07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 5, 2012

கதையும் கதை சார்ந்ததும்....

’’எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்...’’
வாசிப்பு வசப்பட்ட நாள் முதல் என்னை வசீகரித்த ஒரு வடிவம் சிறுகதை.சொல்வது குறைவாகவும்,உணர்த்துவது மிகுதியாகவும் நறுக்குத் தெறித்தாற்போன்ற கச்சிதமான வடிவ ஒழுங்கு கொண்ட நல்ல சிறுகதைகள் வாழ்வின் மிகச்சிறிதான ஒரு கணத்தின் தரிசனத்தை மிக அற்புதமாக சாத்தியப்படுத்தி விடுகின்றன. அடர்ந்த இருள் கப்பியிருக்கும் நேரத்தில் வெட்டும் கீற்றுமின்னல் சின்னதொரு காட்சியை நொடியில் காட்டிவிட்டுப்போவதைப்போல வாழ்வின் மகத்தான உண்மைகளைக்கூட ஒரு சில சொற்களால்..நிகழ்வுகளால் சிறுகதைகள் முன்வைத்து விடுகின்றன. மிகப்பெரிய கான்வாஸில் மிக அதிகமான வண்ணங்களைச் சேர்த்து விஸ்தாரமாகத் தீட்டப்படும் மிகப்பெரிய ஓவியம் போன்றது நாவல் என்றும் ‘ஸ்கெட்ச்’எனப்படும் கோட்டுச் சித்திரம் போல இருப்பது சிறுகதை என்றும் விமரிசகர்கள் குறிப்பது இது பற்றியதுதான்...

சிறுகதை என்பது 100மீட்டர் ஓட்டம்;நாவல் ஒரு மராத்தான் ரேஸ்.
சிறுகதை ஒரு புகைப்படம்;நாவல் ஒரு மூவி....
சிறுகதை ஒரு மாலைநேரச் சிற்றுண்டி; நாவல் ஒரு திருமணவிருந்து...
என்று இதை இன்னும் கூட அடுக்கிக் கொண்டே போகலாம்...

பொதுவாக எழுத்துக் கிறுக்குப் பிடித்து எழுத ஆரம்பிப்பவர்கள் கவிதையில் தொடங்கி,சிறுகதைக்கு நகர்வார்கள்.நான் சிறுகதையில் தொடங்கிக் கொஞ்ச காலம் கவிதைக்கு வந்து பிறகு சிறுகதையில் நிலைப்பட்டேன்...

சிறுகதை வடிவம் தமிழுக்கு அயல்நாட்டிலிருந்து வந்த கொடை என்றபோதும் புதுமைப்பித்தன் தொடங்கி

இன்றைய சமகால எழுத்தாளர்கள் வரை பலரும் தமிழ்ச்சிறுகதைக்கு வளம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.புகழ்பெற்றவர்களும் - பரவலான தளத்தில் அறியப்பட்டவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புக்களென்றால் அவற்றை நாமே தேடிப்படித்து விடுவோம். ஆனால்...ஆர்வத்தோடும்,தாகத்தோடும் சிறுகதை உலகில் தங்கள் சுவடுகளைப்பதிக்க விரும்புகிற...பதிக்கத் தொடங்கியிருக்கிற சில இளம் நண்பர்களும் இணைய வெளியில் நிறையவே உண்டு. அவர்களை ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தும் கடப்பாடு நமக்கு உண்டு என்பதால் அவர்களில் சிலரது படைப்புக்கள் குறித்த அறிமுகம் இந்தப்பதிவில்.....

உண்மை வாழ்வில் நாம் கேள்விப்படும் செய்திகள்..எதிர்ப்படும் நபர்கள்..,நிகழ்வுகள் இவற்றோடு நம் புனைவும் கலக்கும்போது அவை நம்பகத்தன்மை வாய்ந்த படைப்புக்களாகி விடுகின்றன.அவ்வாறான ஒரு சம்பவம் பெங்களூரில் வசிக்கும் இலக்கிய ஆர்வலரான நண்பர் ஆர்.கோபியின்"தண்ணி குடிங்க"என்னும் சிறுகதையாக உருப்பெற்றிருக்கிறது.முதலில் ஒரு கட்டுரை போல,சம்பவ விவரிப்புப்போலத் தொடங்கினாலும் சற்றுச் சூடு பிடித்தபின் மனதைக்கலங்கடித்து விடும் கதை.புனைவாக மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கும் உடல்நலத்துக்கும் தேவையான ஒரு செய்தியையும் கூடச் சிறிதளவு பிரசார நெடியுமின்றி அநாயாசமாக முன் வைத்து விடுவதே இதன் சிறப்பு.

மிகச் செறிவான நடையில் சிறுகதையின் குறுகத் தரித்த குணம் நயமாகக் கூடி வந்திருக்கும் சிறுகதை , இணைய உலகிற்குப் பெரிதும் பரிச்சயமான சிறுமுயற்சி முத்துலட்சுமியின் விடுதலை என்கிற சிறுகதை. தில்லியைச்சேர்ந்த இவர் , தில்லியின் புறநகர்ப்பகுதி ஒன்றில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை ஒட்டி எழுதிய இந்தக்கதையைப் படித்த போது, தேர்ந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புப் போல என்னுள் ஆனந்த அதிர்ச்சியூட்டியது  இது. மிகச்சிறிய கதைதான் என்றாலும் அவரது படைப்பாற்றல் திறனை  அதற்கான தகுதியை உறுதிப்படுத்தியிருக்கும் படைப்பு இது.உண்மைச்சம்பவ அடிப்படை இதற்கும் உண்டென்றாலும் அதைப் புனைவாக்கித் தந்திருக்கும் பாணி சிறப்பானது.பெண் எழுத்தில் இதுவும் ஒரு மைல்கல்தான்!

பிரகாஷ்தென்கரை என்னும் பெயரில் எழுதிவரும் பிரகாஷ் சங்கரன், செக் குடியரசில் தற்போது உயிரியியல்துறையில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருபவர்; தீவிர எழுத்துக்களின் தீவிர வாசகர்.விமரிசகர்; இந்தியத் தத்துவ ஞானங்களில் தெளிந்தவர்; ஆழமான அறிவியல் கட்டுரைகளைக் கூடப் பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் முன் வைக்கக்கூடியவர்.இவற்றோடு அசாதாரணமான ஒரு கதை சொல்லியும் கூட அவருள் இருக்கிறார் என்பதை உணர வைக்கும் அவரது சிறுகதை அன்னதாதாபசி என்பதை ஓர் உருவகமாக்கி வாழ்வியலின் சாரத்தையே கண் முன் கொணரும் அருமையான முயற்சி இது.

தன் சிறுகதைப் படைப்புக்கள் சொல்வனத்தில் அடிக்கடி வெளிவருமளவுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டிர்ப்பவர் தில்லி இலக்கிய நண்பரும்- பதிவருமான வி.கணேஷ் . கவிதை,சிறுகதை எனப் படைப்பிலக்கியத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் அவரது ஆக்கம் ஜன்னல்கள் .சற்று சுஜாதா பாணி அவ்வப்போது தலை காட்டினாலும் சிறுகதை வடிவம் இவருக்கு நன்றாகவே பிடிபட்டிருக்கிறது.

கதைகளை..புனைவுகளை எழுதுவது ஒரு புறமிருக்க அவை சார்ந்த விமரிசனங்களை ஆழமாக முன் வைப்பதும் படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாகும் ஓர் அம்சம்தான்.ஒரு படைப்பை உருவாக்குவது எத்தனை கடினமோ அதை விடக் கடுமையும்,கடினமுமானது அதன் மீதான  விமரிசனம் அல்லது திறனாய்வை முன் வைத்து எழுதப்படும் பதிவு. அது ரசனை சார்ந்ததாகக் கூட இருக்கலாம்....ஆனால்..இதுவரை அந்தப்படைப்புக்குள் பயணப்படாதவர்களை அவற்றைப்படித்தே ஆக வேண்டும் என்னும் ஆர்வத்தைக் கிளர்த்துவதாக அது இருக்க வேண்டுமென்பதே அதற்கான முதல் தகுதி.

