ஆறு மனமே ஆறு!-வலைச்சரத்தில் ஆறாம் நாள்!-காரஞ்சன்(சேஷ்)
வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம்!
உங்களுடன் என் படைப்புகளைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து இன்றுடன் 6 நாட்கள் நிறைவடைவது ஆச்சர்யமாய் உள்ளது! தொடர்ந்து ஊக்கமளிக்கும் உங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி! இன்று என்னுடைய கவிதைகள்:
1) வெற்றியின் குறியீடாய்!
விண்ணில்
பறவைகள் பாரீர்
வெற்றியின்
குறியீடாய்!
ஒற்றுமையை
வலியுறுத்தி- வானில்
உங்கள் அணிவகுப்போ?
காற்றைக்
கிழித்துப் பறப்பதொன்றும்
கடினமில்லை!
ஒன்றிணைந்தால்!
உலகம் சுருங்கிடலாம்-மனித
உள்ளங்கள் சுருங்குவதேன்?
நற்றலமையின்கீழ்
நாமெலா மொன்றுபட்டால்
வெற்றிக்கனிவந்து
வீழாதோ நம்கையில்!
-காரஞ்சன்(சேஷ்)
2) விதையாய் விளங்கு!
வீசிடும்
காற்றினிலே வெடித்துப் பறந்தாலும்
வேரூன்றி
வளரும் விதையாய் விளங்கிடு நீ!
-காரஞ்சன்(சேஷ்)
படங்கள்: கூகிளுக்கு நன்றி!
II) படித்ததில் பிடித்தது!
1) கேட்டால் தவிர மற்றவர் வேலையில் தலையிடாதீர்கள்
பெரும்பாலோர் மற்றவரது வேலையில் தலையிட்டு பின்பு தங்கள் நிம்மதியை தொலைப்பார்கள். இதற்கு காரணம் தாங்கள் சிந்தித்தவையே சிறந்ததாக எண்ணி மற்றவரை குறை சொல்வதாகும். இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதனால் அவரவர் எண்ணம் வேறுபடும். ஆகவே நாம் நமது வேலையே மட்டும் செய்வோம்.
2) மறக்கவும்... மன்னிக்கவும்...
இது காயம் பட்ட மனதிற்கு சக்தியான
மருந்து. நாம் ஒருவரால் துன்புறுத்தபட்டாலோ, கேவலப்படுத்தப்பட்டாலோ அவரை பற்றிய மோசமான எண்ணங்களை
நம்மிடையே உருவாக்கினால், பின்பு அதனால் வருத்தப்பட்டு, தூக்கத்தை இழந்து, ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வேறு பல இன்னலுக்கு ஆளாக வேண்டி வரும். இந்த கெட்ட
பழக்கத்தை கைவிட்டு கடவுள் மேல் பாரத்தை போட்டு கடவுள் பார்த்து கொள்வார் என்று எண்ணுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. அதை இது போன்ற
எண்ணங்களால் வீணாக்காமல், மறந்து, மன்னித்து, மகிழ்ச்சியுடன் நடைபோடுங்கள்.
3) பாராட்டுக்காக ஏங்காதீர்கள்
உலகம் தன்னலம் பார்ப்பவர்களால் நிரம்பப்பட்டது.
அவர்கள் எந்த காரியமும் அன்றி மற்றவர்களை புகழ மாட்டார்கள். இன்று உங்களால்
ஏதேனும் ஆக வேண்டுமென்றால் உங்களை போற்றுபவர்கள், நாளை உங்களை கண்டுகொள்ள மாட்டார்கள். நீங்கள்
அதிகாரத்தில் இல்லையென்றால் உங்கள் முந்தைய சாதனைகளை மறந்து உங்களிடம்
குறை கூறுவார்கள். இதற்காக நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்?. நீங்கள் வருத்தப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் பாராட்டு ஈடானதல்ல. உங்கள்
வேலையை நீங்கள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்யுங்கள். அதற்கான பலன் உங்களைத்
தேடி வரும்.
4) பொறாமைப் படாதீர்கள்
நாம் எல்லோருக்குமே
பொறாமை எந்தளவுக்கு மனநிம்மதியை சீரழிக்கும் என்று தெரியும். நீங்கள் உங்கள்
அலுவலகத்தில் கடுமையாக உழைத்தும் பதவி உயர்வு உங்களுக்கு வராமல் உங்கள்
நண்பர்களுக்கு செல்லலாம். பல வருடங்களாக போராடியும் தொழிலில் நீங்கள் அடையாத
வெற்றி புதியதாக தொழில் தொடங்கியோருக்கு கிடைக்கலாம். அதற்காக அவர்கள் மேல்
பொறாமைப் படலாமா? கூடாது. ஒவ்வொருவருமே வாழ்க்கையில்
அவர்களுக்கான நிலையை அடைவார்கள். மற்றவரை பொறாமைப் பட்டு உங்கள் மன நிம்மதியை இழப்பதைத் தவிர.வாழ்வில் எதுவும் ஆகப்
போவதில்லை,
5) சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுங்கள்
தன்னந்தனியாக நின்று சூழ்நிலையை
மாற்ற நினைபீர்களானால் நீங்கள் தோற்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அதற்கு பதிலாக
நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறவேண்டும். அவ்வாறு மாறுவீர்களானால்
சுற்று வட்டாரம் உங்களை ஏற்று, உங்களுடன் ஒன்றி, உங்களுக்கு ஏற்றவாறு மாறத் தொடங்கும்.
6) தவிர்க்க முடியாத காயங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
இது துரதிஷ்ட்டகரமான நிலைகளை
சாதகமாக்கி கொள்ள உதவும் வழியாகும். நமது வாழ்நாளில் நாம் பல்வேறு வகையான
சங்கடங்களை, வலிகளை, எரிச்சல்களை, விபத்துக்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
இவ்வாறான, நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிலைகளில், அவற்றுடன் வாழக் கற்று கொள்ள வேண்டும். விதியின் திட்டங்களை
சில நேரங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதன் மேல் நம்பிக்கை வைத்து
வாழ்ந்தால், நம்மால் எந்த சூழலையும் எதிர் கொள்ளக்கூடிய பொறுமையையும், மனவலிமையையும், மன ஊறுதியையும் பெறலாம்.
7) செய்ய முடிவதையே செய்யுங்கள்
இது எப்பொழுதும் நினைவில் வைத்து
கொள்ள வேண்டியது. பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மால் செய்ய முடிவதற்கு அதிகமான
பொறுப்புகளை கவுரவத்துக்காக ஏற்று கொள்ள முயலுவோம். முதலில் நம்மை நாம் புரிந்து
கொள்ள வேண்டும். எது நம்மால் முடியும், எது நம்மால் முடியாது என்று அறிந்து கொள்ள வேண்டும்.
அதிகப்படியான சுமையை ஏற்றுக்கொண்டு பின்பு ஏன் வருத்தப்பட வேண்டும்?. நம்முடைய வெளியுலக நடவடிக்கைக்களை அதிகரித்து கொண்டு நம்மால் உள்ளுக்குள் மன
அமைதியைப் பெற முடியாது. நாம் நமது இயந்திரமயமான வேலைப் பளுவை குறைத்து கொண்டு, தினமும் சில நேரங்களை பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் செலவிட வேண்டும். இது நம்முடைய ஓய்வற்ற
எண்ணவோட்டத்தைக் குறைக்கும்.
8) தினமும் தியானிங்கள்!
தியானம் மனதை சாந்தப்படுத்தி
உங்களை தொந்தரவு செய்யும் எண்ணங்களிலிருந்து விடுதலை செய்யும். இதுவே மன அமைதியின்
உச்சநிலையை அடைய உதவும். முயற்சி செய்து இதன் பலனை அடையுங்கள். தினமும் அரை மணி
நேரம் முழுமையாக தியானம் செய்தால், மீதி இருபத்தி மூன்றரை மணி நேரமும் அமைதியை உணரலாம்.
தியானத்தை நேரத்தை வீணாக்கும் ஒன்றாக நினைக்காமல் அதை தினந்தோறும் செய்து வந்தால், அது அன்றாட வேலைகளில் நமது செயல் திறனை அதிகரித்து வேலைகளை
சிறப்பாகவும் விரைவாகவும் செய்ய உதவும்.
9) மனதை இருட்டறையாக்காதீர்கள்
நமது மனம் எதிலும் ஈடுபாடு
இல்லாமல் இருந்தால் அதில் கெட்ட எண்ணங்கள் புகும். அதற்கு வாய்ப்பு இல்லாமல் நல்ல விஷயங்களில் நமது மனதை ஈடுபடுத்த வேண்டும்.
நமக்கேற்ற, நமது விருப்பத்திற்கேற்ற பொழுதுபோக்கும் காரியங்களில் நேரத்தை
செலவிடலாம். நமக்கு பணம் முக்கியமா அல்லது மன அமைதி முக்கியமா என்று முடிவு எடுக்க
வேண்டும். சமூக சேவை, இறை சேவை போன்றவை நமக்கு செல்வத்தை கொடுக்காது. ஆனால் மன
நிறைவையும் திருப்தியும் கொடுக்கும். உடல்ரீதியான ஓய்வெடுக்கும் போதும் ஆரோக்கியமான விஷயங்களை படித்தல், கடவுள் நாமத்தை உச்சரித்தல் போன்றவற்றை செய்யலாம்.
10) காரியத்தை தள்ளிப்போட்டு பின்பு வருந்தாதீர்கள்
இதை செய்யலாமா செய்யக்கூடாதா என்று
தேவை இல்லாமல் வீண் விவாதம் செய்து நேரத்தை வீணாக்குவதை தவிர்க்கவேண்டும்.
வாழ்க்கையில் யாராலும் எதிர்காலத்தை சரியாக கணித்து முழுமையான திட்டத்துடன் வாழ முடியாது. நம்மிடம் உள்ள நேரத்திற்கு
ஏற்றாற்போல் திட்டமிட வேண்டும். நாம் நமது தப்புகளிலிருந்து பாடம் கற்று
கொள்ளலாம். அடுத்தமுறை அது போன்ற காரியங்களில் வெற்றி கொள்ளலாம். இந்த வேலையை நாம்
செய்யவில்லை என்றோ இந்த வேலையை நாம் சரியாக செய்யவில்லை என்றோ வருத்தப்பட்டு
ஒன்றும் ஆக போவதில்லை. கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டுமே ஒழிய வருத்தப்பட கூடாது
III) சிந்திக்க:
"Erasers are made for those who make Mistakes"
A youth replied :
"Erasers are made for those who are willing to Correct their Mistakes!!"
Attitude Matters!!
IV) இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்க்கலாமே!
1. அகாலம்: நண்பர் திரு சமயவேல் அவர்களின் வலைப்பூவில் கவிதைகள்.
2. மரபுக் கவிதைகள் படைக்க வல்ல கவிஞர் திரு. கணக்காயன்
அவர்களின் வலைப்பூவில்
3. வியக்க வைக்கும் ஒற்றுமைகள்! உண்மையைத்தேடி- நம்பினால் நம்புங்கள்!
4.
வல்லி சிம்ஹன்:
எல்லொரும் இனிதாக வாழப் பிரார்த்திக்கும் நாச்சியார் வலைப்பூவில் மாயையின் சகோதரன் மாயன்.
5. ஒருதாயின் பிரிவு 2008ரூபன்: அவர்களின் வலைப்பூவில்.
6. கவரிமானின் கற்பனைக்காவியம்: முள்ளில் ரோஜா!
இன்றைய பதிவுகள் அனைத்தும் தங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்! பிடித்திருப்பின் தங்களின் கருத்துகளை தவறாமல் பதிய வேண்டுகிறேன்! நன்றி! நன்றி! நன்றி!
நாளை சந்திப்போம்!
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறும்
காரஞ்சன்(சேஷ்)
|
|
திரு சேஷு அவர்களே இன்றைய 01
ReplyDelete01.01 தினத்தில் மிக தெளிவான நல்ல விஷயங்களை கூறியமைக்கு நன்றி
முத்தான பத்து அற உரைகள் படித்து மகிழ்ந்தேன்
ReplyDeleteதங்கள் அறிமுகங்கள் அனைத்தும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே!
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி திரு ரமணி ஐயா அவர்களே!
ReplyDeleteஅற,அறியுரைகளைக் கண்டு மகிழ்ந்தேன்.
ReplyDeleteசிறப்பான வாரமாக அமைந்திருக்கிறது.
உங்கள் பெயரும் எங்கள் ந்ருசிம்ஹனை நினைவுறுத்துக்கிறது
என் பதிவையும் மதித்து இட்டதற்கு என் நன்றிகள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! என்னுடைய முதல் நாள் பதிவில் ஆன்மிகம் இணைப்பில் நலம் தருவாய் நரசிம்மா! என ஒரு பாடல் எழுதியுள்ளேன்! முடிந்தால் படித்து தங்களின் கருத்தினைப் பதிய வேண்டுகிறேன்!
ReplyDeletehttp://esseshadri.blogspot.in/2012/11/blog-post_10.html
mikka nantri.!
ReplyDeleteenakku puthumukangal anaivarum....
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி! படைப்புகள் பிடித்திருக்கிறதா நண்பரே!
ReplyDeleteஆறாம் நாள் மிகச்சிறப்பாய் இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் கவிதைகள் மேலும் பதிவை அழகு படுத்துகின்றன.
இன்றைய பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே!
ReplyDeleteஉலகம் சுருங்கிடலாம்-மனித
ReplyDeleteஉள்ளங்கள் சுருங்குவதேன்?
நற்றலமையின்கீழ் நாமெலா மொன்றுபட்டால்
வெற்றிக்கனிவந்து வீழாதோ நம்கையில்! ///
நல்ல அறிமுகங்கள் ..
பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
தங்களின் வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
ReplyDeleteபறவைகள் படமும் ஆரம்ப வரிகளுமே அழகு.
ReplyDelete//விண்ணில் பறவைகள் பாரீர்
வெற்றியின் குறியீடாய்! //
;)))))
சூழ்நிலை சரியாக அமையும் போது மீண்டும் வருவேன் >>>>>>>>>>>>>
//ஓடிடும் நீர்சேர்ந்து வேறிடம் அடைந்தாலும்
ReplyDeleteவீசிடும் காற்றினிலே வெடித்துப் பறந்தாலும்
வேரூன்றி வளரும் விதையாய் விளங்கிடு நீ!//
மனதில் வேரூன்றிப்போகச்செய்யும் அருமையான கவிதை வரிகள். ;)
>>>>>>>>
தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! மிக்க நன்றி திரு வைகோ ஐயா அவகளே!
ReplyDeleteமின்னஞ்சலில் வந்துள்ளதாகச் சொல்லி தாங்கள் இன்று வெளியிட்டுள்ள பத்தும் மிகச்சிறந்த முத்துக்கள்.
ReplyDelete>>>>>>>
வை.கோபாலகிருஷ்ணன்said...
ReplyDeleteமின்னஞ்சலில் வந்துள்ளதாகச் சொல்லி தாங்கள் இன்று வெளியிட்டுள்ள பத்தும் மிகச்சிறந்த முத்துக்கள்.//
மிக்க நன்றி ஐயா!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன்said...
ReplyDeleteவேரூன்றி வளரும் விதையாய் விளங்கிடு நீ!//
மனதில் வேரூன்றிப்போகச்செய்யும் அருமையான கவிதை வரிகள். ;)//
ஊன்றிப் படித்து தாங்கள் இட்ட கருத்துரைக்கு என் நன்றிகள்!
தங்கள் வருகைக்கு மிகவும் நன்றி திருமதி லக்ஷ்மி அம்மா!தொடர்ந்து வருகை தாருங்கள்! நன்றி!
ReplyDeleteஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் முழுமையாக்க்ப்படிக்க முடியாமல் அறைகுறையாகவே காட்சியளிக்கின்றன.
ReplyDeleteLeft Side மட்டுமே கண்ணுக்குத்தெரிகிறது.
Right Side எழுத்துக்கள் மறைந்துள்ளன.
வெளியீட்டில் முழுமையான Perfection இல்லை.
இது தகவலுக்காக மட்டுமே.
>>>>>>>
இன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள ஆறு பதிவர்களுக்கும்
ReplyDelete[அதில் நரசிம்ஹம் போல் ஒரு சிம்ஹம் வேறு ;)))))) ]
என் மன்மார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ஆறாம் நாளையும் வெற்றிகரமாகவே முடித்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.
அன்புடன்
VGK
வை.கோபாலகிருஷ்ணன்said...
ReplyDeleteஆங்கிலத்தில் உள்ள தகவல்கள் முழுமையாக்க்ப்படிக்க முடியாமல் அறைகுறையாகவே காட்சியளிக்கின்றன.
Left Side மட்டுமே கண்ணுக்குத்தெரிகிறது.
Right Side எழுத்துக்கள் மறைந்துள்ளன.
வெளியீட்டில் முழுமையான Perfection இல்லை//
ஐயா! தாங்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி!
அதை அப்படியே மீண்டும் டைப் செய்துள்ளேன்! நன்றி ஐயா!
வை.கோபாலகிருஷ்ணன்said...
ReplyDeleteஇன்று தங்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள ஆறு பதிவர்களுக்கும்
[அதில் நரசிம்ஹம் போல் ஒரு சிம்ஹம் வேறு ;)))))) ]
என் மன்மார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
ஆறாம் நாளையும் வெற்றிகரமாகவே முடித்துள்ள தங்களுக்கு என் நன்றிகள். //
தங்கலைப் போன்ற பெரியோர்களின் ஆசிதான் துணையாய் நிற்கிரது! நன்றி ஐயா!
அருமையான கவிதைகள்! அற்புதமான தகவல்கள்! சிறப்பான பதிவர்கள் அவர்களின் சிறந்த பதிவுகள் என சிறப்பித்த பதிவு சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிரு சுரேஷ் அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteதங்கள் பதிவொன்றை நேற்றைய வலைச்சரப் பக்கத்தில் அறிமுகம் செய்திருந்தேன்! பாருங்கள்! நன்றி!
சிறந்த அறிவுரைகள் சிறப்பாக தங்கள் பணியை செம்மையாக முடித்தீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி மேடம்!
ReplyDelete//An old man Said:
ReplyDelete"Erasers are made for those who make Mistakes"
A youth replied :
"Erasers are made for those who are willing to Correct their Mistakes!!"
Attitude Matters!!//
அந்த இளைஞரின் பதில் மிகவும் சிறப்பாகவும், சிந்திக்க வைப்பதாகவும் அமைந்துள்ளது.
இப்போது சுலபமாக படிக்கும் விதமாகத் தந்துள்ளது நல்லது. நன்றியோ நன்றிகள்.
Hence, it is understood that YOU are willing to Correct your Mistakes! ;)
Thanks a Lot my dear friend!
இரண்டு நாட்கள் முன்பு கொடுத்த ஆங்கில வரிகளும் அது போலவே தான் முழுவதும் படிக்க முடியாமல் தான் இருக்கிறது.
இருப்பினும் அதை நான் ஏற்கனவே படித்து மனதில் பதித்திருந்ததால் என்னால் அதை புரிந்து கொள்ள முடிந்தது.
இதுவும் தங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன்
VGK
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன்said...
Hence, it is understood that YOU are willing to Correct your Mistakes! ;)
Thanks a Lot my dear friend!
//
தவறுகளைத் திருத்திக் கொள்வதில் தயக்கமில்லை! நன்றி ஐயா!
''..ஒன்றிணைந்தால்!
ReplyDeleteஉலகம் சுருங்கிடலாம்..''
கவிதை கருத்து அறிமுகங்கள் அனைத்தும் அருமை. இனிய நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி சகோதரி வேதா இலங்காதிலகம் அவர்களே!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகாரஞ்சன்(சேஷ்)அண்ணா
இன்று பதிவிடப்பட்ட அனைத்து பதிவுகளும் அருமை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி அறிமுகமான வலைப்பூ உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி, தொடருகிறேன் பதிவுகளை
இன்று என்படைப்புகளையும் அறிமுகம் செய்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கு நன்றி ரூபன்!
ReplyDeleteசிறப்பான அறவுரைகள்... படித்தேன்.... பயனுற்றேன்!
ReplyDeleteஅறிமுகங்களில் வல்லிம்மா பக்கம் தொடர்ந்து படிப்பது. மற்றவர்களின் பக்கங்களையும் படிக்கிறேன்.....
அறிவுரைகள் அனைத்தும் அருமை !
ReplyDeleteதொடர வாழ்த்துகள்...
அறிமுகங்கள் மட்டும் செய்யாமல் ஒரு அழகான பதிவும் இடுவது அருமை.
ReplyDeleteத்ங்கள் வருகைக்கு மிக்க நன்றி திரு.வெங்கட்நாகராஜ் அவர்களே!
ReplyDeleteநன்றி திரு சேக்னா நிஜாம் அவர்களே!
ReplyDeleteநன்றி திரு முரளிதரன் அவர்களே!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் வித்தியாசமாக, விறுவிறுப்பாக இருந்தன.
ReplyDeleteநன்றி திரு. நிஜாமுதீன் அவர்களே!
ReplyDelete