சப்தப்ராகாரம் - மழை
➦➠ by:
ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள்
மழை.. எத்தனை அற்புதமான விஷயம்.. மழை குறித்த கவிதைகள் நிறைய படித்திருக்கிறோம். (போட்டோ ஸ்ரீரங்கம் ஒரு மழை நாளில்)
மழை என்றதும் எனக்கு உஷாராணி அவர்களின் நினைவு வரும். மழையை ரசித்து அவர் எழுதும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆச்சர்யம்.. அந்த மழையைப் போலவே.
மழையை ஏந்திச் செல்லும் அழகி
குடைக்குள்
பதுங்கிச் செல்பவர்களுக்கு
ஊடே
மழையுடன் ஏதோ
பேசியவாறே
உள்ளங்கைகளில் மழையை ஏந்தி
புன்னகைத்துக் கொண்டே
சாலையைக் கடக்கிறாள்
அப்பைத்தியம்...
ஒரு போதும்
பகிர முடியாத
அவமானங்களையும்,
துயரங்களையும்,
தன்னில் தரித்தபடி பெருத்த சோகத்துடன்
அவளை ஏந்திப் போகிறது
அவளின் அழகு.
--- பா. உஷாராணி
மழையில் நனைவது ஒரு தனி சுகம். தற்செயலாய் கையில் குடை இல்லாமல் வரும் போது திடீர் மழையில் மாட்டிக் கொண்டால்தான் நம்மில் சிலர் நனைகிறோம்.. அப்படியும் ஒதுங்க இடம் கிடைக்குமா என்கிற பரிதவிப்பு..
சின்ன வயசில்.. எந்த பயமும் இல்லாமல்.. சொட்டச் சொட்ட நனைந்து கொண்டே வீடு திரும்பி.. அம்மாவிடம் திட்டு வாங்கிய நாட்கள்..
ஸ்ரீரெங்கநாதருக்கு (உற்சவருக்கு) குளியலே சூடு பொறுக்கிற வென்னீரில் தான். மேகம் மூட்டம் போட்டால் அன்றைய புறப்பாடு ரத்தாகி விடும். அவர் வீதியுலா கிளம்பினால் கூடவே ஒரு மூடு பல்லக்கும் போகும்.. மழை வருமோ என்கிற அச்சம் இருக்கிற நாட்களில். அவர் போர்த்திக் கொண்டு போகிற அழகே தனி.
இனி இன்றைய பதிவர்கள்...
அம்பாளடியாள் கவிதைகளில் ஒரு அழகு சந்தம் இருக்கு.. ரசனையும் ஆர்வமும் அவரது படைப்புகளில் தெரிகிறது..
திருமதி பக்கங்கள் - கோமதி அரசு அவர்களின் பயணக் கட்டுரைகள் ஒரு சுவாரசியம் என்றால் குடும்பம் சார்ந்த பதிவுகளில் என்ன ஒரு நெருக்கம்...
வேர்களைத் தேடி முனைவர் குணசீலனின் பதிவுகளில் ஆராய்ச்சி சார்ந்து
விரிவான அலசலில் சுவாரசியமும் தெளிவும் தெரிகிறது.
குட்டிப்பையா வின் இந்தப் பதிவைப் பாருங்கள்.. அந்த நூலை வாங்கத் தூண்டுகிறது அல்லவா.. என்னமோ தெரியவில்லை.. எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டார்.. கொஞ்சமாய் எழுதினாலும்.
Gee Vee இந்தப் பதிவைப் பாருங்களேன்.. மழையும் மனசும் என்னமாய் இழைகிறது ஒன்றாய்.
மதுரை சரவணன் புரட்டிப் போடுகிற கவிதைகளை அனாயசமாய் எழுதுகிறார்.
என் நடை பாதையில் ராம் அடிக்கடி எழுதாத, ஆனால் மிகவும் திறமைகளை உள்ளடக்கியவர்..
தக்குடு பெயரைப் படிக்கும்போதே கும்மாளி போடுதா மனசு.. இவரது பதிவுகளிலும் ஒரு நக்கல் இழையோடும்.
பூச்சரம் பூங்குழலி, மழை குறித்த இந்தக் கவிதையைப் படிக்கலாமா.. மொழிபெயர்ப்பிலும் இவருக்கு அலாதி ஈடுபாடு.
நிறைய பதிவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.. முன்பே சொன்னது போல இவரகளை நானும் உங்களோடு சேர்ந்து ரசிக்கிறேன்..
தொடர்வோம்..
|
|
வணக்கம்
ReplyDeleteரிஷபன்(அண்ணா)
இன்று 6வது நாளை அடைந்து விட்டிர்கள் இன்று பதியப்பட்ட தளங்கள் சிலது எனக்கு புதியவை சிலது தெரிந்தவை அனைத்தும் அருமையான பதிவுகள்
அழகாக தொகுத்து வழங்கிய (ரிஷபன்)அண்ணா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் இந்த 6 நாட்களிலும் பல பதிவுகளை பார்க கிடைத்தது பல கருத்துக்களை பெற்றோம் வாழ்த்துக்கள் அண்ணா மறு நாள் பதிவில் நல்ல பல கருத்துடன் சந்திப்போம்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteரிஷபன்(அண்ணா)
அனைத்துப் பதிவுகளையும் தொடருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை வரிகள் அருமை... அனைத்து தளங்களும் சிறப்பான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி... த.ம. இணைத்து + ஓட்டு... மின்சாரம் இருக்கும் போது மறுபடியும் வருகிறேன்... நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்..உங்கள் உதவியை மறக்க இயலாது
ReplyDeleteநன்றி ரூபன்
உஷாராணியின் கவிதை அபாரம்.
ReplyDeleteமழை நாளின் ஸ்ரீரங்கம் படத்தைத்தான் முதலில் பாராட்ட நினைத்தேன். விட்டுப் போய்விட்டது!
ReplyDeleteமழையா ?
ReplyDeleteநான் வெளிலே வரலே !! ஜலதோசம், இருமல் புடிச்சுண்டுடும்.
எங்க ஊட்டுக்கிழவிக்கு ஆஸ்துமா வேற !!
நாளைக்கு வர்ர்ரேன்.
சுப்பு தாத்தா.
ஸ்ரீரங்கத்தில மழைபெய்தால் எல்லோருமே மகிழ்ச்சி அடைவார்கள் ,இங்கு சென்னையில் மழை பெய்தால் கஷ்டம் என்னதான் இருந்தாலும் மலையில் நனைந்ததால் ஏற்பட்ட சுகமே தனி
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.. கவிதையை ரசித்ததற்கும்.
ReplyDeleteஒடம்ப பார்த்துக்கோங்கோ சுப்பு தாத்தா
நன்றி கவியாழி கண்ணதாசன்
ReplyDeleteஅறிமுகத் தொடரும் முன்னுரையும் மிகவும நன்று! விரைவில் திருவரங்கம் வருவேன்! அது போது தங்களை சந்திக்கிறேன்!
ஊட்டுக் கிழவியா !
ReplyDeleteஉங்க வூட்டுக்கு
நான் வரணுமே
வூட்ல
போட்டுக் கொடுக்க !!
சூரி சார் ...
ReplyDeleteஉங்களுக்கான பின்நஊட்டம் தான் !
ரிஷபனுக்கு
அப்புறம் போடறேன்!
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதாங்கள் அறிமுகம் செய்த பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
மழையோடு கூடிய சமூகச்சிந்தனை கருத்துக்களை ஆழமாக விதைத்த
ReplyDeleteஉஷாராணி அவர்களுக்கு எனது பாரட்டுக்கள் !
ஒவ்வொரு நாளும் அருமையாகப் போகிறது, தங்கள் மேற்பார்வையில் வலைச்சரம். மழை அருமை !
ReplyDeleteசமீபத்தில் படித்த் கவிதை ஒன்று ஞாபகம் வந்தது .
"....மழையில் நனைந்தது குழந்தை ..
ஊரே குழந்தையை திட்ட,
அம்மா திட்டினாள்,மழையை !!!...".
மழை என்றால் எனக்கும் மிகவும் பிடிக்கும் நானும் சிறு வயதில் மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தால் எங்காவது ஓரமாய் ஒதுங்கி இருந்து விட்டு மழை நின்றவுடன் வந்தால் என்ன என்று அம்மாவிடம் திட்டு விழும்.
ReplyDeleteஇப்போதும் மழையில் நனைவது பிடித்தவிஷ்யம்.
ஆனால் குழந்தைகள் நனைந்தால் உடம்புக்கு வந்து விடுமே என்று குழந்தைகளை கடிந்து கொள்ளும் தாயாகி விடுவேன்.
மழையைப் பற்றி பதிவு போட்டு இருக்கிறேன்.
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வலைச்சரத்தில் என் தளம் இடம் பெற்று இருப்பதாய் சொன்னார் அவருக்கு நன்றி.
பெரிய எழுத்தளார் நீங்கள் உங்களுக்கு என் பதிவுகளும், பகிர்வுகளும் பிடித்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது.
நன்றி ரிஷபன்.
உஷாராணி கவிதை நன்றாக இருக்கிறது.
மற்றைய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஆரண்ய நிவாஸ் ஆர், ராமமூர்த்தி அவர்கள் குறிப்பிட்ட கவிதையும் நன்றாக இருக்கிறது.
ஆறாம் நாள் வலைச்சரத்தில் இன்று நல்ல அடை மழை.
ReplyDeleteஅனைத்தும் அருமை.
அடாது பெய்யும் மழையிலும் விடாது அடையாளம் காட்டப்பட்டுள்ள அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
மழையை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளித்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.
அன்புடன்
வீ.....ஜீ
VGK
சப்தப்ராகாரம் - மழை
ReplyDeleteஸ்ரீரங்கத்தை உள்ளும் புறமும் அழைத்துச்சென்று அரங்கனை சேவிக்கவைத்து ஆச்சர்யங்களைத்தந்து….
அரிய விஷயங்களை எல்லாம் அறியவைத்து…. நீரில் நிலத்தில் நெருப்பில் ஆகாயத்தில் என்று எங்களை உலாக்கூட்டிச்சென்று இப்போது சிலுசிலுக்கும் மழையின் பனித்தூறலில் நனையவிட்டு… மழையின் அற்புத தருணங்களை உணரவைத்த நாள் இன்று….
மழை என்றால் குழந்தையில் இருந்து முதியோர்கள் வரை இஷ்டப்படாதவர் யார்? ஆமாம் மழை அற்புதமான விஷயமே...
மழையில் விவசாயிகள் மகிழ்ந்து (வயிறு நிறையும் என்பதால்) கவிஞர்கள் அகமகிழ்வதால் ( கவிதைக்கு இஷ்டமான கரு கிடைப்பதால்) கொண்டாட்டம் என்றால் அரங்கப்பெருமானும் இதில் விதிவிலக்கில்லைப்போலிருக்கு…
மழையில் மூழ்கினாலும் தன் அழகை கம்பீரமாக காண்பிக்கிறது ஸ்ரீரங்கக்கோயில்… படம்மிக அழகு ரிஷபா…
ஆனால் இப்போதெல்லாம் மழை பொழிந்தால் நனைப்பது மனிதர்களை மட்டுமா? மழையே வராமல் போக்கு காட்டுகிறது…. ஏமாற்றத்தை தருகிறது… வந்தாலோ பயிர்களை மொத்தமாக சுருட்டித்தின்றுவிட்டு திருட்டுவெண்ணை உண்ட க்ருஷ்ணனைப்போல் அழிவை தந்துவிட்டு ஓடி ஒளிந்துக்கொள்கிறது…. விவசாயிகளின் பாடு திண்டாட்டமாகிறது…
கவிஞர்கள் பாடு கொண்டாட்டமாகிறது…. குழந்தைகளுக்கோ குதூகலமாகிறது…. காதலர்களின் நிலையோ மழையின் தூறலில் நனைத்து ஜலதோஷம் பிடிக்கும் வரை காதலின் தோஷப்பிடியில் கட்டுண்டு….
இங்கே ரிஷபனின் மழையான குளிரில் குடையை உதறிவிட்டு நாங்களும் வலைச்சரத்தின் பூவானமாய் தூறும் தூறலில் அன்பு மழையில் நனைகிறோம் சந்தோஷமாக……உஷாராணியின் அழகிய மழைக்கவிதையின் நினைவுக்கூறலில்… ரசித்தேன் மழையை ஏந்திச்செல்லும் அழகியின் உணர்வுகளை….. உஷாராணியின் சிந்தனைத்துளிகள் இங்கே மழைத்துளிகளாய்எல்லோரின் மனம் நனைக்கும் வித்தியாசத்துளிகளாய்….
மழை என்றாலே சந்தோஷம் எல்லோருக்கும்…. உடை நனைத்து, உடல் நனைத்து உள்ளம் சிலிர்க்கவைக்கும் அற்புத சாகசங்கள் நடத்தும் சந்தோஷம் அல்லவா….. மழையில் நனைந்துவிடாமல் இருக்க குடைப்பிடித்து தடுக்கமுயலும்போது மழையை தவிர தன் மனதுக்கினிய சொந்தமோ நட்போ உறவோ எதுவுமில்லை என்ற ஒரே சிந்தனையில் மழையை ஏந்திச்செல்லும் தன் சுயநினைவை இழந்தப்பையித்தியம்…. பயித்தியமோ முடமோ செவிடோ முட்டாளோ ஆனால் அது பெண்ணாயிற்றே.. விட்டுவைக்குமா காமப்பசியோடு சுற்றி வரும் கழுகுகளிடம் இருந்து தன்னையோ தன் அழகையோ தன் உடலையோ காப்பாற்றிக்கொள்ள தெரியாது எல்லாம் இழந்து…. அந்தப்பெண்ணின் எல்லா இழப்புகளுக்கு மௌன சாட்சியாக கண்ணீர் துளிகளாக மழையை சித்தரித்து மழையை பயித்தியம் கையில் ஏந்த அவளின் அவமானங்களையும் இழப்புகளையும் அவள் அழகு ஏந்திட ஆஹா அழகிய பொருள்செறிவுள்ள கவிதை எழுதிய உஷாராணிக்கு ஹாட்ஸ் ஆஃப்… அதை வாசிக்க பகிர்ந்தமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள் ரிஷபா….
This comment has been removed by the author.
ReplyDeleteஉங்களின் அறிமுகப் பதிவுகளுக்கு நன்றி.உஷாராணி அவர்களின் கவிதை மழையை போலவே மனதை நனைத்தது.
ReplyDeleteஅடை மழையில் அடர் சாரலில் நாங்கள் இம்முறை விடுமுறைக்கு போனபோது கோவாவில் மாட்டிக்கொண்ட திகில் நினைவு வருகிறதுப்பா…. அடேங்கப்பா என்ன ஒரு மழை…. தப்பிக்கவோ தடுக்கவோ எங்கேயாவது நிற்கவோ இடமில்லாது நன்றாக மாட்டிக்கொண்டு முழுக்க நனைந்து மழைக்கு முழுதாய் எங்களை ஒப்படைத்த தினம் மிக பயங்கரம்… அப்படி ஒரு மழையை நான் இதுவரை பார்த்ததும் இல்லை… பனித்தூறலை பார்த்திருக்கிறேன். அன்று பார்த்த மழையோ… மழையே பிடிக்காதவர்களுக்கு கூட மழையை பிடித்துவிடும் ரிஷபனைன் ரசனையான இந்த பகிர்வினால்…
ReplyDeleteஅட சின்னவயதில் மழையில் சொட்ட சொட்ட நனைந்துக்கொண்டே வீட்டுக்குப்போய் அம்மாக்கிட்ட திட்டும் ஜலதோஷத்துக்கு கஷாயமும் கிடைச்சிருக்குமேப்பா உங்களுக்கு… அதை சொல்லாம விட்டுட்டீங்களேப்பா..
அட அரங்கனுக்கு குளிர் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரில் அபிஷேகமாப்பா… எங்க வீட்டிலும் குளிர்க்காலத்தில் விக்ரஹங்களுக்கெல்லாம் வெதுவெதுப்பான நீரில் தான் அபிஷேகம்… அட மூடு பல்லக்கு…. அரங்கன் நனைந்துவிடாமல் இருக்க அற்புதம் அற்புதம்….போர்த்திக்கொண்டு போகும் அழகே தனி.. படிக்கும்போதே எங்களுக்கும் அரங்கனை மனக்கண்ணில் தரிசிக்கும் வாய்ப்பு ரிஷபன் உங்கள் வரிகளால்…
அட அட இன்றைய அறிமுகப்பதிவாளார்களில் என் மனதுக்கு பிடித்தவரும் உள்ளனரே…
அம்பாளடியாள் : தைரியம், நிமிர்ந்த நேர்ப்பார்வை மனதினில் வற்றாத அன்பு, கவிதையிலோ தீட்சண்யச்சுடர்… பாடல் வரிகளாக அமைக்கும் சிறப்பு… உரிமையுடன் அக்கா என்று என் தோள் சாயும் அன்புத்தங்கை அம்பாளடியாள்… மறக்கவேமுடியாது இந்த அன்புக்குழந்தையை…
வேர்களைத்தேடி குணசீலன்: இவரின் எழுத்துகள் சமூக சீர்கேடுகளை தைரியத்துடன் உரைத்து அதற்கு தீர்வும் கொடுக்கும் அசாத்திய எழுத்து. மரபுக்கவிதைகளில் அசத்துவார்... சிந்தனைகளை எழுத்தாக்கி நம்மையும் யோசிக்கவைப்பார்... என்ன செய்யலாம் என்று நம் பங்கு அதில் எத்தனை என்பதையும் புரியவைப்பார்..
கோமதி அரசு : அட அற்புதமான நம் குடும்பத்தில் ஒருவர் போல இவர் எழுத்துகளில் இருக்கும் வாஞ்சையை நான் உணர்ந்து மகிழ்ந்திருக்கிறேன்… இவர் தளத்தை அறிமுகப்படுத்த நினைத்து சென்று பார்த்தபோது பேபி அக்காவைப்பற்றிய மிக அற்புதமான பதிவு ஒன்று பகிர்ந்திருந்தார்கள்…வாசிப்போரின் மனதிலும் நிலைத்து நிற்கும் எழுத்துகள் இவருடையவை..
தக்குடு : அன்பாய் இருக்க நட்பாகவோ உறவாகவோ இருக்க அவசியமில்லை அன்பாய் இருந்தாலே போதுமானது என்று சொல்லவைத்த மிக அருமையான குணம் பெற்ற தம்பி.. இவரின் எழுத்துகள் ரசனையானவை…. ரசிக்கவைத்தவை… எப்படி இருக்கீங்கப்பா என்று நாம் கேட்டால் அந்த அன்பை துளி கூட குறைக்காது அன்பை பகிரும் உத்தமமான தம்பி….
நான் அறியாத பதிவர்களின் தளங்கள் சென்று பார்க்கவேண்டும்…
மழையில் நனையவைத்து ஜலதோஷம் பிடிக்காமல் ரசிக்கவைத்து அரங்கனின் இருப்பிடத்தையும் மழையில் நனையவைத்து பதிவர்களையும் அசத்தலாக ரசனையுடன் அறிமுகப்படுத்தியமைக்கும் அன்பு நன்றிகள்பா ரிஷபா….
அசத்தல் அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா…
மழையாய் வர்ஷித்த் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஅன்பர்களின் கருத்து மழையில் நனைந்தேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteஆஹா!
ReplyDeleteதிரு.ரிஷபன் சாரின் மழை மதியம் சற்றே ஓய்ந்து போனது என்று நினைத்து நான் பகல் 1.30 சுமாருக்குத்தான் எட்டிப்பார்த்தேன்.
மீண்டும் மஞ்சுவின் மழை ஆரம்பித்து விட்டதே!
மழை என்றால் இதுவல்லவோ மழை!!
மிகவும் பலத்த மழை!!!
இடியுடன் கூடிய மழை.
பின்னூட்ட மழை.
இது இன்றும் நாளையும் நிச்சயமாகத் தொடர்ந்து பெய்யத்தான் போகிறது. ;)
நாளை இரவு தான் மழையும் புயலும் கரையைக்கடக்கும் என நான் நினைக்கிறேன்.
ஆண்டவா! எங்கள் எல்லோரையும்
கா ப் பா த் து டா ப் பா!
VGK
ஐயோ ஏன் அண்ணா இப்படி?
ReplyDelete"நினைத்தவுடன்
ReplyDeleteமழையை தருவித்து விடுகிறார்கள்
குழந்தைகள்
விரித்த குடையின் மேல்
செம்புத் தண்ணீரை ஊற்றி
மழை மழையென
குதூகலமாய் குடை சுழற்ற
சுழித்துப் பெருகி
சீறத் தொடங்கி விட்டது என் வைகை."
இதுவும் நம் உஷாவின் கவிதைதான்! மழையும் உஷாவும் வேறு வேறல்ல அல்லவா நமக்கு!
ஒவ்வொரு பிரகாரமும் நேர்த்தியாய் நட்பு மணம் கமழ கமழ... பிரமாதம்!
மழையில்லாமலே இன்று வலைச்சரம் வர முடியாது போய்விட்டது காலையில்.
ReplyDeleteஇரவு21.47க்கே பர்க்கிறேன்.
அறிமுக பதிவர்களிற்கு வாழ்த்துகள்.
மழைப்பதிவு நன்றாக உள்ளது. இனிய வாழ்த்து.
அன்புடன் வேதா. இலங்காதிலகம்.
மஞ்சுபாஷிணி, உங்கள் அன்பு மழையில் நனைந்தேன்.
ReplyDeleteநன்றி.
மழையை பற்றிய உங்கள் பின்னூட்டங்களை ஒரு பதிவாகவே போடலாம்.
வாழ்த்துக்கள்.
மழை எல்லோருக்கும் பிடித்தமானது. கோவில் முன் வெள்ளமாய் மழை அழகு. பகிர்ந்த கவிதைக்கும் சிறந்த பதிவர்களின் தொகுப்புக்கும் நன்றி.
ReplyDeleteமழை பிடித்தமான விஷயம். எவ்வளவோ நாட்கள் ம்ழையில் நனைந்து வந்து வீட்டில் திட்டு வாங்கியிருகிறேன்....
ReplyDeleteஸ்ரீரங்கத்தில் மழைப் படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்...உஷாராணி வர்களின் கவிதை அருமை.
அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஸ்ரீரங்கத்து மழைநீருடன் பொழுது ஆரம்பித்திருக்கின்றது. படம் அருமை.
ReplyDeleteகவிதை அருமை.
அனைத்து தளங்களும் சிறப்பானவை.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
வலைச்சரத்தில் அறிமுகம் செய்த ரிஷபன் சாருக்கும் அதை வந்து சொன்ன அன்பான நண்பர் திண்டுக்கல் தனபாலன் சாருக்கும் நன்றி! :)
ReplyDeleteஅறிமுகத்திற்கு நன்றி ரிஷபன் ----மழை சிலருக்கு இன்றியமையாததாகவும் சிலருக்கு இடராகவும் சிலருக்கு மகிழ்வாகவும் சிலருக்கு தொந்தரவாகவும் இருக்கிறது ..ஒரே மழை எல்லோர் மனதையும் ஏதோ செய்து செல்கிறது ....
ReplyDeleteஎன் மனதிற்கு பிடித்த மழையால் கிடைத்த இந்த அறிமுகம் அழகானது நன்றி
thanks ,....
ReplyDeleteமழைக்கவிதைகளும் அருமை. ஸ்ரீரங்கத்து மழைப்படமும் அருமை.
ReplyDeleteகோமதி அரசையும், தக்குடுவையும் தவிர மற்றவர்கள் புதியவர்கள். எப்படி உங்களால் எல்லாம் இவ்வளவு பதிவுகளைப் படிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் இன்னமும் போகவில்லை.
மஞ்சுபாஷிணியின் பின்னூட்ட மழை தூறலோடு நின்றுவிட்டதே??? :((((
உடல்நலம் சற்று சரியில்லாமல் போனதால் அப்படி ஆகிவிட்டதுப்பா கீதா.... இன்னும் தேறலை உடல்நலம்... தேறிவிடும் என்ற நம்பிக்கையில் நானும்... :)
ReplyDeleteவிரைவில் உடல்நலம் பெறப் பிரார்த்திக்கிறேன், மஞ்சுபாஷிணி.:(
ReplyDelete// Geetha Sambasivam said...
ReplyDeleteவிரைவில் உடல்நலம் பெறப் பிரார்த்திக்கிறேன், மஞ்சுபாஷிணி.:(//
கண்ணனைப்பற்றிய மிக அற்புதமான பகிர்வொன்றை இன்று படித்தேன் கீதா உங்க தளத்தில்.. உடனே எனக்கு உங்களை பார்க்கவேண்டும் உங்களிடம் பேசவேண்டும் போல் இருந்ததுப்பா...
இந்த அன்பைப்பெற கூட எத்தனை கருணை வேண்டும் இறைவனிடத்து....
அன்பு உள்ளம் கொண்ட உங்க பிரார்த்தனைக்கு என் மனம் நிறைந்த அன்பையே தான் திருப்பி தர இயலும்பா.. நன்றி சொல்ல இயலவில்லை...
முடிந்தால் என் மெயிலுக்கு உங்க தொலைபேசி எண் அனுப்புங்கோப்பா கீதா...
ReplyDeleteமஞ்சுபாஷிணி, உங்க மெயில் ஐடி எடுக்க முடியலை. என்னோட ஐடிக்கு மெயிலுங்க. இந்த எண்ணங்கள் பக்கத்திலேயே கிடைக்கும். :)))) உங்க ஐடி ட்ரை பண்ணினா ஏதோ எரர் வருது. :)
ReplyDeleteThere was an error in this gadget :))))