சப்தப்ராகாரம்- நீர்
➦➠ by:
ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள்
வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு இந்த வாரம் எனக்கு.. உங்களை அன்போடு வரவேற்கிறேன்..
எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான். ஆனால் முன் மொழிந்த திரு. வை.கோ. என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.. என்மேல் நான் வைத்திருப்பதை விட அதிகம் !
திரு. வை.கோ.வின் பேரன்பிற்கு நன்றி.
திரு. சீனா ஸாருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிப் போக முடியாது. கடைசி நாள் அவர் சொல்லப் போகும் வார்த்தைகளுக்கான டென்ஷன் கவுண்ட் டவுன் இப்போதே ஸ்டார்ட் எனக்குள்.
பஞ்ச பூதங்களில் இந்த வாரம் நீரில் ஆரம்பிக்கலாமா..
ஸ்ரீரங்கம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அகண்ட காவிரி.. அதன் நடுவில் பள்ளி கொண்ட ரெங்கன்..
கங்கையில் புனிதமான காவிரி நடுவுபட்டு
பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்தன்னுள்
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டு
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.
ஆழ்வார்கள் அத்தனை பேரும் பாடிய பூலோக வைகுண்டம். பக்கத்திலேயே ஜம்புகேஸ்வரர். அவரும் நீருக்குள் தான் இருக்கிறார். மூலஸ்தானத்தில் காவிரி சுரக்கிறது இன்றும்.
அவ்வப்போது அரசியல் விளையாட்டில் காவிரியில் மணல் ஓடினாலும்.. இயற்கை இன்னும் கருணையோடு இருப்பதால் நீர்வரத்தும் இருக்கிறது.
அம்மாமண்டபம் அல்லது காவிரிப் பாலம் போனால் ஜில்லென்று காற்று தழுவிப் போகும்.
காவிரிக்கு நிறைய புராணக் கதைகளும் உண்டு. இந்த நாள் கதைகளும் உண்டு. ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்று எழுதினாலே காவிரியைத் தொடாமல் எழுத முடியாது.
பதிவராய் ஆரம்பித்ததே ஒரு விளையாட்டுத்தான். பிலாக் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த எனக்கு அரிச்சுவடி போதித்த ரேகா ராகவன் ஸார்..(கணினியில் இவர் காட்டுகிற உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்) என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தி எழுத வைத்து விடுகிற கே.பி. ஜனா ஸார் (கதை, கவிதை, கட்டுரை என்று கலக்கல் பதிவர் இவர்) இருவருக்கும் நன்றி சொல்வது அவர்களைச் சங்கடப் படுத்தும்.
தமிழின் நின்று போன, இப்போதும் வருகிற எல்லா வார, மாத இதழ்களிலும் எழுதி விட்டேன். வலைத்தளத்தில் எழுதுவது ஒரு வித்தியாசமான அனுபவம். பத்திரிக்கைகளில் வாசகர் கடிதம் சில நேரம் பிரசுரிப்பார்கள். சில சமயம் அதுவும் இருக்காது. எழுதியது பிடிச்சிருக்கா.. இல்லியா தெரியாது. ஆனால் இங்கோ வெளியிட்ட பத்தே நிமிடத்தில் சரசரவென பின்னூட்டங்கள்.. அடுத்த படைப்புக்கு தூண்டுதலாய்..
என் பதிவுகளை வாசித்து பின்னூட்டமிட்ட அத்தனை பேருக்கும் இதோ வலைச்சரம் மூலம் நன்றி சொல்கிறேன்.
எழுத்தில் சிறுகதை எனக்குப் பிடித்த தளம். கொஞ்சம் சீரியஸ் ரைட்டிங்க்தான் என்று சொல்வார்கள். ஆனால் நான் எழுத ஆரம்பித்தது விளையாட்டாய். எனக்கு நகைச்சுவை வரவில்லை என்கிற குறை உண்டு. போட்டோக்களில் கூட சிரிப்பதில்லை என்கிற விமர்சனம். அதை எப்படியாச்சும் உடைக்கணும்னு எழுதிய கதைகள்.. "அந்தர சுந்தரன் " .."ஒரு தலை ராகம்" இன்னும் சில.
கவிதை எனக்கு எழுத வரவில்லை என்று ஒரு விமர்சனம். (கதையே எழுத வரல.. என்கிற என் மனக் குறை நல்ல வேளையாக அவர்களுக்குத் தெரியவில்லை.) அவ்வப்போது சில கவிதை முயற்சிகளும் செய்து கொண்டிருக்கிறேன். எப்படியாச்சும் எதையாவது உருப்படியா எழுதிடுவேன் என்கிற நம்பிக்கை..
என்னை பிரமிக்க வைக்கிற சில பதிவர்கள்.. எல்லோரையுமே பிரமிக்க வைத்திருக்கிறார்கள் என்று இத்தனை நாட்கள் பிறர் ஆசிரியராய் இருந்த வலைச்சரங்கள் சொல்லி விட்டன. அதைத் தாண்டி அவர்களை இனிமேலும் புதுசாய் நான் என்ன அறிமுகம் செய்யறது.. ஹேட்ஸ் ஆஃப். அத்தனை பிரபல பதிவர்களுக்கும். ஆனாலும் என மனம் தொட்ட சிலரை உங்களோடு சேர்ந்து இன்னொரு தரம் ரசிக்கிறேன்.. சொல்லாமல் விட்டதால் மற்றவர்கள் மனம் தொடவில்லை என்று அர்த்தமில்லை.. 16 மணி நேர பவர் கட்டில் பிலாக்கிற்கு எழுதுவது என்பது அகடிதகடனா சாமர்த்தியம். (ஹப்பாடி.. புதுசா யாருக்கும் புரியாம ஒரு வார்த்தையை போட்டாச்சு)
என் பதிவுகளில் எதை சொல்ல.. எதை விட.. அதனால் சிரமம் பார்க்காமல்.. எப்போ நேரம் கிடைக்குதோ.. அப்போ என் பிலாகிற்கு வந்து பழைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க.. பாராட்டணும்னு கட்டாயம் இல்ல.. மனசுல பட்டதை தைரியமா சொல்லுங்க.. ஆப்டர் ஆல்.. நம் வாழ்க்கை இத்தோடு முடிவதில்லை.. அதைத் தாண்டிய நேசம் பகிர்வதில்தான் இருக்கு. எனக்கும் பிடிச்ச என் பதிவுகள் சிறுகதைகளில் சில..
1. மனிதம்
2. கனவாகி
3. செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட் (கல்கி வைரவிழாப் போட்டியில் பரிசு)
4.சூடிக் கொடுத்த சுடர்க் கொடி
இனி வரும் நாட்களில் நமக்குப் பிடிச்ச பதிவர்களைப் பார்ப்போமா..
உங்களோடு இந்த வாரம் என்று முடிவானதில் கூடுதல் மகிழ்ச்சியில்..
|
|
சுய அறிமுகம் அருமை...
ReplyDeleteமின் வெட்டு நேற்று முதல் 18 மணி நேரம்...
தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...
நாளையும் அசத்த வாழ்த்துக்கள்... நன்றி...
இன்று முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்க வருகின்ற எங்கள் திருச்சிக்காரர் (ஸ்ரீரங்கம்) எழுத்தாளர் திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களே வருக! கருத்துக்களை அள்ளித் தருக! என்று வரவேற்கிறேன்!
ReplyDeleteவாழ்த்துக்கள் ரிஷபன்! நீங்களும் ஸ்ரீரங்கம்தானா. :)
ReplyDelete'சப்தப்ரகாரம்' தலைப்பே மனதை கவர்ந்தது. திருவானைக்காவல் மிகவும் அழகான பிரமாண்டமான கோவில். பிரகாரமே தனி அழகு. மிகவும் ரசித்த கோவில்.
உங்கள் பதிவுகளை தவறாமல் படித்து வருகிறேன். சமீபத்தில் மனதை தொட்ட கவிதை 'வாழ்வெனும் அற்புதம்', மனதை தொட்டகதை 'பரிசு'. 'வேறென்ன கேட்பேன்' கதையையும் ரசித்து படித்தேன். இந்த பதிவில் நீங்கள் பரிந்துரைத்த 'மனிதம்', 'கனவாகி' இரண்டையும் படித்திருக்கிறேன். மீதி இரண்டையும் படிக்கிறேன். இனி வரப்போகும் பதிவுகளை படிக்க ஆவலுடன் இருக்கிறேன். தொடருங்கள்.
ReplyDeleteமூத்த பதிவரான தாங்கள வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றதற்கு என் உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
நான் எழுதிய பெண்ணே நீ யார் என்ற தொடர்கதைக்கு நீங்கள் கொடுத்த விமர்சனம் இன்னமும் என் மனதில் இருக்கின்றது. இப்போது தான் தங்களைப் பற்றி முழு விபரங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDeleteவருக. நல்வாழ்த்துகள்.
இனிய தொடக்கம். சிறப்பாகச் செல்லவிருக்கிறது வாரம். மனமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDeleteவாருங்கள் வந்து ஆச்சரியமாக அசத்துங்கள் மற்றவர்களின் வாழ்த்தை வசந்தமாக்கிக் கொள்ளுங்கள்
ReplyDeleteநன்றி தனபாலன். தமிழ் மணம் இணைக்கப் போனால் அகதி போல விரட்டுகிறது ஏதேதோ சொல்லி..
ReplyDeleteநன்றி தமிழ் இளங்கோ.. என்னை கருத்து கந்தசாமி ஆக்கிட்டீங்க போல..
ஆஹா மீனாக்ஷி மேடம்.. அப்போ நீங்களும் ஸ்ரீரங்கமா.. சொல்லவே இல்ல..
அய்யா ராமானுசம்.. தமிழ் வணக்கம்..
வாங்க ஜோதிஜி.. வாழ்த்துக்கு நன்றி..
நன்றி ராமலக்ஷ்மி மேடம்
நன்றி கவியாழி கண்ணதாசன்.. இந்த பேரே அசத்துதே..
ReplyDeleteவாவ்... இந்த வாரம் உங்கள் வாரம்... வலைச்சரம் வலைபூக்களால் பூத்துக் குலுங்கப்போகிறது இவ்வாரம்....
ReplyDeleteபாராட்டுகள் ரிஷபன் சார்.
அறிமுகம் அருமை !
ReplyDeleteசிறப்பான பணி தொடர வாழ்த்துகள்...
சுய அறிமுகமே நல்ல ஆரம்பமாக இருக்கு. வாழ்த்துகள்.தொடருங்க
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete//ஆஹா மீனாக்ஷி மேடம்.. அப்போ நீங்களும் ஸ்ரீரங்கமா.. சொல்லவே இல்ல..//
ReplyDeleteஅப்பாவோட ஊரு திருச்சி. இஷ்ட தெய்வம் ரங்கநாதர். வீடு இருந்தது அகண்ட காவிரி படித்துரை பக்கத்திலேயே. நான் பாத்தபோது அகண்ட காவிரி பரந்து, விரிந்து ஓடிக்கொண்டிருந்தது. அதன் அழகு இன்னும் என் கண்ணிலேயும், மனசுலேயும் அப்படியே இருக்கு. ஊர் மேல ரொம்ப அபிமானம் உண்டு. அதனால் நீங்கள் இருப்பது ஸ்ரீரங்கம் என்று படித்ததும் ஒரு சந்தோஷம். அதான் நீங்களும் ஸ்ரீரங்கமா என்றேன். :)
நன்றி வெங்கட்.. பூக்கள் பூக்கும் தருணம் மிக அழகுதான்..
ReplyDeleteநன்றி சேக்கனா நிஜாம்.. தங்கள் அன்பிற்கு..
நன்றி லக்ஷ்மி மேடம்.. உங்கள் வாழ்த்து எனக்கு யானை பலம்.
ஸ்ரீரங்கம் வரப்ப சொல்லுங்க மீனாக்ஷி மேடம் சந்திக்கலாம்..
வாழ்த்துக்கள் உங்கள் தளம் சுவாரசியம் மிக்கது உங்கள் பணியும் அப்படியே அமையட்டும்
ReplyDeleteஇனிமையான துவக்கம் சார்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteவலைச்சரம் இன்றைக்கு
வைகை நதி ஆனதோ !
.
ஏழு ஸ்வரங்களில் ரிஷபம் இரண்டாவது.
இந்த ஏழு நாட்களில்
ரிஷபனின் த்வனி முதலானது.
ரிஷபன் என்று ஏன் பெயர் கொண்டாரோ !
ரிஷியாக இருப்பாரோ !
மர உரியணிந்து
மானுடர்க்கு அறம் உரைப்பாரோ ?
ரிஷபம்
ராசியின் சின்னம் மாடு.
அயராது உழைப்பது.
அதன் தலைவனோ சுக்கிரன்.
அசுரர்களின் ஆசார்யன்
அவன் கண் பட்டுவிடின்
அழகெலாம்
அடிமை என்பர்.
ஐயத்துடனே தான்
'சுடர்க்கொடி' காணச்சென்றே ன்.
சும்மா நான் சொல்லவில்லை.
கோதையைக் கண்முன்னே
கொண்டு வந்தென்
கண்களைக்
குளமாக்கிவிட்டீர்கள்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
தலைப்பே மனம் கவரும்படி அமைந்தது சிறப்பு ரிஷபா....
ReplyDeleteசப்தப்ராகாரம் - நீர் “ ரிஷபனின் உச்சரிப்பு நான் பலமுறை வியந்து அம்மாவிடம் சொன்னதுண்டு “ வார்த்தை ப்ரயோகங்களை அழகாய் சின்ன பதட்டம் கூட இன்றி தவறின்றி ஸ்பஷ்டமாய் உச்சரிக்கும் ரிஷபனின் சொற்ப்ரயோகங்கள் எனக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.. எத்தனை வேகமாக பேசினாலும் உச்சரிப்பில் அத்தனை துல்லியம்...
இப்போது இந்த தலைப்பைப்பார்த்ததும் உச்சரித்துப்பார்த்தேன்.. கொஞ்சம் சிரமம் தான், திரும்ப திரும்ப உச்சரித்தேன். அழகான வார்த்தை... ஆஹா பஞ்சபூதங்கள் வலைச்சரத்தை அதரகளம் பண்ணப்போகிறதா ஒரு வாரத்திற்கு....
ரிஷபன் - ஸ்ரீரங்கம் - அரங்கன் - காவிரி இப்படி தான் எடுத்துக்கொள்ளவேண்டும்... ரிஷபன் இருந்தால் அங்கு ஸ்ரீரங்கம் - ஸ்ரீரங்கத்தில் எம்பெருமான் ரங்கனின் துயில் கொண்டுள்ள கோலம் - காவிரியின் காட்டாற்று வெள்ளம் ( இப்ப அதெல்லாம் இல்லை வெறும் மணல் தான் ) நான் அங்கு மூன்று வருடம் படிக்கும்போதே நீர் பார்க்கலை.. அதை மிக அழகாய் ரிஷபன் சொன்னது சிறப்பு அரசியல்வாதிகளின் அனுகூலத்தால்... ஆமாம் உண்மையே....
ரிஷபனிடம் எனக்கு மிகவும் பிடித்த எத்தனை நற்குணங்களில் இதோ இதுவும் ஒன்று.. எளிமை, நன்றி நவிலல்....
வை.கோ அண்ணாவின் படைப்புகளில் பலவற்றை படித்தபோது அதில் தெளிவாய் எழுதி இருப்பார் அண்ணா... ரிஷபன் சாரின் அன்பால், உதவியால் என்னை ஊக்கப்படுத்தினார் என்றுச்சொல்லி இருப்பார்....
புகழுக்கு ஏங்காத ஒரு அருமையான மனசு இந்த ரிஷபனுக்கு...
அதனால் தான் தன்னடக்கத்துடன் இப்படி எழுதி இருக்கீங்க... ரசித்து வாசித்தேன்...
உங்கள் படைப்புகளில் பல பரிசுப்பெற்றமைக்கு மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா....
நீங்கள் குறிப்பிட்டுள்ளவைகளில் இது தான் சிறந்தது என்று என்னால் ஒன்றைமட்டும் எடுத்துக்கூற இயலாது... அத்தனையும் சிறப்பானவை... கவிதையாகட்டும், சிறுகதைக்கு பெயர்போனவராச்சே நீங்க.... கதையாகட்டும், தொடர்கதையாகட்டும்.. எதையுமே சொல்லும் விதமே அலாதிப்பா.. சுவாரஸ்யத்தை கூட்டிவிடும்....
உச்சரிப்பு, எழுத்துப்பற்று, பின்னூட்டங்களால் ஊக்குவிக்கும் நல்மனசு... இதெல்லாம் உங்களுக்கு ப்ளஸ் பாயிண்ட்ஸ்....
யாருப்பா அது சொன்னது உங்களுக்கு கவிதையே எழுத வராதுன்னு... இதுல வேற ரிஷபனின் அங்கலாய்ப்பு கதையே எழுத வராதாம்... ஐயோ நீங்கெல்லாம் இப்படி சொன்னால் நான் எழுதவே வரக்கூடாது வலைப்பூவில்...
அருமையான சிந்தனை....
எல்லோரையும் வசீகரிக்கும் எழுத்துத்திறமை....
இது எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுவிடும் தன்னடக்கம்....
என்னது இது.... ரிஷபனின் பயோக்ரஃபி எழுதிண்டு இருக்கேன் போலிருக்கே...
உங்களை எழுத்துலகில் ஊக்குவித்த அறிமுகப்படுத்திய திரு ரேகாராகவன் சார் பற்றியும் திரு ஜனா பற்றியும் சொன்னது மிக மிக அருமை ரிஷபா...
தொடரட்டும் ஆசிரியர்ப்பணி... நேற்று முதல் இனி தமிழ்நாட்டில் 18 மணி மின்வெட்டாம்...
நம் மக்கள் எப்படி தெரியுமா? எத்தனை பெரிய கடினமான கஷ்டங்கள் கொடுத்தாலும் அதை தாண்டி சக்ஸஸ்ஃபுல்லா வருவாங்கப்பா..
மின்வெட்டு இத்தனை மணி நேரம் என்றாலும் அதைப்பற்றி கவிதையும், நகைச்சுவையும், கதையும் எழுதி இன்னமும் நம் பதிவர்கள் சிறப்பிப்பது பெரிய விஷயம் அல்லவாப்பா?
மின் வெட்டு இருக்கும்போது சிந்திக்க அவகாசம் கிடைக்கிறது...
பவர் வரும்போது சிந்தித்ததை செயலாக்க எளிதாய் முடிகிறது....
ரிஷபன் இந்த வார வலைச்சர ஆசிரியர் பணி என்றதும் எனக்கு சட்டுனு என்ன தோணிச்சு தெரியுமாப்பா... இவர் முதலில் கண்டிப்பா ஸ்ரீரங்கம் பற்றி எழுதுவார். அரங்கனைப்பற்றி எழுதுவார் என்று...
அட நான் நினைச்சதுப்போலவே ஸ்ரீரங்கம் வந்தாச்சு அரங்கனும் வந்தாச்சு....
வலைச்சர ஆசிரியர்ப்பணி சிறக்க அன்பு வாழ்த்துகள் ரிஷபா...
வாங்க கோவை மு.சரளா மேடம்.. உங்க ஊர் சிறுவாணித் தண்ணீரின் சுவைக்கு நான் அடிமை.. ஜில்லென்ற உங்க்கள் வாழ்த்திற்கு நன்றி..
ReplyDeleteசீனியர் ஆசிரியர் யுவராணி தமிழரசன் மேடம்.. வருகைக்கு நன்றி..
ஹப்பாடா.. சுப்பு தாத்தா என்னைப் பாராட்டிட்டார்.. நமஸ்காரம்..
மஞ்சுபாஷிணி மேடம்.. நீங்க எந்த திசையில் இருக்கீங்களோ.. அந்தப் பக்கம் பார்த்து இதோ என் அன்பின் வணக்கம்.. சின்னப்புள்ளைத் தனமா நான் கிறுக்கறதைக் கூட 'சபாஷ்னு பாஅராட்டற உங்க அன்பு உசத்தி.. பதிவர்களின் உந்து சக்தி உங்க அழகான பின்னூட்டங்கள்.. ஆனந்தக் கண்ணீருடன் நன்றி.
வாங்கோ திரு. ரிஷபன் சார் அவர்களே!
ReplyDeleteஉங்களை இன்று இங்கு வலைச்சரத்திலே [ஒருவழியாக கடைசியில் ]ஆசிரியராகக் காண்பதில் எனக்கு என் மனம் கரை புரண்டு ஓடும் காவிரி நதியாக, என் மனதில் மகிழ்ச்சி பிரபாவத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இதே நேரம் [காலை 11 க்கு மேல் 12 வரை] அம்மாமண்டபக் கரையில் தான் நான் இருந்தேன்.
அங்கிருந்தே இராஜ கோபுரத்தையும் தரிஸித்தேன்.
ஏராளமான மக்கள் கூட்டம்.
காவிரியிலும் ஓரளவு நீர் இருக்கக் கண்டேன்.
கோயிலின் யானையாரும் அம்மாமண்டபத்திலேயே என்னுடன் இருந்தார்.
அவர் மட்டுமா? அகத்திக்கீரை கட்டுகளை அசை போட்டவாறு பசுக்களும் தான்.
எல்லாம் பசுமையான நினைவுகளே!
அந்த நினைவுகளுடனேயே வீட்டுக்கு வந்தால், இரவு படுத்தும் தூக்கம் வரவில்லை.
விழித்திருந்தபோது நள்ளிரவு 2.30 மணிக்கு இனிய செய்தி - அதாவது நம் திரு. ரிஷ்பன் ஸ்ரீநிவாஸன் அவர்கள் தான், இந்த வார வலைச்சர ஆசிரியர் என்று!!
பிறகு சற்றே நிம்மதியான மனதுடன் உறங்கிப்போனேன்.
இப்போது தான் விழித்தேன். நேராக இங்கு வந்துள்ளேன்.
>>>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>>>
அன்புடன் உங்கள்,
வீ....ஜீ
//எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான்.
ReplyDeleteஆனால் சிபார்சு செய்த திரு. வை.கோ. என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.. என்மேல் நான் வைத்திருப்பதை விட அதிகம் !
திரு. வை.கோ.வின் பேரன்பிற்கு நன்றி.//
தன்னடக்கம் = திரு. ரிஷ்பன் சார் அவர்கள் என்பது எனக்குத் தெரியும்.
மற்றவர்களுக்கும் இது தெரிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இப்படி எழுதியுள்ளீர்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.
சிபாரிசு என்பது மிகப்பெரிய வார்த்தை நண்பரே. எனக்கு இந்த தங்களின் ஒரே ஒரு வார்த்தை பிரயோகத்தில் மிகவும் வருத்தமாக உள்ளது.
யாரை யார் யாருக்கு சிபாரிசு செய்ய முடியும்?
மக்களிடம் தன் செல்வாக்கினால் மகத்தான மாபெரும் வெற்றிபெற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆகும்போது அவரை முன்மொழியவும் வழிமொழியவும் இருவர் தேவைப்படுவது உண்டு.
இதெல்லாம் ஒரு சம்ப்ரதாயம் மட்டுமே. அதுபோலத்தான் இதுவும்.
தங்களை ஏதாவது ஒரு வாரம் நம் வலைச்சரத்தில் ’வலைச்சர ஆசிரியராக’ கொண்டு வரணும் என்பது என் நீண்ட நாள் ஆசை.
அது நிறைவேற இப்போது தான் ப்ராப்தம் அமைந்துள்ளது.
தங்களை அதற்கு பரிந்துரை செய்யும் பாக்யம் பெற்ற நான் தான், ஒருவழியாகக் கடைசியில் சம்மதித்த தங்களுக்கு, என் அன்பார்ந்த நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
>>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>>
//பஞ்ச பூதங்களில் இந்த வாரம் நீரில் ஆரம்பிக்கலாமா..//
ReplyDeleteநீர் ... நீரிலும் ஆரம்பிக்கலாம் ...
நெருப்பிலும் ஆரம்பிக்கலாம் ..
இந்த ஒரு வாரத்தில் எங்களுக்கு
நீர்..........
நீர்,
நெருப்பு,
காற்று,
பூமி,
வானம்
என வானளாவிய எல்லைகளைக் காட்டிச்செல்லப்போவது உண்மை.
வானமே எல்லை என்பார்கள்.
அந்த வானத்தையும் தாண்டிச்செல்வது தான் தங்கள் எழுத்து.
எனவே தாங்கள் எதில் ஆரம்பித்து எதில் முடித்தாலும் அது அழகோ அழகாக இருக்கப்போவது நிச்சயம்.
அட்வான்ஸ் வாழ்த்துகள்.
>>>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>>>
//அவ்வப்போது அரசியல் விளையாட்டில் காவிரியில் மணல் ஓடினாலும்.. இயற்கை இன்னும் கருணையோடு இருப்பதால் நீர்வரத்தும் இருக்கிறது.//
ReplyDeleteகாவிரியில் மணல் ஓடினாலும்.....
இதைவிட நம் எண்ணங்களை எழுத்தில் எப்படிப் பகிர முடியும்?
தலைவணங்குகிறேன் .. தலைவரே!
//அம்மாமண்டபம் அல்லது காவிரிப் பாலம் போனால் ஜில்லென்று காற்று தழுவிப் போகும்.//
தங்களின் இந்த எழுத்துக்களிலும் என்னை அந்த ஜில்லென்று காற்று தழுவித்தான் போகிறது. ;)))))))
>>>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>>>
மன்னிக்கவும் வை.கோ. ஸார்.. தாங்கள் என்னை விடத் தன்னடக்கம்.. சிபார்சு என்கிற வார்த்தை உங்களை சங்கடப் படுத்தி விட்டது அறிந்து எனக்கும் வருத்தம்.. என்னை உற்சாகப்படுத்தும் உங்கள் அன்பிற்கு என்றும் நன்றி..
ReplyDelete//தமிழின் நின்று போன, இப்போதும் வருகிற எல்லா வார, மாத இதழ்களிலும் எழுதி விட்டேன்.//
ReplyDeleteஅவற்றில் பலவற்றைப் படிக்கும் பாக்யம் பெற்றவன் நான்.
//வலைத்தளத்தில் எழுதுவது ஒரு வித்தியாசமான அனுபவம்.//
ஆம். மிகவும் உண்மை.
//பத்திரிக்கைகளில் வாசகர் கடிதம் சில நேரம் பிரசுரிப்பார்கள். சில சமயம் அதுவும் இருக்காது. எழுதியது பிடிச்சிருக்கா.. இல்லியா தெரியாது. ஆனால் இங்கோ வெளியிட்ட பத்தே நிமிடத்தில் சரசரவென பின்னூட்டங்கள்.. அடுத்த படைப்புக்கு தூண்டுதலாய்..//
அதே! அதே!!
அழகாகச் சொல்லிவிட்டீர்கள், நண்பரே! மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>
//எழுத்தில் சிறுகதை எனக்குப் பிடித்த தளம். கொஞ்சம் சீரியஸ் ரைட்டிங்க்தான் என்று சொல்வார்கள். ஆனால் நான் எழுத ஆரம்பித்தது விளையாட்டாய். எனக்கு நகைச்சுவை வரவில்லை என்கிற குறை உண்டு. போட்டோக்களில் கூட சிரிப்பதில்லை என்கிற விமர்சனம்.//
ReplyDeleteஇது போல தாங்கள் சொல்வதே எனக்கு நல்ல நகைச்சுவையாக உள்ளது.
//அதை எப்படியாச்சும் உடைக்கணும்னு எழுதிய கதைகள்.. "அந்தர சுந்தரன் " .."ஒரு தலை ராகம்" இன்னும் சில.//
இந்தத் தங்களின் கதைகளை இப்போ நான் நினைத்ததுமே எனக்கு சிரிப்பு வந்தது என்பதே உண்மை, சார்.
>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>
//கவிதை எனக்கு எழுத வரவில்லை என்று ஒரு விமர்சனம். (கதையே எழுத வரல.. என்கிற என் மனக் குறை நல்ல வேளையாக அவர்களுக்குத் தெரியவில்லை.) அவ்வப்போது சில கவிதை முயற்சிகளும் செய்து கொண்டிருக்கிறேன். எப்படியாச்சும் எதையாவது உருப்படியா எழுதிடுவேன் என்கிற நம்பிக்கை..//
ReplyDeleteஇதுதான் “தன்னடக்கம்” என்பதன் உச்சக்கட்டம்.
நீங்களே இப்படிச்சொன்னால் நாங்களெல்லாம் மேற்கொண்டு எழுதுவதா வேண்டாமா என்று எங்களுக்கே சந்தேகம் அல்லவா வந்து விடும்!
>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>
// 16 மணி நேர பவர் கட்டில் பிலாக்கிற்கு எழுதுவது என்பது அகடிதகடனா சாமர்த்தியம். (ஹப்பாடி.. புதுசா யாருக்கும் புரியாம ஒரு வார்த்தையை போட்டாச்சு)//
ReplyDeleteஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
”அகடிதகடனா” என்ற ஓர் அருமையான வார்த்தையை இன்று கடனா பெற்றுக்கொண்டேன் நான்.
மானியமாகப்பெற்ற மகிழ்ச்சியைத் தருகிறது எனக்கு,
>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>
//என் பதிவுகளில் எதை சொல்ல.. எதை விட.. //
ReplyDeleteஆஹா! இது தான், இங்கு தான் உண்மையை உண்மையாகச் சொல்லியுள்ளீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் சிறுகதை படைப்புகள் ஒரு நாலாயிரமாவது இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
அதில் ஏதோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல நாலே நாலு கதைகளை மட்டுமே எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.
//எனக்கும் பிடிச்ச என் பதிவுகள் சிறுகதைகளில் சில..
1. மனிதம்
2. கனவாகி
3. செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட் (கல்கி வைரவிழாப் போட்டியில் பரிசு)
4.சூடிக் கொடுத்த சுடர்க் கொடி//
அனைத்துமே அருமை என்றாலும், நான் பலமுறை திரும்பத்திரும்ப படித்து ரஸித்து மகிழ்ந்தது “செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட்”
என்ற கதையும் அதில் தாங்கள் கையாண்டுள்ள புதுமையான டெக்னிக்கும். படிப்பவர் மனதை கனக்க வைக்கும் மிகச்சிறப்பான கதையல்லவா அது.
கல்கியின் வைரவிழாப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ”வைரம்” அல்லவா அது! ;)))))))
//அதனால் சிரமம் பார்க்காமல்.. எப்போ நேரம் கிடைக்குதோ.. அப்போ என் பிலாகிற்கு வந்து பழைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க.. பாராட்டணும்னு கட்டாயம் இல்ல.. மனசுல பட்டதை தைரியமா சொல்லுங்க.. //
THAT IS Mr. RISHABAN Sir !
//ஆப்டர் ஆல்.. நம் வாழ்க்கை இத்தோடு முடிவதில்லை.. அதைத் தாண்டிய நேசம் பகிர்வதில்தான் இருக்கு. //
மிகவும் அழகான தன்னடக்கத்துடன் கூடிய சுய அறிமுகம். அருமையோ அருமை சார்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான வாழ்த்துகள்.
பதவி ஏற்புக்கும், இந்தத் தங்களின் பகிர்வுக்கும், நன்றியோ நன்றிகள்.
என்றும் அன்புடன் தங்கள்,
வீ...................ஜீ.
[VGK]
>>>>>>>>>>>>>
தொடரும்
>>>>>>>>>>>>>
சிறப்பான தொடக்கம்.
ReplyDeleteஇந்த வாரம் வலைச்சரம் மிகவும் அழகாக இருக்கப் போகிறது. வாழ்த்துக்கள் சார்.
ReplyDeleteதங்கள் மூலம் ஸ்ரீரங்கத்தை பற்றி நிறைய செய்திகளை இந்த வாரம் தெரிந்து கொள்ளலாம்.
திருமஞ்சன காவேரியைப் பற்றியும், உள் ஆண்டாளுக்கு பின்புறம் இருக்கும் ராமரைப் பற்றியும் தங்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன்.
சுட்டிகளில் இருக்கும் கதைகளில் இதுவரை படிக்காத கதைகளை நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன்.
என் அன்பு நண்பரும்,
ReplyDeleteஎன் நலம் விரும்பியும்,
என் எழுத்துலக மானஸீக குருநாதருமான
திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களைப்பற்றி மேலும் கொஞ்சூண்டு அறிய என் கீழ்க்கண்ட படைப்புகளுக்குச் செல்லுங்கள் என அனைவரையும் மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
-=-=-=-=-=-=-=-
[1]
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html
ஐம்பதாவது பிரஸவம்
[”மை டியர் ப்ளாக்கி” + குட்டிக்குழந்தை “தாலி”]
இதில் எனக்கு திரு ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களால் முதன் முதலாக வலைப்பூ ஒன்றை
உருவாக்கித்தந்த நிகழ்ச்சி சற்றே நகைச்சுவையாக எழுதியுள்ளேன்.
-=-=-=-=-=-=-=-=-=-
[2]
”முன்னுரை என்னும் முகத்திரை”
இதில் திரு ரிஷபன் அவர்களால் எனக்கு இதுவரை அளிக்கப்ப்ட்டுள்ள அவரின் தொகுப்பு நூல்கள் பற்றி படங்களுடன் எழுதியுள்ளேன்.
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html
-=-=-=-=-=-=-=-=-=-
[3]
http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html
என் முதல் சிறுகதைத் தொகுப்பு நூல்
”தாயுமானவள்” திரு ரிஷபன் அவர்கள் எழுதியுள்ள வாழ்த்துரையுடன்
இந்தப்பகுதியில் உள்ளது.
-=-=-=-=-=-=-=-=-=-
[4]
http://gopu1949.blogspot.in/2011/11/happy-happy.html
HAPPY இன்று முதல் HAPPY
இதில் திரு ரிஷபன் அவர்களைப்பற்றி ஒரு பத்தி தனியாக எழுதியுள்ளேன்.
-=-=-=-=-=-=-=-=-=-=-
[5]
http://gopu1949.blogspot.in/2011/07/1.html
”நல்லதொரு குடும்பம்”
மலரும் நினைவுகள்.
இதில் திரு. ரிஷபன் அவர்கள் தன் துணைவியாருடன் உள்ள அபூர்வமான புகைப்படம் உள்ளது.
-=-=-=-=-=-=-=-=-=-=-
என்றும் அன்புடன் தங்கள்,
VGK [வை,கோபாலகிருஷ்ணன்]
பஞ்சபூதத்தில் தொடங்கியிருப்பது சிறப்பானது தொடரும் நாட்களும் அசத்த வாழ்த்துக்களுடன் மற்றும ;ஆவலுடன் சசி.
ReplyDeleteIMPORTANT:_
ReplyDeleteஅன்பின் ரிஷபன் உமக்கு தொடர்ந்து கருத்திட்டு வந்தேன். இப்போ சில காலமாக ஏன் வரவில்லை????
உமது பக்கம் வந்ததும் கணனி துள்ளியது. என்னவெல்லாமோ செய்தும் சரிவரவில்லை. சரி என கணனி பழசு இன்டநெற் எக்ஸ்ப்புளேறா பழைய வேசன் பாவிக்கிறேன் என்று, (உமக்கு மட்டுமல்ல, சகோதரி கோமதி அரசு, திரு நடனசபாபதியிடமும் எனக்குப் போக முடியவில்லை) சரி புதுக் கணனி வாங்குவோம் என்று
விணடோஸ் 8. வாங்கி அதில் பழகி..இந்த 3 தளங்களுக்கும் சென்றால் புதுசிலும் துள்ளலாகவே உள்ளது. காலையில் உமது முகவரி அழுத்தி முயற்சித்துவிட்டு எழுதுகிறேன்.
என்னால் மேலே கூறிய 3 தளங்களிற்கும் செல்ல முடியவில்லை. துள்ளுது.
இதற்கு என்ன செய்வது? உதவி தேவை.
இது எனது நிலை ரிஷபன்.
ஆசிரிய வாரத்திற்கு இனிய நல்வாழ்த்து.
Vetha.Elangathilakam.
ரொம்பவும் அடக்கமாக வாசித்திருக் கிறீர்கள். அதுதான் உங்கள் எழுத்தின் இயல்பு என்பதினால், இங்கும் இதுக்குன்னு பூண்ட வேஷமாய் மாற்றாய்த் தெரியவில்லை. எப்பொழுதும் எப்படியோ அப்படியே இப்பொழுதும்..
ReplyDeleteஇணைய எழுத்துக்களில் நீங்கள் ரசித்தவர்களின் ரசனைகளை வாசிக்கக் காத்திருக்கிறேன்.
வை.கோ. ஸாரின் அன்புக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.. மறு ஜென்மா இருந்தால் அவரோடு பிறக்கணும்.. பால்யத்திலேயே நாங்க "சுபா" மாதிரி ஜோடி போட்டு எழுதணும்
ReplyDeleteநன்றி சசி கலா.. உங்கள் வாழ்த்தில் மகிழ்கிறேன்..
நன்றி கோவைக்கவி என் எழுத்தைப் பார்த்து மிரண்டுருச்சோ என்னவோ.. ம்ம் நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான் போல..
ஜீவி.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. வாசகனாய் நான் உணர்ந்த எல்லைகளை இன்னும் எட்டிக் கூட பார்க்க முடியல.. கொள்ளளவே அவ்வளோதான்..
நன்றி ஸ்ரீராம்.. உங்க வருகைக்கு. எனக்கு பிடிச்ச பெயர்.
ReplyDeleteநன்றி கோவை2தில்லி.. ஸ்ரீரங்கம் பத்தி எழுத எனக்கு ஆயுசு பத்தாது.. சமத்தும் பத்தாது..
வாழ்த்துகள் ரிஷபன் சார்.
ReplyDeleteஸ்ர்ர்ரிரங்கத்து மண்தான் எத்தனை எழுத்தாளர்களை உருவாக்கி இருக்கிறது.
உங்களைப் பத்திரிகைகள் மூலமே அறிமுகம். திரு வெங்கட் சொல்லித்தான் உங்களுக்கு வலைப் பக்கமும் இருக்கிறது என்று தெரியும். மிகவும் சந்தோஷமா இருக்கு. இந்த வாரம் இனிதே நடக்கும்.
சப்த பிராகாரத்தில்
ReplyDeleteநீர் தந்த
நீர்
நிலமானது மனிதத்தில்.
காற்றானது கனவாகி யதில்.
நெருப்பானது செங்கிப்பட்டியில்
வானுக்கு அழைத்துச் சென்றவன் யாரெனக்கேட்டென்.
"செங்கண்மால்தான் கொண்டு போனான்"
அடுத்த பிராகாரம் துவங்குமுன்னே
அவனிக்குத் திரும்பவேண்டும்.
சுப்பு தாத்தா.
வாழ்த்துக்கள்!
ReplyDelete(அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லக்கூடாதோ?)
வெங்கட் உங்களைப் பத்தி சொல்லிகிட்டு இருப்பார்.. வல்லிசிம்ஹன்.. உங்கள் வாழ்த்திற்கு நன்றி.
ReplyDeleteஆஹா.. சுப்பு தாத்தா வார்த்தை விளையாட்டில் சொக்கிப் போனேன்.
அப்பாதுரை ஸார்.. அது ஒண்ணும் சிரமமில்லை.. சம்சாரி மாசக் கடைசியில் குடித்தனம் பண்ணறதும்.. கிருஷ்ண பகவான் கோவர்த்தனம் தூக்கி நிக்கறதும் அகடித கடனா சாமர்த்தியங்கள்தான்.
வணக்கம்
ReplyDeleteரிஷபன்(அண்ணா)
கடந்த வாரம் யுவராணி அவர்கள் வலைச்சரத்தை பொறுப்பேற்று நடாத்தினார்கள் அவர்களை பல உள்ளங்களின் நன்றியுடன் விடைபெற்றுசென்றார்கள் இது போல பல உள்ளங்களின் வரவேற்ப்பில் நானும் ஒருதனாய் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறோம்(அண்ணா)
நல்ல விளக்கத்துடன் ஆரம்பித்துள்ளிர்கள் 1ம் நாள் போல 2ம் நாளும் வலைச்சரம் வலைப்பூ சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் தம்பி.. உன் வாழ்த்து எனக்கு ஆனந்தம் தருகிறதுப்பா
ReplyDeleteநான் : என்னப்பா அங்கே ஒரே கூட்டம்?
ReplyDeleteநம்மாளு : இது தெரியாதா?
நான் : சொன்னாத் தானே தெரியும்?
நம்மாளு: நம்ம ரிஷபன் சார் தான் ஒரு வாரத்துக்கு வலைச்சர ஆசிரியர்..
நான் : ஹைய்யா..
நம்மாளு : இங்கே உட்கார்ந்துண்டு பேசாதே..அங்கே பார்..மஞ்சு மேடமும், நம்ம வைகோ சாரும் பாக்கி நண்பர்களும் என்னமா பேசறாங்க.. நீ
போய் நாலு வார்த்தை பேசுப்பா..
நான் : இவ்ளவ் பேசினதுக்கப்பறம் நான் பேச என்ன இருக்கு..ஒன்று சொல்வேன்..இன்றைக்கு தமிழ் இலக்கியத்தில் திரு ரிஷபனுக்கு மறுக்க முடியாத இடம் ஒன்று உண்டு என்பது தான்!
நம்மாளு: ஆமாம் நீ சொல்றது ரொம்ப கரெக்ட்.. நான் கூட பார்த்திருக்கேன்..அவர் பஸ்ல போகும் போது நிறைய மிஸ்ஸுங்க அவருக்கு இடத்தை ஆஃபர் பண்றதை!
நான் : யோவ் நம்மாளு என் பேரை ரிப்பேர் பண்றதுன்னு ஒரு முடிவோடத் தான் இருக்கியா..
நம்மாளு: விளையாட்டு வேண்டாம்..
ஆரம்பமே சூப்பராப் போறது!
நம்மாளைக் காணோமேன்னு பார்த்தேன்.. வந்துட்டாரய்யா.. வந்துட்டார்..
ReplyDeleteமறுபடியும் வந்தேன்... கருத்துக்களை ரசித்தேன்... நன்றி...
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பணியேற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!சுய அறிமுகம் ஒரு எழுத்தாளரின் எண்ண அலைகளை அருமையாகப் பதிவு செய்திருக்கிறது!
ReplyDeleteநன்றி தனபாலன் ஸார்.. உங்கள் வரவை எப்போதும் எதிர்நோக்கி..
ReplyDeleteமனோ சாமிநாதன் மேடம்.. உங்களைச் சந்திக்கிற வாய்ப்பை ஏற்கெனவே மிஸ் பண்ணிட்டேன்.. இங்கே பார்த்த்துல ரொம்ப சந்தோஷம்..
ஜம்புகேஸ்வரர் காவிரி நீருடன் ஆரம்பம் அருமை.
ReplyDeleteஸ்ரீரங்கம் எனக்கும் பிடித்தமான இடம். பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
வை.கோ அண்ணாவின் நிறைந்த அன்பு காட்டாற்று வெள்ளமாய் இட்டக்கருத்தினைச்சொல்கிறது....
ReplyDeleteநான் நேற்று வேலைப்பளுவில் இருந்தாலும் அண்ணாவின் ரசனையான பின்னூட்டங்கள் படித்துக்கொண்டே இருந்தேன்..
அசத்தல் அண்ணா... எல்லோரையும் பாராட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அண்ணா...
//வலைச்சரம் இன்றைக்கு
ReplyDeleteவைகை நதி ஆனதோ !
.
ஏழு ஸ்வரங்களில் ரிஷபம் இரண்டாவது.
இந்த ஏழு நாட்களில்
ரிஷபனின் த்வனி முதலானது.
ரிஷபன் என்று ஏன் பெயர் கொண்டாரோ !
ரிஷியாக இருப்பாரோ !
மர உரியணிந்து
மானுடர்க்கு அறம் உரைப்பாரோ ?
ரிஷபம்
ராசியின் சின்னம் மாடு.
அயராது உழைப்பது.
அதன் தலைவனோ சுக்கிரன்.
அசுரர்களின் ஆசார்யன்
அவன் கண் பட்டுவிடின்
அழகெலாம்
அடிமை என்பர்.
ஐயத்துடனே தான்
'சுடர்க்கொடி' காணச்சென்றே ன்.
சும்மா நான் சொல்லவில்லை.
கோதையைக் கண்முன்னே
கொண்டு வந்தென்
கண்களைக்
குளமாக்கிவிட்டீர்கள்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com//
அப்பா அப்பா... இவ்ளோ தானா இல்ல இன்னும் இருக்கா.. அப்பா உங்க எழுத்துகள் என்னிக்குமே பயங்கர சுறுசுறுப்பும் துறுதுறுப்பும் அப்பா... நான் ரசித்து வாசித்தேன் அப்பா.. அசத்தல்....என்னமா ரசிச்சு எழுதி இருக்கீங்க....
//ரிஷபன் said...
ReplyDeleteமஞ்சுபாஷிணி மேடம்.. நீங்க எந்த திசையில் இருக்கீங்களோ.. அந்தப் பக்கம் பார்த்து இதோ என் அன்பின் வணக்கம்.. சின்னப்புள்ளைத் தனமா நான் கிறுக்கறதைக் கூட 'சபாஷ்னு பாஅராட்டற உங்க அன்பு உசத்தி.. பதிவர்களின் உந்து சக்தி உங்க அழகான பின்னூட்டங்கள்.. ஆனந்தக் கண்ணீருடன் நன்றி.//
மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா ரிஷபா...
// kovaikkavi said...
ReplyDeleteIMPORTANT:_
அன்பின் ரிஷபன் உமக்கு தொடர்ந்து கருத்திட்டு வந்தேன். இப்போ சில காலமாக ஏன் வரவில்லை????
உமது பக்கம் வந்ததும் கணனி துள்ளியது. என்னவெல்லாமோ செய்தும் சரிவரவில்லை. சரி என கணனி பழசு இன்டநெற் எக்ஸ்ப்புளேறா பழைய வேசன் பாவிக்கிறேன் என்று, (உமக்கு மட்டுமல்ல, சகோதரி கோமதி அரசு, திரு நடனசபாபதியிடமும் எனக்குப் போக முடியவில்லை) சரி புதுக் கணனி வாங்குவோம் என்று
விணடோஸ் 8. வாங்கி அதில் பழகி..இந்த 3 தளங்களுக்கும் சென்றால் புதுசிலும் துள்ளலாகவே உள்ளது. காலையில் உமது முகவரி அழுத்தி முயற்சித்துவிட்டு எழுதுகிறேன்.
என்னால் மேலே கூறிய 3 தளங்களிற்கும் செல்ல முடியவில்லை. துள்ளுது.
இதற்கு என்ன செய்வது? உதவி தேவை.
இது எனது நிலை ரிஷபன்.
ஆசிரிய வாரத்திற்கு இனிய நல்வாழ்த்து.//
அடடா என்னாச்சு வேதாம்மா....
//அப்பாதுரை said...
ReplyDeleteவாழ்த்துக்கள்!
(அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லக்கூடாதோ?)//
இதே வார்த்தையை என்னால் திரும்ப திரும்ப வாசித்து பார்த்தேன் உச்சரிக்கவே ப்ரயத்தனப்பட்டேன்.. அதென்னப்பா அப்படி ஒரு வார்த்தை... ப்ரனௌன்ஸ் பண்ணவே முடியல என்னால..
//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
ReplyDeleteநான் : என்னப்பா அங்கே ஒரே கூட்டம்?
நம்மாளு : இது தெரியாதா?
நான் : சொன்னாத் தானே தெரியும்?
நம்மாளு: நம்ம ரிஷபன் சார் தான் ஒரு வாரத்துக்கு வலைச்சர ஆசிரியர்..
நான் : ஹைய்யா..
நம்மாளு : இங்கே உட்கார்ந்துண்டு பேசாதே..அங்கே பார்..மஞ்சு மேடமும், நம்ம வைகோ சாரும் பாக்கி நண்பர்களும் என்னமா பேசறாங்க.. நீ
போய் நாலு வார்த்தை பேசுப்பா..
நான் : இவ்ளவ் பேசினதுக்கப்பறம் நான் பேச என்ன இருக்கு..ஒன்று சொல்வேன்..இன்றைக்கு தமிழ் இலக்கியத்தில் திரு ரிஷபனுக்கு மறுக்க முடியாத இடம் ஒன்று உண்டு என்பது தான்!
நம்மாளு: ஆமாம் நீ சொல்றது ரொம்ப கரெக்ட்.. நான் கூட பார்த்திருக்கேன்..அவர் பஸ்ல போகும் போது நிறைய மிஸ்ஸுங்க அவருக்கு இடத்தை ஆஃபர் பண்றதை!
நான் : யோவ் நம்மாளு என் பேரை ரிப்பேர் பண்றதுன்னு ஒரு முடிவோடத் தான் இருக்கியா..
நம்மாளு: விளையாட்டு வேண்டாம்..
ஆரம்பமே சூப்பராப் போறது!//
ஹை ரசித்து வாசித்தேன் ராமமூர்த்தி சார்.... அட்டகாசம்....
மஞ்சுபாஷிணி said...
ReplyDelete//வை.கோ அண்ணாவின் நிறைந்த அன்பு காட்டாற்று வெள்ளமாய் இட்டக்கருத்தினைச்சொல்கிறது....
நான் நேற்று வேலைப்பளுவில் இருந்தாலும் அண்ணாவின் ரசனையான பின்னூட்டங்கள் படித்துக்கொண்டே இருந்தேன்.. //
அன்பின் மஞ்சூஊஊஊஊஊஊஊ, வாங்கோ, வாங்கோ, வணக்கம். மிகவும் சந்தோஷம்மா.
//அசத்தல் அண்ணா... எல்லோரையும் பாராட்டுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அண்ணா...//
அடாடா, இதைச்சொல்வது என் அன்புத்தங்கை மட்டுமல்ல.
வலையுலகையே தன் பின்னூட்டங்களால் கலக்கிக் கொண்டிருக்கும்
“பி ன் னூ ட் ட ரா ணி”
என்று புகழ்பெற்ற திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்.
2012 செப்டம்பர் முதல் வாரத்துடன் நான் வலையுலகிலிருந்து முற்றிலுமாக என்னை விலக்கிக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன்.
அப்போது தான் தாங்கள் என்னை நெருங்கி வந்து தொலைபேசியிலும் மெயில் மூலமும், சுட்டி மூலம் சிறப்புப்பேட்டி கண்டீர்கள்.
திருவாரூர் தேர் போல அசையாமல் இருந்த என்னை தங்களின் கீழ்க்கண்ட இணைப்பினால் சற்றே அசைத்து விட்டீர்கள். நானும் அசந்து போனேன்.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
தாங்கள் மட்டுமா, தங்களுடன் தேர் வடத்தைப்பிடித்து இழுத்தவர்கள் மொத்தம் 51 பேர்கள்.
மேற்படி இணைப்புக்கு பின்னூட்டமிட்ட நட்புள்ளம் கொண்டவர்களைத்தான் சொல்கிறேன்.
உங்கள் அனைவரின் அன்புக்காக மட்டுமே 2012 அக்டோபரில் இரண்டு பதிவுகளும், நவம்பரில் இரண்டு பதிவுகளும் நான் கொடுக்கும்படியாக ஆனது.
அன்பு உள்ளங்களுக்காகவே மாதம் ஒருமுறையாவது பெளர்ணமி முழு நிலா போல ஒரேயொரு பதிவாவது பதிவிட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
பிராப்தமும் அதற்கு சாதகமாக அமையணும்.
மஞ்சு! உங்களைப்போலவே தான் நானும்.
நாம் பதிவிடுவதை விட கஷ்டப்பட்டு நல்ல பதிவுகளாகத் தருபவர்களுக்கு ஓர் உற்சாகம் ஏற்படுத்தும் வண்ணம், பின்னூட்டம் இடுவதையே நானும் மிகவும் விரும்புகிறேன்.
மின்தடை போன்ற பல்வேறு காரணங்களால் அதையும் இப்போதெல்லாம் அதிகமாகச் செய்ய முடிவதில்லை என்பதே உண்மை.
இருப்பினும் என்னால் ஓரளவு மட்டுமே, ஏதோ 5 முதல் 10 வரிகள் மட்டுமே, அதுவும் பிட் பிட் டாகத் தான் [தொடரும் போட்டு] பின்னூட்டமிட முடிகிறது.
உங்களைப்போல நீ....ண்....ட பின்னூட்டமாக கால் அல்லது அரை கிலோமீட்டர் அளவுக்குத் தர முடிவது இல்லை.
எனக்குப்பிடித்தமான இந்தப்பணியினை என் அன்புத்தங்கையான தாங்களாவது தொடர்ந்து செய்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.
வாழ்த்துகள்ம்மா......
பிரியமுள்ள
கோபு அண்ணா
அன்புள்ள ரிஷபன் ஸார்,
ReplyDeleteமுதலில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றதற்கு வாழ்த்துக்கள்.
உங்கள் கதைகள், பதிவுகள் பலவற்றையும் படித்து, சில பதிவுகளுக்கு பின்னூட்டமும் போட்டிருக்கிறேன்.
சிலசமயம் (பல சமயங்கள்) ரொம்பவும் சீரியஸ் ஆக எழுதுகிறாரே, நமக்கும் சீரியஸ் எழுத்திற்கும் காத தூரமாயிற்றே என்று பின்னூட்டம் போடாமலேயே வந்ததும் உண்டு.
உங்களது 'நண்பனின் தந்தை' சிறுகதை மிகவும் ரசித்திருக்கிறேன்.
மிகச்சிறந்த வாரமாக உங்கள் வலைச்சர வாரம் அமைய வாழ்த்துக்கள்.
// எழுதியது பிடிச்சிருக்கா.. இல்லியா தெரியாது. ஆனால் இங்கோ வெளியிட்ட பத்தே நிமிடத்தில் சரசரவென பின்னூட்டங்கள்.// மிக மிக சரி சார்
ReplyDeleteஉங்கள் சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் சார்... ஆழமான நடையில் இருக்கும் உங்கள் கதைகள் என்றுமே சிறப்பு தான்
வலைசர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்
இன்னிக்குத் தான் முதல் முதலா வரேன் நீங்க ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும். தலைப்பு அருமை. விவரங்களும் அதைவிடவும் அருமை. இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேனா எனப் பார்க்க வேண்டும்.
ReplyDeleteரஞ்சனி குறிப்பிட்ட நண்பனின் தந்தை படிச்ச நினைவு இருக்கு. மற்றப் பதிவுகளையும் படிச்சுட்டு வரேன்.
ReplyDeleteயாரை யார் யாருக்கு சிபாரிசு செய்ய முடியும்?
ReplyDeleteஎங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டு
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.//
நம் வாழ்க்கை இத்தோடு முடிவதில்லை.. அதைத் தாண்டிய நேசம் பகிர்வதில்தான் இருக்கு. //
//மக்களிடம் தன் செல்வாக்கினால் மகத்தான மாபெரும் வெற்றிபெற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆகும்போது அவரை முன்மொழியவும் வழிமொழியவும் இருவர் தேவைப்படுவது உண்டு. //
நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விஞ்சி விடுவீர்கள் போலிருக்கிறதே...
வலைச்சர ஆசிரியபணீக்கு வாழ்த்துக்கள். உங்கள் அறிமுக படலம் அருமை. பஞ்சபூதங்களை பாராட்டி வரிசை படுத்தி எழுதியதை படிக்க போகிறேன். ஊரிலிருந்து இப்போது தான் வந்தேன். தொடர்கிறேன்.
ReplyDeleteஉங்களுக்கு பிடித்தது என்று நீங்கள் குறிப்பிட்ட சிறுகதைகளை நான் படித்து இருக்கிறேன். அவை எனக்கும் மிகவும் பிடித்தது.
ReplyDelete