அவ்வாறான சில விமரிசன இணைப்புக்கள்....

மூத்த நாவலாசிரியர் பூமணி [வெக்கை,பிறகு போன்ற தொடக்க கால தலித் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்] அண்மையில் எழுதிய மிகப்பெரிய நாவல் அஞ்ஞாடி.இதை முழுவதும் வாசித்து முடிக்கவே பல நாட்கள் தேவைப்படும்.இத்தனை பெரிய பிரம்மாண்டமான நாவலை வாசித்து உள்வாங்கிக்கொண்டு அருமையான ஆய்வுக்கட்டுரையையும் தன் தளத்தில் எழுதியிருக்கிறார் திரு ஸ்ரீனிவாசன்.இவர் தமிழ் கற்றவர்; தற்போது தமிழக அரசின் வேறு பணியில் இருந்தாலும் தொடர்ந்து தமிழோடு உறவு பூண்டிருப்பவரும் கூட. திருவிருப்போன்  என்னும் இவரது வலையில் அஞ்ஞாடி – வரலாற்றின் புதுமொழி என்னும் அந்த விமரிசனக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறது. தொடர்ந்து தன் தளத்தில் பல கட்டுரைகளை இவர் எழுத வேண்டும் என்பதே  நம் ஆவல்.

புத்தகம்,ஆம்னிபஸ் ,சிலிகான் ஷெல்ஃப் ,நான் வாசித்த தமிழ்ப்புத்தகங்கள் 
ஆகிய தளங்கள் பெரும்பாலும் நூல்  அறிமுகங்களுக்கும்,நூல்கள் சார்ந்த விமரிசனக்கட்டுரைகளுக்குமே முன்னுரிமை அளித்து வெளியிட்டு வரும் தளங்கள்.

அவற்றிலிருந்து சில பதிவுகளுக்கான இணைப்புகள்...

நாஞ்சில் நாடனின் மிதவை நாவல் பற்றிய சுனில்கிருஷ்ணனின் பதிவு.

நாவலாசிரியர் பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி  நாவல் குறித்த சிலிகான் ஷெல்ஃப், மற்றும் சொல்வனப்பதிவுகள்.

சமகாலத் தமிழின் சிறந்த விமரிசகரும் இப்போது நூற்றாண்டு காண்பவருமான க.நா.சு.அவர்களின் மொழிபெயர்ப்பில் உருவான அன்பு வழி [பாரபாஸ்-ஃபேர்லாகர் குவிஸ்ட்டின் நோபல் பரிசு பெற்ற படைப்பு]
பற்றி கிருஷ்ணபிரபு செய்திருக்கும் அறிமுகம்.

பி.கு;
பண்டை இலக்கியம் பற்றிய பதிவில் குறிப்பிட்டது கதைகளுக்கும் பொருந்தக்கூடியதுதான்.புத்தகம் வாங்கக் கடைகளுக்கோ,புத்தகக் கண்காட்சிக்கோ செல்ல நேரம் வாய்க்கவில்லையே என வருத்தம் கொள்ளத் தேவையில்லாதபடி இணையத்திலேயே கொட்டிக் கிடக்கும் கதைகளும் இன்னின்ன கதைகள் படிக்க வேண்டும் என்னும் பரிந்துரைகளும் ஏராளம்.அவற்றில் ஓரளவு படித்தாலே தமிழ்க்கதை உலகத்துக்குள் கால் வைத்து விடலாம்.
கதைகள் கிடைக்கும் சில தளங்கள்;
அழியாச்சுடர்கள்..
சிறுகதைகள்
நூலகம்
இவற்றைத் தவிர சிறுகதை நாவல்- அவை சார்ந்த கட்டுரைகளுக்கான இன்னும் வேறு தளங்கள்,இணைப்புக்கள் தெரிந்தால் இக் கட்டுரை படிக்கும் வலைச்சர வாசகர்களும் தங்கள் பின்னூட்டங்களில் குறிப்பிடலாம்;அது அனைவருக்கும் பயனளிக்கும் என்பதால் அவற்றை அன்போடு வரவேற்கிறேன்.எதிர்பார்க்கிறேன்.

.

25 comments:

  1. அட நான் தான் முதல் வாசகனா ?

    அன்பின் சுசீலா - அறிமுகங்கள் அத்தனையும் அருமை - சென்று பார்க்கிறேன் - மறுமொழிகள் அங்கேயே - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    ReplyDelete
  2. மிக்க நன்றி..இன்று சிறிது தாமதமாகத்தான் பதிவிட்டேன்.தில்லிக் குளிர்....

    ReplyDelete
  3. அது சரி சுசீலா - தில்லிக் குளிர் அங்கென்றால் இங்கு மின் தடை - நானும் இப்பொழுது தான் கணினியின் பக்கம் வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. இணையத்திலேயே கொட்டிக் கிடக்கும் கதைகளும் இன்னின்ன கதைகள் படிக்க வேண்டும் என்னும் பரிந்துரைகளும் ஏராளம்.அவற்றில் ஓரளவு படித்தாலே தமிழ்க்கதை உலகத்துக்குள் கால் வைத்து விடலாம்.
    மிக அற்புதமான அறிமுகங்கள் நிச்சயம் தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. நாங்களும் படிக்கின்றோம் உங்களின் அறிமுகங்கள் ஒவ்வொன்ரும் அருமை பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. அறியாத பல தளங்கள்! அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  7. அழியாச்சுடர்களும்,சிறுகதைகள் தளமும் நான் வழக்கமாக வாசிப்பவைதான். மற்ற அறிமுகங்களும் அருமை.

    ReplyDelete
  8. வணக்கம்
    சுசீலா எம் ஏ(அம்மா)


    இன்று அறிமுகம் செய்த தளங்கள் அனைத்தும் நான் அறியாதவை அந்த தளங்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் வலைப்பதிவாளார்கள் அனைவருக்கும் நன்றிகள் அனைத்த பதிவுகளையும் தொடருகிறேன்,
    சிறிய குறிப்பு அம்மா,நான் கூறுவதில் எதும் பிழைகள் இருந்தாள் மன்னித்துவிடுங்கள்,அம்மா

    கூகுல்(google) வெப்சயிட்டில் படைப்புக்களை படைக்கும் படைப்பாளிகளை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அறிமுகம் செய்கின்றீர்கள்அதைப்போல வேட்பிரஸ்ட்(wordpress) வெப்சயிட்டில் படைப்புக்களை படைக்கும் எத்தனை படைப்பாளிகள் இருக்கின்றார்கள் அவர்கள் பக்கமும் கவனம் செலுத்தி அவர்களையும் அறிமுகம் செய்தாள் நன்று என்று நான் நினைக்கின்றேன் இதற்கான பதிவலை நான் எதிர்பார்க்கின்றேன்,
    என்ஈமெயில் முகவரிக்கு
    Rupanvani@yahoo.com



    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. வணக்கம்
    சுசீலா எம் ஏ(அம்மா)


    இன்று அறிமுகம் செய்த தளங்கள் அனைத்தும் நான் அறியாதவை அந்த தளங்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் வலைப்பதிவாளார்கள் அனைவருக்கும் நன்றிகள் அனைத்து பதிவுகளையும் தொடருகிறேன்,
    சிறிய குறிப்பு அம்மா,நான் கூறுவதில் எதும் பிழைகள் இருந்தாள் மன்னித்துவிடுங்கள்,அம்மா

    கூகுல்(google) வெப்சையிட்டில் படைப்புக்களை படைக்கும் படைப்பாளிகளை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அறிமுகம் செய்கின்றீர்கள்அதைப்போல வேட்பிரஸ்ட் (wordpress)வெப்சையிட்டில் படைப்புக்களை படைக்கும் எத்தனை படைப்பாளிகள் இருக்கின்றார்கள் அவர்கள் பக்கமும் கவனம் செலுத்தி அவர்களையும் அறிமுகம் செய்தாள் நன்று என்று நான் நினைக்கின்றேன் இதற்கான பதிலை நான் எதிர்பார்க்கின்றேன்,
    என்ஈமெயில் முகவரிக்கு
    Rupanvani@yahoo.com
    சிறுபிழை ஏற்ப்பட்டதாள் மீண்டும் இடுகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. திரு சீனா,அமைதிச்சாரல்,தொழிற்களம் குழு,சசிகலா,சுரேஷ்,ரூபன் அனைவருக்கும் என் நன்றி.
    திரு ரூபனுக்கான என் பதில் இதோ...
    நான் நல்ல பதிவுகளை- வலைத் தளங்களை மட்டும்தான் பார்க்கிறேனே தவிர அவை ப்ளாகரில் உள்ளவையா ...வேர்ட்ப்ரஸ்ஸில் எழுதப்பட்டவையா என்றெல்லாம் இனம் பிரித்து வேறுபடுத்திக் கொண்டிருப்பதில்லை.
    இதிலும் இன பேதம் உண்டென்பதை இப்போதுதான் விளங்கிக் கொள்கிறேன்.
    அப்படிப்பட்ட பாகுபாடுகள் தோன்றும் வகையில் என் அறிமுகங்கள் ஒருக்கால் அமைந்திருந்தால் அது தற்செயலேயன்றி உள்ளார்ந்து செய்யப்பட்டதல்ல என நம்புங்கள் ரூபன்.

    ReplyDelete
  11. ரூபன்,இன்றைய பதிவில் http://siliconshelf.wordpress.com/,http://thiruviruppon.wordpress.com/,http://hemgan.wordpress.com/என்று 3 wordpress தளங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

    ReplyDelete
  12. வணக்கம்
    அம்மா

    உங்கள் பதிலைப் பார்த்தேன் மிக்க சந்தோசம் அதுவும் விரல் விட்டு என்னக்கூடிய வைதான் சரிக்கு சரி சமாமாக பதிவிட்டால் மிக்க நன்று இனிவரும் நாட்களில்
    அம்மா,நான் குறையாக சொல்ல வில்லை நீங்கள் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  13. சிறுகதைகளில் லயிப்பவன் என்கிற முறையில் இன்றைய தங்கள் பதிவு மிக ரசித்தேன்

    ReplyDelete
  14. சிறுகதைகள் தொடர்பான தளங்கள் குறித்த தங்களது பரிந்துரை அருமை அம்மா.



    ReplyDelete
  15. திரு ரூபன்,
    உங்கள் ஆலோசனைக்கு நன்றி.ஆனாலும் திரும்பவும் சொல்கிறேன்.
    ப்ளாகர்,வேர்ட்ப்ரஸ் என்றெல்லாம் என்னால் பார்க்க இயலாது.
    எனக்குப் பிடித்தவை,பயனுள்ளவை என்று பார்ப்பதே எனக்கு சாத்தியப்படக்கூடியது.
    அவற்றில் குறையிருந்தால் சொல்லுங்கள்.மாற்றிக் கொள்கிறேன்.
    திரு ரிஷபன்,ஆதி உங்கள் ரசனைக்கு வந்தனங்கள்.

    ReplyDelete
  16. உங்களிடம் பாராட்டுப் பெறுவதைப் பெருமையாக எண்ணுகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  17. ’தண்ணி குடிங்க’கதையின் படைப்பாளியாகிய உங்களுக்கு என் வாழ்த்தும் வரவேற்பும்.

    ReplyDelete
  18. சிறுகதைகள் அதிகம் படிப்பதில்லை. ஆயினும் அறிமுக தளங்களிற்கும், தங்களிற்கும் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. தங்களின் 'கதைஉதிர்காலம்' பதிவை வாசித்து தினமும் குறைந்தது ஒரு சிறுகதையாவது படித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டி ஆவணி மாதம் 50 கதைகள் படித்தேன். அதை ஒரு பதிவாக கூட இட்டேன். அந்தப்பழக்கம் அத்தோடு விட்டுப்போனது. இனி குறைந்தது மாதம் முப்பது சிறுகதைகளாவது படிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.
    உங்கள் சிறுகதைகளையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். Rகோபியின் தண்ணி குடிங்க சிறுகதை வாசித்திருக்கிறேன். மற்றவைகளை இனி வாசிக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete

  20. வலைப்பதிவுகள் குறிப்பாகச் சொல்லபோனால் தமிழ் வலைப்பதிவுகள் இப்படித்தான் இருக்கும் என்று
    நினைத்துக்கொண்டிருந்த வேளையில், பாலையில் சோலை போலே ஆங்காங்கே ஒன்றிரு வலைத்தளங்கள்
    தமிழ் வளத்தைச் சிறப்பெனச் சொல்லுகின்ற சிந்தனைக் கருவூலங்கள், ஆக்க பூர்வமாக மனித மனத்தை வழி நடத்தத்
    திறன் படைத்த எழுத்துக்கள் உண்டென்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல எடுத்துக்காட்டிய பெருமை
    தங்களையே சாரும்.

    தங்களை ஒரு முன் மாதிரியாக வைத்துக்கொண்டு தமிழ் வலைப்பதிவாளர் பலர், ( என் எண்ணங்களில் அவரில் பலர்
    திறம் படைத்தவர்) எழுத்தெனும் வண்ணத்தூரிகையால் தமிழ் வலி வானில் வண்ண வண்ண வானவில் வரைவர் எனும்
    நம்பிக்கை, கானல் கனவு எனும் படிகளைத் தாண்டி மெய்யாகும் எனத்தோன்றுகிறது.

    தக்கார் தகவிலர் என்பர் அவரவர்
    எச்சத்தாற் காணப்படும்

    எனும் வள்ளுவன் கூற்றுக்கேற்ப, நம்மைத் தகுந்தவர் எனப் பறை சாற்றுவதெல்லாம், நாம் விட்டுச்செல்லும், நாம் எழுதியவையே ஆதலால் அவை தமிழ் உலகை
    வள்ளுவன் கண்ட அறம், வள்ளுவன் கண்ட பொருள், வள்ளுவன் கண்ட இன்பத்துக்கு ஈட்டுச்செல்லவேண்டிய கட்டாயம் இன்றைய
    எழுத்துலகத்துக்கு இருக்கிறது. நாம் எழுதுவதை நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் அவரது பேரக்குழந்தைகளும் படிக்கும்பொழுது நமது முன்னோர் எத்தகைய ஆக்க உணர்வும் திறனும் கொண்டவர் என எண்ணிடவேண்டும். பெருமைப்படவேண்டும்.

    அடுத்து வரும் தங்களது பதிவுகளும் இவ்வகையே இருக்குமென எனது துணிபு.

    அதைக் கோடி காட்டிய காட்டுகின்ற காட்டும் தங்களை மனமாற வாழ்த்துகிறேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  21. மிக்க நன்றி சூரி சிவா அவர்களே.என் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி...அது போன்ற புரிதல் பலருக்கும் ஏற்பட வேண்டுமென்பதே என் ஆவல்.அதற்காகவே தேடித் தேடி நல்ல தரமான பதிவுகளை மட்டுமே இனங்காட்ட எண்ணி அதையே செயலாக்கியும் வருகிறேன்.காலம் கடந்து நிற்கும் அவ்வாறான பதிவுகளே வலை எழுத்தின் மீது ஒரு மதிப்பை உண்டாக்கும்.என் இலக்கும் அதுவே.. உங்கள் ஊக்கமான சொற்கள் என்னை உற்சாகப்படுத்தியிருக்கின்றன.இனி வரும் பதிவுகளும் அவ்வாறே அமையும்,கவலை வேண்டாம்.

    ReplyDelete
  22. அறிமுகங்கள் அருமை அம்மா.

    ReplyDelete
  23. வித்தியாசமான அறிமுகங்கள். சிறுகதை குறித்து கொடுத்துள்ள விளக்கம் அழகு. நன்றி அம்மா.

    ReplyDelete
  24. ரொம்ப நல்ல அறிமுகங்கள்.. இணையத்தில் சிறுகதை எழுதுவோரை தெரியபடுதியதர்க்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete
  25. பல தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.சில புதியவை.

    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது