07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 7, 2012

3 - மூன்று பேர் ...


3 என்ற தலைப்பை பார்த்ததும் பட  விமர்சனமோ என்று பயந்து விடாதீர்கள் ... மூன்று என்ற இலக்கம் எல்லோர் வாழ்விலும் நன்றாக பிணைந்து விட்டது ... சின்ன  வயதிலிருந்தே எது செய்தாலும் முக்கா முக்கா மூணாவது ஆட்டம் என்று நிறைய பேர் கேட்டுப்  பழகியிருப்போம் ...  உலகின் முக்கியமான மதங்கள் மூன்று , இந்து மதத்தில் சிவன் , பிரம்மா , விஷ்ணு என்று முக்கிய கடவுள்கள் மூன்று , அதில் சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உட்பட கண்கள் மூன்று , ஆண் , பெண் , திருநங்கை என மனித இனத்தின் வகைகள் மூன்று , நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இது வரை இந்தியா வாங்கியுள்ள பதக்கங்கள் மூன்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ... அத்தோடு நான் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையும் மூன்று என்பதால் தினமும் மூவரை அறிமுகம் செய்யலாம் என்று முடிவு செய்தேன் ... இதனை அறிமுகம் என்று சொல்வதை விட பகிர்ந்து கொள்ளுதல்  என்றே சொல்லலாம் , ஏனெனில்  இதில் பெரும்பாலானோர் உங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருக்கலாம் ...

தீண்டாமை பெருங்குற்றம் 
தவறாக புரிந்து கொண்டார்கள்
விளைவு எயிட்ஸ் ...

( கல்லூரி காலத்தில் தினமலர் இதழில் வெளியான எனது ஹைக்கூ ) 

அறிமுகம் 1

உங்களில் எத்தனை பேர் எஸ்.ரா எழுதிய " கதாவிலாசம் " படித்திருப்பீர்கள் என்று தெரியாது , ஆனால் நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களுள் அதுவும் ஒன்று ... பாரதியார் உட்பட தமிழுலகின் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களையும் , அவர்களுடைய எழுத்துக்கள் பற்றியும் தனது அனுபவ நடையில் அருமையாக தந்திருப்பார் எஸ்.ரா ... அதே போன்றதொரு சிறப்பான பணியை இணையத்திலும் செய்து வரும் சிறப்பான வலைத்தளமே அழியாச்சுடர்கள் ...  இதை நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம் என்றே சொல்லலாம் .


எனக்கு அதில் இடம்பெற்றிருந்ததில் மிகவும் பிடித்த சில கதைகள் 


அறிமுகம் 2

எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வலைத்தளத்தில் எழுதி வருகிறோம் , ஆனால் அதில் ஏதாவதொரு தொழில்நுட்ப கோளாறு வந்தால் நாம் அனைவரும் பதறி விடுவோம் ... அந்த வகையில் எனக்கு சில பிரச்சனைகள் வந்த போது அதனை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது  ப்ளாக்கர் நண்பன்

அதிலிருந்து சில முக்கியமான பதிவுகள் இதோ : 


அறிமுகம் 3

பளாக் மட்டுமின்றி கணினி , கைபேசி போன்ற தொழில்நுட்ப சாதனங்களை பற்றிய பதிவுகளோடு மருத்துவம் , சுற்றுலா பற்றிய தகவல்களையும் தரக்கூடியவர் 

தங்கம்பழனி    அவர் தளத்தில் இடம்பெற்ற உபயோகமான  சில பதிவுகள் 


கணினியில்டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...


நாளை மற்ற  மூவருடன்    மீண்டும் சிந்திப்போம் ...

இப்படிக்கு 
அன்புடன் அனந்து ... 






Search Results








17 comments:

  1. மூன்றில் தங்கம் பழனி மட்டும் நான் படித்ததில்லை. மற்ற இரண்டும் படிக்கிறேன்.

    நல்ல பகிர்வுக்கு நன்றி அனந்து.

    நட்புடன்

    வெங்கட்.
    புது தில்லி.

    ReplyDelete
  2. வெறும் மூவர் மட்டும்தானா..?

    ReplyDelete
  3. மூவரும் (கிட்டத்தட்ட) அனைவரும் அறிந்த அறிமுகங்கள்...

    அனைவருக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி..

    ReplyDelete
  4. எமது வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி... இத் தகவலை தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி..!

    60000 -க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன.. அவற்றில் தேடினால் எத்தனையோ பயன்மிக்க, அறிமுகம் இல்லாத புதிய தளங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நிறைய தளங்களை அறிமுகப்படுத்துங்கள்.. என்னுடைய வாழ்த்துகள்..!

    ReplyDelete
  5. அருமையான அறிமுகங்கள்.

    நல்ல அறிமுகங்களைத் தொடருங்கள். நாங்களும் தொடர்கிறோம்.

    ReplyDelete
  6. ப்ளாக்கர் நண்பன் தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பரே! தங்கம்பழனி அவர்களின் தளத்தை படித்து வருகிறேன். அழியாச்சுடர்கள் தளம் எனக்கு புதிது.

    ReplyDelete
  7. பிளாக்கர் நண்பன் என் நண்பன் மற்றவர்களை அறிந்து கொள்கிறேன்

    ReplyDelete
  8. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி Nalvaalthu
    Vetha.Elangathialakam.

    ReplyDelete
  10. ///
    தீண்டாமை பெருங்குற்றம்
    தவறாக புரிந்து கொண்டார்கள்
    விளைவு எயிட்ஸ் ...
    ///

    செம செம! கவிதைக்கு வாழ்த்துக்கள் சகோ!

    அறிமுகங்களுக்கு நல்வாழ்த்துக்கள்! முதலாம் நண்பர் மட்டும் புதியவர்!

    ஆசிரியர் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அழியாச்சுடர்கள் நான் அறியாதது! மற்ற இருவரும் நான் தொடர்கிறேன்! நன்றி!
    இன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை! தொடர் http://thalirssb.blogspot.in/2012/08/3.html

    ReplyDelete
  12. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணியும் சிறப்பாகத் தொடர என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  13. பயனுள்ள பதிவு என்றும் பாராட்டப்படும், உங்களின் இந்த தகவல் பகிர்வு வலைதள நண்பர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது! நன்றி

    ReplyDelete
  14. நன்றி அனந்து

    ReplyDelete
  15. அழியாச்சடர் தங்கள் பதிவின் வாயிலாக அறிந்தேன். அத்தளத்தில் இணைந்துவிட்டேன். தங்கம் பழனி மற்றும் பிளாக்கர் நண்பன் இரண்டும் என்ன சந்தேகம் வந்தாலும் நான் சென்று தேடும் தளம். தொடருங்கள் அனந்து..... மூன்று அறிமுகங்கள் என்றாலும் முத்தானதாய் தாருங்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது