இன்றொடு ஐந்தில்- காரஞ்சன்(சேஷ்)
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்! வலைச்சரத்தில் இன்றோடு ஐந்து நாட்கள் நிறைவடைகிறது! தொடரும் உங்களின் நல்லாதரவு நிறைவு தருகிறது! ஊக்கமளிக்கும் வகையில் கருத்தினைப் பகிர்ந்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!
காதலில்லை என்று சொன்னால் பூமியும் இல்லை என்பார்கள்! , ஊடலும், பிரிவும் அதன் ஆழத்தை உணர்த்தும் தருணங்கள்! இன்று அணைத்திட வருவாயோ?என்னும் தலைப்பில் கவிதை ஒன்று படைத்துள்ளேன்!
அணைத்திட வருவாயோ?
ஆற்றின்
கரையினிலே
அந்திப்
பொழுதினிலே
சந்தித்த
பொழுதுகளென்
சிந்தையில்
தோன்றுதடி!
வண்ணமிகு
வான்நிறத்தை!
கண்ணிரண்டின்
நீர்காட்டும்
கவலையுறும்
என்னுளத்தை!
சுழித்தோடும்
நீர்போல
சுற்றுதடி
உன்நினைவு!
பகையாச்சு
பொழுதெல்லாம்
பாவை உன்
பிரிவாலே!
கனவென வரும்வேளை
விழிக்கிறதே
விழியிரண்டும்
விழிக்கையில்
நீயின்றி!
கோடையில்
மழையொருநாள்
குடைக்குள்
இருவருமாய்
பிடித்த
கதைகளெலாம்
பேசியே
நடந்திட்டோம்!
நனைந்தன
உடைகளொடு
நம்மிருவர்
இதயமுமே!
கூவிடும்
குயிலொன்று
இழையோடும்
சோகத்தை
இன்னிசையாய்
மீட்டுதடி!
மதிற்மேல்
படர்ந்தகொடி
மனதினை
வாட்டுதடி!
ஏக்கம்
எனும்தீயை
என்னுள்ளே
மூட்டுதடி!
ஏக்கப்
பெருந்தீயை
என்றணைக்க
வருவாயோ?
பட உதவி:கூகிளுக்கு நன்றி!
இறைவனை எட்டுதல்.
கடும் பசியுடன் இருந்த சிறுவன் ஒருவன் ஒரு வீட்டை தட்டினான். இளம் பெண் ஒருத்தி கதவைத் திறந்தாள்.
"குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்"
என்று கேட்டான். ஆனால் அவன் பசியுடன் இருப்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண் ஒரு கோப்பையில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள். நன்றியுடன் பெற்றுக்கொண்ட அந்த சிறுவன் கட கட வென குடித்து முடித்தான். பிறகு, " இதற்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்"
என்று கேட்டான்.
"ஒன்றும் வேண்டாம்,
அன்புடன் கொடுக்கும் எந்த பொருளுக்கும் பணம் பெறக்கூடாது என்பது என் தாயின் அறிவுரை"
என்றாள் அந்த பெண். அவன் நன்றியுடன் விடை பெற்றான்.
காலம் பறந்தது. அந்த பெண் திடீரென்று நோய்வாய் பெற்றாள். அந்த ஊர் மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவளது நோய் குணமடையவில்லை. நகரத்தில் உள்ள புகழ் பெற்ற மருத்துவரான ஹோவார்ட் கெல்லி என்பவரை ஆலோசனைக்காக அழைத்தனர்.
அந்த பெண்ணின் ஊர்ப் பெயரைக் கேட்டதும், அவளது அறைக்கு விரைந்தார்டாக்டர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவளைக் கண்டதும் அவர் கண்கள் வியப்பில் விரிந்தன. உடனடியாக, அந்த பெண்ணின் சிகிச்சையை தாமே முன்னின்று கவனிக்க தொடங்கினார். தனது அனுபவத்தால், கடும் போராட்டத்திற்குப் பிறகு, அவளை படிப்படியாககக் குணப்படித்தினார் அவர்.
அன்று மருத்துவமனையில் இருந்து அவள் வெளிவரும் நாள். தான் குணமடைந்தது குறித்து மகிழ்ந்தாலும், மருத்துவச் செலவு எவ்வளவு ஆகியிருக்குமோ என்ற கவலை அவளுக்கு!
மருத்துவமனை நிர்வாகத்திடம் சென்று நான் எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கேட்டாள். எதுவுமில்லை என்று கூறி ஒரு கவரை அவளிடம் கொடுத்தார் அந்த ஊழியர். அவளுக்கு ஆச்சரியம். ஆர்வத்துடன் அந்தக் கவரைப் பிரித்தாள்.
உள்ளே ஒரு காகிதத்தில்..............
அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், அதற்கான செலவுகள் ஆகியன பட்டியிலிடபட்டிருந்தன. அவை எல்லாவற்றுக்கும் கீழே சிவப்பு மையினால், கொட்டை எழுத்தில் இவ்வாறு எழுதபட்டிருந்தது.
"மருத்துவ செலவுகள் அனைத்தும், சூடான ஒரு கோப்பை பாலின் மூலம், முழுவதுமாக செலுத்தப்பட்டு விட்டன! இப்படிக்கு, டாக்டர் ஹோவார்ட் கெல்லி"
திகைத்து போனாள் அவள்.
அந்த ஏழை சிறுவனிடம் தான் காட்டிய கருணையும், அவனுக்கு அளித்த பாலும், இன்று ஓர் அரிய சிகிச்சையாக மாறி, தன்னை காப்பாற்றியதை நினைத்து அவளுக்கு பேச்சே எழவில்லை.
அவள், இறைவனின் பெரும் கருணையை மனித வடிவில் கண்டாள்.
வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும்,......
பிறர் மீது குற்றம் காண்பதை நிறுத்துங்கள். பிறரை தாழ்ந்தவராக எண்ணுவதை கைவிடுங்கள்.சக மனிதர்களை விட பொன்னையும் பொருளையுமே பெரிதாகக் கருதி, எவரையும் சொல்லாலோ செயலாலோ புண்படுத்தாதீர்கள். தவறுகளை மன்னித்து, மறந்து விடுங்கள். இவை போன்ற எளிய செயல்களால் , உங்களது வாழ்க்கை அன்பு மயமாகும்.
அப்போது இறைவனையே எட்ட முடியும்
( நன்றி: திரு K.N.RAJAN அவர்களின் மின்னஞ்சல்)
III) சிந்தனைக்கு!IV) இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்ப்போமா?
1. யாரும் திட்டம் போட்டு காதல் கொள்வதுகிடையாது. அது ஒரு இயற்கையான ஒன்று எனக் கூறும் திரு. திi, தமிழ் இளங்கோ அவர்களின்: எனது எண்ணங்கள்!
2. எல்லாமே எனக்கெதிராய் எனச் சொல்லும் தென்றல் சசிகலாவின் மற்றுமொரு கவிதைத் துளி துளித்துளியாய்!
3. கோவை 2 தில்லி: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது?.. பிரிந்திருந்த தோழியுடன் மீண்டும் இணைந்த கதை:என் இனிய தோழி:. இவரின் மற்றுமொரு ஆதங்கம் என்றுதான் திருந்துவார்களோ?
4. திரு மதுமதி அவர்களின் தூரிகையின் தூறலில் A வகை காதலர்கள்!
5 திரு. இரவி அவர்களின் மாயவரத்தான் MGR வலைப்பூவில் அருமையான பகிர்வுகள்
6. தளிர் சுரேஷ் அவர்களின் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் முத்தான மூலிகைகள்
என்ன நண்பர்களே இன்றைய பதிவுகள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்! படியுங்கள்! தயவு செய்து தங்களின் கருத்தினைப் பதியுங்கள்! நாளை சந்திப்போம்!
அதுவரை தங்களிடமிருந்து விடைபெறும்
காரஞ்சன்(சேஷ்)
|
|
கவிதை, மின்னஞ்சல் மூலம் வந்த கதை, அறிமுகங்கள் என அனைத்தும் சிறப்பு.
ReplyDeleteதொடர்ந்து சிறப்பான பகிர்வுகள் தர வாழ்த்துகள்.
எனது மறுபாதியையும் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.
த.ம. 1
தங்களின் வருகையும், கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!
ReplyDeleteஎன்னையும் ஒரு பொருட்டாக எண்ணி எனது பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்த திரு. காரஞ்சன்(சேஷ்) (esseshadri.blogspot.in) அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி ஐயா! தொடருங்கள் உங்கள் நற்பதிவுகளை!
ReplyDelete//ஏக்கம் எனும்தீயை
ReplyDeleteஎன்னுள்ளே மூட்டுதடி!
ஏக்கப் பெருந்தீயை
என்றணைக்க வருவாயோ?//
காதல் உணர்வுகளைச்சொன்ன அனைத்து வரிகளையும் மிகவும் ரஸித்துப்படித்தேன்.
சிறப்பான சிந்தனைக்கோர்வை தான்.
தலைப்பை மட்டும் முதலில் பார்த்ததும், தமிழகத்தின் மின்தடை முற்றிலும் நீங்கி விட்டது போலவும், தேவையில்லாமல் ஆங்காங்கே ஓடும் மின் விசிறிகளையும், மின் விளக்குகளையும் அணைக்கத்தான் சொல்கிறீர்களோ என நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன்.
அந்த நாளும் வந்திடாதோ?
>>>>>>>
மின்தடையினால் அவ்வப்போது மீண்டும் வருவேன் >>>>>>>>>>
கவிதை வரிகள் சிறப்பு தென்றலையும் அறிமுகப்படுத்தியது கண்டு மகிழ்ந்தேன் சிறப்பான தங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள். நன்றிங்க.
ReplyDeleteமின்னஞ்சல் தகவல் அருமையோ அருமை.
ReplyDeleteமுதல் நாலு வரிகள் படித்ததுமே முடிவினை என்னால் யூகிக்க முடிந்து விட்டது.
தூய்மையான அன்பு விலைமதிப்பற்றது. இதை எல்லோரும் அவசியம் உணர வேண்டும்.
>>>>>>>>
அந்த மூன்று நபர்களையும் நாம் மறக்கக்கூடாது என்ற ஆங்கில அறிவுரையை நான் ஏற்கனவே என் மனதினில் கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்துள்ளேன்.
ReplyDeleteஎனக்கு என் அனுபவம் அளித்த பாடம் அது.
>>>>>>
இன்று அடையாளம் காட்டப்பட்டுள்ள ஆறு பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
ReplyDeleteஎங்கள் ஊர் திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களை இன்று முதல் முதலாக அறிவித்துள்ளது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியினைத் தருகிறது.
தங்க்ளுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
வெற்றிகரமாக முடித்துள்ள ஐந்தாம் நாள் திருவிழாவுக்கும் என் பாராட்டுக்கள், நன்றிகள்.
அன்புடன்
VGK
திரு வைகோ ஐயா அவர்களுக்கு! தங்களின் வருகையும், பாராட்டுரைகளும் மிகவும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
ReplyDeleteதங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி! திருமதி சசிகலா மேடம்!
ReplyDeleteஎளிய செயல்களால் , வாழ்க்கை அன்பு மயமாகும்.
ReplyDeleteஅப்போது இறைவனையே எட்ட முடியும் ..//
அழகான தகவல் பகிவுகளுடன் அருமையான
அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்........
தங்களின் வருகைக்கு நன்றி திருமதி இராஜேஸ்வரி அவர்களே!
ReplyDelete''..வளைந்தோடும் நீர்காட்டும்
ReplyDeleteவண்ணமிகு வான்நிறத்தை!
கண்ணிரண்டின் நீர்காட்டும்
கவலையுறும் என்னுளத்தை..''
வரிகள் நன்று சகோதரா.
வரிகளாக்கிய அறிமுகங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
நேரமிருக்கும் போது சென்று பார்ப்பேன்.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
//வரிகள் நன்று சகோதரா.
ReplyDeleteநன்றி.
வேதா. இலங்காதிலகம்.
//
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி!
வணக்கம்
ReplyDeleteகாரஞ்சன்(சேஷ்)அண்ணா
இன்று 5ம் நாளில் பதியப்பட்ட பதிவுகள் அனைத்தும் அருமை தொடருகிறேன் பதிவுகளை, வாழ்த்துக்கள் அண்ணா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி திரு ரூபன் அவர்களே!
ReplyDeleteகதை அருமையாக இருந்தது. அன்பின் வெளிப்பாடு எப்போதும் சிறப்பு வாய்ந்தது.
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி விச்சு அவர்களே!
ReplyDeleteஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஇறைவனின் பெரும் கருணையை மனித வடிவில் கண்டாள்.//
கண்ணில் நீர் வரவழைத்த மின்னஞ்சல்.
தினம் நல்லவிஷ்யங்களைச்சொல்லி வலைச்சர வாரத்தை சிறப்பாக்கியதற்கு வாழ்த்துக்கள்.
இன்று நீங்கள் குறிப்பிட்ட பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கோமதி அரசுsaid...
ReplyDeleteஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
இறைவனின் பெரும் கருணையை மனித வடிவில் கண்டாள்.//
கண்ணில் நீர் வரவழைத்த மின்னஞ்சல்.
தினம் நல்லவிஷ்யங்களைச்சொல்லி வலைச்சர வாரத்தை சிறப்பாக்கியதற்கு வாழ்த்துக்கள்.
//
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
என்னுடைய பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி கவுரவித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! நேற்றே வர நினைத்தும் என் டேஷ் போர்டில் இந்த பதிவு வராமையால் வர இயலவில்லை! மிக்க நன்றி! அருமையான பதிவர்களின் அறிமுகம் தொடரட்டும்!
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி!
ReplyDeleteசுழித்தோடும் நீர்போல சுற்றுதடி உன் நினைவு....
ReplyDeleteஅருமை...நன்றி...
அச்சுழலில் சிக்கிய அனுபவம் உண்டா நண்பரே...?!!
எனது வலைப் பூவின் சில இதழ்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...பல விதமான இடுகைகள்...அருமை...!வாழ்த்துக்கள்...!!!
ReplyDeleteவணக்கம் இரவி அவர்களே! சுழ்லில் சிக்கியவர்களைப் பார்த்த அனுபவம் உண்டு! வருகைக்கு நன்றி!
ReplyDeleteஉங்கள் படைப்புகளில் மிகவும் பிடித்தவற்றுள் சிலவற்றை மட்டும்
ReplyDeleteஅறிமுகம் செய்தேன்! தொடருங்கள் நண்பரே சிறப்பான பதிவுகளை!
சிறப்பான பகிர்வு. கதை அருமையாக இருந்தது. என்னையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு சகோ நன்றி
ReplyDelete