07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, November 21, 2012

நமது தேடல்களும் தேவைகளும்! -- (கிறுக்கல்கள்-3)

               நேசம் எவ்வளவு அழகான வார்த்தை! இவ்வுலகில் பசி என்று ஒன்று இல்லாவிடில் நேசிப்பதும், நேசிக்கப்படும் த்ருணங்கள் மட்டுமே நம்மை சூழ்ந்திருக்கும் என பல சமயம் நினைக்கத்தோன்றும்! பசிக்கு உணவைத்தேடி ஆரம்பித்ததே நமது தேடல்கள் இன்று எதை எதையோ அடைந்து கடைசியில் அனைத்தும் பணம் தான் என்றாகிவிட்டது இன்று. பணமின்றி ஒரு துரும்பும் அசையாது என்கிற அவல நிலைக்கு தள்ளப்பட்டு இன்னும் அதையே அடைய தவித்துக்கொண்டிருக்கிறோம் நமது வாழ்க்கையில் தேடல்கள் நீள்கையில் நேசத்தின் அர்த்தமும் மாறிப்போகிறது பல சமயம். 
                மனிதத்தை விற்றுத் தீர்க்கும் விந்தையை கண்டு வியந்து நிற்கும் மனிதனின் மனதை விழித்தெழுப்பியே காலம் கரைந்து போகிறது அழிவை நோக்கி! நாம் எதை நோக்கிப்போகிறோம்? அதையே தான் பணம்!!! வயிற்றின் பசிக்கு சாப்பிட மறந்து நாவின் ருசிக்கு சாப்பிட ஆரம்பித்தால் இங்கு ஏதுமே போதாது! பணம் வாழ்வாதாரத்திற்கு என்பதை மறந்து பணம் தான் வாழ்க்கை என்றால், நமது வாழ்க்கையிலும் பணம் மட்டும் தான் இருக்கும் நாம் இருக்க மாட்டோம் 
                பணம், பணம், பணம் என்று உச்சரிக்கும் வார்த்தைகளுக்கான இடைவெளியில் துளையிட்டாவது சில நேரத்தை தேடிப்பிடிப்போம் நம்மை நேசிக்க நமது வாழ்க்கையை நேசிக்க! இன்று நமது தேடல்களை நிர்ணயிப்பது கூட நமது தேவைகள் அல்ல! ஊடகங்களும் மற்றவர்களும் தான்! உயர் அதிகாரியின் குழந்தை படிக்கும் பள்ளியில் தான் தனது குழந்தையும் படிக்க வேண்டும் என்று நினைப்பவர், பழைய மொபைல் வெச்சிருகேன்னு ஃப்ரன்ட் கிண்டல் பண்றான்னு புது போன் கேட்கும் பள்ளி மாணவர்கள், புது பைக் வாங்கியதற்கு ஃப்ரன்ட்ஸ் ட்ரீட் கேட்கறாங்க பணம் வேண்டும் என கேட்பவர்கள், ஹேர் ஸ்டைல் மாத்தினா நல்லாருக்கும்னு ஃப்ரண்ட் சொன்னானு தன்னை மற்றிக்கொள்பவர்கள், அவங்க இது வெச்சிருக்காங்க நான் அது வாங்கனும், அவங்க அது சொன்னாங்க அது மாத்தனும், இது நல்லா இல்லேன்னு சொன்னாங்க , அவங்க இவங்க இதில் நாம் எங்கே இருக்கிறோம்!!! 
            நமது தேவைகளுக்கும் தேடல்களுக்கும் மத்தியில் நம்மையே தொலைத்துவிட்டு மற்றவர்களிடம் தேடிக்கொண்டிருக்கிறோம். நமது வாழ்க்கை எதை நோக்கிய பயணம், அதில் முதலில் நாம் நிறைந்திருக்கிறோமா? என்று அவாப்போது திரும்பிப்பார்த்துக்கொள்வோம். இல்லையெனில் காலம் கடந்து திரும்பிப்பார்க்கையில் நமது கடந்த பாதை முழுக்க மற்றவர்கள் தான் இருப்பார்கள்!

~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--2

நமக்குள் நம்மை தேடிப்பிடித்து விலக்கிவைப்போமே! அதெப்படி??? ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்கையில் மனது எப்பவும் நமக்கு சாதகமாக, நமது நலத்தை மட்டும் கருதி ஒரு முடிவினை தரும். நமது அறிவு எப்பவும் நிதர்சனத்தை யோசித்து சாத்தியக்கூறுகளை கண்டறிந்து முடிவெடுக்கும். முடிவுகள் அவரவர்களைப்பொருத்தது!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!


6.            கல்வி முறையிலும் சமுதாயத்திலும் நல்ல மாற்றம் காண பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும் பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும், பள்ளியில் என்ன செய்கிறார்கள் என்று "மாற்றம் தேவை- கல்வி முறையிலும், சமுதாயத்திலும்" எனும் பதிவில் விரிவாக விளக்கி அலசி சொல்லி இருக்கிறார் இக்கரையும், அக்கரையும் திரு. குணசேகரன் அவர்கள்.

7.             எல்லா சூழல்களிலும் இருக்கும் நனமையை மட்டும் கண்டறிந்து எப்படி மனப்பக்குவத்தை அடைய வேண்டும் என்று குறுங்கதை கொண்டு விளக்குகிறார் உள்ளக் கமலம் மணிமேகலா அவர்கள்.

8.                 "வாழ்க்கை கொடுத்தவன்" என்ற பதிவினில் தாருமாறாக வண்டியை ஓட்டி விபத்தினை ஏற்படுத்துபவர்களும், பாதிக்கப்படுபவர்கள் நிலையை பற்றியும் தெளிவாக சிறுகதை மூலம் சொல்லி இருக்கிறார் திடங்கொண்டு போராடு சீனு அவர்கள்

9.      "அவன் தெரிவான்" என்று நம்மை நாம் கண்டு கொள்வது பற்றி கவிதையாக கூறி இருக்கிறார் தமிழ் மறை தமிழர் நெறி sury siva அவர்கள்

10.     விளம்பரம் என்னும் மாயாஜாலம் என்று விளம்பரப்படங்களில் பின்னனியில் நடக்கும் மாயாஜாலத்தை தெளிவாய் கூறி இருக்கிறார் Vijayan.K.R அவர்கள்


~~~~****~~~~

தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே! மீண்டும் நாளை சந்திப்போம்!

22 comments:

  1. இன்று தங்களால் அடையாளம் காட்ட்ப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    >>>>>>>>

    ReplyDelete
  2. தங்கள் கருத்தும் அறிமுக பதிவர்களும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. //வயிற்றின் பசிக்கு சாப்பிட மறந்து நாவின் ருசிக்கு சாப்பிட ஆரம்பித்தால் இங்கு ஏதுமே போதாது!//

    முதலில் பசிக்குத்தான் சாப்பிட ஆரம்பிக்கிறோம்.

    பிறகு ருசி தெரிந்த பிறகு தான், ருசிக்குச் சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம்.

    //பணம் வாழ்வாதாரத்திற்கு என்பதை மறந்து பணம் தான் வாழ்க்கை என்றால், நமது வாழ்க்கையிலும் பணம் மட்டும் தான் இருக்கும் நாம் இருக்க மாட்டோம்.//

    நாம் இருந்தாலும் தினமும் பணம் தேவைப்படுகிறது. நாம் இல்லாமல் போனாலும் அதே பணம் தான் உடனடியாகத் தேவைப்படுகிறது.

    பணத்தை வைத்துத்தான் பிணத்தையே அகற்ற முடிகிறது. எனவே பணமும் முக்கியம் தான் என்பதை மறுப்பதற்கு இல்லை.

    ஆனாலும் பணத்திற்கு நாம் தரும் முக்கியத்துவத்தை, நம் சொந்தங்கள் நட்புகள் முதலியவற்றிலும் கட்டிக் காத்துவந்தால் தான் நல்லது என்பதை நயம்படவே உரைத்துள்ளீர்கள்.

    சிந்திப்போம், செயல்படுவோம்.


    [கணவன் என்ற உன்னத உறவையும் அவர் சேர்த்து வைத்த பணத்தையும் வெகு அழகாக கையாண்ட ஓர் மனைவியைப் பற்றியதோர் நகைச்சுவை சிறுகதையை நான் எழுதியுள்ளேன். விரும்புவோர் படித்துப்பார்க்கலாம். இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html

    >>>>>>>>>

    ReplyDelete
  4. //
    வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--2
    ==================================
    நமக்குள் நம்மை தேடிப்பிடித்து விலக்கி வைப்போமே! அதெப்படி???

    ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்கையில் மனது எப்பவும் நமக்கு சாதகமாக, நமது நலத்தை மட்டும் கருதி ஒரு முடிவினை தரும்.

    நமது அறிவு எப்பவும் நிதர்சனத்தை யோசித்து சாத்தியக்கூறுகளை கண்டறிந்து முடிவெடுக்கும்.

    முடிவுகள்

    அவரவர்களைப்பொருத்தது!//

    மனதால் மட்டுமின்றி அறிவாலும் யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்ப்தை வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

    நம் மனம் ஆசைப்படுபவற்றையெல்லாம் நடைமுறை சாத்தியம் உண்டா என அறிவுடன் யோசித்து / சிந்தித்துச் செயல்படுவோம்.

    மொத்தத்தில் இன்றைய தங்களின் பதிவு வெகு அருமை.

    பாராட்டுக்கள்.

    வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete


  5. சற்று முன்பு தான் வலை ஆசிரியர் வலைக்குச் சென்று அங்கே
    மஞ்சள் வெயிலிலே என்று துவங்கும் பதிவினைப் படித்தேன்.

    எதையுமே சுருக்கமாகச் சொல்லி எனக்கு பழக்கமில்லை.
    அந்தப்பதிவில் திருடர்கள் ஜாக்கிரதை என்ற வாக்கியம்
    எச்சரிக்கை என்பதைக்காட்டிலும் என்னை
    நச்சரித்தது என்பதால் அதற்கான பதிலை என்
    பதிவில் இட்டேன்.

    அது இடும்பொழுதே ஆசிரியரிடமிருந்து ஒரு
    அழைப்பு.

    அறிமுகமாகி இருக்கிறேனாம்.
    அன்புடன் அழைத்திருக்கிறார் அவர்கள்.

    நாணிக்குறுகி நான்
    நன்றி சொல்வேன்.
    இருந்தாலும்
    நீங்கள் எழுதிய
    கிறுக்கல்களுக்கு
    "மஞ்சள் வெய்யில் மயக்கத்திலே"
    கொஞ்சம் உளறுகிறேன்,.

    வாருங்கள்.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  6. அருமையான கருத்துக்கள் சகோதரி... வாழ்த்துக்கள்...

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    நன்றி...

    tm1

    ReplyDelete
  7. இன்றைய அறிமுகங்கள் அருமை..
    அறிமுகத்திற்கு நன்றி..

    ReplyDelete
  8. @வை.கோபாலகிருஷ்ணன்
    தங்களது வருகைக்கும், எனது பதிவின் ஒவ்வொரு பகுதியினையும் படித்து அலசி கருத்தாழத்துடன் கருத்துரையில் பகிர்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  9. @Sasi Kala
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள் அக்கா!

    ReplyDelete
  10. @sury Siva
    எனது "என் விழிகளுக்கு அப்பால்" பதிவினில் நான் குறிப்பிட்டிருந்த வரிகளுக்கு தாங்கள் சொல்லி இருக்கும் அர்த்தத்தினை தங்களது பதிவுதனில் அறிந்தேன் ஐயா! நான் ரசித்ததை சொல்லிட வார்த்தைகளின்றி ஏதேதோ வார்த்தைகளை பிடித்து பின்னூட்டத்தில் தெரிவித்திருக்கிறேன் ஐயா!

    ReplyDelete
  11. @திண்டுக்கல் தனபாலன்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள்!

    ReplyDelete
  12. @99likes
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள்!

    ReplyDelete
  13. வணக்கம
    யுவராணி தமிழரசன்

    இன்று ஆரம்பத்திலே நல்ல கருத்துள்ள முகவுரையுடன் ஆரம்பமாகியுள்ளது இன்று பகிரப்பட்ட அனைத்து பதிவுகளும் மிகவும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் (சகோதரி)நாளை சந்திப்போம் வலைச்சரத்தில்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  14. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. அருமையான அறிமுகங்கள்,, பாராட்டுக்கள்..

    ReplyDelete
  16. தெரிந்ததும் தெரியாததுமான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் இனிய வாழ்த்து.
    எல்லையற்ற தேடல் குறிப்பு நன்று.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. Vaazhkkai patriya thangal ennam migach chirappu. Arimugangalum arumai. Pls visit my site:

    http://newsigaram.blogspot.com/2012/11/marupadiyum-varuven-46-17-23_21.html

    ReplyDelete
  18. அடுத்தவருக்காக வாழும் நாம் நமக்காக வாழத் துவங்குவோம். இல்லையேல் நம்மையே தொலைத்து விடுவோம் அருமையான பார்வை சகோதரி. புதிய அறிமுகங்களுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. @ezhil
    @kovaikkavi
    @சிகரம் பாரதி
    @இராஜராஜேஸ்வரி
    @வெங்கட் நாகராஜ்
    @2008rupan

    தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  20. புதிய பார்வை வாழ்த்துக்கள் அருமையான யோசனை

    ReplyDelete
  21. @கவியாழி கண்ணதாசன்
    தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  22. அலுவல்கள் கொஞ்சம் அதிகம் காரணமாக அன்றே என்னால் வர இயலவில்லை.. அறிமுகத்திற்கு மிக்க நன்றி யுவராணி. உங்கள் அணைத்து அறிமுகங்களையும் படித்தேன். அறிமுகங்களுக்கு முன்பும் கட்டுரைகள் மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது