07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 14, 2012

வெள்ளின்னா மூன்று!அது என்ன 3....?!

வெள்ளின்னா 3....அது என்ன 3 ...முதலாவது கிழமை வெள்ளிக்கிழமை...வெள்ளிக்கிழமை பல மதத்தவர்களுக்கும் முக்கியமான நாள்...பல அரபுநாடுகளில் வெள்ளிக்கிழமைதான்  அரசு விடுமுறை...

அடுத்ததாக தங்கம்,வைரத்துக்கு அடுத்ததாக வெள்ளிதான்  அதிக பயன்பாட்டில்  உள்ள உலோகம்  ....சொல்லப்போனால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகளின் தங்கம் என்று சொன்னால் அது வெள்ளிதான்...

மூன்றாவதாக வெள்ளியின் பெயரில் உள்ள கோள் ....வெள்ளி (Venusசூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே பிரகாசமானது. இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக் கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது.(நன்றி:விக்கிப்பீடியா)

இன்றைய பதிவர்களையும் பதிவுகளையும் பார்ப்போம்...

எதிர்க்குரல்  என்ற பெயரில் அரசியல்,சமூகம், அறிவியல் ,ஆரோக்யமான விவாதங்கள் பலவற்றையும் பற்றி   நேர்த்தியாக எழுதி வருகிறார் சகோ ஆசிக்...பலராலும் அறியப்பட்டவர்தான் ஆசிக் என்றாலும் அவரின் பதிவுகளில் எனக்கு பிடித்தவற்றை குறிப்பிட விரும்புகிறேன்...









இந்த மாதிரி கொம்பு உள்ள மாட்டை அதிகம் பார்த்து இருக்க மாட்டீர்கள்....




பூவிலிருந்து தேன் எடுக்கும் வண்டை  நேரில் பார்த்து இருக்குறீர்களா !



அடடா!இந்த கொக்குக்கு அந்த மாடு கொடுக்கும் "இட ஒதுக்கீட்டை "பார்த்தீர்களா!மனிதர்கள் கற்று கொள்ள வேண்டும்...

இந்த படங்கள் எல்லாம் என் நண்பன் சவுக்கத்ராஜா  எடுத்தது....இந்த படங்களை எடுக்க அவன் ரொம்ப சிரத்தை எடுத்ததை  அருகில் இருந்து நான் பார்த்தவன்...இது போன்று அவன் எடுத்த படங்களை shaukatraja capture  என்ற வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளான் .....அதை நான் இங்கு பகிர்ந்துள்ளேன்....

சிட்டுக்குருவி    என்ற வலைப்பூவில் சகோ விமலன்  சிறுகதை,கவிதை என எழுதி வருகிறார்..அவரின் பதிவுகளில் என்னை கவர்ந்தவை 




கும்மாச்சி  என்ற  வலைப்பூவில் அரசியல்,சமூகம்,சினிமா என சகலவற்றையும் கும்மி கூறு போட்டு எழுதி வருகிறார். அனைவராலும் அறியப்பட்ட  கும்மாச்சியின்  பதிவுகளில் என்னை கவர்ந்தவை...

2080 ல் செல்வந்தர்கள்



டெண்டுல்கர் பயோடேட்டா



உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் உள்குத்துகளும்


அரசியல்பற்றி,தமிழக அரசியல் வரலாற்றைப்பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் அரசியல்வாதி  என்ற தளத்தில்  போய்  பாருங்கள்...செங்கோவி,ரஹீம் கஸாலி ,மெட்ராஸ்பவன் சிவக்குமார் ஆகியோரால் இந்த வலைப்பூ இயங்குகிறது..இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் நமக்கு எழும் அரசியல் சந்தேகங்களை கேள்விகளை கேட்டால் பதிலை ஒரு பதிவாகவே தருகிறார்கள்...அரசியல் வரலாற்றை தெரிந்துகொள்ள இந்த தளம் நிச்சயம் உதவும்...

சில பதிவுகள் உங்களுக்காக...

தி.மு.க.,விலிருந்து சிவாஜி விலகியதன் பின்னணி


பொற்கால ஆட்சி காமராஜர் ஆட்சியா? அண்ணா ஆட்சியா?


மேல்சபை கலைக்கப்பட்ட வரலாறு


நிச்சயம் இந்த பதிவர்களும்,பதிவுகளும் உங்களை கவர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது...நாளை சந்திப்போம் நண்பர்களே...

எனது வலைப்பூவில் இன்றய பதிவு ...ராமர் படம் போட்ட சேலையும்,குஷ்புவின் குசும்பும்......

14 comments:

  1. வணக்கம்
    ஹாஜா மைதீன்

    இன்று பலவகைப்பட்ட பதிவுகளை கொடுத்து வலைச்சரத்தை சிறப்பிக்க வைத்துள்ளிர்கள் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தொடருகிறேன்,

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நல்லது...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. ஹாஜா என்னுடைய மூன்று பதிவுகளை குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜா மைதீன்,

    என்னுடைய பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. அழகான முறையில் சேவை செய்துவரும் வலைச்சரத்தில் தங்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

    பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  5. நறுக்கென்று அறிமுகங்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  6. ஹாஜா நிறைய பேரை பற்றியும் அவர்களது பதிவுகள் பற்றியும் நல்ல கருத்துக்களையும் ஊக்கப்படுத்தும் விதமையும் சொல்லி வருகிறீர்கள்

    ReplyDelete
  7. முதலாவதாக வந்து படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி 2008rupan

    ReplyDelete
  8. நன்றி கவிதை வீதி சவுந்தர்

    ReplyDelete
  9. உங்கள் எல்லா பதிவுகளுமே எனக்கு பிடித்ததுதான் ....நன்றி கும்மாச்சி

    ReplyDelete
  10. வஸ்ஸலாம் சகோ ஆசிக்...

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

    ReplyDelete
  11. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கவியாழி கண்ணதாசன்

    ReplyDelete
  12. அருமையான அறிமுகங்கள்! நன்றி!

    ReplyDelete
  13. வெள்ளி 3 என்றதும், ஆஹா! வானில் மூன்று வெள்ளி வந்துவிட்டதா? என்பதைக் காண மிக ஆவலாக ஓடி வந்தேன். இங்கு வந்தா... அருமையான மூன்று தகவல்கள்.
    என்னைக் கவர்ந்துவிட்டது நன்றி.

    ReplyDelete
  14. ஆசிரியருக்கு வணக்கம்

    ம்..தொடருங்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது