எங்கள் சரவெடி 4
பெரியதிரை சின்னத்திரை இரண்டு விமர்சனமும் எழுதுவார். சட்ட சம்பந்தமான கேள்விகள் கேட்டால் விடை தேடித்தருவார் உணவக அறிமுகங்கள் மற்றும் பயணக் கட்டுரைகள் இவரது ஸ்பெஷல். பயணக் கட்டுரைகளில் அழகான படங்களுக்கு நடுவே வீடியோ இணைப்பது இவரது இன்னொரு ஸ்பெஷல். உதாரணத்துக்கு ஒன்று.
கோவில் கோவிலாகச் சுற்றி அங்குலம் அங்குலமாக ரசித்து அணுஅணுவாக படம் பிடித்து நம்மையும் ரசிக்க வைக்கும் ஸ்ரீ. கோவிலை ஏகாந்தமாக படமெடுப்பதில் அலாதிப் பிரியம் இவருக்கு.மாநில வாரியாக ஊர்வாரியாக திவ்ய தேசங்கள் தனியாக என்று தொகுத்து வைத்திருக்கிறார். பானைச் சோற்றுக்கு ஒரு சோறு தாராசுரம்
31) ஹுஸைனம்மா
நேர்மையான பதிவுகளுக்குச் சொந்தக்காரர். படைப்பாற்றல் மிக்கவர். வெளிப்படையான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். டிரங்குப்பெட்டி யைத் திறந்தார் என்றால் ஏகப்பட்ட விஷயங்கள் லிங்க் சாட்சியுடன் எடுத்து விடுவார்! இவர் தொடாத சப்ஜெக்டே இருக்காது. பெண்ணுரிமைக்கு ஓங்கிக் குரல் கொடுப்பவர்! (ஆண் பதிவர்களே! ஹுசாரா இருங்க! :))
32) பால கணேஷ்! சின்னக் கடுகு என்று அன்புடன் அழைக்கப் படுபவர். மின்னல் வரிகளுக்குச் சொந்தக்காரர். ஒருமேய்ச்சல் மைதானமும் வாங்கி சில பொக்கிஷங்களை அங்கு போட்டு வைத்திருக்கிறார். இன்றைய பல பிரபல எழுத்தாளர்களுடன் நட்பில் இருக்கும் கணேஷ் பிரபல நாவல்களைகேப்சூல் நாவல் என்று சுருக்கித் தருவதில் வல்லவர். கதை விமர்சனம், சிரிப்புத் தொடர்கதை, எழுத்தாளர்கள் உடனான தன அனுபவங்களை நடைவண்டியாய்த் தந்து சுவாரஸ்யம் கூட்டியவர். ஆறு பந்துகளிலும் சிக்சர் அடித்த யுவராஜ் சிங் போல, வலைச்சரத்தில் இவருடைய வாரத்தில் ஒவ்வொரு நாளிலும் சிக்சர் அடித்து சிறப்பான பதிவுகள் இட்டவர்.
33) தீராத விளையாட்டுப் பிள்ளை வலைப் பக்கத்துக்குச் சொந்தக்காரரான RVS மன்னார்குடி மைனர் என்று அன்புடன் நண்பர்களால் அழைக்கப்படுபவர். மிகவும் கவர்ச்சியான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். நகைச்சுவை, மலரு ம் நினைவுகள், தமிழின் சிறப்பு..... எதில் வேண்டுமானாலும் கலக்குவார்
34) கீதா சாம்பசிவம் பொதுவான எண்ணங்களை இங்கு எழுதினாலும் இவரது திறமையைச் சொல்ல நான்கு வரிகள் போதாது. கண்ணன் பெருமை பேச ஒரு தளம். ஆன்மீகப் பயணங்களுக்கு ஒரு தளம். என் பயணங்கள் என்று பிறிதொரு தளம். தான் சுவைத்த சுவையை எல்லோரும் பெற்றிட இன்னொரு தளம் சாப்பிடலாம் வாங்க!
35) அப்பாதுரை.
மூன்றாம்சுழியின் சொந்தக்காரர். வலை மூலம் அறிமுகமாகிய எங்கள் இனிய நண்பர். வயது வந்தோருக்கான கதையும் எழுதுவார். நசிகேத வெண்பாவும் எழுதுவார். இதுவும் இவரின் அபிராமி அந்தாதியும் இவரின் மிகப் பெரிய சாதனைகள். இதை பாதியில் நிறுத்தி விட்டது என்போன்ற வாசகர்களுக்கு வருத்தம்.
