07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 4, 2009

வரைகரங்கள்

நான் பத்தாவது படிக்கிற வரைக்கும் டிராயிங் அப்படின்ற விஷயத்துக்கு கொஞ்சம் கூட முக்கியத்துவம் தந்தது இல்லை. அந்த பாடவேளை வரும்போது எல்லாம் கிளாஸ் கட்டடிச்சுட்டு வேற கிளாஸ் போயிடுவேன். ஆனா +1 படிக்கும்போது என் அறிவை பத்தி புரிஞ்சுக்காம என்னை டாக்டர் இல்லாட்டி இன்ஜினியர் ஆக்கியே தீரணுமுன்னு எங்க வீட்டுல இருக்கறவங்க என்னை கொண்டு போய் அறிவியல் கணிதம் அப்படின்னு எனக்கு பிடிக்கவே பிடிக்காத ரெண்டு சப்ஜெக்டு மெயின் சப்ஜெக்டா இருந்த முதல் குரூப்ல கொண்டு போய் சேர்த்தாங்க. கடைசியில என்டரன்ஸ் எழுதற அளவுக்கு கூட மார்க் எடுக்காம நான் பி.காம் சேர்ந்தது வேற கதை. ஆனா அந்த ரெண்டு வருசம் நான் படிக்கறதுக்கு கூட அத்தனை கஷ்டப்படலை. ரெக்கார்டு வரைய கஷ்டபட்டேன் பாருங்க அதை வைச்சே எட்டு மெகாசீரியல் எடுக்கலாம். ஒரு தடவை ரொம்ப கஷ்டப்பட்டு தவளை வரைஞ்சு பாகம் குறிச்சுட்டு போனேன். என் ரெக்கார்டு நோட் பார்த்துட்டு எங்க ஜூவாலஜி மாஸ்டர் என்ன கேட்டார் தெரியுமா தவளை வரைய சொன்னா முதலை வரைஞ்சுட்டு வந்து இருக்கே. இப்படிதான் இருக்கும் நான் படம் வரையற அழகு. ஆனா இவங்க எல்லாம் அப்படி இல்லைங்க. அழகா படம் வரையறங்கோ. அதாவது படம் வரையறதிலே படம் காட்டறாங்கோ.

அன்புடன் அருணா மேடம் ஒவிய அருணாவாக இங்க ஜொலிக்கிறாங்க.

தன்னோட சகபதிவர்களை அழகான ஒவியமா வரைஞ்சு அதை விருதா குடுத்து இருக்கார் .ஆதி .

அம்மா போலவே பொண்ணும் அழகா வரைவாங்க. அருணா மேடம் பொண்ணு வைஷ்ணவி அழகா படம் வரைஞ்சு இருக்கிறதை பார்க்க இங்க வாங்க‌.

எழுதுவது எல்லாம் எழுத்தெல்ல அப்படின்னு சொல்லிட்டு நல்லா எழுதுவார். வரைவது எல்லாம் படம் இல்லைன்னு சொல்லிட்டு படமும் நல்லா வரையறார் சுரேஷ்.

இவங்க பேரும் ப்ரியாதான். ஆனா என்னை போல இல்லாம அழகா வரையறாங்க. இவங்க மனதில இருந்து வரைஞ்சதை பாருங்களேன்.

அழகான ஒவியங்களை பார்த்ததுலே சந்தோஷமா இருக்குதா. அதே சந்தோசத்தோட ரெண்டு நாள் விடுமுறையையும் கொண்டாடுங்க சரியா

16 comments:

  1. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்.

    ------------

    தெரிந்த பதிவர்கள் தான் என்றாலும் வித்தியாசமான பார்வை ...

    ReplyDelete
  2. இத்தனை ஓவியர்களா!?

    உங்களுக்கு அபார ரசனை தான்!

    அறிமுகத்திற்கு நன்றிகள்!

    ReplyDelete
  3. அட

    வித்தியாமான அறிமுகம்..

    ReplyDelete
  4. ஐந்தாம் நாள் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  5. ஓவியர் தினமா இன்று கலக்குங்க!!

    ReplyDelete
  6. அரிமுகப்படுத்தபட்ட அத்தனை பேரும் சிறந்த ஓவியர்கள் தான் - ஐயமே இல்லை

    நல்வாழ்த்துகள் தாரணி பிரியா

    ReplyDelete
  7. மிகவும் வித்தியாசமான பகிர்வு.

    தவளை - முதலை
    அவ்ளோ பெரிசாவா வரைஞ்சீங்க?
    :)))))))

    வரைய வரவில்லையென்றாலும் அதை ரசிக்கும் மனமிருக்கிறதே தாரணி.

    ReplyDelete
  8. அடடே....அம்மாக்கும் பொண்ணுக்கும் ஒரே பதிவுலே அறிமுகமா????ரொம்ப நன்றி தாரணி!

    ReplyDelete
  9. ப்ரியா ஓவியம் மிக அற்புதம்

    ReplyDelete
  10. ஓவியம் வரைய தெரியவில்லை என்றால் என்ன? அதான் நல்லா கலா ரசனையுடன் ஓவியங்களை ரசித்து, மற்றவர்களுக்கும் அறிமுகப் படுத்துகிறீர்களே. சூப்பர்!

    ReplyDelete
  11. அறிமுகத்திற்கு நன்றிங்க...

    ReplyDelete
  12. வித்தியாசமான அறிமுகங்கள் :)

    ReplyDelete
  13. அட, சேம் பிளட்!! இந்த ரெக்கார்ட் நோட் வரையறதுக்கு நான் பட்ட பாட்டைப் பாத்துப் பயந்து என் தொங்கச்சி 11-ஆங் கிளாஸ்லயே அக்கவுண்ட்ஸ் எடுத்துட்டா!!

    வித்தியாசமான பார்வை!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அக்கா இதுல‌ ஒரு பெய‌ர் விடுப‌ட்டுள்ள‌து. சேர்த்துக்கோங்க‌. நிலாவும் அம்மாவும் அருமையா ப‌ட‌ம் வ‌ரைவாங்க‌. அதோட‌ ம‌ட்டும் இல்ல‌. ப‌ட‌ம் வ‌ரைய‌ ந‌ம‌க்கும் சொல்லித் த‌ராங்க‌.

    ReplyDelete
  15. http://sandaikozhi.blogspot.com/2009/04/blog-post_15.html

    ReplyDelete
  16. மிக்க நன்றி!!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது