07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 28, 2009

வலைச்சரத்தில் ஆறாம் நாள்...

வணக்கம் நண்பர்களே...


தினம் ஒரு தித்திப்பு:

விடியற்காலை எழுந்து, நாளும் பூஜை செய்வதையும் தினமும் சொற்பொழிவு நிகழ்த்துவதையும் தவமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் பலர். ஆனால் தினமும் நாம் அப்படி செய்ய முடியுமா? செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. தினமும் தாய், தந்தையரை வணங்கினால் போதும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட. கண் முன் இருக்கும் தாய், தந்தையரை வணக்குவது சாலச் சிறந்தது. கடவுள் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பார்கள். நமது பெற்றோர்கள் கண்முன் இருகிறார்கள். தினமும் நம் வளர்ச்சியில் பங்கு கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்புவதை காட்டிலும் கண்முன் இருக்கும் பெற்றோரை வணங்குவோம்.

தாயிற் சிறந்த கோயிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை, தந்தையே அன்பின் எல்லை

மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த வரிசையை நம் முன்னோர்கள் தான் சொல்லி உள்ளனர்.

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்.

தினமும் அறிமுகம்:

ரம்யா அக்கா Will To Live
இவர் பதிவர்களைக் கொண்டு ஒரு கிரிக்கெட் போட்டியே நடத்தியுள்ளார்.
சினிமாவில் வரும் சிரிப்பு பகுதி போல் இவரும் தன் சொந்த எழுத்துக்களால் ஒரு சிரிப்பு பகுதி எழுதியுள்ளார்.


சரக்கு மன்னன் வால்பையன்
இவர் புது விதமான சிந்தனை கலந்து நிறைய பதிவுகள் எழுதுவதில் வல்லவர். மற்றவர்கள் இடும் பிண்ணுட்டங்களை கொண்டே பதிவு எழுதும் திறமை வாய்ந்தவர்.
அதுமட்டும் அல்லாது பிறர் போடும் டிஸ்கி கொண்டும் பதிவு எழுதுபவர்.
சரக்கு பற்றிய இவரது கவிதைகள் அருமை.


ஜீவன் அவர்களது கண்ணாடி
இவர் சமுக சிந்தனை வாய்ந்தவர். சமுகத்திற்கு நடக்கும் அநியாயங்களை மக்களுக்கு எடுத்துக்காட்டும் சமுக அக்கறை வாய்ந்தவர்.



குடுகுடுப்பை ஜக்கம்மா முன்னேற்ற கழகம் குடுகுடுப்பை அனுபவம் என்று இவர் எழுதும் அனைத்து பதிவுகளும் அருமையானது.


கொத்து பரோட்டா கேபிள் சங்கர்
கொத்து பரோட்டா ஸ்பெசல்.


சந்திப்போம் சிந்திப்போம்...

7 comments:

  1. அறிமுகங்கள் அருமை வணங்காமுடி!!

    ReplyDelete
  2. வாழ்த்துகள் நண்பரே!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பரே.

    நீங்க சொன்ன அனைவரும் வலைப்பதிவில் ஜாம்பவான்கள்.

    ReplyDelete
  4. நல்வாழ்த்துகள் நண்பரே

    நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  5. ரொம்ப அழகாக தினம் ஒரு தித்திப்புகள் ...கதை மற்றும் கருத்துகள் அனைத்தும் அருமை...
    வெகு நாட்களாக பின்னூட்டம் இடுவதில்லை பார்வையாளராக மட்டுமே....இருக்கிறேன்...
    உங்களின் கதை பின்னூட்டம் இட வைத்து விட்டது....
    நடமாடும் தெய்வம் தாயும் தந்தையும்...அவர்கள் காட்டும் குரு.ஞானம் கொடுத்து கடவுள் பக்தியை கொடுத்து....நாம் செல்லும் வழியை காட்டுகிறார்கள்...
    உங்களை அனைவரும் வணங்காமுடி அண்ணே என்று அழைப்பதில் உங்களுக்கு சந்தோஷமா..ஏன் உங்களோட பெயரை பகிர்ந்து கொள்ளல..என்பது..தான் புரியுல...

    நன்றிகள்...
    வலைச்சரத்தில் அறிமுகம் செய்வதோடு..ரொம்ப நாட்கள அப்பறம்
    ஒரு புதுமையாக உள்ளது..உங்கள் வழி...மேன்மைப்பெற வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. மன்னிச்சுகோங்க தல!

    கல்யாணத்துக்கு போயிட்டு வர கொஞ்சம் லேட்டாயிருச்சு!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது