07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 17, 2012

வலைச்சரத்தில் முதல் நாள்-காரஞ்சன்(சேஷ்)

வலைச்சரத்தில் முதல் நாள்! -காரஞ்சன்(சேஷ்)
 
இந்த உலகினில்  என்னை அறிமுகப் படுத்திய என் தாய், தந்தை, மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு என் முதல் வணக்கம்! வலைச்சர அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்!
 
 
17-12-2012 முதல் 23-12-20012 வரை  வலைச்சர ஆசிரியர் பணிக்கு என்னைஅழைத்து இந்த அரிய வாய்ப்பை நல்கிய சீனா ஐயாவுக்கும், என்மீது நம்பிக்கை வைத்து, என்னைப் பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நெகிழ்வோடு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலைச்சரத்தில் நானும் ஒரு வாரத்துக்கு ஆசிரியர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடத்தில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இயன்ற வரையில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்கிறேன். 

பணிச்சுமையும், பிணிகளும் வாட்டிடும் இன்றைய உலகில், மன அமைதி விழையும் தருணங்களில், சிந்தனைகளுக்கு ஒரு வடிகாலாக ஒரு வலைப்பூ எனக்கென உருவாக்க விழைந்ததில், உருவானது தான்காரஞ்சன் சிந்தனைகள்”.  இந்த வலைப்பூ தொடங்க என்னைத் தூண்டிய என்னுடைய மாமனார் திரு, இ.சே.இராமன் அவர்களுக்கு இத் தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை ஒரு வலைப்பூ ஆரம்பிக்கத் தூண்டிய திரு. வெங்கட்நாகராஜ் அவர்களுக்கும் இத்தருணத்தில் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

எழுத ஆரம்பித்து  ஓராண்டுகள் ஓடிவிட்டதை எண்ணிப்பார்க்கையில் வியப்பாக இருக்கிறது. அன்றாடப் பயணத்தில் நான் காணும் காட்சிகள், சந்திக்கும் மனிதர்கள், சுற்றி நடக்கும் நிகழ்வுகள், நான் கண்டு இரசித்த புகைப்படங்கள் இவையே என்னை எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்றன.  இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியுள்ளேன்.. இந்த வலைப்பூ மூலம் கிடைத்த அறுபதுக்கும், மேலான அருமையானதோழமைகள், அவர்களின் அன்பான பின்னூட்டங்கள், எல்லாமே எனக்குக் கிடைத்திருக்கும் செல்வங்கள்! .விரும்பித் தொடரும் நல்லுளங்களின் கருத்துரைகள் எனக்கு ஊக்கமளிப்பவையாக அமைகின்றன.. என்னுடைய படைப்புகள் யாரையும் புண்படுத்தாவண்ணம் ஏதாவது ஒரு பயனுள்ள கருத்தைச் சொல்லக்கூடியதாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகிறேன்.

 இப்படி ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தவுடன் எட்டிப் பார்த்து பிரமித்துப் போனேன். எத்தனை விதமான படைப்பாளிகள்! பல வண்ணத்தில் படைப்புகள்! இந்த வண்ணங்களின் கூட்டணியில் என் எண்ணங்களுக்கும் ஒரு இடம் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். "பேனா முனை போர்வாளைவிட வலிமையானது" என்பார்கள்! வன்முறைகளும் கலாச்சார சீரழிவுகளும் பெருகி வரும் இந்நாளில், பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சகற்றும் நற்பணியினை நாம் செய்யத் துணிவோம்,துவங்குவோம்  என வேண்டுகோள் விடுக்கிறேன்!
என்னுடைய பதிவுகளில் சில உங்கள் பார்வைக்கு!. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
 
1) உழவின் பெருமையை , இன்றைய நிலையை உணர்த்தும் கவிதைகள்!

1. கனவு மெய்ப்பட வேண்டும்!
2. வாழவை!
3. நம்பிக்கைக் கீற்று!

2)  காதல்

1. நேச மலர்கள்
2. மீட்டிட வருவானோ?
3. தாகம்!
4. இமைகள்!
5. இதயத்தில் நீ
6. தனிமை!

3)  விழிப்புணர்வு/சமுதாயம்/தன்னம்பிக்கை ஊட்டும் கவிதைகள்

1) விழுந்ததும் எழுந்திரு!
2) கா!கா!கா!
3) கடைக்கண்பார்வை!
4) வேர்களை மறவா விழுதுகள்!
5) கழிவிரக்கம்!
6) முதியோர் இல்லம்!
7) நாளை நமதே!
8) வெற்றிப்பாதை!
9) எது ஊனம்?
10) புற்றுநோயைப் புரையோடவிடலாமா?

4)ஆன்மிகம்

1.  நலம் தருவாய் நரசிம்மா!

5) இயற்கைச் சீற்றம்!

1)  ஆழிப்பேரலையா? அழிவுப்பேரலையா?
2)  "தானே" உன்னால்தானே?
3)  பேய்மழை

படித்து மகிழுங்கள்!
தங்களின் மேலான கருத்துக்களைப் பகிருங்கள்!
தொடர்ந்து இந்த வாரத்தில் என் பணி சிறக்க ஆதரவு தாருங்கள்!
மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி !
 நாளை சந்திப்போம்!


என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)
 

45 comments:

  1. வாழ்த்துகள் சகோதரரே...

    ReplyDelete
  2. இன்று முதல் ஒரு வார காலம் ”வலைச்சரம்” ஆசிரியர் பொறுப்பேற்றுள்ள காரஞ்சன்(சேஷ்) (esseshadri.blogspot.in)
    அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சேஷாத்ரி. இன்று குறிப்பிட்ட உங்கள் பதிவுகளில் படிக்காதவற்றை படித்து விடுகிறேன்....

    என்னையும் இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  4. எளிமையான அருமையான அறிமுகம்
    இவ் வலைச்சர வாரம் சிறப்பாக அமைய
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. சேஷாத்ரி புதிய ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துகள். ஆரம்பமே சுவாரசியமா இருக்கு. தொடருங்க

    ReplyDelete
  6. என்னுடைய படைப்புகள் யாரையும் புண்படுத்தாவண்ணம் ஏதாவது ஒரு பயனுள்ள கருத்தைச் சொல்லக்கூடியதாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகிறேன்//

    நல்ல கருத்து அப்படியே தொடருங்கள். வாழ்த்துக்கள்.
    உங்கள் அறிமுக படலம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சகோ....இனிமையான துவக்கம்...

    ReplyDelete
  8. அன்பின் காரஞ்சன் - இப்பதிவினிற்கு லேபிள் இட வில்லையே ! விதிமுறைகளைப் பார்க்கவும், லேபிள் இடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    சுய அறிமுகம் நன்று

    நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  9. அன்புள்ள திரு E S Seshadri, Sir,

    வணக்கம்.

    தங்களை இன்று, இந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியராகக் காண்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

    தங்களின் இன்றைய சுய அறிமுகம் சிறப்பாக அமைந்துள்ளது.

    தொடர்ந்து நாளை முதல் நல்ல பல பதிவர்களை அடையாளம் காட்டுங்கள்.

    ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    VGK

    ReplyDelete
  10. உங்களின் சுய அறிமுகம் அருமையாக உள்ளது. உங்கள் தளம் எனக்குப் புதிது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவுகளை படித்துப் பார்க்கிறேன்.

    இந்த வாரம் இனிமையான வாரமாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள்.

    அதுபோலவே தாங்களும்,
    மாதா, பிதா, வலைத்தள வலைச்சர தலைமை ஆசிரியரும், குருவுமாகிய அன்பின் சீனா ஐயா மற்றும்

    தென் அகோபிலம் என்று சிறப்பாக அழைக்கப்படும் விழுப்புரம் மாவட்டம் பூவரசங்குப்பம் அருள்மிகு அமிர்தவல்லி நாயகி சமேத ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹ பெருமாள் ஆகியோரை மனதில் நினைத்து மறக்காமல் கூறியிருப்பது மிகவும் பொருத்தமே.

    ;)))))

    >>>>>>>

    ReplyDelete
  12. தாங்கள் வலைப்பூ தொடங்க உங்களைத் தூண்டிய உங்கள் மாமனார் திரு. இ.சே.இராமன் அவர்களையும், அவரை வலைப்பூ தொடங்க காரணமாய் இருந்த என் நண்பர் திரு வெங்கட்ஜி அவர்களையும் பற்றிக் கூறியிருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

    பாராட்டுக்கள்.

    >>>>>>>>

    ReplyDelete
  13. //படைப்புகள் யாரையும் புண்படுத்தாவண்ணம் ஏதாவது ஒரு பயனுள்ள கருத்தைச் சொல்லக்கூடியதாக அமைய வேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகிறேன்.//

    அழகு, அழகோ அழகு. இந்த அக்கறை எல்லாப்பதிவர்களுக்கும் மிகவும் அவசியமாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்.

    >>>>>>>>

    ReplyDelete
  14. //"பேனா முனை போர்வாளைவிட வலிமையானது" என்பார்கள்! வன்முறைகளும் கலாச்சார சீரழிவுகளும் பெருகி வரும் இந்நாளில், பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை அகற்றும் நற்பணியினை நாம் செய்யத் துணிவோம்,துவங்குவோம் என வேண்டுகோள் விடுக்கிறேன்!//

    மிகவும் நியாயமான வேண்டுகோள்.
    நன்றியோ நன்றிகள்.

    >>>>>>>

    ReplyDelete
  15. //என்மீது நம்பிக்கை வைத்து, என்னைப் பரிந்துரைத்த வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நெகிழ்வோடு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

    தங்களின் நன்றிக்கு நன்றி.

    என் நம்பிக்கை இதுவரை வீண் போனதே இல்லை.

    என் பரிந்துரையின் பேரில், திரு. சீனா ஐயா அவர்களால் வலைச்சர ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களில் தாங்கள் 19 ஆவது நபர் என்பதில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது.

    சரி .... நாளை சந்திப்போம்.

    அன்புடன்,
    VGK

    ReplyDelete
  16. வலைச்சரம் தொடுப்பதற்கு இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  17. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். தக்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  18. காரஞ்சன் !!

    நீவிர் கா ரஞ்சனா ?
    கார் அஞ்சனா ?
    தெரியவில்லை.

    ஆனாலும் தங்களது
    ஆன்மீக வலையினிலே
    அழகான விருத்தமொன்று
    ஆழ்வார் பாடலோவென
    வியக்கவைத்தது மிகையில்லை.

    நரசிங்கனைப்போற்றிய
    நின் நாவினுக்கு
    நன்றி சொல்வேன்.

    நலம் தருவாய் நரசிம்மா !!

    நின் திருத்தலத்தில் எனக்கொரு துளி
    ஜலம் தருவாய்.!


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  19. சகோதரா காலையில் நேரமின்றி உள்ளது. முடிந்தவற்றைப் பார்ப்பேன் தொடரும் பணிக்கு மறுபடியும் இனிய நல்வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. சகோதரா காலையில் நேரமின்றி உள்ளது. முடிந்தவற்றைப் பார்ப்பேன் தொடரும் பணிக்கு மறுபடியும் இனிய நல்வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  21. T N MURALIDHARAN ஐயாவிற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  22. தங்களின் வருகைக்கு நன்றி திரு.சேக்னா . நிஜாம் அவர்களே! தொடர்ந்து வர வேண்டுகிறேன்!

    ReplyDelete
  23. தங்களின் வருகைக்கு நன்றி திரு தி. தமிழ் இளங்கோஅவர்களே!

    ReplyDelete
  24. வாழ்த்துக்களை வழங்கிய திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் நன்றி! தொடருங்கள் நண்பரே!

    ReplyDelete
  25. திரு ரமணி ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete

  26. middleclassmadhavi அவர்களே! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  27. வணக்கம் லக்‌ஷ்மி அம்மா ! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  28. திருமதி கோமதி அரசு அவர்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  29. NKS ஹாஜா மைதீன் அவர்களுக்கு மிக்க நன்றி! தொடர்ந்து வாருங்கள் சகோ!

    ReplyDelete
  30. திருமதி உஷா அன்பரசு அவர்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  31. திரு வைகோ ஐயா அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி! பல வரிகளைக் கோடிட்டு பாராட்டியமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  32. திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மிக்க நன்றி! அச்சுபித்து விருது படித்து இரசித்தேன்!

    ReplyDelete
  33. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  34. கோவை2தில்லி: தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! நன்றி

    ReplyDelete
  35. கோவை2தில்லி: தங்களின் வருகை மிக்க மகிழ்வளித்தது! நன்றி

    ReplyDelete
  36. திரு சுப்பு ரத்தினம் அவர்களே! வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  37. நரசிம்மனின் அருள் தங்களுக்கு பரிபூர்ணமாய்க் கிடைக்க வேண்டிக் கொள்கிறேன் திரு சுப்பு ரத்தினம் அவர்களே! தங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  38. தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோதரி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

    ReplyDelete
  39. வணக்கம்
    காரஞ்சன் (சேஷ்

    இன்று நல்ல அறிமுகத்துடன் வலைச்சரப் பணியை கடமையேற்று நடாத்த முன்நிக்கும் உங்களை வருக வருக என்று வரவேற்கின்றேன் முதலாம் நாள் நல்ல அறிமுக விழாவுடன் ஆரம்பமாகியுள்ளது பணி செம்மையாக நடைபோட எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  40. sury siva இந்தப் பின்னு பின்றாரே!

    ReplyDelete
  41. முதல் நாள் எனை வரவேற்று ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது