07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 19, 2012

தீண்டப்படாத தீக்குச்சிகளாய்!--(கிறுக்கல்கள்-2)

 விதையிட்ட விரல்களால்
 விலக்கி வைக்கப்பட்டு
 விதியினில் வாழ்க்கையை தேடியும்,
 விதியினில் வாழ்க்கையை
 தொலைத்துவிட்டு
 மூளைக்குச் செல்வதற்குள்
 பறிக்கப்பட்ட
 விரல்களுக்கெட்டிய கல்வியோடும்,
 இளந்தளிர்கள் இங்கு
 விதியோடும் வாழ்க்கையோடும்
 முண்டியடித்து
 போராடிக்கொண்டிருக்கிறார்கள்
 வாழ்க்கை அறியாது!
 வாய்ப்புகள் அறியாது!

 "வாழ்க்கை" என்ற வார்த்தைக்கு
 அர்த்தம் தேடிக் கொடுக்காவிடினும்,
 அகராதியை அடையவாவது
 வழிகாட்டுவோமே
 அவர்களது தேடல்களுக்கு!

 மனக்கூட்டுக்குள் புதைந்துகிடக்கின்ற
 திறமைகளைஅறிந்து
 உயர உதவாவிடினும்,
 திரட்டி தூண்டிட
 பக்கம் இருப்போமே!

 வாழ்க்கை புதரிலிருந்து
 அவர்களை மீட்காவிடினும்
 அச்சம் தவிர்த்து மீளத்தவிக்கையில்
 துணை நிற்போமே!

 வாய்ப்புகளை கொடுத்து
 வாழ்க்கையை காட்டாவிடினும்
 வாய்ப்புகளை அறிய
 விரல் கொண்டு
 திசையையாவது காட்டுவோமே!

 தீண்டப்படாத தீக்குச்சிகளாய்
 சிறு கூட்டுக்குள்
 மடிந்து போகும் முன்
 தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே!

~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--1

நம்மோடு பழகுபவர்கள் தெரிந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும், உறவுகளாகட்டும் அனைவரும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். ஒரு விஷயத்தை பகிர்கையில் யாரிடம் பகிர்கிறோம், எதை பகிர்கிறோம், எப்போழுது பகிர்கிறோம் என்று எப்பொழுதும் கவனிப்போமே!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!

1.                     திண்டுக்கல் தனபாலன் அவர்கள் "சரியாச் சொன்னீங்க" என்று "அவை அறிதல்" என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களையும் உரையாடல்களாக சொல்லி இருப்பது அருமை, சிறப்பான செயலுக்கு என்ன தேவை? என்பது பற்றி அவரது வாழ்க்கை அனுபவங்களில் கற்றவையை கொண்டு அலசி சொல்லி இருப்பது அவசியம் படிக்க வேண்டியவை என்றே தோன்ற வைத்தது!

2.                  seshadri e.s அவர்களுடைய கவித் துளிகள் அழகு "தனிமை"-யின் இனிமை பற்றியும் ,"நம்பிக்கை கீற்று"-ல் உழவின் பெருமையை சொல்வதும் நீங்களே படித்துப் பாருங்களேன்!

3.                அருணா செல்வம் அவர்களுடைய கவிதை ஒன்றில் குழந்தையின் சிரிப்பை அழகாய் சதங்கை சத்தத்தோடு ஒப்பிட்டு சொல்லி இருப்பதும், "விளைத்தது விளையும்" என்ற நிமிட கதையின் கருவும், எதிர்ப்பார்க்காத திருப்பத்தோடான முடிவும் அருமை.

4.                சசிகலா அவர்கள் "எங்கெங்கு காணினும்" என்று வியாபாரமயமாக்கப்பட்ட கல்வியையும் அதன் தரத்தை பற்றியும், தமிழ் மொழியின் இன்றைய நிலையை பற்றியும் அழகிய நடையில் கவிதையாக சொல்லி இருக்கிறார்கள். "இருவரியில் ஒரு தேடல்" என்று வாழ்வின் அர்த்தங்களை இரு வரியில் அடக்கி சொல்லி இருப்பது அழகு!

5.                சந்திரகெளரி அவர்களது ஒரு குடும்பத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு யார் காரணமாக இருக்கிறார்கள், அதை தீர்ப்பதிலும் வராமல் தடுப்பதிலும் ஒவ்வொருவரின் பங்கும் என்ன? யார் குற்றவாளி? என்று ஒரு சூழ்நிலையை சொல்லி அலசி இருகிறார், ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியரின் பங்கு என்ன என்பதையும் மிக எளிய நடையில் சொல்லி இருக்கிறார்.

~~~~****~~~~

தவறுகள், பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே. மீண்டும் நாளை சந்திப்போம்!


37 comments:

  1. இன்றைய அறிமுகங்கள் யாவும் மிக அருமை.

    அனைவருக்கும் நானே அவர்களின் சமீபத்திய பதிவுகளுக்குப்போய் தகவல் அளித்து விட்டேன்.

    அனைவருக்கும் என் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    பகிர்ந்துள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.....

    >>>>>>>>>
    தொடரும்
    >>>>>>>>>

    ReplyDelete

  2. கவிதையின் அனைத்து வரிகளும் வெகு அருமை.

    //தீண்டப்படாத தீக்குச்சிகளாய்
    சிறு கூட்டுக்குள்
    மடிந்து போகும் முன்
    தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே!//

    சூப்பர்! ;)))))

    >>>>>>>>>

    ReplyDelete
  3. //நம்மோடு பழகுபவர்கள் தெரிந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும்,
    உறவுகளாகட்டும்
    அனைவரும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.
    ஒரு விஷயத்தை பகிர்கையில்
    யாரிடம் பகிர்கிறோம்,
    எதை பகிர்கிறோம்,
    எப்போழுது பகிர்கிறோம்
    என்று எப்பொழுதும் கவனிப்போமே!//

    ஆம் உண்மை தான். இனி இதில் மிகவும் கவனமாகவே இருப்போம்.

    நன்றி.


    அன்பின் யுவராணி,

    முதல் நாள் அறிமுகமே சிம்பிளாகவும் சிறப்பாகவும் உள்ளது.

    கலக்கிட்டீங்க ! தொடருங்கள் !!
    அன்பான வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  4. இன்று நீங்கள் அளித்துள்ள கவிதை வெகு அழகு. யுவராணியின் சொல்லாடல் வியக்க வைக்கிறது. அறிமுகங்களும் அருமை. சந்திரகௌரி தவிர மற்ற அனைவரும் எனக்குப் பழக்கம்தான். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கவிதை மிகவும் அருமை சகோதரி... வாழ்த்துக்கள்...

    மின் வெட்டு காரணமாக உடனே வர முடியவில்லை...

    எனது தள அறிமுகத்திற்கு நன்றிகள் பல...

    வாழ்க்கை சுவாரஸ்ய தகவல் அருமை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    T.M. 1

    ReplyDelete
  6. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். இன்றைய அறிமுகங்கள் அருமை.

    அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  7. அனைவரும் பரிச்சயமானவர்களாக இருக்கிறார்கள்.
    கவிதையும் கருத்துடைத்து.
    அனைவருக்கும் யுவராணிக்கும்
    இனிய நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  8. தீண்டப்படாத தீக்குச்சிகளாய்
    சிறு கூட்டுக்குள்
    மடிந்து போகும் முன்
    தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே!

    //நம்மோடு பழகுபவர்கள் தெரிந்தவர்களாகட்டும், நண்பர்களாகட்டும்,
    உறவுகளாகட்டும்
    அனைவரும் அனைத்து நேரங்களிலும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.
    ஒரு விஷயத்தை பகிர்கையில்
    யாரிடம் பகிர்கிறோம்,
    எதை பகிர்கிறோம்,
    எப்போழுது பகிர்கிறோம்
    என்று எப்பொழுதும் கவனிப்போமே!//

    வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். அறிமுக நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும் தங்களுக்கு எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  9. வணக்கம் யுவராணி அவர்களே.

    கவிதை மிக் மிக அருமையாக உள்ளது.

    வாய்ப்புகளை கொடுத்து
    வாழ்க்கையை காட்டாவிடினும்
    வாய்ப்புகளை அறிய
    விரல் கொண்டு
    திசையையாவது காட்டுவோமே!...

    சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.

    தவிர என்னையும் உங்கள் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    மற்ற அனைத்து அறிமுகங்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  10. கவிதை அருமை. நல்ல அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. இன்றைய அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  12. @வை.கோபாலகிருஷ்ணன்
    மின்வெட்டு பிரச்சனைக்கு மத்தியில் தாங்கள் சிரமப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு தாங்களே தகவல் கொடுத்தமைக்கும்,தங்களது ஊக்குவிக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சார்!

    ReplyDelete
  13. @பால கணேஷ்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சார்!

    ReplyDelete
  14. @திண்டுக்கல் தனபாலன்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  15. @கோவை2தில்லி
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  16. @ kovaikkavi
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  17. @Sasi Kala
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  18. @ அருணா செல்வம்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  19. @உஷா அன்பரசு
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  20. @99likes
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  21. வணக்கம்
    யுவராணி தமிழரசன்

    இன்று 1ம் நாளில் வலைச்சரம் மிகவும் அட்டகாசமாக உள்ளது நான் அறியாத புதிய தளங்கள்,உலகின் பலபக்கமும் வாழும் வலைப்பதிவாளர்களை இனங்கண்டு அதிலும் தமிழில் உள்ள வலைப்பதிவுகளை அழகாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 1ம் நாளைப் போல இரண்டாம் நாளும் சிறப்பாக அமையட்டும்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. கவிதை வரிகள் அருமை.அறிமுகத்திற்கு நன்றி..

    ReplyDelete
  23. வலைச்சர ஆசிரியருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்! என்னுடைய வலைப்பூ தங்களின் அறிமுகத்தில் இடம் பெற்றது மகிழ்வளிக்கிறது! கவிதை வரிகள் அருமை! இன்றைய அறிமுகத்தில் இடம்பெற்ற அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் பாராட்டுகள்! நன்றி!

    ReplyDelete
  24. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. அறிமுகங்கள் அனைத்தும் அருமை...

    ReplyDelete
  26. தீண்டப்படாத தீக்குச்சிகளாய்
    சிறு கூட்டுக்குள்
    மடிந்து போகும் முன்
    தீண்டிட நம் விரல்கள் நீளட்டுமே

    எல்லா அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. ஆழமான கருத்துகொண்ட
    கவிதையுடன்
    அழகான அறிமுகங்கள்....
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  28. @Seshadri e.s.
    தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete
  29. @ 2008rupan
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  30. @தொழிற்களம் குழு
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  31. @kaviyazhi.blogspot.com
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  32. @இரவின் புன்னகை
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  33. @Lakshmi
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  34. @ மகேந்திரன்
    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  35. சிறப்பான அறிமுகங்கள்.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  36. மௌனமாக வந்து வலைத்தளத்தை ரசித்து ரசித்தமை பற்றி பலரும் அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி. இன்றுதான் மெயில் பார்க்க முடிந்தது. உங்கள் பனி தொடரவாழ்த்துகள் அறிமுகமும் அழகாக இருக்கின்றது

    ReplyDelete
  37. @வெங்கட் நாகராஜ்
    @சந்திரகௌரி

    தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது