07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 31, 2009

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - III

Sathya
சத்தியா – இவர் அதிகம் forumங்களில் எழுதுவார் அதுவும் ”நிசப்தமாக”. wordpress கவிஞர் இவர். என் தாயுமானவனே! எதை மறக்க சொல்கிறாய் என கேட்கிறார், இந்த உலகத்தில் யாரழுது யார் துயரம் மாறும்…?

ப்ரதீபா – என் இதய வாசலில் உன் சப்தம் கேட்கிறது என்று கவிதையாய் வரவேற்பு. மறந்துவிட்டாயா கொடுமைக்காரா...! மெளனங்கள்....கலையட்டும்.

காயத்ரி – பிரிவையும் நேசிப்பவர். இவர் காதல் காலங்களில் இதயத்திருடனோடு மௌன மொழியில் பேசுவார்.

லோகுவின் மறவாதே கண்மணி - கண்மணிக்கு.. இவரோட . . ல் த கா சை ஆ பார்த்து பொறாமை.. கொள்ளாதீர்கள்

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

Friday, January 30, 2009

அறிமுக(ப்) படலம் - IV

திகழ்மிளிர் My Photo My Photo My Photo

(இரண்டு பேரின் புகைப்படங்கள் இல்லை)

திகழ்மிளிர் மொழியாக்கம் செய்துள்ளது, மேலும் உறங்கியது போதும் , உயிர்த்தெழு என்று சொல்லி எட்டாத உயரம் பார்க்கசெய்கிறார்.

தமிழ்தினா – இவரை ஒரு கவிஞராக அறிமுகம் செய்கிறேன், இவர் ஊரை விட்டுப் போகையிலே! நல் இதயங்கள் வாழ்க!ன்னு சொல்லி கண்விழிப்பு வந்தபின்னே…! மனம் தெளிவாகட்டும்ன்னு சொல்றாரு.

MayVee – தினசரி வாழ்க்கை அப்படீன்னு எழுதுறாரு. சந்தோஷ செய்தின்னு சொல்லி ஒரு மரண … போய் பாருங்க. அப்புறம் முக்கியமா ‘நான்’ அப்படின்னு இவர் மேட்டர் காட்டியிருக்கார் அவசியம் பார்த்து பின்னூட்டுங்க. கடைசியா அவரோட ‘தற்கொலை’யையும் பார்த்திடுங்க.

Jas – How to name it அப்படின்னு கேட்கிறாங்க, பேர் வைங்க யாராவது. ஆங்கிலத்துல அதிகம் எழுதுவாங்க. தமிழும் இருக்கும். இவர்களுக்கு Complexion matters. அருமையான காத்திருத்தல்...., வீட்ல பல்பு இல்லாட்டி …

நம்மில் பலருக்கு வால் பையன் தெரியும்

இங்க ஒரு அன்புடன் வாலு இருக்காங்க. குழந்தை ஒரு கண்ணாடின்னு சொல்லி வளரும் வருங்காலம் பற்றி சொல்றாங்க. தகிரியமா ஞாயிற்று கிழமை செய்த கொலைகள் பற்றியும் சொல்லிட்டாங்க.

உஷா – காலச் சிறகுகள், இவரை சிந்திக்க வைக்கும் ஒரு வரியை பாருங்கள். இவர் வந்துவிடு...என்னை வாழவிடு!!!ன்னு சொல்லி உன்னோடு என் வாழ்வு! என்கிறார்.

 

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

அறிமுக(ப்) படலம் - III

My Photo My Photo My Photo எனது புகைப்படம்
வண்ணத்துப்பூச்சியார் – ”சினிமா உலகம் பற்றிய எனது பார்வைகள்” என்று சொல்கிறார். ரொம்ப சுறுக்கமா சொல்லலாம் இவரை. ஆங்கில படங்களின் தமிழ் விமர்சகர்.

ஹோஷியா - ’நமக்குள் இருக்கட்டும்’ அப்படின்னு சொல்லி துவங்குறாங்க. இவரின் "மை விழி அழகி"ய பாருங்க. இத யாரும் பாத்துடாதீங்க, மீறி பார்த்தீங்க யோசிக்கவச்சுட்டாங்கய்யா...ன்னு சொல்லுவீங்க. இவருக்கு பிடித்த வார்த்தை அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை.

கார்த்திக் – வானவில் வீதி-யில் அமர்ந்து கனா கண்ட காலங்கள் – 1 பற்றி யோசிப்பார். அதுவும் மார்கழி மாசத்துல. இவரோட ‘பச்சை’ அதாங்க க்ரீன் டமிலியன்ஸ் பாருங்க.

கணினிதேசம் – எனது எண்ணங்களின் பதிவுகள் என்று தலைப்பிட்டு பதிகிரார் - எங்கள் சுட்டியின் பிஞ்சு விரல்கள். இவர் சொல்லும் அறிவுரை சேமிப்போம்.

பிரியமுடன் பிரபு, இலக்கணம் படிக்கவில்லை தலைக்கனமும் எனக்கு இல்லைன்னு சொல்றாரு, காதல் காதல் காதல் அதுவும் இதே நாள், இதே மண்டபத்தில் அடியே கண்ணம்மா-ன்னு இவரு யார கூப்பிடறார்

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

Thursday, January 29, 2009

நானும் இவங்க ஜாதி …

இவங்க ஜாதிதான் நானும்ன்னு சொல்லிகிறதுல சந்தோஷம்ங்க

வலையில உலா வரும் போது நான் அதிகம் கவிதைகளையும், சில கதைகளையும், கொஞ்சமா கட்டுரைகளையும் பார்ப்பதுண்டு.

கிழே இருக்கும் இவர்களின் தளங்களையும் பாருங்கள். இனையத்தில் அதிகம் இருக்கக்கூடியவர்களுக்கு மிகவும் உதவும் விதமாக, இவர்கள் வழி முறைகளை சொல்கின்றனர். மென்பொருளுக்கும், வன்பொருளுக்கும் பல உதாரணங்கள் கொண்டு இவர்கள் விளக்குகிறார்கள். இந்த வரிசையில் முதன் முதலாக நான் (மட்டுமல்ல பலர்) அறிந்த ஆசான் பி.கே.பி.

-------------------------------------------------------------------------

இன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------


தமிழ்நெஞ்சம், இவரின் SQL பற்றிய தொடர் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று மிக எளிமையாக சொல்லித்தருகிறார்.

300 வகையான மென்பொருள்களின் சுட்டிகளை தொகுத்துள்ளார் இவர், பெயர் தெரியவில்லை.(தெரிந்தவர்கள் பின்னூட்டி சொல்லவும்). அழகிய முறையில் வகை(ப்)படுத்தி தந்துள்ளார். எல்லாமே இலவசம்.

ஸ்ரீ, இவர் தமிழ் மின் புத்தகங்கள் பலவற்றை தரவிறக்கம் செய்யும் வகையில் தந்துள்ளார்.

பாடும் குயில் - குழந்தைகளின் குதூகலத்தை பதிவு செய்ய... இங்கே சென்று பாருங்கள்

விஜய் பாலாஜி – இது ஒரு ஆங்கில வழி தகவல் தளம் XML பற்றிய இவரது கேள்வி பதில்கள்.

TamilhackX இவர் ஒரு வித்தியாசமான ஒரு புரோகிராம் ~ Unchrome அறிமுகம் செய்கிறார்.

தேன் தமிழ் இவர் கம்பியூட்டர் வைரஸ் : தடுப்பது எப்படி...? என்றும் சொல்லித்தருகிறார்.

Kricons – இங்கே சென்று பார்த்தால் மின் அஞ்சல்கள் உடனுக்குடன் கைப்பேசியில் எப்படி என்று அறியலாம்

வேலன்:-கம்யூட்டர் அகராதி பற்றி இங்கு பாருங்கள்.

சந்தோஷ் - இவர் மாணவர்களுக்காக Microsoft சுட்டியை Visual Studio 2008, SQL Server 2005,windows 2003 இலவசமாக வேண்டுமா? கொடுத்துள்ளார்.

இன்னும் பலர் இருக்கின்றனர். மேலே உள்ளவர்களும் பற்பல விடயங்களை பகிர்ந்துள்ளனர். சென்று பார்த்து பயன் பெறுவோம், அவர்களை மென்மேலும் உற்சாகப்படுத்துவோம்.

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

Wednesday, January 28, 2009

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - II






மேலும் சில எழுத்து(த்)தூறல்கள் வார்த்தை மழைகள். வந்து நினைந்து தான் பாருங்களேன்.

ஹேமா இவர்கள் வானம் வெளித்த பின் எழுதுவார்கள் அதுவும் என்னடா நீ...! என்று கேட்டு கொலை வெறியோடு ஒரு காதல்... செய்வாங்க. கடைசியில் உன் நினைவோடு... குழந்தைநிலாவுக்குப் பிறந்தநாள்... கொண்டாடினார்கள்.

ஸாவரியா செல்லமா காதல் பனித்துளிகள்! சொல்லுவாங்க அதுவும் உன் நினைவுகளில் நீந்தியபடி மழையெலாம் வாங்க!ன்னு கூப்பிடுவங்க. வேற இல்லையன்னா கேட்டா வேறென்னத் தெரியும்!ன்னு சொல்லுவாங்க


மது நான் எழுத நினைப்பதெல்லாம்... ஏதோ நினைவிலே.. வந்து நினைவின் நேசம் அறிந்து காதல் முயற்சி!கூட செய்தாங்க. கடைசியா காதல் நிரபராதி... ஆயிட்டாங்க.

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.


--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

எழுத்து தூறல்கள் கவி(ச்)சாரல்கள் - I

My Photo My Photo My Photo

காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் ...


என் நெஞ்சில் மட்டுமா, இது இல்லாதவர் யார் தான் உளர் இவ்வுலகத்தில்.

உள்ளே இருக்கும் காதல் சிலருக்கு வார்த்தை தூறல்களாக வந்து

நம்மையும் கொஞ்சம் நினைய(ச்) செய்கிறது.

குடையில்லாம வாருங்கள் அனைவரும் நினைவோம்.


இவங்கள பத்தி நான் வேற முன்னுரை கொடுக்கணுமா என்ன ...

புதியவன் – வானமே வசப்படும் அப்படின்னு சத்தம் போட்டு சொல்லுவார், நீங்களே போய் பாருங்களேன். ஒரு மழைத்துளியின் போராட்டம் இன்னும் ஒலிக்கிறது எல்லாம் நியூட்டனின் காதல் விதிகள் தான். கொஞ்சூண்டு வெட்கங்களும் சில முத்தங்களும்...

ஸ்ரீமதி கரையோரமா கனவு காணுபவர் வலையுலகின் செல்லத்தங்கை, சின்ன தங்கை.துளி காதல்-ளோடு தாய்மை பற்றி சொல்லியிருக்கார்.கரையோர கனவு இப்போ கரை காதல்-ஆயிடுச்சு. அழகான ஊடல்களும் காதலே...!!

சரவணக் குமார் குறிப்புகளை திணிப்பார். அதிகம் சோக கீதம் தான் இருப்பினும் சூடான தேநீரும் உன் முத்தமும்... யாருக்கு கொடுத்தார் தெரியுமா கொடிய ராட்ஷசி... அவர் குடுத்த தேநீர்ல செத்தொழிந்தது. கடைசியா குட் நைட்... (உயிரோசை கவிதை) சொல்லிட்டார்.


அறிமுக(ப்) படலம் ... I
அறிமுக(ப்) படலம் - II
கதை கேளு கதை கேளு ...

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

(மூன்று அறிமுகங்களிலும் ஒரு ஒற்றுமை உள்ளது ...)

--- இன்னும் விரியும்.

மேலும் வாசிக்க...

Tuesday, January 27, 2009

கதை கேளு கதை கேளு ...

My Photo My Photo My Photo எனது புகைப்படம்

கதை என்றவுடன் சில பெயர்கள் நம் அநேகர் நினைவுக்கும் வரும். அதில் சிலர் ...

கிரிக்கட் மேட்ச் பார்க்கும் போது, சிறந்த நிகழ்வுகளை ரீப்ளே செய்வது போல் …

இவர்களை பற்றி பலர் சொல்லியிருந்தாலும் நானும் ஒரு ரீப்ளே போட்டுக்குறனே

சில புதியவர்களை அறிமுகப்படுத்தியது போல், இவர்களை அவர்களை போன்ற புதியவர்களுக்காக அறிமுகம் செய்கிறேன்.

திவ்யா காதலுடன் கூடிய தொடர்கதைகள் ஊடே கவிதைகளும், விருவிருப்பாக. இப்போ என் வசம் நானில்லைன்னு சொல்றாங்க. நட்புக்காக தொகுத்த அப்பாவை பாருங்கள்.

ஜி இவர் கதைகள் அதிகம் பேர் படித்துதான் இருப்போம், ரகு தாத்தா படிங்க. அத்தை மகள்ல பாருங்களேன். நீண்ட வெயிளுக்கு பின் அடை மழை விடுபட்டவைகளோடு

நசரேயன் வெளிவராத படத்துக்கு எழுதின விமர்சணம் பாருங்களேன். எந்திரனையும் விட்டுவைக்கல.

இராம் இவர் ஒரு காமிரா கவிஞர் ஆனாலும் இவர்கிட்ட மாணிக்க மலர் இருக்கு. வண்ணதாசன் ஏற்படுத்திய பாதிப்பு. வட்டார தமிழ்ல நன்னீர் வயல் இருக்கு பாருங்க.

காஞ்சித் தலைவன் இவர் சரித்திரத்தொடர் மிக பிரசித்தம், இவர் கிறுக்கியது இங்கே. காதலில் விழுந்து மாட்டிக்கனுமா இங்கே வாங்க.

அப்புறம் வழமை போல தான்


அறிமுக(ப்) படலம் – I
அறிமுக(ப்) படலம் – II


1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.


--- இன்னும் விரியும்

மேலும் வாசிக்க...

Monday, January 26, 2009

அறிமுக(ப்) படலம் - II












அபுஅஃப்சர் - என் உயிரே என்ற வரவேற்புடன் வலைகிறார் இவர் கருவறை குழந்தை சொல்லும் கவிதை இருக்கு. சிறந்த வழிக்காட்டியாக தனது தந்தையை அறிமுகப்படுத்துகிறார். நல்லா கனவுகாண்பார் இவர்.

து. பவனேஸ்வரி - கணைகள் இவர் எழுதும் கவிதைகளில் விரக்தி தெரிக்கும். இவர் வார்த்தைகளை கையாளும் விதம் மிக அருமையாக இருக்கும். ”நீ இல்லாததால்” என்னவாயிற்று எனப்பாருங்கள். இவர் எழுதும் தொடர்கதை மிகவும் விருவிருப்பாக செல்கின்றது எங்கே செல்லும் – அது இன்னும் தெரியவில்லை.

ப.அருள்நேசன் - எனது ஈழத்து தோழர், மாணவர் இவர். இந்த வயதுக்குறிய விடயங்களை அதிகம் அனுபவிக்க இயலாமல் ஈழத்தின் நிலையை தன் வார்த்தைகளில் வடித்திருப்பார். என் ஒருவனுக்குள்ளே யார் என்று பாருங்கள். நகரத்தை தின்ற சாத்தானை பாருங்களேன்.

அ.மு.செய்யது - மழைக்கு ஒதுங்கியவர் இவர் அதுவும் வெட்டவெளியில் நனைவதற்காக, இன்று ஒரு நாள் மட்டும்னும் சொல்லுவார், நெல்மணியிடம் அன்பாக இருப்பார். ஜீவகாருண்யம் பற்றி சொல்கிறார்.

சாய்ரபாலா - கடல் புறாங்க இவரு, காதலின் காதலன் என சொல்லும் இவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது என்னை என்னாக்கியவன், இப்படி பண்ணாதான் லவ்-வுன்னு சொல்றாரு. இவர் கண்ட கனவு எப்படி இருக்கு.


இன்னும் இன்னும் வரும் - தினம் வாருங்கள். பார்த்துட்டு சும்மா போகக்கூடாது

1) ஓட்டு போடனும்

2) பின்னூட்டனும்

3) அறிமுக நாயகர்களின் வலைகளையும் பார்வையிடுங்க புடிச்சிருந்தா அவங்களுக்கும் பின்னூட்டுனும்.


--- இன்னும் விரியும்

மேலும் வாசிக்க...

அறிமுக(ப்) படலம் ... I







My Photo



பி.கே.பி வழிதான் ப்லாக் என்பதை அறிந்தேன். நாமும் தொடங்களாமே (அதன் தொழில் நுட்பத்தை அறியும் நோக்கில்) என்று துவங்கி வைத்தேன். ஆரம்ப காலங்களில் வலையில் கிடைத்த தகவல்களை சுட்டியுடன் போட்டு வெளியிட்டேன்.

இப்படித்தான் எமது வலைப்பயணம் துவங்கியது இனி …

நானே வலையுலகத்திற்கு புது அறிமுகம் தான்,

நான் அறிமுகப்படுத்தும் சிலர் ...

இராகவன் - பின்னூட்டம் மட்டுமே அளித்து எல்லோரையும் ஊக்குவித்தவர். இவர் ஒரு நைஜீரியா வரவு. பின்னூட்டம் அளிப்பதில் உள்ள தர்மத்தை பட்டி தொட்டிகளுகெல்லாம் புரியும்படியான பதிவு ஒன்று போட்டு அசத்தி இருப்பவர். இவரின் சமுதாய நோக்கமும் அதை நடத்தி செல்லும் தார்மீக பொறுப்பையும் பார்த்து அசந்து போனேன். இதோ அவரின் பதிவு உங்களின் பார்வைக்காக.

ஜீவன் – இவர் கவிஞராக அறிமுகம் செய்யப்படவேண்டியவர், அவருடைய பதிவுகளுக்கு அநேகமாக முதல் வாசகனாக நான் இருப்பேன். தாய் பற்றி அவர் சொல்லியிருப்பதை பாருங்கள், தாய் தந்தால் கசப்புக்கூட இனிப்புதான் இவருக்கும். தாயுமானவனாய் – இது மிகவும் பிடித்த ஒன்று.

பின்னூட்ட சூறாவளிகளில் இவரும் ஒருவர். தமிழுக்கு தோழியாக அறிமுகமாகும் இவரின் அனுபவம் பயப்படாம பாருங்க, அம்மா பற்றி சொல்லி இவர் விடும் கண்ணீர்

மருத்தவ(ச்) சேவை செய்யும் இவர், நன்றாக தேநீர் விருந்து வைப்பார், இடுப்பு எலும்பு பற்றிய அறிமுகம் பாருங்கள். தாய்(ப்) பால் மட்டுமல்ல தமிழ்பாலும் முக்கியம் என கூறியதை பாருங்கள்.

கேளுங்க கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க டவுட் இவர் வலையின் வரவேற்பு பலகை. அழகரே வந்து கவிதை சொல்லுவார் பாருங்களேன். இவருக்கு ஒரு பியுட்டில் புல் பாட்டி இருக்காங்க. இவங்க வீட்டு சிட்டுக்குருவியிடம் அறிமுகமாகுங்கள்.

--- இன்னும் விரியும்

.

மேலும் வாசிக்க...

நன்றி விஜய்கோபால்சாமி - வருக வருக அதிரை ஜமால்

கடந்த ஒரு வார காலமாக அருமை நண்பர் விஜய்கோபால்சாமி வலைச்சரத்தின் ஆசிரியராகப் பொறுப்பெற்று - கொடுத்த பணியினை அழகுற, செம்மையாக, வித்தியாசமான முறையில், படங்களுடன் பல பதிவுகல்க் இட்டு நிறைவேற்றி இருக்கிறார். புதுமையாக இருந்தது. நன்றி நன்பரே ! நல்வாழ்த்துகள்
---------------------------------------------
அடுத்து 26ம் தேதி தொடங்கும் வாரத்திற்கு நண்பர் அதிரை ஜமால் ஆசிரியப் பொறுப்பேற்கிறார். இவர் "கற்போம் வாருங்கள்" என்ற வலைப்பூவினில் எழுதி வருகிறார். அருமை மகள் ஹாஜருக்கென ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். பல்வேறு சிந்தனைகளில் எழுதி வருகிறார். இன்னும் நான் கற்பவன் தான் - கற்றுக் கொடுங்கள் எனற அருமையான கோட்பாட்டினைக் கொள்கையாகக் கொண்டிருக்கிறார். இவரை வருக வருக ! பதிவுகளைத் தருக தருக !! என வரவேற்கிறோம்.

நட்புடன் .... சீனா
------------------------
மேலும் வாசிக்க...

Sunday, January 25, 2009

உயிரினும் மேலான அன்பு வலை மக்களே...

தம்பி விக்னேஸ்வரன் பங்கேற்புடன் மலேசியாவில் மீண்டும் ஒரு பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது. வலைப்பதிவு எழுதுவதை ஊக்குவிப்பதையும், புதிய பதிவர்களை உருவாக்குவதையும் பதிவர் சந்திப்பின் தலையாய நோக்கமாகக் கொண்டு இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே முயற்சி தமிழகப் பதிவர்களாலும் எடுக்கப்படவேண்டும். பதிவு தொடங்குவது தொடர்பான பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கி ஒரு மென்னூல் தயாரித்தால் புதியவர்கள் எளிதாக புரிந்துகொள்ள வசதியாயிருக்கும் என்று கருதுகிறேன். மென்னூல் தயாரிப்புக்கான உள்ளடக்கங்களை வரவேற்கிறேன். உள்ளடக்கங்கள் அனைத்தையும் ஒருவரே எழுதுவது எளிதல்ல. எனவே விருப்பமுள்ளோர், மின்னஞ்சலில் (vijayagiri2882008@gmail.com, "பதிவர் மென்னூல்” என்று சப்ஜெக்டில் கொடுக்கவும்) தொடர்புகொண்டால், பணிகளைத் தீர்மாணிக்கவும், பகிர்ந்துகொள்ளவும் தோதாக இருக்கும்.

மருத்துவர் புரூனோ அவர்கள் அனைவருக்கும் பயன்படும் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். சிரமம் பாராமல் அனைவரும் படித்துப் பின்பற்றவும். அது உங்களுக்கு நன்மை பயக்குமா தெரியாது, உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பது மட்டும் உறுதி.

image

இந்தியாவில் தடை செய்யப்பட்ட “புத்தரின் பெயரால்” (இன் த நேம் ஆஃப் புத்தா) ஆங்கிலப் படம் குறித்த விமர்சனமும் சில காட்சிகளும், இங்கே காணக்கிடைக்கிறது. எப்போது தடை நீங்குவது, படத்தை எப்போது காண்பது?

இந்தப் பதிவைப் படித்த உடன் “மெரினா பீச்சும், மொளகா பஜ்ஜியும் மறந்து போகுமா, டுவல் B பஸ்சும், லஸ் கார்னர் ஆழ்வாரையும் மறக்க முடியுமா” என்று ரீமிக்ஸ் எழுதத் தோன்றுகிறது. சென்னையை நேசிப்போர் தவறாமல் படிக்கலாம். நான் படித்துவிட்டேன்.

வென்னைக்குத் தொன்னையா? தொன்னைக்கு வென்னையா? என்பதற்கு இணையான தர்க்கத்துடன் தொடங்குகிறது பதிவு. மூஞ்சிப்புத்தகம் (ஃபேஸ் புக்கை இப்படித்தான் விளிக்கிறார் இந்தப் பதிவர்) குறித்த சில தகவல்களும் எச்சரிக்கைகளும்.

“வாழ்க்கை சில பாடங்களை கற்று தரும்போது தவறுகளை திருத்துவதற்கு சந்தர்ப்பங்களை தரமறுத்துவிடுகிறது”. இதை நான் சொல்லவில்லை, இங்கே ஒருவர் சொல்லுகிறார். நல்லா இருக்குல்ல... படிசிட்டு வாங்க.

மருத்துவர் ஷாலினியின் வலைப்பூ. அவருடைய நூல்களுக்கான அறிமுகமும் இந்தத் தளத்தில் காணக்கிடைக்கின்றன. அவரை நான் அறிமுகம் செய்வது என்பது பகலில் டார்ச் அடிப்பது போல.

ஆதிகாலம் தொட்டு தமிழ்க் குறுக்கெழுத்துப் போட்டிகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு. இங்கேயும் ஒருவர் மாதந்தவறாமல் கு.எ.போ நடத்துகிறார். முடியும்னு நெனச்சா போய் முயற்சி செய்யுங்க.

உலகத்தில் அனைவருக்கும் முதல் அதிசயம் அம்மா. சில அம்மாக்கள் ஒன்று சேர்ந்து வலைப் பதிவு எழுதுகிறார்கள். இங்கே இரு குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் செய்ய வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறார் அமுதா அவர்கள். அதே வலைத்தளத்தில் பங்கேற்கும் அமிர்தவர்ஷினி அம்மாவின் கவிதை ஒன்று உங்களுக்காக.

அடுத்து ஒரு முக்கியமான விஷயம். அதையும் படிச்சிட்டுப் போயிடுங்க.

 

image

(இனிமே படிக்கப் போற விஷயத்த gap10 குரல்ல கற்பனைபண்ணிக்குங்க. இது இன்று மதியம் 12:30 வரை வந்த கணக்கு)

இந்த ஒரு வாரத்துல எனக்கு வந்த பின்னூட்டம் 32. அதுல எனக்கு நானே போட்டுக்கிட்டது ஒன்னு. ஸ்மைலி மட்டும் இருந்தது ஒன்னே ஒன்னு. ஸ்மைலியோட கருத்தும் கருத்தும் இருந்தது ஐஞ்சு. வெறும் கருத்து மட்டும் இருந்தது இருபத்திநாலு.

நட்புடன் ஜமால் போட்ட பின்னூட்டம் ஏழு. வெயிலான் போட்டது மூணு. கார்க்கி மூணு. புதுகைத் தென்றல் ரெண்டு. சீனா அண்ணன் ரெண்டு. விக்னேஸ்வரன் ரெண்டு. கேபிள் ஷங்கர் ரெண்டு. வித்யா ஒன்னு. ராமலக்‌ஷ்மி ஒன்னு. மஹேஷ் ஒன்னு. பாஸ்டன் பாலா ஒன்னு. தேனீ ஒன்னு. திகழ்மிளிர் ஒன்னு. சிவமுருகன் ஒன்னு. சதங்கா ஒன்னு. கணிணி தேசம் ஒன்னு. ரிஷான் ஷெரிப் ஒன்னு. ஈர வெங்காயம் ஒன்னு. ஆத்தா... ஆங்... (gap 10 குரல இத்தோட நிறுத்திக்குங்க. இனி வேற குரல்)

 

image

மறுபடியும் பாப்பையாவான்னு குழம்பாதிங்க. விஷயம் இருக்கு. (இது பாப்பையா குரல்ல...) “நாளைலேந்து வேற ஆசிரியர். நாளைக்கு நம்ம வீட்டுக்கும் வாங்க. ரெண்டு ப்ளாகு வச்சிருக்கேன். பிடிச்சிருந்தா உங்க ப்ளாகுல லிங்க்கு குடுங்க. பிடிக்கலியா, பின்னூட்டம் மட்டும் போடுங்க. வரட்டா...”

 

20072007431-001

வேற யாருமில்ல, நாந்தான்.

 

பல நண்பர்களுடைய பதிவுகளை அறிமுகப்படுத்தினாலும், சில நண்பர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தாமல் விட்டிருக்கலாம். பலருடைய பதிவுகளை மறதி காரணமாக குறிப்பிடாமல் விட்டிருந்தாலும், சிலருடைய பதிவுகளை வேண்டுமென்றே தான் குறிப்பிடவில்லை. அவர்களைப் பற்றி குறிப்பிட்டு, அதை மற்றவர்கள், அவர்களுக்கும் எனக்குமான பரஸ்பர புரிதல் என்பதை விட “பரஸ்பர சொறிதல்” என்று அர்த்தப்படுத்திக் கொள்வார்களேயானால் அதை எண்ணி மிகவும் வருந்தியிருப்பேன். அந்த வருத்தம் துளியும் இல்லாமல் நிறைவுடன் விடைபெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. நன்றிகளும் கூட. அடுத்து வரும் ஆசிரியரை அறிய உங்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

கடைசி நேரத் திருத்தம் & வருத்தம்: இரு குழந்தைகள் உள்ள பெற்றோர் செய்ய வேண்டியவை என்ற பதிவை அமிர்தவர்ஷினி அம்மா அவர்கள் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பதிவை எழுதியவர் அமுதா அவர்கள். இதனை மின்னஞ்சல் வாயிலாக சுட்டிக்காட்டினார். மேலே அதற்கான திருத்தம் செய்யப்பட்டுவிட்டது. பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டாமல் தனிமடலில் சுட்டிக்காட்டிய அவருடைய பண்பட்ட அணுகுமுறைக்கு கோடி வந்தனங்கள். நிகழ்ந்த தவறுக்கு உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் வாசிக்க...

Saturday, January 24, 2009

வலைச்சரத்தில் வாலி

வலைச்சரத்தில் சிறப்புப் பதிவுக்காகக் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய* கவிதை.

 

11.kavinjar vali

சாளரம் திறந்து வைத்தாய் பவனந்தி கார்க்கி

பல நேரம் பலருக்கு நீதானே ஊக்கி (2)

உனக்குப் போட்டியாய் மலேசியாவில் விக்கி

வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா ஜக்கி (2)

சறுக்கல் வருவதுண்டு ஊட்டிமலைச் சரிவில்

சிறு விரிசல் வரலாமா பரிசல்காரன் பதிவில் (2)

கடல் நடுவே நிற்கின்றார் குறள் தந்த அய்யன்

பகிரங்கக் கடித மன்னன் நம்ம வால்பையன் (2)

மந்தைவெளி தி.நகர் 5-பி பஸ்சு

பதிவுன்னா என்னைக்கும் கே.ஆர்.எஸ்சு.... (2)

திருவல்லிக்கேணின்னா பார்த்தசாரதி - சுவையா

விடுபட்டவை சொல்ல பாலபாரதி (2)

கதையெல்லாம் நிதர்சனம் கேபிள் சங்கர்

உண்மை தான் ஒத்துக்குறேன் மாபெரும் திங்க்கர் (2)

பதிவுலகில் கிச்சன் குயின் எப்போதும் நீயா...

உன்னைத்தான் கேக்குறேன் பதில் சொல்லு தூயா (2)

ஏழும் மூணுந்தான் எப்போதும் பத்தா?

அடிக்கடி எழுதய்யா லதானந்த சித்தா (2)

அபியும் நானும், டி. ஃபார் திரிஷா

இன்பக்கதை இன்ஃபினிட்டி ஏ. ஃபார் அதிஷா

சாமியே ஐயப்பா சிவஹரி பாலா...

பல வருஷம் எழுதப்பா வடகரை வேலா (2)

கிறிஸ்துவின் கவலையெல்லாம் பாவியரைக் குறித்து

என் விருப்பம் எப்போதும் சேவியரின் எழுத்து (2)

மார்கழியில் திருப்பூரில் எப்போதும் வெயிலாம் - அது

எரிக்கின்ற வெயிலல்ல விருதுநகர் வெயிலான்

 

 

எல்லாருக்கும் சொன்னேன், உன்னைச் சொல்ல மறப்பேனா?

பதிவா உன்னை நான் வாழ்த்தாம இருப்பேனா? (2)

கலைஞர் காவியமாய், எழுதிவைத்த ஓவியமாய் (2)

சென்னை சங்கமமாய், மாங்காட்டுக் குங்குமமாய் (2)

வாழ்க நீ எந்நாளும் விஜயகோபால் சாமி

என் மணையாளைப் பெற்றவளே என்னோட மாமி

 

*தாகக் கற்பனை செய்துகொண்டு நானே எழுதிய... என்ன பாக்குறீங்க நட்சத்திரத்த நட்சதிரத்தோட பொருத்துங்க... எனக்கு வேண்டியதெல்லாம் நீங்க சொல்லும் கருத்துங்க...

மேலும் வாசிக்க...

Wednesday, January 21, 2009

ஜிகு ஜிக்காங் ஜிகு ஜிக்காங் ஜிக்காங்...

இன்று ஒரு நாளைக்கு பதிவர் அறிமுகம் கிடையாது. விருதுகளுக்கான அறிவிப்பு தான் இன்றைய ஸ்பெஷல். நான் கீழே குறிப்பிடுகிற விருதுகளுக்குப் பொருத்தமான பதிவர்களை வாசகர்கள் முன்மொழிந்தால், எங்களது தேர்வுக்குழு விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும். நிபந்தனைக்கு உட்பட்டு விருதுகள் வழங்கப்படும்.

 

clip_image002

வெள்ளிச் சுத்தி விருது: அலுவலகத்தில் ஆணி அதிகமாகி, அதன் காரணமாகப் பதிவு எழுத முடியாதவர்களுக்கான விருது இது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது திடிரென பதிவு எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது சுத்தமாக நிறுத்திவிட்டாலோ அவர்களை இந்த விருதுக்கு முன்மொழியலாம்.

 

image

பகிரங்கக் கடித மன்னர்: வலைப்பதிவு தொடங்கிய நாளிலிருந்து ஒருவருக்காவது பகிரங்கக் கடிதம் எழுதியிருக்க வேண்டும். கவனச் சிதறல்களுக்கு இடங்கொடாத வகையில் எழுதப்பட்ட கடிதமாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்களை எழுதியிருந்தாலும் ஒரு பதிவருக்கு ஒரு கடிதம் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

 

image

இதயம் முரளி விருது: மிட்-நைட்ல (எந்த நாட்ல இருக்காரோ அந்த நாட்டோட மிட்நைட்) காதல் கவிதை எழுதி பதிவேற்றம் பண்ணுகிற ஆண் பதிவராக இருக்க வேண்டும். உருகி உருகிக் கவிதை எழுதியும் ஒரு ஃபிகரும் மாட்டாத ஏக்கத்தோடு அலைகிறவராக இருக்க வேண்டும். இந்தப் பிரிவில் சகட்டு மேனிக்கு முன்மொழிவுகள் இருக்கும் என்பதால் முதலில் வருகிற பத்து முன்மொழிவுகள் மட்டுமே ஏற்கப்படும். பத்தைத் தாண்டி பதினொன்றாக இருந்தால் அது எவ்வளவு பெரிய பதிவராக இருந்தாலும் நிராகரிப்புதான்.

 

image

ஒற்றை ரோசா விருது: பதிவுலகக் கவிதாயினிகளுக்கான விருது. அதிர்ச்சி மதிப்புகளுக்காக உடல் உறுப்புகளின் பெயர்களைக் கவிதைகளில் சேர்த்து எழுதுபவராக இருக்க வேண்டும். பெரும் கைகலப்புகளை எதிர்பார்ப்பதால், இவ்விருதுக்கான முன்மொழிவுகள் அனைத்தும் அரக்கு முத்திரையிட்ட உரையில் வைத்து அனுப்பப்பட வேண்டும். தங்களுக்குப் பிடித்த யாரை வேண்டுமானாலும் முன்மொழியலாம். ஆனால் நீங்கள் முன்மொழிந்ததை அந்தக் கவிதாயினி உள்பட யாருக்குமே தெரியப்படுத்தக் கூடாது. வீண் கலகங்களைத் தவிர்க்கும் பொருட்டே இத்தனைக் கட்டுப்பாடுகள்.

 

image

பெஸ்ட் போட்டோகிராபி விருது: ஐயா வலைமக்களே, நீங்கள் எதிர்பார்ப்பது போல இது ஒன்றும் நன்றாகப் படம் எடுக்கிறவர்களுக்கான விருது கிடையாது. நன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறவர்களுக்கான விருது. அப்படி யாராவது பதிவுலகப் “பட விரும்பிகள்” இருந்தால் தயங்காமல் இவ்விருதுக்கு முன்மொழியலாம்.

 

image

உலகம் சுற்றும் வாலிபன் விருது: அலுவலகக் காசில் ஆன்-ஷோர் போயிருந்தாலும், ஆணிகளை மறந்துவிட்டு பயணக் கட்டுரைகளைப் பதிவேற்றிய பதிவராக இருக்க வேண்டும். முன்மொழியப்படும் பதிவர் குறைந்தது இரண்டு முறையாவது வெளிநாடுகளுக்குப் பறந்திருக்க வேண்டும்.

 

மேற்கண்ட விருதுகளுக்கான முன்மொழிவுகளை வருகிற 23ம் தேதிக்குப் பிறகு எப்போ வேணுமானாலும் அனுப்புங்க. ஏன்னா, வலைச்சரத்துக்கு அப்போ வேற யாராவது ஆசிரியரா இருப்பாங்க. சைட்ல குப்பத் தொட்டி இருந்தா அதுல காறித் துப்பிட்டு தொடர்ந்து படியுங்க. எனக்கு வாக்குறுதி கொடுக்க மட்டும் தான் தெரியும். உண்மையிலயே யாருக்காவது இந்த மாதிரி விருதுகளக் குடுக்கனும்னு ஆசையா இருந்தா தாராளமா குடுக்கலாம். இத ஒரு கோரிக்கையா இல்லாம கட்டளையா ஏத்துக்கிட்டு வலையுலகச் சிங்கங்கள் யாராவது இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். அப்படி யாராவது முயற்சி எடுத்து என் கண்களைப் பனிக்க வைத்து இதயத்தை இனிக்க வைத்தால், சார்மினார் எக்ஸ்பிரஸ்ஸில், டாய்லெட்டிலேயே ஹைதராபாத் “வந்து செல்லும்” அரிய வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

 

டிஸ்கி: மேற்கண்ட விருதுகள் யாரையும் கேலி செய்வதற்காக எற்படுத்தப்பட்டதல்ல. அப்படி நேர்ந்திருக்குமாயின் அது உள்நோக்கமற்றதே.

 

நாளை சந்திப்போமா...

மேலும் வாசிக்க...

Tuesday, January 20, 2009

விடைபெறும் நேரம்

image

என் இனிய வலையுலகமே...

உன் பாசத்துக்குரிய

விஜய்கோபால்சாமியின்

மொக்கைகளை

பொறுமையாகச்

சகித்துக்கொண்ட

உனது சகிப்புத் தன்மைக்கு

நன்றி சொல்லி

விடை பெறுகிறேன்

 

 

அப்படீன்னு சொல்லி விடை பெற்றுக்க இன்னும் ஐந்து நாட்கள் இருக்கிறது. அப்படியெல்லாம் நீங்கள் நிம்மதியாக இருக்குமளவுக்கு கவனக்குறைவாக இருந்துவிடமாட்டேன். என் தூக்கத்தைக் கெடுத்த பல பதிவர்களைக் குறித்து உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.

உஸ்மான் ரோடுல ஜோதி உதயமாகுதுன்னு ஒரு விளம்பரம். பரங்கிமலைலேந்து ஷிஃப்ட் பண்றாங்களோன்னு பயந்துட்டேன். பிறகு தான் தெரிந்சுது இது வேற ஜோதியாம். பீதிய கெளப்பி பேதியில கொண்டு போய் விடப் பாத்தானுங்க. சரி விஷயத்துக்கு வருவோம்.

தம்பி விக்னேஸ்வரன் சில சமயம் என்னுடன் ஜி-டாக்கில் உரையாடியபடியே பதிவுகளை எழுதி முடித்துவிடுவான். பொங்கல் நாளன்றும் அப்படித் தான். பொங்கல் சிறப்புக் கொசுறுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டிருந்தான். திடீரென்று ஒரு கேள்வி “சித்தப்பு, மாவு பொங்குவதற்கு ஒரு பொடி போடுவார்களே, அதன் பெயர் என்ன?” என்று “மகனே, சோடா உப்பு போட்டால் மாவு பொங்கும். சந்தேகம் என்றால் தூய அக்காவிடம் கேட்டுக்கொள்” (மேட்டரே தூயா அக்காவைக் கலாய்ப்பதுதான் என்பது வேறு விஷயம்) என்று விநாடிக்கும் குறைவான நேரத்தில் பதில் சொன்னேன். ஆமாம், சமையல் கலை என்றாலே வலையுலக மக்களுக்கு விநாடிக்கும் குறைவான நேரத்தில் ஞாபகம் வருவது தூயா அக்காவின் பெயர் தான். அவர்களுடைய சிறுகதைகள் படித்த பல மணிநேரங்களுக்குப் பிறகும் மனதை என்னவோ செய்யக் கூடியவை. பானை சோற்றுக்கு ஒரு சோறாக இந்தக் கதை.

கவிதை, கதை, உலக நடப்புகள் என்று பல துறைகளில் கலக்கினாலும் ரிஷான் ஷெரிப் அவர்களின் படைப்புகளில் நான் பெரிதும் ரசிப்பது சிறுகதைகள்தான். அவருடைய கதைகளில் என்னைப் பதம் பார்த்தவை சில (1, 2, 3).

வருங்கால முதலமைச்சர்களைப் போட்டுத் தாளித்திருக்கிறார் ஒருவர். “நாளைக்கு நீங்கள் ஒரு முதலையமச்சர் ஆகி ஆட்சி நடத்தும்போது உங்கள் பேரனோ பேத்தியோ, நீங்கள் தொப்புளில் பம்பரம் விட்ட காட்சியையோ...டபுள் ட்ரிபுள் மீனிங் பேசும் காட்சிகளையோ பார்க்க நேர்ந்தால்..?” என்று சட்டையைப் பிடித்து கேட்பது போல கேட்டிருக்கிறார். இதற்கு அந்த வருங்கால முதல்வர்கள் சொல்லக்கூடிய ஒரு பதிலை அவரே சொல்லவும் செய்திருக்கிறார். மிகக் குறைவாகவே எழுதுகிறார். கேட்டால் “பேசிக்கலி ஐயாம் எ சோம்பேறி” என்கிறார்.

கேபிள் ஷங்கர் அண்ணன் தற்சமயம் நிதர்சனக் கதைகள் என்ற தலைப்பில் சிறுகதைகள் எழுதிவருகிறார். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்பு படித்த இந்தக் (இப்போது வந்திருப்பது மீள்பதிவு) கதை இன்னும் மனதிலேயே இருக்கிறது. மறக்காமல் படித்துவிடுங்கள்.

லதானந்த் அங்கிளின் எச்சரிக்கையையும் மீறி செல்வேந்திரன் அவர்களின் இந்தப் பதிவைப் படித்தேன். தலைப்பு வெறும் அதிர்ச்சி மதிப்புகளுக்காக வைக்கப்பட்டதல்ல என்பது முழுவதுமாய்ப் படித்தால் உங்களுக்கே புரியும். இதே போல பல பகீர் ரகப் பதிவுகள் நிறைந்தது அவருடைய தளம்.

இளையராஜா வேலுச்சாமி, என் கல்லூரி சீனியர். தற்சமயம் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார். “உணர்ந்ததைச் சொல்லுகிறேன்” என்ற தன்னுடைய தளத்தில் எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்களில் என்னைக் கவர்ந்தவை “காதல் வசனங்கள்” என்ற தலைப்பில் இவர் எழுதும் குறும்(பு)பூக்கள்.

இவரும் எங்க ஊர்தான். போன வாரம் வலைச்சரத்தைத் தொடுத்தவரும் இவர் தான். இவருடைய இந்தப் பதிவு கிலியூட்டும் விதமாக இருந்தது. கிலியான அனுபவங்களை விரும்புகிறவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய பதிவு. நண்பன் சொன்ன தகவல் என்கிறார். அது தான் நம்புவதற்குக் கொஞ்சம் கஸ்டமாக இருக்கிறது.

பதிவர்களை அறிமுகப்படுத்துவதைப் போலவே, பலரும் அறியாத ஒரு திரைக்கலைஞரையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன். இவர் கலைஞர் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள் ஆகியோர் நாடகங்களில் நடித்த காலத்தில் அவர்களுடன் நடித்தவர். பல திரைப்படங்களில் சிறிய சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், அண்ணாமலை தொடரில் இவர் நடித்ததோடல்லாமல் சொந்தக் குரலில் பாடவும் செய்திருந்தார். அது தான் இவருடைய முதல் குரலிசை முயற்சி. “நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ” என்ற சீர்காழியாரின் பாடலை தன்னுடைய குரலில் பாடியிருப்பார். அதன் பிறகு விருமாண்டி படத்தில், “கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்” என்ற பாடலைப் பாடினார். நீண்ட காலத்துக்குப் பிறகு இப்போது பூ படத்தில் “சிவகாசி ரதியே” என்ற பாடலைப் பாடியுள்ளார். நாடக உலகிலிருந்து திரையுலகம், சின்னத்திரை, இசையுலகம் என்று தன் வாழ்நாளில் நீண்ட பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் “பெரியகருப்புத் தேவரை” உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி. கீழே பாடலுக்கான சுட்டியைக் கொடுத்திருக்கிறேன், நேரம் இருந்தால் தவறாமல் கேளுங்கள்.

சிவகாசி ரதியே கேட்கணுமா?

இந்தப் பாடலை இவ்வளவு சிலாகிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இரண்டொரு நாட்களில் அதையும் சொல்லுகிறேன்.

நாளை சந்திப்போமா...

மேலும் வாசிக்க...

Monday, January 19, 2009

வலைச்சரத்தில் முதல் நாள்

வணக்கம். தம்பி விக்னேஸ்வரன் வலைச்சர ஆசிரியராக இருந்த காலத்தில்தான் வலைச்சரம் குறித்து அறிய நேர்ந்தது. அது முதல் அவ்வப்போது வலைச்சரத்தின் வாசத்தை நுகர்ந்து வருகிறேன். ஒரு வார காலம் என்னையும் சரம் தொடுக்க அழைத்திருக்கிறார் சீனா அண்ணன். அவர் தஞ்சாவூரில் பிறந்தவர், நான் தஞ்சாவூரில் வளர்ந்தவன். எங்கள் ஊர் பாசத்துக்காக இந்த இரண்டு பதிவுகள் (1, 2).  நாலாண்டுகளுக்கு மேல் சென்னை வாசி, அதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக ஹைதராபாதில் வசித்து வருகிறேன். எங்கள் ஊர் சிங்கம் கடந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கியிருக்கிறார். நடந்ததென்னவோ நடந்து போச்சு, அதனால நடக்காதது ஆட்டோல போகட்டும். சரி, நான் வந்த வேலையை ஆரம்பிக்கிறேன்.

image

அது இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டின் பிப்ரவரி இருபத்தி இரண்டாம் நாள். அலுவலகத்தில் பிடுங்க ஆணிகளற்ற ஒரு நாளில் திடீரென்று எழுத்தாளர் பாமரனின் நினைவு வந்தது. அவருடைய எழுத்துக்கள் இணையத்தில் எங்கேயாவது கிடைக்கிறதா என்று தமிழில் “பாமரன்” என்று தட்டச்சித் தேடியபோது அவருடைய தளம் கண்ணில் பட்டது. சரி நாமும் எழுதுவோம் என்று நினைத்தது அன்றுதான். இதோ, எனது விஜய்கோபால்சாமி வலைப்பூ தனது முதல் பிறந்தநாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

என்னுடைய நகைச்சுவையில் மாஸ்டர் காமெடி என்று இன்றளவும் வலை நண்பர்களால் குறிப்பிடப்படுவது இது தான். என்னுடைய கல்லூரிக் காலத்தில் நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தின் விவரிப்பு. இதல்லாமல் அவ்வப்போது நிகழும் சமூக அரசியல் சம்பவங்கள் குறித்த விமர்சனங்களும் பகடிகளும் எனது பதிவில் பரவலாக இடம்பெறுவன. அவற்றுள் மிக முக்கியமானதாக நான் கருதுவது இந்தப் பதிவு. கொஞ்சம் மூக்கப் பொத்திக்கிட்டாவது படிச்சிட்டு வந்திடுங்க.

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இவற்றைப் பற்றி ஏதும் தெரியாமல் நானும் ஒரு வெண்பா எழுதினேன். தமிழறிந்த புலவர் பெருமக்கள் யாராவது இதை அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து, தளை தட்டுகிறதா, மூச்சு முட்டுகிறதா என்பதையெல்லாம் எனக்கு மின்மடலில் அனுப்பினால் மிகவும் மகிழ்வேன். சர்ச்சைக்குரிய ஒரு பதிவை எழுதி அதன் பலனாக சிலபல அர்ச்சனைகளையும் (1, 2, 3, 4, 5) வாங்கியிருந்த காலத்தில், வேறு எதாவது எழுதுவோம் என்று தோன்றியது. நம்மை நாமே செய்து கொள்ளும் பகடி தான் ஆகச் சிறந்தது, என்று பலரும் சொல்லக் கேட்டு எனக்கு நேர்ந்த அனுபவங்களைக் கொண்டு “எனக்கு மட்டும் ஏன் இப்படி?” என்ற தொடர் பதிவை எழுதத் தொடங்கினேன். இதுவரை மூண்று (1, 2, 3) பகுதிகள் எழுதியுள்ளேன்.

அதன் பிறகு எனக்குள் உறங்கிக்கொண்டிருந்த கவிஞன் ஒரு நள்ளிரவில் மூச்சு முட்டியதாலோ, மூச்சா முட்டியதோலோ எழுந்துகொண்டதால் “கொலைவெறிக் கவிதைகள் 1754” என்ற கவிதைப் பதிவுத் தொடரும் ஆரம்பமானது. இதிலும் மூண்று பதிவுகள் (1, 2, 3). இவற்றுள் இரண்டாவது கவிதையின் முதல் இரண்டு வரிகளை மட்டும் “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளரால் மேற்கோள்காட்டப்பட்டது (அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா). இஃதல்லாமல் சில புகைப்படப் பதிவுகளும் உண்டு (1, 2, 3). என்னுடைய புகைப்படப் பதிவு ஒன்று சர்ச்சையைக் கிளப்பியதால், அநாகரிகமாக மற்றும் நாகரிகமாக வந்த வேண்டுகோள்களுக்கு இணங்கி அதற்குப் கடவுச்சொல் பாதுகாப்பு கொடுத்திருக்கிறேன்.

அதென்னவோ ரீமிக்ஸ் எழுதுவதென்றால் ஒரு அலாதி சந்தோஷம். கடைசியாய் எழுதிய ரீமிக்ஸ் இது. யாரைக் கலாய்க்க வேண்டுமே அவரிடமே அனுமதி கேட்டுப் பதிப்பித்தது. எள்ளளவும் சினம் கொள்ளாமல் தன்னைக் கேலி செய்ய மேலும் ஒரு விஷயத்தை அவரே எடுத்துக் கொடுத்தார். இதில் நான் விரும்புகிற பல பதிவர்களின் தளத்துக்கும் இணைப்பு கொடுத்துள்ளேன். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அராஜகம், “திண்டுக்கல் சாரதி” படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று சன் டிவி சொல்வதைப் போல. ஆனாலும் எதைப் படித்தாலும் தங்கள் மேலான கருத்துக்களைத் தவறாமல் சொல்லவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

பாப்பையா படம் இங்க எதுக்குன்னு நீங்க எல்லாம் மண்டைய ஒடைச்சிக்கிட்டு யோசிச்சிருப்பீங்க. சரி, “நாளை சந்திப்போமா”.

மேலும் வாசிக்க...

கார்க்கி - பிரிவுபசாரம் மற்றும் விஜய்கோபால்சாமி - வரவேற்பு

அன்பர்களே !

கடந்த ஒரு வாரமாக, நண்பர் கார்க்கி வலைச்சரத்தினைக் கலக்கி ஏழு பதிவுகள் இட்டு தொண்ணூறுக்கும் மேலான மறுமொழிகள் பெற்று இறுதிப் பதிவாக வலைச்சரம் மின்னிதழ் தயாரிப்பதற்கான திட்டத்தினையும் கொடுத்து - பொறுப்பினை நிறைவாக நிறைவேற்றி இருக்கிறார். அவரூக்கு வலைச்சரம் சார்பினில் நன்றி கலந்த நல்வாழ்த்தினைத் தெரிவித்து வழி அனுப்புகிறோம்.

19.01.2009 தொடங்கும் இந்த வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் விஜய்கோபால்சாமி. இவர் மணம் முடித்து ஆறு மாத காலம் தான் ஆகிறது. கர்நாடகத் தலைநகரில் இருந்து ஆந்திரத் தலைநகருக்கு பணி மாற்றம் பெற்று ஹைதராபாத்தில் வசிக்கிறார். இவர் எழுதி வந்த, இவரது ஒரு வலைப்பூ முகமறியா நண்பர்களால் கடத்தப்பட்டு தற்பொழுது வேறொரு புதிய வலைப்பூவினைத் தொடங்கி எழுதி வருகிறார். இவரை வருக வருக என வரவேற்கிறோம்.

நட்புடன் ..... சீனா
மேலும் வாசிக்க...

Sunday, January 18, 2009

அச்சு ஊடகத்தில் நுழையும் பதிவர்கள்

இந்த‌ப் பதிவு என் வலையில் ஏற்கனவே பதிவேற்றப்பட்டது. எனக்கு பிடித்த பல பதிவர்களின் சுட்டி இதில் இருப்பதால் இங்கேயும் பதிவிடுகிறேன்.

****************************************************

ஆனந்த விகடன், குமுதம் போல ஒரு வார இதழை தொகுப்பது போல எளிதான வேலை எதுவுமே இல்லை. நம்ம பதிவர்களின் பதிவுகளை வைத்தே ஒரு இதழ் தயாரிப்பது எப்படி என்று ஒரு அலசல்.

  முதலில் ஒரு இதழுக்கு தேவையானவை எவையென்று பார்ப்போம். 100 பக்கம் கொன்ட ஒரு இதழில் 30 பக்கம் விளம்பரங்கள் போட வேண்டும். 30 பக்கமா என்று வாயைப் பிளப்போர் இந்த வார குமுதத்தை சரிபார்த்துக் கொள்ளவும்.

   பின் 5 பக்கம் நடிகைகளின் படங்களுக்கு ஒதுக்க வேண்டும். நடிகைகள் படத்திற்கு மங்களூர் சிவா அல்லது சஞ்சயின் வீக் எண்ட் ஜொள்ளு படத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.  பின் ஒரு 5 பக்கத்திற்கு சினிமா பற்றிய செய்திகள் போட வேண்டும். அதில் ரஜினியை பற்றியும் விஜயை பற்றியும் செய்திகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்றால் "வில்லு படத்தின் பாடல்கள் நன்றாக வந்திருப்பதில் விஜய் சந்தோஷமாக இருக்கிறார்" என்ற துணுக்காவது இருக்க வேண்டும். இது போன்ற செய்திகளை அவர்களும் மறுக்க போவதில்லை. முரளிகண்ணனின்பதிவுகளை போட்டால் சற்று வித்தியாசமாகவும் இருக்கும். மற்ற செய்திகளுக்கு தமிழ்சினிமா என்ற வலையில் வரும் செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மீதம் இருப்பது 60 பக்கங்களே.

  சமீபத்தில் வந்த இரண்டு படத்தின் விமர்சன‌த்திற்கு நான்கு பக்கங்கள். லக்கி மற்றும் அதிஷாவின் விமர்சனத்தை போட்டு விடலாம்.யாராவது ஒருவரின் கேள்வி பதிலுக்கு நான்கு பக்கங்கள். நம்ம டோண்டு அவர்களின் கேள்வி பதில்களை இதற்கு பயன்படுத்திக் கொள்லலாம்.கடைசிப் பக்கத்தை பயோ டேட்டாவிற்கு ஒதுக்க வேண்டும். இருக்கவே இருக்குகோவியாரின்(அவர் எழுதும் என்ற பொருளில்) பயோடேட்டா. ஒரு தலையங்க பக்கம். நர்சிம்மிடம் விட்டால் ஏதாச்சும் செய்வார்.அவசரப்பட்டு உண்மைத்தமிழனிடம் கொடுத்து பக்கத்தை வீணடிக்க கூடாது. ஆக 10 பக்கம். மீதம் இருப்பது 50தான்.

   கார்ட்டூன் கமெண்ட்டுக்கு இரண்டு பக்கங்கள். அதுக்கு யாருடைய பதிவு என்று சொல்லவும் வேண்டுமா? யாராவ்து ஒருவர் இன்னொருவருக்கு எழுதும் பகிரங்க கடிதத்திற்கு 3 பக்கங்கள். இதற்கு பல பதிவுகள் உண்டு. அந்த சூழ்நிலைக்கேற்ப ஒன்றை தேர்வு செய்துக்கொள்ள வேண்டியது. கவிதைகளுக்கு ஐந்து பக்கங்கள். ஜ்யோவ்ராம் சுந்தர், அய்யனார், சுகுணா என அதுக்கும் வரிசை கட்டி நிற்கிறார்கள். ஆக பத்து பக்கங்கள் மீதம் இருப்பது 40 தான் சகா.

    ஆறுப் பக்கங்களை ஒருப் பக்க கதைகளுக்கும் சிறுகதைகளுக்கும் ஒதுக்க வேண்டும். வெண்பூ,ச்சின்னப்பையன் என இதுக்கும் ஏகப்பட்ட போட்டியாளர்கள். ஒரு தொடர்கதைக்கு ஐந்து பக்கங்களென இரண்டு தொடர்கதைக்கு பத்துப் பக்கங்கள். இதற்கு செந்தழல் ரவிமற்றும் வெட்டிப்பயல் சரியாக இருப்பார்கள். லூஸுப்பையன், ஜாலிகிளப் என மிமிக்ரி தொடருக்கு நான்கு பக்கங்கள். டீ.ஆரின்இந்தப் பதிவு அதற்கு பொருத்தமாய் இருக்கும். மீதம் இருப்பது வெறும் 20 தான் மக்கா.

   புதிதாய் வலையில் நுழைந்திருக்கும் ஞானி, அல்லது வெகுநாட்களாய் எழுதி வரும் பாமரன் அல்லது கொஞ்சம் மலிவான பத்திரிக்கை என்றால் சாரு என யாராவது ஒருவரின் ஏ பக்கங்கள், படிச்சதும் தைச்சதும் அல்லது நேரான பக்கங்கள் என நான்கு பக்கங்கள் ஒதுக்க வேண்டும். வலையுலக ஜோசியர்சுப்பையா எழுதும் ராசிபலனுக்கு 3 பக்கங்கள். வீட்டுக்கார அம்மாவின் ஷாப்பிங் லிஸ்ட் அல்லது பட்ஜெட் அல்லது சமையல் ஐடியா என தங்கமணிகள் மேட்டருக்கு 3 பக்கங்கள். இருக்கவே இருக்கிறார் தாமிரா. ஆக 10 பக்கம் ஆச்சா? மீதம் பத்தே பத்துதான்.

     ஜோக்குகள் ஒரு மூன்று பக்காமாவது போட வேண்டாமா? ஒரு சாமியாரின் கட்டுரை நான்கு பக்கங்கள். அதற்கு வலையுலகில் சரியான ஆளில்லாததால் அது நீக்கப்படுகிறது.ஜோசப் பாலராஜ் போன்று அவ்வபோது எழுதும் பதிவர்களின் வேலைக்காவத‌ விடயங்களுக்கு இரண்டு பக்கம். பின்னூட்டம் மட்டுமே இடும் கும்க்கி, விஜய் இன்னபிற வாசகர்களின் கடிதததிற்கு இரண்டு பக்கங்கள். நிச்சயம் இதில் ரிப்பீட்டேய் இடம் பெறக்கூடாது.முதல் பக்கத்தை ராப்பிற்குகொடுக்காவிட்டால் அந்த‌ வலையுலக பத்திரிக்ககை முழுமையடையாது என்பதை சொல்லவும் வேண்டுமா? மீதம் இருப்பது இரண்டே இரண்டு பக்கங்கள்தான்.

  என்னங்க மறந்துட்டிங்களா? சிந்தனை சின்னசாமிஇருக்காரில்ல? அவருக்கு ஒருப் பக்கம். அந்த மீதி ஒரு பக்கம்தான் நம்ம புத்தக்த்தின் USP. நல்ல அழகான, இளைமயான, பிரபலமான ஒருவர் கடந்த வார இதழை கையில் வைத்துக் கொண்டு தனக்கு பிடித்த பகுதிகளை சொல்வது போல் ஒரு படம் வேணுமில்ல? எல்லா பகுதிக்கும் தகுதியானவர்கள் வரிசையில் நிற்க இதற்கு மட்டும் இவரை விட்டால் வேறு ஆள் கிடைக்கவில்லை நம்ம வலையுலகில். நீங்களே க்ளிக்கி பாருங்கள் அவரை. ஆக மொத்தம் 100.இப்போது நம்ம பத்திரிக்கை தயார்.

    அவ்வபோது பக்கம் அதிகமானால் PITல் வென்றபுகைப்படங்கள், அய்ய‌னாரின் உலக சினிமா, வாலுதான் ப்ளீச்சிங் ஆதாரத்துடன் ஸ்பெஷல் ரிப்போர்ட் என எதற்கும் நம் வலையில் சரக்குள்ளது.

மேலும் வாசிக்க...

Saturday, January 17, 2009

பின்னூட்ட பிதாமகன்களும் ஓவியர்களும்

பின்னூட்டங்களாலே புகழ்பெற்ற வாசக்ர்கள் பலர் வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகம் எழுதாத இவர்கள் வருங்கலாத்தில் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசையுடன் எனக்குத் தெரிந்த சிலரை அறிமுகப்படுத்துகிறேன்.இவர்களை பலருக்குத் தெரிந்திருந்தாலும் இவர்களது பதிவை படித்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.பதிவர்களின் ஆக்ஸிஜனாக‌ இருக்கும் இவர்களுக்கு பல நன்றிகள். 1) இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இவர் எழுதிய 3 பதிவுகளை படிக்காமல் தவறவிட்டவர்கள் ஏராளம். இனிமேல் அடிக்கடி எழுதுவார் என நம்பலாம். ஆழ்ந்த வாசிப்பனுபவம் கொண்டவர். 2) கும்மிக்கு பெயர் போனவர். ஜெர்மனியில் ஆணி புடுங்குகிறார். சென்னைக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்கள்.தனிமைப் பற்றி இவர் எழுதியதை படித்தால் என்னவோ போல இருக்கும். நல்ல மனிதர்

3) இவர் மாதம் 8 பதிவுகள் எழுதினாலும் பின்னூட்டங்கள் மூலமே புகழ் பெற்றவர்.இவரின் மிகப் பெரிய பதிவாக இதுதான் கண்ணில் பட்டது. எல்லாப் பதிவுக்கும் தவறாமல் வந்து உற்சாகமூட்டுபவர்.

4) ஆரம்பமே அதிரடியாக தொடங்கினார். இவரின் வேகத்தைப் பார்த்து இள்வயதுக்காரர் என்று நம்பினால் நடேசன் பூங்கா சந்திப்பில் ஒரு 40 வயது மதிக்கத்தக நபர் வது நான் தான் அது என்கிறார். இன்னமும் என்னால் நம்ப முடியவில்ல, அவர்தான் இவர் என்று.


பதிவுலகில் பட எடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். படம் வரைபவர்கள் வெகு சிலரே. எனக்கு தெரிந்து இருவர். 
1) ஒருவர் கண்னாடியிலே ஓவியம் வரைபவர். என் அம்மாவுக்கு இது போன்ற விடயத்தில் ஆரவம் அதிகம் என்பதால் இவரின் படங்களை காட்டுவதுண்டு. கிளாஸ் பெய்ன்டிங் எப்படி வரைவது என்று பாடம் எடுக்காவிட்டாலும் இந்தப் பதிவில் அது உருவாகும் நிலைகளை படமெடுத்து போட்டிருக்கிறார் பாருங்கள்.

2) இவர் எம்.ஐ.டி. பட்டதாரி. தனிப்பட்ட முறையில் என் பதிவை விமர்சித்து மடலிடுபவர். உண்மையை உரிமையோடு சொல்பவர். இவரின் ஓவியங்களில் ஒரு புரொஃபஷனிலசம் இருக்கும். இந்தப் படத்தை பார்த்து சொல்லுங்கள்.

மேலும் வாசிக்க...

Friday, January 16, 2009

ஃபிலிம் காட்டும் பதிவர்கள்

   பதிவர்களில் பலர் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களில் சிலர்.

1) இவரை சமீபத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் தான் சந்தித்தேன்.அதிகம் பேசவில்லை. ஆனால் அவரின் பேச்சு மிகவும் கவர்ந்தது. அவரின் வலையை மேய்ந்த பின்னர்தான் அவரைப் பற்றி தெரிந்துக் கொண்டேன். புகைப்படம்எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்.இவரின் இந்தப் பதிவுதான் என்னை அதிகம் பாதித்தது.அதிகம் எழுதுவதில்லை.

************************************************
2) இவரும் புகழ் பெற்ற புகைப்பட கலைஞர். இவரின் ரெட்டை வால் ரெங்குடு ஜோக்ஸ் எனது ஃபேவரிட். ரெ.ரெ வின் ஒரு வயசுக் குட்டித் தம்பி எப்போதும் அழுதுட்டே இருப்பான். ரெ.ரெ : அம்மா, தம்பி எங்க இருந்து வந்தாம்மா ? ரெ.ரெ அம்மா : வானத்துல இருந்து கடவுள் குடுத்தாருப்பா ரெ.ரெ : இப்பத்தான் தெரியுது, இவனை எதுக்கு வானத்துல இருந்து தொரத்தி விட்டுட்டாங்கன்னு அனைவரும் அறிந்த ஒருவர்தான்.எனக்கும் பிடித்த நண்பர்தான்.
********************************************************

3) இவர் ஒரு ஆங்கிலப் பதிவர். இதுவரை வெறும் 3 பதிவுகள் மட்டுமே எழுதியுள்ளார். பரவாலாக தமிழ் வலைப்பூக்களை படிக்கவும் செய்கிறார். இவரின் இந்தப் பதிவு பிடித்ததால் இங்கே சொல்கிறேன். இவருக்கும் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்

**************************************

4) இவர் பெரியாளுங்க. இவரும் ஒருப் புகைப்பட கலைஞர்தான். பிட்டுக்கு தவறாமல் படம் அனுப்புவார். தங்கமணிகளுக்கு அர்ப்பனம்னு ஒரு பதிவு எழுதிய இவர் அதில் அற்பணம் என்று உள்குத்து குத்தியவர். பழக இனிமையானவர். நாய்களை படமெடுப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்

***********************************

5)ஆம்பல் பூவைப் பற்றி சிவாஜி படத்திற்கு பின் பலரும் தெரிந்துக் கொண்டோம். அது எப்படி இருக்கும் தெரியுங்களா? இங்கப் போய் பாருங்க. எனக்கு மிகவும் பிடித்த புகைப்பட கலைஞர் இவர்.

************************************
இன்னும் இருக்காங்க. அதுக்குள்ள ஒரு சின்ன மீட்டிங். வந்து மீதி பேர பத்தி சொல்ரேங்க.
மேலும் வாசிக்க...

Thursday, January 15, 2009

டூ யூ நோ கார்க்கி?

"இறுக்கமான உங்களிலிருந்து கடைசிப் புன்னகையை எப்போதுதிர்த்தீர்கள்?கடந்தும், நடந்தும், விரட்டியும், கூச்சலிட்டும் போகும் சிறார்களை எப்போதிலிருந்து சலனங்களில்லாது பார்க்கத் துவங்கினீர்கள்? நீளமான வெள்ளை நிற இறக்கைகளைக் கொண்ட தூரதேசப் பறவைகளை ஏனிப்போதெல்லாம் நின்று கவனித்துப் பார்ப்பதில்லை? இந்தப் பனிக்குப் பிறகு தொடர்ச்சியாய் அவைகளை உன்னால் பார்க்கவும் இயலாது என்பது உங்களுக்கு தெரியும்தானே? அட! இந்த கார்க்கியின் பதிவுகளை ஏன் உங்களுக்கு பிடித்துத் தொலைப்பதில்லை?"

சரி..சரி.. இதுக்கே டென்ஷன் ஆனா எப்படி? முன்னாடி நான் எழுதிய பத்தி பின்நவீனம் மாதிரி இருக்குனு பின்னாடி பெரிய ஆளா வரப்போகிற கண்ணாடி போட்ட பதிவர் முன்னாடி ஒரு நாள் என்னிடம் சொன்னார். பின்னாடி நடக்கப் போகும் விஷ்யங்களுக்கு எல்லாம் முன்னாடியே முக்கியத்துவம் நான் கொடுப்பதில்லை என அவர் சொன்னதுக்கு பின்னாடி அந்த கண்ணாடி பதிவரிடம் சொன்னேன். மறுபடியும் டென்ஷனா? சரி வேண்டாம்.

இந்த சோமாரி நமக்கு இன்னாத்துக்கு இத்தயெல்லாம் உடறானுதான யோசிச்சிகினுக்கீரிங்கோ.. அது ஒன்னுமில்ல நைனா. நானும் கடய தொறந்து ஒரு மாசம் என்னென்ன‌வோ வித்தேம்ப்பா. ஒன்னியும் யாவாரம் ஆவல. காண்டாயி, மவனே எதையாச்சும் பண்ணி மாமா பேரு சூடாகானும்னு இத்த போட்டேம்ப்பா. மொத வாட்டி தமில்மணத்துல நம்ம சரக்கும் சூடான லிஸ்ட்ல வந்துச்சு. அப்பாலிக்காத்தான் என்ன செஞ்சா யாவாரம் ஆகும்னு தெர்ஞ்சுது. இப்போ என்னாத்துக்கு காண்டாவுற நீ?

சரி, விஷயத்துக்கு வருவோம். நான் ப்ளாக் எழுத தொடங்கிய போது எனக்கு இருந்த ஒரே ஆசை,இவன் இப்படித்தான் எழுதுவான் என்ற எந்த ஒரு முத்திரையும் என மேல விழக்கூடாது என்பதே. ஒழுங்கா எழுத மாட்டான்னு சொன்னாலும் பரவாயில்லை ஒரே மாதிரி எழுதுவான்னு சொல்லக்கூடாதுனு ஆசை. அதனாலே தொடர்கதை, சிறுகதை, கவிதை, மொக்கை, டீ.ஆர். கவுஜ, காக்டெய்ல், காதல், கார்ட்டுண் கமென்ட்கள், நகைச்சுவை என எல்லாத் தலைப்பிலும் எழுதினேன். இதில் பதிவர்களை கலாய்த்தவை, காதல் போன்ற லேபிளில் எழுதியவைக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. சமீபகாலமாக என் புட்டிக்கதைகள் நல்ல ஹிட்டாகியிருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் நகைச்சுவைதான் எனக்கு சுமாரா வருதோன்னு நினைக்கத் தோன்றுகிறது.
மேலும் வாசிக்க...

Tuesday, January 13, 2009

அக்காமார்கள்

சென்ற பதிவின் தொடர்ச்சி..

1) தெரிந்த பெண்பதிவர்களில் முக்கியமானவர் இவர். ஈழப் போராட்டத்தைப் பற்றி தவறாக பேசினால் இவர் ஜெட்லீயாக மாறிவிடுவார். இவரின் இந்தத் தொடர் பதிவைப் படித்த பின் இவர் மேல் மதிப்பு கூடியது. பழகுவதற்கு இனிமையானவர். அன்பாக பேசினால் தூயா.. இல்லையேல் போயா.

2) வலையெழுத தொடங்கிய புதிதில் தினம் திருக்குறளும் அதன் உரையும் Sidebarல் போட்டேன்.அதன் பின் ஏனோ நிறுத்தி விட்டேன்.இவர் இங்கே எல்லாக் குறளுக்கும் உரையுடன் பதிவிடுவதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்த்துகள்

3) இவங்க நியூஸீலாந்துக்காரங்க. இப்போ ஆஸ்டிரேலியா போய்ட்டாங்க. ஜே.கே.ஆர். மன்றத்துல முக்கிய பொறுப்புல இருக்காங்க.பல வருஷமா எழுதறாங்க. இவங்க எழுதியதிலே எனக்கு பிடிச்சது மெளயியின் சாகசங்கள்தாங்க. படிச்சுப் பாருங்க.

4) இவங்க ரொம்ப முக்கியமான‌வங்க. ரொம்ப நல்லவங்க. ரொம்ப அன்பானவங்க. ரொம்ப நல்லா எழுதறவங்க. தாமிராவிற்கு போட்டியாளர்.என்ன,இவங்ககிட்ட டீ மட்டும் கேட்டுடாதீங்க. தங்கமணியான இவர் ஹஸ்பெண்டாலஜி பதிவு மூலம் பிரபலமானவர்.

5) கடைசியா ஒருத்தர் இருக்காங்க. அவரைப் பற்றி நான் சொல்லிதான் தெரியனும் இல்ல. ஜே.கே.ஆர் மன்றத்து தலைவி ராப் தான். அவங்களுக்கு சுட்டிக் கொடுத்து ஒன்னும் ஆகப் போறதில்ல.அதனால் தலைவிக்கு நான் எழுதிய கவுஜையோட முடித்துக் கொள்கிறேன்

வீர தீர கலைவாணி

எங்க குல மகாராணி

கும்மிசங்க யுவராணி

கருத்து காமாட்சி ராப்

பராக் பராக் பராக்..

ஆள் கொஞ்ச நாளா எங்கே போனாங்கனு தெரியல. தகவல் தெரிந்தவர்கள் உடனே இங்கே தொடர்பு கொள்ளவும்.

மேலும் வாசிக்க...

Monday, January 12, 2009

இவங்க ரொம்ப 'நல்லவங்கனு' தாமிரா சொல்வாரு

நான் வலையுலகத்துக்கு வந்த போது அவ்வளவாக பெண் பதிவர்கள் என் கண்ணில்படவில்லை. ஆனால் இப்போது நான் படிப்பவர்கள் பட்டியலே பெரியதாக இருக்கிறது. வேலை செய்யும் பெண்கள் மட்டுமல்லாமல் வீட்டுராணிகளும் களத்தில் பலருண்டு. கடந்த சில வாரத்தில் வலைச்சரத்தில் பல பெண்பதிவர்களை அறிமுகப்படுத்தியிருப்பதால் அவர்கள் சொல்லாமல் விட்டவர்களில் நான் படிக்கும் சிலரைப் பற்றி காணலாம்.


தாரணிபிரியா: ஊஞ்சல் என எழுதும் இவர் கடந்த ஏப்ரல் முதல் எழுதி வருகிறார். பதிவுலகம் வளர இவர் செய்த தொண்டை இங்கே பாருங்கள்

பூர்ணிமா : கோவையை சேர்ந்தவர்.வசிப்பது சென்னையில்.கவிதை மற்றும் கும்மியில் கைதேர்ந்தவர். நான் சமீபத்தில் ரசித்த இவரின் கவிதைகள்.

ரம்யா: நகைச்சுவையில் கலக்குபவர். வைகைப்புயல் வடிவேலுவின் தீவிர ரசிகை. வைகைப்புயலின் சினிமா அனுபவத்தை இப்படி சொல்கிறார்

அருணா: இவர் இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறார். இவர் வலைப்பூவின் அழகான டெம்ப்ளேட் எனக்கு பிடிக்கும். இவங்க வீட்டுக்குள்ள ஒருநாள் முதலை வந்துடுச்சாங்க. அட நிஜமாத்தான். படிச்சு பாருங்க.

அமிர்தவர்ஷினி அம்மா: இவரும் கவிதைகள் எழுதுபவர்.ஆனால் மொக்கையிலும் சூரப்புலி. சில்லி சிக்கன் செய்ய சொல்லித் தருகிறார் பாருங்கள்.

ஸ்ரீமதி: உயிரோசை வரை இவரின் கவிதை ஓசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. கவிதைகள் மட்டுமல்லாது மொக்கையிலும் ஆண்களுக்கு சவால் விடுபவர். தாமிராவின் டாப்10 மொக்கையில் மூன்றாம் இடம் வென்றது இவரது பதிவு.லேட்டஸ்ட் மொக்கையை பாருங்க.

வித்யா: கடைசியா சொல்றேன்னா காரணம் இருக்கு. எங்க தல ஜே.கே.ஆரின் ரசிகை. மன்றத்தில் போராடி கொள்கை பரப்பு செயலாளர் பதவியைப் பெற்றவர். அவருக்கு அந்தப் பதவியை தேடித் தந்தது இந்த பதிவுதாங்க‌

அட என்னங்க இது. பட்டியல் நீண்டுக்கிட்டே போது. அடுத்தப் பதிவும் பெண் பதிவர்களுக்கு சொன்னா நீங்க வேணாம்ன்னா சொல்லப் போறீங்க. ..நெக்ஸ்ட்... ரெஸ்ட். அப்புறம் வரேன்.


மேலும் வாசிக்க...

தொல்லை தரும் தொடர்கதைகள்.

வணக்கம் சகாக்களே,

வலைச்சரத்துக்கு அவ்வபோது சின்ன சின்ன நோய்கள் வந்திருந்தாலும் இன்றுதான் மொத்தமாய் அடிப்பட்டிருக்கிறது. என்னையும் ஆசிரியர் ஆக்கலாம் என்று முடிவு செய்த சீனா அய்யாவிற்கு வலையுலக வல்லபாய் பட்டேல்(அதாம்ப்பா இரும்பு மனிதர்) என்று பெயரிடலாம்.

நம்ம சொந்தக்கதை ஒன்னு எழுதி என் அலுவலக பொட்டியில் சேமித்திருக்கிறேன். எதிர்பாராமல் சென்னை வந்துவிட்டதால், நம்ம எஸ்.டி.டையை(STDன்னா வரலாறுதானே) வியாழக்கிழமை பார்க்கலாம்.

தொட‌ர்க‌தை என்ற‌தும் ப‌ல‌ருக்கும் நினைவுக்கு வ‌ருவ‌து வ‌லையுல‌க‌ ரித்தீஷ் அண்ண‌ன் ந‌ர்சிம்மின் மாற‌வ‌ர்ம‌ன் தான். என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌ ஒரு க‌தை.

"நிமிர்ந்த வேம்பின் அருகில் மிகவும் கவனுத்துடன் வேயப்பட்ட கூடாரம்.நடுவில் மூங்கில் நடப்பட்டு,அதன் உச்சியில் இருந்து பிரிந்த கூரை வட்ட வடிவில் இறங்கி இருந்தது.ஆங்காங்கே முட்டுக்கொடுத்து,கட்டி இழுக்கப்பட்ட லாவகத்தில் ஒரு கட்டிடக் கலையின் நுணுக்கம் புலப்பட்டது. சுற்றிலும் ஈட்டி ஏந்திய வீரர்கள்.. புரவிகள் மர நிழலில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தன.. அருகருகே வேயப்பட்ட வைக்கோல் படைப்புகள் அம்பாரமாய் உயர்ந்து, அந்த பிரதேசத்தின் வளமைக்கு கட்டியம் கூறியது. நிலவுதான் எத்தனை அழகு.. கயவர்க்கும்,கள்வர்க்கும்,காதலர்க்கும் பொதுவாய் காய்ந்து மெதுவாய் நகரும் சுந்தரச் சந்திரன்.."

வ‌ர்ண‌னைக‌ளில் ந‌ம் உள்ள‌ங்க‌வ‌ர் க‌ள்வ‌ன் இந்த‌ மாற‌வ‌ர்ம‌ன். ப‌டித்துப் பாருங்க‌ள்.
**************************************************************************

அண்ணன் செந்தழல் ரவியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவரின் பல கதைகளை ரசித்த நான் அவரின் பழைய மொக்கைகளை,மன்னிக்க , பதிவுகளை மேய்ந்த போது என் கண்ணில் பட்டது இந்தக் கதை. ஒரே மூச்சில் அனைத்து பகுதிகளையும் படித்து முடித்து விடலாம். நெஞ்சை கணக்க வைக்கும் முடிவு. இங்கே படியுங்கள்.
***************************************************************************

தொடர்கதை எழுதும் இன்னொருவன் இவர். மிக குறைந்த காலத்தில் நட்சத்திரம் ஆனவர் என்று நம்பப்படுகிறது. அந்த வாய்ப்பு வருவதற்கு இந்தத் தொடர்தான் காரணம் என்றும் இவர் சொல்கிறார். இளைய பல்லவனின் "சக்கர வியூகம்" படித்தால் அது உண்மை என்றும் கூறலாம். மாறவர்மன் நமக்கு சரித்திர சுவையை தந்தால், சக்கர வியூகம் நமக்கு பல அரிய தகவல்களை தருகிறது. படித்துப் பாருங்கள்.
*****************************************************************************

கிடைச்ச கேப்ல எல்லாம் சுயபுராணம் பாடுவதுதானே மனித இயல்பு. அதான்.ஹிஹிஹி.. நானும் ஒரு தொடர்கதை எழுதினேன். ஏனோ முடிக்கவில்லை. காதல் கதைதான். படிக்கதாவங்க படிச்சு பாருங்க.(என்ன,யாருமே படிக்கலையா???)
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது