07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 7, 2009

நட்சத்திரங்கள்...

அனைவருக்கும் வணக்கம் (அட சல்யூட் எங்கப்பா?)



அமிர்தவர்ஷினி அம்மா

இவங்க மழைன்ற வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க...
இவங்களைப்பத்தி சொல்றதுன்னா சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரி...
இவரைப்பற்றி இதற்க்கு முன்னால் பலரும் கூறியிருப்பார்கள் இருந்தாலும் நானும் இவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் இவரின் எழுத்துக்களை தங்களிடம் அறிமுகம் செய்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.ஆமாங்க எப்பிடியெல்லாம் எழுதுறாங்க இவங்க வட்டாரபேச்சுவழக்கு நடையில் அன்றாட நிகழ்வுகளையும் தன் செல்ல மகளின் சேட்டைகளையும் அழகுகளையும் வாசிக்க வாசிக்க மிகவும் பிடித்து போகிறது.என்னை பொறுத்த மட்டில் இவரின் எழுத்துநடை வலையுலகில் யாரிடமும் இல்லாத ஒன்று.சரிதானுங்களே அ.அ.
(ஆண்டாவா எனக்கு இவங்களை மாதிரி எழுத்துநடையில எழுதுற சக்தி கொடுப்பா...)

இதோ இவர் கைவண்ணங்களில் சில...




***********************************************************************************

விசா

இவர் விசா பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்..
இவர் ஒரு கதாசமுத்திரம் ஆமாங்க ட்விஸ்ட் கதை சொல்வதில் இவருக்கு நிகர் இவரே , விறு விறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதை சொல்லுவதில் கெட்டிக்காரர்.அநாவசியமாக கூட வார்த்தைகள் இருக்காது அத்தனை வார்த்தைகளும் கதையோடு சேர்ந்து நம்மையும் அதனுடன் ஒன்றிப்போய் படிக்கச்செய்துவிடும் .இவரின் கேப்ஸ்யூல் கதைகள் பிரசித்தம்.கதை மட்டுமில்லை சில நேரம் இவர் எழுதும் காமெடி பதிவுகளும் நம்மை வயிறு வலிக்க செய்துவிடும் ஏனோ இவர் அதிகம் வெளியில் தன்னை தானொரு பதிவன் என்று காட்டிக்கொள்வதில்லை.சுய விளம்பரமும் தேடிக்கொள்வதில்லை.(கத்துக்கோடா வசந்து)நீங்கள் அனைவரும் கண்டிப்பா இவரோட கதைகளை வாசிக்க வேண்டும்...
(கண்டிப்பா உங்களை மாதிரி ஒரு நாள் ஒரு கதையாச்சும் எழுதுவேன் விசா)




************************************************************************************


தமிழரசி

இவங்க எழுத்தோசை எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க..
வலையுலக கவியரசின்னு கூட சொல்லலாம்,அவ்வளவு கவிதைகள்,அத்தனையும் வாசிக்க வாசிக்க ரசிக்கலாம்,சமுதாய கோபங்களை சத்தமில்லாமல் தன் கவிதைகளில் வெளிப்படுத்துவார்,காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதைகள் எழுதுவதும் கைவந்த கலை இவருக்கு,ஒரு கவிதை மெசின் வைத்திருப்பார் போலும் ஏதாவது கவிதைன்னு இவருக்கிட்ட கேட்டா அடுத்த நிமிசமே கவிதை எழுதி கொடுத்திடுவாங்க.அவ்வளவு கவி ஞானம்.
அன்பானவர் ,பாசமானவர்கூட இவர் எனது இரண்டாவது தாய் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையா இருக்கு.

இவரின் கைவண்ணங்கள் இதோ...

ஒரு நண்பரின் திருமண அழைப்பிதழ்க்கு எழுதிய இருமன திருமண ஓலை




************************************************************************************


வானம்பாடிகள் பாலா

இவர் பாமரன் பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்

சமுதாய கோபம் மிக்கவர்,இவரின் கோபத்திற்க்கு அரசியல் வாதிகளின் கோரமுகம் தினமும் கிழிக்கப்படுகிறது இவரது இடுகைகளில்,இந்த வயசுலயும் காதல் ரசம் சொட்ட சொட்ட காதல் கவிதைகள் எழுதுகிறார் (எப்பிடி நைனா இதெல்லாம்?) இவரது அனுபவப்பகிர்வுகள் படிச்சுட்டு சிரிக்காம வர்றவங்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்ற அளவில் சிறப்பான நகைச்சுவை இடுகைகளை எழுதி நம் வயிற்றை பதம் பார்க்கிறார்,அன்பானவர் அனைத்து புதியவர்களுக்கும் ஊக்கம் கொடுத்து வருகிறார்..இவரின் நறுக்குன்னு நாலு வார்த்தை இடுகைகளை புத்தகமே போடலாம் அவ்வளவு நறுக்கு தெரிக்கின்றது இவரது இடுகைகளில் மூத்த பதிவர் என்ற பொழுதிலும் இளையவர்களுக்கு இணையாக களத்தில் பட்டாசு வெடிக்கிறார் தினமும்...

இதோ இவரது நறுக்குகள்





************************************************************************************

ராமலக்ஷ்மி மேடம்

இவங்க முத்துச்சரம் என்ற வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க...
இந்த பதிவுலகத்திலயே மிகவும் ரெஸ்பெக்ட்டான ஆளுங்க...மிகுந்து பேசி பார்த்திருக்க வாய்ப்பில்லை.நான் மிகவும் மதிக்கும் பதிவர்
திருநெல்வேலி மண்ணைச்சேர்ந்த இவங்களின் எழுத்துக்களை நான் பதிவுலகம் வந்ததிலிருந்து வாசிச்சுட்டு வர்றேன் கவிதைகள்,சிறுகதைகள் இவரின் தனிச்சிறப்பு,புகைப்படங்களை சுட்டுத்தள்ளுவதிலும் தேர்ந்த நிபுணர் இவரின் இடுகைகளில் நாம் இடும் பின்னூட்டங்களுக்கு அழகாக பொறுமையாக புரியும்படியான விளக்கம் கொடுக்கிறார்.இவரின் பல இடுகைகள் யூத்ஃபுல் விகடனில் வெளிவந்திருக்கிறது தற்பொழுது தேவதை இதழிலும் தொடர் எழுதுகிறார் அதுமட்டுமன்று நிறைய வார மாத இதழ்களில் இவரின் படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.வாழ்த்துக்கள் மேடம்...

இவங்களோட இடுகைகள்





*************************************************************************************

கதிர்-ஈரோடு

இவர் கசியும் மவுனம் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்
இவரை ஆரம்பத்திலிருந்தே பதிவுலகில் நன்கு தெரியும் நல்ல கவிஞர் தொடர்ச்சியான சமூக நல கவிதைகள் நச்சுன்னு எழுதுவார்.இவரின் சமுதாய நல கட்டுரைகளும்,தற்சமய தேவையான சமுதாய விழிப்புணர்ச்சி கட்டுரைகளள் பசுமரத்தாணிபோல் மனதில் சலனத்தை ஏற்படுத்தி பதிந்து போகின்றன..தொடர்ச்சியா சிக்சர் அடிச்சுட்டு இருக்கார்,(கதிர் சார் இப்படி கட்டுரை எழுதுவது எப்படியென்று எனக்குமட்டும் ரகசியம் சொல்லுங்களேன்)இவரின் இடுகைகளும் தொடர்ச்சியா யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...

இவரின் சில கவன ஈர்ப்பு இடுகைகள்





*************************************************************************************


பா.ராஜாராம்

இவர் கருவேலநிழல் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் இல்லையா மக்கா?
இவரைப்பத்தி நான் சொல்லிதெரியணும்ன்ற அவசியம் இல்லை.வலையுலக கவிஞர்களில் முதன்மையா இருக்கிறார் இவரின் எளிமையான கவிதைகள் மனதை பதம் பார்க்கும்.எப்படியெல்லாம் பாசத்தையும், அன்பையும், இயலாமையையும் வெளிப்படுத்துகிறார் அத்தனைகவிதைகளும் மிகச்சிறப்பானவை,பா.ரா.இதுவரைக்கும் சவுதி மன்னரிடமிருந்து எவ்வளவு பொன் முடிப்பு பரிசாக வென்றிருக்கிறீர்கள்?
இவரின் பின்னூட்டங்களும் பாசமாவே இருக்கு...இப்போ வர்ற டிசம்பர் 11 இவரோட கவிதை தொகுப்பும் புத்தகமா வெளிவருகிறது வாழ்த்துக்கள் பா.ரா.


இதோ இவரின் சில வைரங்கள்





**************************************************************************************

நாளையும் சிறந்த நட்சத்திரங்களுடன் வருகிறேன் நன்றி

ப்ரியமுடன்...வசந்த்

74 comments:

  1. இரண்டாம் நாள் வாழ்த்துகள் ஆசிரியரே! மகன் தந்தைக்காற்றிய உதவிக்கு நன்றி சொல்வது தவறு. :)). அசத்து வசந்து!

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள்...! lay out நல்லாருக்கு..!

    ReplyDelete
  3. ஆஹா... உங்க ஸ்டைல்ல அறிமுகங்கள் அசத்தல் உ பி..

    ReplyDelete
  4. நேத்து வராததுக்கும் சேர்த்து இன்னைக்கு ரெண்டு சல்யூட் வச்சிக்கிறேன் வசந்து :)))

    ReplyDelete
  5. அசத்தலான அறிமுகங்கள். பலர் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் :)

    ReplyDelete
  6. இரண்டாம் நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  7. அசத்தலான அறிமுகங்கள்.. புதியவர்களுக்கு இந்த அறிமுகங்கள் மிகவும் பயன் தரும்.
    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த் !

    ReplyDelete
  8. ம்ம் ... நினைச்சுகிட்டே இருந்தேன் இந்த வசந்து எதாச்சும் வித்தியாசமா செய்வாரே அப்படின்னு ..!;;) அசத்தல் அறிமுகங்கள்..! அறிமுகபடுத்திய விதம் டாப்..!

    ReplyDelete
  9. நட்சத்திர வரிசையில் என்னையும் வைத்த உங்கள் அன்புக்கு நன்றிகள்!

    மற்றவருக்கு என் நல்வாழ்த்துக்கள்!

    தேவதையில் என் வலைப்பூவினை அறிமுகம் மட்டுமே செய்துள்ளார்கள். ஹி, தொடர் எல்லாம் எழுதும் அளவுக்கு வளரவில்லை இன்னும்:)!
    -------------------
    கலகலப்ரியா said...
    //lay out நல்லாருக்கு..!//

    எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்கிற உங்கள் வழக்கமான ஆர்வமும் உழைப்பும் இங்கும் மின்னுகின்றன. வாழ்த்துக்கள் வசந்த்!

    ReplyDelete
  10. அத்தனையும் முத்தான பதிவர்கள்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  11. உங்களால் அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்..!

    சிறப்பான பணி வசந்த் !!! தொடருங்கள்....

    இதுல விசா கூட ஒரு கம்மர்ஷியர் ரைட்டர் தாங்க..!

    ReplyDelete
  12. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்.

    உங்க ஸ்டைல்ல நண்பர்களின் அறிமுகம் ரொம்ப நல்லா இருக்கு. கலக்குங்க.

    ReplyDelete
  13. ராஸா இரண்டாம் நாள் வாழ்த்துகள்
    ------------------------
    தெரியாம போச்சேப்பா
    தெரியாம போச்சே

    ReplyDelete
  14. tamil arasi ivangala most of them feel as amma ....i too wanna hav touch vid her

    ReplyDelete
  15. arumaiya arimugam senju irukkeenga

    ReplyDelete
  16. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்!! வலை நண்பர்களை அறிமுப்படுத்திய வசந்த் ஸ்டைல் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. யேயப்பா!

    எல்லாமே பெரிய பெரிய ஜாம்பவான்கள்!

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் வசந்த் !!

    கலக்குங்க ஏழு நாளும் !!!

    ReplyDelete
  19. அன்பின் வசந்த்

    மிக மிக அருமையாக பொறுப்பினை நிறைவேற்றுகிறீர்கள். அழகான வடிவமைப்பு - பொருத்தமான சிறு அறிமுகம் - சுட்டுவதோ அழகிய இடுகைகள்

    நல்வாழ்த்துகள் வசந்த்

    ReplyDelete
  20. அறிந்த அறிமுகங்களாயினும் சிறந்த தேர்வுகள்.இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்.

    ReplyDelete
  21. வசந்த்.....

    வாழ்த்துகள்.....!

    ReplyDelete
  22. இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே....பளிச்சென்று இருக்கிறது பதிவு பக்கம்..ஆமா வசந்த் வந்ததால் மேலும் மெருகேறியிருக்கும் போல....

    ReplyDelete
  23. விசா இவர்களை தெரியாது மற்ற பதிவர்களின் பதிவுகள் வாசித்தது உண்டு..அறிமுகப்படுத்தி தலைப்பு தந்த விதம் வசந்துக்கே உரிய கலைவண்ணம்....கைவண்ணம்..

    ReplyDelete
  24. //எனது இரண்டாவது தாய் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையா இருக்கு.//

    உன்னை மகனென கொண்டதில் யானும் அவ்வண்ணமே மகிழ்ச்சியடைகிறேன்..

    இணையம் தந்த என் மூத்த மகனே வாழ்த்துக்கள்....

    போடா அழவச்சிட்ட ..சந்தோஷத்தில் தான் அம்மா என்று சொன்ன சந்தோஷம்....

    ReplyDelete
  25. தேவதை பத்திரிக்கையும் நம் இருவரின் கடிதம் பிரசுரமாகி நமக்குள் இருக்கும் பந்தத்தை ஊர்ஜிதப்படுத்தியது.....

    ReplyDelete
  26. அறிமுகம் அழகு நண்பரே....

    ReplyDelete
  27. இது வரையில் பங்கெடுத்த ஆசிரியர்களில் வசந்த் உங்களுடைய பங்களிப்பு மிகச் சிறப்பானது.

    இந்த ஓவிய அறிமுகம் இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்.

    தமிழ் அரசி தான்.

    பாமரன் கதிர் வியந்த கருத்துக்கள்.

    ReplyDelete
  28. இரெண்டாவது நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  29. அறிமுகங்கள் அனைவரும் அறிந்தவர்களானாலும் மறுபடியும்
    அவர்களை படிக்கத் தூண்டிய வசந்திற்கு நன்றி!

    அருமையான தொகுப்பு..

    கலக்குங்க வசந்த்:))

    ReplyDelete
  30. வாழ்த்துகள்

    ReplyDelete
  31. முத்தான அறிமுகங்கள். உனது நடையில் அவர்கள் இன்னும் ஜொலித்து விட்டார்கள்.
    வலைச் சர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. வித்தியாசமான தலைப்புகளில் .....வசந்த்னாலே மாற்றி யோசின்னு அர்த்தமோ?.நல்லா தொகுக்கின்றீர்கள்!பூங்கொத்து!

    ReplyDelete
  33. இரண்டாம் நாள் ஆசிரியர் வாழ்த்துகள்.

    அனைவரும் மிக அருமையான வலைப்பதிவர்கள்.

    ஓவ்வொருவரும் ஒரு விதத்தில் சூப்பர்..

    ReplyDelete
  34. // வலையுலக கவியரசின்னு கூட சொல்லலாம்,அவ்வளவு கவிதைகள்,//

    சரியாச் சொன்னீங்க.

    ReplyDelete
  35. // இவரது இடுகைகளில்,இந்த வயசுலயும் காதல் ரசம் சொட்ட சொட்ட காதல் கவிதைகள் எழுதுகிறார் //

    எல்லாம் நம்ம வயசைத் தாண்டித்தானே வந்திருக்கார்.. அது கூடத் தெரியாம இருக்குமா என்ன?

    ReplyDelete
  36. // இவரது அனுபவப்பகிர்வுகள் படிச்சுட்டு சிரிக்காம வர்றவங்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்ற அளவில் சிறப்பான நகைச்சுவை இடுகைகளை எழுதி நம் வயிற்றை பதம் பார்க்கிறார்,//

    ஆமாம் அடுத்த தடவை பார்க்கும் போது டாக்டர் பில் நிறைய வச்சு இருக்கேன்... பணம் வசூல் செய்ய வேண்டும்..

    ReplyDelete
  37. // இவரின் சமுதாய நல கட்டுரைகளும்,தற்சமய தேவையான சமுதாய விழிப்புணர்ச்சி கட்டுரைகளள் பசுமரத்தாணிபோல் மனதில் சலனத்தை ஏற்படுத்தி பதிந்து போகின்றன.. //

    அருமையாகச் சொன்னீர்கள்... அவரின் எழுத்து வீரியம் மிக்கது..

    ReplyDelete
  38. பாஸ்!!!!!!!!!!!!!

    என்னதிது, இப்பத்தான் பார்க்கிறேன், டார்ச்செல்லாம் அடிச்சு ஒளிவட்டம் உண்டாக்கியிருக்கீங்க.

    ரொம்பவும் பெருமிதமா உணர்கிறேன் வசந்த், நன்றி.

    ReplyDelete
  39. //
    வானம்பாடிகள் said...
    இரண்டாம் நாள் வாழ்த்துகள் ஆசிரியரே! மகன் தந்தைக்காற்றிய உதவிக்கு நன்றி சொல்வது தவறு. :)). அசத்து வசந்து!
    //

    நன்றி நைனா :)

    ReplyDelete
  40. //கலகலப்ரியா said...
    அருமையான அறிமுகங்கள்...! lay out நல்லாருக்கு..!//

    நன்றி ப்ரியா

    ReplyDelete
  41. . சுசி said...
    ஆஹா... உங்க ஸ்டைல்ல அறிமுகங்கள் அசத்தல் உ பி..//
    சுசி said...
    நேத்து வராததுக்கும் சேர்த்து இன்னைக்கு ரெண்டு சல்யூட் வச்சிக்கிறேன் வசந்து :)))


    நேத்துவராததுக்கு ஒரு பிரம்படி,,,

    :)))

    நன்றி சுசிக்கா...

    ReplyDelete
  42. //சின்ன அம்மிணி said...
    அசத்தலான அறிமுகங்கள். பலர் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் :)//

    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  43. // T.V.Radhakrishnan said...
    இரண்டாம் நாள் வாழ்த்துகள்//

    நன்றி டி.வி.ஆர்

    ReplyDelete
  44. // பூங்குன்றன்.வே said...
    அசத்தலான அறிமுகங்கள்.. புதியவர்களுக்கு இந்த அறிமுகங்கள் மிகவும் பயன் தரும்.
    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த் !
    //

    நன்றி பூங்குன்றன்

    ReplyDelete
  45. // ஈரோடு கதிர் said...
    நன்றி வசந்த்//

    நன்றிங்க..

    ReplyDelete
  46. // ஜீவன் said...
    ம்ம் ... நினைச்சுகிட்டே இருந்தேன் இந்த வசந்து எதாச்சும் வித்தியாசமா செய்வாரே அப்படின்னு ..!;;) அசத்தல் அறிமுகங்கள்..! அறிமுகபடுத்திய விதம் டாப்..!//

    மிக்க நன்றி ஜீவன் எப்டியோ ஏமாத்தலைல நான்...

    ReplyDelete
  47. //ராமலக்ஷ்மி said...
    நட்சத்திர வரிசையில் என்னையும் வைத்த உங்கள் அன்புக்கு நன்றிகள்!

    மற்றவருக்கு என் நல்வாழ்த்துக்கள்!

    தேவதையில் என் வலைப்பூவினை அறிமுகம் மட்டுமே செய்துள்ளார்கள். ஹி, தொடர் எல்லாம் எழுதும் அளவுக்கு வளரவில்லை இன்னும்:)!
    -------------------
    கலகலப்ரியா said...
    //lay out நல்லாருக்கு..!//

    எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்கிற உங்கள் வழக்கமான ஆர்வமும் உழைப்பும் இங்கும் மின்னுகின்றன. வாழ்த்துக்கள் வசந்த்!
    //

    மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்

    ReplyDelete
  48. //கவிதை(கள்) said...
    அத்தனையும் முத்தான பதிவர்கள்

    வாழ்த்துக்கள்

    விஜய்//

    நன்றி விஜய்

    ReplyDelete
  49. // அ.மு.செய்யது said...
    உங்களால் அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்..!

    சிறப்பான பணி வசந்த் !!! தொடருங்கள்....

    இதுல விசா கூட ஒரு கம்மர்ஷியர் ரைட்டர் தாங்க..!
    //

    நன்றி செய்யது

    ReplyDelete
  50. // S.A. நவாஸுதீன் said...
    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்.

    உங்க ஸ்டைல்ல நண்பர்களின் அறிமுகம் ரொம்ப நல்லா இருக்கு. கலக்குங்க.
    //

    நன்றி நவாஸ்

    ReplyDelete
  51. //நட்புடன் ஜமால் said...
    ராஸா இரண்டாம் நாள் வாழ்த்துகள்
    ------------------------
    தெரியாம போச்சேப்பா
    தெரியாம போச்சே
    //

    வந்த்ட்டீங்களா அண்ணா

    நன்றி அண்ணா

    ReplyDelete
  52. // Annam said...
    tamil arasi ivangala most of them feel as amma ....i too wanna hav touch vid her//

    ஹ ஹ ஹா ம்ம்..

    ReplyDelete
  53. // Annam said...
    arumaiya arimugam senju irukkeenga
    //

    நன்றி அன்னம்

    ReplyDelete
  54. // வால்பையன் said...
    யேயப்பா!

    எல்லாமே பெரிய பெரிய ஜாம்பவான்கள்!
    //

    நன்றி தல

    ReplyDelete
  55. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    வாழ்த்துக்கள் வசந்த் !!

    கலக்குங்க ஏழு நாளும் !!!
    //

    நன்றி ஸ்டார்ஜன்

    ReplyDelete
  56. //cheena (சீனா) said...
    அன்பின் வசந்த்

    மிக மிக அருமையாக பொறுப்பினை நிறைவேற்றுகிறீர்கள். அழகான வடிவமைப்பு - பொருத்தமான சிறு அறிமுகம் - சுட்டுவதோ அழகிய இடுகைகள்

    நல்வாழ்த்துகள் வசந்த்
    //

    மிக்க நன்றி சீனா ஐயா

    ReplyDelete
  57. //ஹேமா said...
    அறிந்த அறிமுகங்களாயினும் சிறந்த தேர்வுகள்.இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்.
    //

    நன்றி ஹேம்ஸ்...

    ReplyDelete
  58. // சத்ரியன் said...
    வசந்த்.....

    வாழ்த்துகள்.....!
    //

    நன்றி சத்ரியன்

    ReplyDelete
  59. //தமிழரசி said...
    இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே....பளிச்சென்று இருக்கிறது பதிவு பக்கம்..ஆமா வசந்த் வந்ததால் மேலும் மெருகேறியிருக்கும் போல....
    //

    நாங்கல்லாம் யாரு...?

    ReplyDelete
  60. //தமிழரசி said...
    //எனது இரண்டாவது தாய் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையா இருக்கு.//

    உன்னை மகனென கொண்டதில் யானும் அவ்வண்ணமே மகிழ்ச்சியடைகிறேன்..

    இணையம் தந்த என் மூத்த மகனே வாழ்த்துக்கள்....

    போடா அழவச்சிட்ட ..சந்தோஷத்தில் தான் அம்மா என்று சொன்ன சந்தோஷம்....
    //

    ஹ ஹ ஹா இதுக்குப்போயி அழுவாங்களா?....

    ReplyDelete
  61. //தமிழரசி said...
    தேவதை பத்திரிக்கையும் நம் இருவரின் கடிதம் பிரசுரமாகி நமக்குள் இருக்கும் பந்தத்தை ஊர்ஜிதப்படுத்தியது.....
    //

    மிகச்சரி டமில்...

    ReplyDelete
  62. // க.பாலாசி said...
    அறிமுகம் அழகு நண்பரே....
    //

    நன்றி பாலாசி

    ReplyDelete
  63. // ஜோதிஜி said...
    இது வரையில் பங்கெடுத்த ஆசிரியர்களில் வசந்த் உங்களுடைய பங்களிப்பு மிகச் சிறப்பானது.

    இந்த ஓவிய அறிமுகம் இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்.

    தமிழ் அரசி தான்.

    பாமரன் கதிர் வியந்த கருத்துக்கள்.
    //

    மிக்க நன்றி ஜோதிஜி

    ReplyDelete
  64. //RAMYA said...
    அறிமுகங்கள் அனைவரும் அறிந்தவர்களானாலும் மறுபடியும்
    அவர்களை படிக்கத் தூண்டிய வசந்திற்கு நன்றி!

    அருமையான தொகுப்பு..

    கலக்குங்க வசந்த்:))
    //

    மிக்க நன்றிக்கா

    ReplyDelete
  65. //திகழ் said...
    வாழ்த்துகள்
    //

    நன்றி திகழ்

    ReplyDelete
  66. // ஜெஸ்வந்தி said...
    முத்தான அறிமுகங்கள். உனது நடையில் அவர்கள் இன்னும் ஜொலித்து விட்டார்கள்.
    வலைச் சர வாழ்த்துக்கள்.
    //

    நன்றி ஜெஸ்ஸம்மா...

    ReplyDelete
  67. //அன்புடன் அருணா said...
    வித்தியாசமான தலைப்புகளில் .....வசந்த்னாலே மாற்றி யோசின்னு அர்த்தமோ?.நல்லா தொகுக்கின்றீர்கள்!பூங்கொத்து!
    //

    மிக்க நன்றி பிரின்ஸ்

    ReplyDelete
  68. //இராகவன் நைஜிரியா said...
    இரண்டாம் நாள் ஆசிரியர் வாழ்த்துகள்.

    அனைவரும் மிக அருமையான வலைப்பதிவர்கள்.

    ஓவ்வொருவரும் ஒரு விதத்தில் சூப்பர்..
    //

    மிக்க நன்றிண்ணா

    ReplyDelete
  69. //அமிர்தவர்ஷினி அம்மா said...
    பாஸ்!!!!!!!!!!!!!

    என்னதிது, இப்பத்தான் பார்க்கிறேன், டார்ச்செல்லாம் அடிச்சு ஒளிவட்டம் உண்டாக்கியிருக்கீங்க.

    ரொம்பவும் பெருமிதமா உணர்கிறேன் வசந்த், நன்றி.
    //

    தன்னடக்கம் ஹ ஹ ஹா

    நன்றிங்க மேடம்

    ReplyDelete
  70. நடக்கட்டும் அப்பு... நடக்கட்டும்... நல்ல தேர்வுகள் தான். வாழ்த்துகள்.

    ReplyDelete
  71. ஏன் மக்களே, தமிழிஷ்-ல யாரும் ஒட்டு போடல...சரி நான் போட்டுட்டு போறேன். :-)

    ReplyDelete
  72. அழகா தொகுத்திருக்கிறீர்கள் வசந்த. வாழ்த்துகள்

    ஒரே ஒரு குறை: Poetist என்றொரு வார்த்தை இருக்கிறதா? கூகுளாண்டவர் கிட்ட கேட்டேன். அவருக்கும் முழி பிதிங்குடுச்சு!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது