07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 15, 2009

இந்தியா ஒளிர்கிறது


அன்பின் பதிவர்களே

தமிழ் நாட்டினை இயற்கை சோதித்துப் பார்க்கிறது. பெரு மழை பொழிகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. அணைகள் நிரம்புகின்றன. அருவிகள் கொட்டுகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பெயர் புரியாத புயல்கள் சீறுகின்றன. கடல்கள் கொந்தளிக்கின்றன.

இவை வாழும் மனிதர்கள் அனைவரையும் சோதித்தாலும் - துயரப்படுத்தினாலும், இயல்பு வாழ்க்கையினை பாதித்தாலும் - சாலையோரம் வாழும் ஏழை மக்கள் - இருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி - அன்றாடம் காய்ச்சியாய் அல்லல் படும் இவர்கள் மழையின் கொடுமையால் மிகவும் துன்பப்படுகிறார்களே !. இவர்களுக்கு ஒளிரும் இந்தியா ஏதும் செய்ய வில்லையே. இவர்களும் இந்தியர்கள் தானே !

நாம் சாலையோரங்களில் ஒதுங்குகிறோமே ! இயல்பாக சாலைகளை கடக்கிறோமே ! இவர்களை இவர்கள் வாழ்க்கையினை என்றாவது கவனித்திருக்கிறோமா ? பார்த்து விட்டு கடந்து போக மனம் வந்தால் நன்று. நாம் இந்தியர் தான் என உறுதிப்படுத்தி விடலாம். கடந்து போகும் போது மனம் குமுறினால் நாம் மனிதர்தான். அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமென நினைத்து உதவி செய்ய விரைந்தால் நாம் மகாத்மா ஆகி விடுவோம்.

நாம் ஏதாவது செய்ய வேண்டாமா - சிந்திப்பது மனதோடு கரைந்து விடும். பேசுவது காற்றோடு கரைந்து விடும். செயலில் இறங்கினால்தான் நன்மை பிறக்கும். அரசு இயந்திரம் மெதுவாகத்தான் இயங்கும். நல்ல உள்ளம் படைத்த மக்கள் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் இவர்களுக்கு உதவ முடியும்.

என்ன செய்வது ? எப்படிச் செய்வது ? தன்னார்வலர்கள் நிறைந்த தொண்டு நிறுவனங்கள் இருக்குமே ! ம்ம்ம்ம்ம்ம்

நமது கடமை இடுகை இடுவதோடு முடிந்ததா - வேறு வழி தெரியவில்லையே ! ஆனால் நிச்சயம் ஏதேனும் செய்வோம் என்பது மட்டும் உறுதி.

நமது நண்பர் ரங்கராஜன் என்ற ரங்கா ஒரு படம் வரைந்திருக்கிறார். மேலே கூறிய அனைத்தும் அவரது மனதினை துயரப்படுத்தியதால் இப்படத்தினை வரைந்திருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகள்.


சீனா

11 comments:

  1. மிகவும் வருந்தவும் சிந்திக்கவும் வேண்டிய விஷயம்....

    தலையில் கொடியைப் போர்த்தக் கூடாது என்று சட்டம் பேசுவார்களே தவிர.... குறை களைய துரும்பையும் அசைக்க மாட்டார்கள் நம் தேசத்தை ஆளும் புண்ணியவான்கள் :(

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஷ் - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. //இவர்களை இவர்கள் வாழ்க்கையினை என்றாவது கவனித்திருக்கிறோமா ?//

    ஆமாம் சீனா..! இவர்களைப் பார்க்கும் பொழுது நம்முடைய கவலைகள் எல்லாம் மிகவும் டாம்பீகமாகத் தோன்றும்..!

    ReplyDelete
  4. //நாம் ஏதாவது செய்ய வேண்டாமா - சிந்திப்பது மனதோடு கரைந்து விடும். பேசுவது காற்றோடு கரைந்து விடும். செயலில் இறங்கினால்தான் நன்மை பிறக்கும். அரசு இயந்திரம் மெதுவாகத்தான் இயங்கும். நல்ல உள்ளம் படைத்த மக்கள் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் இவர்களுக்கு உதவ முடியும்.

    என்ன செய்வது ? எப்படிச் செய்வது ? தன்னார்வலர்கள் நிறைந்த தொண்டு நிறுவனங்கள் இருக்குமே ! ம்ம்ம்ம்ம்ம்//

    பூனைக்கு யார் மணி கட்டுவது...?! என்னுடைய எதிர்காலக் கனவுகள் இவ்வாறான மக்களுடன் சேர்ந்தே பயணிக்கிறது... இந்தப் பேராசை... அல்லது கனவு ஒரு நாள் நனவாகலாம்... நானும் அணிலாகலாம்... நீங்களும் கூட... =)

    ReplyDelete
  5. என் எழுத்துகளையும் என் படைப்பையும் மதித்து வலைச்சரத்தில் சேர்த்துகொண்ட என் வாலிப நண்பன் சீனாவுக்கு நன்றி..

    நம் சமுதாயம் என்பது எப்போது நாம் சமுதாயம் என்பதாய் மாறுமோ.அப்போது எல்லாம் சரியாகிவிடும்..என்பது என் நம்பிக்கை!

    ReplyDelete
  6. //
    நாம் ஏதாவது செய்ய வேண்டாமா - சிந்திப்பது மனதோடு கரைந்து விடும். பேசுவது காற்றோடு கரைந்து விடும். செயலில் இறங்கினால்தான் நன்மை பிறக்கும். அரசு இயந்திரம் மெதுவாகத்தான் இயங்கும். நல்ல உள்ளம் படைத்த மக்கள் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் இவர்களுக்கு உதவ முடியும்.
    //

    நீங்கள் சொல்றதும் மிகவும் சரியான விஷயங்கள்தான் சீனா ஐயா அவர்களே!

    நாமே களத்தில் இறங்கினால்தான் துயரப்படும் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும். அனைவருமே இதே போல் சிந்தித்தால் கஷ்டப் படுபவர்கள் கொஞ்சமாவது குறைய வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  7. இந்தப் பத்து நாட்களாக என் மனதிலும் இந்தக் குடைச்சல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்று அல்லது இரண்டு இடுகை எழுத எண்ணியிருக்கிறேன். சில நேரம் உண்மை ரொம்பவே சுடும். பார்க்கலாம்.

    ReplyDelete
  8. கலகலப்ரியா பாலா ரம்யா வாலு - அனைவர்ரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. உண்மைதான். ஏழை ஏழ்மையிலிருந்து விடுபட்டே ஆகணும் தான். அப்படி இல்லாமல் ஏதேனும் தீர்வு பணம் மட்டும் அல்ல. மனம் தான்..:)

    ReplyDelete
  10. அன்பின் வேல்

    அருமையான க்ருத்து

    வருகைக்கௌம் கருத்துக்கும் ந்ன்றி வேல் நல்வாழ்த்துகள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது