தொடரும் பயணம்
➦➠ by:
மாலதி
தொடரும் பயணம்
பயணங்கள் தொடருகிறது ... இன்று நமது வலைசரத்தை அலங்கரிக்கப் போவது யார் என பார்போமா ?
அதற்க்கு முன்பாக ஒரு சிறிய கவிதை ...
தமிழல் உயர்வோம் .....பெருமிதம்
ஐம்பதாயிரம் ஆண்டுக்குமுன்னமே தோற்றங்கொண்ட
மொழி ....
அறிவியலை
உள்ளடக்கிய மொழி ....
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னமே
சிந்துவெளியில்
நாகரீகத்தின் உச்சத்தில்
இருந்தமொழி .....
இந்த உலகினுக்கு
அறிவியலை கொடையாக
வழங்கிய சீரிய மொழி ....
வானவியல்...
இசை ...
நடனம் ...
மருத்துவம் ....
நீரியல் மேலாண்மை ....
தங்கத்தையும் ...
தகட்டையும் ...முதலில்
கண்டெடுத்த மொழி ....
வானவீதியில் ...
ஊர்தியை
முதலில் ஓடவிட்ட
மொழி ....
அப்பப்பா
பழந்தமிழில்
இல்லாதிருந்த கலைதான் என்ன?
இன்று தமிழன்
சிந்திக்காமல்
போகச் செய்ததது
எது ?
சிந்திப்போம் .
இந்த சமூகம் உயிரோட்டம் உள்ளதாக இருக்க வேண்டுமா அதற்க்கு என்ன செய்ய வேண்டும்? எதையும் கேள்வி கேட்க வேண்டும் தனி பெண்ணாக தமிழன்னை கண்ணகி அரசர்களின் ஆட்சி காலத்தில் அதாவது சனநாயகம் இல்லாத காலத்தில் சர்வாதிகாரம் தலை தூக்கிய காலத்தில் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனை நோக்கி தேராமன்னா செப்புவது ஒன்றுடையேன் என அறத்தை நிலை நாட்டினாள் ஆக அறத்தை நிலை நட்ட துணிவு இருக்க வேண்டும் அச்சப் பட்டால் பிணத்திற்கு சமமாக ஆகிவிடுவோம் தவறு என தெரிந்தால் எதிர்க்கப் பழகுவோம் .
இவர் பாருங்களேன் இன்றய சமூக சீரழிவை அரசியலை சாக்கடைகளை அழகாக பதிவு செய்கிறார் பாருங்கள் http://
இன்றய பெண்கள் முறையில்லாத உணவு பழக்கத்தினாலும் முறையில்லாத வாழ்க்கையினாலும் உடலை எப்படி கெடுத்துக் கொண்டு நோவை பெற்றுக் கொள்ளுகிறார்கள் என்பதை அழகுற பதிவு செய்கிறார் மார்பக புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை தருகிறார் என்ன வென பார்ப்போமா http://ayeshafarook.blogspot.
இவரின் வலைப்பூவும் தனித்திறன் வாய்ந்தவை வலைப்பூவின் பெயரைப் போலவே... ஆம் வரலாறை வரலாறாய் நிற்கும் வலைபூ varalaatrusuvadugal.blogspot.
பழந்தமிழ் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்கிறது அப்படி புலம் பெயர்ந்தாலும் வாழும் மண்ணையும் மொழியையும் மறந்து விடாமல் இருக்க வேண்டும் காலங்கடந்த தமிழன் தன்னுடைய அரிய செல்வங்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு கொண்டு சேர்த்தானே தவிர தன்னுடையது என நிலை நாட்ட மறந்தான் அனால் மேலைநாடு சென்றாலும் இன்னும் தமிழை மறக்காமல் அடிமைத்தமிழன் என நம்மை பேசவைக்கிறார் என்ன வென பார்ப்போமா http://bharathidasanfrance.
பாலுறவை வள்ளுவம் அழகாக பதிவு செய்கிறது மலரினும் மெல்லிது காமம் என்கிறது இதை எல்லோரும் படிப்பார்களா என தெரிய வில்லை இன்று பாலுறவு குறித்தே பல வீடுகளில் சண்டை நிகழுகிறது அப்படித்தான் பாருங்க முதலிரவில் முறைதவறி நடந்து தனது மனைவியையே கொன்று விட்டாராம் ஒருவர் http://desiyamdivyam.
சிலர் பக்கம் பக்கமாக கவிதை எழுதி தள்ளுவார்கள் என்ன காரணத்திக்காக எழுதப் பட்டது என தெரியாது அனால் சிலர் சுருக்கமாக சொல்லி முடித்து விடுவார்கள் அப்படித்தான் இவரும் பாருங்களேன் காதலை எவ்வளவு சிறப்பாக சொல்லி இருக்கிறார் http://karaiseraaalai.
இதும் ஒரு கவிதைதான் சிறந்த கவிதை என்ன உள நிலையில் பதிவு செய்தார் என புரிய வில்லை இன்றைக்கு தேவையான பதிவு என்ன வென பார்ப்போமா ? http://seeni-kavithaigal.
கண்ணைக் கவரும் வண்ண வண்ணப் படங்களுடன் அழகிய பயணக் கட்டுரை உண்மையில் மிகச்சிறந்த படங்கள் உள்ளைத்தை கொள்ளை கொள்ளுகிறது நீங்களும் பாருங்களேன் http://
ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் புலம் பெயர்ந்து பெயர்ந்து இருந்தாலும் அந் நாட்டின் சிறப்பு வளங்களை அழகுற பட்டியல் இடுகிறார் பாருங்களேன் http://rupika-
உறவுகளே பலவேறு பணிகளுக்கு இடையே இந்த பணியை தொடருகிறேன் அருள் கூர்ந்து குறைகளை சொல்லி என்னை ஊக்கப் படுத்துங்கள் அடுத்து உங்களோடு சந்திக்கும் வரை விடை பெறுகிறேன் நாளை சிந்திப்போம்
பணிவான வணக்கங்களுடன்...
மாலதி .
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteஉயிரோட்டமுள்ள அறிமுகப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமாலதி
இன்று அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து தளங்களும் அருமைதொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்லதளங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி! தொடருங்கள்!
ReplyDeleteஎன்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு அன்பார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஒவ்வொரு தளத்தின் விளக்கமும் அருமை...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
tm1
வணக்கம் சகோ...நலம் தானே?
ReplyDeleteதங்களுடைய அறிமுக பட்டியலில் நானும் இடம் பெற்றிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது...இன்று அறிமுகம் பெற்ற ஏனைய அறிமுகங்களுக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!
மிக்க அன்புடன்,
வரலாற்று சுவடுகள்
அறிமுகப் பட்டியல் கண்டு மகிழ்ச்சி. தங்கள் முயற்சிக்கும் அறிமுகவாளர்களிற்கும் இனிய நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
இன்றும், மேலும் நல்ல பல அறிமுகங்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம்!
இன்றமிழ் மாலதிக்கு என்வணக்கம்! நன்றிகள்!
உன்றமிழ்த் ஓங்கி உயருகவே! - நன்றே
வலைச்சரம் காட்டும் மணமிகு பூக்கள்!
கலைச்சரம் காட்டும் கமழ்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு