07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, November 19, 2012

கிறுக்கல்களும் நானும்! - யுவராணி தமிழரசன்

வருகை தரும் அனைவருக்கும் எனது வணக்கம்!


என் மீது நம்பிக்கை வைத்து பரிந்துரைத்து வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் , வாய்ப்பளித்த திரு.சீனா ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
               கிறுக்கல்களை ரசித்து வண்ணத்தீட்டல்களால் அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்திப்போகும் அழகிய ஓவியங்களுக்கு எனது நன்றிகள் என்றென்றும்!
           இங்கு என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள நான் யுவராணி தமிழரசன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தை சேர்ந்தவள்! (அதே சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்ந்த ஊரே தான்).பயில்வது இறுதி ஆண்டு முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல். 15 வயதில் கவிதைகளென கிறுக்க ஆரம்பித்து பின் கல்லூரி சேர்ந்த பிறகே கிறுக்கியதை செதுக்கி உயிர்பிக்க ஆரம்பித்தேன். உயிர்பித்து அறிமுகப்படுத்த தவித்திருக்கையில் தோழியின் சொல் கேட்டு வலையுலகத்தில் கால் பதித்தேன். இன்று ஓராண்டை கடந்து போகும் என் பதிவுலக பயணம் கற்றுக்கொடுத்தவை ஏராளம். தேர்ந்தெடுத்தது தகவல் தொழில் நுட்பத்துறை என்றாலும் எனது கனவுகளும் ஆசைகளும் அணைத்துக்கொண்டு அடையத்துடிப்பது வங்கித் துறையின் வேலைவாய்ப்பினை தான். 
             சரியான வழிநடத்துதலும் ஆலோசனைகளும் இன்றி வேறு துறையில் கல்வி பயின்றும் இன்றும் கூகிளின் துணையோடும் சில நட்பு வட்டங்களின் துணையோடும் முயற்சித்தும் என்னால் நான் விரும்பும் வங்கித்துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையா? இல்லை கிடைக்கும் வாய்ப்பினை எனதாக்கிக்கொள்ள தெரியவில்லையா? என அறியத்தவித்தும் தகவல் தொழில்நுட்பத்துறையில் வளாகத்தேர்வில் வேலை பெற்று இன்னும் சில மாதங்களில் வேலைக்குச் சேரப்போகிறேன். 
       நினைத்தது அனைத்தும் கிடைத்துவிட்டால் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்பதில் எனக்கு என்றும் நம்பிக்கையுண்டு அதனால் சூழலுக்கு ஏற்ப வாழப்பழக எளிதாகும். மேலும் உகந்த உழைப்பின்றி கிடைக்கும் அனைத்து வெற்றிகளும் சந்தோஷத்தை அளித்தாலும் அது மேலும் அடுத்த கட்ட பயணத்தை தளர்த்தச்செய்து வெற்றிப்படிகளை விலக்கி வைக்கும்.
         அதனால் இப்போதைக்கு எதை பற்றியும் கவலைப்படாமல் நேற்று முடிந்த பரிட்சையோடு எனது இரண்டரை ஆண்டு முதுகலை பட்டத்தை முடித்துவிட்டு அடுத்த ஆறுமாதங்கள் செய்யவேண்டிய பிராஜக்ட் -க்கு நான் வேலைக்கு தேர்வாகி உள்ள நிறுவனத்தின் பதிலுக்காக காத்திருக்கிறேன் எனது கல்லூரி வாழ்க்கையின் கடைசி துளியை அனுபவித்தபடி.
   
அதிகம் படிக்கப்பட்ட எனது பதிவுகள் இதோ!
தவறுகள், பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே. எனது கிறுக்கல்களோடும், அறிமுகங்களோடும் நாளை சந்திப்போம்!
புகைப்படங்கள் இரண்டும் கூகிளில் இருந்து சுட்டவை! கூகிளுக்கு நன்றி!

44 comments:

 1. சுய அறிமுகம் அருமை...

  நாளை முதல் அசத்துங்க... வாழ்த்துக்கள்...

  தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்...

  நன்றி...

  ReplyDelete
 2. வலைச்சரத்தில் தங்களை காணுவதில் மகிழ்ச்சி சகோ! அசத்தலை ஆரம்பியுங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்.அடுத்தடுத்த பகிர்வுகளைக் காண ஆவல்.

  ReplyDelete
 5. @திண்டுக்கல் தனபாலன் said...

  அண்ணா தங்களது உதவிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! காலையில் இணைய இணைப்பு சரியில்லாததால் என்னால் தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. நான் நினைத்துகொண்டிருந்ததை தாங்கள் சிரமம் பார்க்காமல் செய்து கொடுத்தமைக்கும் தங்களது ஊக்குவிக்கும் கருத்துரைக்கும் எனது நன்றிகள் அண்ணா!

  ReplyDelete
 6. @ வே.சுப்ரமணியன்.
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 7. @இராஜராஜேஸ்வரி
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 8. @ Asiya Omar
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 9. அன்புள்ள யுவராணி அவர்களே!

  வாருங்கள். காலை வணக்கங்கள்.

  உங்களை இன்று இந்த வலைச்சரத்தின்
  இந்த வார ஆசிரியராகப் பார்ப்பதில் எனக்கு
  மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  >>>>>>>>>>> தொடரும் >>>>>>>>>>>>

  ReplyDelete
 10. //என் மீது நம்பிக்கை வைத்து பரிந்துரைத்து வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும்//

  திறமைகள் உள்ளவர்களை நாடி வாய்ப்புகள் வருவது இயற்கையே.

  அதுபோலவே தான் இதுவும்.

  திறமைகளைப்பார்த்து வியந்து போவதால் நம்பிக்கை பிறக்கிறது.

  அந்த நம்பிக்கையினால் பரிந்துரை செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.

  எனக்கு தங்களின் வலிமையான எழுத்துக்களில் நம்பிக்கை ஏற்பட்டு
  அதன் அடிப்படையில் பரிந்துரைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டதற்கு
  தங்களுக்கும், என் பரிந்துரையை கருணையுடன் பரிசீலித்து
  வாய்ப்பளித்த வலைச்சர தலைமை ஆசிரியர் அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், நான் தான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

  இந்தச் சவாலை ஆர்வத்துடன் உடனே ஏற்றுக்கொண்டு, களத்தில்
  இறங்கியுள்ள வீர நங்கையாகவே நான் உங்களைக்கண்டு மகிழ்கிறேன்.

  [சத்தியமங்கலத்துக்காரர்களுக்கு வீரத்திற்கா பஞ்சம்! என நீங்கள்
  முணுமுணுப்பது என் காதில் விழுகிறது ;)))))) ]

  >>>>>>>>>>

  ReplyDelete
 11. //எனது கனவுகளும் ஆசைகளும் அணைத்துக்கொண்டு அடையத்துடிப்பது வங்கித் துறையின் வேலைவாய்ப்பினை தான் //

  என்னைப்போலவே தாங்களும் ஆசைப்படுகிறீர்கள்.

  நியாயமான ஆசைதான். அதில் தவறொன்றும் இல்லை தான்.

  தங்கள் ஆசை நிச்சயம் வெகு விரைவில் நிறைவேறும்.

  அதுவரை நான் எழுதியுள்ள
  “காதல் வங்கி”
  என்ற சிறுகதையைப் படித்துப்பாருங்கள்.
  மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011_11_01_archive.html

  வங்கி வேலைகளில் உள்ள ஒருசில சங்கடங்களையும் வேறு ஒரு சிறுதையில் எழுதியுள்ளேன்.

  அதையும் படித்துப்பாருங்கோ.

  தலைப்பு: “எல்லோருக்கும் பெய்யும் மழை”

  இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_8.html


  >>>>>>>>>>>

  ReplyDelete
 12. // சரியான வழிநடத்துதலும் ஆலோசனைகளும் இன்றி வேறு துறையில் கல்வி பயின்றும் இன்றும் கூகிளின் துணையோடும் சில நட்பு வட்டங்களின் துணையோடும் முயற்சித்தும் என்னால் நான் விரும்பும் வங்கித்துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையா? இல்லை கிடைக்கும் வாய்ப்பினை எனதாக்கிக்கொள்ள தெரியவில்லையா?//

  என்னால் முடிந்த ஒருசில வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் தங்களுக்கு விரைவில் மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

  ஒரு வேளை அதன் மூலம் தாங்கள் விரும்பும் வங்கித்துறை வேலை வாய்ப்புகள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

  அதனால் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  நாம் எதுவாக வேண்டும் என நம் ஆழ்மனதினில் நினைக்கிறோமோ,

  அதற்கான முழு முயற்சிகளில் தொடர்ந்து நாம் ஈடுபடுகிறோமோ,

  வெகு விரைவில் அதுவாகவே ஆகிவிடுவோம் என்பதே வாழ்க்கையின் இரகசியமாகும்.

  அதனால் தாங்கள் நியாயமாக நினைப்பது யாவும் நிச்சயமாக நடக்கும்.

  அதற்கு என் மனமார்ந்த ஆசிகளும் வாழ்த்துகளும்.

  >>>>>>>>>>>

  ReplyDelete
 13. தங்களின் இன்றைய சுய அறிமுகம் சுருக்கமாகவும், சுவையாகவும், அருமையாகவும் உள்ளது.

  மனமார்ந்த பாராட்டுக்கள்.

  அன்பான வாழ்த்துகள்.

  நாளை சந்திப்போம் ..... !

  பிரியமுள்ள
  VGK

  ReplyDelete
 14. நினைத்தது அனைத்தும் கிடைத்துவிட்டால் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது என்பதில் எனக்கு என்றும் நம்பிக்கையுண்டு அதனால் சூழலுக்கு ஏற்ப வாழப்பழக எளிதாகும். மேலும் உகந்த உழைப்பின்றி கிடைக்கும் அனைத்து வெற்றிகளும் சந்தோஷத்தை அளித்தாலும் அது மேலும் அடுத்த கட்ட பயணத்தை தளர்த்தச்செய்து வெற்றிப்படிகளை விலக்கி வைக்கும்.

  அசத்தலான அறிமுகமா அனைவருக்கும் சொல்லும் அறிவுரையா எதுவாகினும் தொடருங்கள் சகோ தொடர்கிறோம் ஆர்வத்துடன்.

  ReplyDelete
 15. யுவராணி தங்கள் திங்கள் அறிமுகம் வாசித்தேன்.
  படிப்பு, வேலை, எதிர்காலத்திற்கு வாழ்துடன்
  தங்கள் ஆக்கங்களை மாலையில் வாசிப்பேன்
  என எதிர் பார்க்கிறேன். தொடருங்கள் தொடர்வேன்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 16. தங்களின் அறிமுகம் அருமையாக உள்ளது. இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
 17. இந்த வார வலைச்சரத்தினை தொடுக்க வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. வருக வருக அன்புத் தங்கையே... நீங்கள் படித்த நல்ல தளங்களைத் தொகுத்தளித்து அசத்துங்கள். எல்லாவற்றிலும் நீங்கள் வெற்றியே காண வாழ்த்துக்களுடன் நான் தொடர்கிறேன.

  ReplyDelete
 19. @ வை.கோபாலகிருஷ்ணன்

  மிகுந்த சந்தோஷம் ஐயா தாங்கள் வந்து என்னை ஊக்கப்படுத்தியதில்! வங்கித் துறையின் வேலை வாய்ப்பினை பெற தாங்கள் ஆலோசனைகள் கூறுவதாக கூறியதற்கு மிக்க நன்றிகள் ஐயா!!அதனை பற்றிய தங்களது சிறுகதைகள் இரண்டினையும் நிச்சயம் படிக்கிறேன் ஐயா! தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! நான் நினைத்துக்கூட பார்க்காத வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறீர்கள் இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பு அதனை மிகச் சிறப்புடன் நிறைவு செய்யவே விழைகிறேன்!
  /////இந்தச் சவாலை ஆர்வத்துடன் உடனே ஏற்றுக்கொண்டு, களத்தில்
  இறங்கியுள்ள வீர நங்கையாகவே நான் உங்களைக்கண்டு மகிழ்கிறேன்.

  [சத்தியமங்கலத்துக்காரர்களுக்கு வீரத்திற்கா பஞ்சம்! என நீங்கள்
  முணுமுணுப்பது என் காதில் விழுகிறது ;)))))) ]
  ///////

  தாங்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க என்னை தொடர்புகொண்ட போது சரி என்று ஒத்துக்கொண்ட போதிலும் என்னோடு ஒட்டிகொண்ட பயத்தில் இருந்து இன்னும் மீளாமல் தான் தவிக்கிறேன், எனது இறுதிப்பதிவு வரை அது நிச்சயம் என்னை விட்டு விலகாது
  அந்த பயம் வெறும் பொறுப்பை கண்ட அச்சமாக இல்லாது நல்ல பதிவுகளை தர ஊக்குவிக்கும் உந்துதல் ஆகவே நினைக்கிறேன்!!

  ReplyDelete
 20. @Sasi Kala
  /////
  அசத்தலான அறிமுகமா அனைவருக்கும் சொல்லும் அறிவுரையா எதுவாகினும் தொடருங்கள் சகோ தொடர்கிறோம் ஆர்வத்துடன்.
  //////

  எனது அனுபவமே அக்கா! தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அக்கா!

  ReplyDelete
 21. @ kovaikkavi
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 22. @ 99likes
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 23. @தி.தமிழ் இளங்கோ
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 24. @பால கணேஷ்
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அண்ணா!

  ReplyDelete
 25. வாழ்த்துகள் யுவராணி உங்கள் புதிய பணி அருமையாய் அமைய...!!!

  ReplyDelete
 26. வாழ்த்துக்கள் யுவா..
  மிக்க மகிழ்ச்சி.. :)

  ReplyDelete
 27. அறிமுகம் அருமை !

  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
 28. வணக்கம்
  யுவராணி தமிழரசன்

  இன்று உங்களைப்பற்றிய அறிமுகம் மிகசிறப்பாக உள்ளது
  நாளையும் வலைச்சரம் வலைப்பூ பூத்து மலர எனது வாழ்த்தக்கள்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 29. வணக்கம்
  யுவராணி தமிழரசன்

  இன்று உங்களைப்பற்றிய அறிமுகம் மிகசிறப்பாக உள்ளது
  நாளையும் வலைச்சரம் வலைப்பூ பூத்து மலர எனது வாழ்த்துக்கள்


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 30. வருக வருக சகோதரி...
  வாசமுள்ள மலர்கள் கொடு
  வலைச்சரம் தொடுத்திடுங்கள்...
  உங்கள் பணி
  சிறந்திருக்க
  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 31. அறிமுகமே ஆர்ப்பாட்டமாய் உள்ளது வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. என்னைப்போல தங்கள் எழுத்தின்
  ரசிகர்களுக்கு இந்த வாரம் சிறந்த
  வாரமாக நிச்சயம் அமையும்
  அறிமுகம் மிக மிக அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. @ezhil
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 34. @ 2008rupan
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 35. @சேக்கனா M. நிஜாம்
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 36. @மகேந்திரன்
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 37. @kaviyazhi.blogspot.com
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 38. @Ramani
  தங்களது வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துரைக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் சார்!

  ReplyDelete
 39. வலைச்சர ஆசிரியர்... வாழ்த்துகள் சகோ.

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள் யுவராணி
  உங்கள் வலைதளம் இதுவரை வந்ததில்லை .நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கிறேன்

  ReplyDelete
 41. @வெங்கட் நாகராஜ்
  தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 42. @Jaleela Kamal
  தங்களுக்கு நேரம் கிடைக்கையில் அவசியம் வாருங்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது