07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 30, 2011

வானம் பெருசுதான் பூமி பெருசுதான்! அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்........!!!

இன்றும் நண்பர்களின் அணிவகுப்பு! 

01 . Councel for any - சண்முகவேல் - (   கவலையற்றிருத்தலே வீடு : களியே அமிழ்தம் - பாரதியார் ) 
எனக்குப் பிடித்த பதிவு - உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா? 

02 . மைந்தனின் மனதில் - மைந்தன் சிவா  ( போற்றுவோர் போற்றட்டும்! தூற்றுவோர் தூற்றட்டும்! தொடர்ந்து செல்வேன் ) 

எனக்குப் பிடித்த பதிவு - தப்சி னு பேர் வரக்காரணம் என்ன? 
03 . வந்தேமாதரம் - சசிகுமார்! ( குறிப்பு - நண்பர் சசிகுமார் வலைப்பூவில் இருந்து அண்மையில்தான் டாட் காம் க்கு மாறினார்! அவருக்கு எனது இனிய வாழ்த்துக்கள்! 
எனக்குப் பிடித்த பதிவு- புதிய பதிவர்கள் செய்யும் அடிப்படைத் தவறுகள் 


04 . வானம் தாண்டிய சிறகுகள் - ஜீ  (       கவிதையோ உரைநடை இலக்கியமோ எனக்குத் தெரியாது. எனது கருத்துக்களையும் அனுபவங்களையும் நான் ரசித்தவற்றையும் கொஞ்சம் பதிந்து கொள்கிறேன் )


எனக்குப் பிடித்த பதிவு- இரண்டு கோப்பை மது!  


05 .  சேட்டைக்காரன் - ( இங்குள்ள மொக்கைகளை வாசிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல!  ஏன்? பெயர்,வயசு,ஊரு எல்லாம் சொன்னாத்தான் படிப்பீங்களாக்கும்?)


எனக்குப் பிடித்த பதிவு- சேட்டை @ சென்னை திரைப்பட விழா!


06 . ரோஜாப் பூந்தோட்டம் -


எனக்குப் பிடித்த பதிவு- ரசித்தவைகளும் யோசிக்கவைத்தவைகளும் 


07 . Vanathy's வானதி -  

எனக்குப் பிடித்த பதிவு- கூகுளும் நானும் 
08 . சிரிப்பு போலீஸ் - ரமேஷ்  

( ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்....)

எனக்குப் பிடித்த பதிவு-   ம்... விளங்கிரிச்சு! 

09 . குறை ஒன்றும் இல்லை - லக்சுமி (  B Happy n Make Every1 Happy   ) 


எனக்குப் பிடித்த பதிவு-  பிரம்மா ஒ பிரம்மா 

10 . நாளிகை - (  பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம் ,நம்ம ஏரியா கலகலப்பான,பொழுது போக்கான ஏரியா உள்ள யாரும் வரலாம் வந்து எங்கள் ஆக்கங்களை படித்து விட்டு உங்கள் கருத்துக்களையும் எங்கள் தவறுகளை சுட்டி காட்டுங்கள்.நன்றி ) 


எனக்குப் பிடித்த பதிவு-  Microsoft Office 2007 ஐ தமிழில் மாற்றிக்கொள்ள வழிமுறை

11 . பொன்மாலைப் பொழுது - கக்கு மாணிக்கம்  (  பகிர்தலும் நன்றே ) 


எனக்குப் பிடித்த பதிவு- 40 வயதுக்கு மேலே உள்ளவங்க மட்டும் உள்ளே வாருங்கள்




12 . குண்டு - ராஜகோபால் ( என்னோடு நான் சில நிமிடங்கள் பேச துணை  செய்த தனிமைக்கு நன்றி! ) 


எனக்கு பிடித்த பதிவு - உனக்காக காத்திருப்பேன் 

13 . நிகழ்வுகள் - கந்தசாமி 


எனக்கு பிடித்த பதிவு - நம்பாதே இவங்கள நம்பாதே! 
14 . நான் கண்ட உலகம் - Speed Master  

( நான் அறிந்த மொழிகளிலே தமிழ் போல ஒரு இனிமையான மொழியை கண்டதில்லை.

இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை பெருமையோடு சொல்கிறேன்

இது
நான் கண்ட உலகம் ) 



எனக்கு பிடித்த பதிவு - கேட்க கூடாத கேள்விகள்... ஏடாகூடமான பதில்கள்! 

15 . இரவுவானம் -  ( என்னுடைய எண்ணங்கள் பதிவுகளாக உங்களிடம் ...) 


எனக்குப் பிடித்த பதிவுகள் - ப்ளாக்கர்ஸ் கவுண்டமணி செந்தில் 


16 . அஞ்சாசிங்கம் - ( சத்தியமா எனக்கு ஆணி புடுங்க தெரியாது பாஸ் )


எனக்கு பிடித்த பதிவு -  சும்மா வந்து சிரிச்சுட்டு போங்க! 

17 . மங்குனி அமைச்சர் - 

( இங்க வந்து இந்த ஜாதி , மதம் , , மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........)

எனக்குப் பிடித்த பதிவு - பொளேர்னு ஒரு அறை!  



பதிவுலக சாதனைகள்!


ண்பர்களே பதிவர்களாகிய நாம் அவசியம் அறிந்து வைத்திருக்கவேண்டிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! 


ன்ட்லி தளத்தில் அதிகளவு ஓட்டுக்களைப் போட்டு, சகபதிவர்களை ஊக்கப்படுத்திவருகிறார் பனித்துளி சங்கர்! இதுவரை 61 ,363 ஓட்டுக்கள் போட்டுள்ளார்! இன்டிலியில் 2428 பேரை பின்தொடர்கிறார்! இவரே எமது எமது வலையுலகில் அதிக ஓட்டுக்கள் போட்டவர் என்ற பெருமையினைப் பெறுகிறார்! 

இரண்டாவது இடத்தில் 38271 ஓட்டுக்களைப் போட்டு ஸ்ரீ ராமானந்தா குருஜி யும், மூன்றாவது இடத்தில் 11803   ஓட்டுக்களைப் போட்டு சித்ராவும் உள்ளனர்! மூவருக்கும் வாழ்த்துக்கள்! ( அடுத்த இடங்களுக்கு மதிசுதாவும் , ஒட்டவட  நாராயணனும் தோழி பிரஷாவும் போட்டியிடுகின்றனர் )


ன்டிலியில் அதிகளவு பிரபலமான பதிவுகளுக்கு சொந்தக்காரர்
சி பி செந்தில்குமார் ஆவர்! இதுவரை இவரது 416  பதிவுகள் பிரபலமாகியுள்ளன! 379 பிரபல பதிவுகளுடன் வந்தேமாதரம் சசிகுமார் இரண்டாவது இடத்தில் உள்ளார்! 



மது வலையுலகில் சகோதரி சித்ராவுக்கு மேலும் சில பெருமைகள் உள்ளன! இன்ட்லியில் அதிகளவு ஓட்டுக்களைப் பெறுபவர் இவர்தான்! இதுவரை இவரது 110 பதிவுகள் பிரபலமாகியுள்ளன! இதன் மூலம் அண்ணளவாக ஆறாயிரத்து நூறு ( 6100 ) ஓட்டுக்கள்  வரை பெற்றுள்ளார்! கடந்த ஒரு வருடத்தில் அதிகளவு ஓட்டுக்கள் பெற்று இவரது 50 கு மேற்பட்ட இடுகைகள் முன்னணியில் உள்ளன! 


திகளவு கமெண்டுகளால் கடும் ட்ராபிக் கொடுப்பவர், வேறு யாருமல்ல! நமது பன்னிக்குட்டி ராமசாமியே ஆவார்! இவரது ' ஸ்டார்ட் மியூசிக் ' தளத்தில் சுமார் பன்னிரெண்டாயிரத்துக்கு ( 12000 ) மேற்பட்ட கமெண்டுகள் காணப்படுகின்றன! 


துவரை யாருடைய எந்தப் பதிவு அதிகளவு கமெண்டுகளைப் பெற்றுள்ளது தெரியுமா? அதுவும் பன்னிக்குட்டி ராம்சாமியினுடையதுதான்! இவர் வலைச்சரத்தில் ஆசிரியராக இருந்த போது எழுதிய ' ஒரு கை ஓசை கேட்டீரோ? ' எனும் பதிவுக்கு 2021 கமெண்டுகள் போடப்பட்டுள்ளன! வலையுலகில் இது ஒரு மாபெரும் புரட்சி என்றே சொல்ல வேண்டும்! 

ப்போது நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த இடுகையானது, வலைச்சரத்தின் 1782 வது இடுகையாகும்! இதுகூட ஒரு சாதனைதான்!!




வ்வொரு பதிவருக்குள்ளும் தீப்பொறிகள் கிளம்பட்டும்!! 


( நண்பர்களே மேலே உள்ள தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடன் அறிவிக்கவும் )







மேலும் வாசிக்க...

Friday, April 29, 2011

கிளிக்கூட்டம் போல் எங்கள் கூட்டமே! இது ஆனந்தப் பூந்தோட்டம், அன்பின் ஆலயம் 

ண்பர்களே! கடந்த நான்கு நாட்களில் கணிசமான அளவு புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று நினைக்கிறேன்! இதோ இன்று, எனது உறவுகளை, தோழர், தோழிகளை, நட்பு வட்டத்தை உங்கள் முன்னால் கொண்டுவருகிறேன்! இவர்களில் பெரும்பாலாவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள்தான்!


வர்களின் அன்பும், ஆதரவும் இல்லையென்றால், மாத்தியோசியும் இல்லை, ஓ. வ. நாராயணனும் இல்லை!!! 


னவே எனது சக பதிவர்கள் பற்றி தனித்தனியே சொல்லாமல், அவர்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவின் லிங்க் ஐயும், இவர்கள் தங்களைப் பற்றி, தங்கள் வலைப்பூக்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதையும் தொகுத்து தருகிறேன்!! 
 






01. ஹைக்கூ அதிர்வுகள் - ஆனந்தி... ( மதுரைக்காரி! " என் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்...." என்று தனது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார் ) 


எனக்கு பிடித்த பதிவு - நாகரிகம் இன்னும் நமக்கு பத்தலையோ? 


02. ரேவா  கவிதைகள் - ரேவா.... ( நாடக உலகில் நடிக்க பிறந்த பலரில் நானும் ஒரு ஜீவனே.... நல்ல நட்பும் என் உலகமே )


எனக்குப் பிடித்த பதிவு -  இந்த மனுஷன கட்டிக்கிட்டு நான் படுறபாடு இருக்கே! 


03. பாலாவின்  பக்கங்கள் - பாலா -  ( கற்றதும் பெற்றதும் உணர்ந்ததும் )


எனக்கு பிடித்த பதிவு -  புதிய பதிவர் ஒருவருக்கு வரும் சந்தேகங்கள்!


04. மாணவன் -  ( பேசுவோம் பேசுவோமென்று நான் பேசாமல் விட்ட நொடிகள்தான் இன்றும் பேசுகின்றன... சிரிப்போமென்று தெரியாமல் சிரித்த கனங்கள்தான் நெஞ்சில் இன்றும் பசுமையாக நிற்கின்றன... கவிதையாய் நினைவுகளும் புதினமாய் நிகழ்வுகளும் ஓவியமாய் சந்திப்புகளும் புதைந்திருக்கும் நெஞ்சுக்குள் என்ன சொல்ல என்னைப்பற்றி... )







05. பட்டாபட்டி - ( கட்டிய கோவணம் களவாடப்படாமலிருக்க.. இறுக்கப்பிடித்துக்கொள்ளுங்கள். அதையும் உருவ வரலாம்.)


எனக்குப் பிடித்த பதிவு - சொன்னாங்கோ 

06. டகால்டி  - 

எனக்குப் பிடித்த பதிவு - ஒரு ஜாலி கற்பனை  

07. கொஞ்சம் வெட்டி   பேச்சு - சித்ரா 

( பாளையங்கோட்டையில் பிறந்த சித்திரம்.என் தந்தை, திரு.பொ.ம.ராசமணி அவர்களின் நகைச்சுவை உணர்வு மற்றும் கருத்துக்களின் பாதிப்பில் வளர்ந்தவள். எதையும் (சில சமயம் மனிதர்களைகூட ) சீரியஸ் பார்வையில் பாக்காமல், சிரியஸ் பார்வையில் பாத்து போய்கிட்டு இருக்கேன். ஹி,ஹி,ஹி,ஹி.... Now in USA. I strongly believe in Jesus Christ, who made me as special as I can be. ) 

எனக்குப் பிடித்த பதிவு - மண்வீடுகளும் பின்னே அமெரிக்காவும்  

08. ஐ ஆம் சீரியஸ் - தம்பி கூர்மதியன் (  நான் எழுதுவதெல்லாம் படு சீரியஸா இருக்கும். அதுக்குன்னு என்ன ஹாஸ்பிடலுக்கு போனு யாராவது சொன்னீங்க பிச்சீபுடுவன் பிச்சி!! )

எனக்குப் பிடித்த பதிவு - என் பெயருக்கான புராணம்  

09.  உஜிலாதேவி - யோகி ஸ்ரீ ராமானந்த குரு ( எழுத்து எனது சுவாசம் அறிவுத்தேடல் என் வாழ்க்கை கற்றவழி நிற்பதே என் யாகம் ) 

எனக்குப் பிடித்த பதிவு - தொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை

10. CHEERS WITH JANA - ( நான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். ) 

எனக்குப் பிடித்த பதிவு - அறிவிப்பாளராக இருவர்!  


11. -தமிழ்வாசி  - பிரகாஷ் ( தற்சமயம் மதுரைவாசி..... )


எனக்குப் பிடித்த பதிவு - blog ல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா?  

12. வேடந்தாங்கல் - கருன் ( இது பல்சுவை பதிவுகளின் சரணாலயம்... ) 

எனக்குப் பிடித்த பதிவு - மனம் எனும் சாக்கடை  

13. சூரியனின் வலைவாசல் - அருண் பிரசாத்  ( விகடன் முன்னாள் மாணவ நிருபர் என்பதை தவிர பெரியதாய் எதையும் இன்னும் சாதிக்கவில்லை. ) 

 எனக்குப் பிடித்த பதிவு - தமிழ் படங்களை கண்டு பிடியுங்கள்!  

 14. இந்திராவின் கிறுக்கல்கள் - ( பெருசா சொல்லிக்கிறதுக்கு எதுவும் இல்லங்க.. ) 

  எனக்குப் பிடித்த பதிவு - மரண வலிதரும் உன் மௌனம்

15. கூதற்காற்று - ர.மதுரன் ( நான் யார்? எனது அனுமதியின்றியே இப் பூமியென்னும் நரகத்தினுள் தள்ளிவிடப்பட்டவன்... ...இன்னமும் தேடிக்கொன்டிருக்கிறேன் ரோஜா மலர்களை, இழந்துபோக துடித்துக்கொன்டிருக்கும் நம்பிக்கையுடனும் அகன்றுபோக மறுக்கும் "நான்"உட‌னும் ) 


16. அரசர்குளத்தான் - ரஹீம் கசாலி - 



 இன்னும் நிறைய ண்பர்கள்! நாளை.....!!!



 .
மேலும் வாசிக்க...

Thursday, April 28, 2011

கூகுல்கள் காணாத தேடல்கள் என்னோடு!








டாக்டர் வசீகரன்: I would like call my friend, my brother, my son chitty babu to come on the stage!


Chitty: Hi good morning everybody! 


டாக்டர் வசீகரன் : ஜென்டில்மேன்! இவன் ஒராள் நூறு பேருக்கு சமம்! நூறு பேரோட அறிவும் திறமையும் இவனுக்கு ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கு! இவனுக்கு எல்லாக் கலைகளும் தெரியும்! உலகின் எல்லா மொழிகளும் தெரியும்!! நீங்க சிட்டிகிட்ட ஏதாச்சும் கேட்கிறதா இருந்தா கேட்கலாம்! 

ஒருவர் : சிம்பிளா கேட்கிறேன்! புதுசா ப்ளாக் எழுத வந்திருக்கிறவங்க எத்தினை பேரு இருக்காங்க?


சிட்டி :  anbuflash  அப்டீன்னு ஒரு ப்ளாக் ஒருத்தர் தொடங்கியிருக்காரு! உலகத்தமிழ் வானொலிகள் பலதோட லிங்க் போட்டிருக்காரு! இந்த மாசம் தான் ப்ளாக் தொடக்கி இருக்காரு!! 


மிழ் திருடன்  னு ஒருத்தர்! போனமாசம் ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு! பத்தொன்பது பதிவு போட்டிருக்காரு! கவிதை, கட்டுரை, ஜோக்குன்னு கலந்து கட்டி எழுதுறாரு! 

காதல்ரோஜா  னு ஒரு ப்ளாக் கு!   ஒரே ஒரு பதிவு மட்டும் தான் போட்டிருக்காரு! பெப்ரவரி மாசம் ப்ளாக் ஆரம்பிச்சிருக்காரு! ப்ளாக் ல நிறைய டிசைன் பண்ணி அசத்தி இருக்காரு!! 


றுமுகம் கிருபாகரன்னு ஒருத்தர், " வெட்டி வெச்ச வெங்காயம் "  னு ஒரு ப்ளாக் நடத்துறார்! இதுவரைக்கும் ஆறு பதிவு போட்டிருக்கார்! ' கோட்டி ' பட விமர்சனப் பதிவு செம ஹிட் ஆகியிருக்கு! 


கிறுக்கன்னு ஒருத்தர் அதே பேரிலேயே ப்ளாக் நடத்துறார்! இதுவரைக்கும் பத்து பதிவு போட்டிருக்கார்! அதுல ஒன்னு ஹிட் ஆகியிருக்கு! இயற்கை மருத்துவம் பத்தி நிறைய சொல்லியிருக்காரு! 

நிஷாந்தன்னு ஒருத்தர், இசையருவி அப்டீன்னு ப்ளாக் வச்சிருக்கார்! முழுக்க முழுக்க சினிமாப்பாடல்களை வீடியோவாகவும், எழுத்திலையும் போட்டிருக்காரு! இன்னிக்கு ஏப்ரல் இருபத்தி எட்டு! இந்த மாசத்துல மட்டும் எண்பது போஸ்ட் போட்டிருக்காரு!  அதுல ஆறு போஸ்ட்ட இன்ட்லியில சேர்த்திருக்காரு

 செந்தமிழ் செல்வி னு ஒரு தோழி மலர்வனம்  னு ஒரு ப்ளாக் வச்சிருக்காங்க, 45  பேர் பாலோ பண்ணுறாங்க! இதுவரைக்கும் முப்பத்தெட்டு பதிவு போட்டிருக்காங்க! ப்ளாக் க ரொம்ப அழகா வச்சிருக்காங்க! 

ணிகண்டன் னு ஒருத்தர்! ஜோதிடர் னு நெனைக்கிறேன்! முத்து சிதறல்கள அப்டீன்னு ப்ளாக் வச்சிருக்கார்! இதுவரைக்கும் 12  போஸ்ட் போட்டிருக்கார்!  எல்லாமே ஜோதிடம் பத்திதான்! நேத்திக்கு கூட " நினைவில் கொள்ளவேண்டிய ஜோதிட விதிகள் " அப்டீன்னு ஒரு போஸ்டு போட்டிருக்காரு!!  

செந்தில்குமார் னு ஒருத்தர் கடல் மீன் அப்டீன்னு ஒரு ப்ளாக் வச்சிருக்காரு! இதுவரைக்கும் இருபத்தியெட்டு போஸ்ட் போட்டிருக்காரு! இவரை ஏழுபேர் பின்தொடர்ராங்க! இன்ட்லி ல ஒரு போஸ்ட் பிரபலமாகியிருக்கு! 

த்னவேல் னு ஒருத்தர் " ஸ்ரீ வில்லிப் புத்தூரில் இருந்து ரத்னா வேல் நடராஜன்  " அப்டீங்கற பேர்ல ப்ளாக் வச்சிருக்காரு! இதுவரைக்கும் மொத்தம் மூணு போஸ்ட் போட்டிருக்காரு! லேட்டஸ்டா பட்டாசு பத்தி வெளிவந்த ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் எழுதியிருக்காரு!! 

 துவாரகன் அப்டீன்னு ஒரு சுட்டிப் பையன்!  சரியில்ல அப்டீன்னு ஒரு ப்ளாக்  வச்சிருக்காரு!  இதுவரைக்கும் பதினோரு பதிவு போட்டிருக்காரு! அதுல அஞ்சு ஹிட்! இருபத்தொன்பது பேர் பாலோ பண்றாங்க! பேர்தான் சரியில்ல! பதிவுகள் நல்லா இருக்கும்!!  

கூட்டத்தில் ஒருவர் : போதும் சிட்டி! விட்டா சொல்லிக்கிட்டே போவீங்க போல! மிச்சத்த நாளைக்கு சொல்லுங்க!! 

சிட்டி : ஓகே டாட்!!  





. குறிப்பு : நண்பர் சி பி செந்தில்குமார் அவர்களின் கருத்துக்கமைவாக, நண்பர் சரியில்ல அவர்களது அறிமுகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!! நன்றி நண்பரே!! 



மேலும் வாசிக்க...

Wednesday, April 27, 2011

முத்தமிழ் கவியே வருக! முக்கனிச் சுவையும் தருக!!



ரணத்தின் பயம்தன்னை மறந்திடு என்றொரு 
ரணம் சொட்டும் கவிவடித்தான் சித்தன்!
எங்கே நீ வாழ்ந்தாலும் சாவோன்றே முடிவென்று 
செம்மண் தூரிகையில் எழுதுகிறான் ஜித்தன்!


குடிகாரக் கணவன்மேல் கொண்டுவிட்ட பாசம்தனை,
முடியாத துயரத்தில் மூண்டெழுந்த கவிதைதனை 
பேரின்பா  வலைப்பூவில்  கண்டேன்! - கூரம்பாய்
ஓரம்போய் ஒருக்களித்து நின்றேன்!!

ளுக்கொரு சாமி வச்சு, அது அதுக்கு கோவில் வச்சு
பாழ் பட்டு போனதொரு கூட்டம் - அந்தப்  பாவிகளை
மாற்றிநல்ல பகுத்தறிவை ஊட்டிவிட
எழுதி வைத்தான்  இப்பதிவன் காட்டம்!!



பூப்பறித்து ஒரு சிறுமி, புரிகின்ற குறும்புகளை
காப்பியமாய் வடித்திடுதல் போலே - இங்கே
கதிர் என்பார் ஆக்கிட்ட கவி விருந்தை 
எதிர்கொண்டு படித்திடுக பரவசமாய் நன்றே!

காதலுக்கு நிறமுண்டாம்! காதல் செய்து பார்க்கட்டாம!!
ஆதலினால் காதல் செய்து,  அந்த நிறம் கண்டிடுக!
எண்ணி எண்ணி பார்க்கையிலே இனிக்குமிந்த கவியதனை
கண்மணியாள் வடித்திட்டாள் காதல் நிறம் உரைத்திட்டாள்!



ள்வீட்டு ஏழ்மையினை, உழன்று செல்லும் வாழ்வுதனை
சொல்கொண்டு வடித்துள்ளார் முத்து - இதை 
பலபேரும் படிக்கட்டும், பலமாக ரசிக்கட்டும்
எல்லோர்க்கும் இது நல்ல சொத்து!!


வாழ்க்கையின் பாதையிலே தான்விட்ட தவறுகளை
கோர்வையாய் சொல்லுகிறாள் வாணி! - இதைக்
காத்திருந்து படித்திடவே காலம் கூடி வந்தது போல்
ஆர்த்தெழுந்து சென்றிடுவீர் அங்கு!


பெண்விடுதி ஒன்றினிலே அரங்கேறும் கொடுமைகளை
கண்ணோரம் நீர் கொண்டு பார்த்து - அதை
கவிதையிலே வடித்திட்டார் சத்யா!
இது கவர்ன்மேண்டும் சேர்ந்து செய்யும் சதியா?


சைக் கண்ணாளன் , அருமை மணாளன் 
போய் விட்டான் பெண்ணிவளைப் பிரிந்து, - அவள் 
ஓசைப் படாமல், ஒருத்தருக்கும் சொல்லாமல் 
தேம்பித்தான் அழுகின்றாள் திரிந்து! 
இக்கதையை கவிதையிலே வடித்திட்டார் பிரஷா
அக்கவிதை படிக்கையிலே இருந்திடுமே Fresh  ஆ? 

செல்லமாய் சிணுங்கியவள் வெல்லமாய் சுவை தந்தவள் 
கள்ளமாய் எங்கோ சென்றாள்! - இவன் கண்களில் வெள்ளமாய் 
கழிக்கிறான் பொழுதையே கனவிலும் அவள் முகம் கண்டு! 
நல்லதாய் இக்கதை - கவிதையில் வந்தது 
பனித்துளி சங்கரால்  இன்று!! 


காதலியாள் தந்திட்ட கலையாத நினைவுகளை 
அசைபோடும் ஓர் மனது இன்று - அதை 
கண்டுகொள்ள வந்திடுங்க கவிதைவீதி சௌந்தரிடம்
அவர்போடும் கணக்குகளும் நன்று!! 





மேலும் வாசிக்க...

Tuesday, April 26, 2011

....வயரூட்டி.. உயிரூட்டி.... ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி.... ஆறாம் அறிவை அரைத்தூற்றி.......ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி....!!

ணக்கம் நண்பர்களே! இன்று இரண்டாம் நாள்! இன்று நான் அறிமுகப்படுத்தும் பதிவர்கள் / பதிவுகள் பற்றி தனித்தனியே அறிமுகப்படுத்த விரும்பவில்லை! அனைவருக்கும் பொதுவான அறிமுகத்தை கீழே தருகிறேன்!  

வலையுலக விஞ்ஞானிகள்! 



" ஒரு விஞ்ஞானி வாழ்நாளில், தனது  மூளையின் பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறார் " என்று எங்கோ படித்த ஞாபகம்! ஒரு விஞ்ஞானியே அவ்வளவு தான் எனும் போது, நாமெல்லாம் எங்கே மூளையை முழுசாக பயன்படுத்தப் போகிறோம்? 

னக்கு மூளையை உச்சமாக பயன்படுத்துபவர்களை மிகவும் பிடிக்கும்! மூளையை கசக்கி பிழிந்து, அப்படி இப்படியெல்லாம் மாத்தி மாத்தி யோசித்து, புதுசு புதுசா ஏதாவது சொல்பவர்களை  அவ்வளவு பிடிக்கும்! இவர்கள்தான் நல்ல கிரியேட்டிவிட்டி உள்ளவர்கள்! நல்ல நல்ல கிரியேட்டிவிட்டியால்தான் உலகமே கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது! 

மது வலையுலகிலும் இப்படியான மூளையை கசக்கிப் பிழிபவர்கள் இருக்கிறார்கள்! இவர்களை நான் ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்! அப்படியான சில வலையுலக விஞ்ஞானிகள் சிலரது ஐடியாக்களை படித்து மகிழுங்கள்!! 

 


பெண்களிடம் ஆண்கள் நல்ல  பெயர் வாங்க ஐடியாக்கள் ! 
பதிவர் : டிலீப்

வியுடன் பேசுவது எப்படி?  
பதிவர் : சில நண்பர்கள் சேர்ந்து எழுதுகிறார்கள் 

10  ரூபாயில் ரிமோட் தயாரிப்பது எப்படி?   
பதிவர் : தேசாந்திரி பழமை விரும்பி

காதலியிடம் நல்ல பேர் எடுப்பது எப்படி? 
பதிவர் : அன்புராஜா 

திரைவிமர்சனம் எழுதுவது எப்படி? 
பதிவர் : பாலா 

லைப்பதிவருக்கு ஒரு பாஸ் இருந்தால்? 
பதிவர் : ஐந்து நண்பர்கள் சேர்ந்து எழுதுகிறார்கள் 

திவர்கள் சிந்தனை 
பதிவர் : அனன்யா மகாதேவன் 

நெத்தியடி பதிவு 
பதிவர் : விசா 

திவர்களைப் பற்றி படம் எடுத்தால்....! 
பதிவர்: நசரேயன் 

ளிதாக பதிவு எழுத சில ஐடியாக்கள் 
பதிவர் : ரகுநாதன் 
  
ற்கொலை செய்வதற்கான ஐடியாக்கள் 
பதிவர் : மஸ்தான் ஒலி



பிரபல பதிவராவது எப்படி ? - சில ஐடியாக்கள்! 
பதிவர் : அதிரடிக்காரன் 

ம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி? 
பதிவர்: யோகானந்தன் கணேஷன் 

ப்படியெல்லாம் கவிதை  எழுதுறாய்ங்கப்பா 
பதிவர் : கும்மாச்சி 

10,000  ஹிட்ஸ் வர்ற மாதிரி எனக்கும் பதிவு எழுத தெரியும்! 
பதிவர் : வெங்கட் சரண் 

கைரேகை பார்ப்பது எப்படி? 
பதிவர் : பெசொவி 


குறிப்பு : இந்தப் பட்டியலில் சில பிரபல பதிவர்களும் வந்திருக்க வேண்டும்! ஆனால் அவர்களுக்கு வேறொரு, விஷயம் வைத்திருக்கிறேன்! 




ண்பர்களே! மீண்டும் நாளை ந்திப்போம்


.  

மேலும் வாசிக்க...

Monday, April 25, 2011

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது?



ஹாய் நண்பர்களே! 
நான்தான் உங்கள் ஓட்ட வட நாராயணன்! ' மாத்தி மாத்தி யோசிச்சு ' கடைசியில் இங்கு வந்து சேர்ந்துவிட்டேன்! எனக்கு இந்த நல்ல வாய்ப்பினை தந்த, சீனா ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!! 

அதோ பை  சொல்லிவிட்டு போய்க்கிட்டு இருக்காங்களே ஆனந்தி! அவங்களுக்கும் நன்றி!!

நண்பர்களே! இன்னிக்கு முதலாவது நாள்! வலைச்சர விதிகளின் படி, இன்னிக்கு நான் என்னை அறிமுகப்படுத்தணும்! ஆனா, நான் மாத்தியோசிச்சு, ஐயாகிட்ட பர்மிசன் வாங்கியிருக்கேன்! - என்னைப் பற்றி எதுவுமே எழுதுறதில்லை என்று!!

சரி, வாங்க பதிவுக்குள்ள போவோம்! 

ஆச்சரியம், வியப்பு இவையெல்லாம் அழகான உணர்வுகள்! ஆச்சரியப்படுவதும் இன்பம், ஆச்சரியப்படுத்துவதும் இன்பம்!! - இந்தவாரம்முழுக்க என்னை வியக்கவைத்த, ஆச்சரியப்பட வைத்த பதிவுகளை வலைச்சரம் சுமந்து வரும்!!  

குறிப்பு : எல்லாப் பதிவுகளுக்கும் சினிமாப்பாடல்களில் இருந்தே தலைப்புக்களை எடுத்திருக்கேன்! - வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தான்!! 



இதோ ஆச்சரியங்கள் - ஆரம்பம்!!! 

தலைப்பு : பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்! 
பதிவர் : தர்மா


*** கணிதத்திலுள்ள அளவுகளுக்கான தமிழ் பெயர்கள் தந்து அசத்தியிருக்கிறார்! கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள்!!


தலைப்பு : மாயத் தோற்றங்கள் ( கவனம் ) 
பதிவர் : கவினன்


*** " கண்ணால் காண்பதும் பொய்...."  என்று சொல்வது போல, உங்கள் கண்களையே உங்களால் நம்ப முடியாத அளவுக்கு அதிசய புகைப்படங்களை அள்ளித் தந்திருக்கிறார்! 


தலைப்பு : ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்!


*** இங்கும் அழகிய போட்டோக்கள் கொட்டிக்கிடக்கின்றன! கண்டு ரசியுங்கள்! 


தலைப்பு : பாரிஸ் ஒரு இனிய நகரம் 
பதிவர் : மணி


*** கலைநகரம் பாரீசில் உள்ள முக்கிய இடங்களின் புகைப்படங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும்! குறிப்பாக நெப்போலியன் அரண்மனை, ஒபேரா அரங்கம் உங்களை மயக்கிவிடும்!!


தலைப்பு : காதலித்துப் பார் 
பதிவர் : அனாமிகா துவாரகன் 


*** வைரமுத்துவின் ' காதலித்துப் பார் ' ஐ உல்டாவாக்கி, கம்பியூட்டர் வார்த்தைகள் சேர்த்து ரசிக்க வைக்கிறார்! மின்னஞ்சலில் வந்த கவிதை என்று பதிவர் குறிப்பிட்டுள்ளார்! 



தலைப்பு : எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! 
பதிவர் : கூல் கார்த்தி 

*** இச்சுட்டியில் கிடைக்கும் படங்கள் உங்களை கண்டிப்பாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும்! அருமையான கிரியேட்டிவிட்டி! 


தலைப்பு : நாய்ப்பறவை
பதிவர் : கமர்தீன் 

*** நாய் தெரியும், பறவை தெரியும்! அதென்ன நாய்ப்பறவை? ஹி...... ஹி......ஹி...... கிளிக் பண்ணுங்க! ஆச்சரியம் காத்திருக்கிறது!! 


தலைப்பு : ரோம் பயணக்கட்டுரை 
பதிவர் : சித்திரன் 
சுட்டி

*** பெருமைமிக்க இத்தாலியின் ரோம் நகருக்கு சென்று வந்த அனுபவங்களை எழுத்தில் வடித்து, எம்மையெல்லாம் ரோமுக்கே அழைத்துச் செல்கிறார் பதிவர்! வாருங்களேன் ரோமுக்குப் போய் வருவோம்! 

தலைப்பு : காணக்கண் கோடி வேண்டும்! அழகு ஓவியங்கள்!! 
பதிவர் :  அபுல் பசார் 


*** இங்கும் ஓவியப் படையல்தான்! அழகிய ஓவியங்களின் அணிவகுப்பு!! உண்மையில் காணக்கண் கோடி வேண்டும்தான்!!

தலைப்பு : விசித்திர விலங்கினங்கள்  
பதிவர் : DR .சாரதி


*** விசித்திரமான விலங்குகளைக் காட்டும் வீடியோக்களைப் போட்டுள்ளார்! ஒவ்வொன்றுக்கும் சுவையான தலைப்புக்கள் கொடுத்திருப்பது ஹைலைட்! அந்த குடை பிடிக்கும்  பறவை டாப் கிளாஸ்!!


தலைப்பு : எக்ஸ்கியூஸ் மீ ஒரு கப் காப்பி சாப்பிடலாமா? 
பதிவர்: யுவகிருஷ்ணா 


*** அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு மலை முகடு பற்றி, அவ்வளவு சுவாரசியமாக இவர்தரும் குறிப்புக்கள் வியக்க வைக்கின்றன!! 


தலைப்பு : இன்றைய இளைஞனின் டாப் 10  கனவுகள் 
பதிவர் : வசந்த் 

*** தேவையான புகைப்படங்களோடு, இன்றைய இளைஞர்களின் கனவுகளை, பட்டியல் போட்டு, வியக்க வைத்திருக்கிறார்!! ஒன்பதாவதாக அவர் சொல்லியிருக்கும் கனவு, அவ்வ்வ்வ்!!



தலைப்பு : ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வசிக்கும் பிச்சைக்காரன் 
பதிவர்; சந்துரு
சுட்டி 

*** விஷயம் என்ன என்பதை தலைப்பே சொல்லிவிட்டது! படிச்சுப் பாருங்க! ' கலிகாலம்டா சாமீ ' என்பீர்கள்!  

தலைப்பு : வலையுலகில் நானும் ஒரு ரெடிதாங்க.... நம்புங்க!
பதிவர்: ஜல்லி 


*** அருமையான ஒரு காமெடி பதிவர்! இப்பவெல்லாம் எழுதுவதில்லை போல! தன்னைத் தானே பேட்டி எடுத்துப் போட்டிருக்கிறார்! இவரோட ப்ளாக் க படிக்காம சும்மா பார்த்துக்கிட்டு இருந்தாலே சிரிப்பு தன்னால வரும்!! 

தலைப்பு : பாராளுமன்ற உறுப்பினர்களின் செலவு! 
பதிவர்  : ஸ்ரீ  


*** நம்ம கிட்ட ஒட்டு வாங்கி ஜெயிச்சு பார்லிமென்ட் போனவுங்க என்ன பண்ணுறாங்க, எவ்வளவு சம்பாதிக்கிறாங்க? அறிஞ்சுக்கணுமா! கிளிக் பண்ணுங்க!! 



தலைப்பு : பறவைகள் - விந்தைகள்! 
பதிவர் : கே.கே.லோகநாதன் 


*** சில பறவைகள் பற்றி சுவையான தகவல்கள் சொல்கிறார்! வியப்பாத்தான் இருக்கு!!



தலைப்பு : மிகவும் விஷமுள்ள பாம்புகளும் விஷமற்றவைகளும்! 
பதிவர் : பெயரைக் காணவில்லை  


*** ஐயோஓஒ ஓ....... பார்க்கவே பயமா இருக்கு! இவ்வளவு கொடிய பாம்புகளை, பெரிய சைஸ் போட்டோவா போட்டிருக்காரு! வித் வீடியோ!!


தலைப்பு : இந்தியா வல்லரசாக நாம் என்ன செய்யவேண்டும்? 
பதிவர் : பத்மஹரி


*** இந்தியாவை வல்லரசாக்கணும் னா என்ன பண்ணனும் னு ஐடியா தந்து, யோசிக்கவைக்கிறார்!! அருமையா எழுதியிருக்காரு!!


தலைப்பு : ஜாலி கம்பியூட்டர் - ராசிபலன் 
பதிவர் : நீச்சல்காரன் 
சுட்டி

*** மிக மிக ரசிச்சு படிச்ச ஒரு பதிவு இது! சோதிடத்த புதுவிதமா, கம்பியூட்டரிசம் கலந்து சொல்லியிருக்கார்! கண்டிப்பா உங்களுக்குப்புடிக்கும்க!!

தலைப்பு : இவை இந்தியாவில் மட்டுமே சாத்தியம் 
பதிவர் : அரைக்கிறுக்கன் 
சுட்டி 

*** எவை? என்கிறீர்களா? அங்க போய் பாருங்க! மனுஷன் கொலையா கொன்னுருக்கார்! பார்க்கும் போது சிரிப்பு வந்தாலும், நம்ம இந்தியா இப்படி இருக்கே  னு  உங்களுக்கு கொஞ்சம் கோபமும் வரலாம்!!

அப்புறம், பதிவர் அரைக்கிறுக்கன், ப்ளாக் டைட்டிலுக்கு கீழ ஒரு வாக்கியம் போட்டிருக்காரு! நான் ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன்! அது உங்களையும் சிரிக்க வைக்கும்!!

தலைப்பு : முன்னணி நாயகர்களின் நகைச்சுவை  அனிமேசன்கள்! 
பதிவர் : குகன் 
சுட்டி

*** உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு, இந்த சுட்டியை கிளிக்கி, வரும் வீடியோக்களைக் காட்டுங்கள்! உங்கள் செல்வங்களின் முகங்களில் புன்னகை + உங்களுக்கும்தான்!!   


சரி நண்பர்களே! மீண்டும் நாளை சந்திப்போமா? 



  
மேலும் வாசிக்க...

Sunday, April 24, 2011

ஆனந்தியிடம் இருந்து பொறுப்பேற்கிறார் ஓட்ட வட நாராயணன்

அன்பின் சக பதிவர்களே !

இன்றுடன் முடியும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்ற, தோழி ஆனந்தி - ஏற்ற பொறுப்பினை மிகுந்த கடமை உணர்வுடன் நிறைவேற்றி நம்மிடமிருந்து மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார்.

இவர் ஏழு இடுகைகள் இட்டு, 125க்கும் மேலாக பதிவர்களை அறிமுகப் படுத்தி, ஏறத்தாழ 120 இடுகைகள் அறிமுகப் படுத்தி, 280க்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பலப்பல புதிய அறிமுகப் பதிவர்கள் - பலப்பல புதிய அறிமுக இடுகைகள் - கடும் உழைப்பு - தேடிப் பிடித்து, பல்வேறு வகைகளில் தொகுத்து அழகாக வழங்கியமை பாராட்டுக்குரியது - வாழ்த்துக்குரியது.

தோழி ஆனந்தியினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு, ஆசிரியப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் ஓட்ட வட நாராயணன். இவர் சென்ற ஆண்டு ஜூலைத் திங்கள் இறுதியில், மாத்தி யோசி என்ற பதிவினில் இடுகைகள் இட ஆரம்பித்து, 150க்கும் மேலாக இடுகைகள் இட்டுள்ளார். 4900க்கும் மேலாக மறுமொழிகள் பெற்றுள்ளார். 55000 பேர் இவரது வலைப்பூவினிற்கு விஜயம் செய்திருக்கின்றனர். 180 பேர் பின் தொடர்கின்றனர்.

ஓட்ட வட நாராயணனை வருக வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஆனந்தி

நல்வாழ்த்துகள் ஓட்ட வட நாராயணன்

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

பதிவர்கள் வழங்கும் "தகவல் களஞ்சியம்"/ A to Z "Tips" Pedia

பொழுது போக்கு விஷயங்களை மட்டுமல்லாமல் ,மிகவும் உபயோகமான தகவல்களை அளிப்பதிலும் நம் பதிவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள்..இங்கே என்னால் முடிந்தவரை பதிவர்கள் வழங்கிய அவசியமான விஷயங்களை "A to Z " பாணியில் தொகுத்து வழங்கியுள்ளேன்...இங்கே "குழந்தை வளர்ப்பு" முதல் "பூமி தோன்றியது எப்படி வரை?" தெரிந்து கொள்ளலாம்...

1.சித்ரா: அமெரிக்காவிற்கு மேற்படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்காக

2.சி.பி.செந்தில் குமார் : பிரபல பத்திரிகைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி -3 பாகங்கள்

3.செங்கோவி: என்ன வேலையில் சேரலாம்?(மெக்கானிக்கல் என்ஜீனியர்களுக்கு) -10 பகுதிகள்

4.சசிகுமார் : யோகா செய்வது எப்படி?

5.நெல்லி.மூர்த்தி: சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை

6.ஆசியா ஓமர்: தோட்டம்-பாதுகாப்பு

7.திவா: வயதானவர்கள் கணினி கற்று கொள்ளவே ஒரு வலைப்பூ

8.சமுத்ரா: அணு அண்டம் அறிவியல் -பாகங்கள் 22

9.ஹுஸைனம்மா: வலைகாதல் வலை(விழிப்புணர்வு பதிவு)

10.ஜோதி: அதென்ன ஓசோன் துளை ?

11.சௌந்தர் : ' மெட்ராஸ் ஐ' டிப்ஸ்

12.வேடந்தாங்கல் கருண்: நீரழிவு நோய்

13.ஜலீலா: குழந்தை வளர்ப்பு டிப்ஸ்

14.ஜெரின்: ப்லாக்கர் டெம்ப்ளேட்(Template) அழிந்து போனால் திரும்ப பெறுவதற்கான வழிகள்

15.கணேஷ் : ஐன்ஸ்டீன் சொன்னவைகள் -பகுதிகள் 3

16.யாழ் நிதர்சனன் : நேர்முகத்தேர்வு- பொதுவான கேள்விக்கணைகள்

17.நிஷாந்தன் : உடல்நலம் பெற ஒரு அற்புத பானம்

18.பிரபஞ்ச பிரியன்: நம்ம பூமியின் கதை

19.ஆச்சி: உடுத்த விரும்பாத சேலைகளை இப்படியும் உபயோகிக்கலாம்

20.கக்கு.மாணிக்கம்: 40 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்காக உடல் ஆரோக்கிய பதிவு

21."food " ராசலிங்கம்: குஷியான கோடை கொண்டாட்டம்-1

22.லக்ஷ்மி அம்மா : ஹெல்த் கேர் -3 பாகங்கள்

23.கோமு: ஹிமாச்சல பிரதேஷ் பயண அனுபவங்கள் -6 பாகங்கள்

24.கழுகு: இணையம் என்னும் ஒரு வசியக்காரன் -பகீர் ரிப்போர்ட்

25.கீதா ஆச்சல்: 25 வகையான சத்தான டயட் தோசை/அடை (25 Varieties of Healthy diet dosai/Adai )

26.கிரீன் இந்தியா : பாம்பு கடித்தால் வைத்தியம்


27.:ஆசியா ஓமர்: கேப்பை கூல் கூழ்

28.ஜெய்லானி: கம்ப்யூட்டர் ட்ரிக்ஸ் -பகுதிகள் 3

29.எஸ்.கே: அடோப் பிளாஷ் (adobe flash)-66 பாகங்கள்

30.மாணவன்: அலெக்ஸாண்டர் பிளெம்மிங் -வரலாற்று நாயகர்

31.பதிவுலகில் பாபு: கிரெடிட்கார்டு "அபாயங்கள்

32. தமிழ் வலைப்பதிவர்களின் பயோ டேட்டா

சரி மக்களே...என் ஸ்டாப்பு வந்திருச்சு..இறங்கிக்கிறேன் ..கிளம்பும்போது இந்த -Easter Egg Hunt ஐ பரிசா கொடுத்துட்டு, valentines day cake ட்ரீட் கொடுத்துட்டு போறேன்.

இந்த ஒரு வாரமாக என் பதிவுகளை படித்த அன்பு மக்காஸ்க்கு தேங்க்ஸ் ங்கோ..:)) சீனா ஐயா!தங்களுக்கு மீண்டும் வணக்கங்களும்,நன்றிகளும்...

மக்காஸ்..குட் பை !! டேக் கேர்..!! ஈஸ்ட்டர் வாழ்த்துக்கள்!!
மேலும் வாசிக்க...

Saturday, April 23, 2011

"அதகளப்படுத்தும்" அரசியல் அதிரடி பதிவுகள்/பதிவர்கள்

தேர்தல் ஒரு வழியா "பூச்சாண்டி" காமிச்சுட்டு போய்டுச்சுன்னு "துணை முதல்வர் ஸ்டாலின்" மாமல்லபுரம் ரிசார்ட்டில் ஓய்வெடுப்பது மாதிரி நாமும் இன்னும் ரிலாக்ஸா இருக்க முடியாது:))...மே 13 வரை கண்ணாமூச்சி ஆட்டம் அரசியல் களத்தில் டிங்கு..டிங்குன்னு:)) ஆடிட்டு தான் இருக்கும்...தேர்தலுக்கு முன்னர் வரை கூட்டணி குத்தாட்டம் மற்றும் குரங்கு ஜம்பிங் அரசியல் கோமாளிஸ் பத்தியே பேசி அசை போட்ட நமக்கு இன்னும் தேர்தல் முடிவு வரும் வரை யாருக்கு டிபாசிட் போகும்..யாரு ,யாருக்கு வோட்டு போட்டு இருப்பாங்கனு "அமானுஷ்ய விடுகதையை" :)) நோண்டி பார்ப்பதில் ஒரு குஷியோட இருப்போம்...அரசியல் விஷயங்களை குப்புற போட்டு கும்மு கும்முன்னு கும்முற அட்டகாச சில அரசியல் பதிவுகள் /பதிவர்கள் இன்னைக்கு...:)))


1.ஹெல்மெட்டை ஏன் அரசாங்கம் இலவசமாய் கொடுக்க கூடாதுன்னு சொல்லும் வேழவனத்தின் இந்த பதிவு செம..

2."இந்த தனியார் பொறியியல் கல்லூரிங்க தொல்ல தாங்க முடில நாராயணா"...:)) அடுத்த தேர்தலில் அனைவருக்கும் "இலவச பொறியியல் படிப்புன்னு"அறிக்கை கொடுக்க சொல்லலாமான்னு "ரூம் போட்டு" கல்லூரி ஓனர்ஸ் யோசிச்சுட்டு இருப்பதாய் கேள்வி..:).மிக மிக அருமையா பகிர்கிறார் அசோக் மூர்த்தி

3.தனியார் மின் உற்பத்தி ஆலைகளிடம் தமிழ்நாடு மின்சார வாரியம் முழி பிதுங்குவதை அலசுகிறார் maniblog பதிவு .

4.ஆபத்து என்றால் நாம எஸ்கேப் ஆகுறோம் அந்த இடத்தில் இருந்து...!ஆனால் ஐந்தறிவுடைய ஜீவன்கள்..!!ம்ம்...இந்த காணொளியை "கூடல் பாலா" ப்லாக் கில் கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தேன்...மனசே சரியில்லை...என்னனு பாருங்க.

5.காமடி பீஸ் ஆக சித்தரிக்கப்பட்ட வை.கோ வின் அழகு பக்கங்களை வெளிக்கொண்டு வந்த செங்கோவியின் அருமையான பகிர்வு

6.ஸ்பெக்ட்ரம் பத்தி கட்டுரை எழுதி...படிச்சு போர் அடிச்ச நமக்கு இந்த அழகான ஸ்பெக்ட்ரம் ஹைக்கூ/கவிதையை படிங்களேன்.

7.ஏன் கட்சி தலைமைக்கு மட்டும் தான் இலவச திட்டம் போட தெரியுமா...நாங்களும் போடுவோம்பூ ன்னு போட்டு இருக்கும் அரசியல் நகைச்சுவை பதிவு

8.பெர்னாட் ஷா சொன்ன ஒரு வாக்கியத்தை வச்சு..தோனிக்கு இருக்கும் மேலாண்மை செயல்பாடை சிலாகிச்சு முடிச்சிருக்கும்" மனந்திறந்து... மதியின்" பதிவு.

9.புழல் சிறையில் நடக்கும் விஷயங்களை ஒரு "அனுபவப்பட்ட" பதிவர் பகிர்ந்து கொள்ளும் பதிவு

10.ஆளும் கட்சி தவிர தேர்தல் ஆணையத்தை நம்மெல்லாம் பாராட்டிட்டு இருக்கோம்...ஆனால் இதன் மற்றொரு கருப்பு பக்கத்தை அலசுகிறார் இந்த பதிவர்..மிக அருமையான பதிவு("ஸ்மைலி "ட்டேன் இவர் ப்லாக் டைட்டில் பேரு படிச்சு !! "வாங்க .."ப்லாக்" க்கலாம்..:) )


11.கடாபி, ராஜ நடராசன் அவர்களின் இந்த பதிவை படிச்சால் உலகின் உத்தமருடன் :))ஒப்பீட்டமைக்காக ,பரமாத்மாவாக மாறி இமயமலை பக்கம் டென்ட்டு போட்டு த்யானம் பண்ணி வாழ்க்கையை முடித்து கொள்ள (கொல்ல) சான்ஸ் இருக்கு....:)))

12. "டாஸ்மாக் லாபம் வச்சு தான் இலவசமே கொடுக்கிறோம்னு" நம்ம மொதல்வர்ஜி மிக பெருமையாக சொல்லி நம்மை கௌரவப்படுத்தியதற்கு
நன்றி தெரிவிச்சு:) "வைகை" சீறும் இந்த பதிவு


13..தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்க பத்து ஐடியா கைவசம் வச்சுருக்கார் நம்ம தல ஜோதிஜி ...ஹீ..ஹீ.....கனவு மெய்ப்படவேண்டும்..:)))))

14.செக் நாட்டு அரசியல்வாதிக்கு புத்திசாலிதனம் பத்தல , நம்ம ஊருக்கு வந்து பாடம் படிக்கணும்னு ரொம்ப பிரியபடுறாரு அஞ்சா சிங்கம் இந்த நகைச்சுவை பதிவில்:))

15.தமிழ் ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மதிப்பு குறைஞ்சதுக்கு, அரசியல் பாரம்பர்யத்துக்கும் சம்பந்தம் இருக்குமோ னு அலசும் ச.தமிழ்செல்வன் பதிவு

16.கலைஞர்,அம்மா,கேப்டன் தேர்தல் வாக்குறுதி கேட்டு "போர்" அடிச்ச நமக்கு, எம்.ஜி.ஆர் தேர்தல் வாக்குறுதி கேளுங்க...சுவாரஸ்ய காணொளி..

17.மார்க்ஸிஸ்ட் குடும்ப அரசியல்:)) செஞ்சா நாங்க செய்ய கூடாதா :)) ன்னு புலம்பி,அவங்கள நிறுத்த சொல்லு...நாங்க நிறுத்துறோம் னு கேட்கும் "அப்பாவி":) பற்றி சொன்ன நட்புடன் ரமேஷ் பதிவு

இன்னும் எக்கச்சக்க அரசியல் "சூப்பர் ஸ்டார்" பதிவர்கள்(பட்டாப்பட்டி மாதிரி) கொட்டி கிடக்காங்க பதிவுலகத்தில்...

ஓகே...மக்களே...மீண்டும் நாளை இறுதியாய் சநதிப்போம்..:)) Bye for now :))
மேலும் வாசிக்க...

Friday, April 22, 2011

Wow....செம....பதிவுகள் ! /Interesting Posts !!

சில பதிவர்கள் எந்த விஷயத்தை பற்றி சொன்னாலும்,அதை படிக்கணும்னு செம ஆர்வம் தோணும்...அது மொக்கை..மரணமொக்கை னு லேபில் இல் குறிப்பிட்டு இருந்தாலும் :))கூட. .படிக்கும்போதே உதட்டோரம் ஒரு சின்ன புன்னகை வழிந்தோடும்...:).

அந்த மாதிரி சில தரமான ரசனை உள்ள பதிவர்கள்


1. ஜீ : சுஜாதா,எஸ்.ரா,உலக படங்கள்,சாரு ன்னு ரசிக்கும் ஒரு சுவாரஸ்யமான பதிவர்..சின்னதா ஒரு விஷயத்தை கவிதை மாதிரி :) போடுவார்..ஆனால் செம கிளாஸ் ஆ இருக்கும்..உலக சினிமாவை இவர் விவரிக்கும் தொனி..படக்காட்சிகளை அப்படியே கற்பனை பண்ண முடியும் நம்மாலே..இவரின் "வாவ்" பதிவு


2 .பிரபு.எம் : சிறுகதை,தொடர்கதை:) ,கார்டூன்,அரசியல்,விளையாட்டு,
சினிமா ன்னு கலந்து கட்டி அடிக்கும் ஆல் ரவுண்டு பதிவர்..இவரின் கிரிக்கெட் பதிவுகள் படிச்சு பாருங்க..சொக்கி போவோம் அந்த விவரிப்பில்....இவரின் "வாவ்" பதிவு



3.ராஜேஷ்:இவர் தன் பதிவுகளில் உபயோகிக்கும் தமிழ் பிரயோகம் பார்த்து பலமுறை அசந்து இருக்கேன்..அறிவியல் காணொளி பதிவுகளில் இவர் விளக்கங்கள் எல்லாம் ரொம்ப டாப்பு..இவரின் "வாவ்" பதிவு


4."விண்ணோடும் முகிலோடும்"சதிஷ்குமார்: கொரியாவில் இருக்கும் நம்ம ஊரு பையன்...தமிழ்,ஆங்கிலம் னு ரெண்டு மொழியில் எழுதுறார்..நல்ல மொழி வளம்.அவர் பதிவுகளில் சமூக அக்கறை எப்படியும் இருக்கும்..இவரின் "வாவ்" பதிவு

மற்றும் சில "வாவ்" பதிவர்களும்..."வாவ்" பதிவுகளும்..

5.பாட்டு ரசிகன்- தமிழ் பாடலின் வரிகள் ஆய்வுகளுடன் உங்களுக்காக(தலைப்பே புரிஞ்சுருக்கும்)



6.ஹேமாவின் உப்பு மடசந்தி- உலகத்தரத்தில் எழுதும் கவிதாயினி..இவரின் இந்த நகைச்சுவை பதிவு ...வாவ்...:)



7.மாரிமுத்து: இவரின் ப்லாக்கை போலவே (beautiful blog) இவரின் இந்த கவிதை செம வாவ்.



8.பாலாஜி சரவணன் : ம்ம்..கவிதை,காதல் பிடிக்காதவங்களுக்கு இவர் கவிதை படிச்சால் ரெண்டுமே பிடிச்சிரும்..:)) இந்த கவிதையில் திகட்ட திகட்ட லவ்..:) .."வாவ்"



9.கார்த்திக் : புது பதிவர்...இவரின் இந்த பதிவு ஆச்சர்யமாய் இருந்தது..வாவ்..இப்படியும் நடக்குதா எங்க ஊரில்..:)


10.ரமணி அண்ணா: அவர்களின் இந்த கவிதை படிங்க..சத்தியமா "வாவ் "சொல்விங்க.



11.ஜெரி ஈஷானந்தன் : ஆசிரியரான இவரின் கவிதைகள் எல்லாம் அடடே..செம ரகம் தான்...படிச்ச பிறகு ரொம்ப நேரம் என்னை பாதிச்ச ஒரு "வாவ்" கவிதை


12.தமிழ் உதயம் : இளையராஜாவின் ரசிகரான (எப்படி விட்டேன் இசை பதிவில் அண்ணாவை பற்றி குறிப்பிடாமல் :(( ) இவரின் சிறுகதைகள்,கட்டுரைகள் எல்லாம் ரொம்ப தரமானவை..அண்ணாவின் இந்த கவிதை செம "வாவ்".



13.சிவகுமாரன்: வெண்பா,ஸ்லோகன்,கவிதைகள் னு கலக்கும் தமிழ் கவிஞர் இவர்..இவரின் இந்த அழகான ஹைக்கூ..வாவ்..



14.Mohamed Faaique: இவரின் இந்த புகைப்பட பதிவினை பாருங்க..பி.சி.ஸ்ரீராம் தோத்து போய்டுவார்..வாவ்..



15.நிகழ்காலத்தில்..: இவரின் இந்த பதிவு...ம்ம்..என் உதட்டோரம் மெல்லிய புன்னகை..வாவ்



16.பலே பிரபு: பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக கணித முறைகள்,புதிர்கள்,IQ சம்மந்தமாய் பதிவு போடும் இவரின் இந்த பதிவு..வாவ்.



17.மாத்தி யோசி ராஜிவன்: இவரை பற்றி உங்களுக்கே வரும் திங்ககிழமை நல்லா தெரிஞ்சுரும்..சார் தான் அடுத்த வலைச்சரம் ஆசிரியர்..இவரின் அட்டாகாச பதிவுகளில் எனக்கு புடிச்ச வாவ் பதிவு.



18.சுஜாதா தாமுவின் இந்த கவிதை வாவ்.



19.தவறு: இந்த ஓவிய பதிவு வாவ்.


20.உங்களுள் ஒருவன்: புரட்சிகரமான பதிவர்...இவர் எப்போடா ரிலாக்ஸ் பதிவு போடுவார்னு காத்திட்டு இருப்பேன்..அப்படி ஒரு ரிலாக்ஸ் "வாவ்" பதிவு இது



21.நாகசுப்ரமணியன்: ஹைக்கூ ஸ்பெஷலிஸ்ட்.இந்த ஹைக்கூ ..வாவ்.



22.ஷர்புதீன்: இவரின் 30 வினாடியில் படிக்கும் "குட்டியூண்டு கதை" படிச்சிருக்கிங்களா?இதை படிச்சுட்டு "வாவ்" சொல்விங்க..



23.பார்வையாளன்: ரொம்பவே வித்யாசமான ஜிந்தனை ஓ..சாரு..சை ..சாரி..:)) சிந்தனை உள்ள பதிவர்..இவரின் இந்த கிரைம் ஸ்டோரி வாவ்...


24.தீபிகா: இவரின் பின்னூட்டங்களும் அருமை..இவரின் இந்த பதிவை படிச்சுட்டு பிரபல எழுத்தாளர் சாருவே பாராட்டி அவர் ப்லாக் கில் போட்டு இருக்காராம்...என்னடான்னு படிச்சால் "வாவ்"



25.நாஞ்சில் மனோ: எனக்கு மிகவும் பிடித்த அன்பு சகோ:) இவரிடம் இப்படி ஒரு "வாவ்" கவிதை.



26.டக்கால்டி : இவரின் இந்த தலைப்பு என்னடா இப்படி இருக்கேன்னு யோசிச்சுட்டே படிக்க... "வாவ்"



ஓகே மக்காஸ்...நாளைக்கு பார்க்கலாம்...:))
மேலும் வாசிக்க...

Thursday, April 21, 2011

பல்சுவை "பதிவர்"களும்..பின்னூட்ட புலிகளும்...

ரெண்டு சுவாரஸ்யமான நண்பர்கள் பேசிட்டு இருக்கிறதை நாம வேர்கடலை வாங்கி கொறிச்சுட்டே கேட்கும் ஒரு கேஷுவல் டாக்கிங் தான் இந்த பல்சுவை பதிவுகள்...நம்மை சுத்தி நடக்கும் பல நிகழ்வுகளை ,ஒரே நேரத்தில் ஜாலியா சுருக்கமா சுவாரஸ்யமா சொல்லிட்டு போறது...அப்படி நான் ரசிச்ச சில வலைப்பூக்கள்...


1 . சமுத்ரா: There is no choice...முதல்ல சொல்ல போறது இந்த பதிவரின் பல்சுவை பதிவு பத்தி தான்... இவரின் "கலைடாஸ்கோப்" பதிவுகள் ரொம்பவே இஷ்டம்...என்னவோ இவர் எழுத்து ஸ்டைல் செம பக்கா...போயி பாருங்க ஏன் இப்படி சிலாகிக்கிறேன்னு தெரியும்...


2.இரவு வானம்: இவரின் பல்சுவை தொகுப்பு "கமர்ஷியல் பக்கங்கள்" ..இவர் சொல்ற விஷயங்கள் நிறைய கேள்விப்பட்டு இருப்போம்...ஆனால் அந்த narration செம இயல்பு....


3.நா.மணிவண்ணன் : மதுரை மரிக்கொழுந்து..தன் ப்ளாக்கை கஷ்டப்பட்டு அழகாக்கியவர்...:)) இவர் தனது பல்சுவை தொகுப்புக்கு வச்ச பெயர் "சோப்பு..சீப்பு...கண்ணாடி"...
மதுரை ஒரிஜினல் accent அப்போ அப்போ தலைய காமிச்சு கலக்கு கலக்குன்னு கலக்கும்..

4.செங்கோவி : குமுதம் புக் எதுவும் ஒரு வாரம் வாங்க மறந்துட்டிங்கனால் டோன்ட் வொர்ரி:))...இவரின் பல்சுவை தொகுப்பான "நானா யோசிச்சேன்" பாருங்க..ஓ..சாரி...படிங்க..:)
பயங்கரமான :) படங்களுடன் கூடிய அக்மார்க் குசும்பு தொகுப்பு..:))

5.தமிழ்வாசி: இவரின் பல்சுவை தொகுப்பு "தனபாலு...கோபாலு" ..டீக்கடையில் ரெண்டு நண்பர்கள் பேசும் டீக்கடை பெஞ்சு பாணியில் நாட்டு நிலவரங்களை அசால்ட்டா அலசுவது...

6.R கோபி : ஒரு intellectual பதிவர் என்பேன்..:) "முரண்படுதல் அழகு -சில நேரங்களில் " தலைப்பில் எழுதும் பல்சுவை தொகுப்பில்...இவர் உரையாடலில் ஒரு விதமான நையாண்டி கலந்தே இருக்கும்..

7.ஜனா..: " ஹொக்ரெயில்" என்ற பெயரில் எழுதும் பல்சுவை தொகுப்பு...வீடியோ..படிச்ச புத்தகம்..வெளிநாட்டு செய்திகள் னு போட்டு பிரிச்சு மேஞ்சுருவார் .

8.வானதி : இவங்க ப்லாக்கே ஒரு பல்சுவை ப்லாக் தான்...ஸோ..தனியா எதுவும் தொகுப்புக்கு பெயர் வைக்கலை...இவங்க நிறைய கதை எழுதும் எழுத்தாளர்...சின்ன விஷயமாய் தான் இருக்கும்...ஆனால் அவங்க அதை ப்ரெசென்ட் பண்ற ஸ்டைல் கலக்கலோ கலக்கல்.

9.மெட்ராஸ் பவன் சிவா: இவர் பல்சுவை பதிவு "ஸ்பெஷல் மீல்ஸ் "நகைச்சுவை தொகுப்பாக,நையாண்டியுடன் இருக்கும் தொகுப்பு..."மிக்சர் கடை "என்ற பெயரிலும் வேறு சுவாரஸ்யமாய் தொகுத்து வழங்குகிறார்..
இன்னும் நான் ரசிப்பவர்கள் லிஸ்ட் நிறைய இருக்கு...but..பெரிய பதிவா போய்டுமே..:((



ஓகே...அடுத்து பின்னூட்ட புலிகள்...


ஒரு பதிவு போட்டால் அந்த பதிவுக்கு மனரீதியா நல்ல அங்கீகாரம் கிடைப்பது அந்த பதிவுக்கு கிடைக்கும் பின்னூட்டங்கள் பொறுத்து தான்...(more than vote&amp;hit)..பதிவை சரியா படிக்காமல் :))மொய் விருந்து வச்சுட்டு போறதை விட...பதிவை நல்லா படிச்சு அதன் குறை நிறைகளை சொல்லிட்டு போறதில் தான் பதிவர்களுக்கு நிஜ அங்கீகாரம் மனதுக்குள் கிடைக்கிறது என்பேன்...அப்படி நான் பார்த்த பின்னூட்ட புலிகள் நிறைய...ஆனால் சிலரை மட்டுமே குறிப்பிட தான் இடம் இருக்கு இங்க..:((

1. jo amalan : பின்னூட்ட புலிகளில் முதலாய் இவரை குறிப்பிட விரும்புகிறேன்..ஏன் என்றால் ஜோ அவர்களின் பின்னூட்ட தீவிர விசிறி நான்...:)) என் பதிவில் ஒரு முறை வந்து இவர் பின்னூட்டம் போட்ட போது ... அதை நான் மட்டுறுத்தேன்...:( தேவைபட்டால் மட்டுருப்பது என் உரிமை மற்றும் சரியான காரணத்துக்காய் அப்படி பண்ணினேன் என்றாலும்...ம்ம்..சின்ன குற்ற உணர்வு இன்னும் எனக்கு...ஆனால் ஒன்னு மட்டும் நான் தெரிஞ்சுகிட்ட உண்மை அன்னைக்கு...ஒரு பிரச்சனையை பார்க்கும் கண்ணோட்டங்களை இன்னும் நான் விரிவு படுத்திக்கனும்னு (ஜோ..ஏன் உங்க ப்லாக் காணோம்?? )


2 .தம்பி கூர்மதியன்: தலைவர் நாலு ப்லாக் வச்சு சூப்பர் ஆ மெயின்டைன் பண்ணிட்டு இருக்கார்..இவர் எழுதும் உணர்வு பூர்வமான கவிதைகளின் பரம விசிறி நான்..
அரசியல் நிகழ்வுகளை கவிதையா போட இவரை அடிச்சுக்க ஆள் இல்லை என்பேன்..
அதற்கடுத்து விரும்புவது இவரின் அதிரடி டாப் டக்கர் பின்னூட்டங்களுக்கு..:)))

3 .நிருபன்: கொஞ்சநாளைக்கு முன்னாடி தான் வந்த புதுமுகம்..ஆனால் நல்ல ரசனையான பையன்...எந்த டாபிக் கொடுத்தாலும் மூச்சு விடாமல்:)) பேசுவார்னு நம்புறேன்..இவர் போடும் பின்னூட்டங்கள் க்ளாஸ்..

4 .இக்பால் செல்வன்: இந்த பதிவரை கொஞ்சநாளாய் கவனித்து வருகிறேன்...பின்னூட்ட விவாதங்களில் வெகு ஆழமான விஷயங்களை அனாயசமாய் ஹான்டில் பண்றார்...சூப்பர் இக்பால்..

நகைச்சுவை பின்னூட்டங்கள் போடுபவர்கள் லிஸ்ட் எக்கச்சக்கம்...சிலர் பதிவுகளை பின்னூடங்களுக்காகவே விரும்பி போயி படிப்பது என் வழக்கம்...



ஒருத்தர் பேரு சொல்லி..மீதி பேரு விட்டுச்சுனால் மதுரையில் வந்து என்னை என்கவுன்ட்டர் இல் போட்டு தள்ளிருவாங்க என்ற பயத்துடன்...:))) அப்படியே..அப்பீட் ஆகிக்கிறேன்...நாளைக்கு பார்ப்போம்..:))
மேலும் வாசிக்க...

Wednesday, April 20, 2011

அழகான வலைப்பூக்கள்/Beautiful blogs

நாம் உருவாக்கும் நம் வலைப்பூக்கள் நமக்கு ஒரு கற்பனை வீடு:)) மாதிரி தான்...அந்த வீட்டை கலர்புல் ஆ வச்சிருந்தால் அதுவும் ஒரு அழகு தான்...என் பார்வையில் என் கண்ணில் பட்ட சில அழகு வலைப்பூக்களை இங்கே பதிவுடுகிறேன்...நல்லா கவனிங்க..சில வலைப்பூக்கள் மட்டுமே...

வலைப்பூக்களுக்கு உருவாக்கும் லே அவுட் ..ஹெட்டர்ஸ் இல் இருந்து டெம்ப்ளேட்,font ..,theme,பொருத்தமான கலர்ஸ் ன்னு பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து ப்லாக்கை கார்ஜியஸ் ஆ காமிக்கிறது ரசனை சார்ந்த விஷயம்....


அப்படி சில அழகு பூக்கள்..

1. பிரஷா...இந்த அம்மிணி எழுதும் கவிதை மாதிரியே இவங்க ப்லாக் கும் செம கலர்புல்...கருப்பு பின்னணியில்....ஆனால் உறுத்தவே உறுத்தாத டக்கரு ப்லாக்...லே அவுட் செம..

2.தெய்வ சுகந்தியின் ப்லாக்...செம நீட் அண்ட் பியுட்டிபுல்...எனக்கு ரொம்ப பிடிச்சது அவங்க போடும் போஸ்ட்டின் தலைப்புக்கு கீழே வரும் அழகு டிசைன் செம...

3.அமைதிசாரலில் அந்த ஹெட்டெர் (header poster)சூப்பர் ஓ சூப்பர்...


4.எல்.கே ப்லாக் இது...செம வசீகரம் ..

5. ஜலீலா அக்காவின் சமையல் போலவே அவங்க ப்லாக்கின் தோற்றமும் சூப்பர்..அதுவும் ஹெட்டெர் மற்றும் பேக் ரவுண்டு தீம் நல்லா செட் ஆகி இருந்தது...

6.வசந்த் ப்லாக்கின் header செம அசத்தல்..


7..சினேகிதி அவர்களின் வலைப்பூ...யப்பா...ஒவ்வொரு gadget ட்டும் பார்த்து பார்த்து அழகு படுத்தி இருக்கார்....


8. மேனகா அவர்களின் வலைப்பூ...இதுவும் ரொம்பவும் ஸ்டைலிஷ் ஆக செதுக்கப்பட்ட அழகு வலைப்பூ...

9.ரோஜா பூந்தோட்டம் பாரத் பாரதியின் தற்போது மாற்றியமைக்கப்பட்ட ப்லாக் தோற்றம் செம கலர்புல்...


10.இந்த தோழியின் ப்ளாக்கை நான் முதன் முதலில் பார்த்தபோது டெம்ப்ளேட் மட்டும் பார்த்து அசந்தேன்...ப்லாகின் தோற்றமே ஆன்மீகம்னு உணர்த்தியது..


11.மதிசுதா வின் ப்லாக்...இப்போது புது பொலிவுடன் கலக்கலாய் தோற்றம்...

12.ஜனா ப்லாகின் தோற்றம் வெரி வெரி ப்ரொபெஷனல் டச்...

13.வாரியர் தேவா ப்லாக்.....font சைஸ் ,பொருத்தமான கலர்ன்னு செம நீட்..


14.கணேஷ்...அறிவியல் கதைகள் எழுத்தாளர்:) அதுக்கு தகுந்தமாதிரியே ப்லாக் தோற்றம் வடிவமைப்பு...


ப்லாக் அழகாக்க சில டிப்ஸ்


15.பிலாசபி பிரபாகர் எப்படி தன் ப்லாக்கை அழகாக்கிக்க முயற்சித்தேன்னு இந்த பதிவில் சொல்றார்..

இன்னும் என் பார்வையில் படாத நிறைய அழகு வலைப்பூக்கள் இருக்கலாம்...இருந்தால் பின்னூட்டத்தில் நீங்க லிங்க் தரலாம்...


ok...bye for now...meet you tomorrow..:)))
மேலும் வாசிக்க...

Tuesday, April 19, 2011

ஸ...ரி...க...ம...ப..த...நி..ஸ...!!

இசை........பலருக்கு இது இருந்தால் போதும்...:))சோறு தண்ணி வேணாம்.ஆனால் அந்த இசையவே கணிச்சு...ரசிச்சு..லயிச்சு...
பிரிச்சு தொங்கவிட்டு தோரணமாய் கட்டும் ,இசையால் தாலாட்டும் வலைப்பூக்கள் பற்றி தான் இன்னைக்கு...

இசை கருவிகள் எல்லாம் எப்படி பாட்டுக்களில் யூஸ் பண்ண பட்டு இருக்கு...ன்னு தானும் ரசிச்சு...நம்மளையும் அடடே போட்டு மலைக்க வைக்கும் கே.ரவிஷங்கர்க்கு ஒரு பெரிய சல்யூட்..


பெரும்பாலும் இவர் எடுத்து கொண்டிருப்பது இளையராஜா அவர்களின் இசையில் வெளிவந்த பாட்டுக்கள் தான்...இவர் புல்லாங்குழலில் இருந்து கோரஸ் வரை அக்கு வேறு..ஆணி வேறு ன்னு ரசிச்சு...அதகளம் பண்ணி இருக்கார்...


மேலும்..வயலின்,வீணை (இந்த பதிவு என் பேவரைட் ):), கிட்டார் ன் சாகசங்கள்(அதுவும் அந்த "பூ வாடை காற்று" பாட்டின் "முதல் இசை "ஆராய்ச்சி சூப்பர் ரூ ) ...


படு பயங்கர சுவாரஸ்யம்...எந்த manual இசைக்கருவிகளும் தன்னிச்சையாய் கொடுக்க முடியாத
இசையை இங்கே நாம் கேட்கலாம்..:)))))


இசையில் கவுண்டர் பாயிண்ட்னால்...ஏதோ கவுன்ட் பண்ற ரிதம்னு கொச்சா..முச்சான்னு நினைச்ச எனக்கு :))இந்த பதிவு தான் உண்மையை புரிய வச்சது.....


ஷெனாய்..அதுவும் ஆண்பாவம் படத்தில் "குயிலே..குயிலே" பாட்டில் ஷெனாயின் கலக்கலை இந்த பதிவு படிச்சு தான் அசந்தேன்...மீண்டும் மீண்டும் கேட்க பரம சுகம்...


இசைதந்தை மொஸார்ட்டை பற்றிய திரைப்படம் (Amadeus)..பற்றிய ஒரு பதிவு தான் இது..


ஹாங்காங் தெரியும்..ஆனால் ஹாங் இசை தெரியுமா..படிக்க ஆச்சர்யமாய் இருந்தது...you tube இல் தேடி பார்த்து இந்த இசையை கேட்டேன்...யப்ப்பா...செம ..செம...நீங்களும் கேட்டு பாருங்க.



நம் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல நம்ம ஊரு தமிழ் பசங்க சிலர் சேர்ந்து போட்ட இந்த தமிழ் இசை ஆல்பம்...



எங்கே நம் இளையராஜா னு தேடு தேடுன்னு தேடுகிறார் ...அது மட்டுமில்லாமல்..தான் ரசித்த ராஜா மற்றும் ரகுமானை பற்றிய ஒரு அட்டகாசமான,சூடான விவாதம்..பின்னூட்டம் வரைக்கும் கலக்கல்..:)))


ஏ .ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு சீன மொழி படத்துக்கான (Between Heaven and Earth) இசை விமர்சனம்...இந்த பதிவர் செமத்தியா ரசிச்சு சொல்லி இருக்கார்...



ஜான் பி ஹிக்கின்ஸ் பாடகரை பத்தி தெரியுமா.. ரசித்த அவரின் பாடல்களை பத்தி சொல்கிறார் இந்த பதிவர்..


பலர் மறந்துவிட்ட பின்னணி பாடகர்களுக்காக நினைவூட்டும் அழகான ஒரு இசை பதிவு.


ஜஸ்ட் இப்போ தான் பார்த்தேன் இந்த இசை வலைப்பூவை...முழுக்க முழுக்க இசை வழிந்தோடுகிறது இதில்.



(இது வரை "இசை" என்ற இன்ப வெள்ளத்தில் "தொபுக்கடீர்" னு குதிச்ச உங்களுக்கு மிக்க நன்றி..மீண்டும் நாளை பார்ப்போம்...:)) )
மேலும் வாசிக்க...

Monday, April 18, 2011

புதுமுகம்...அவள் அறிமுகம்...

ஹாய்..மக்காஸ்..வெல்கம் டு வலைச்சரம்..:)) முதலில் இந்த வாய்ப்பை கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கு என் வணக்கங்களும்,நன்றிகளும்..!!


ஹைக்கூ அதிர்வுகள் ஆரம்பிச்சு ஒலக மொக்கையா ஆடிக்கு ஒன்னு...அமாவாசைக்கு ஒண்ணுனு பதிவா போட்டுட்டு இருக்கேன்.:)))


ஆர்வ கோளாறில் முதன் முதலில் போட்ட சில பதிவுகள் இன்னும் என் ஸ்பெஷல் செல்லங்கள் லிஸ்டில் இருக்கு ...:))) ப்லாக் ஆரம்பிக்கும்போது மனசுக்கு தோணியதை எல்லாம் எந்த எடிட்டும் பண்ணாமல் ,ஹிட் பத்தியோ:))..வோட்டு:)) பத்தியோ எதுவும் யோசிக்காமல்:)))) பதிவு பண்ணிய என் செல்லங்கள் இவை...


1.தே(வதை)யும்,மொக்கைபுலம்பல்களும்..
2.சில தேவதூதர்களும்..தெருவோர குப்பைகளும்.
3.அண்ணன் 'வண்டு' முருகனும்&காந்திஜெயந்தியும்.

அப்புறம் மிகவும் எமொஷனலாய் போட்ட இந்தபதிவு மிகவும் ஆத்மார்த்த பதிவாய் நம்புகிறேன்..

எங்க ஊரு வைகை ஆறுக்கும்..எனக்கும் இருந்த பந்தத்தை இந்த பதிவில் தர முயற்சி செய்தேன்..


இளையராஜா...ம்ம்...இவரை பத்தி 1000 பதிவும் விடாமல் போட நான் ரெடி:))...அவ்வளவு இஷ்டம்..

பாரதியின் கவிதை வரிகள் என் வாழ்வின் கனவும்..அனுபவமும் ஆகின..எப்புடி?? அதை இதில் சொல்லி இருக்கேன்...

well ...வலைச்சரம் வரை வந்ததற்கு... உங்க எல்லாருக்கும் கவுன்ட்லெஸ் நன்றிகள் :) அப்புறம் மேலும் சில நன்றிகள் தெரிவிக்க விரும்புகிறேன்...

ப்லாக் ஆரம்பித்தபோது வலையுலகை பற்றி எனக்கு சொல்லி கொடுத்து..இப்போது வலைச்சரம் வரை எனக்கு உற்சாகம் கொடுக்கும் என் இணைய சகோதரன் சௌந்தர் மற்றும்...


ஆரம்ப நாட்களில் என் மொக்கை பதிவிற்கு கூட உற்சாக கம்மென்ட் கொடுத்து பூஸ்ட் ஏற்றிய செல்ல ராட்சசி தோழி வெட்டி பேச்சு சித்ரா க்கும் நன்றிகள் பல...


அப்புறம் என் தம்பியான இவனுக்கும் என் தேங்க்ஸ்...:)

நானே ஒரு புதுமுகம்...நான் சிலமுகங்களை வலைச்சரம் மூலம் அறிமுகப்படுத்த விரும்புறேன்:)

அந்த சில புதுமுகங்கள்:-

புரட்சிக்காரன்

நேத்ரன் பக்கம்

தாடகை பெருநிலத்தான்

புதிய பாமரன்

செம்மலர் செல்வன்

சிகரங்களைநோக்கி...

பேனா துளிகள்

அவர்களுக்கு பூஸ்ட் கொடுக்க பாலோவேர் ஆகி,பதிவை படித்து,கம்மென்ட்டும் போட்டு வந்துட்டேன்...முடிஞ்சால் நீங்களும்....!!!!

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது