07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 25, 2012

வகுப்பு- இரண்டாம் நாள்

வகுப்பு-2 பாடம்-1

அனைவர்க்கும் காலை வணக்கம்! இன்று இடும் பதிவு வலைச்சரத்தின் 2500 வது பதிவு என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

இன்றைய சிந்தனை:


பள்ளி மாணவிகள் சிலரை ஒரு முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்றேன்.ஒவ்வொரு மாணவிகளிடம் 10 கேள்விகள் அடங்கிய தாளை கொடுத்து அங்குள்ள முதியோர்களிடம் அக்கேள்விகளுக்கான பதிலை கேட்டு எழுதுங்கள் என்றேன்.அங்குள்ள முதியோர்கள் பெயர், ஊர், எந்த சூழ் நிலையில் வந்தார்கள், மீண்டும் பிள்ளைகள் அழைத்தால் வீட்டிற்கு செல்ல விருப்பமா?  உங்களுக்கு தேவை பணமா, பாசமா?, திடீரென்று நிறைய பணம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்?  இங்கு பிடித்திருக்கிறதா என்பன போன்ற கேள்விகள்.எல்லோரையும் தமிழில்தான் எழுத வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.அம்மாணவிகளுள் ஒரே ஒரு மாணவி மட்டும் தமிழில் எந்த பிழையும் இல்லாமல் எழுதி இருந்தார்.மற்றவர்கள் எல்லாம் என்னவென்று படிக்க முடியாத படி தமிழ் எழுத்துக்களை தப்பு தப்பாய் எழுதி வைத்திருந்தார்கள்.இத்தனைக்கும் 7, 8 & 9 வகுப்பு மாணவிகள்.காரணம் நாம் தமிழ் படிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.எல்லா பாடங்களிலும் நூற்றுக்கு குறையாமல் வாங்க வேண்டும்.தமிழில் மட்டும் பாஸ் மார்க் வாங்கினால் போதும் என்று நினைக்கும் பெற்றோர்கள்தான் இங்கு அதிகம்.தாய்மொழியையே தவறு இல்லாமல் எழுத பழக தெரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. இதில் நிறைய பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு மொழிப் பாடமாக இந்தி, பிரெஞ்சு போன்ற அந்நிய மொழிகளைகளையே விரும்புகின்றனர்.  தமிழ் நாட்டில் சில பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் கூட போடுகிறார்கள்.காரணம் அவங்க பள்ளியில் படிக்கிற பிள்ளைங்க ஸ்போக்கன் லாங்குவேஜ் நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்லனுமாம்.அது சரி தமிழ் ஒரு லாங்குவேஜ் ஆக தெரியலையா?குயில்  கூக்குவென்று கூவுமே தவிர ஒரு நாளும் மயில் போல் அகவுவதில்லை. காகம் கரைவதை  விட்டு குயிலின் பாஷை தேடுவதில்லை மனிதன் மட்டும் தாய்மொழியை விட்டு வேறு மொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறான்?”-என்று தமிழ் மொழி பற்றுள்ள என் தோழி ஒருவர் என்னிடம் கோபப்பட்டார். மனிதனால் எத்தனை மொழிகள்  வேண்டுமானால் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ளட்டும்.மொழிப்பற்று என்று மற்ற மொழிகளை கற்காமல் அறிவை சுருக்கி கொள்வதை   நான் மொழிப்பற்றாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பரந்து விரிந்த உலகத்தின் எந்த மூலைக்கும் மனிதன் செல்லும்படியான கால கட்டத்தில்  வாழ்க்கை தொடர்புக்கு அந்தந்த மொழிகள் பற்றி தெரிந்திருக்க அவசியமாக இருக்கிறது. கற்றுக்கொள்ளட்டும்.அத்தனையும் கற்று கொண்டு தமிழ் மொழியில் பேசுவதை குறைவாகவோ, தாழ்வாகவோ நினைப்பவர்களைதான்  நான் மொழிப் பற்றில்லாதவர்களாக சொல்கிறேன். முன்பெல்லாம் அத்தை, சித்தி, பெரியம்மா, மாமி என்று பெண்களையும், மாமா, சித்தப்பா,பெரியப்பா.. என்று ஆண்களையும் உறவு முறைகள் சொல்லி நிறைய வார்த்தைகள்.இன்று பெண் உறவுமுறைகள் மொத்தமும் ஒரே வார்த்தையில் ஆன்ட்டி,ஆண் உறவு முறைகள் ஒரு வார்த்தையில் அங்கிள்இப்படி ஆகிவிட்டது.முன்பிருந்த அந்த உறவு முறைகளுக்கான அர்த்தங்கள் நம் குழந்தைகளுக்கு வருங்காலத்தில் தெரிய போவதில்லை.தாய்மொழி தமிழை புறக்கணிப்பது நம் தாயையே புறக்கணிப்பது போல்.  தமிழில்  பேச , எழுத பிழையின்றி  நம் பிள்ளைகளுக்கு கற்று கொடுப்போம்.!
          முதியோர் இல்லத்திற்கு  பிள்ளைகளை அழைத்து சென்றது பிற்காலங்களில் அவர்கள் பெற்றோர்களை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணம் வளர வேண்டும் என்ற காரணத்திற்காகதான்.  நாங்கள் சென்ற முதியோர் இல்லத்தில் இருந்த யாருமே தானாக வரவில்லை.பிள்ளைகளால் கைவிடப்பட்டு, மருமகள்களால் உதாசீனப்படுத்தப்பட்டு வந்தவர்கள்தாம்.அவர்கள் யாரும் மீண்டும் பிள்ளைகள் அழைத்தால் கூட செல்ல விருப்பமில்லை என்று சொன்னார்கள்.அவர்களுக்கு நிறைய பணம் கிடைத்தால் முதியோர் இல்லங்களை கட்டுவார்களாம். நான் அவர்களிடம் சொன்னேன், “ வேண்டாம்மா  இன்னும் முதியோர் இல்லங்கள் வளரனும்னு நினைக்காதீங்க.. வாழ்க்கை பாடத்தையும் சொல்லித்தர பள்ளிகளை உருவாக்கி நல்ல பிள்ளைகள் வளரனும்னு  நினைச்சு பாருங்க..” என்றேன். தேவைகள் இருக்கும் வரைதான் அப்பா, அம்மா உறவுகள்..!  பிறகு வேண்டாத ஒரு பொருளாய்த்தான் பிள்ளைகள் நினைக்கும் அளவிற்குதான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.நாளை நமக்கும் அப்படி ஒரு காலம் வரலாம்.
   **********************************************************************

   நானும் ... நீயும் ...!

வா.. வா.. மெல்லடா செல்லம் ..
கால் முளைத்த உனக்கு
கை பிடித்து .. நடை பழக்கினேன் ..
சளைக்காமல்..!
காலங்கள் ஓடியதில் ..
கால் தடுமாறும் எனக்கு
உன் தோள் தர அவகாசமில்லை ..
மூன்றாவது காலாய் .. கைத்தடியை
தந்துவிட்டு
பார்த்து போய் தொலை ..
வயசானா.. ஒரு எடமா ..
முடங்கி கிடக்கனும் - நீ
சலித்து கொண்டதில் தடியும் கூட தடுக்குது ..! 
மொழி பேசாத -
உன் ஒற்றை வார்த்தைக்காக
காது கொடுத்து
நாளெல்லாம் பேசி பார்த்தேன்..
இந்த கிழத்தோடு கத்த முடியலை ..
செவிட்டு காதும் கூட
உன் நொடிப்பில் வலித்தது..
இது நிலா..அது நட்சத்ரம் ..
திரும்ப திரும்ப சொல்லி தந்தேன் ..
உனக்கு -
இதெல்லாம் தெரியாது
ஆவலோடு எட்டி பார்த்ததும்
அவசரமாய் லேப்- டாப்பை
மூடி கொண்ட பரிகாசத்தில்
முட்டாளாய் தவிக்கிறேன்..!
என் தேவை எதுவுமில்லை
எல்லாமாய்
உனக்கு இருந்தேன்..
உனக்கு
தேவையில்லா மொத்தத்திற்கும்

நானாய் இருக்கிறேன்.. !
*********************************

    இனி இவர்களின் சுவாரஸ்யமான பதிவுகளை பார்ப்போமா?
            
    
1) இராஜராஜேஸ்வரி
      
      வலைத்தளம்: “மணிராஜ்தினம் ஒரு பதிவுக்குக் குறையாமல்
மிகச்சிறந்த படங்களுடன் ஆன்மிக விஷயங்களை அள்ளித்தரும் பதிவர் 705 நாட்களுக்குள் 768 பதிவுகளுக்கு மேல் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.


      இவரின் பெரும்பாலான பதிவுகளில்  நம் பதிவுலகின் பின்னூட்டப்புயலான வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் ஏராளமான கருத்துக்களை தாராளமாகக் காணமுடிகிறது.  ஏற்கனவே தங்கமாக ஜொலிக்கும் இந்தப் பதிவரின் பதிவுகள்,   வை.கோ ஐயாவின்  பல்வேறு கருத்துக்களால் வைரமாக ஜொலிக்கின்றன என்று சொன்னால் மிகையாகாது.
      அன்பென்ற மழையிலே

      கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்


2) தூரிகையின் தூறல் மதுமதி அவர்களை பற்றி உங்க எல்லாருக்குமே தெரியும் அவர் கவிதைகள் அனைத்துமே எனக்கு பிடிக்கும்.

வேட்கை வேகம் எடுக்கிறது

வேற்றுகிரகவாசிகள்

 பதிவர் சந்திப்பு காணொளி புகைப்படங்கள் போன்றவற்றை ஒரே இடத்தில் பார்க்கும் வண்ணம் http://chennaibloggersmeet2012.blogspot.in
என்ற வலைதளம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.பார்வையிடுங்கள்
 3)  பவித்ரா நந்தகுமார் 
     
        என் தோழியும், பல்வேறு பத்திரிக்கைகளில் எழுதி வரும் பவித்ராவின் பக்கங்கள் எப்படி இருக்கிறது படித்து பார்த்து சொல்லுங்கள்.

       பெண் என்பவள்.....

       செவிடன் மனைவி
    

   4)   ரிஷபன்
         
  இவருக்கு அறிமுகமே தேவையில்லை. இவரை அறியாத பதிவர்களே யாரும் இருக்க முடியாது.
பொதுவாக நாம் படைப்புகளைத்தான் உருவாக்குவோம். ஆனால் திரு ரிஷபன் அவர்கள்  தன் பல படைப்புகளுடன் மட்டுமல்லாமல், பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளவர்"என தனது பதிவு ஒன்றில் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா, இவரை மிகவும் பாராட்டிப்பேசியுள்ளார். இவரின் ஒரு சில பதிவு

              கூட்டுக்குள் ஒரு வெண்புறா
              சூர்யா 
                            


 5) ஜெயந்தி ரமணி
    இவரின் கதை, கவிதை மணம் வீசி மனம் கவர்ந்தது.
அன்னை நான் அழலாமா?
முதல் பரிசு

 6) டி.என்.முரளிதரன்
           இவரை பற்றி உங்க எல்லோருக்குமே தெரியும். புஷ்பா மாமியின் புலம்பல்கள் என்று சமூக சிந்தனைகளை சுவாரஸ்யமாக சொல்வார்.
.( வடிவேலு கழுதை வாங்கின கதை  நினைக்கும் போதே சிரிப்பாக வரும்)
பளளி நாட்கள்லயே அவர் எப்படி கலக்கி இருக்கிறார் பாருங்க.

அஞ்சிலே ஒன்றை வைத்தான்! அஞ்சிலே ஒன்றை விட்டான்!

பாரதிக்கு சகோதரர் நினைவு கூர்ந்தது.. படிக்காமல் விட்டவர்கள் கவனத்திற்காக.!
மகாகவி பாரதி நிலையாய் நிற்பவன்

 7)  மஞ்சுபாஷிணி
தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவரின் பதிவுகள்
“கதம்ப உணர்வுகள்”.


8)காமாக்ஷி
 சொல்லுகிறேன்

இவருக்கு வயது 78.  இந்த வயதினிலும் மிக ஆர்வமாக எழுதிவருவது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது.(அவரை பற்றி அவர் பதிவில் படியுங்கள் நிச்சயமாய் நீங்களும் அவரை பாராட்டுவீர்கள்
எப்படியிருக்கு.?

மீனா மாமியா பாட்டியா?

9) கவியாழி கண்ணதாசன்

இவரின் கவிதைகள் யாவுமே நேர்த்தியாய் இருக்கும்.

நீ மனிதனாய் யோசி

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு


10) மறக்க முடியாத நினைவுகள்
 என்று சொல்லும் கவிப்ரியன்
கடிதங்களை சுவாரஸ்யமாக திரைக்கதைப் போல் நகர்த்துகிறார்.
வரதட்சனை - எப்போது ஆரம்பித்தது இந்தப் பழக்கம்?

போர்க்களமான வீடு! 

 
மீண்டும் நாளைய வகுப்பில் பார்ப்போம்!

46 comments:

 1. ஜெயந்தி ரமணி நான் அறியாத தளம். உடன் பார்க்கிறேன். மற்ற அனைவரும் என் நண்பர்களே என்பதில் தனி மகிழ்ச்சி எனக்கு. அருமையான உங்களின் அறிமுகங்கள் தொரட்டும். அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்ள்.

  ReplyDelete
 2. என்ன உருக்கமான கவிதை! நானும்நீயும்.
  நன்றி சகோதரி! என் பதிவுகளையும் குறிப்பிட்டதற்கு. உங்கள் ரசனை உயர் தரமானது. நீங்கள் ரசித்துப் பகிர்ந்த அத்தனை பதிவுகளும் அருமை. தொடர்க!

  ReplyDelete
 3. இரண்டாவது நாளும் முதலில் மின்னலாய் வந்துவிட்டீர்கள்! வகுப்பிற்கு சரியான நேரத்துக்கு வந்து விடும் உங்களை பங்க்சுவாலிட்டி பால கணேஷ் சார் என்று அழைக்கலாமா? மிக்க நன்றி சார்! தொடர்ந்து வருகை தாருங்கள்!

  ReplyDelete
 4. முரளிதரன் சார் மிக்க நன்றி! உங்கள் உதவியை என்றும் மறக்க முடியாது.

  ReplyDelete
 5. முதியோர் இருக்கும்
  இல்லங்கள் பெருகட்டும்
  முதியோர் இல்லங்கள்
  பெருகாமலிருக்க! என்று ஒரு கவிதை எழுதினேன்!
  உங்கள் கவிதை அருமை! தாய்மொழி குறித்து, என்னுடைய பாரதியைப் பற்றிய கவிதையில் இப்படி முடித்திருந்தேன்!
  தமிழகத் தமிழர்
  நாவினில் தமிழே
  இல்லிலும் மதலையர்
  சொல்லிலும் தமிழே
  இன்றிலை- ஆதலால்
  என் செய்குவை
  என் தேசியக் கவியே?//
  தங்களின் அருமையான படைப்பிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 6. மின்னலோட மேகமும் சேர்ந்ததுபோல உங்களோட கட்டுரை,கவிதையோட உங்களின் விமர்சனமும் சேர்ந்து ராஜராஜேஸ்வரி,மதுமதி,மஞ்சுபாஷினி,ரிஷபன்,முரளிதரன்,பவித்ரா,ஜெயந்தி, போன்றோருடன் சேர்ந்து நானும் மழையாகப் பெய்கிறோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 7. காரஞ்சன்(சேஷ்),கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு மிக்க நன்றி! தொடர்ந்து கருத்து கூறுங்கள்!

  ReplyDelete
 8. பின்னூட்டப்புயலா ? நானா ?

  ஆஹா ! புதியதோர் பட்டமா?

  எனக்கே எனக்கா ? நன்றிகள்.

  ஆனால்

  பு ய ல் ஒருவழியாக ஓய்ந்து,

  புயலுக்குப்பின் அமைதி

  நிலவுகிறது ...... இப்போது.

  >>>>>>>>>>

  ReplyDelete
 9. தங்கம் + வைரம் என்றெல்லாம்
  ஏதேதோ எழுதி என் நினைவலைகளையும்
  கிளறிவிட்டுள்ளதோடு, தங்கள் எழுத்துக்களை
  இந்தப்பதிவினில் ஜொலிக்க
  வைத்துக்கொண்டுள்ளீர்கள்.

  அவற்றையெல்லாம் நெருங்கும்
  நிலையில் நான் இன்று இல்லை.

  அதாவது இன்று தங்கம் விற்கும் விலையில் அவற்றை நெருங்கும் நிலையில் நான் இல்லை என்று தான் சொல்கிறேன்.

  நான் சாதாரணமானவன் தானே !

  தங்கத்தை நான் விரும்பினாலும்
  இன்று தங்கம் என்னை விரும்பவில்லை.

  அது எட்டாக்க[ன்]னி ஆகிவிட்டது.
  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_07.html


  >>>>>>>>

  ReplyDelete
 10. தங்கத்தை நான் மிகச்சுலபமாக நெருங்க்கூடிய வசதிவாய்ப்புகள் இருந்த காலக்கட்டத்திலேயே,
  தேடித்தேடி ஓடிஓடிப்போய் நிறைய வாங்கி சேகரித்தும் விட்டேன்.

  அதுவே .... அந்த சந்தோஷமே எனக்கு என் ஆயுஷுக்கும் போதும்.

  அவை அழியாமல், அழிக்கப்படாமல்,
  திருட்டுப்போகாமல் இருந்தாலே
  எனக்கு மிகவும் மகிழ்ச்சி தான்.

  இதுவரை 300 கிலோவுக்கு மேல் நான் தங்கம் வாங்கியாச்சு.

  [ 300 பதிவுகளுக்கு மேல் நானும் கொடுத்தாச்சு ]

  அதுபோல இரட்டிப்பாக 600 கிலோவுக்கு மேல் வைரத்தை நானும் வாரி வழங்கியாச்சு.

  இதற்கு மேல் தங்கத்தை நான் சேகரித்தால் என் லாக்கரில் அவற்றை பத்திரப்படுத்தி பாதுகாக்கவும் இடம் இல்லை.

  அதற்கான ப்ராப்தங்களும் எனக்கு இல்லை.

  இதுவரை நான் சேகரித்துச் சேர்த்துள்ளதே பல கோடி ரூபாய்
  மதிப்புப் பெறும்.

  அதன் மிகப்பெரும் மதிப்பும் இரகசியமும் என்னால் மட்டுமே இன்றும் மனதினால் உணர முடியும்.

  >>>>>>>

  ReplyDelete
 11. மற்றவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வள்ளல் வை.கோ சார்! புயல் அமைதியாகிவிட்டதா? இல்லை சார் உங்க எழுத்து ஓய்வில்லாத அலை!விலையில்லா தங்கமான மனசுக்கு விலையுள்ள தங்கம் ஈடாகாது. தங்கத்தை விட உயர்ந்தது நல்லோர் மனமே! மிக்க நன்றி!

  ReplyDelete
 12. மேலும், “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” அல்லவா!

  போதும் போதும் என்ற மனநிலைக்கும் நான் என்றோ வந்து விட்டேன்.

  மிகத்தரமான, தங்கமான, தங்க மனஸுக்காரர்கள் தரணியில் எங்கிருந்தாலும்
  வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
  என என் மனதார வாழ்த்தி மகிழ்கிறேன். ;)

  படைப்பாளிக்கு அவ்வப்போது தங்க மெடல் / தங்க நெக்லஸ்
  போன்ற பரிசுகள் கிடைப்பது போல, ஒருவேளை தங்கமே என்னை நாடி வந்தால் தட்டாமல் அதனை அன்புடன்
  ஏற்றுக்கொள்வேன்;

  போற்றிப்பாதுகாப்பேன்.

  அதுபோன்று நான் பெற்ற தங்கங்களைக்காண இதோ இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2011/07/3.html

  >>>>>>>>>

  ReplyDelete
 13. இன்னும் தங்களின் பதிவினை நான் ஊன்றிப்படிக்கவில்லை.

  நீண்ட நேரத்திற்குப்பின் மீண்டும் நான் கருத்தளிக்க வருவேன்.

  இப்போது நான் MOOD OUT. ;(

  //இப்போது நீண்ட இடைவேளை//


  அன்புடன்
  VGK

  ReplyDelete
 14. அருமையான அறிமுகங்கள்
  அனைவரும் நான் தொடர்பவர்களே
  ஜெயந்தி ரமணி அவர்களின் பதிவினை மட்டும்
  தங்கள் அறிமுகம் மூலம் அறிந்தேன்
  அவருடைய அருமையான கவிதைகளைப் படித்து மகிழ்ந்தேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. அன்பின் உஷா அன்பரசு

  வலைச்சரத்தில் 2500வது பதிவினை எழுதும் பாக்கியசாலி தாங்கள் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 16. வணக்கம்
  உஷா அன்பரசு

  நல்ல அறிமுகத்துடன் இன்று 2ம் நாள் பதிவை ஆரம்பித்துள்ளீர்கள் பதிவுகள் அனைத்தும் அருமை,அருமை தொடருகிறேன் பதிவுகளை,வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 17. //அனைவர்க்கும் காலை வணக்கம்! இன்று இடும் பதிவு வலைச்சரத்தின் 2500 வது பதிவு என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.//

  வலைச்சரத்தின் 2500 ஆவது பதிவினைத்தரும் பாக்யசாலியான தங்களுக்கு என் அன்பான பாராட்டுக்கள்.

  இதைக் கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  >>>>>>>>>>>>>

  ReplyDelete
 18. //“குயில் கூக்குவென்று கூவுமே தவிர ஒருநாளும் மயில் போல் அகவுவதில்லை.

  காகம் கரைவதை விட்டு குயிலின் பாஷைதேடுவதில்லை

  மனிதன் மட்டும்தாய்மொழியை விட்டு வேறுமொழியில் பேசுவதைப் பெருமையாக நினைக்கிறான்?”//

  தங்கள் தோழியின் நியாயமான இந்த ஆதங்கத்தை என்னால் நன்றாக ரஸிக்க முடிகிறது.

  >>>>>>>>>>

  ReplyDelete
 19. //இன்றுபெண் உறவுமுறைகள் மொத்தமும்ஒரே வார்த்தையில் “ஆன்ட்டி, “ஆண்உறவு முறைகள் ஒரு வார்த்தையில் “அங்கிள்” இப்படி ஆகிவிட்டது. முன்பிருந்த அந்த உறவுமுறைகளுக்கான அர்த்தங்கள் நம்குழந்தைகளுக்கு வருங்காலத்தில் தெரிய போவதில்லை.//

  மிகவும் வருந்தத்தக்க விஷயமாகவே உள்ளது. மனதுக்கு வேதனையாகவும் உள்ளது. அனைவரும் இதை சிந்திக்க வேண்டும்.

  >>>>>>>

  ReplyDelete
 20. //தேவைகள் இருக்கும் வரைதான் அப்பா, அம்மா உறவுகள்..! பிறகு வேண்டாத ஒருபொருளாய்த்தான் பிள்ளைகள் நினைக்கும் அளவிற்குதான் வாழ்க்கைபோய்க் கொண்டிருக்கிறது.//

  இது மிகவும் நிசர்சனமான உண்மை.

  இதைப்புரிந்து கொள்ளாமல் பல அப்பா அம்மாக்கள் இன்றும், தன் மகனோ அல்லது மகளோ, நாளை தங்களைப் பெரியதாக தாங்கி கிழிக்கப்போவதாக கனவு காண்கிறார்கள்.

  அந்த அப்பாவிகளை நினைத்து, நான் என் அனுபவத்தால், மிகவும் வருந்துகிறேன்.

  இதை என் ஒருசில பதிவுகளிலும் சுட்டிக்காட்டியுள்ளேன்.

  >>>>>>>>>

  ReplyDelete
 21. //என் தேவை எதுவுமில்லை

  எல்லாமாய் உனக்கு இருந்தேன்..

  உனக்கு தேவையில்லா மொத்தத்திற்கும் நானாய் இருக்கிறேன்.. !//

  முதியோரின் உணர்வுகளை முத்துமுத்தாய் எழுதியுள்ளீர்கள்.

  நானும் ... நீயும்! கவிதை வெகு அருமை.

  >>>>>>>>>>

  ReplyDelete
 22. இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள பத்துப்பதிவர்களுமே மிகச்சிறந்த முத்துக்கள்.

  அதில் பலரும் மிகப்பிரபலமானவர்கள்.

  ஆனால் பிறருக்கு அறிமுகம் என்று நாம் சொல்லிப் பெருமைப்பட நினைத்தால், அதற்கு மிகவும் பொருத்தமானவர் இருவர் மட்டுமே என்பேன்.

  // 5) ஜெயந்தி ரமணி
  இவரின் கதை, கவிதை மணம் வீசி மனம் கவர்ந்தது.//

  திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள் சார்பாக உங்களுக்கு நான் என் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அவர்களால் இன்று வருகை தந்து பின்னூட்டமிட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக அறிகிறேன்.

  இவரின் சூதுவாது அற்ற மிகவும் வெளிப்படையான தெளிவான எழுத்துக்களை நான் மிகவும் ரஸித்து விரும்பிப் படிப்பவன்.

  இவர்களுக்கு எழுத்துலகில் நல்லதொரு எதிர்காலம் உள்ளது.

  இவர்களின் படைப்புகளை அனைவரும் அவசியம் போய்ப் பாராட்டுங்கள்

  அதுபோலவே இரண்டாவது நபர்

  //8) காமாக்ஷி ”சொல்லுகிறேன் ”
  இவருக்கு வயது 78. இந்த வயதினிலும் மிக ஆர்வமாக எழுதிவருவது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. அவரை பற்றி அவர் பதிவில் படியுங்கள் நிச்சயமாய் நீங்களும் அவரை பாராட்டுவீர்கள்.//

  காமாக்ஷி மாமி, மிகவும் பாராட்டப்பட வேண்டிய நபர் தான்.

  இவரின் பல்வேறு அனுபவங்கள் இவரின் முதுமை காலத்திலும் நமக்கு இன்று பதிவாகக்கிடைப்பது நாம் செய்த புண்ணியம் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. மகிழ்வதுண்டு.

  >>>>>>>>>

  ReplyDelete
 23. // 7) மஞ்சுபாஷிணி

  தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவரின் பதிவுகள்

  “கதம்ப உணர்வுகள்”.//

  இந்த என் அன்புத்தங்கையை இன்று தாங்கள் அடையாளம் காட்டியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

  இவர்களைத் தெரியாதவர்களே அநேகமாக பதிவுலகில் யாரும்
  இருக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

  அன்பினைத்தவிர வேறு எதுவுமே தெரியாத குழந்தை உள்ளம் கொண்ட மஞ்சுவுக்கு கடந்த ஒரு 10-15 நாட்களாக உடல்நலம் சரியில்லை.

  அதனால் அவராலும் இங்கு இன்று வருகை தந்து கருத்துக்களோ நன்றியோ சொல்ல இயலாது என நான் நினைக்கிறேன்.

  என் அன்புத்தங்கை சார்பாக நான் என் மனமார்ந்த நன்றியினை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  அவர் உடல்நலம் சீராகி, மீண்டும் விரைவில் பதிவுலகுக்குத் திரும்பி வந்து, நம் எல்லோர் மீதும் தொடர்ந்து அன்பினை மழையாகப்பொழிய வேண்டி அனைவரும் பிரார்த்தித்துக் கொள்ளுமாறு, அன்புடன் உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

  >>>>>>>>>>

  ReplyDelete
 24. தெரிந்ததும், தெரியதாதுமான அறிமுகங்கள் சென்றும் பார்த்தேன் .
  அனைவருக்கும் இனியவாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. //4) ரிஷபன்

  இவருக்கு அறிமுகமே தேவையில்லை. இவரை அறியாத பதிவர்களே யாரும் இருக்க முடியாது.

  ”பொதுவாக நாம் படைப்புகளைத்தான் உருவாக்குவோம். ஆனால் திரு ரிஷபன் அவர்கள் தன் பல படைப்புகளுடன் மட்டுமல்லாமல், பல படைப்பாளிகளையும் உருவாக்கியுள்ளவர்" என தனது பதிவு ஒன்றில் திரு கோபாலகிருஷ்ணன் ஐயா, இவரை மிகவும் பாராட்டிப்பேசியுள்ளார். //

  இவரைப்பற்றி நான் பாராட்ட வேண்டுமானால் எங்கள் ஊர் திருச்சி மலைக்கோட்டை அளவுக்கு விஷயங்கள் என்னிடம் ஏராளமாக உள்ளன.

  எப்படி அவற்றை என்னால் இங்கு எழுத்தினில் எடுத்துரைக்க முடியும்?

  ஏதோ அவ்வப்போது என் பதிவுகளில் கொஞ்சம் கொஞ்சம் எழுதியுள்ளேன்.

  இவருடைய படைப்புக்கள் வெளிவராத தமிழ் வார / மாத இதழ்கள் எதுவுமே கிடையாது.

  அத்தனைப்பத்திரிகைகளிலும் எழுதியுள்ள ஒரே நபர் இவராக மட்டுமே இருக்க முடியும் என நான் நம்புகிறேன்.

  இதுவரை இவர் 10-15 சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளியிட்டுள்ளார்.

  நேற்றுத்தான் எழுத ஆரம்பித்த என்னையே இதுவரை மூன்று சிறுகதைத்தொகுப்பு நூல்கள் வெளியிடச் செய்து விட்டார் என்றால் இவரைப்பற்றி நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

  எதற்கும் இந்த கீழ்க்கண்ட இணைப்புகளில் உள்ள படங்களை மட்டும் தயவுசெய்து அனைவரும் பாருங்கள்:

  http://gopu1949.blogspot.in/2011/07/4.html

  http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html

  >>>>>>>>>

  ReplyDelete
 26. சென்ற ஆண்டின் இதே காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட இரு பதிவுகளான

  [1] அன்பென்ற மழையிலே
  [2] கிறிஸ்துமஸ் தாத்தா யானைகள்

  ஆகிய இரண்டையும், இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில், அதுவும் முதன்முதல் அறிமுகமாக தாங்கள் வெளியிட்டுள்ளது, மிகச்சிறப்பாக உள்ளது.

  என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது.

  தங்களின் இத்தகைய புத்திசாலித்தனத்திற்கு
  என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>>>>>>>>>

  ReplyDelete
 27. இன்றைய தங்களின் இரண்டாம் நாள் பதிவினில் தங்களால் அன்புடன் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.

  மிகவும் அழகாக இன்றைய வலைச்சரத்தினை செதுக்கித்தந்துள்ள தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

  நன்றியோ ...... நன்றிகள்.

  மீண்டும் நாளை சந்திப்போம்.

  பிரியமுள்ள
  VGK
  -oOo-

  ReplyDelete
 28. மிக நல்ல எழுத்தாற்றல் மிக்க பதிவர்களை அறிமுக படுத்தியமைக்கு நன்றி ..

  ReplyDelete
 29. என்னை அறிமுகம் செய்த தங்கள் பேரன்பிற்கு நன்றி.

  ReplyDelete
 30. மனிதனால் எத்தனை மொழிகள் வேண்டுமானால் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக்கொள்ளட்டும்.மொழிப்பற்று என்று மற்ற மொழிகளை கற்காமல் அறிவை சுருக்கி கொள்வதை நான் மொழிப்பற்றாக ஒப்புக்கொள்ள மாட்டேன். பரந்து விரிந்த உலகத்தின் எந்த மூலைக்கும் மனிதன் செல்லும்படியான கால கட்டத்தில் வாழ்க்கை தொடர்புக்கு அந்தந்த மொழிகள் பற்றி தெரிந்திருக்க அவசியமாக இருக்கிறது. கற்றுக்கொள்ளட்டும்.அத்தனையும் கற்று கொண்டு தமிழ் மொழியில் பேசுவதை குறைவாகவோ, தாழ்வாகவோ நினைப்பவர்களைதான் நான் மொழிப் பற்றில்லாதவர்களாக சொல்கிறேன்.


  இதை அப்படியே வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 31. அறிமுகம் செய்யப்பட்டவர்கள் அனைவருமே சுவாரசியமான எழுத்துக்கு சொந்தக் காரார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 32. உன் ஒற்றை வார்த்தைக்காக
  காது கொடுத்து
  நாளெல்லாம் பேசி பார்த்தேன்..
  இந்த கிழத்தோடு கத்த முடியலை ..
  செவிட்டு காதும் கூட
  உன் நொடிப்பில் வலித்தது..

  ஆஹா.. இதை விட அழுத்தமாய் அந்த வேதனையை சொல்ல முடியாது.

  ReplyDelete
 33. எல்லா அறிமுகங்களும் நறுக்கென்று இருந்தன.

  ReplyDelete
 34. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் ஸந்தோஷம். இது மூன்றாவது முறை.
  எல்லா வலைப்பதிவுகளுக்கும் போய்,படித்து பின்னூட்டமிட ஆசைதான். புக்மார்க்கில் எல்லோர் பதிவுகளின் பெயரைப்போட்டு, அதற்கு விஜயம் செய்ய வழிமுறை கொஞ்ஜம் தெரிகிரது. பார்க்கவேண்டும்.
  திரு,வை.கோ அவர்கள் எல்லோருக்கும் ஊக்கம் கொடுப்பதில்
  முக்கியமானவர்.
  திருமதிரஞ்சனி நாராயணன்,திரு.ஸ்ரீராம் அவர்களும்
  முன்பு வலைச்சரத்தில் சொல்லுகிறேனை அறிமுகப்படுத்தியதை, நீங்களும்
  அறிமுகப்படுத்தி என்னை ஊக்குவிப்பதை நன்றியுடன் நினைவு
  கூர்ந்து, ஸந்தோஷப்படுகிறேன்.
  அன்புடன் காமாட்சி

  ReplyDelete
 35. மிக்க மகிழ்ச்சி சகோதரி கவிதை அருமை.. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.. தொடர வாழ்த்துகள்..

  ReplyDelete
 36. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ? தமிழ்வழிக்கல்வியையும் , முதியோர் இல்லங்கள் குறித்தும் ஒரே பதிவில் பகிர்ந்ததைதான் சொல்கிறேன். அருமை. எனக்குப் புதியவர்களுக்கு என் வாழ்த்துக்கள் அவர்களையும் தொடருகிறேன் .நன்றி

  ReplyDelete
 37. முதியோர் இல்லம் என்றாலே! சான்று கோபம்தான் வருகிறது. நமது வீட்டில் இருந்தால்தான் அவர்கள் நமக்கு முதியவர்கள். இருந்தாலும் வயசாகிய பிறகு அவர்களும் நமது குழந்தைகள்தான். அவர்களை இப்படி தனியாக விட எப்படிதான் மனசு வருகிறதோ? அருமையான கவிதைக்கு வாழ்த்துகள்.

  எனக்குகூட தமிழ் சரியாக எழுதத்தெரியாது, படித்ததெல்லாம் தமிழில்தான், வேலைக்கு வந்த பிறகு தமிழில் படிப்பது எழுதுவது குறைவு, பிற மொழிகளின் உச்சரிப்பினால் தமிழின் உச்சரிப்பு மாறிவிட்டது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

  ReplyDelete
 38. அன்புள்ள உஷா,
  எனக்கு மிகவும் நெருங்கிய திருமதி காமாட்சி அவர்களின் வலைத்தளம் உங்களால் இங்கு அடையாளம் காட்டப் பட்டிருப்பது குறித்து அளவில்லாத சந்தோஷம்!
  என்னையும் இன்று அறிமுகம் செய்யப் போவதாக உங்கள் செய்தி கேட்டு வந்தேன். (ஒருவேளை என்னை முதியவர் லிஸ்டில் சேர்க்க விருப்பமில்லையோ? ஹி...ஹி...)

  திருமதிகள் இராஜராஜேஸ்வரி, ஜெயந்தி ரமணி, மஞ்சுபாஷிணி, திருவாளர்கள் மதுமதி, முரளிதரன், கவியாழி கண்ணதாசன், ரிஷபன் எல்லோருமே தெரிந்தவர்கள். மற்றவர்களின் வலைதலங்களுக்குப் போக வேண்டும்.

  முதியவர்களை கண் போலக் காப்பாற்றும் பிள்ளைகளும், பெண்களும் இருக்கிறார்கள், உஷா.
  எல்லோருமே இப்படித்தான் பொதுவில் சொல்வது சரியில்லை என்பது என் கருத்து.

  2,500 பதிவை இட்ட உங்களுக்குப் பாராட்டுக்கள்!
  ReplyDelete
 39. நீங்க அறிமுகம் செய்த அனைத்து பதிவுகளும் மிக அருமை! நிறைய படிக்க கிடக்கிறது. எல்லாம் படிக்கவேண்டும்.

  ReplyDelete
 40. வருகை புரிந்து கருத்திட்டு ஊக்கப்படுத்திய அத்தனை உள்ளங்களுக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து கருத்திட்டு வகுப்பை சிறப்பாக நடத்த வழி நடத்த வேண்டுகிறேன்!

  ReplyDelete
 41. Kamatchi said...

  //திரு,வை.கோ அவர்கள் எல்லோருக்கும் ஊக்கம்
  கொடுப்பதில் முக்கியமானவர்.//

  வாங்கோ காமாக்ஷி மாமி.
  செளக்யமா இருக்கீங்களா?

  தங்களைப்பற்றியும் தங்கள் வலைத்தளத்தினைப் பற்றியும்
  இன்று இவர்கள் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளது எனக்கும் மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  தங்களின் பின்னூட்டமும் அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

  வலைச்சரத்தில் இது மூன்றாவது முறையா! ஆஹா, சந்தோஷம் சந்தோஷம் .. அன்பான வாழ்த்துகள்.

  நமஸ்காரங்களுடன்
  கோபாலகிருஷ்ணன்

  ReplyDelete
 42. இராஜராஜேஸ்வரி

  வலைத்தளம்: “மணிராஜ்” தினம் ஒரு பதிவுக்குக் குறையாமல்
  மிகச்சிறந்த படங்களுடன் ஆன்மிக விஷயங்களை அள்ளித்தரும் பதிவர் 705 நாட்களுக்குள் 768 பதிவுகளுக்கு மேல் கொடுத்து சாதனை புரிந்துள்ளார்.

  சிறப்பாக எமது தளத்தை அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள் ...

  ReplyDelete
 43. 2500 -வது வலைச்சரப் பதிவுக்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 44. மிக்க நன்றி திருமதி உஷா அன்பரசு.

  என் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த, நெஞ்சார்ந்த நன்றிகள்.

  மேலும் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இவருடைய பின்னூட்டங்கள் நம் எழுத்துக்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும்.

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

  மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
 45. JAYANTHI RAMANI said...

  //மிக்க நன்றி திருமதி உஷா அன்பரசு.

  என் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு மனமார்ந்த, நெஞ்சார்ந்த நன்றிகள்.

  மேலும் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  இவருடைய பின்னூட்டங்கள் நம் எழுத்துக்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும். //

  என் அன்புக்குரிய திருமதி ஜயந்தி ரமணி மேட்ம், வாருங்கள். வணக்கம்.

  தாங்கள் அசரீரி போல அதுவும் மிகச்சரியாக இந்த இடத்தில் வந்து தங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளது எனக்கு மிகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

  இன்று கருத்துச்சொல்லியுள்ள அனைவரின் கருத்துக்களையும் விட உங்கள் கருத்து மட்டுமே மற்ற எல்லாக் கருத்துகளையும்

  தூ க் கி ச்
  சா ப் பி டு வ தா க
  அ மை ந் து ள் ள து.

  நன்றி மறவாத உங்களுக்கு என் அன்பான ஆசிகளுடன் கூடிய இனிய நல்வாழ்த்துகளும் நன்றிகளும் சொல்லிக்கொள்கிறேன்.

  வலைச்சர ஆசிரியர் திருமதி உஷா அன்பரசு அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  பிரியமுள்ள
  VGK

  [அடுத்த 4 நாட்களுக்கும் முடிந்தால் வருகை தாருங்கள், ப்ளீஸ்].

  ReplyDelete
 46. உங்கள் அறிமுகம் அருமை. அதிலும் கடைசி வரிகள் சத்தியமான உண்மை! //தேவைகள் இருக்கும் வரைதான் அப்பா, அம்மா உறவுகள்..! பிறகு வேண்டாத ஒரு பொருளாய்த்தான் பிள்ளைகள் நினைக்கும் அளவிற்குதான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது//
  'நானும் நீயும்' கவிதையும் அருமை! நிறைய மெனக் கெட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். பாராட்டுக்கள். முத்தாய்ப்பாய் கடைசியில் என் வலைப்பக்கத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள், அதற்கும் என் மனமார்ந்த நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது