்துடுங்க .தோழமைகளே .. அடுத்து  சிதையும் கலைத்தமிழ் என்ற கிறுக்கலையும் கிறுக்கி உள்ளேன்.

பெரும்பாலானவர்களை சுழற்றிப் போடும் காதல் என்னையும் விட்டுவைக்கவில்லை, அதை மையப்படுத்தி சிலவற்றை புனைந்துள்ளேன். அவற்றுள் சில உங்களின் பார்வைக்கு 

செம்மண் தேவதை

அப்படியே உன்னையும்

சின்ன சின்ன ஆசைகள்

மேலும் இந்த வாய்ப்பை வழங்கி என்னை பெருமை படுத்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கும், என்னை இந்த வாரம் முழுதும் தொடரப் போகும் நண்பர்களாகிய உங்களுக்கும் இந்த கிராமத்தானின் உள்ளம் நிறை நன்றிகளும், வணக்கங்களும்....

நிறை மகிழ்வுடன், 

அரசன் 
உ. நா குடிக்காடு  


மேலும் வாசிக்க...

Sunday, March 10, 2013

சே. அரசன் - வே.நடனசபாபதியிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பேற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் வே.நடனசபாபதி தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த கவனத்துடனும் ஈடுபாட்டுடனும் சரிவர நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர்  சிரித்து வாழ வேண்டும், அனைவருக்கும் கல்வி, உடல் நலமே உண்மையான சொத்து, ஆளுக்கொரு வீடு, நெசவுத்தொழிலுக்கு வந்தனை செய்வோம், சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், மலரும் நினைவுகள் என்ற ஏழு தலைப்புக்ளைக் கொண்டு - தலைப்பு தொடர்பான பதிவுகளைத் தேடிப்பிடித்து - படித்து இரசித்து - இங்கு அறிமுகப் படுத்திய விதம் நன்று. 

தலைப்பினைப் பற்றிய ஒரு அறிமுகம் கொடுத்த பின்னரே - தலைப்பு தொடர்பான மற்ற பதிவுகளை அறிமுகம் செய்து வைத்த விதமும் நன்று. 

இவர் எழுதிய பதிவுகள்                              : 7
இவர் அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 60
இவர் அறிமுகப் படுத்திய பதிவுகள்    : 84 ( சுய அறிமுகப்பதிவுகள் உட்பட ) 

இவரை துவக்க காலத்தில்  ஊக்குவித்த நண்பர்களையும், இவரை வலைச்சரத்தில் முன்னரே அறிமுகப்படுத்திய அனைத்து நண்பர்களையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்த நற்ப்ண்பு பாராட்டத் தக்கது.  

வே.நடனசபாதியினை வாழ்த்தி விடை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் நண்பர் சே.அரசன். 

மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் இவரது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு இவரது சிற்றூர். இவரது பெயர் சே.அரசன்

2010 லிருந்து பதிவுலகத்தில் இருந்து வருகிறார். இவருக்கு பதிவுலகத்தை அறிமுகம் செய்து வைத்தவர் , ஒரே ஊர்க்காரரும், நெருங்கிய சொந்தக்காராருமாகிய திரு. கருணாகரசு அவர்கள் தான். 

தற்பொழுது சென்னையில் உள்ள மருத்துவமனையில் பணி செய்து வருகிறார். 

இவர் ”கரை சேரா அலை” என்னும் பதிவில் எண்ணங்களைப் பகிர்கிறார். -  

கழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றித் திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை  மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது. 

விரைவினில் கூண்டிலிருந்து வெளி வர இறையருள் துணை புரிய பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள். 

சே.அரசனை வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் வே.நடனசபாபதி 

நல்வாழ்த்துகள் சே.அரசன் 

நட்புடன் சீனா 






மேலும் வாசிக்க...

சிரித்து வாழவேண்டும்! – ஏழாம் நாள் – விடை பெறும் நாள்

சிரிப்பு என்பது மனித குலத்துக்கே கிடைத்த ஒரு பெருங்கொடை.இது மற்ற எந்த உயிரினங்களுக்கும் கிடைக்காத ஒரு பெரும்பேறு.

சிரிப்பதால் பல நன்மைகள் உண்டு என சொல்லக் கேட்டிருக்கிறோம். சிரிப்பதால் உடல் வலி மற்றும்  மன அழுத்தம் குறைகிறதாம். மேலும் சிரிப்பு, மன அழுத்தம் தரும் ஹார்மோன்களைக் குறைக்கிறதென்றும், தடுப்பாற்றல் உள்ள திசுக்களை அதிகரிக்கிறதென்றும், இரத்த நாளங்களின் செயலாற்றல்களை செம்மைபடுத்தி, இரத்த ஓட்டம் சீராக வழி செய்வதால் இதய வலி வருவதையும் தடுக்கிறது  என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.

எனவே நாள்தோறும் சிரிப்போம் நலமுடன் வாழ!

சிரித்து வாழவேண்டியதுதான் ஆனால் அந்த சிரிப்பை பிறர் மனத்தை நோகடித்து அல்ல. நம்மில் பலர் மாற்றுத்திறனாளிகளை நையாண்டி செய்தும், பிற மொழியை, பிற மதத்தை,பிற சாதியை  அல்லது அவர்களது நம்பிக்கையை கிண்டல் செய்தும் நகைச்சுவை என்ற பெயரில் சொல்லியும் எழுதியும் வருகிறோம்.

சமீபத்தில் எனக்கு வந்த மின்னஞ்சலில் வந்த ஒரு நிகழ்வு பற்றிய தகவலை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ( அநேகம் பேருக்கு இது தெரிந்திருக்கலாம். இருப்பினும் நல்லதை திரும்பவும் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.)

“தென்னிந்தியாவிலிருந்து விடுமுறையை கழிக்க தில்லிக்கு சென்ற கல்லூரி மாணவர்கள் சிலர் தில்லியை சுற்றிப்பார்க்க ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த டாக்ஸின்  ஓட்டுனர் ஒரு வயதான சீக்கியராக இருந்ததால் அவரை கிண்டல் செய்யும் நோக்கில் அன்று முழுதும் சர்தார்ஜி நகைச்சுவையை சொல்லி அவரை வெறுப்பேற்ற நினைத்திருக்கிறார்கள். 
  
ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லையாம்..அவர்களது சுற்றிப்பார்க்கும் வேலை முடிந்தவுடன் அவர்கள் அவரிடம் வாடகைப் பணத்தை தந்திருக்கிறார்கள். 

அவர் பாக்கியை திருப்பித்தரும்போது, ஒவ்வொருவருக்கும் பத்து ரூபாய் தாட்களை கொடுத்துவிட்டு சொன்னாராம்.’தம்பிகளா! இன்று முழுதும் நீங்கள் சர்தார்ஜி நகைச்சுவை என்ற பெயரில் சொன்ன ஜோக்குகளில் சில அசிங்கமானவை. இருப்பினும், எனக்கு கோபம் வரவில்லை. காரணம் நீங்கள் இளைஞர்கள். இன்னும் வெளி உலகை அறியாதவர்கள் என்பதால் தான். ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் உங்களிடம் வைக்கிறேன். நான் கொடுத்த இந்த பத்து ரூபாய் தாளை இந்த  ஊரிலோ அல்லது வேறு எந்த ஊரிலோ நீங்கள் சந்திக்கும் ஒரு பிச்சைக்கார சர்தாரிடம் கொடுங்கள் அது போதும்.’ என்றாராம்.

பிச்சையெடுக்கும் சர்தார் எவரையும் இதுவரை காணமுடியாததால் அவர்களிடமே அந்த பணம் இருக்கிறதாம்!”

எனது நண்பர்  ஒருவர் சொன்னார். இலண்டனில் வேலை தேடி அலையும் இந்தியர்கள் (சொன்னால் நம்பமாட்டீர்கள். இதில் டாக்டர்களும் அடக்கம்) வேலை கிடைக்கும் வரை அங்குள்ள குருத்துவாராவில் தான் இலவச உணவை சாப்பிடுகிறார்களாம்!

இதோ ஒரு புள்ளி விவரம். இந்தியாவில் கட்டப்படும் வருமான வரியில் 33 சதம் கட்டுவோரும், அறக்கட்டளைக்கு செலவிடுவோரில் 67 சதம் செலவிடுவோரும் இராணுவ சேவையில் இருப்போரில் 45 சதமும்  தினம் 60 இலட்சம் மக்களுக்கு 59,000 க்கு மேற்பட்ட குருத்துவாராக்கள்  மூலம் இலவச உணவு தருவோரும் இந்திய மக்கட் தொகையில் 1.4 சதம் உள்ள சீக்கியர்களே என்பதை அறியும்போது இவர்களையா நாம் கேலி செய்கிறோம் என வெட்கப்படத்தான் வேண்டும்.

சக மனிதனுக்கு உதவிடும் சர்தார்ஜிக்களைப் பற்றி மனம் போன போக்கில் நகைச்சுவை என்ற பெயரில் நையாண்டி செய்து சிரிப்பது சரியா என சிந்திக்க வேண்டும்.  இந்த இழி செயலை யார் எப்போது ஆரம்பித்தார்கள் என்பது  தெரியவில்லை. இனி பதிவுலகத்தில் நாமாவது அதை எழுதாமல்  விடுவதன் மூலம்  அவர்களுக்கு  மரியாதை தருவோம்.
                              --------
இனி சில நகைச்சுவை மற்றும் பல்சுவைப் பதிவர்கள் பற்றி இன்று பார்ப்போம். 


1.வாழ்க்கைப் பாதையில் எதிர்ப்படும் சாதாரணர்களில் ஒருவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ‘மின்னல் வரிகள்’ வலைப்பதிவின் பால கணேஷ் அவர்கள் அசாதாரணமானவர். இவர் சினிமாவில் தொடங்கி கதை, சிறுகதை, நகைச்சுவை,நூல் மதிப்பீடு, ஆன்மீகம், எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கதைகள் வரை அலசாத விஷயங்களே இல்லை.இருந்தாலும் இவரது நகைச்சுவை பதிவுகள்தான் எல்லாவற்றையும் விட பிரபலமானவை மொறு மொறு மிக்ஸர் என்ற தலைப்பில் இவர் எழுதும் பதிவும். சரிதாவும் நானும், நடைவண்டிகள் என்ற தொடர்களும் எல்லோராலும் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டவை.  பதிவுலகில் உள்ள மிகச் சில நகைச்சுவை பதிவர்களில் இவரும் ஒருவர். இவரது நகைச்சுவைக்கு ‘சாம்பிள்’ கேட்டால் பல்’லவனோடுஒரு யுத்தம் என்ற இந்த பதிவை சொல்லுவேன். இவரின் இன்னொரு வலைப்பதிவு மேய்ச்சல்மைதானம் ஆகும் 

2. தினம் ஒரு தகவல் தந்த திரு  தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள்  போல், தினம் ஒரு சுவாரஸ்யமான தகவல்களைத் தருவதில் இவர் மன்னர். தனது இருப்பிடமான அரசர்குளம் பெயரிலேயே அரசர்குளத்தான் என்ற வலைப்பதிவில் பதிவிட்டு வரும் ரஹீம் கசாலி அவர்கள் 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 500க்கு மேற்பட்ட பதிவுகளைத் தந்திருக்கிறார்.  என்னைப்பற்றி என்ன சொல்ல என்று அவர் சொன்னாலும், வேறொரு இடத்தில் பதிவில் வெளியாகும் கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்துக்கள்  என்றும், தன் மனதில் தோன்றியதை எழுதியிருப்பதாகவும் , தவிர யார் மீதும் திணிக்க அல்ல என்று கூறி தான் யார் என்பதை சொல்லிவிட்டார். இவரது பதிவில் அரசியலும் உண்டு. சினிமாவும் உண்டு. ஆனால் இவருக்கு விளையாட்டு பிடிக்காததால், விளையாட்டு சம்பந்தப்பட்ட செய்திகள் மட்டும் இருக்காது. மின்வெட்டை சமாளிக்க சுலபமான வழிகளும் ஜெயலலிதாவின் அறிக்கையும் என்ற பதிவு போதும், நையாண்டி செய்து பதிவிடுவதில் இவருக்கு நிகர் இவர் தான் என்பதை நிரூபிக்க. 

3. ‘படிக்க ... ரசிக்க ... சிரிக்க ... சிந்திக்க கடைசியாக தலையில் அடித்துக்கொள்ள வாருங்கள்’ என அவர்கள் உண்மைகள் என்ற வலைப்பதிவுக்கு நம்மை அழைக்கும் மதுரை தமிழன்( Madurai Tamil Guy ) இருப்பது ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில். இலவசமாக பல்சுவை தகவல்களைத் தந்து  இதயங்களை கொள்ளை அடிக்கும் இணையதளம் என தனது வலைப்பதிவு பற்றி இவர் சொல்வது உண்மைதான். பல் வேறு தலைப்புகளில் 600 க்குமேல் பதிவிட்டிருக்கும் இவர் நகைச்சுவை என்ற தலைப்பில் இட்ட  பதிவு மட்டும்  178. இவரது நகைச்சுவை பதிவுகள் பெரும்பாலும் அங்கதம்(Satire) வகையை சேர்ந்தவை. உலகம் ஏண்டா அழியலை..... என்ற இந்த பதிவும் அந்த வகைதான்.

4. ஜோக்காளி என்ற பெயரில் வலைப்பதிவு வைத்திருக்கும் திரு K.A.பகவான்ஜி அவர்கள் 2012 ஆம் ஆண்டிலிருந்து சிரிங்க ... சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க என்று பதிவிட்டுக்கொண்டு இருக்கிறார்.. இந்த பதிவில் வெவ்வேறு தலைப்புகளில் எழுதினாலும் தின ’சிரி’ ஜோக் என்ற தலைப்பில்தான் அதிகமாக பதிவிடுகிறார். இனி சர்தார்ஜி ஜோக்குகளை பதிவிடாதீர்கள் என்பதுதான் இவரிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள்.

5. படைப்பாளி  என்பதை புனைபெயராகவும் வலைப்பதின் பெயராகவும் வைத்திருக்கும் பாலாஜி அவர்கள் ஓவியக்கல்லூரியில் முதுகலை(MFA) படித்தவர். கதை, கவிதை என்ற பெயரில் சில ‘கிறுக்கல்களை’ (இது உண்மை அல்ல!) படைப்பதாக சொல்லும் இவர் முதலில் ஒரு ஓவியன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார். வண்ணங்கள் என்ற தலைப்பின் கீழ் இவர் வெளியிட்டுள்ள வெண்தாடிவேந்தர் என் கை வண்ணத்தில் என்ற படமும், மொபைல் போன்இலவசம் என்ற இந்த கேலிச்சித்திரமும் இவர் ஓவியன் என்று பெருமைப்படுவது சரிதான் என்று சொல்லாமல் சொல்கின்றன.  

6. மைத்துளிகள் என்ற வலைப்பதிவில் 2010 ஆம் ஆண்டிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் இளைய பதிவர் மாதங்கி மௌலி  அவர்கள் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிகிறார். Music method and madness மற்றும் LIGHTER SIDE என்ற இரண்டு வலைப்பதிவுகளிலும் எழுதிக்கொண்டு இருக்கிறார். இது என் எழுத்து. இது என் கருத்து. இவை என் மைத்துளிகள்... என அழுத்தம் திருத்தமாக சொல்லும் இவரது மைத்துளிகள் என்ற முதல் பதிவே இவர் ஒரு வித்தியாசமாக சிந்திக்கக்கூடியவர் என எண்ணத்தோன்றுகிறது.  

7. இந்த பதிவுலகில் காலடி எடுத்து வைக்க உதவியவர் மதிப்பிற்குரிய அப்துல் சலாம் மஸ்தூக்கா அவர்கள் என்றால், தமிழில் தட்டச்சு செய்ய உதவியவர் சூர்யா கண்ணன் அவர்கள். அவர் பெயரிலேயே உள்ள வலைப்பதிவில் கணினிசார்ந்த தொழில்நுட்ப பதிவுகளை இட்டு வந்தார். 2௦09 ஆம் ஆண்டிலிருந்து பதிவிட்டு வந்தவர் ஏனோ தெரியவில்லை 2012 ஆம் ஆண்டுக்குப்பிறகு எதுவும் பதிவிடவில்லை. "லதா" எழுத்துருவை பயன்படுத்தி நமக்கு தேவையான தமிழ் கோப்புகளை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கிய இலவச  Microsoft Indic Language Input Tool பற்றிய Microsoft: பயனுள்ள தமிழ் உள்ளீட்டு கருவி! என்ற பயனுள்ள பதிவால் என்னால் சுலபமாக தமிழில் நினைத்ததை எழுத முடிகிறது. உங்களில் சிலருக்கும் அது உபயோகமாக இருக்கலாம். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                 -----------
நண்பர்களே! விடை பெறும் நேரம் வந்துவிட்டது. விளையாட்டாக ஒரு வாரம் ஓடிவிட்டது. நண்பர் திரு சீனா அவர்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்தேனா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் நான் அதை சிரத்தையாய் செய்தேன் என்பது மட்டும் உறுதி.

இந்த பொறுப்பை தந்த நண்பர் திரு சீனா அவர்கட்கும், இந்த வாரம் முழுதும் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நாளை வலைச்சரம் ஆசிரியராக பணியேற்கும் நண்பரை வரவேற்று, உங்களிடமிருந்து விடை பெறுகின்றேன்.

வணக்கம்!

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது