07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 17, 2012

ஈழம் நோக்கி .... ( கண்ணீர் )


எமது தொப்புள்கொடி 
உறவுகளின் 
முப்பதாண்டுகால 
அறவழிப்போராட்டம் .

பழந்தமிழரின் 
புறநானூற்றை  நினைவு 
கூறும் 
கருவி ஏந்திய 
முப்பதாண்டுகாலஅறப் 
போராட்டம் .

தலைவரின் 
நேரிய 
வழிகாட்டலில் 
தமிழ 
மறத்தனம்  உலகிற்கு 
அறிமுகப் படுத்தப் 
பட்டது .

இது ...
ஏற்றங்களையும் 
இறக்கங்களையும் 
கடந்த  தொடர்பயணம் 
எத்தனையோ 
இழப்புகளையும் 
தாண்டி 
தொடரத்தான் 
செய்கிறது  தமிழீழம் 
நோக்கி .

களமாடி 
ஈகாச்சாவடைந்த
போராளிகளுக்கு...
எமது  தலை சாய்ந்த 
வீர  வணக்கங்கள் .



      இன்றைய  வாழ்க்கை  வரட்டுத்தனமாக  மற்றவர்களுக்காக  வாழப்படுகிறது  வாழும் ...வாழவேண்டிய காலத்தில்  பெரும்பாலும்  முறையாக வாழப்படுவதில்லை . பல  முறையான வலைபூக்களை  பார்க்கும் இந்த சமூகம் சிந்திக்கும் வலைபூக்களை  பார்க்க  ஐயா சீனா அவர்களின் வலைச்சர ஆசிரியர்  பொறுப்பினால்  பார்க்கப் பட்டது  உண்மையில் பாரதியே தீரவேண்டும்  எனக்கு அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு நோபல் பரிசுகளை  வழங்க  சொல்லுவேன்  அப்படி பதிவுகள் இருக்கிறது   சரி இன்றைய பதிவுகளை  பார்ப்போம் .


இன்றைய  இலக்கிய  வாதிகளின் வேடந்தாங்கல்  மிக சிறந்த  இலக்கியங்கள் கொட்டிக் கிடக்கும்  இடம்  நாம் எல்லோரும் பார்க்க வேண்டிய வலைப்பூ. நீங்களும் போய் பாருங்களேன்  http://azhiyasudargal.blogspot.in/ நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்

    ஊழல்  சாக்கடையில்  உழலும்  பன்றிகள்  அப்படின்னு  ஒரு  தில்லான  பதிவு  பாருங்க  உண்மைகளை  வெளிப்படையா பேசுகிறார்  பி பார்காலாமா ?http://kashyapan.blogspot.in/2012_10_01_archive.html

     கவிதைக்காரன் அப்படின்னு  ஒரு வலைப்பூ  பாருங்க  என்ன சமூக சிந்தனை  இந்த வலைப்பூவை  பார்க்கும் போதே  எதோ ஒன்றை சொல்லாமல் சொல்லுகிறது  இப்படிப்பட்ட  வலைப்பூக்களை  மேய்வது என வந்து விட்டால்  இன்றைய  இளையோர்  நாட்டின் தலை எழுத்தை  நேராக்கி  விடுவார்கள்  போய்  பாருங்களேன் .http://thamira-nanbargalinkoodaram.blogspot.in/2012/09/blog-post_5604.html

    நம்  நாடு  விடுதலை  ? வேண்டி போராடிய போது போலிசின்  அடிபட்டு மயங்கி கிடக்கிறார்  தண்ணீர்  தாகம் அங்கு தண்ணீர்  இல்லை ஒரு பெண் தனது மார்பகத்தில் இருந்து  பாலை  பீய்ச்சி  தகத்தை தனித்தாரம்  ஒரு பெண்   ஆருஅவுக  http://valipokken.blogspot.in/2012/06/blog-post_22.html

    கடவுள் கத்தரிக்காய்  வெங்காயம்  இப்படின்னு ஒரு  பதிவு  இது கடவுள் மறுப்பாகவும் இல்லை உண்டுன்னும் சொல்லவில்லை  பாருங்க http://www.thanneerppanthal.com/2011/12/blog-post_02.html

    இவருக்கு  தனியான  அறிமுகம் எல்லாம் தேவையில்லாதவர்  நகைச்சுவை  அப்படின்னா  ஒரு மன்னன்  உண்மையில் இவரின் இடுகைக்கு சென்று  வயிறு வலிக்க சிரித்தது  உண்டு  ஆனா பாருங்க  இணைய  தளம்  பார்த்துகிட்டே தனியே  சிரித்துக் கொண்டு இருந்தால் எப்படி  என்னை பார்த்து இருப்பார்கள்  மிகவும் சிறந்த நகைசுவை மன்னன்னு    பட்டம்  வழங்கலாம்  இவருதமிழ்  எங்கள்  மூச்சுன்னு  ஒரு சிறந்த பதிவு  போட்டு இருக்கிறாரு பாருங்களேன்  http://nanjilmano.blogspot.in/2012/10/blog-post_18.html

    எண்ண ஓவியம்ன்னு  ஒரு பதிவு காதல் தன்னுணர்வு  கவிதைகாளாக  இருக்கிறது போய் பாருங்க  http://theivamohan.blogspot.in/2012/10/blog-post_9.html

பெண்களின்   திருமண  வயது  என்னவாக இருக்க வேண்டும்  என சிந்திப்பவரா  நீங்கள்  இங்க http://www.vikkiulakam.com/2011/05/blog-post_31.html போய்  பாருங்க  உண்மையில் ஆய்வு நோக்கத்துடன்  பதிவு செய்யப் பட்டு இருக்கிறது  சிறந்த பதிவு .

     விருந்தினர் பக்கம் அப்படின்னு மாறுபட்ட கோணத்தில்  எழுதி அறிமுகப் அப்டுத்தி வருகிறார் இவர்  சிறந்த  பதிவு ஒன்று இங்கே  http://www.madhumathi.com/2012/11/blog-post_3412.html இருக்கிறது . போய் பாருங்களேன் .

விரைவில்  எடைகுறைக்க  அப்படின்னு ஒரு வலைப்பூ  பாருங்க  பயனுள்ளதாக தெரிகிறது http://veeduthirumbal.blogspot.com/2012/04/blog-post_14.html

    அன்பு உறவுகளே  எதோ கடமைக்காக  என  செய்யாமல் உண்மையில்  சிறந்த  வற்றை மிக சிறந்தவர்களுக்கு அறிமுகம்  செய்ய வேண்டும்  என எண்ணினேன்  எனவே என்னால் இயன்ற வரை தொகுத்து உள்ளேன்  படியுங்கள் விமர்சனம் செய்யுங்கள் 

எனது  வேலையில்  பங்கெடுத்துக்  கொண்ட  திண்டுக்கல்  தனபாலன்  ஐயா  அவர்களுக்கும்  அம்மா இராஜராஜேஸ்வரி  அவர்களுக்கும்  ஐயா  சீனா  ஐயா அவர்களுக்கும்   பணிவான நன்றியும்  பாராட்டுகளும் .

தமிழன்புடன் 
மாலதி .

20 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. இரு தளங்கள் புதியவை... அனைத்தும் சிறந்த தளங்கள்...

    சிந்திக்க வைக்கும் தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    த.ம.1

    ReplyDelete
  3. நல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. அனைத்து அறிமுகத்தளங்களுக்கும் வாழ்த்துகள்..

    தங்களின் சிறப்பான பணிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்...

    ReplyDelete
  5. அறிமுகத்துக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  6. ஈழத்திற்கான மிக அருமையான மனதை சட்டென கனக்கவைக்கும் கவிதை வரிகளில் தொடங்கியது மிக அருமை மாலதி...

    அறிமுகப்படுத்தப்பட்ட தளங்களில் சிலர் எனக்கு அறிந்தவை...

    உண்மையே தில்லா தைரியமா எழுதும் காஷ்யபன் சார் வரிகள் நான் படித்திருக்கிறேன்...

    வீடு திரும்பல் மோகன் வரிகளில் நகைச்சுவை நான் அறிந்ததுண்டு...

    மதுமதியின் வரிகளில் நாட்டு நடப்பை அலசும் விதமும் அதற்கான தீர்வும் படித்திருக்கிறேன்...

    நாஞ்சில் மனோவின் வரிகளில் சிரிப்பின் ஊடே சிந்திக்கவும் வைத்துவிடும் அழகும் கண்டிருக்கிறேன்...



    தண்ணீர்ப்பந்தல் நான் சமீபமாக படித்து அசந்த ஒரு அற்புதமான கவிதை வரிகள்... சிறு வயதென்றாலும் தீட்சண்யப்பார்வை தைரிய வரிகள் படித்ததுண்டு இங்கே...

    மற்ற புதிய நான் அறியாத தளங்களும் சென்று வாசிக்கிறேன்....

    சிறப்பான பகிர்வுக்காக மாலதிக்கும் மாலதிக்காக உதவிய சீனா அண்ணாவுக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட தளங்களின் அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
  7. அழியாச்சுடர்களை எனது தளத்திலும் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளேன்! அது ஒரு அறிய பொக்கிஷமாக எனக்கு படுகிறது!

    "ஊழல் சாக்கடையில் உழலும் பன்றிகள்" இப்படைப்பை படைத்தவரைப்போன்றோர்தான் இந்தியாவில் ஊழலுக்கு எதிராக பெரிய சேவைகளை செய்கிறார்கள்!

    ஒரு விவசாயியின் மகனாக எனக்குள் இருந்ததை கவிதைக்காரன் அப்படியே கொட்டிவிட்டார்! ஆனாலும் என் மனம் ஆறவில்லை! ஏனென்றால் அதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை!

    மேலும் மற்ற அறிமுகங்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்! மிக திறமையான, நாடறிந்த படைப்பாளர்கள்.

    இவர்களுக்கு நடுவில் எனது படைப்பையும் அறிமுகம் செய்து, எனக்கு மேலும் உற்சாகமளித்த தங்களுக்கும், இதில் தங்களுக்கு உதவிய அய்யா திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், அம்மா இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் எனது நன்றிகளையும், மற்ற அறிமுகங்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  8. நெஞ்சை உருக்கும் கவிதை வரிகள்...

    ReplyDelete
  9. ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ள வீர வணக்க அறிவிப்பு நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

    இன்றைய அறிமுகங்கள் யாவும் அருமை.

    அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    உங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  10. இன்றைய தெரியாத அறிமுகங்களைச் சென்று பார்வையிட வேண்டும்.
    அனைவருக்கும் தங்களிற்கும்.இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. களமாடி
    ஈகாச்சாவடைந்த
    போராளிகளுக்கு...
    எமது தலை சாய்ந்த
    வீர வணக்கங்கள் .//

    ராயல் சல்யூட்....

    ReplyDelete
  12. ஆஹா இப்பதான் திண்டுக்கல் தனபால் என் பதிவில் வலைச்சரம் அறிமுகம் பற்றி சொன்னதை பார்த்தேன், மிக்க நன்றி மாலதி, அடியேனையும் அறிமுகப்படுத்தியமைக்கு...!

    ReplyDelete
  13. முப்பதாண்டு அறவழிப் போராட்டம் - போராளிகளுக்கு எங்களுடைய வீர வணக்கங்களும்!

    நெகிழ வைக்கும் கவிதையுடன் இன்றைய வார வலைச்சரத்தை முடித்திருக்கிறீர்கள்.

    பாராட்டுக்கள் மாலதி!

    ReplyDelete
  14. அழுதேவிட்டேன் கவிதை வலிக்கிறது.எதுவும் சொல்ல வரவில்லை.

    அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருமே திறமைசாலிகள்.வாழ்த்துகள் !

    ReplyDelete
  15. எனது அறிமுகத்திற்கும் கவிதை பகிர்வுக்கும் நன்றி சகோதரி..

    ReplyDelete
  16. வலைச்சர அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!
    -கலைமகன் பைரூஸ்
    www.mazuram.blogspot.com

    ReplyDelete
  17. தொடர் அறிமுகத்திற்கும் அறிமுகப்படுத்திய உள்ளங்களுக்கும் நன்றி! நனறி! நனறி!

    ReplyDelete
  18. தங்களின் அன்புக்கு நன்றி....என்னையும் மதித்து அறிமுகம் செய்ததற்க்கு சகோ...

    ReplyDelete
  19. நன்றி.எனது வலைச்சரத்தை பரிந்துரைத்தற்கு.....

    விளையாட்டாக எழுத ஆரம்பித்தது. உங்களது கருத்துக்கள் பெரும் ஊக்கமாக இருக்கும்.

    நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது