சப்தப்ராகாரம் - ஆகாயம்
➦➠ by:
ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள்
ஸ்ரீரங்கம் கோவில் உட் பிராகாரங்களில் மேலே வரையப்பட்ட அந்த நாளைய ஓவியங்கள் பிரமிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை.
கீழே வைத்து வரைந்தாலே சொதப்புகிற எனக்கு எப்போதுமே ஆச்சர்யம் அவற்றைப் பார்க்கும்போது... எப்படித்தான் அளவு தப்பாமல்.. துல்லியமாய்.. வரைந்தார்களோ.. அதுவும் அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக் கொள்ளும்.. சாரம் கட்டி.. ஊஞ்சல் போல.. படுத்த வாக்கில் தான் வரைந்திருக்க வேண்டும்.. என்ன அழகு.. என்ன அழகு..
பராமரிப்பின்றி பல ஓவியங்கள் மறைந்து வருகின்றன.. அந்த நாள் சரித்திரம் அவற்றில் பதிவாகி இருக்கும்.. நிறைய விஷயங்களை நாம் இழந்து வருகிறோம்.. இப்படித்தான்..
இனி இன்றைய பதிவர்களைப் பார்ப்போமா..
சிட்டுக்குருவி விமலனின் கைவண்ணத்தில் சிறகடிக்கிறது.. கவிதை.. சிறுகதை என்று இவரும் தனித்துவமாய் தமக்கென்று ஒரு பாணி வைத்துக் கொண்டு எழுதி வருகிறார்..
கரை சேரா அலை அரசன் - அரியலூர் என்று பார்த்ததும் எனக்குள் ஒரு உற்சாகம். என் ஒண்ணாப்பு அங்கே பக்கத்தில் விக்கிரமங்கலத்தில் தான் ஆரம்பித்தது. அம்மா இல்லா வீடு கவிதையில் என்ன அழகாய் மனசைத் தொடுகிறார் பாருங்களேன்.
என். உலகநாதன் நிஜமாகவே என் உலகநாதன் தான் ! எப்படி என்று கேட்கிறீர்களா. என் சிறுகதைக்கு அவரது வாசகர் கடிதம் விகடனில் முன்பு பிரசுரம். அப்புறம் அவரே பெரிய எழுத்தாளராகி தொகுப்பும் போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்.
என் மனதில் இருந்து ப்ரியா ஓவியமும் அழகாய் வரைகிறார்.. உடனே போய்ப் பாருங்க..
சிவகுமாரன் கவிதைகள் இந்த கவிச்சித்தனின் மனசு கவிதை மயமாய் நிற்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது..
இந்திராவின் கிறுக்கல்கள் விளையாட்டா எழுதற மாதிரி காட்டிகிட்டு சட்டுனு சீரியசா எழுதி அசத்தற இவங்க சொல்லிக்கிறது ‘இம்சிக்கிறேன்னு’..
மனதில் ரசனை இருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான் என்று சொல்கிற மாதேவி பதிவுகளில் தான் ஸ்ரீலங்காவின் அழகிய பகுதிகளை பார்த்தேன்..
பழனி.கந்தசாமி அவர்களின் கருத்துக்களோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்களோ இல்லையோ.. மனதில் பட்டதி துணிச்சலாய் எழுதும் அவர் எழுத்துக்களுக்கு ஒரு வசீகரம் இருக்கவே செய்கிறது.
வானம் வெளித்த பின்னும் ஹேமாவின் கவிதைகளில் ஈர்க்கப்படாதவர்கள் யார்.. பதிவர்களில் கவிதைக்கென்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் நிச்சயம் இவங்க பேரும் உண்டு. இன்னொரு தளமான உப்பு மடச் சந்தியில் சீரியசான பதிவுகள்..
ப.தியாகு வின் கவிதைகள் வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகையில் கொட்டிக் கிடக்குது.. கவிதை ரசிகர்களுக்கு நல் விருந்து நிச்சயம்..
வசந்த மண்டபம் வைத்திருக்கும் மகேந்திரனின் கவிதைகள் வார்த்தைகளில் எளிமை.. கருத்திலோ ஆழம்..மண்வாசனையோடு மணக்க மணக்க எழுதும் இவர் பதிவுகளில் ரசனை தன்னால் வரும்.
பூசலம்பு எழுதவே மாட்டேங்கிறாங்கன்னு சிலரை நினைச்சு வருத்தப்பட்டேன்ல.. அதுல இவங்களும் உண்டு..
இந்த ஆசிரியர் பொறுப்பு எடுத்ததில் தான் தெரிய வருகிறது.. நான் படித்துக் கொண்டிருந்த பலர் எழுதுவதை நிறுத்தி பல மாதங்களாகி விட்டது..
எதனால் இப்படி நேர்ந்ததோ.. சிலர் ரொம்ப ஆர்வமாய் தினம் ஒரு பதிவு போடும் அதே வேளையில் சிலர் எழுதுவதே அபூர்வமாகிற இந்த விசித்திரம் வாழ்வில் ஒரு வேடிக்கைதான்.
சிலரின் வலைப்பகுதிக்கு போகவே முடியவில்லை.. ஏதேதோ கேட்டு மிரட்டுகிறது.. பவர் கட் நடுவில், சுற்றிக் கொண்டே இருக்கும் அவஸ்தை..
இதனால் என் நினைவில் பதிந்த சிலரின் பதிவுகளைப் பற்றி எழுத முடியவில்லை..
விளையாட்டு போல ஐந்து நாட்கள் ஓடிவிட்டன.. இன்னும் இரண்டே நாட்கள் தான்.. அதற்குள் இன்னும் கொஞ்சம் பேரைப் பார்க்கணும்..
பார்ப்போம்..
|
|
ரிஷபன் ,இது சாதாரண முயற்சி இல்லை உங்களுக்கு கிடைக்கும் நேரத்திலேயே அனைத்தையும் ஆழ்ந்து படித்து ,மின்சாரம் மரிக்கும்முன்னே விரைவாக பதிவது மிகவும் சிரமமான விஷயம் என்பதை எல்லோரும் அறிவர்.எல்லோருமே உணர்ந்த பிரச்சனை,தொடருங்கள்
ReplyDeleteநன்றி கவியாழி கண்ணதாசன்..
ReplyDeleteதங்கள் அன்பிற்கும்.. முதல் வருகைக்கும்.
அறிமுக அன்பர்களின் தளங்களுக்கு சென்று விட்டு வருகிறேன்... த.ம. இணைத்து ஓட்டும் இட்டேன்... நன்றி...
ReplyDeleteஎன் இனிய ரிஷபன் சார்,
ReplyDeleteஎன்னை அறிமுகபடுத்தியதற்கு நன்றி. நண்பர் திண்டுக்கள் தனபாலன் சொல்லி இங்கே வந்தேன். கல்லூரி காலத்தில் என் மனம் கவர்ந்த எழுத்தாளர் நீங்கள். உங்கள் வாயால் என்னை எழுத்தாளர் என்று கேட்பதற்கு நான் என்ன தவம் செய்தேனோ?
மீண்டும் நன்றி சார்!
வணக்கம் நண்பரே....
ReplyDeleteஇனிய கவிதைகளின் பதிவர்கள் அறிமுகம்..
இங்கே என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு
நன்றிகள் பல..
// அதுவும் அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக் கொள்ளும்.. சாரம் கட்டி.. ஊஞ்சல் போல.. படுத்த வாக்கில் தான் வரைந்திருக்க வேண்டும்.. என்ன அழகு.. என்ன அழகு..//
ReplyDeleteஅரங்கன் சன்னதியில்
அனைத்துமே காவியம்.
ஆகாயம்
அண்ணாந்து பார்க்கையிலே
ஆயிரம் ஓவியம்.
சுப்பு தாத்தா.
பின் குறிப்பு: பாதுகா சஹஸ்ரத்தில் பஞ்ச பூதங்களைப் பற்றி பிரமாதமா எழுதியிருக்கே ?
அதிலே இருந்து பான்ச் வரி எழுதுங்களேன். ரசிக்கிறேன். !!
ஸ்ரீரங்கம் கோவில் உட் பிராகாரங்களில் மேலே வரையப்பட்ட அந்த நாளைய ஓவியங்கள் பிரமிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை.
ReplyDeleteவியந்து ரசிக்கவைக்கும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
பராமரிப்பின்றி பல ஓவியங்கள் மறைந்து வருகின்றன.. அந்த நாள் சரித்திரம் அவற்றில் பதிவாகி இருக்கும்.. நிறைய விஷயங்களை நாம் இழந்து வருகிறோம்.. இப்படித்தான்..//
ReplyDeleteபல கோவில்களில் இப்படித்தான் முன்பு வரைந்த ஓவியங்கள் மறைந்து வருகிறது. வருத்தப்படவேண்டிய விஷயம்.
இன்றைய பகிர்வுகள் எல்லாம் அருமை எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
//ஸ்ரீரங்கம் கோவில் உட் பிராகாரங்களில் மேலே வரையப்பட்ட அந்த நாளைய ஓவியங்கள் பிரமிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை.
ReplyDeleteகீழே வைத்து வரைந்தாலே சொதப்புகிற எனக்கு எப்போதுமே ஆச்சர்யம் அவற்றைப் பார்க்கும்போது... எப்படித்தான் அளவு தப்பாமல்.. துல்லியமாய்.. வரைந்தார்களோ.. அதுவும் அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக் கொள்ளும்.. சாரம் கட்டி.. ஊஞ்சல் போல.. படுத்த வாக்கில் தான் வரைந்திருக்க வேண்டும்..
என்ன அழகு.. என்ன அழகு..//
அழகான தகவல்களைத்தாங்கி வந்துள்ள இந்தத் தங்களின்
பகிர்வும் அழகோ அழகு தான்.
>>>>>>>>>
இன்று தங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப்பதிவர்களுக்கும்
ReplyDeleteஎன் அன்பான வாழ்த்துகள்.
தங்களுக்கு என் பாராட்டுக்கள் + நன்றிகள்.
அன்புடன்
வீ.....ஜீ
VGK
நேற்றும் இன்றும் நீங்கள் அறிமுகம் செய்தவர்களில் பலரும் நான் அறிந்தவர்கள்... அரியலூர் ராசா...சிட்டுகுருவி...இந்திரா ...அய்யா பழனி கந்தசாமி நான் அடிகடி செல்லும் தளங்கள்....
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteரிஷபன்(அண்ணா)
ஸ்ரீரங்கம் கோவில் உட் பிராகாரங்களில் மேலே வரையப்பட்ட அந்த நாளைய ஓவியங்கள் பிரமிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை அப்படிப்பட்ட ஒவியத்தை படத்தின் மூலம் பார்க்க கிடைத்தது,அத்தோடு அந்த ஆலயத்தைப்பற்றிய பல கருத்துக்கள் கிடைக்கப்பெற்றது, மலேசியாவில் இருந்து வருவது என்பது சிரமம் எனக்கு இறையருள் கிடைத்தால் பாரக்கலாம்
4வது நாட்களை கடந்து 5வது நாளில் நிக்கின்றிர்கள் இன்று படைக்கப்பட்ட அனைத்துப்பதிவுகளும் அருமை அதை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் பதிவுக்கு உரிமையுடைய வலைப் பதிவாளார்கள் அனைவரருக்கும் நன்றி அனைத்த பதிவுகளையும் தொடரகிறேன்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி ரிஷபன்.உங்கள் எழுத்தின் ரசிகை நான் !
ReplyDelete''...விளையாட்டு போல ஐந்து நாட்கள் ஓடிவிட்டன.. இன்னும் இரண்டே நாட்கள் தான்.. அதற்குள் ....''
ReplyDeleteநானும் இதே தான் எழுதி ஆழம்பிக்கலாம் என்று நினைத்துத் திறந்தேன். அதுவே இங்கு எழுதப்பட்டுள்ளது.
வழமையான வரிகள் இன்றைய அறிமுகவாளர்களிற்கு, தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
சிலர் தெரிந்த பதிவர்கள். பார்க்கலாம்.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல அறிமுகங்கள் நண்பரே
ReplyDeleteபெரும் படைப்பாளிகளுக்கு மத்தியில் என்னையும் அங்கீகரித்தமைக்கு என் உள்ளம் நிறை நன்றிகள் ...
ReplyDeleteஅருமையான செய்தித் தொகுப்போடு அறிமுகம் செய்திருக்கும் பதிவர்களில் மாதேவியைத் தவிர மற்றவர்கள் புதியவர்களே. ஹேமாவைப் பின்னூட்டங்களிலேயே சந்தித்திருக்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி என்பதோடு எப்படி எல்லாத்தையும் படிக்கிறீங்கனு நினைச்சு ஆச்சரியமாவும் இருக்கு!
ReplyDeleteசாதாரணமாகவே, தரையில் சித்திரங்கள் வரைவது கஷ்டம்..சாரம் கட்டி
ReplyDeleteபடுத்துக் கொண்டு அந்த சித்திரங்களை வரைந்த அந்த கலைஞன் இன்று
இருந்தால் அவன் மானது தான் என்ன பாடு படும்?
படிக்கும் பக்கங்களில் எல்லாம் பின்னூட்டமிட வேண்டாம் என்றால் இன்னும் நிறையப் படிக்கலாம். ஆனால் ஏனோ என்னால் படிக்கும் பக்கங்களில் ஒரு ஸ்மைலியாவது போடாமல் வர முடிவதில்லை. அதனாலேயே குறைத்துப் படிக்க வேண்டியிருக்கிறது. ரசிக்கும் பதிவுகளை மின்னஞ்சலில் பெற பதிவு செய்துவிட்டால் அவர்தம் பதிவுகள் நம்மைத் தேடி வந்துவிடுவது ஒரு வசதி! DD இதில் ஜித்தர்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் பலரும் நான் அறிந்தவர்கள் என்பது எனக்கும் சந்தோஷம்.
//கீழே வைத்து வரைந்தாலே சொதப்புகிற எனக்கு எப்போதுமே ஆச்சர்யம் அவற்றைப் பார்க்கும்போது... எப்படித்தான் அளவு தப்பாமல்.. துல்லியமாய்.. வரைந்தார்களோ.. //
ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது! ஆகாய விமானத்துக்கு எப்படி பெயின்ட் அடிப்பார்கள் என்று கேட்பார் ஒருவர்.... அது மேலே பறக்கும்போது சின்னதாகி விடும் அப்போது ஈசியாக அடித்து விடுவார்கள் என்பார் மற்றொருவர். :)))
//ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது!
ReplyDeleteஆகாய விமானத்துக்கு எப்படி பெயின்ட் அடிப்பார்கள் என்று கேட்பார் ஒருவர்....
அது மேலே பறக்கும்போது சின்னதாகி விடும் அப்போது ஈசியாக அடித்து விடுவார்கள் என்பார் மற்றொருவர். :)))//
ஆஹா!
நான் நினைச்சேன் ...
நீங்க சொல்லிட்டீங்க....
அதுதான்
ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் !
அன்புடன்
vgk
//ஒரு ஜோக் ஞாபகம் வருகிறது! ஆகாய விமானத்துக்கு எப்படி பெயின்ட் அடிப்பார்கள் என்று கேட்பார் ஒருவர்.... அது மேலே பறக்கும்போது சின்னதாகி விடும் அப்போது ஈசியாக அடித்து விடுவார்கள் என்பார் மற்றொருவர். :)))//
ReplyDeleteபொய் சொல்லாதீக... நிசமாச்சுமே இப்படித்தான் பெயின்ட் அடிப்பாக அப்படின்னு தானே சொல்லிருக்காக..
இப்ப போய் இத ஜோக்குன்னு சொல்றீகளே !!
ஏற்கனவே உங்க ப்ளாக்லே பாம்பு கதை படிச்சுட்டு நான் நேத்திக்கு பூரா தூங்கல்லே அதிந்து போய் உட்கார்ந்து இருக்கேன்.
சுப்பு தாத்தா
ஓவியங்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன.
ReplyDeleteரம்யம் அறிமுகத்திற்கு மகிழ்கின்றேன். மிக்கநன்றி.
நண்பர் திண்டுக்கல் தனபாலன் அறியத் தந்தார் அவருக்கும் நன்றி.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
பூசலம்பு - எத்தனை அழகான பெயர்!
ReplyDeleteஎன் அன்பு நன்றி..
ReplyDeleteமதிப்பிற்குரிய
அப்பாதுரை..
மாதேவி..
சுப்பு தாத்தா..
வைகோ..
ஸ்ரீராம்..
ஆரண்யநிவாஸ்..
கீதா சாம்பசிவம்..
அரசன்..
வேலு..
உலகநாதன்..
தனபாலன்..
கோவைக்கவி..
ஹேமா..
அமைதிச்சாரல்..
லக்ஷ்மி..
ரூபன்..
சீனு..
கோமதி அரசு..
இராஜராஜேஸ்வரி..
மகேந்திரன்..
உலகநாதன்..
என் ஸ்பெஷல் நன்றி திரு தனபாலனுக்கு..
:)
இன்றைய அறிமுகங்களில் சிலரைப் படித்ததில்லை. புக்மார்க் செய்து வைத்துவிட்டேன். நேரம் கிடைக்கும்போது படிக்கிறேன்.
ReplyDeleteநல்ல அறிமுகங்களுக்கு மிக்க நன்றி ரிஷபன் ஜி!
சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது வாரம். அறிமுகமாகியிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி வந்து ஓவியங்களைப் பார்த்து மகிழ்ந்தாயிற்று இன்று உங்கள் பதிவின் முதல் பாதியில்.
ReplyDeleteஸ்ரீரங்கத்திற்கு எப்போது போக போகிறேன் என்று ஏங்க வைத்து விட்டீர்கள்.
இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
அனைவரின் கருத்துகளும் அருமை... நன்றி...
ReplyDeleteகடுமையான மின்வெட்டுக் காரணாமாக வலைப்பக்கமே வரமுடியவில்லை. என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ரிஷபன் சார்
ReplyDeleteசப்தப்ராகாரம் – ஆகாயம்
ReplyDeleteஸ்ரீரங்கத்துக்கோயிலின் உட்பிரகாரம் சுற்றி வந்தோம்…. வெளிப்ரகாரத்தில் தூண்கள் சிலைகள் எல்லாம் கண்டு களித்தோம்.. தகதகக்கும் மூலவரை மனக்கண்ணில் தரிசித்தோம்…
ஜில்லென்று அடிக்கும் காற்றில் படபடக்கும் பட்டாம்பூச்சியாக பறந்து சந்திரபுஷ்கரணியின் அழகை சிலாகித்தோம்.. இதோ இன்று வாசகர்களை அண்ணாந்து ஓவியங்களைப்பார்த்து பிரமிப்பின் உச்சியில் ஆழ்ந்துவிட்டோம் ரிஷபனின் எழுத்தின் அற்புதம் இது….
இதை படிக்குபோது என்னென்னவோ யோசனைகள் எனக்குள்…. போன விடுமுறைக்கு ஊருக்குச்சென்றபோது நிறைய கோயில்கள் சென்றோம்….. கோயிலுக்குச்சென்றால் நான் ரசித்து அங்கேயே நின்றுவிடுவது சிற்பங்களின் அழகும் ஓவியங்களின் அழகையும் பார்த்து தான்….
கோயில் படிக்கட்டுகளில் தொடங்கி துவாரகபாலகர்கள், கருவூலத்தில் இருக்கும் இறையின் முகத்தில் புன்னகைக்கீற்று வரை ரசிப்பேன்…. அதன்பின் உச்சத்தில் அண்ணாந்து பார்க்கும்போது அழகிய ஓவியங்களால் நிரப்பி இருக்கும் பிராகாரங்களைப்பார்த்து பலவிதமாய் யோசிப்பேன்… எப்படி எப்படி இப்படி வரைகிறார்கள் என்று… இன்று ரிஷபனின் வரிகளும் அதையே மெய்ப்பிக்கும்போது ஆச்சர்யத்தின் விளிம்பில் நானும்… அட ஆமாம்ல….
வரைந்தவர் எவரோ, படிப்பறிவு உள்ளவரோ இல்லையோ ஆனால் ரசனை மிகுந்தவரால் தான் இப்படி இத்தனை தத்ரூபமாக வரைந்துத் தள்ளமுடியும்…. கவிஞர்கள், எழுத்தாளர்கள்,ஓவியர்கள், சிற்பக்கலைஞர்கள் இப்படி எத்தனையோ வல்லுனர்கள் ரசனையுடன் கலந்து படைப்புகள் தரும்போது அதை நம்மாலும் நின்று ரசிக்கவும் முடிகிறது…
ரசனை மட்டும் இல்லையென்றால் மனிதனின் கண்டுப்பிடிப்புகள் எல்லாம் காணாது போயிருக்கும்.. ரசிக்க ஆளில்லாது போயிருக்கும்… சாதாரணமாக நின்று ஓவியம் வரையும்போதே தவறுகள் ஏற்பட சாத்தியம் இருக்கிறது….
இப்படி சாரம் கட்டி அதில் படுத்துக்கொண்டு ஓவியம் வரையவேண்டும் என்றால் அதற்கு அசாத்திய திறமை இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்….. ஓவியத்தில் துல்லியம்…. வர்ணத்தீட்டலில் கீழிருந்து பார்ப்போருக்கு நுணுக்கமான வேலைபாடுகள் கூட துல்லியமாக தெரியும்படி அசத்தலாக மின்னுவது…..
அட ரிஷபா…. உங்களுக்கு ஓவியம் கூட வரைய வருமாப்பா?
ReplyDeleteஎளிமையான வரிகள்பா… ” கீழே வைத்து வரைந்தாலே சொதப்புகிற எனக்கு “ ரசித்தேன்… தன்னடக்கமும் எளிமையும் தான் மனிதனை வாழ்க்கையில் உயர்த்தும் என்றென்றும்…. திறமைகள் இருந்தும் அதை பறைச்சாற்றாது இருக்கும் உங்க எளிமை போற்றவைக்கிறதுப்பா…
இன்றைய அறிமுகங்கள் எல்லோருமே கவிதையில், கதையில், பின்னூட்டங்களில், ஓவியத்தில் அசாத்திய திறமைப்பெற்றவர்கள்…. சிலர் நான் அறிந்தவர்கள்….. நான் அறியாதவர்களின் தளமும் சென்று பார்த்தேன்… உண்மையே ரிஷபா… எப்படிப்பா முடிகிறது? அயராத உங்க உழைப்பு இதில் தெரிகிறதுப்பா…
ஒவ்வொருவரின் தனித்தன்மையை தளங்களில் சென்று கண்டறிந்து அதை எங்களுக்கும் பகிரும் பொறுமை, அப்பப்ப நிகழும் மின்வெட்டு தடைகள் எல்லாம் ஒருபுறம்… அதை எல்லாம் தகர்த்து இதோ இன்றைய வலைச்சரம் அறிமுகப்படலத்துடன் இனிதே நிறைவேறியது அருமைப்பா…
சிட்டுக்குருவி விமலன்: இவரின் பின்னூட்டங்கள் நான் படித்ததுண்டு ரத்தினச்சுருக்கமாக அருமையாக எழுதியதை படித்து வியந்திருக்கிறேன்…
அட என் உலகநாதனைப்பற்றி படித்தபோது பெருமையும் சந்தோஷமும் ஒருசேர எனக்கும்….
சிவகுமாரன் : ஒருபானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதுபோல் கவிலைகள் ஒன்றே போதும் சிவகுமாரின் அழகிய கவிதைகளுக்கு…..
இம்சை இளவரசி இந்திராவின் எழுத்துகள் மிக ரசிக்கவைத்தன……
மாதேவி: ரம்மியமான ரசனையான எழுத்துகளின் அரசி…..
ஹேமாவின் ஜபர்தஸ்த் பின்னூட்டங்களின் ரசிகை நான்…..
வசந்தமண்டபம் மகேந்திரன் : மகியின் எழுத்துகளில் கிராமிய மணமும் அன்பும் எப்போதும் சந்தத்துடன் ஒரு பிடி தூக்கலான சுவையுடன் ரசிக்கவைக்கும் சொல்லாடல் வரிகளுடன்….. அசத்தலான அமைதியான ஆர்பாட்டமில்லாத எழுத்துகளுடன் தந்தனா தன தந்தனானா என்று நம்மை முணுமுணுக்கவைக்கும் பாடலுடன் எழுதும் மகிக்கு ஹாட்ஸ் ஆஃப்…
பூசலம்பு அட பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று இவரின் தளம் சென்று பார்த்தேன்… அடேங்கப்பா… வியப்போரின் கேள்விக்கு பதிலாக பூசலம்புக்கான அர்த்தம் அங்கே தெள்ளிய அழகாய் ” பெண்களின் கண்களை போரிடும் அம்புகள் ( பூசலம்புகள் ) என்று சொல்கிறான் கம்பன்...அவ்வளவு கூர்மையானதாம் அவை.. ” அட க்ளாஸ்ப்பா.... என்ன ஒரு ரசனை பாருங்களேன்...
ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கவைத்து ஓவியங்களை ரசிக்கவைத்து அதன் அழகில் எங்களையும் மயங்கவைத்து அந்த ரசனையூடே அறிமுகங்களின் தளங்களைப்பற்றி சொல்லி பிரமிக்கவைத்து அந்த ரசனையில் எங்களையும் பங்குக்கொள்ளவைத்து இன்றைய வலைச்சரத்தின் அழகை சிலாகித்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரிஷபா...
அட்டகாசமான தனித்தன்மையுடன் பிரமிக்கவைத்த அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...
மஞ்சூஊஊஊஊ,
ReplyDeleteதிரு. ரிஷபன் சார் ஆகாயம் பற்றி இந்தப் பதிவினில் எழுதிய மொத்த வரிகள் 150 மட்டுமே.
அதற்கு தாங்கள் ஒருத்தர் மட்டும் எழுதியுள்ள பின்னூட்ட வரிகள் மட்டுமே 253
படிக்கும் எனக்கே கண்ணைக்கட்டுதே!
மஞ்சுவின் பிஞ்சு விரல்களுக்கு வலிக்காதோ ??????
பிரியமுள்ள
கோபு அண்ணா
ஆஹா அண்ணா :-)
ReplyDeleteஸ்ரீரங்கம் கோவிலின் ஓவியங்கள் குறித்து சொல்வது உண்மை தான். பராமரிப்பில்லாமல் கரைந்து வருகின்றன.
ReplyDeleteஅறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
மாதேவியை தவிர அனைவரும் எனக்கு புதியவர்கள். ஸ்ரீராம் அவர்கள் சொல்வது போல் பின்னூட்டமிடாமல் வர முடியவில்லை. அதனாலேயே படிப்பது மிகவும் குறைவு....