36) R. கோபி படிப்பதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை. பயணத்திலும் என்று நிரூபிக்கிறார் இந்தப் பதிவுகளில்! இலக்கியவாதி. வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட்டை இவர் தரும்போது மலைப்பாக இருக்கும்!
37) சேட்டைக்காரன் நகைச்சுவையா ய் எழுதுவது எப்படி என்று இவரிடம் டியூஷன் எடுக்க வேண்டும்! இவருடைய அரசியல் அலசல் பதிவு சமீபத்து சிறப்புப் பதிவுகளில் ஒன்று.
38) வானம் வெளித்தபின்னும் ஹேமா. கவிதாயினி. இவர் என்ன சொல்ல வருகிறார் என்று பலசமயம் பின்னூட்டங்கள் பார்த்தே புரிந்து கொள்வோம்! வார்த்தைகள் இவர் கையில் வந்து விளையாடும். இவரின் சேமித்த கணங்களில் மிகவும் ரசித்த ஒன்று.
39) நண்பர் சிவ பாலசுப்பிரமணியன், ஆரம்பத்தில் மோ.சி.பாலன் கவிதைகள் என்று பதிவெழுதினார். சில (பல) வருடங்களுக்கு முன்பு குமுதம் இதழில், அப்பொழுது ஆசிரியராக இருந்த சுஜாதா அவர்கள் ஹைக்கூ கவிதைப் போட்டி அறிவித்த போது, இவருடைய ஹைக்கூ ஒன்றும் பிரசுரமானது. இப்பொழுது அவர் வலைப்பதிவின் பெயர் மோ சி பாலன் பதிவுகள். படைப்பாற்றல் மிக்கவர். தனியார் தகவல் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றார். நேரமின்மை காரணமாக எப்பொழுதாவதுதான் பதிவிடுவார். பல்சுவைப் பதிவர், கவிஞர்.
40) நண்பர் வெ பாலமுரளி முகநூலில் அருமையான புகைப்படங்களைப் பகிர்ந்து, கலக்குபவர். கென்யாவில் இவருடைய காமிராவில் சிறைபடுவதற்காகவே பல விலங்குகள், பறவைகள் இவரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்குமோ என்று நாங்கள் எப்பொழுதும் நினைப்போம். இவர் எடுத்த பல படங்கள் எங்கள் ப்ளாக் ஞாயிறு பகுதிகளில் வெளியாகி வருகின்றன. நகைச்சுவைப் பதிவுகளில் இவருடைய முள்ரியின் டயரி பதிவுகளுக்கு, தனி இடம் உண்டு. படங்கள் எடுப்பதில் பிசியாக உள்ளதால், பதிவுகள் எப்பொழுதா வதுதான் எழுதுவார். ஆனால் என்ன? ஆயிரம் வார்த்தைகள் கூறாததை, இவர் எடுத்த ஒரு படம் கூறிவிடுமே!
41) திருமதி ஜெயந்தி ரமணி இந்த ஆண்டு, மே மாதத்தில்தான் மணம் (மனம்) வீசும் வலைப்பூ தொடங்கியுள்ளார். அவ்வப்போது உலகமகா ஒற்றுமை போன்ற பதிவுகள் இடுகின்றார். கதை, கவிதை, கட்டுரைகள் எழுதுகின்றார். வரும் நாட்களில் இன்னும் நிறைய எழுதுவார், எழுதவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
42) குறுங்கவிதைகள், கவிதைகள், எழுதுகின்ற சசிகலா அவர்களின் வலைப்பூ தென்றல், உதாரணங்களாய் ... ஒன்று! கவிதை மட்டும் அல்ல, பொருத்தமான படங்களும் ஆங்காங்கே இணைத்து எழுதிவருகிறார்.
====================== ========================== =====================
விரியும் வலையுலகம்
Blog என்பது, Web Log என்ற இரு வார்த்தைகளின் சுருக்க வார்த்தை என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். வலைப்பதிவு: மக்கள் தங்கள் சொந்த அனுபவங்கள் மற்றும் பொழுதுபோக்கு பற்றி தினசரி பதிவுகளில் இடுகையிட முடியும், ஒரு பகிரப்பட்ட ஆன்லைன் பத்திரிகை. (Blog: A shared on-line journal where people can post daily entries about their personal experiences and hobbies.).
ஆன் லைன் பத்திரிகை என்று கூறப்பட்டாலும், அச்சுப் பத்திரிகைகளுக்கு இல்லாத பல சௌகரியங்கள், வலைப் பதிவில் உண்டு. இன்றைய, இப்போதைய எண்ணம் உடனே வெளியிடப்பட்டு, உலகத்தின் எல்லா இடங்களிலிருந்தும் விருப்பப்பட்டவர்களால் உடனே பார்க்கப்பட்டு, படிக்கப்பட்டு, உடனுக்குடன் அந்தப் பதிவு பற்றிய அபிப்பிராயங்களும், எழுதுபவருக்குக் கிடைத்துவிடும்! காணொளிக் காட்சி, ஒலி வடிவ பகிரல் எல்லாம் வலைப்பதிவுகளில்தான் சாத்தியம்.
முதல் தமிழ் வலைப்பதிவு, திரு கார்த்திக் ராமசாமி அவர்கள், 2003 ஆம் வருடம், ஜனவரி ஒன்றாம் தேதி இட்ட ஒவ்வொரு கணத்திலும் என்னும் பதிவு.
தமிழ்ப் பதிவர்கள், கூகிள் ப்ளாகர் அல்லது வோர்ட் பிரஸ் தளங்களை தங்கள் வலைப்பூக்கள் அமைக்கப் பயன்படுத்துகின்றார்கள். பத்து கூகிள் ப்ளாகர் தளத்துக்கு ஒரு வோர்ட் பிரஸ் தளம் என்னும் விகிதத்தில், பயன்பாடு உள்ளது. அதாவது, ஆறாயிரத்து எண்ணூறு கூகிள் ப்ளாகர் வலைப்பூக்கள் இருந்தால், அறுநூற்று எண்பதுக்கும் கீழேதான் வோர்ட் பிரஸ் வலைப்பூக்கள் உள்ளன.
மீண்டும் நாளை சந்திப்போம்!
|
|
அனைத்து அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஒவ்வொரு தளமும் அறிமுகம் செய்த விதம் மிகவும் அருமை...
ReplyDeleteஅறியாத சில தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...
த.ம.2
அருமையான அறிமுகங்கள்..
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட நண்பர்களுக்கு இனிய வாழ்த்துகள்.
தென்றலையும் அறிமுகபடுத்தியது கண்டு மகிழ்ந்தேன் சக உறவுகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மின்சாரமற்ற காரணத்தினால் தொடர இயலவில்லை மன்னிக்கவும்.
ReplyDeleteவலைச்சரத்தில் ஒவ்வொரு முறை அறிமுகமாகும்போதும், அது எனக்குப் புதிய உற்சாகத்தையே ஏற்படுத்துகிறது. என்னை இங்கு அறிமுகப்படுத்தி, பெருமைப்படுத்திய உங்களுக்கும், வலைச்சரம் நிர்வாகத்துக்கும், தகவலை எனக்கு அளித்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteசரவெடி நான்கு பதிவுகளையும் இப்போதுதான் படிக்க முடிந்தது. நீங்கள் அறிமுகபடுத்தி உள்ளவர்களில் சில பதிவர்களை தொடர்ந்து படித்து வருகிறேன். மற்ற பதிவர்களின் வலைபூக்களை படிக்கிறேன். அறிமுகபடுத்தியதற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும், கருத்துப் பதிவிற்கும், பாராட்டுகளுக்கும், லக்ஷ்மி, திண்டுக்கல் தனபாலன், அமைதிச்சாரல், சசிகலா, சேட்டைக்காரன், மீனாக்ஷி ஆகியோருக்கு எங்கள் ப்ளாக் நான்காவது வட்டம் சார்பில் நன்றி.
ReplyDeleteஅத்தனையும் மிக அருமையான அறிமுகங்கள்.
ReplyDeleteஒவ்வொருவரைப்பற்றியும் தாங்கள் எழுதிவரும் சிறுகுறிப்பு சுவையைக் கூட்டும் விதமாக மிகச்சிறப்பாக உள்ளது.
அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.
தங்களுக்கும், தங்கள் கடும் உழைப்புக்கும் நன்றியோ நன்றிகள்.
அன்புடன்
VGK
ஒவ்வொருமுறை சரத்தில் அறிமுகப்படுத்தும் போதும் வலையைவிட்டு அகலக்கூடாது என்கிற வைராக்கியத்தை விதைக்கிறது. தங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலின் தூதுச் செய்திக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. :-)
//முதல் தமிழ் வலைப்பதிவு, திரு கார்த்திக் ராமசாமி அவர்கள், 2003 ஆம் வருடம், ஜனவரி ஒன்றாம் தேதி இட்ட ”ஒவ்வொரு கணத்திலும்” என்னும் பதிவு. //
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
ஆர்.வி.எஸ். அவர்கள சொன்னது போல வலைச்சரத்தில் அறிமுகம் பெறுவது எங்களுக்கான எனர்ஜி பூஸ்டர். அதிலும் ‘எங்கள்‘ வாயிலாக நான் ரசிக்கப்பட்டதை அறியும் போது மகிழ்ச்சி இரு மடங்கு. என் இதயம் நிறைந்த நன்றி.
ReplyDeleteசிறப்பான தொகுப்பு. அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteகீதா மேடம் வலைப்பூக்களில் இன்னொன்றும் உள்ளது, ‘பேசும் பொற்சித்திரமே’!
மோகன்குமார், ஹுசைனம்மா, அப்பாதுரை, பால கணேஷ், சேட்டைக்காரன், கீதா சாம்பசிவம், (ஹிஹிஹி, இருக்கிற இருப்பைப் பார்த்தாப் பின்னூட்டமும் நானே கொடுத்துக்கணும்னு நினைக்கிறேன். :P :P :P :P) ஆகியோரின் வலைப்பூக்களைப் படிச்சிருக்கேன். மத்தவங்களைத் தெரியாது. இனி தான் அறிமுகப் படுத்திக்கணும். அது சரி, ஒரு சந்தேகம் எப்படிங்க இத்தனை வலைப்பக்கங்களைப் படிச்சுப்பின்னூட்டி, நீங்களும் எழுதி......ம்ஹூம், நான் தேற மாட்டேன் இதிலே! ஒரு நாளைக்கு ஒருத்தர்னு வைச்சுண்டாக் கூடம்ம்ம்ம்ம்ம்ம்??????
ReplyDeleteநிச்சயமா உங்கள் படிப்பாற்றலைப் பாராட்டி வியக்கிறேன். மத்தவங்க வலைப்பக்கத்துக்குப் போக முடியாமைக்கு இப்போதைய மின் தடையும் ஒரு காரணம்னு நினைக்கிறேன். என்றாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே எல்லாமும் பார்க்கிறதுனா முடியத்தான் இல்லை. :))))))))
வலைச்சரத்திற்கு என் மனமார்ந்த நன்றி. என் ப்ளாக் ‘manammanamviisum.blogspot.in' ஐ இங்கு அறிமுகம் செய்ததற்கு.
ReplyDeleteநன்றியுடன்
ஜெயந்தி ரமணீ
சிறப்பான அறிமுகங்கள். அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete//ஹுசாரா இருங்க//
ReplyDeleteரொம்ப சீரியஸா அறிமுகப்படுத்திக்கிட்டே வந்து, கடைசியில் காமெடியாக்கிட்டீங்க பாருங்க!! :-))))
வலைச்சரத்தை (அநேகமாக) தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களைப் போன்ற தேர்ந்த வாசிப்பாளர்களின்மூலம், நிறைய நல்ல பதிவுகளின் அறிமுகம் கிடைக்கின்றன. ஆனால்,
கீதா மேடம் சொல்வதுபோல, எப்படி அத்தனை பதிவுகளையும் வாசிப்பது என்ற மலைப்புதான் ஏற்படுகிறது.
பதிவின் அடிக்குறிப்பாக, வலைப்பூக்கள் குறித்து தரும் தகவல்கள் கூடுதல் சுவாரஸ்யம். முதலில் அதைப்படித்துவிட்டுத்தான், அறிமுகங்களைப் படிக்கீறேன்.
ஒரு விஷயம் கவனிச்சீங்களா, பதிவுலகின் முதல் தமிழ் வலைப்பதிவிலும் பெண்கள் நலனே பேசப்பட்டுள்ளது!! :-)))
39, 40 & 41 are new to me.
ReplyDeleteThanks
சிறப்பான அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.வலையுலகம் பற்றிய தகவல்கள் அருமை.
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களும் மிக் அருமை
ReplyDeleteசரவெடி சூப்பர் வெடியாக இருக்கே..
ஆனால் எல்லாத்தையும் படிக்க தான் நேரம் கிடைக்கவில்லை/.
சிறப்பான பதிவர்களையும் சிறப்பு பதிவுகளையும் சிறப்பாய் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteவருகை தந்து, கருத்துரைத்து, வாழ்த்திய வை.கோபாலகிருஷ்ணன், ஆர் வி எஸ், பால கணேஷ், ராமலக்ஷ்மி, கீதா சமபசிவம், ஜெயந்தி ரமணீ, கோவை2தில்லி, ஹுஸைனம்மா, மோகன் குமார், ராம்வி, ஜலீலா கமால், எஸ் சுரேஷ் ஆகியோருக்கு, எங்கள் ப்ளாக் நான்காவது வட்டம் சார்பில் நன்றி .
ReplyDeleteகீதா சமபசிவம்//
ReplyDeleteயாராக்கும் இது?? சமபசிவம்??? புதுசா இருக்கே? இம்பொசிஷன் எழுதுங்க முதல்லே. லக்ஷம் தரம். :P :P :P
கீதா சாம்பசிவம்
ReplyDeleteகீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கூகிள் செய்த குறும்புக்கு நான் இம்போசிஷன் எழுதணுமா?
ஹூஸைனம்மா கணக்குல புலின்றதை மறந்துட்டீங்களே? மூன்றாம் சுழி பற்றிய குறிப்புக்கு நன்றி.
ReplyDeleteபதிவு எனும் ஊடகப்பிரிவை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் மிகச் சிலரில் ஒருவர் மோகன்குமார்.
ReplyDeleteகூகில் குறும்பா? ஒபாமா மாதிரி அடுத்தவங்க மேலே பழி பேடு அஇ மீன் போடுறீங்களே. பக்கத்துல பெஞ்சு ஏதானும் இருக்கா?
ReplyDeleteநண்பர்களின் தளங்கள் இன்று அறிமுகம். சிறப்பான அறிமுகங்களுக்கும் வலைப்பூக்கள் பற்றிய தகவல்களுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteமிகப் பெரியவர்களோடு நானும்....மிக்க நன்றி !
ReplyDeleteநிறைய அறிமுகங்கள் அனைவருக்கும் தங்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
கீதா சம சிவம் என்று அதற்கு அர்த்தம் கீதா:)நடுவில் வரும் ப பதியைக் குறிக்கும் என்றறிக.
ReplyDeleteஇவ்வளாம் பதிவுகளை நான் என்று படித்து முடிப்பேனோ. எங்கள் ப்ளாகிற்கு பதிவுலக நிகண்டு என்னும் பட்டத்தை அளித்துப் பெருமைப் படுகிறேன்.
உண்மையாகவே மகிழ்ச்சி எங்கள் ப்ளாக்.
சிறப்பான அறிமுகங்களுக்கும் தகவல்களுக்கும் பாராட்டுக்கள்..
ReplyDeleteஅனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..!
ReplyDeleteAppaadurai: thanks a ton for your kind words
ReplyDeleteகடந்த மூன்று நாட்களாக ஆபிசுல செம்ம வேலை.. அதனால் வலைச்சரம் வந்து பார்த்து படித்து கருத்து இடமுடியலப்பா...
ReplyDeleteவிரியும் வலையுலகம் பற்றி நிறைய விஷயங்கள் அறியமுடிந்ததுப்பா உங்கள் உபயத்தால்... அதற்கு முதற்கண் அன்புநன்றிகள்.... எதிலும் ஒரு வித்தியாசம் இருப்பதை உணரமுடிகிறது....
ஹை.... இன்னைக்கும் எனக்கு தெரிஞ்சவங்க நிறையப்பேர் வலைத்தளம் அறிமுகப்படுத்தி இருக்கீங்களே... அட்டகாசம்.... கீதா சாம்பசிவம், அப்பாதுரை, வீடுதிரும்பல் மோகன்குமார், மின்னல்வரிகள் பாலகணேஷ்... இதனுடன் அறியாத வலைத்தளங்களும் கொடுத்திருக்கீங்க. கண்டிப்பா போய் பார்க்கணும்பா....
சரவெடி வாணவேடிக்கை ம்ம்ம் அசத்தல்... தொடருங்க தொடருங்கப்பா...
எங்கள்ப்ளாக் குழுவினருக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள்பா...
//கீதா சமபசிவம்//
ReplyDeleteயாராக்கும் இது?? சமபசிவம்??? புதுசா இருக்கே? இம்பொசிஷன் எழுதுங்க முதல்லே. லக்ஷம் தரம். :P :P :P//
போச் போச் இம்போசிஷனாப்பா? :-)
//kg gouthaman said...
ReplyDeleteகீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கீதா சாம்பசிவம்
கூகிள் செய்த குறும்புக்கு நான் இம்போசிஷன் எழுதணுமா?//
அட இன்றுமுதல் கௌதமனை சின்சியர் சிகாமணி என்று தான் கூப்பிடுவேன்பா... என்ன கர்ம சிரத்தையா எழுதி இருக்கார் பாவம்பா...
ஊக்கம் தளராமல் வந்து பின்னரும் கருத்துரைத்த எல்லோருக்கும் என் நன்றி.
ReplyDelete