07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

முந்தைய ஆசிரியர்கள்


சிந்தாநதி

Error loading feed.

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, March 15, 2008

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள"

"பெண்ணிற் பெருந்தக்க யாவுள !!"

இது பெண்கள் மாதம்!

எல்லாத் துறைகளிலும் தங்கள் முத்திரையைப் பதித்துவரும் பெண்கள் வலைப்பூக்களையும் விடவீல்லை! வலைத்தளத்தில் தங்கள் பூக்களை விரித்து மணம் பரப்பி வரும் பெண் பதிவர்களைப் பற்றி எழுத எண்ணினேன்! யாரைச் சொல்வது, யாரை விடுவது என ஒரே குழப்பம்! பாரபட்சமின்றி எல்லாரையும் எழுதலாம்னு பார்த்தா, இன்னிக்கு பூரா எழுதிக்கிட்டே இருக்கணும்! எனவே, இதோ நான் படிக்கும் ஒரு சில பெண் பதிவர்களைப் பற்றிய சிறு குறிப்பு!

"கயல்விழி முத்துலட்சுமி"
இனிய நல்ல பதிவர்! இவர் தொடாத தலைப்பே இல்லை! ஆனாலும் அடக்கமானவர்! பன்முகம் கொண்ட இவர் எல்லார்க்கும் நல்லவர்! திரைக்குப் பின்னால் இருந்து இவர் ஆற்றிவரும் பணி அளப்பரியது! எனக்கு இவர் செய்திருக்கும் உதவிகள் என்றுமே என்னால் நன்றியுடன் நினைவு கூறத் தக்கது!

"செல்வி ஷங்கர்"
புதிய பதிவர் என்னும் உணர்வே வராமல் எழுதும் ஒரு இனிய பதிவர். இலக்கியம், வள்ளுவம், கவிதை எனப் பல முகங்களைக் காட்டுகின்ற இவரது பதிவுகள் ஒரு இனிய உணர்வைத் தருவதென்னவோ நிஜம்! நல்ல தரமான பதிவுகள் இவரிடமிருந்து வரும் என எதிர்பார்க்கிறேன்!

"முத்துலட்சுமி"
தன் நிலையைத் தான் உணர்ந்த பின்னர், தன்னுள் விளைவது ஒரு தன்னம்பிக்கை! இவரது பதிவுகளப் படித்தால் இது உங்கள் எல்லாருக்கும் புரிய வரும்! நியாயமான கோபத்தையும் இவர் பாங்காகத் தெரிவிக்கும் விதம், பெண்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும்!

"மதுமிதா"
அபரிமித அறிவு இருப்பது ஒரு விஷயம்! அதைத் தெரிவிப்பது மற்றொரு விஷயம்! எடுத்துக் கொண்ட தலைப்புகளை இவர் அலசி ஆரய்ந்து அளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடம்! சொல்லப்போனால், இவரது ஒரு 10 பதிவுகளாவது படித்து உணர்ந்த பின்னரே எவருமே பதிவெழுத வரலாம் என ஒரு சட்டம் வந்தால் கூட சரியோ என நினைக்கிறேன்! அந்த அளவுக்கு இவரது பதிவுகள் ஆளுமை வாய்ந்தவை என்றல் மிகையில்லை!

"பத்மா அர்விந்த்"
மிக மிகப் படித்தவர்! பொறுப்பான ஒரு வேலையில் இருப்பவர்! தனக்குத் தெரிந்தது மற்றவருக்கும் பயன்படட்டுமே எனத் துடிப்பவர்! பொதுநலச் சேவையில் தன்னை அர்ப்பணித்தவர்! இவரது பதிவுகள் எல்லாமே ஒரு ஆழ்ந்த சிந்தனையை உங்களுக்குள் உருவாக்கும். இவரை நான் சந்தித்து உரையாடியது ஒரு இனிய அனுபவம்!! தவற விடாதீர்கள்!"

"வல்லி நரசிம்மன்"
தமிழில் எழுதுவதையே தன் மூச்சாகக் கொண்டவர்! திருமாலின் பத்து அவதாரங்களையும் தன்னுள் கொண்டவர்!! ஆமாம்! தான் ஆசையுடன் வளர்க்கும் மீன் தொடங்கி, நடுவில் ஒரு நரசிம்மனையும் தனதாக்கிக் கொண்டு, சித்திர ராமாயணம் வரைந்த அருந்தகையவர்! எந்தத் தலைப்பிலும் எழுதக்கூடிய புலமை படைத்தவர்!

"ராமச்சந்திரன் உஷா"
தமிழ் வலைப் பதிவுலகில் மிகவும் அறிந்த ஒரு பெயர்! தளராது எழுதிக் குவிப்பவர்! தமிழ்மணம், தேன்கூடு, நிலாச்சாரல், தமிழ் ஓவியம், வெகுஜன பத்திரிக்கைகள் என இவர் எழுத்து புகாத் இடமே இல்லை எனச் சொல்லலாம்! எத்தனையோ சோதனைகளத் தாங்கியும்,ஒரு பெண்ணுக்கே உரித்தான அததனை தைரியத்துடன் அனைத்தையும் எதிர் கொண்டவர்! இவரது காலத்தில் நாமெல்லாமும் வலைப்பூ எழுதுகிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை!

"கீதா சாம்பசிவம்"
"தலைவி" என அனாஇவராலும் அன்புடன் அழைக்கப்படும்ம் இவர் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர்! ஆன்மீகப் பதிவின் இலக்கண்ணம் என இவரை நான் கொள்வேன்! ஒரு குழந்தையாய், விறுவிறுப்பான இளைஞியாய், முதிர்ந்த ஆன்மீகப் பழமாய் பன்முகங்களில் இவரது எழுத்துகள் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்! இவரை நான் சந்தித்து பழகியது எப்போதும் என் நினைவிருக்கும்!

"மதுரா"
புரட்சியின் மொத்த உருவம்! இவரைப் போல் எழுத மாட்டோமா என பல பெண் பதிவர்களையே ஏங்க வைத்தவர்! இப்போது ஏதோ சில காரணங்களினால் தமிழில் பதிவிடவில்லை! ஆனால், ஆங்கிலப் பதிவுகள் எழுதி வருகிறார்!! மீண்டும் நம்மை எல்லாம் மகிழ்விக்க இவர் வர வேண்டுமெனவிரும்புகிறேன்!

"துளசி கோபால்"
தமிழ்ப் பதிவுலகக் கடவுள் என இவரை நான் வைக்கிறேன்! 'டீச்சர்' என அன்புடன் எல்லாராலும் அழைக்கப் படுபவர்! அதை முழுக்க முழுக்க நியாயப்படுத்துபவரும் கூட! விரிவான, சுவையான், கண்ணைக் கவரும் படங்க்களுடன் இவர் அளிக்கும் பதிவுகள் எப்போதும் இன்பம் பயப்பவை!
எல்லாருக்கும் நல்லவர்! வல்லவரும் கூட!


"பொன்ஸ்"
எனது இனிய நண்பர்! பல சண்டைகள் இவருடன் போட்டிருக்கிறேன்! ஆனாலும், இன்றும் என் நலம் விரும்பும் ஒருவர்! யானையின் மேல் ஆஅசையுள்ளவர்! யானை போலவே நினைவாற்ற்றல் மிக்கவர்! கதை, கவிதை, கட்டுரை என இவர் எழுதியவை எல்லாமே மிக மிக நல்ல பதிவுகள்!


விட்டுப் போனவர் இன்னமும் எத்தனையோ பேர்! எல்லாரையும் சொல்ல இங்கு இடம் போதாது என்பதால் விடுக்கிறேன்! ஆனால், எல்லாருமே படிக்கத் தக்கவர்!

பெண்மையே நீ வாழ்க!

9 comments:

  1. என்னங்க விஎஸ்கே.

    எழுத்துப்பிழையா? ஒரு 'க்' கூடுதலா
    வந்துருச்சோ?

    //வைக்கிறேன்//
    இதைத்தான் சொல்றேன்:-)))))

    யாரையும் விட்டுவைக்கலை போல இருக்கு!!

    ReplyDelete
  2. இவரது காலத்தில் நாமெல்லாமும் வலைப்பூ எழுதுகிறோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை//
    அடடா :-))))))))

    ReplyDelete
  3. வி.எஸ்.கே சார், நீங்கள் குறிப்பிட்டுள்ள பெண் பதிவர்களில் சில பேர் இப்போது எழுதுவதில்லை.

    இந்தப் பதிவைப் பார்த்தால் அவர்கள் மீண்டும் எழுதத் துவங்கிவிடுவார்கள்!

    உங்கள் பாராட்டு வரிகளால் பதிவைப் படிப்பவர்களையும் சேர்த்து ***நனைய வைத்துவிட்டீர்கள்

    (*** இன்ப மழை!)

    ReplyDelete
  4. இதுவரை வந்த இரண்டு தொகுப்புகளும் அருமை.

    இந்த மூத்த பதிவர்களைப்போல் சமீப காலத்தில் எழுதத் துவங்கியிருக்கும் பெண் பதிவர்களும் சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. "நல்லன சொல்வதில் நடுக்கமில்லை" நம்ம பாலிஸிங்கோ, டீச்சர்!
    நான் ஏன் உங்களை வையப் போறேன்!
    உள்ளதத்தான் சொன்னேனுங்கோ!:))

    ReplyDelete
  6. அதுதான் என் ஆசையும் ஆசானே!
    "கனவு மெய்ப்படும்!"

    ReplyDelete
  7. டீச்சருக்குச் சொல்லியிருக்கும் அதே பதில்தான் உங்களுக்கும் உஷா அவர்களே!

    ReplyDelete
  8. நன்றி திரு.ஜீவா. பதிவில் சொன்னது போல, எடுத்துச் சொல்ல இன்னும் பல பதிவர்கள் இருக்கிறார்கள்.. நேரமின்மையும், இடமின்மையும் தன் காரணம்.

    ReplyDelete
  9. நன்றி வீஎஸ்கே அவர்களே - புதியவளான என்னையும் ஒரு பதிவராக மதித்து அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி. மேலும் தரமான நல்ல பதிவுகள் தர, தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற, முயற்சிக் கிறேன். நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது