07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 30, 2009

அறிமுக(ப்) படலம் - IV

திகழ்மிளிர் My Photo My Photo My Photo

(இரண்டு பேரின் புகைப்படங்கள் இல்லை)

திகழ்மிளிர் மொழியாக்கம் செய்துள்ளது, மேலும் உறங்கியது போதும் , உயிர்த்தெழு என்று சொல்லி எட்டாத உயரம் பார்க்கசெய்கிறார்.

தமிழ்தினா – இவரை ஒரு கவிஞராக அறிமுகம் செய்கிறேன், இவர் ஊரை விட்டுப் போகையிலே! நல் இதயங்கள் வாழ்க!ன்னு சொல்லி கண்விழிப்பு வந்தபின்னே…! மனம் தெளிவாகட்டும்ன்னு சொல்றாரு.

MayVee – தினசரி வாழ்க்கை அப்படீன்னு எழுதுறாரு. சந்தோஷ செய்தின்னு சொல்லி ஒரு மரண … போய் பாருங்க. அப்புறம் முக்கியமா ‘நான்’ அப்படின்னு இவர் மேட்டர் காட்டியிருக்கார் அவசியம் பார்த்து பின்னூட்டுங்க. கடைசியா அவரோட ‘தற்கொலை’யையும் பார்த்திடுங்க.

Jas – How to name it அப்படின்னு கேட்கிறாங்க, பேர் வைங்க யாராவது. ஆங்கிலத்துல அதிகம் எழுதுவாங்க. தமிழும் இருக்கும். இவர்களுக்கு Complexion matters. அருமையான காத்திருத்தல்...., வீட்ல பல்பு இல்லாட்டி …

நம்மில் பலருக்கு வால் பையன் தெரியும்

இங்க ஒரு அன்புடன் வாலு இருக்காங்க. குழந்தை ஒரு கண்ணாடின்னு சொல்லி வளரும் வருங்காலம் பற்றி சொல்றாங்க. தகிரியமா ஞாயிற்று கிழமை செய்த கொலைகள் பற்றியும் சொல்லிட்டாங்க.

உஷா – காலச் சிறகுகள், இவரை சிந்திக்க வைக்கும் ஒரு வரியை பாருங்கள். இவர் வந்துவிடு...என்னை வாழவிடு!!!ன்னு சொல்லி உன்னோடு என் வாழ்வு! என்கிறார்.

 

1) ஓட்டு,

2) பின்னூட்டம்,

3) அறிமுக நாயகர்களை அவர்களின் வலைப்பூக்களில் சந்திப்பு

நன்றியுடனும் நட்புடனும்.

--- இன்னும் விரியும்.

43 comments:

  1. மீ த பர்ஸ்ட்டு

    நீங்க பாட்டுக்கு சட்டு சட்டுன்னு அறிமுகப்படுத்திட்டு போயிடறீங்க, நாங்க தான் திக்குமுக்காடிகிட்டு இருக்கோம்.

    பேசாம எல்லாவற்றையும் இணைத்து ஒரு திரட்டிய உருவாக்கிடுங்க, லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கு.

    ReplyDelete
  2. இது கூட நல்லா இருக்கே.

    முயற்சிப்போம்.

    ReplyDelete
  3. இனிமே வரவங்களுக்கு அறிமுகப் படுத்த ஏதாவது பதிவுகள் மீதி இருக்கா ஜமால்! அசத்தறீங்க!! வாரயிறூதிகள் படிக்க சேமித்துக் கொள்கிறேன்! :-)

    ReplyDelete
  4. \\சந்தனமுல்லை said...

    இனிமே வரவங்களுக்கு அறிமுகப் படுத்த ஏதாவது பதிவுகள் மீதி இருக்கா ஜமால்! அசத்தறீங்க!! வாரயிறூதிகள் படிக்க சேமித்துக் கொள்கிறேன்! :-)\\

    அவசியம் படிங்க.

    ReplyDelete
  5. இனிமே வரவங்களுக்கு அறிமுகப் படுத்த ஏதாவது பதிவுகள் மீதி இருக்கா ஜமால்! அசத்தறீங்க!!

    ReplyDelete
  6. மீண்டும் ஐந்து அழகிய அறிமுகங்கள்
    கடலில் வலைவீச முத்துக்களை கண்டெடுப்பது போல் இணையக் கடலில் வலைவீசி புதிய பதிவர்ளின் கண்டெடுப்பு...
    முதலில் படித்துவிட்ட்டு வருகிறேன்...

    ReplyDelete
  7. திகழ்மிளிர் - இவர் அறிமுகம் ஆனவர் தான் எனினும் இவர் வலைப்பூ பக்கம் அதிகம் போனதில்லை இனிமேல் அவர் வலைப்பூவையும் தொடர்கிறேன்...

    ReplyDelete
  8. ஜமால் வாழ்த்துக்கள்

    செம அறிமுகங்கள்
    இவ்வளவு அறிமுகங்களையும்
    சேமித்து வைத்து

    ஒன்றொன்றாக படித்து
    ஜமால் மாதிரியே
    ரசிக்க வேண்டும்

    ReplyDelete
  9. தமிழ்தினா - இவர் எனக்கு புதியவர்

    இவரிடம் படித்த வரிகளில் சில வரிகள்

    //கனவு தெளிந்தபின்னே
    பகிரத் தாவிவந்தேன்
    வார்த்தை தட்டவில்லை
    மனது ஒப்பவில்லை
    ஆசைகள் பெரிதாக...
    மனதோ சிறிதாக //

    கவிதை நடை அழகு...

    ReplyDelete
  10. //
    நிஜமா நல்லவன் said...
    இனிமே வரவங்களுக்கு அறிமுகப் படுத்த ஏதாவது பதிவுகள் மீதி இருக்கா ஜமால்! அசத்தறீங்க!!

    //

    இல்லே இல்லே இதைதான்
    நான் சத்தம் போட்டு சொல்கிறேன்
    பின்னால் வரும் ஆசிரியர்களின்
    கதி அதோ கதிதான்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஜமால்
    உங்கள் பணி தொடரவும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. MayVee - இவருடைய பதிவுகளைவிட பின்னூட்டங்களில் எனக்கு பரிச்சயம் உண்டு...

    ReplyDelete
  13. Jas மற்றும் அன்புடன் வாலு இவங்க இருவரும் எனக்கு புதியவர்கள் அவர்களின் எழுத்துக்களையும் படிக்க வேண்டும்...

    ReplyDelete
  14. உஷா –இவர் எனக்கு சமீபத்திய அறிமுகம்
    இவருடைய வரிகளில் சில

    //தினம் தினம்
    நான் உனை சேர
    மனு கேட்டால்
    இருவருமே மௌனத்தைப்
    பதிலளிப்பதும் ஏனோ?//

    வார்த்தைகள் அழகு...

    ReplyDelete
  15. இவர்கள் மென்மேலும் பல நல்ல படைப்புகளை வலையுலகிற்கு வழங்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. காத்திருப்பதா தான் இருக்கணும்னு நெனைக்கிறேன்...காத்திருப்பதற்கு கத்து குடுத்துதுட்டா கண்டிப்பா ஒரு பொறுமை வந்துரும் இந்த பசங்களுக்கு...பொறுமை இருந்தா எந்த ப்ரச்சினையுமே///

    JAS தன் பதிவில் குழந்தைகளுக்கு
    காத்திருக்கக் கற்றுக்கொடுங்கள் என்கிறார்.
    படியுங்கள்.

    ReplyDelete
  17. உஷாவை நான் படித்ததில்லை.
    படித்துவிட்டு
    எழுதுகிறேன்..
    ஜமாலின் அறிமுகங்கள்,
    சும்மா, அதிருது....ஜமால்..

    ReplyDelete
  18. காதல் இன்பம்
    காதல் சுகம்
    காதல் உலகம்
    காதல் அனைத்தும்

    உணர்த்தியது நீ///

    உஷாவின் கவிதையில் உள்ள அழகிய வரிகள்...

    ReplyDelete
  19. வலைப்பதிவரின் பெரிய திரட்டியாளர்
    ஜமால்தான்!!
    என்ன மக்களே நான் சொல்வது சரியா??

    ReplyDelete
  20. //பேசாம எல்லாவற்றையும் இணைத்து ஒரு திரட்டிய உருவாக்கிடுங்க, லிஸ்ட் ரொம்ப பெரிசா இருக்கு.//

    ஜமால்...இதை நான் வழி மொழிகிறேன்..நம் நண்பர் பாண்டித்துரை செய்தது போல் செய்யலாம்.:-)

    ReplyDelete
  21. அசத்திட்டீங்க ...

    ReplyDelete
  22. மீ தி ட்வெண்டி பர்ஸ்ட்டு :)

    உங்களுக்குள்ளே என்னன்னவோ இருக்கே

    நீங்க எங்கயோ போய்ட்டீங்க

    ReplyDelete
  23. அடடா எத்தனை அருமையான வலைகள் இதுவரை கண்ணுக்கு படாமல் இருந்திருக்கிறது,
    ரொம்ப நன்றி ஜமால்,

    என் வலையையும் சேர்த்தற்கு கூடுதல் நன்றி

    ReplyDelete
  24. கால தாமதத்திற்கு வருந்துகிறேன்...

    உள்ளேன் ஐயா !!!!

    ReplyDelete
  25. லேட்டா வந்தாலும் லெக் செஞ்சுரி நான் தாம்பா ..25 !!!!!!!

    ReplyDelete
  26. நீங்க ரெம்ப நல்லவரு

    ReplyDelete
  27. ஜமால் அண்ணா, சற்று உடல்நிலை சரியில்லை.. அதன் காரணமாக உங்களிட சொல்லாமலே வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர் பதிவுக்கு தெரிந்து நிகழ்வுகளோடு வலைக்குடிலிலிட்டு சொல்லக் கூட இல்லாமல் இருந்து விட்டேன். மன்னியுங்கள்.

    சரி, ஜமால் அண்ணாவுக்கு ஒரு பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாமே என உங்கள் “கற்போம் வாருங்கள்” வந்தேன். வந்தால், நீங்கள் வலைச்சரம் தொகுப்பாளராகக் கண்டு மகிழும் சந்தர்ப்பம் கிடைத்தது.. மிகுந்த மகிழ்ச்சிகள் அண்ணா.. தொடருங்கள் உங்கள் பணியினை..

    மேலும் எனைப் பற்றியும் கூட அறிமுகப் பகுதியில் இணைத்திருக்கிறீர்கள்.. அதற்கு நன்றிகளும் கூட...

    ReplyDelete
  28. \\ புதியவன் சொன்னது :

    தமிழ்தினா - இவர் எனக்கு புதியவர்

    இவரிடம் படித்த வரிகளில் சில வரிகள்

    //கனவு தெளிந்தபின்னே
    பகிரத் தாவிவந்தேன்
    வார்த்தை தட்டவில்லை
    மனது ஒப்பவில்லை
    ஆசைகள் பெரிதாக...
    மனதோ சிறிதாக //

    கவிதை நடை அழகு... \\


    நன்றிகள் புதியவன்...

    ReplyDelete
  29. திகழ்மிளிர்..மேவீ...எனக்கும் பின்னூட்டங்களில் தான் இவர்கள் அறிமுகம்.

    "திகழ்மிளிர்" இந்த பெயரை பலர் பாராட்டி பின்னூட்டங்களில் எழுதியதை பார்த்திருக்கிறேன்.

    மேவீ க்குள் ஒரு மிகப்பெரிய புகைப்பட கலைஞர் ஒளிந்திருக்கிறார் என்பதை யதேச்சையாக அவர் வலைப்பூ பக்கம் சென்ற போது தான் தெரிந்தது.

    ReplyDelete
  30. தமிழ்தினாவும் எனக்கு இப்போது தான் அறிமுகமாகிறார்.

    இவ‌ருடைய‌ "வீணில் க‌ரையுத‌டி" க‌விதையில் இந்த‌ வரிக‌ள் வ‌லியோடு...

    "தழுவிய கைகளும்

    தடவிய இதழ்களும்

    பருகிய விழிகளும்

    இழந்தன உன்னை!"

    ReplyDelete
  31. பாதாம் பர்ஃபி செய்வது எப்படி ??? சொல்லித் தருகிறார் JAS...

    http://shrejan.blogspot.com/2008/11/tasty-corner.html

    அவர் வலைதளம் சென்று பாருங்கள்...TASTE CORNER நு ஒரு பிரிவில் இப்படி சமையல் குறிப்புகளும் எழுதி வைத்திருக்கிறார்.

    பலருக்கு பயன்படும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  32. உஷாவின் "ஈப்போ நகர் வெள்ளைக் காபி" பதிவு நல்லா இருக்குங்க...

    http://kaalachiragugal.blogspot.com/2008/09/blog-post_01.html

    மலேசிய நாட்டைப் பற்றியும் தகவல் பரிமாறியிருக்கிறார்.இவர் மென்மேலும் எழுத என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. யாரவது இருக்கீங்களா
    ஒளிஞ்சி இருந்த எட்டி பாருங்க

    ReplyDelete
  34. // நசரேயன் said...
    நீங்க ரெம்ப நல்லவரு

    //

    வந்துட்டாரு நெல்லை புயல்
    ரயில் தாமதமாகி விட்டதோ ??

    ReplyDelete
  35. //
    காதல் இன்பம்
    காதல் சுகம்
    காதல் உலகம்
    காதல் அனைத்தும்

    உணர்த்தியது நீ///

    உஷா இதுவரை நான் படித்தது இல்லை
    இப்போ தான் பார்த்தேன்
    மிக அருமையா எழுதி இருக்காங்க
    மனம் பரவசமாகிப் போனது

    ReplyDelete
  36. அன்புடன் வாலு...

    பத்தாம் வகுப்பிலேயே கவிதை எழுத ஆரம்பிச்சவங்க..வித்தியாசமான சிந்தனை கொண்டவர் என்பதை முதன் முதலாக இவரது வலைப் பக்கம் சென்ற போதே அறிந்து கொண்டேன்.அர‌சியல்,தீவிர‌வாத‌ம்,காமெடி,க‌விதை எதையும் இவ‌ர் விட்டு வைக்க‌வில்லை.

    //விடிந்தேவிட்டது
    அய்யோ......இன்று ஞாயிற்று கிழமை......
    நான் வேண்டாத நாளில்லை
    ஆனால் வந்து விட்டதே ஞாயிற்று கிழமை....
    படபடக்கும் இதயம்
    வியர்க்கும் உடல்
    கொலையாளியின் மனம் இப்படிதானிருக்குமோ????
    யாருக்கு தெரியும்........
    முதல் கொலை இன்றுதானே........
    இன்று விட்டால் இனி முடியாது
    மனதை தேற்றியது அறிவு.....
    இதோ தூக்கிவிட்டேன் தடி
    முடிந்தது..........
    மடிந்தது............
    //

    ஒரு க‌ர‌ப்பான் பூச்சி அடிச்ச‌துக்கு குடுத்த‌ பில்ட் அப்...

    ReplyDelete
  37. // RAMYA said...
    யாரவது இருக்கீங்களா
    ஒளிஞ்சி இருந்த எட்டி பாருங்க
    //


    மைக் டெஸ்டிங்...1 2 3......

    ReplyDelete
  38. RAMYA said...
    // நசரேயன் said...
    நீங்க ரெம்ப நல்லவரு

    //

    வந்துட்டாரு நெல்லை புயல்
    ரயில் தாமதமாகி விட்டதோ ??


    அவரு வந்து, திரும்பியும் கிளம்பி அரை நூற்றாண்டு ஆச்சே...

    ReplyDelete
  39. ஜமால்,அப்பா.....டி எத்தனை அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்.

    இங்கே சகோதரி திகழின் கவிதைகள் நிறையவே சிந்திக்க வைக்கும்.
    அவரின் தளம்கூட ஒரு அழகு.

    மற்றவர்களில் MaYVee மட்டும் குழந்தைநிலாவின் பிறந்தநாளின்போது வாழ்த்தோடு முதன்முதலாக வந்திருந்தார்.

    வால்பையனை நிறையவே பார்த்திருக்கிறேன்.என் தளம் வருவதில்லை.மற்றவர்கள் எனக்குப் புதியவர்கள்தான்.வாழ்த்துக்கள் எல்லோருக்குமே.

    ReplyDelete
  40. காலை வணக்கம்!!!!
    முத்துக்குமாருக்கு ஒரு மௌன அஞ்சலி வலைசரம் சார்பாக.

    ReplyDelete
  41. நிறைய படிக்க வைக்கறீங்க ஜமால்..!
    :))

    ReplyDelete
  42. ரொம்ப நன்றி ஜமால்.........

    உங்க புண்ணியத்துல என் வலைப் பக்கம் நிறைய விருந்தினர்கள் வருவாங்கன்னு நினைக்கிறேன்......

    ReplyDelete
  43. nalla erukku entha blog

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது