துன்பம் இனி இல்லை! சோர்வில்லை! தோற்பில்லை!- ஏழாம் நாளில் காரஞ்சன்(சேஷ்)
➦➠ by:
ஓடு ஓடு,
காரஞ்சன்,
நின்னைச் சரண்,
விதியின் கோடு
வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம்! வலைச்சரத்தில் பொறுப்பேற்று இன்றுடன் 7 நாட்கள் நிறைவடைகிறது! இயன்றவரை எனக்கிட்ட பணியினை சிறப்பாகச் செய்துள்ளேன். தங்கள் அனைவருக்கும் பிடித்த வகையில் அமைந்ததென நம்புகிறேன்! இந்த நாள் இன்பம் பயக்கும் நாளாக அனைவருக்கும் அமைய இறைவனை வேண்டுகிறேன்.
I) இன்று என்னுடைய கவிதை:
அடையாள வரிகளாய்
அகன்ற நிலமெங்கும்
உழவின் கோடுகள்!
நிலத்தினில் சாட்சியாய்
நின்றிருக்கும் மரமே-நீ
இயற்கை அன்னையிடம்
எங்கள்நிலை கூறாயோ?
எழுதும் விதிக்கரங்கள்
இரக்கம் கொள்ளாதோ?
உழுபவர் நிலை உயர
ஒருகோடு வரையாதோ?
-காரஞ்சன்(சேஷ்)
II) விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்! இந்த நான்கு வயது சிறுமியின் திறமை வியக்க வைக்கிறது!
தவறாமல் கண்டு இரசியுங்கள்!
படங்கள் உதவி: கூகிளுக்கு நன்றி!
I) இன்று என்னுடைய கவிதை:
விதியின் கோடு!
ஆழ உழுததற்கு அடையாள வரிகளாய்
அகன்ற நிலமெங்கும்
உழவின் கோடுகள்!
நிலத்தினில் சாட்சியாய்
நின்றிருக்கும் மரமே-நீ
இயற்கை அன்னையிடம்
எங்கள்நிலை கூறாயோ?
எழுதும் விதிக்கரங்கள்
இரக்கம் கொள்ளாதோ?
உழுபவர் நிலை உயர
ஒருகோடு வரையாதோ?
-காரஞ்சன்(சேஷ்)
II) விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பார்கள்! இந்த நான்கு வயது சிறுமியின் திறமை வியக்க வைக்கிறது!
தவறாமல் கண்டு இரசியுங்கள்!
---------------------------------------------------------------------------------------------------------------
III) படித்ததில் பிடித்தது!
ஓடு.... ஓடு..... ஓடு.......
உடம்பில் ரத்தம்
நன்றாக ஓடிக்கொண்டிருக்கும்
வரை நாம்
ஆரோக்கியமாக இருப்பதாகப்
பொருள். ஓடிக்கொண்டே
இருப்பது ரத்தத்தின்
உயிர்க் கடமை
.பூமி சுழல்கிறது.
சூரியனைச் சுற்றிச்
சுற்றி ஓடும்
ஓட்டத்தை பூமியால்
விட முடியுமா?...
முடியாது! பூமி
மட்டுமல்ல....எல்லாக்
கோள்களும் ஓடுவது
முதல் கடமை.
ஓடிக்கொண்டே இருக்கும்
நதி, நகரங்களை
உண்டாக்கி, நாகரிகங்களை
உருவாக்குகிறது. நகருகிற
நதி நாகரிகத்தின்
நாற்றங்கால்.
அது ஒரு
கிராமம். அந்த
ஊருக்கு ஒரு
சித்தர் வந்தார்.
விவசாயிகள் உழுது
கொண்டிருந்தனர். அவரவர்
வேலையை அவரவர்
செய்து கொண்டிருக்கும்போது,
யாருமே அவரைக்
கவனிக்கவில்லை. சித்தருக்கு
பெரும் பசி.
கூடவே கோபம்
தலைக்கேறியது. அந்த
மக்கள் மீது
கோபம். இந்த
மக்கள் பஞ்சம்
வந்தால்தான் பட்டினியின்
கொடுமையை உணருவார்கள்
என்று, " பத்து வருடம் இந்த ஊரில் மழை பெய்யாமல் போகட்டும்" என்று சாபம் விட்டார். "பெருமாளே... உன் சங்கை எடுத்து உள்ளே வை" என்று கடவுளுக்கும் உத்தரவு போட்டார். பெருமாள்
தன சங்கை
ஊதினால்தான் இடி
மழை வரும்
என்பது அந்தக்
கால அபிப்பிராயம்.
"ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து"
என்று மழையைப்
பாடினாள் ஆண்டாள்.
இனி மழை
வராது என்று
தெரிந்ததும் மக்கள்
உழவை மறந்தனர்.
சோம்பிக் கிடந்தனர்.
ஆனால் பழுத்த
விவசாயி ஒருவர்
மட்டும், மறுநாள்
காலை வழக்கம்
போல் தமது
ஏரைத் தூக்கித்
தோளில் வைத்துக்
கொண்டு புறப்பட்டு
விட்டார். ஊரே
அவரை பார்த்து
சிரித்தது. வழியில்
பெருமாள் கோயிலை
பார்த்து, "நாராயணா...
எவன் எப்படிப்
போனா எனக்கென்ன!
என் வேலையை
நான் பார்கிறேன்"
என்று கும்பிடு
போட்டுவிட்டு வயலுக்குப்
போனார்.
இதைப் பார்த்ததும்,
பெருமாளுக்கே அதிர்ச்சி.
சங்கை எடுத்துக்
கொண்டு வயலுக்கே
வந்து " பத்து வருஷம் மழை வராது... இப்ப உழுது என்ன பயன்?" என்றார். "சாமி....... பத்து வருஷம் உழாமலேயே இருந்தா உழவே எனக்கு மறந்து போயிடும். இந்தா நீ வெச்சிருக்கியே சங்கு....... அதைப் பத்து வருஷம் நீ ஊதாமலேயே இருந்தா உள்ளே அடைச்சுக்காதா/ அது மட்டுமில்ல.... எந்த பக்கம் வாய் வெச்சு ஊதனும்கிறது உனக்கு மறந்து கூட போயிடும்" என்றார்
விவசாயி.
பெருமாள் குழம்பிப்
போனார். " ஆமா, மறந்து போயிட்டா..."
என்று படபடப்பாக
தமது சங்கை
எடுத்து வாயில்
வைத்து ஊதிப்
பார்த்தார். அவ்வளவுதான்....
மேகங்கள் திரண்டன.
இடி இடித்து
மழை கொட்ட
ஆரம்பித்தது.
இந்த உலகம்
எல்லோரும் இயங்கவேண்டிய
கர்ம பூமி.
இயங்காமல் இருக்க
இங்கே எவருக்கும்
உரிமை இல்லை.
அமெரிக்காவின் பிரபல
கோடீஸ்வரர் ராக்பெல்லர், ஒரு
முறை விமானத்தில்
பயணிக்கும்போது, பக்கத்து
இருக்கையில் ஓர்
இளைஞன், அவரை
பார்த்து, "ஐயா! இந்த வயதிலும் இப்படி கடுமையாக உழைக்க வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்துவிட்டீர்கள் ....... உட்கார்ந்து சாப்பிடலாமே...." என்று
பணிவுடன் கேட்டான்.
ஆனால் அவரோ...
"நல்லது.... இந்த விமானத்தை விமானி இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்திருக்கிறார்...... இல்லையா? சிரமப்பட்டு அது மேலே ஏறிவிட்டது.... சுலபமாகப் பறக்கிறது.... இதன் இன்ஜினை இப்போது அணைத்துவிட்டால் என்ன ஆகும்? "விபத்து
ஏற்படும்"
"வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். கடுமையாக உழைத்து மேலே வரவேண்டி இருக்கிறது. மேலேதான் வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்திவிட்டால் தொழிலில் கண்டிப்பாக விபத்து ஏற்படும். உழைப்பு வருமானத்துக்காக மட்டுமல்ல. உடல் ஆரோக்கியத்துக்கும் மனமகிழ்ச்சிக்கும் கூட...." என்றார்
ராக்பெல்லர்.
உழைப்பே
உணவு...... உழைப்பே ஓய்வு...... உழைப்பே உயிர்
நிற்காமல் ரத்தம் ஓட, நாம் ஓட, இந்த பூமியும் ஓட....... சூரிய குடும்பமும் ஓடும்.
(நன்றி: K.N.RAJAN அவர்களின் மின் அஞ்சல்)
--------------------------------------------------------------------------------------------------------
IV) இன்று சில பதிவர்களின் பதிவுகள்!
2.
வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை : மரமல்லி:
3. கைகளில் அள்ளிய
நீர்: :யுகங்களைக் கடந்த கோயில்:
4. நவீன விருட்சத்தில்
காக்கைச் சிறகினிலே- சிறுகதை
5.
அலையல்ல சுனாமியில்- வழிப்போக்கனின் கதை- விச்சு
6. வளிமண்டலத்தைப்பற்றிய அருமையான பதிவு: வரலாற்றுச் சுவடுகள்!
7. கதை சொல்வதே அருகி வரும் காலத்தில் சிறுவர்களுக்கான கதைக்களஞ்சியம் : பாட்டி சொல்லும் கதைகள்!
திருமதி ருக்மணி சேஷசாயி அவர்களின் வலைப்பூ!
------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------
என்ன நண்பர்களே! உங்களுடன் பதிவுகளைப் பகிர்ந்த ஒரு வார காலமும் இனிமையான தருணங்கள் அல்லவா? பிழையேதும் இருந்திருந்தால் பொறுத்தருள்க! பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்க!
என்னைப் பரிந்துரைத்த திரு வைகோ அவர்களுக்கும், அவரின் பரிந்துரையை ஏற்று எனக்கு வாய்ப்பளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்!
என்னைப் பரிந்துரைத்த திரு வைகோ அவர்களுக்கும், அவரின் பரிந்துரையை ஏற்று எனக்கு வாய்ப்பளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் இத்தருணத்தில் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகள்!
V) எனக்குப் பிடித்த மகாகவியின் பாடலொன்றைப் பகிர்ந்து இப்பதிவினை நிறைவு செய்கிறேன்!
அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
என்றும் நன்றியுடன்
காரஞ்சன்(சேஷ்)
|
|
மிக்க நன்றி
ReplyDeleteபதிவுக்கும் - பகிர்வுக்கும்
வாழ்த்துகள்...
தங்களின் வருகைக்கு நன்றி திரு சேக்னா M..நிஜாம் அவர்களே!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகாரஞ்சன்(சேஷ்)அண்ணா
ஒருவார காலம் மிக திறமையான வகையில் பலவகைப்பட்ட வலைப்பபூக்களை அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கு வலைச்சர வாசகன் என்ற ரீதியில் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் இந்த 7 நாட்களும் பல வாசக உள்ளங்களின் பின்னூட்டங்கள் மூலம் பலவகைப்பட்ட கருத்துக்களை பெற்றுள்ளீர்கள் அவைகள் அனைத்தும் உங்களை மேலும் ஒருபடி உயர்த்திகொள்ள வழிவகை செய்யும்
இன்று 7ம் நாள் அன்று நல்ல பயன்உள்ள வலைப்பூக்களை அறிமுகம் செய்து வைத்தீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா, உங்கள் வலைப்பூபக்கம் சந்திப்போம்
வருகிற வாரம் கடமையேற்க இருக்கும் வலைச்சர ஆசிரியர் அவர்களையும் வருக வருக என்று வரவவேற்கிறேன்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி திரு ரூபன் அவர்களே!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகாரஞ்சன்(சேஷ்)அண்ணா
சிறுமியின் ஞாபக சக்தி யாவரையும் வியக்கவைக்கும் நானே பார்த பின்பு இப்படியும் ஒருசிறுமி இருக்கா? என்று என்மனதில் ஒருகேள்வி எழுந்தது நல்ல திறமையா சிறுமி சிறந்து வாழ எனது வாழ்த்துக்கள்,
இறுதியில் மகாகவி பாரதியின் பாடல் அருமையாக உள்ளது பலவகைப்பட்ட எழுச்சியை மனதில் எழவைக்கும் பாடல் தொடருகிறேன் பதிவுகளை அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உலகத்தில் ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை உள்ளது. அதைக் கண்டறிந்து, வளர்த்து மேம்படுத்துவது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் பணி. காலம் கைகொடுத்தால் இத்தகைய திறமைசாலிகள் வெளிச்சத்திற்கு வந்து புகழின் உச்சத்தை அடைகிறார்கள். இந்த வயதில் அச் சிறுமியின் திறமையைப் பார்க்கும்போது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. மகாகவியின் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது! தங்களின் இரசனைக்கு என் நன்றி!
ReplyDeleteஒரு வாரம் சிறப்பான தொகுப்பை ரசித்தோம்.நன்றி
ReplyDeleteகடந்த ஒரு வார காலம் ”வலைச்சரம்” ஆசிரியர் பணியை திறம்படச் செய்த காரஞ்சன்(சேஷ்) (esseshadri.blogspot.in) அவர்களே! நன்றி! மீண்டும் வருக!
ReplyDeleteஇந்த வாரம் முதல் வலைச்சரம் ஆசிரியை பணியை ஏற்க உள்ள உஷா அன்பரசு, வேலூர் (http://tamilmayil.blogspot.com ) அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
//ஆழ உழுததற்கு
ReplyDeleteஅடையாள வரிகளாய்
அகன்ற நிலமெங்கும்
உழவின் கோடுகள்!//
அழகான வரிகள்.
//உழுபவர் நிலை உயர
ஒருகோடு வரையாதோ?//
அற்புதமான கவிதை; மழைநீரை நம்பியுள்ள இன்றைக்கு மிகவும்
பொருத்தமான முறையில் எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
>>>>>>>>>
காணொளி கண்டேன். அந்த நான்கு வயது மழலையின் இசை அறிவினைக் கண்டு வியந்தேன்.
ReplyDeleteமுற்பிறவியிலேயே மிகச்சிறந்த இசை ஞானம் கொண்டவராக இருந்திருப்பாரோ!
இப்போதும் நம் வீட்டு சீமந்தம் வளைகாப்பு நிகழ்ச்சிகளின் போது, வீணை வாசிப்பவரை வரவழைத்து வாசிக்கச்சொல்லி, அந்த கர்ப்பணிப்பெண்ணை, வீணா கானம் கேட்கச்செய்வது வழக்கமாக உள்ளது.
குழந்தை வயிற்றில் கருவாக இருக்கும் போது, அதன் காதினில் இந்த வீணை இசையைக்கேட்டு லயிக்குமாம்.
இசையில் அதற்கு நாட்டமும் ஈடுபாடும் ஏற்படுமாம்.
நமது சாஸ்திரங்களில் சொல்லியுள்ள
இதையெல்லாம் செய்ய வழிவகுத்துக் கொடுத்துள்ள நம் முன்னோர்களை பாராட்டத்தான் வேண்டியுள்ளது.
பின்பற்றுவோர் தான் இன்று மிகவும் குறைந்து போய் விட்டனர்.
>>>>>>
//கடுமையாக உழைத்து மேலே வரவேண்டி இருக்கிறது.
ReplyDeleteமேலேதான் வந்து விட்டோமே என்று உழைப்பதை நிறுத்திவிட்டால் தொழிலில் கண்டிப்பாக விபத்து ஏற்படும்.
உழைப்பு வருமானத்துக்காக மட்டுமல்ல.
உடல் ஆரோக்கியத்துக்கும் மனமகிழ்ச்சிக்கும் கூட....//
மின்னஞ்சலில் வந்துள்ள தகவல் மிக அருமை. அதை இங்கு பகிர்ந்து கொண்டது மிகச்சிறப்பு. ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>>
இன்று தாங்கள் அடையாளம் காட்டியுள்ள அனைத்து பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>>>>>>>
இந்த வார தங்களின் வலைச்சர ஆசிரியர்பணி பாராட்டுக்குரியது. மன மகிழ்ச்சி அளிப்பதாகவே இருந்தது.
ReplyDeleteதிட்டமிட்டு அழகாகச் செய்துள்ளீர்கள்.
அதற்கு என் ஸ்பெஷல் பாராட்டுக்களும், நன்றிகளும் தெரிவித்துக்கொள்கிறேன்.
>>>>>>>>>
மஹாகவி பாரதியின் பாடலுடன் நிறைவு செய்திருப்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. அதற்கும் என் பாராட்டுக்கள்.
ReplyDeleteபிரியமுள்ள
VGK
This comment has been removed by the author.
ReplyDeleteநிலத்தினில் சாட்சியாய்
ReplyDeleteநின்றிருக்கும் மரமே-நீ
இயற்கை அன்னையிடம்
எங்கள்நிலை கூறாயோ?//
மரங்கள் நிறைய நட்டால் நல்லது என்று இயற்கை அன்னை சொன்னாள்.
உழவர்களின் நிலை உயர மரங்கள் நடுங்கள் மழை பெறுங்கள் என்று இயற்கை அன்னை கூறி
இருப்பாள் இல்லையா!
உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
ராகங்களின் பெயரை சரியாக சொல்லும் நான்கு வயது சிறுமியின்
திறமை வியக்க வைக்கிறது!
உழைப்பே உணவு...... உழைப்பே ஓய்வு...... உழைப்பே உயிர்//
மின் அஞ்சல் செய்தி உழைப்பின் உயர்வை சொல்கிறது.
நீங்கள் இன்று குறிப்பிட்ட பதிவர்கள் எல்லோரும் சிறப்பானவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நிறைவாக பாரதியின் பாடல் அருமை.
பம்பாய் ஜெயஸ்ரீ அவர்களின் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் இன்று முழுவதும்.
இனிப்பு வழங்கி இந்த வாரத்தை நிறைவு செய்ததற்கு நன்றி.
உங்களை வலைச்சரத்திற்கு பரிந்துரைத்த திரு வைகோ அவர்களுக்கும், அவரின் பரிந்துரையை ஏற்று வாய்ப்பளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் நன்றி.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteகோமதி அரசு said...
ReplyDelete//உங்களை வலைச்சரத்திற்கு பரிந்துரைத்த திரு வைகோ அவர்களுக்கும், அவரின் பரிந்துரையை ஏற்று வாய்ப்பளித்த திரு சீனா ஐயா அவர்களுக்கும் நன்றி.//
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
அன்புடன் VGK
அன்புள்ள திரு காரஞ்ஜன்,
ReplyDeleteமிகச் சிறப்பான ஒரு வாரத்தைக் கொடுத்துள்ளீர்கள்.
திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.பதிவுலகத்தை தாண்டிய நட்பு எங்களுடையது.
இன்றைக்குச் சொன்ன விவசாயி கதை அருமை.
ஓடிக்கொண்டிருக்கும் பூமியில் நாமும் இயங்கிக்கொண்டிருந்தால் தான் நல்லது என்ற கருத்து மிகவும் நன்றாக இருந்தது.
பாராட்டுக்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு T.N..முரளிதரன் அவர்களே!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே!
ReplyDeleteஅடுத்து பொறுப்பேற்க இருக்கும் திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்! நன்றி!
கவிதை வரிகளை இரசித்துப் பாராட்டிய திரு வைகோ அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
ReplyDelete//வை.கோபாலகிருஷ்ணன்said...
ReplyDeleteகாணொளி கண்டேன். அந்த நான்கு வயது மழலையின் இசை அறிவினைக் கண்டு வியந்தேன்.
முற்பிறவியிலேயே மிகச்சிறந்த இசை ஞானம் கொண்டவராக இருந்திருப்பாரோ!
//
இசைக்கு வசமாகா இதயமும் உண்டோ? நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி பூர்வ ஜன்ம ஞானமாகக் கூட இருக்கலாம். தங்களின் கருத்துரைக்கு நன்றி ஐயா!
என்னை பரிந்துரைத்த திரு வைகோ ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி! என்னுடைய பணியை இயன்றவரை பயனுள்ள பதிவுகளும்/பகிர்வுகளுமாகத் தந்து நிறைவு செய்துள்ளேன்! ஒவ்வொரு நாளும் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு நன்றி!
ReplyDeleteகோமதி அரசுsaid...
ReplyDeleteநிறைவாக பாரதியின் பாடல் அருமை.
பம்பாய் ஜெயஸ்ரீ அவர்களின் குரல் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் இன்று முழுவதும்.
இனிப்பு வழங்கி இந்த வாரத்தை நிறைவு செய்ததற்கு நன்றி.// கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே!
தங்களின் தொடர் வருகைக்கும்
கோமதி அரசுsaid...
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
// நன்றி மேடம்! உங்களின் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு மற்றூம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி!
Ranjani Narayanan said...
ReplyDeleteஅன்புள்ள திரு காரஞ்ஜன்,
மிகச் சிறப்பான ஒரு வாரத்தைக் கொடுத்துள்ளீர்கள்.
// நன்றி மேடம்!
-காரஞ்சன்(சேஷ்)
உங்களின் கவிதையும், பெருமாள் விவசாயியின் கதையும் நல்லாயிருந்துச்சு. விவசாயத்தின் மேல் நீங்கள் கொண்டுள்ள பற்றும் விளங்குகிறது. நல்ல கதைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீ திரு விச்சு அவர்களே!
ReplyDeleteஅருமையான அறிமுகங்களுடன் இனிய வாரம்!
ReplyDeleteஎன்னையும் தங்களது அறிமுக பட்டியலில் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா..!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் நிறைந்த இனிய கிறிஸ்துமஸ்+புத்தாண்டு வாழ்த்துக்கள்!
த.ம.4
ReplyDeleteஉங்களுக்கும் என் கிறிஸ்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு மற்றும்
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புடன்
VGK
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றீ திரு nizamudeenன் அவர்களே!
ReplyDeleteவரலாற்று சுவடுகள்said...
ReplyDeleteஎன்னையும் தங்களது அறிமுக பட்டியலில் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா..!//
தங்களின் வருகைக்கு நன்றீ நண்பரே!
அடியேனின் படைப்பை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திதிற்கு மிக்க நன்றி ஐயா ......
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி!
ReplyDeleteகடந்த ஒரு வாரத்தில் வலைச்சரத்திற்கு வருகை தந்து கருத்துகளைப் பகிர்ந்த அனைத்து நல்லுளங்களுக்கும் மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteநிற்காமல் ரத்தம் ஓட, நாம் ஓட, இந்த பூமியும் ஓட....... சூரிய குடும்பமும் ஓடும்.
ReplyDeleteஅருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
அருமையான பதிவுகளை பகிர்ந்த தங்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!
ReplyDeleteதங்களின் வருகைக்கு மிக்க நன்றி திருமதி உஷா அன்பரசு அவர்களே!
ReplyDelete