காரஞ்சன் ( சேஷ் ) உஷா அன்பரசு வேலூரிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறார்
➦➠ by:
* அறிமுகம்
காரஞ்சன் ( சேஷ் ) - உஷா அன்பரசு வேலூரிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறார்.
நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற காரஞ்சன் ( சேஷ் ) என்ற சேஷாத்ரி தான் ஏற்ற பொறுப்பினை சரிவர நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
அவர் இட்ட பதிவுகள் : 7
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 38
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 70 ( சுய அறிமுகப் பதிவுகள் உள்ளிட்ட)
பெற்ற மறுமொழிகள் : 281
நண்பர் ஈ.சீ.சேஷாத்ரி [ E S SESHADRI ] அவர்களை வாழ்த்தி விடை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் உஷா அன்பரசு அவர்கள்.
உஷா அன்பரசு நிறைய புத்தகங்களை படிக்க மாட்டார். ஏனெனில், அவர் எழுத்தில் எவர் சாயலும் குளிர்காயக் கூடாது என்று நினைப்பவர்.பிறரிடம் தன்னை எப்பொழுதும் புத்திசாலியாய் காட்டிக் கொள்ள மாட்டார். ஏன் தெரியுமா? அப்போது தான் மற்றவர்களிடமிருந்து சில விஷயங்களை நம் மனதில் ஏற்றிக்கொள்ள முடியும் என்று சொல்வார்.பெரியாரை ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.அவர் ஒரு தனிமை விரும்பி, அதே சமயம், நல்ல நட்பாக பேசுபவர்.எப்பொழுதும் நடுநிலைமையாக தான் பேசுவார். சந்தர்ப்பத்தில் கொஞ்சம் கடுமையாகவும் பேசுவதுமுண்டு.அலுவலகப் பணிகளுக்கிடையையேயும் குடும்பப் பொறுப்புகளுக்கிடையேயும் கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றில் எழுதும் ஆர்வம் அதிகம். பாக்யா, தினமலர்-பெண்கள் மலர், வாரமலர்,தேவதை, ராணி வார இதழ், கல்கி, தினத்தந்தி- குடும்பமலர் இவைகளில் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கிறது.
வேலூரினைச் சார்ந்த உஷா அன்பரசினை வருக வருக ! அறிமுகங்களை அள்ளீத் தருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் காரஞ்சன் ( சேஷ் )
நல்வாழ்த்துகள் உஷா அன்பரசு வேலூர்
நட்புடன் சீனா
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteபாராட்டுகள் அன்புச்சகோதரர் சேஷாத்ரி அவர்கட்கு...
ReplyDeleteபதிவுகள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள் அன்புச்சகோதரி உஷா அன்பரசு அவர்கட்கு...
வாருங்கள் வந்து அனைவருக்கும் நல் ஆதரவு தாருங்கள் புதியவர்களை காணுங்கள்
ReplyDeleteபுத்துணர்ச்சி யாகுங்கள்
ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆஹா!
ReplyDeleteஇந்த வார வலைச்சர ஆசிரியர்
திருமதி உஷா அன்பரசு அவர்களா?
அடடா!
எனக்கு இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!
வாங்கோ! வாங்கோ!! வாங்கோ!!!
திருமதி உஷா அன்பரசு அவர்களே !!!!
>>>>>>>>>
தினமலர் ”பெண்கள் மலர்”
ReplyDeleteமா தவம் செய்து பெற்றெடுத்த
எழுத்துலக சாதனைப்பெண்மணி
திருமதி உஷா அன்பரசு அவர்களே!
வருக! வருக!! வருக!!!
நாளை முதல் நல்ல நல்ல
பதிவுகளுககான அறிமுகம்
என்ற ஜூஸினைப் பிழிந்து ..
தருக! தருக!! தருக!!!
ஆவலுடன் காத்திருக்கிறோம்
அவற்றை நாங்கள் ..
பருக! பருக!! பருக!!!
பிரியமுள்ள்,
VGK
>>>>>>>>>>>
மிகச்சிறந்ததோர்
ReplyDeleteஎழுத்தாளரையும்
நல்லதோர்
பதிவரையும்
இந்த வார வலைச்சர
ஆசிரியராக்கி..............
நாளை முதல்
நாடறியச் செய்துள்ள
என் அருமை நண்பரும்
ஆருயிர்த் தோழரும்
வலைச்சர
தலைமை ஆசிரியருமான
அன்பின் திரு. சீனா ஐயா
அவர்களுக்கு என் மனமார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
நன்றியோ நன்றிகள், ஐயா.
பிரியமுள்ள,
VGK
சென்ற வாரம் வலைச்சர ஆசிரியராகப்
ReplyDeleteமிகச்சிறப்பாகப் பணியாற்றி, நேற்றுடன் நம்மைவிட்டுப்
பிரியாவிடை பெற்றுச்செல்லும்
என் அருமை நண்பர்
நம் அன்புக்குரிய திரு. E S சேஷாத்ரி
அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள்.
பாராட்டுக்கள். மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன் தங்கள்,
VGK
நல்வாழ்த்துகள் காரஞ்சன் ( சேஷ் )
ReplyDeleteநல்வாழ்த்துகள் உஷா அன்பரசு வேலூர்
உஷா அன்பரசு அவர்களை வரவேற்கிறோம்
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன்said...
ReplyDeleteசென்ற வாரம் வலைச்சர ஆசிரியராகப்
மிகச்சிறப்பாகப் பணியாற்றி, நேற்றுடன் நம்மைவிட்டுப்
பிரியாவிடை பெற்றுச்செல்லும்
என் அருமை நண்பர்
நம் அன்புக்குரிய திரு. E S சேஷாத்ரி
அவர்களுக்கு என் நல்வாழ்த்துகள்.
பாராட்டுக்கள். மனமார்ந்த நன்றிகள்.//
மிக்க நன்றி ஐயா!
வாங்க சகோதரி வாழ்த்துகள்..
ReplyDeleteஅனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!
ReplyDelete